சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக வேர்க்கர்ஸ் லீக் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இது, ஜூலை 30, 2023 இல் இருந்து ஆகஸ்ட் 4, 2023 வரை அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய சர்வதேச கோடைப் பள்ளிக்கு, நியூசிலாந்தின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான ரொம் பீட்டர்ஸூம் மற்றும் பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினரான தோமஸ் ஸ்க்ரிப்ஸூம் வழங்கிய விரிவுரையாகும். இந்த கோடைப் பள்ளியின் அனைத்து விரிவுரைகளையும் இங்கே காணலாம்.

WRP இன் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக வேர்க்கர்ஸ் லீக் நிரந்தரப் புரட்சி தத்துவத்தைப் பாதுகாக்கிறது

ஏற்கனவே பரந்தளவிலான வரலாற்று மற்றும் தத்துவார்த்த வளங்களை வழங்கி உள்ள இந்த மிக முக்கிய கோடைப் பள்ளியின் பணிகளில் பங்களிப்பது ஒரு தனிப்பெரும் சலுகையாகும், இது உலகளாவிய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தொடர்ச்சிக்கு உண்மையான வெளிப்பாட்டை வழங்குகிறது. சோசலிச வரலாற்றில் மிகவும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட உடைவாக இருக்கக் கூடிய, 1982 முதல் 1986 வரையிலான காலகட்டத்தை கலந்துரையாட முழுமையாக ஒரு வாரத்தையோ அல்லது அதற்கும் கூடுதலாகவோ கூட அர்ப்பணிக்கலாம். மற்ற தோழர்கள் கூறியதைப் போல, மேற்கொண்டு கூடுதலாக வாசிக்கவும் ஆய்வு செய்வதற்குமான ஓர் அறிமுகத்தையும் வழிகாட்டியையும் இங்கே நாம் முன் வைக்கிறோம்.

தோழர் கிறிஸ்தோப் வாண்ட்ரியரின் முந்தைய விரிவுரை, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) சந்தர்ப்பவாதச் சீரழிவுக்கு எதிராக வேர்க்கர்ஸ் லீக்கின் தத்துவார்த்த, அரசியல் போராட்டத்தின் தொடக்கத்தை ஆய்வு செய்தது. மார்க்சிசத்தை ஜெர்ரி ஹீலி கேலிக்கூத்தாக்கியதன் மீது 1982 இல் டேவிட் நோர்த் எழுதிய “இயங்கியல் சடவாத ஆய்வுகள்” [1] என்ற விமர்சனத்துடனும், “லியோன் ட்ரொட்ஸ்கியும் மார்க்சிசத்தின் வளர்ச்சியும்” [2] என்று தலைப்பிட்ட கட்டுரைத் தொடருடனும் அது தொடங்கப்பட்டது.

“’இயங்கியலுக்கான போராட்டம்’ என்று முத்திரை குத்தப்பட்டு, மார்க்சிசம் மீதான கொச்சைப்படுத்தல், அனைத்துலகக் குழுவிற்குள், குறிப்பாக WRP இல் ஏற்பட்ட தெளிவான ஒரு சந்தர்ப்பவாத திருப்பத்துடன் இணைந்திருந்தது,” என்று தோழர் நோர்த்தின் விமர்சனத்தின் முடிவில் வழங்கப்பட்ட அரசியல் தொகுப்புரை குறிப்பிடுகிறது.

ஹீலியின் கருத்துவாத “அறிகைக்கான நடைமுறை” (practice of cognition) கட்சிக்குள் அரசியல் பிரச்சனைகளையும், கருத்து வேறுபாடுகளையும் பற்றிய விவாதத்தை ஒடுக்குவதற்கும், மோசமான சந்தர்ப்பவாத நடைமுறைகளை நியாயப்படுத்துவதற்கும் உதவியது. பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான அரசியல், தத்துவார்த்த போராட்டமும், ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் மீதான ஆய்வுகளும் கைவிடப்பட்டிருந்தன. “அனைத்து நோக்கங்கள், நிலைமைகளின் கீழும்,” “நிரந்தரப் புரட்சி தத்துவம் தற்போதைய சூழ்நிலைகளுக்குப் பொருந்தாததாகக் கருதப்பட்டது” என்று நோர்த் எழுதினார். [3]

எமது காலத்தின் புரட்சிகர மார்க்சிசமான, ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படை வேலைத்திட்டத்தை அடித்தளமாகக் கொண்டுள்ள இந்த நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் தடங்களை, மார்க்ஸ், ஏங்கெல்ஸ் விடுத்த அழைப்பு வரையில் கண்டறியமுடியும். 1848 புரட்சிகளில் இருந்து படிப்பினைகளை எடுத்து, மார்க்ஸ் வலியுறுத்துகையில், ஜனநாயக குட்டி-முதலாளித்துவத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே எந்த அரசியல் ஐக்கியமும் இருக்க முடியாது என்றார். அவர் பின்வருமாறு எழுதினார்:

ஜனநாயக குட்டி முதலாளித்துவவாதிகள் புரட்சியைக் கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவர விரும்பிய அதேவேளையில், ஏறக்குறைய அனைத்து உடைமை வர்க்கங்களும் தங்கள் மேலாதிக்க நிலையிலிருந்து வெளியேற்றப்படும் வரையிலும், மேலும் குறைந்தபட்சம் முக்கியமான உற்பத்தி சக்திகளாவது பாட்டாளி வர்க்கங்களின் கரங்களில் குவிந்துள்ள மேலாதிக்க நாடுகளின் பாட்டாளி வர்க்கங்களுக்கு இடையிலான போட்டிகளை முடிவிற்கு கொண்டுவந்து, தனியொரு நாட்டின் பாட்டாளி வர்க்கத்தை மட்டுமல்ல மாறாக உலகின் மேலாதிக்க நாடுகள் அனைத்தினது பாட்டாளி வர்க்கங்களுக்கும் இடையிலுமான ஐக்கியத்தை உருவாக்கி புரட்சியை நிரந்தரமாக்குவதே நமது ஆர்வமும், பணியும் ஆகும். [4]

1905 புரட்சியில் இருந்து படிப்பினைகளை எடுத்த ட்ரொட்ஸ்கி, இந்த அடிப்படைக் கருத்துருவை அபிவிருத்தி செய்து வளப்படுத்தினார். தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ தாராளவாதத்திற்கு அடிபணியச் செய்ய வலியுறுத்திய மென்ஷிவிக்குகளுக்கு எதிராக, ட்ரொட்ஸ்கி விவரிக்கையில், ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்ற இயல்பிலேயே முதலாளித்துவ வர்க்கம் திறனற்றிருப்பதை விளங்கப்படுத்தினார். விவசாயிகளுக்கும் ஒடுக்கப்படும் மக்கள் அனைவருக்கும் தலைமை கொடுத்து, தொழிலாள வர்க்கம் அதன் சொந்த புரட்சிகரக் கட்சியைக் கொண்டு அதிகாரத்திற்கு வருவதன் மூலமாக மட்டுமே புரட்சியின் இந்தப் பணிகளைத் நிறைவேற்ற முடியும். இது ஒரு தேசிய புரட்சியாக அல்ல மாறாக உலகப் புரட்சியின் ஆரம்பமாக கருதப்படும் என்று விவரித்தார்.

லியோன் ட்ரொட்ஸ்கி

இந்த முன்னோக்கு 1917 அக்டோபர் புரட்சியில் நடைமுறையில் நிரூபிக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கியின் அதே முடிவுகளுக்கு லெனினும் வந்தடைந்தார்: மென்ஷிவிக்குகளுடன் மறுகுழுவாக்கத்தை நோக்கியும் மற்றும் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை ஆதரிப்பதை நோக்கியும் நகர்ந்து வந்த போல்ஷிவிக் கட்சியினுள் இருந்த ஸ்ராலின் மற்றும் முன்னணி உறுப்பினர்களுக்கு எதிராக, அவர் “பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரம்” என்ற போல்ஷிவிக்குகளின் பழைய சூத்திரத்தை கைவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கிய கட்சியின் அடிப்படை நோக்குநிலையை ஏப்ரலில் மாற்றியமைத்தார்.

ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஏற்றிருந்த இரண்டு கட்ட தத்துவம் சீனாவில் ஏற்படுத்திய பேரழிவுகரமான தோல்விக்கு பின்னர், பாட்டாளி வர்க்கத்தை மீளஆயுதபாணியாக்குவதில் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் திட்டவட்டமான முக்கியத்துவத்தை ட்ரொட்ஸ்கி 1933 இல் தொகுத்தளித்தார்.

மூன்று அடிப்படை கருத்துருக்களால் இந்த தத்துவம் அடித்தளமிட்டிருப்பதாக அவர் கூறினார்:

a. ஆரம்ப கட்டங்களில் புரட்சியைத் தன் தரப்பிற்குப் பயன்படுத்த முயலும் தேசிய முதலாளித்துவம் (கோமின்டாங், காந்தி), புரட்சி மேற்கொண்டு கூடுதலாக அப்பிவிருத்தியடையும் போது, எப்போதுமே தடுப்பரண்களுக்கு மறுபக்கமான நிலப்பிரபுத்துவ மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையாளர்கள் தரப்புக்குச் செல்கிறது.

b. முதலாளித்துவப் புரட்சியில் குட்டி முதலாளித்துவ வர்க்கம் (விவசாயிகள்) இனி ஒரு முன்னணிப் பாத்திரம் வகிக்க முடியாது. மேலும் இதன் விளைவாக, அதிகாரத்தைக் கைப்பற்றவும் முடியாது. ஆகவே பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளினதும் முதலாளித்துவ-ஜனநாயக சர்வாதிகாரம் என்ற கருத்தையும் நிராகரிக்க வேண்டியதாக உள்ளது.

c. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ், முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சி சோசலிசப் புரட்சியாக மாறுகிறது, இது உலகப் புரட்சியின் ஒரு பகுதியாக மட்டுமே முழுமையாக வெற்றி பெற முடியும். [5]

இந்தக் கொள்கைகள் அனைத்தையும் WRP காட்டிக்கொடுக்க இருந்தது. 1970 களின் பிற்பகுதியில் தொடங்கி, அது முதலாளித்துவ தேசியவாத அமைப்புகளுடனும் ஆட்சிகளுடனும் சந்தர்ப்பவாத கூட்டணிகளையும் உறவுகளையும் ஏற்படுத்தியது. பாலஸ்தீன விடுதலை அமைப்பு, சிம்பாப்வேயில் தேசிய விடுதலை இயக்கம், ஈராக்கில் சதாம் ஹுசைன் மற்றும் ஈரானில் கொமேனி ஆட்சி ஆகியவற்றுக்கு அது வழங்கிய விமர்சனமற்ற ஆதரவும் இதில் உள்ளடங்கும். லிபியாவில் கடாபி ஆட்சியுடன் நிதியுறவுகள் ஏற்படுத்தப்பட்டன. அதை WRP இன் தலைவர்கள் கட்சியிடம் இருந்தும் அனைத்துலகக் குழுவிடம் இருந்தும் மறைத்தனர்.

இந்த நாடுகளில் ட்ரொட்ஸ்கிச கட்சிகளைக் கட்டியெழுப்பும் முன்னோக்கு கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக, முதலாளித்துவ தேசியவாதத் தலைவர்களை, தொழிலாள வர்க்கத்தின் நியாயமான தலைமையாக WRP ஊக்குவித்தது. பிரிட்டனில் தொழிற் கட்சியின் பிரிவுகளையும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும் அதிகரித்தளவில் விமர்சனமின்றி ஊக்குவித்ததுடன் இது இணைந்திருந்தது.

டேவிட் நோர்த்தின் அக்டோபர் 1982 விமர்சனத்தைத் தொடர்ந்து, WRP இன் முன்னோக்கு மற்றும் நடைமுறையில் மேலாளுமை செலுத்த இருந்த சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக, நிரந்தரப் புரட்சி தத்துவத்தைப் பாதுகாக்க வேர்க்கர்ஸ் லீக் எவ்வாறு ஒரு கோட்பாட்டுரீதியான போராட்டத்தை முன்னெடுத்தது என்பதை இந்த விரிவுரை ஆராயும்.

