Perspective
ட்ரம்ப் நிர்வாகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான வரலாற்றுத் தாக்குதலுக்கு தயாராகிறது
சமீபத்திய தொடர் நேர்காணல்களில், டொனால்ட் ட்ரம்பின் "எல்லை சக்கரவர்த்தியான" ரொம் ஹோமன், வரவிருக்கும் நிர்வாகத்தின் பயங்கரமான பாரிய நாடுகடத்தல் திட்டங்களை கவனத்தில் கொண்டு வருகிறார். ஜனநாயகக் கட்சி மற்றும் பெருநிறுவன ஊடகங்களில் உள்ள அதன் கூட்டாளிகளிடையே இதற்கு மௌனமான விடையிறுப்பு இருந்து வருகின்றபோதிலும், ஹோமனின் அறிக்கைகள், ட்ரம்ப் நிர்வாகம் ஒரு வரலாற்று சமூகக் குற்றத்தைத் திட்டமிடுகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.