ஹீலியின் ஆதிக்கத்தையும் மிரட்டலையும் யாராலும் சவால் செய்ய இயலவில்லை என்பதால், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) அனைத்துப் பிரிவுகளிலும் “ஒரே மாதிரியான சீரழிவு” இருந்ததாக கிளிஃவ் சுலோட்டர் முன்வைத்த தவறான மற்றும் சுயதேவைக்கான நிலைப்பாட்டை இந்த முன்வரலாறு முற்றிலுமாக மறுக்கிறது. நவம்பர் 1985 இல் சுலோட்டர் டேவிட் நோர்த்துக்குப் பின்வருமாறு எழுதினார்: “அனைத்துலகக் குழுவின் எல்லா தலைவர்களும் ஹீலிசத்தின் பாகமாகவும் அத்துடன் அதற்கு பலியானவர்களாகவும் இருந்தனர். அதனை எதிர்கொண்டு, பகுப்பாய்வு செய்து, திருத்த வேண்டும்.” [6]

இதன் மூலம், சுலோட்டர், WRP நெருக்கடிக்கான எந்தப் பொறுப்பில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளவும், ட்ரொட்ஸ்கிச இயக்கத் தொடர்ச்சியின் உருவமாக விளங்கும் ICFI ஐ மதிப்பிழக்கச் செய்யவும் முயன்றார். இது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தைப் பகிரங்கமாக கைவிடுவதற்கான முதல் படியாக இருந்தது.

WRP சீரழிவு இரவோடு இரவாக நடந்து விடவில்லை. 1963 இல் பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் (SWP) மறுஐக்கியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு SLL தலைமை கொடுத்திருந்தது. SWP காஸ்ட்ரோயிசத்தை தழுவி இருந்ததையும், இலங்கையில் LSSP நடத்திய மாபெரும் காட்டிக்கொடுப்பையும் ஹீலியும் சுலோட்டரும் அம்பலப்படுத்தி இருந்தனர். ஆனால் பிரிட்டிஷ் பிரிவு அதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர், பிரிட்டனில் பலமான தேசியவாத அழுத்தங்களுக்கு தகவமைத்து பின்வாங்கியது. தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் மீதான அதன் பரந்த மாயைகளும் அதில் உள்ளடங்கும்.

1960 களின் பிற்பகுதியில் எழுந்த புரட்சிகர எழுச்சிகளுக்கு விடையிறுப்பாக, தொழிலாள வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்க அடுக்குகளிடையே ஏற்பட்டிருந்த பரந்த தீவிரமயமாக்கல் உறுப்பினர்களை அதிகரிக்க வழிவகுத்தது. ஆனால் இந்த உறுப்பினர்கள் சர்வதேசவாதிகளாகவும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளாகவும் பயிற்றுவிக்கப்படவில்லை. அரசியல் தெளிவுபடுத்தல் மற்றும் பயிற்சி அளிப்பதற்கான போராட்டத்தை, WRP தலைமை படிப்படியாக அதன் ஆதார வளங்கள் மற்றும் உறுப்பினர்களின் அதிகரிப்புக்கு ஒரு முட்டுக்கட்டையாக பார்க்கத் தொடங்கியது.

பப்லோவாதிகளுடன் SWP இன் மறுஐக்கியத்தைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அதன் விளைவாக ஒப்பீட்டளவில் பிரிட்டிஷ் பிரிவு தனிமைப்பட்டிருந்த நிலையில், ஹீலி, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வளர்ச்சியை அதிகரித்தளவில் பிரிட்டனில் ஒரு சக்தி வாய்ந்த தேசியக் கட்சியை வளர்த்தெடுப்பதன் துணை விளைவாகப் பார்க்கத் தொடங்கினார்.

இறுதியாக, ஜெர்ரி ஹீலியும் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அவர் இடமும் என்பதில் டேவிட் நோர்த் விளக்குவதைப் போல, பிரிட்டனில் நடுத்தர வர்க்க அடுக்குகளைச் சார்ந்திருப்பதை நோக்கிய திருப்பமும், மத்திய கிழக்கில் முதலாளித்துவ ஆட்சிகளுடனான சந்தர்ப்பவாத நிதி உறவுகளும், “மார்க்சிச வேலைத்திட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தை வென்றெடுப்பதற்கான சாத்தியக்கூறு மீது அரசியல் நம்பிக்கை இல்லாமல் போனதையும் … முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டுவோராகவும் மற்றும் ஒரு புதிய சோசலிச சமூகத்தைக் கட்டியெழுப்புவோராகவும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை நிராகரிப்பதிலும்” பிரதிபலிப்பைக் காட்டியது. [7]

வேர்க்கர்ஸ் லீக்கின் வரலாற்றுரீதியான வளர்ச்சியும், அதேபோல் இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (RCL) வளர்ச்சியும் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இவ்விரு அமைப்புகளும் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தினூடாக நிறுவப்பட்டிருந்தன. வரலாற்றிலேயே முதல்முறையாக, நான்காம் அகிலத்திற்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறிக் கொண்ட ஒரு கட்சி முதலாளித்துவ கூட்டணிக்குள் நுழைந்த சம்பவமான, இலங்கையில் லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) பண்டாரநாயக்க அரசாங்கத்தில் நுழைந்த இந்த வரலாற்றுக் காட்டிக்கொடுப்பு, முதலாளித்துவ ஒழுங்கமைப்புக்கு ஆதரவாகப் பப்லோவாத திருத்தல்வாதம் முக்கிய பாத்திரம் வகித்ததை எடுத்துக்காட்டிய நிலையில், அதன் மீது அரசியல் விவாதத்தைக் கோரியதற்காக, 1964 இல், வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபகக் காரியாளர்கள் SWP இல் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

கீர்த்தி பாலசூரியா

லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக 1968 இல் ஸ்தாபிக்கப்பட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL), விரைவிலேயே பிரிட்டிஷ் பிரிவின் பின்வாங்கலுடன் மோதலுக்கு வந்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் செயலாளர் கீர்த்தி பாலசூரியா, 1971 டிசம்பரில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பெயரில் SLL வெளியிட்ட அறிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். அந்த அறிக்கை, பங்களதேஷாக மாறவிருந்த தேசிய விடுதலை போராட்டத்தை ஆதரிக்கும் பாசாங்குத்தனத்தில், கிழக்கு பாகிஸ்தானுக்கு இந்தியத் துருப்புக்களை அனுப்புவதற்கு “விமர்சனபூர்வ ஆதரவை” வழங்கியது.

கீர்த்தி பின்வருமாறு எழுதினார்:

பங்களாதேஷ் சம்பந்தமாக அனைத்துலகக் குழுவினது தவறான அரசியல் நிலைப்பாட்டின் தர்க்கம், காலனித்துவ நாட்டு மக்களின் போராட்டங்கள் தொடர்பாக மார்க்சிச இயக்கத்தின் முந்தைய அனைத்து அனுபவங்களையும் கைவிடுவதாக இருக்கும் மற்றும் கைவிடுவதற்கு வழி வகுக்கிறது. [8]

இந்திய இராணுவத் தலையீடு துல்லியமாக கிழக்கு மற்றும் மேற்கு வங்காளத்தை ஒன்றிணைப்பதற்கான ஒரு புரட்சிகர போராட்டத்தை நசுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டது என புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வலியுறுத்தியது. இந்தப் பிராந்தியத்தின் முதலாளித்துவ அரசாங்கங்கள் எதையுமே தொழிலாள வர்க்கம் நம்பியிருக்க முடியாது என்று அது ஓர் அறிக்கையில் எச்சரித்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் விமர்சனங்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள் தெரியாமல் இருப்பதை உறுதிப்படுத்திய SLL, இலங்கைப் பிரிவை தனிமைப்படுத்த வேலை செய்தது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது உட்பட ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிங்கள தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான RCL இன் போராட்டத்தில், SLL/WRP அதற்கு பாரிய சிரமங்களை உருவாக்கியது. ஆரம்பத்தில் சுயநிர்ணயத்தை எதிர்த்த மைக் பண்டா, இதன்மூலம் சிங்களப் பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டு 1948 இல் ஏகாதிபத்தியத்தால் நிறுவப்பட்ட ஓர் அரசை ஆதரித்தார். ஆனால், 1979 இல், முக்கியமாக தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை (LTTE) தமிழர்களின் சட்டபூர்வத் தலைமையாக ஊக்குவிக்கும் விதத்தில், மற்றும் தொழிலாள வர்க்கத்தில் ட்ரொட்ஸ்கிச தலைமையை ஸ்தாபிப்பதற்கான RCL இன் போராட்டத்தைக் இழிவுபடுத்தும் விதத்தில், LTTE அமைப்பை விமர்சனமற்று ஆதரிப்பதென WRP அதன் நிலைப்பாட்டை மாற்றியது.

ரிம் வொல்ஃபோர்த்தின் விட்டோடல், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை முந்தைய விரிவுரைகள் ஆய்வு செய்தன. அவை அமெரிக்காவில் பப்லோவாதக் கலைப்புவாதத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தில் முக்கிய அபிவிருத்திகளாக இருந்தன. அந்தப் போராட்டத்தை வேர்க்கர்ஸ் லீக் தொடர்ந்து ஆழப்படுத்தப்படுத்திய நிலையில், 1970 கள் மற்றும் 1980 களின் போது அதன் காரியாளர்களை அணிதிரட்டுவதிலும் பயிற்சி அளிப்பதிலும் அது முக்கியமானதாக இருந்தது.

வேர்க்கர்ஸ் லீக் WRP சந்தர்ப்பவாதிகளுடன் நேரடி மோதலுக்குள் வந்து கொண்டிருந்த அதே நேரத்தில், அது SWP இன் திருத்தல்வாதத்தை அம்பலப்படுத்துவதையும் தீவிரப்படுத்தியது. இவ்விரு போராட்டங்களும் ஆழமாக ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

டிசம்பர் 31, 1982 இல், SWP தேசிய செயலாளர் ஜாக் பார்ன்ஸ் இளம் சோசலிஸ்டுகள் அமைப்பின் தேசிய மாநாட்டில் ஓர் உரை வழங்கினார், அதில் அவர் வெளிப்படையாகவே ட்ரொட்ஸ்கிசத்தின் ஒட்டுமொத்த மரபியத்தையும் நிராகரித்தார். அந்த உரை உடனடியாகப் பிரசுரிக்கப்படவில்லை. ஆனால் வேர்க்கர்ஸ் லீக் ஒரு பகுதி கையெழுத்ததுப் பிரதியைப் பெற்று, அரசியல்ரீதியில் கடுமையான ஒரு பதிலைத் தயாரித்து, ஆத்திரமூட்டும் ஒருவர் ட்ரொட்ஸ்கிசத்தைத் தாக்குகிறார் என்ற தலைப்பில் ஆகஸ்ட் 1983 இல் ஒரு துண்டறிக்கையாக பிரசுரித்தது.

ஆத்திரமூட்டும் ஒருவர் ட்ரொட்ஸ்கிசத்தைத் தாக்குகிறார், ஆகஸ்ட் 1983 இல் லேபர் பிரசுரத்தில் பிரசுரிக்கப்பட்டது.

வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்றாலும், அந்த ஆவணம் தெளிவாக WRP ஏற்றுக் கொண்டிருந்த நிலைப்பாடுகளுக்கு எதிராகவும் இருந்தது.

அக்டோபர் புரட்சி “உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனை” என்றும், அதாவது உலகளாவிய வரலாற்றளவில் முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு மாறுவதற்கான தொடக்கம் என்றும், மற்றும் அது இந்த உலக-வரலாற்று அபிவிருத்திக்கும் ஒவ்வொரு நாட்டின் வர்க்கப் போராட்டத்திற்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தியது என்றும் விளங்கப்படுத்திய, “ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்ட சாராம்சத்தை நம் காலத்தின் மார்க்சிசமாக” குறிப்பிட்டு நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அந்த அறிக்கை பாதுகாத்தது. [9]

1938 இல் ஸ்தாபிக்கப்பட்ட அந்தக் கட்சியின் பெயரைத் தவிர, வேறு எதுவுமே இல்லாதளவுக்கு SWP இன் மிகப் பெரும் சீரழிவை, அந்த அறிக்கை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. பார்ன்ஸின் உரை, குறிப்பாக பப்லோவாதத்தின் ஒரு கொச்சையான வடிவத்தை முன்வைத்தது. அவர் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை மார்க்சிசம் மற்றும் லெனினிசத்தில் இருந்து ஒரு விலகல் என்றும், நான்காம் அகிலம் “மூன்றாம் அகிலத்தின் அச்சில் இருந்து விலகுவதற்கு” இட்டுச்செல்வதாகவும் கண்டித்தார். [10]

பார்ன்ஸின் கூற்றுப்படி, இந்த தத்துவம் “அரசியல் அர்த்தத்தில், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கிக்கு இடையிலான ரஷ்ய-புரட்சிக்குப் பிந்தைய ஒற்றுமையை உடைத்தது. அது குறுங்குழுவாதத்திற்கும், அதிதீவிர இடது பொருள்விளக்கங்களுக்கும் மற்றும் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தைப் பயன்படுத்துவதற்கும் கதவைத் திறந்து விட்டது.” [11]

அவர் தெரிவித்தார்:

நிரந்தரப் புரட்சி ஒரு சரியான பொதுமைப்படுத்தலாக இல்லை, அல்லது போதுமானதாகவும் இல்லை, அல்லது நம் வேலைத்திட்டம் என்ன என்பதன் மீதான பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நிறையப் பிரச்சினைகளைத் திறந்து விடுவதாக உள்ளது. என்னுடைய பார்வையில், நிரந்தரப் புரட்சி நம் வேலைதிட்டத்திற்கான ஒரு பொதுவான வரையறையாகப் பயன்படாது என்று சுட்டிக்காட்டி, அதைக் குறைப்பதன் மூலம் நாம் கூடுதலாக அடைய பெற முடியும்.

சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) முன்னோக்கை தொகுத்தளிக்கும் விதத்தில் பார்ன்ஸ் அறிவிக்கையில், “ட்ரொட்ஸ்கிசம் என்ற இந்த வார்த்தையைக் கூட, இந்த தசாப்தம் முடிவடைவதற்கு முன்னர் நம்மில் யாரும் அதை பயன்படுத்தமாட்டோம் என்று நான் முன்கூட்டி கூறிக் கொள்கிறேன்” என்றார். [12]

சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தேசியச் செயலாளர் ஜாக் பார்ன்ஸ்

பார்ன்ஸின் வாதம், “ட்ரொட்ஸ்கிசம் சம்பந்தமானது மட்டுமல்ல; வரலாறு சம்பந்தப்பட்டது,” என வேர்க்கர்ஸ் லீக் விளக்கியது. லெனின் 1917 இல் ரஷ்யாவுக்கு திரும்பியவுடன், “பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகார” தத்துவத்தைக் கைவிட்டு, அவருடை ஏப்ரல் ஆய்வுரையில் (April Theses) நிரந்தரப் புரட்சி தத்துவத்தை ஏற்றார் என்று கூறி ட்ரொட்ஸ்கி லெனினைத் தவறாகச் சித்தரித்ததாக பார்ன்ஸ் வலியுறுத்தினார். இது துல்லியமாக ஸ்ராலினால் 1924 இல் முன்னெடுக்கப்பட்ட பெரும் பொய்யாகும். ட்ரொட்ஸ்கிக்கும் இடது எதிர்ப்பிற்கும் எதிரான அவரது பிரச்சாரம், நிரந்தரப் புரட்சி தத்துவம் மீதான ஒரு தாக்குதலாகவும், விவசாயிகளை ட்ரொட்ஸ்கி “குறைத்து மதிப்பிட்டார்” என்ற குற்றச்சாட்டுக்களாகவும் தொடங்கப்பட்டது. இது “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற “தத்துவத்திற்கு” ஆதரவாக சர்வதேசியவாதத்தை அதிகாரத்துவம் நிராகரித்ததுடன் ஒன்றிணைந்து சென்றது.

உண்மையில், இந்தப் பழைய சூத்திரம் “காலாவதியாகி விட்டது” என்று ஏப்ரல் 1917 இல் இருந்து லெனின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இருந்தார். “அது எந்த வகையிலும் சரியானதல்ல. அது மரணித்து விட்டது. அதை புத்துயிரூட்ட முயற்சிப்பதில் பயனில்லை,” என்றவர் கூறினார். [14] எந்த வர்க்கம் ஆட்சி செலுத்த வேண்டும் என்ற பிரச்சினையை அந்த சூத்திரம் தீர்த்து வைக்கவில்லை என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்திய அதே பிரச்சினையை அவரும் அடையாளம் கண்டார். இந்த மட்டுப்பட்ட தன்மை பிப்ரவரி புரட்சியில் உறுதிப்படுத்தப்பட்டது: அப்போது சோவியத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் சர்வாதிகாரம், முதலாளித்துவத்திற்கு அதிகாரத்தை “விட்டுக் கொடுத்தது”.

இரண்டு கட்ட தத்துவத்தை நிராகரித்த லெனினின், ஏப்ரல் ஆய்வுரைகள், ஒரு தடையற்ற, அல்லது நிரந்தரமான, புரட்சிக்கு அழைப்பு விடுத்தது:

தற்போதைய ரஷ்ய சூழ்நிலையின் சிறப்பம்சம் என்னவென்றால், நாடு புரட்சியின் முதல் கட்டத்தில் இருந்து இரண்டாவது கட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. முதல் கட்டத்தில், போதுமானளவுக்கு வர்க்க நனவின்றி மற்றும் ஒழுங்கமைப்பின்றி இருந்த பாட்டாளி வர்க்கம், அதிகாரத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் கரங்களில் ஒப்படைத்து விட்டது. அதன் இரண்டாவது கட்டம் அதிகாரத்தைப் பாட்டாளி வர்க்க மற்றும் விவசாயிகளின் வறிய பிரிவுகளது கரங்களில் நிலைநிறுத்த வேண்டும்.[15]

தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட சுயாதீன புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதற்கான எந்தவொரு முன்னோக்கையும் முழுமையாக அது கைவிட்டு விட்டதை நியாயப்படுத்த, சோசலிச தொழிலாளர் கட்சி, பழைய ஸ்ராலினிச பொய்களுக்கு புத்துயிரூட்டியது. வேர்க்கர்ஸ் லீக் விளக்கியது போல:

ஸ்ராலினிஸ்டுகள், மத்தியவாதிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தை வெறுக்கும் எல்லா குட்டி-முதலாளித்துவ தீவிரக் கொள்கையாளர்களும் எப்போதுமே நிரந்தரப் புரட்சியுடன் ஒரு “பிரச்சினையை” கொண்டிருந்தனர், ஏனென்றால் வர்க்க சமரசத்தின் ஒவ்வொரு வடிவத்திற்கு எதிரான போராட்டத்திலும் மற்றும் முதலாளித்துவ வர்க்க அரசியல் முகமைகளுக்குத் தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதற்கு எதிரான போராட்டத்திலும் அது தத்துவார்த்த வழிகாட்டியாக விளங்குகிறது. [16]

பிப்ரவரி 1984 இல் அனைத்துலகக் குழுவிற்கான தனது அறிக்கையில், பார்ன்ஸ் நிலைப்பாடுகளின் ஸ்ராலினிச தன்மையை தோழர் நோர்த் மீண்டும் வலியுறுத்தினார். பார்ன்ஸ் “தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் அரசாங்கத்திற்கு” அழைப்பு விடுத்தார். அதாவது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு அவர் அழைப்பு விடுக்கவில்லை. ஸ்ராலினிஸ்டுகளே கூட இதை மிகவும் வெளிப்படையாகக் கண்டு கொண்டிருந்தனர்.

வேர்க்கர்ஸ் லீக்கின் நியூ யோர்க், லாங் ஐலேண்ட் நகர அச்சு அலுவலகத்தில் டேவிட் நோர்த், 1980

“முதலாளித்துவ ஜனநாயகம் அதன் முற்போக்கான சாத்தியக்கூறுகளை நடைமுறைப்படுத்த உதவுவதற்காக, அதன் மீது பாரியளவில் அழுத்தம்” ஏற்படுத்துவதன் மூலம், “சோசலிசத்தை நோக்கி நகர்வதே” வளர்ந்து வரும் நாடுகளின் பணியாகும் என எழுதிய முன்னணி சோவியத் தத்துவவியலாளர் ரோஸ்டிஸ்லாவ் உல்யனோவ்ஸ்கியின் (Rostislav Ulyanovsky) “தேசிய விடுதலை” பற்றிய கருத்தை தோழர் நோர்த் சுட்டிக் காட்டினார். …

“முதலாளித்துவம்-அல்லாத பாதையை ஏற்குமாறு அழைப்பு விடுக்கும் முழக்கத்தை ஊக்குவிப்பது, எந்த விதத்திலும், அது சோசலிசப் புரட்சிக்கும், மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்கும் மற்றும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அழைப்பு விடுப்பதாக ஆகாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.…” [17]

மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் SWP இன் நோக்குநிலை, குட்டி-முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளை நோக்கி இருந்தது.

மார்ச் 1982 இல், பார்ன்ஸ் பின்வருமாறு அறிவித்திருந்தார்:

நிக்கராகுவாவின் FSLN, கிரேனாடாவின் நியூ ஜெவெல் இயக்கம், கியூப கம்யூனிஸ்ட் கட்சி, எல் சால்வடோர் மற்றும் குவாத்தமாலாவின் புரட்சிகரப் போராடங்களின் முன்னணி பாட்டாளி வர்க்க தலைவர்கள் ஆகியவர்களோடு நாம் ஒரு பொதுவான உலக மார்க்சிச இயக்கத்தின் பாகமாக இருப்பதாக நம்புகிறோம். … ஒட்டுமொத்த நான்காம் அகிலமும் கூட தன்னை இப்படித்தான் பார்க்க வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். … நாம் இத்தகைய புரட்சியாளர்களோடு ஒரு பொதுவான மார்க்சிச இயக்கத்தின் பாகமாக இருக்கிறோம். தங்களை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று குறிப்பிடும் பலருடைய மற்றும் அமைப்புகளுடைய ஒரு பொதுவான இயக்கத்தின் பாகமாக நாம் இல்லை. [18]

தொழிலாள வர்க்கத்தில் ட்ரொட்ஸ்கிச தலைமையைக் கட்டியெழுப்ப இனி எந்த அவசியமும் இல்லை மற்றும் புரட்சிகரப் பணிகளைக் காஸ்ட்ரோ போன்ற “நனவுபூர்வமற்ற மார்க்சிஸ்டுகளிடம்” ஒப்படைக்கலாம் என்பதற்கு ஆதாரமாக, 1959 இல் கியூபப் புரட்சியை ஜோசப் ஹான்சன் முன்னணி பாத்திரம் வகித்த SWP எவ்வாறு பயன்படுத்தியது என்பதை வேர்க்கர்ஸ் லீக்கின் அந்த அறிக்கை விரிவாக மீளாய்வு செய்கிறது.

SWP இன் இந்தத் திருப்பமும் பப்லோவாதிகள் உடனான மறுஐக்கியத்தை நோக்கிய அதன் நகர்வும், Fair Play கியூபா குழு (Fair Play for Cuba Committee) மூலமாக அரசு முகவர்கள் அந்தக் கட்சிக்குள் உள்நுழைந்ததோடு சேர்ந்திருந்தது. பழமைவாத கார்ல்டன் கல்லூரியில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 12 முகவர்களில் பார்ன்ஸூம் ஒருவராவார். இவர்கள் விரைவிலேயே ஹான்சனால் முன்னணிப் பதவிகளுக்கு உயர்த்தப்பட்டனர். இந்தக் குழு வொல்ஃபோர்த்தையும் மற்றும் ICFI இன் மற்ற ஆதாரவாளர்களையும் [SWP இல் இருந்து] வெளியேற்றுவதற்கான அடித்தளத்தைத் தயார் செய்வதில் முன்னணிப் பாத்திரம் வகித்தது.

1980 களின் முற்பகுதியில் அக்கட்சியில் இருந்து டஜன் கணக்கான ஸ்தாபக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், SWP இன் அரசியல் சீரழிவுக்கு ஏற்ப அந்த களையெடுப்பும் தொடர்ந்ததுடன், துரிதப்படுத்தப்பட்டது.

வேர்க்கர்ஸ் லீக்கின் 1982 அறிக்கை பின்வரும் மிக முக்கிய குறிப்பை வழங்குகிறது.

சோசலிச தொழிலாளர் கட்சியின் சீரழிவு, வெறுமனே ஓர் அரசாங்க உளவாளியாக ஹான்சன் நடவடிக்கைகளின் விளைவு அல்ல. ஆனால், 1950 களின் போது SWP க்குள் அரசியல் நெருக்கடி ஆழமடைந்து வந்த நிலைமைகளின் கீழ், 1953 உடைவில் இருந்து எழுந்த தத்துவார்த்த பிரச்சினைகள் அப்போதும் தீர்க்கப்படாமல் இருந்த நிலையில், கனன் போன்ற தலைவர்களின் சரீரரீதியான மற்றும் அரசியல்ரீதியான முக்கியத்துவம் கடந்த காலத்திற்குரியதாகப் பார்க்கப்பட்ட நிலையில், உயர்மட்டத் தலைவர்களிடையே உள்கட்சி கோஷ்டி மோதல் அதிகரித்திருந்த நிலையில், ஹான்சனின் பணி மிகப் பெரும் அழிவுகரமான விகிதங்களில் இருந்தது.

இந்தச் சீரழிவு தவிர்க்கவியலாததாக இருந்தது என்று தொடர்ந்து அது விவரிக்கிறது:

1950 களின் பிற்பகுதியில், அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு SLL வழங்கிய ஒத்துழைப்பு, SWP க்குள் நிலவிய உள்கட்சி நெருக்கடியை தீர்க்க மிகப்பெரும் உதவியாக இருந்திருக்கலாம். அமெரிக்காவில் அரசியல் நிலைமையில் ஏற்பட்ட மாற்றங்களுடன் சேர்ந்து, குறிப்பாக சிவில் உரிமைகளுக்காக கறுப்பினத் தொழிலாளர்களின் பாரிய இயக்கத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து, SWP மீண்டுமொருமுறை ஒரு ட்ரொட்ஸ்கிச இயக்கமாக பாரியளவில் முன்னேறி இருக்கலாம். [19]

அதற்குப் பதிலாக, ஹான்சனும் அவரது பரிவாரங்களும் சோசலிசத் தொழிலாளர் கழகத்திற்கு (SLL) எதிராக SWP இல் நிலவிய சூழலுக்கு இன்னும் நஞ்சூட்ட செயற்பட்டனர். “ஹீலி கியூபப் புரட்சியை எதிர்க்கிறார்,” என்ற பொய்களைப் பரப்பியதும் இதில் உள்ளடங்கும். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கியூபப் புரட்சியை பாதுகாப்பதில் SLL எப்போதுமே ஒரு கொள்கைரீதியான நிலைப்பாட்டை எடுத்து வந்திருந்தது. ஆனால் இது, கியூபாவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு மாற்றீடாக அதன் தேசியவாத தலைமையைத் தழுவுவதை நியாயப்படுத்தவில்லை.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தை SWP முழுமையாக நிராகரித்தமை அமெரிக்காவிற்கும் பொருந்தும் என்பதை வலியுறுத்தியாக வேண்டும். அங்கே அமெரிக்காவில் கறுப்பின தேசியவாதம் மற்றும் அடையாள அரசியல் அடிப்படையில், ஜெஸ்ஸி ஜாக்சன் போன்ற “இடதுசாரி” ஜனநாயகக் கட்சியினரை நோக்கி அது நோக்குநிலை கொண்டிருந்தது. “[அதாவது], தொழிலாளர்கள், கறுப்பின மக்கள் மற்றும் இலத்தீனோக்கள்; தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட தேசிய மக்கள் ஆகியோரின் கூட்டணி எந்த வடிவத்திலாவது ஏற்படுத்தப்பட வேண்டும் … என்று வாதிட்ட தொழிலாளர் இயக்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட தேசிய அமைப்புகளின் முக்கிய பிரமுகர்களின் அதே கூற்றைத் தொடக்கப் புள்ளியாக” ஜாக்சன் “திறந்து விடுகிறார்” என்று பார்ன்ஸ் வாதிட்டார்.

கறுப்பின மற்றும் இலத்தீனோ மக்களைத் தொழிலாள வர்க்கத்தில் இருந்து பிரிந்து நிற்கும் ஓர் “ஒடுக்கப்பட்ட தேசமாக” விவரிப்பது நிச்சயமாக முற்றிலும் தவறானது; இது கறுப்பின மக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மத்தியிலுள்ள வர்க்க வேறுபாடுகளை மூடிமறைக்க சேவையாற்றியது. இத்தகைய அறிக்கைகளுடன், SWP “கறுப்பினத்தவர்கள் மற்றும் ஹிஸ்பானியர்களிடையே உள்ள குட்டி-முதலாளித்துவ கூறுபாடுகளை அணுகுவதற்கும், ஜனநாயகக் கட்சியுடன் ஒரு பாலத்தைக் கட்டமைக்க, எரிச்சலூட்டும் விதத்தில் அவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது,” என்று வேர்க்கர்ஸ் லீக் விவரித்தது. [20]

ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான SWP இன் தாக்குதலை அம்பலப்படுத்துவதும், பப்லோவாதத்துடனான மறுஐக்கியத்திற்கு எதிரான வரலாற்று ரீதியான போராட்டத்தில் SLL வகித்த பாத்திரத்தை நினைவூட்டுவதும் WRP இல் நிலவும் அரசியல் பிரச்சனைகளைத் தெளிவுபடுத்துவதற்கும் மற்றும் கட்சியை திருத்தி மறுநோக்குநிலை கொள்ள செய்யவும் உதவும் என வேர்க்கர்ஸ் லீக் நம்பியது. பார்ன்ஸின் 1982 உரை குறித்து ஜெர்ரி ஹீலிக்குக் கூறப்பட்ட போது, பர்ன்ஸின் நிலைப்பாடுகளை அம்பலப்படுத்தி பதிலளிப்பதற்கான வேர்க்கர்ஸ் லீக்கின் முன்மொழிவுகளை அவர் [ஹீலி] உற்சாகத்துடன் ஆதரித்ததால் தோழர் நோர்த் ஊக்குவிக்கப்பட்டார்.

கியூபப் புரட்சி, ஏகாதிபத்தியத்திற்கு ஏற்படுத்திய தோல்விகளின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கிசத்தைத் திருத்துவதற்கான SWP முயற்சிக்கு எதிரான போராட்டத்தில், 1960 களின் முற்பகுதியில் WRP தலைவர்கள் வகித்திருந்த பாத்திரத்தைக் குறித்து பிப்ரவரி 11, 1984 இல் டேவிட் நோர்த் அவர்களுக்கு நினைவூட்டினார்.

பப்லோவாதத்தால் மிகத் தெளிவாகப் பிரதிநிதித்துவம் செய்யப்படும் “கலைப்புவாதமே இந்தப் புரட்சிகர இயக்கம் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய ஆபத்தாக உள்ளது” என்று SWP க்கு எழுதிய அதன் முதல் கடிதத்திலேயே SLL எச்சரித்திருந்தது. அது தொடர்ந்து குறிப்பிட்டது: “தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான மூலோபாயத்தில் இருந்தும், புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதில் இருந்தும் எந்தவொரு பின்வாங்கலும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பாகத்தில் ஓர் உலக-வரலாற்று பிழையின் முக்கியத்துவத்தைப் பெறும்.” [21]

அனைத்துலகக் குழுவுக்கு நோர்த் எழுதிய அறிக்கை, நிரந்தரப் புரட்சியை SWP பகிரங்கமாக கைவிட்டதற்கும் மற்றும் WRP ஏற்று வந்த நிலைப்பாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையை விவரித்தது. மத்திய கிழக்கு எங்கிலும் முதலாளித்துவத் தலைவர்களுடன் WRP ஏற்படுத்தி இருந்த உறவுகள், இதைக் குறித்து ரொம் ஸ்க்ரிப்ஸ் இந்த விரிவுரையின் இரண்டாம் பாகத்தில் விவரிப்பார். இவை அதிர்ச்சியூட்டும் அளவிற்கு இலத்தீன் அமெரிக்காவில் SWP கொண்டிருந்த நோக்குநிலையுடன் பொருந்தி இருந்தன.

நோர்த்தின் அறிக்கை பின்வருமாறு விவரித்தது:

ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான பார்ன்ஸின் இந்தச் சமீபத்திய தாக்குதலுக்காக, இந்த ஒட்டுமொத்த வரலாற்றையும் முன்கொணர வேண்டும்; துல்லியமாக ஏனென்றால் திருத்தல்வாதிகளின் அணிகளுக்குள் இத்தகைய முக்கிய அபிவிருத்திகள், உலக சோசலிசப் புரட்சியின் மாபெரும் புதிய அத்தியாயங்களுக்கு தவிர்க்கவியலாமல் முன்னறிவிப்பாக இருக்கின்றன என்பதை அனைத்துலகக் குழு எப்போதுமே அங்கீகரித்துள்ளது. அனைத்திற்கும் மேலாக, திருத்தல்வாதத்தை ஓர் ஆய்வகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட சோதனைக் குழாயின் உள்ளிருக்கும் ஒருவித நுண்ணுயிரியாக நாம் பார்ப்பதில்லை. துல்லியமாக ஏனென்றால், திருத்தல்வாதம் நாமும் ஒரு பாகமாகப் பங்கெடுத்திருக்கும் வர்க்கப் போராட்டத்தின் நிஜமான அபிவிருத்தியில் சடரீதியான வேர்களைக் கொண்டுள்ளதாலும், அது அன்னிய வர்க்க சக்திகள் தொழிலாள வர்க்கத்தின் மீதும் அதன் புரட்சிகர முன்னணிப் படையின் மீதும் செலுத்தும் அழுத்தத்தைப் பிரதிபலிப்பதாலும், திருத்தல்வாதத்திற்கான நமது விடையிறுப்பு, நம் சொந்த அரசியல் அபிவிருத்தியைப் பற்றிய பகுப்பாய்வில் அதன் உச்சபட்ச வெளிப்பாட்டைக் காண்கின்றன. [22]

ஆனால் அதன் சொந்த அரசியல் அபிவிருத்தியைக் குறித்த எந்தவொரு புறநிலையான பகுப்பாய்வைச் செய்வதிலும் ஆர்வம் காட்டாத WRP, வேர்க்கர்ஸ் லீக்கை தாக்கியும், அதன் விமர்சனங்களை ஒடுக்கியும், பிளவு ஏற்படுமென அச்சுறுத்தியும், அது மீண்டும் மீண்டும் அதுபோன்ற ஒரு கலந்துரையாடலை அனைத்துலகக் குழுவுக்குள் தடுக்க முயன்றது.

WRP க்கும் வேர்க்கர்ஸ் லீக்கிற்கும் இடையிலான அரசியல் மோதல், 1983 இன் போக்கில் ஆழமடைந்து, கிரெனடா மீதான அமெரிக்க படையெடுப்பு பிரச்சினையில் வெடித்து வெளிப்பட்டது. மைக் பண்டா, அக்டோபர் 1983 இல் அனைத்துலகக் குழுவின் ஒரு கூட்டத்தில், புல்லட்டின் பத்திரிகையின் முதல் பக்கத்தில் “ரீகன் ஒரு பொய்யர்” என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரை உள்ளடங்கலாக, அந்தப் பத்திரிகையின் விடையிறுப்புகளை கடுமையாகத் தாக்கினார். அவர் அந்தக் கட்டுரையை ஒரு பிரச்சாரவாத பிரதிபலிப்பாக அறிவித்தார்.

கிளிஃவ் சுலோட்டர்

அதையடுத்து டிசம்பரில் தோழர் நோர்த்துக்கு எழுதிய கடிதத்தில் அந்தத் தாக்குதலை ஆழப்படுத்திய கிளிஃவ் சுலோட்டர், பின்வரும் இழிவான அறிக்கையை வெளியிட்டு வேர்க்கர்ஸ் லீக்கைத் தாக்கினார்:

மார்க்சிசத்தை பாதுகாத்தல் என்ற நூலில் இருந்து மேற்கோள்களைக் காட்டி, “தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம்” குறித்த உங்களின் சொந்த பலமான வலியுறுத்தல், நடைமுறைவாதத்தை இறுகப்பிடித்துள்ள அனைவரின் கைகளிலும் ஓர் ஆயுதமாக மாறும். ஏனென்றால், உலக நெருக்கடியால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பிலும் ஏற்படும் வேகமான அபிவிருத்திகளைப் புரிந்து கொள்ளும் வாழ்வா-சாவா அணுகுமுறை விஷயத்தில் இயங்கியல் வரையறைகளை அபிவிருத்தி செய்து விரிவாக்குவதற்கு வெளிப்படையாக போராடுவதற்குப் பதிலாக, அவர்கள் அதை ஏதோவொரு அதிக “உறுதியான” பொக்கிஷமாக வைத்துக் கொள்வார்கள். [23]

தோழர் கிறிஸ்தோப் வாண்ட்ரேயர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவாறு, இங்கே சுலோட்டர் மார்க்சிச அணுகுமுறையைத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கான கருவியாகக் காட்டுவதற்குப் பதிலாக, மார்க்சிச அணுகுமுறையை தொழிலாள வர்க்க அரசியல் சுயாதீனத்திற்கான அரசியல் போராட்டத்திற்கு எதிராக நிறுத்துகிறார். [24] நான் இந்தப் பத்தியைக் குறித்தும், இதற்கு தோழர் நோர்த்தின் விடையிறுப்பு குறித்தும் அடுத்தடுத்து இன்னும் கூடுதலாக விவரிக்க உள்ளேன்.

“அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொழிலாளர்களை அணி திரட்டுவோம்” என்ற வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் குழு அறிக்கைக்கு சுலோட்டர் ஆட்சேபனை தெரிவித்து வந்தார். நிகராகுவா சான்டினிஸ்டா அரசாங்கத்திற்கு எதிராக சண்டையிடுவதற்கான கொன்ட்ராஸ் (Contras) இற்கான நிதியுதவி மற்றும் லெபனானுக்கு படைகளை அனுப்புவது ஆகியவை உள்ளடங்கலாக, அந்தப் படையெடுப்பானது அமெரிக்க இராணுவ வன்முறை மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டதன் பாகமாக இருந்ததாக அக்டோபர் 28, 1983 இல் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை விவரித்தது.

ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் பொருளாதார நெருக்கடியால் உந்தப்பட்டு, உலகை வன்முறையாக மறுபங்கீடு செய்வதை நோக்கி உந்தப்பட்டு வந்தன. போல்க்லாந்து (Falkland) தீவுகளில் பிரிட்டிஷ் போர் மற்றும் லெபனான் மீதான இஸ்ரேல் படையெடுப்பு இரண்டையுமே அமெரிக்கா ஆதரித்த நிலையில், அவை “இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் குறைந்தபட்சம் பொதுவான தேசிய சுதந்திரத்தை பெற்றிருந்த அந்த பரந்த பிராந்தியங்களை மீண்டும் காலனித்துவப்படுத்தும் முனைவின்” பாகமாக இருந்தன. [25]

கிரெனடா படையெடுப்பு உள்நாட்டு நோக்கங்களுக்கும் சேவையாற்றியது: கம்யூனிசம் மீதான ரொனால்ட் ரீகனின் விஷமத்தனமான கண்டனங்களுடன் அது சேர்ந்திருந்தது. ரீகன் நிர்வாகம் ஒரே நேரத்தில் வர்க்கப் போராட்டத்தை ஈவிரக்கமின்றி ஒடுக்குவதிலும் ஈடுபட்டிருந்தது. அந்தச் சிறிய தீவு ஒரு சோவியத் மற்றும் கியூபாவின் துணை நிலையமாக மாற்றப்பட்டிருந்ததாகவும், அது ஓர் இராணுவ அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் ரீகன் வாதிட்டார்.

1979 இல் கிரெனடாவில் அதிகாரத்திற்கு வந்திருந்த ஒரு தீவிர தேசியவாத கட்சியான நியூ ஜூவல் இயக்கத்திற்குள் (New Jewel Movement -NJM) நடந்த இரத்தந்தோய்ந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியே அந்தப் படையெடுப்புக்கு உடனடி தூண்டுதலாக இருந்தது. கிரெனடாவில் இருந்த அமெரிக்க மருத்துவத்துறை மாணவர்களின் ஒரு குழுவைப் பாதுகாப்பதற்காக தலையிட வேண்டியிருப்பதாக ரீகன் நிர்வாகம் எரிச்சலூட்டும் விதத்தில் அறிவித்தது, உண்மையில் அவர்கள் எந்த தீங்கான அபாயத்திலும் இருக்கவில்லை.

“தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை” நிறுவி இருந்த “ஒரு நனவான, பாட்டாளி வர்க்க மார்க்சிச” தலைமை [26] என்று SWP ஆல் பாராட்டப்பட்ட நியூ ஜூவல் இயக்கம் (NJM), ஒரு முதலாளித்துவத் தேசியவாத ஆட்சியாக இருந்தது. மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களை மேற்கொண்ட அது, ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து இன்னும் அதிக சுதந்திரத்தைப் பெறுவதற்கும் மற்றும் அந்நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் முயன்று வந்தது.

கிரெனடாவின் பிரதம மந்திரி மௌரிஸ் பிஷப்பும், அவரின் பல அமைச்சர்களும் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களும், அவரது முன்னாள் துணை பிரதம மந்திரி பேர்னார்ட் கோவார்ட் தலைமையில் இராணுவத்தின் ஆதரவுடன் NJM இன் ஒரு போட்டிப் பிரிவால், அக்டோபர் 19, 1983 இல் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்கள் பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான மோதல்களுடன் தொடர்புபட்ட, அதிகாரத்திற்கான மோதலின் ஓர் இரத்தக் களரியின் உச்சக்கட்ட விளைவாக இருந்தன: அதற்குச் சற்று முன்னர், அமெரிக்காவுக்கு பயணித்திருந்த பிஷப், அங்கே இராஜாங்க உறவுகளை சீராக்குமாறு அழைப்புவிடுத்திருந்தார். இது வெளிப்படையாகவே அவரது விரோதிகளால் எதிர்க்கப்பட்டதுடன், அவர்கள் கியூபா மற்றும் சோவியத் ஒன்றியத்துடன் உறவுகளைப் பலப்படுத்துவதை நோக்கி நோக்குநிலை கொண்டிருந்தனர்.

“கிரெனடாவில் அந்த இரத்தக்களரியான சம்பவங்கள், முன்னாள் காலனித்துவ நாடுகளிலும் நவ-காலனித்துவ நாடுகளிலும் குட்டி-முதலாளித்துவ புத்திஜீவிகளை ஈர்த்திருந்த இதுபோன்ற தேசியவாத போக்குகளின் இயல்பான நிலையற்றத் தன்மையையும் மற்றும் அரசியல் திவால்நிலையையும் மீண்டுமொருமுறை எடுத்துக் காட்டுகின்றன,” என்று வேர்க்கர்ஸ் லீக் விவரித்தது. ட்ரொட்ஸ்கி விளக்கி இருந்தவாறு, இதுபோன்ற பிரிவுககள் ஜனநாயகப் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்ல திராணியற்றவை, ஏனென்றால் தொழிலாளர் அதிகாரத்திற்கான உண்மையான அமைப்புகளை உருவாக்குவது உட்பட இதைச் செய்ய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவைப்படுகிறது. அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது:

எந்த மார்க்சிச முன்னோக்கும் இல்லாமல், கட்சிக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான உறவைப் பற்றிய விஞ்ஞானபூர்வ புரிதலும் இல்லாமல், வரலாற்று நிகழ்ச்சிபோக்கின் தர்க்கத்தைப் புரிந்து கொள்ளாமலேயே அவற்றை எவ்வாறோ கையாள முடியும் என்று அவர்கள் நம்பும் வர்க்க சக்திகளால் தூண்டப்படுகிறார்கள். அதே நேரத்தில் நோக்குநிலை பிறழ்ந்து, சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் மோசமாகத் திசைதிருப்பப்பட்ட இத்தகைய குட்டி-முதலாளித்துவ தலைவர்கள் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக் கொள்ளும் இந்தப் பெருந்திரளான மக்களின் முதுகுக்குப் பின்னால் வன்முறையாகக் கணக்கு தீர்த்துக் கொள்கிறார்கள். [27]

அந்தப் படையெடுப்புக்குப் பின்னர் உடனடியாக வேர்க்கர்ஸ் லீக் வெளியிட்ட அதன் அறிக்கையில் (இதற்கு சுலோட்டர் ஆட்சேபனை தெரிவித்தார்) AFL-CIO மறைமுகமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு வழங்குவதற்கும், சில ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து வரும் பாசாங்குத்தனமான எதிர்ப்புக்கும், அத்துடன் கிரெனடா ஆட்சிக் கவிழ்ப்பு சதியை சோவியத் அரசாங்கம் ஊக்குவித்திருந்ததாக தெரிந்த நிலையில், சோவியத் அரசாங்கம் வகித்த நயவஞ்சகமான பாத்திரத்தையும் அது கண்டனம் செய்தது.

அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்புக்கும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மீதான இரு கட்சிகளின் தாக்குதலுக்கும் இடையிலான தொடர்பை வலியுறுத்தி அந்த அறிக்கை அறிவிக்கையில், தொழிலாள வர்க்கத்தின் பலத்தை திரட்டுவதன் மூலமாக மட்டுமே படையெடுப்பைத் தோற்கடிக்க முடியுமென அறிவித்தது. அது குறிப்பிட்டது: “தொழிலாளர்களின் ஒரு கட்சியை உருவாக்குவதன் மூலம் அதன் அரசியல் சுயாதீனத்தை நிலைநிறுத்துவதற்கும், முதலாளித்துவ அமைப்பை ஒழித்து சோசலிசத்தை நிறுவுவதற்கு அர்ப்பணித்த ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான போராட்டமுமே அமெரிக்க தொழிலாள வர்க்கம் எதிர் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சினையாகும்.” [28]

சுலோட்டர் அந்த அறிக்கையை எதிர்த்தார். “கிரெனடாவில் அமெரிக்க ஏகாதிபத்திய படையெடுப்பையும் மற்றும் நிக்கராகுவாவில் நடத்தப்படவிருக்கும் தாக்குதலையும் தோற்கடிப்பதற்காக போராடுவதே ’முக்கிய பிரச்சினை’” என்று அவர் எழுதினார். மேலும் “கிரெனடாவில் அதிகாரத்திலுள்ள இராணுவக் குழுவையும் கூட நாங்கள் நிபந்தனையின்றி ஆதரிக்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்தி, கிரெனடாவில் அமெரிக்க ஏகாதிபத்திய படைகளின் தோல்வி அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கும் பிற இடங்களில் உள்ள தொழிலாளர்களுக்கும் ஒரு வெற்றியாக இருக்கும்” என்று ஒரு தெளிவான அறிக்கை வெளியிடுமாறு அவர் வேர்க்கர்ஸ் லீக்கிற்கு அழைப்பு விடுத்தார். [29]

அப்பிராந்தியத்தில் கிரெனடா [Photo: "https://en.m.wikipedia.org/wiki/File:Grenada_in_its_region.svg" by Wikimedia Commons / CC BY-SA 3.0]

உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான கிரெனடா, 1983 இல் வெறும் 110,000 மக்களையே கொண்டிருந்தது, அதனிடம் பெரிதாக எந்த ஆயுதப் படைகளும் இல்லை, அத்தீவை எளிதாகக் கைப்பற்றக் கூடிய அமெரிக்கப் படையை விரட்டும் அளவுக்கு நிச்சயமாக அதற்கு ஆற்றல் இல்லை. போர்க்களத்தில் கிரெனடா மக்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதன் உள்நோக்கம் முற்றிலும் அபத்தமாக இருந்தது. அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தோற்கடிப்பது சாத்தியமாக இருந்தது.

ரீகன் நிர்வாகத்தின் தாக்குதல்கள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தையே “முக்கிய இலக்காக” வைத்திருந்தன என்ற வேர்க்கர்ஸ் லீக்கின் அறிவிப்பு, “காலனித்துவ நாடுகளின் புரட்சியில் இருந்த ஏகாதிபத்திய-எதிர்ப்பு உள்ளடக்கம் மீதான பின்னடிப்பின் சாயலையும், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளி வர்க்க புரட்சியையும் மற்றும் காலனித்துவ நாடுகளின் தேசிய விடுதலை இயக்கங்களையும் ஒன்றிணைப்பதிலிருந்தும் பின்னடிப்பதற்கான ஒரு சாயலையும்” காட்டுவதாக சுலோட்டரின் கருத்து இருந்தது. [30]

இந்த ஆத்திரமூட்டும் குற்றச்சாட்டுகளுக்கான அவரது பதிலில் டேவிட் நோர்த், வேர்க்கர்ஸ் லீக் புரட்சிகர தோற்கடிப்புவாத நிலைப்பாட்டில் இருந்து மாறிவிட்டது என்ற கூற்றை நிராகரித்தார். அவர், அந்தப் படையெடுப்புக்கு முந்தைய இரண்டு மாதங்களாக புல்லட்டினில் வெளியானவற்றை மீளாய்வு செய்து காட்டினார். அவை, லெபனான் மற்றும் நிகராகுவாவில் அமெரிக்கத் தலையீட்டையும், பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு எதிரான ஏகாதிபத்திய சதிகளையும் தொடர்ந்து எதிர்த்திருந்தன. வேர்க்கர்ஸ் லீக், ஒவ்வொரு விஷயத்திலும், “ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் மற்றும் அரை-காலனித்துவ நாடுகளுக்கு ஆதரவாகவும் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் பிரச்சினையைத் தொடர்ந்து எழுப்பி” இருந்தது. [31]

பின்னர் தோழர் நோர்த் விவரிக்கையில், கிரெனடா விவகாரத்தில் புல்லட்டினின் நிலைப்பாட்டை சுலோட்டர் உடனடியாக ஆட்சேபிப்பதற்கு அப்பாற்பட்டு, சுலோட்டரின் கடிதம் WRP இன் முன்னோக்கிற்கும் வேர்க்கர்ஸ் லீக்கின் முன்னோக்கிற்கும் இடையே மிகவும் அடிப்படையான வேறுபாடு இருப்பதையும் சுட்டிக் காட்டுவதாக விவரித்தார்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான அழைப்பை சுலோட்டர் இழிவுபடுத்தியதற்குப் பதிலளிக்கும் விதமாக நோர்த் எழுதினார்: “இந்த வாதத்தால் நான் வியப்படைகிறேன். இது அனைத்துலகக் குழுவாலும் மற்றும் தனிப்பட்டரீதியில் உங்களாலும் எங்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட எல்லா விஷயங்களுக்கும் எதிராகச் செல்கிறது.”

சுலோட்டரின் அணுகுமுறை, “கிரெனடா மீதான அமெரிக்கப் படையெடுப்பை தோற்கடிப்பதற்கான போராட்டத்தை, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிறுவுவதற்கான போராட்டத்தில் இருந்து வெளிப்படையாகப் பிரிக்கிறது. அது அமெரிக்காவில் ஒவ்வொரு திருத்தல்வாத குழுவின் மற்றும் ஸ்ராலினிசக் குழுவின் அணுகுமுறையை ஒத்திருக்கிறது” என்று அவர் விளக்கினார். நோர்த் பின்வரும் கேள்வியை முன்வைத்தார்: “வேர்க்கர்ஸ் லீக்கும் அனைத்துலகக் குழுவும் சந்தர்ப்பவாத பப்லோவாத ‘போர்-எதிர்ப்பு’ இயக்கத்தின் கருத்துருவுக்கு எதிராக முன்வைத்த ஐயத்திற்கிடமற்ற வேறுபாடு இது இல்லையா?”

வேர்க்கர்ஸ் லீக் இயங்கியலைக் கைவிட்டு ஒரு நடைமுறைவாத அணுகுமுறையை எடுத்திருப்பதாக சுலோட்டர் அதை விமர்சித்தாலும், உண்மையில் கிரெனடா மற்றும் லெபனானின் “நிஜமான நிகழ்வுகளை” “கொள்கை மற்றும் வேலைத்திட்டம் தொடர்பான ‘அருவமான’ விவகாரங்களுக்கு” எதிராக எதிர்நிறுத்துவதில் சுலோட்டரே அந்த அணுகுமுறையைத் தான் பயன்படுத்தி இருந்தார் என்பதை நோர்த் சுட்டிக்காட்டினார்.

நோர்த் விவரித்தார்:

இயங்கியல் வழிமுறையையும் வரலாற்று சடவாதத்தையும் சரியாக பயன்படுத்துவதை ஆய்வு செய்து அபிவிருத்தி செய்ய வேண்டும். ஆனால் இது எந்த விதத்திலும் “தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம்” மீதான “பலமான வலியுறுத்தலை” குறைமதிப்பிற்கு உள்ளாக்கக்கூடாது. லெனினின் அனைத்து எழுத்துக்களையும் தீவிரமாக ஆய்வு செய்வதும், மிகவும் வெளிப்படையாகக் கூறினால் அவருடைய ஆரம்ப கால பொருளாதார மற்றும் மெய்யியல் ஆய்வுகளைத் தீவிரமாக ஆய்வு செய்வதும், இயங்கியல் அணுகுமுறையைச் சரியாகப் பயன்படுத்துவதன் மீதான அவரின் ஒருமுனைப்புக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் மீதான அவரின் “பலமான வலியுறுத்தலுக்கும்” இடையிலான உள்தொடர்பை வெளிப்படுத்தும் என நான் நம்புகிறேன்.

“காலனித்துவ நாடுகளின் புரட்சிகளில் இருந்த ஏகாதிபத்திய-எதிர்ப்பு உள்ளடக்கம் மீதும் [மற்றும்] ... முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் பாட்டாளி வர்க்கப் புரட்சியையும் மற்றும் காலனித்துவ நாடுகளின் தேசிய விடுதலை இயக்கங்களையும் ஐக்கியப்படுத்துவது பற்றியும்” வேர்க்கர்ஸ் லீக் “பின்னடிப்பை” காட்டுவதாகக் கூறும் சுலோட்டரின் வாதத்திற்கு விடையிறுத்து, நோர்த் குறிப்பிடுகையில், உண்மையில், “காலனித்துவ நாடுகளின் எல்லா தேசிய இயக்கங்களிலும் எதிர்விரோத வர்க்க சக்திகள் ஒன்றிணைந்துள்ளன … ஏகாதிபத்திய அழுத்தம் அரை-காலனித்துவ நாடுகளுக்குள் வர்க்கப் போராட்டத்தைத் தணிக்கவில்லை மாறாக தீவிரப்படுத்துகிறது,” என்பதைச் சுட்டிக் காட்டினார்.

அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்:

காலனித்துவ நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் ஏகாதிபத்திய-எதிர்ப்பானது, ஒடுக்கப்பட்ட நாடுகள் ஒவ்வொன்றிலும் நிலவும் வர்க்க முரண்பாடுகளின் வளர்ச்சி மட்டத்தால் நிபந்தனைக்கு உட்பட்டு, திட்டவட்டமான ஒரு தன்மையைக் கொண்டிருக்கவில்லை, ஒப்பீட்டுரீதியான தன்மையை கொண்டதாகும் என்பதில் மீண்டும் நாங்கள் பப்லோவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளுடன் முரண்பட்டு நிற்கிறோம். காலனித்துவ நாடுகளின் புரட்சியில் உள்ள புறநிலையான ஏகாதிபத்திய-எதிர்ப்பு உள்ளடக்கமும், பெருநகர மையங்களில் நடக்கும் பாட்டாளி வர்க்கப் போராட்டங்களுடன் அது வரலாற்றுரீதியில் ஒன்றிணைந்திருப்பதும், ஒடுக்கப்பட்ட நாடுகளுக்குள் முதலாளித்துவ-தேசியவாத தலைமையிலான வெகுஜன இயக்கங்களுக்கு எதிரான ஒரு தொடர்ச்சியான போராட்டம் மூலமாக பலப்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். [32]

காலனித்துவ-எதிர்ப்பு இயக்கத்தைக் குறித்த இந்த ஆழமான இயங்கியல் புரிதல் தான், நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் மையக் கூறுபாடாகும். இந்தக் கட்டத்தில், அனைத்துலகக் குழுவின் தலைமைக்குள் நடக்கும் ஒரு முழுமையான விவாதம், அரசியல் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தி, WRP இன் நோக்குநிலையை மாற்றும் என்பதில் டேவிட் நோர்த்தும், வேர்க்கர்ஸ் லீக் தலைமையும் நம்பிக்கையோடு இருந்தனர்.

திருத்தல்வாதம் தொழிலாளர் இயக்கத்தின் மீது ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்தைப் பிரதிபலிக்கிறது என்ற அவரின் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் உட்பட, பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சுலோட்டரின் சொந்த பங்கையும் மீண்டும் நினைவூட்டி நோர்த் அந்த ஆவணத்தை நிறைவு செய்திருந்தார். முதலாளித்துவத்தினதும், சோவியத் ஆட்சிகளினதும் ஆழமடைந்து வந்த நெருக்கடிக்கு மத்தியில், முன்னாள் காலனித்துவ நாடுகளின் புரட்சிகளையும் மற்றும் ஏகாதிபத்திய மையங்களில் இருந்த தொழிலாளர் இயக்கத்தையும் சீர்குலைப்பதும் மற்றும் தடம் புரளச் செய்வதும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஆழமாக அவசியமாகி இருந்ததை ட்ரொட்ஸ்கிசம் மீதான ஜாக் பார்ன்ஸின் வெளிப்படையான தாக்குதல் பிரதிபலித்தது. ஆகவே, அனைத்துலகக் குழுவின் சொந்த அணிகளில் திருத்தல்வாதக் கண்ணோட்டத்தின் எவ்விதமான அறிகுறிகளையும் குறித்து, அது விழிப்புடன் இருப்பது இன்றியமையாதது என்று நோர்த் எழுதினார்.

கிளிஃவ் சுலோட்டரின் 1983 கடிதம் குறிப்பாக அதிர்ச்சியூட்டுகிறது, ஏனென்றால், “காரியாளர்களைப் பயிற்றுவிப்பதில் இயங்கியல் முறையை அபிவிருத்தி செய்வதற்கான நாளாந்த போராட்டத்தை” வேர்க்கர்ஸ் லீக் அலட்சியப்படுத்துவதாகக் கூறி, அதை விமர்சித்த அந்தக் கடிதம், 20 ஆண்டுகளுக்கு முன்னர் பப்லோவாதிகள் உடனான SWP இன் மறுஐக்கியத்திற்கு எதிரான போராட்டத்தில் சுலோட்டர் எதிர்விவாதம் செய்த அதே பதிவுவாத மற்றும் நடைமுறைவாத அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

சந்தர்ப்பவாதமும் அனுபவவாதமும் (மார்ச் 1963) என்பதில் சுலோட்டர் பின்வருமாறு எழுதியிருந்தார்:

“காலனித்துவ நாடுகளின் புரட்சி”, “ஸ்ராலினிசமயம் அகற்றும் நிகழ்ச்சிப்போக்கு,” “பின்திரும்பவியலாத போக்குகள்,” “இடதுநோக்கி நகரும் சக்திகள்,” “வெகுஜன அழுத்தம்” போன்ற வார்த்தை பிரயோகங்கள், ஹான்சனுக்கும் மற்றும் பப்லோவாதிகளுக்கும் அவர்களின் புதிய யதார்த்தத்தின் உண்மையில் ஒரு அருவமான பட்டியலாக உள்ளது. சமூக நிகழ்வுப்போக்குகளை பற்றிய எல்லா அறிக்கைகளையும் போலவே, வர்க்கப் போராட்டத்திற்கான குறிப்பிட்ட வர்க்க உள்ளடக்கத்தையும் மற்றும் சுரண்டலே அனைத்து சமூக நிகழ்வுப்போக்கின் உள்ளடக்கமாக உள்ளது என்பதையும் எடுத்துக்காட்டாத வரை அவை அர்த்தமற்றவையே ஆகும்.

ஹான்சனின் அனுபவவாத முறைக்கும் காஸ்ட்ரோ ஆட்சியை SWP புகழ்ந்துரைப்பதற்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டி சுலோட்டர் பின்வருமாறு விவரித்திருந்தார்:

தொழிலாள வர்க்கம் அல்லாத சமூக அடுக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட புள்ளி வரை மட்டுமே செல்ல முடியும் என்பதை ஒட்டுமொத்த இந்த நவீன கால சகாப்தத்தைக் குறித்த மார்க்சிச பகுப்பாய்வு நிறுவிக் காட்டியுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான கோரிக்கைகள் சர்வதேச சோசலிசப் புரட்சியுடன் பொருந்தியிருப்பதால், புரட்சிக்கான அத்தலைமைகளின் புறநிலை வரம்புகள் தவிர்க்கவியலாமல் அவர்களைத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் திரும்ப வழி நடத்துகிறது. நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களின் அதிகாரத்தை நோக்கமாக கொண்ட சுயாதீனமான தொழிலாள வர்க்கக் கட்சிகளைக் கட்டமைக்கும் போக்கின் மூலமாக மட்டுமே, ஒவ்வொரு தேசியப் புரட்சியும் உலக ஏகாதிபத்தியத்தை புதிதாக ஸ்திரப்படுத்துவதைத் தடுக்க முடியும். [33]

மத்திய கிழக்கில் பல்வேறு முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளை அப்பிராந்திய மக்களுக்கான நியாயபூர்வமான புரட்சிகரத் தலைமையாக WRP ஊக்குவித்தன் மூலம், அது நிரந்தரப் புரட்சியைக் கைவிட்டிருந்ததற்கான ஒரு குற்றப்பத்திரிகையாக இத்தகைய படைப்புகள், அமைந்திருந்தன.

பாகம் இரண்டு

சுலோட்டருக்கு நோர்த் அளித்த பதிலுக்கு எந்தப் பதிலும் வராத நிலையில், மிகவும் நேரடியாகவே மத்திய கிழக்கில் முதலாளித்துவத் தேசியவாதிகள் பற்றிய WRP இன் எழுத்துக்களின் அடிப்படையில், நிரந்தரப் புரட்சியை அது கைவிட்டிருப்பது மீதான ஓர் அரசியல் போராட்டத்தை வேர்க்கர்ஸ் லீக் தொடங்கியது.

ஒரு மாதத்தில் அனைத்துலகக் குழுவின் கூட்டம் ஒன்று திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், News Line இல் அண்மையில் PLO தலைவர் யாசர் அரபாத் இனை புகழ்ந்துரைத்ததை குறிப்பிட்டு WRP இன் நிலைப்பாடு பற்றிய முதல் விரிவான விமர்சனம், ஜனவரி 1984 இல் மைக் பண்டாவுக்கு நோர்த் எழுதிய கடிதத்தில் முன்னெடுக்கப்பட்டது.

தொழிலாளர் புரட்சிக் கட்சியும், பாலஸ்தீன விடுதலை அமைப்பும்

பாலஸ்தீனத்திற்கென ஐக்கிய நாடுகள் சபை ஆணை மூலம் ஒதுக்கப்பட்ட பகுதியில் (Mandatory Palestine) ஓர் அரபு அரசுக்காக, இஸ்ரேலுக்கு எதிரான ஓர் ஆயுதமேந்திய போராட்டத்தைத் தொடுப்பதற்காக அரபு லீக்கால் 1964 இல் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) நிறுவப்பட்டது. அது, ஒரே குடையின் கீழ் பல்வேறு பிரிவுகளைக் கொண்ட ஒரு குழுவாக இருந்தது. அதில் செல்வாக்கு செலுத்திய ஃபத்தா அணியை (Fatah faction) இணைந்து நிறுவியிருந்த அரபாத், 1969 இல் PLO இன் நிர்வாகக் குழுத் தலைவர் ஆனார்.

1976 இல் PLO உடன் WRP உறவுகளை வளர்க்கத் தொடங்கியது. அப்போதிருந்து அது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அந்த இயக்கத்தைச் சட்டபூர்வமாகப் பாதுகாப்பதில் இருந்து, முக்கிய ஆதரவு கொடுப்பதில் இருந்து, முழுமையாக அதைத் தழுவி அதன் புகழ் பாடத் தொடங்கியது வரையில் அதிகரித்தளவில் மாறியிருந்தது.

அவருடைய [ஜனவரி 1984] கடிதத்தில் நோர்த்தின் விமர்சனங்கள், அந்நேரத்திய நிகழ்சிபோக்கின் மிகச் சமீபத்திய அத்தியாயத்தைக் கவனத்தில் கொண்டிருந்தது. அதாவது: டிசம்பர் 1983 இல் எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் உடனான அரபாத்தின் சந்திப்பு பற்றிய WRP இன் பிரகாசமான விபரங்களில் அது ஒருமுனைப்பட்டிருந்தது.

PLO தலைவர் யாசர் அரபாத் 1994 இல் ஒஸ்லோவில் சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெறுகிறார் [Photo by Government Press Office (Israel) / CC BY-SA 3.0]

அந்த சந்திப்பின் மூலம், “அரபாத்தின் துணிச்சலான இராஜதந்திரம், எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உடன்படிக்கையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த உதவி உள்ளது” என்று WRP கூறியது. முன்னதாக “சதாத் (Sadat), பெகின் (Begin) மற்றும் கார்ட்டருக்கு இடையிலான டேவிட் கேம்ப் சதியை மாற்றி”, “PLO ஐயும், மத்திய கிழக்கு போராட்டத்தில் அதன் சட்டபூர்வத் தன்மையையும், மற்றும் பாலஸ்தீன விடுதலைக்குப் போராடுவதற்கான அதன் பிரிக்க முடியாத உரிமையையும் எகிப்திய அரசாங்கம் அங்கீகரித்திருப்பதை” அது சமிக்ஞை செய்வதாக நியூஸ் லைன் அறிவித்தது. [34]

அன்வர் சதாத் 1970 இல் இருந்து 1981 வரை எகிப்தின் மூன்றாவது ஜனாதிபதியாக இருந்தார். பொருளாதார தனியார்மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் மற்றும் அமெரிக்காவை நோக்கிய எகிப்தின் மறுதிருப்பம் ஆகிய கொள்கைகள் அவர் மேற்பார்வையில் இருந்தன. 1973 ஆம் ஆண்டின் யோம் கிப்பூர் போருக்கு (அல்லது நான்காம் அரபு-இஸ்ரேலிய போருக்குப்) பிந்தைய பேச்சுவார்த்தைகளில், அவர் இஸ்ரேல் உடனான உறவுகளை சுமுகமாக்கத் தொடங்கினார், நவம்பர் 1977 இல் அந்நாட்டுக்கு உத்தியோகப்பூர்வமாக விஜயம் செய்த முதல் அரபு தலைவராக அவர் ஜெருசலேமில் இஸ்ரேலிய பிரதம மந்திரி மெனாசெம் பெகினைச் சந்தித்தார்.

பின்னர் 1978 இல் அமெரிக்க ஜனாதிபதிகளின் விடுமுறை ஸ்தலமான காம்ப் டேவிட்டில், அமெரிக்காவினாலும் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரினாலும் மத்தியஸ்தம் செய்யப்பட்ட பேச்சுவார்த்தைகள் அவர்கள் இருவருக்கும் இடையே நடந்தன. 12 நாட்கள் இரகசியப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் காம்ப் டேவிட் உடன்படிக்கைகள் கையெழுத்தாயின. இது 1979 எகிப்து-இஸ்ரேல் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தியது. இதற்காக எகிப்து அரபு லீக்கில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இவை அரேபிய முதலாளித்துவ தேசியவாதிகளின் திவால்நிலையை எடுத்துக்காட்டும் அடிப்படை அனுபவங்களாகும். இஸ்ரேலுடன் எகிப்தின் இணக்கம், ஏகாதிபத்தியத்துடன் இணங்கி இருப்பதற்கான ஒரு பரந்த நகர்வின் பாகமாக இருந்தது. பண்டாவுக்கான அவரது கடிதத்தில் நோர்த் குறிப்பிடுவதைப் போல, PLO அதன் செயல்பாடுகளுக்கான மையமாகப் பயன்படுத்திய அந்த நாட்டை விட்டு அதை விரட்டும் நோக்கில், லெபனான் மீதான இஸ்ரேலின் இரத்தக்களரியான படையெடுப்புக்கும் மற்றும் ஜூன் 1982 இல் பெய்ரூட் முற்றுகைக்கும் களம் அமைக்க அது உதவியது.

அரபாத்-முபாரக் சந்திப்பைக் குறித்த WRP இன் கூற்றுக்கள் என்ன அறிவுறுத்தின என்றால், இந்த வரலாறும், வர்க்கங்களுக்கு உள்ளேயும் மற்றும் வர்க்கங்களுக்கு இடையிலான பெரும் நிகழ்ச்சிபோக்குகளும் ஓர் இராஜாங்க பெரும்பிரயத்தனத்தினால் ஏதோவிதத்தில் தலைகீழாக மாற்றப்பட்டு விட்டதாக அறிவுறுத்தின. நோர்த் குறிப்பிடுவதைப் போல, தனிநபர்களின் மகத்தான செயல்களைக் குறித்த முதலாளித்துவக் கருத்துவாத வரலாற்றியலுக்கு மிகவும் பொருந்தும் அந்த வாதம், அரபு ஆட்சிகளைப் மூடிமறைப்பதற்கும், அவற்றுக்கு இடையே சூழ்ச்சி கையாளல்களை மேற்கொள்ளும் அடிப்படையில் பாலஸ்தீனிய போராட்டத்தை நடத்தும் அரபாத்தின் முயற்சியை ஆதரிப்பதற்குமான ஓர் அரசியல் முனைவை வெளிப்படுத்தியது. முபாரக் உடனான அந்தச் சந்திப்பு பல நடவடிக்கைகளில் சமீபத்திய ஓர் உதாரணமாக இருந்தது, அவை அனைத்தும் இறுதியில் அரேபிய ஆட்சிகளே PLO ஐ காட்டிக்கொடுப்பதற்கு இட்டுச் சென்றன.

நோர்த் அவரது கடிதத்தில் குறிப்பிடுவதைப் போல:

காம்ப் டேவிட் உடன்படிக்கையின் துர்நாற்றம் சதாத்துடன் புதைக்கப்படவில்லை. நடைமுறையளவில் OPEC இன் உடைவினால் சிதைவுற்றும் மற்றும் சோசலிசப் புரட்சியின் பயங்கரத்தால் பீதியுற்றும், அரபு முதலாளித்துவ வர்க்கம், எகிப்துடன் சேர்ந்து அந்த கைக்கோடாரியை (Hatchet - போர் முடிந்துவிட்டதற்கான அடையாளமாக) புதைத்து விட அனுமதிக்கும் ஒரு சூத்திரத்தை பெரும்பிரயத்தனத்துடன் தேடி வருகிறது. பின்னர் இஸ்ரேலுடனேயே ஓர் ஏற்பாட்டைச் செய்வதற்கான களம் அமைக்கப்படும். [35]

பின்னர் அவர் முக்கிய பிழையை அடையாளம் காண்கிறார்:

ஏகாதிபத்தியத்திற்கும் மத்திய கிழக்கில் உள்ள அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான உண்மையான உறவுகளும், மற்றும் ஒவ்வொரு அரபு நாட்டிற்குள் நிலவும் வர்க்க உறவுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் குறிப்பிடப்படவும் கூட இல்லை. [36]

நிச்சயமாக, இது இரண்டு வழிகளில் பயன்படுகிறது. இந்தத் தவறான அணுகுமுறை, முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளுடன் அடிபணிந்துபோவதை ஊக்குவிப்பதோடு, இந்த ஆட்சிகளுடன் WRP இன் நிதிரீதியான உறவுகளைப் பேணுவதற்காகவும், அரபு தொழிலாள வர்க்கத்தைப் பெரும் விலை கொடுக்கச் செய்யவும், அனேகமாக பாலஸ்தீனத் தொழிலாள வர்க்கத்தை விட அதிகமாகவே கூட விலை கொடுக்கச் செய்யவும் ஊக்குவிக்கப்பட்டது.

உண்மையில் சொல்லப் போனால், அரபு முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும் செல்வச்செழிப்பான பல்வேறு குழுக்கள் உள்நாட்டில் தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள PLO இனைப் பயன்படுத்தியதைப் போலவே, WRP உம் இந்த சக்திகளை நோக்கி முன்னேறுவதற்கான படிக்கல்லாக PLO ஐ அதிகரித்தளவில் பயன்படுத்தியது.

ஒரு மேலெழுந்தவாரியான முரண்பட்ட வழியில், PLO இன் ஒவ்வொரு செயல்பாடுகளையும் தொடர்ந்து பெருமைப்படுத்தும் வடிவத்தை எடுத்தது. விமர்சன ரீதியான ஆதரவு என்ற சரியான கருத்துடன், “ஆயுதமேந்திய போராட்டத்தை” புனிதப்படுத்தி அழைப்பு விடுப்பதையும் மற்றும் அந்த அமைப்பின் அந்தஸ்து “பாலஸ்தீனிய மக்களின் ஒரே சட்டபூர்வ பிரதிநிதி” என்றும் மாற்றப்பட்டது. [37] நோர்த் அவர் கடிதத்தில் குறிப்பிடுவதைப் போல, இந்த புள்ளிவரை PLO இன் ஏனைய பிரிவுகளுக்கு எதிராக WRP அரபாத்தைப் குறைந்தபட்சம் அவரின் சந்தர்ப்பவாத சூழ்ச்சிகளை பகுதியளவில் விமர்சிப்பதன் மூலம் பாதுகாத்து வந்தது.

வேறு வார்த்தைகளில் கூறினால், பாலஸ்தீனியர்கள், அல்லது மிகவும் பரந்தளவில் மத்திய கிழக்கில், நான்காம் அகிலத்தின் அணிகளைக் கட்டியெழுப்புவதற்கான எந்த கொள்கையும் கைவிடப்பட்டு, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ தேசியவாதிகளின் தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு மார்க்சிச வேலைத்திட்டத்துடன் தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவதற்கும், அதன் அரசியல் சுயாதீனத்தை நிலைநாட்டவும், ஏகாதிபத்தியத்திடம் இருந்து விடுதலையை பெறுவதற்காக அதைத் தயார் செய்வதற்கும் மற்றும் ஒரு சோசலிச புரட்சிக்கான நிகழ்ச்சிபோக்கில் தேசிய ஜனநாயகக் கடமைகளைப் பூர்த்தி செய்வதற்குமான போராட்டத்தின் இடத்தில், WRP “ஒட்டுமொத்த அரபு தேசத்தின் விடுதலைப் போராட்டத்தின் தலைவராக” பாலஸ்தீன விடுதலை அமைப்பை முன்வைத்தது. [38]

நோர்த் எழுதுகிறார்:

அரபாத் ஏற்கனவே செய்ததை நியாயப்படுத்த மட்டுமே உதவும் கட்டுரைகளை எழுதுவதன் மூலம், இந்த அல்லது அந்த நடைமுறை சூழ்ச்சிக்கு பிரகாசமான வண்ணங்களைத் தீட்டுவதன் மூலம், அரை-காலனித்துவ நாடுகளிலும், ஏகாதிபத்திய-எதிர்ப்பு கொண்ட தேசிய விடுதலை இயக்கங்களுக்கு உள்ளேயும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான நிஜமான தேவை மீது கேள்விகளை எழுப்பும் ஓர் அரசியல் கண்ணோட்டத்திற்குப் பலியாகும் அபாயம் எழுகிறது. [39]

அப்பிராந்தியத்தில் ஏகாதிபத்தியத்தையும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தையும் தோற்கடிப்பதற்கான ஒரே அடித்தளமான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரே வேலைத்திட்டம், வர்க்கப் போராட்டத்தை நோக்கி நோக்குநிலையை ஏற்பதும் மற்றும் அதன் அடிப்படையில் மத்திய கிழக்கு முழுவதுமான தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்குமான ஒரு போராட்டமாக இருந்தது.

மாராகேஷ், துனிஸ் மற்றும் கெய்ரோவில் மட்டுமல்ல, ஆனால் (இஸ்ரேலின் வடக்கில்) ஹைய்ஃபாவிலும் நடந்து வந்த போராட்டங்களைச் சுட்டிக்காட்டி நோர்த் ஒரு புள்ளியைக் குறிப்பிடுகிறார், “சியோனிசத்தை முழுமையாக நிராகரிப்பது என்பது அரபு உழைப்பாளர்களின் சமூக, தேசிய மற்றும் சுதந்திர போராட்டங்களுடன் யூதத் தொழிலாளர்களின் போராட்டங்களை இணைப்பதற்கான அத்தியாவசியமான நிபந்தனை ஆகும்” என்று அறிவித்து, இஸ்ரேலிய அரசு உருவாக்குவதன் மீது நான்காம் அகிலத்தின் ஆரம்ப மற்றும் சரியான 1948 அறிக்கையை மேற்கோள்காட்டினார். [40]

துரதிர்ஷ்டவசமாக, என்ன மாற்றீடு இருந்தது என்பதைக் காட்ட வரலாற்றுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது: ஒரு பாரியளவிலான சமநிலையற்ற மோதலில் தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவது ஒஸ்லோ உடன்படிக்கைகளுக்கு வழிவகுத்தது. பாலஸ்தீனிய அதிகாரசபையினதும் (Palestinian Authority) இஸ்ரேலினதும் தற்போதைய நகர்வுகளும் காஸாவின் நிலைக்கு மேற்குக்கரையை கொண்டுவர வழியமைக்கின்றன. இவை அனைத்தும் ஏகாதிபத்தியத்தின் ஈரானிய-எதிர்ப்பு அச்சுக்கு உதவும் வகையில், அரபு ஆட்சிகள் டெல் அவிவ் உடனான உறவுகளை இயல்பாக்குவதுடன் சேர்ந்து நடந்து வருகின்றன.

இந்த போக்கை மாற்றுவதற்கான அரசியல் போராட்டத்தின் தொடக்கமாக இருந்த நோர்த்தின் கடிதம், PLO மீது கவனம் செலுத்துகிறது என்றாலும், முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்களை நோக்கிய WRP இன் ஒட்டுமொத்த நிலைப்பாடு மீதான ஒரு முதல் விமர்சனமாகத் தெளிவாக எழுதப்பட்டு இருந்தது. “ஒரு விரிவான சர்வதேச தீர்மானத்தை எட்டும் நோக்கில், சர்வதேச முன்னோக்குகள் மீதான விரிவான கலந்துரையாடலின்” பாகமாக “அனைத்துலகக் குழு கடந்து வந்துள்ள ஒவ்வொரு உறுதியான அனுபவத்தையும் பகுப்பாய்வு செய்து”, இந்த நடவடிக்கை மீதான ஒரு “இருப்புநிலை அறிக்கைக்கு” அவர் அழைப்பு விடுத்தார். [41]

அதாவது வேர்க்கர்ஸ் லீக், சர்வதேச மற்றும் தோழமை உணர்வுடன் கூடிய தெளிவுபடுத்தலை பின்பற்றி வந்தது. இந்த விரிவுரையின் முதல் பாதியில் கலந்துரையாடப்பட்டவாறு, அது ஒரு முழுமையான உலக முன்னோக்கின் தேவையை குறித்த கருத்தாக்கத்தால் வழிநடத்தப்பட்டது.

நோர்த் பின்வருமாறு விவரித்தார்:

பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களில் பெற்ற நம் சொந்த அனுபவங்களைப் போலவே, தேசிய பிரிவுகளின் வேலைகளில் கிடைக்கும் சில முன்னேற்றங்கள் எவ்வளவு தான் நம்பிக்கைக்குரியதாகத் தோன்றினாலும், அத்தகைய வேலைகள் விஞ்ஞானபூர்வமாகத் திட்டமிடப்பட்ட சர்வதேச முன்னோக்கால் வழிநடத்தப்படாத வரை, அவை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு நிஜமான வெற்றிகளை உருவாக்காது. [42]

இறுதியாக, அந்த ஆவணத்தைப் பொறுத்த வரையில், வேர்க்கர்ஸ் லீக்கின் விமர்சனங்கள் வெளிப்படையாகவே ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முக்கிய வரலாற்று அனுபவங்களில் வேரூன்றி உள்ளன: அதாவது, பப்லோவாதத்திற்கு எதிரான SLL இன் போராட்டம், குறிப்பாக 1950 கள் மற்றும் 1960 களில் அல்ஜீரியா மற்றும் கியூபா பிரச்சினைகள் மீதான போராட்டம், மற்றும் ஜாக் பார்ன்ஸ் பகிரங்கமாக நிரந்தரப் புரட்சியை கைவிட்டமை மற்றும் SWP சம்பந்தப்பட்ட சமீபத்திய சம்பவங்களில் அதன் போராட்டம் ஆகியவற்றில் வேரூன்றி இருந்தது.

இந்த விமர்சனத்தை முன்வைத்து, வேர்க்கர்ஸ் லீக் வெறுமனே PLO உடனான அனுபவத்தில் இருந்து மட்டுமல்ல, மாறாக லிபியா, ஈராக் மற்றும் ஈரானின் அனுபவங்களில் இருந்தும் பயனடைந்திருந்தது. இதே காலகட்டத்தில் பிப்ரவரி 1984 இல் அனைத்துலகக் குழுவுக்கு நோர்த் எழுதிய அறிக்கையான மற்றொரு முக்கிய ஆவணத்தின் உள்ளடக்கத்தில் இவற்றைக் குறித்து நான் விவரிக்கிறேன். மேலும் சிம்பாப்வே மற்றும் இலங்கையின் அனுபவங்களில் இருந்தும் அது பயனடைந்திருந்தது, இவற்றைக் குறித்து இப்போது சுருக்கமாக விவரிக்க விரும்புகிறேன்.

WRP சிம்பாப்வே புரட்சியைக் காட்டிக் கொடுக்கிறது

சிம்பாப்வேயில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் குறித்து WRP தனது ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு நிலைப்பாட்டை மார்ச் 1979 இல் அதன் நான்காவது மாநாட்டில் பண்டா எழுதிய தீர்மானத்தில் முன்வைத்தது. இந்த ஆவணம் ஒருபோதும் பாட்டாளி வர்க்கத்தின் சுயாதீன வர்க்க நலன்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக 'பல மில்லியன் வெகுஜனங்கள்' என்ற வர்க்க உள்ளடக்கமற்ற வார்த்தைகளில் பேசுகிறது. [43] அதில் சிம்பாப்வேயில் உள்ள தொழிலாளர்கள், ரோபர்ட் முகாபே மற்றும் ஜோசுவா என்கோமோ ஆகியோரின் தேசபக்த முன்னணியின் மீது தங்கள் நம்பிக்கையை வைக்குமாறு ஊக்குவிக்கப்பட்டனர்.

தேசபக்த முன்னணி (Patriotic Front) என்பது, என்கோமோ தலைமையிலான சிம்பாப்வே ஆபிரிக்க மக்கள் ஒன்றியத்தையும் (Zimbabwe African People’s Union - ZAPU), மற்றும் முகாபேயினால் தலைமை தாங்கப்பட்ட சிம்பாப்வே ஆபிரிக்க தேசிய ஒன்றியத்தை (Zimbabwe African National Union – ZANU) இதன் முக்கிய பிரிவாக கொண்டிருந்த ஒரு கூட்டணியாகும். ஒவ்வொன்றும் அதன் சொந்த இராணுவப் பிரிவை கொண்டிருந்தன, அவை 1960களின் பிற்பகுதியிலிருந்து இயன் ஸ்மித்தின் வெள்ளையின சிறுபான்மை அரசாங்கத்திற்கு எதிராக கொரில்லா இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.

இவை முதலாளித்துவ தேசியவாத அமைப்புகளாகும். ஆனால் பண்டா அவர்களுக்கு சிம்பாப்வேயில் நடந்த போராட்டத்தின் தலைமைப் பொறுப்பை பின்வரும் போலியான வரையறையின் கீழ் வழங்கினார்: 'ஸ்மித்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை தேசபக்த முன்னணி தொடரும் வரையிலும், அரசியலமைப்பு உடன்பாட்டை நிராகரிக்கும் வரையிலும் முகாபேயினதும் என்கோமோவினதும் தேசபக்த முன்னணியை நாங்கள் ஆதரிக்கிறோம்.”

PLO வைப் போலவே 'ஆயுதப் போராட்டம்' என்பது, 'WRP ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக் கொடுத்தது' என்பதில் நோர்த் குறிப்பிட்டபடி, தமது வர்க்க நலன்களைப் பின்தொடர்வதற்காக ஒரு குறிப்பிட்ட சமூக சக்திகளினால் பயன்படுத்தப்படும் ”ஒரு 'தந்திரோபாயமாக' அல்லாது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட மூலோபாயமாக' கையாளப்பட்டது'. [44] முதலாளித்துவ தேசியவாதிகள் மற்றும் சிம்பாப்வே தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளின் எதிரெதிரான அடிப்படையான நலன்களை மறைக்க WRP செயல்பட்டது.

WRP இன் ஆதரவிற்கான, 'தொடரும் வரை' என்ற நிபந்தனையைப் பொறுத்தவரையில், இது ஒரு வருடத்திற்குள் கைவிடப்பட்டது. நவம்பர் 1979 இல், தேசபக்த முன்னணி ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மேற்பார்வையில் லான்காஸ்டர் ஹவுஸ் பேச்சுக்களுடன் ஸ்மித் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் நுழைந்தது. WRP இந்த பேச்சுவார்த்தைகளின் காலத்தை, ஓடிப்பிடிக்கும் ஒரு இழிவான விளையாட்டில் செலவிட்டு, முகாபே மற்றும் என்கோமோ தயாரித்த ஒவ்வொரு பின்வாங்கலையும் காட்டிக்கொடுப்பையும் நியாயப்படுத்தியது.

இப்பேச்சுவார்த்தைகளின் விளைவாக, சிம்பாப்வே பாராளுமன்றம் 100 இல் 20 இடங்களை வெள்ளை சிறுபான்மையினருக்கு (மக்கள் தொகையில் 5 சதவீதம்) ஒதுக்கியதோடு, இழப்பீட்டுடன் நிலத்தை தேசியமயமாக்கும் கொள்கைகள் (முதல் 10 ஆண்டுகளுக்கு முற்றிலும் தன்னார்வ அடிப்படையில்), மற்றும் தனியார் சொத்துக்களை கையகப்படுத்துதலையும், பரந்த தேசியமயமாக்கலை கைவிட்டு, ஏகாதிபத்தியத்துடன் சமாதான உறவுகளுடன் பொருளாதாரத்தின் முதலாளித்துவ அடித்தளத்தை ஏற்றுக்கொண்டது. மூன்று ஆண்டுகளுக்குள், ஜனாதிபதி முகாபே, என்கோமோவின் சொந்த பிராந்தியத்திலேயே அவரது பிரிவின் ஆதரவாளர்கள் என்று கருதிய 20,000 குடிமக்களை படுகொலை செய்து, மேலும் என்கோமோவை நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினார்.

WRP இலங்கையில் நிரந்தரப் புரட்சியை கைவிட்டதன் விளைவுகள்

ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளபடி, முதலாளித்துவ தேசியவாத குழுக்களின் ஆயுதப் போராட்டத்தை WRP மகிமைப்படுத்தியது இலங்கையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள் அதன் மிகவும் சீர்குலைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது, அங்கு WRP 1979 முதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) பின்னால் ஊசலாடிக் கொண்டிருக்கையில், தமிழ் தேசியவாதம் மற்றும் சிங்கள பேரினவாதத்தை எதிர்ப்பதிலும், இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போராடுவதிலும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (RCL) அரசியல் பணிகளை கடுமையாக முடக்கியிருந்தது.

அணிவகுப்பில் அணிவகுத்து நிற்கும் LTTE மகளிர் பிரிவு [Photo by Marietta Amarcord / CC BY 2.0]

சுதந்திர தமிழ் அரசுக்காகப் போராடுவதற்காக 1976 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இது அரசாங்க இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தி, உத்தியோகபூர்வமாக 1983 முதல், இலங்கை அரசாங்கத்துடன் இரத்தக்களரியான உள்நாட்டுப் போரில் ஈடுபட்டது. WRP, PLO உடன் கொண்டிருந்த உறவுகளைப் போலவே அது விமர்சனமற்ற வகையில் LTTE ஐயும் அரவணைத்தது, அது அந்த அமைப்புடன் உறவுகளை ஏற்படுத்தி அதன் பிரசுரங்களை எழுதுபவர்களில் ஒருவரான அன்டன் பாலசிங்கத்தின் எழுத்துக்களைக் கூட வெளியிட்டது, அதேவேளையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (RCL) அவ்வாறே செய்ய வேண்டும் எனக் கோரியது.

கேள்விக்குரிய படைப்பான, தமிழ் தேசியப் பிரச்சினை என்பது, சோசலிஸ்டுகள் தமிழ் முதலாளித்துவத்தின் பிரிவினைவாத அபிலாஷைகளை விமர்சனமின்றி ஆதரிக்க வேண்டும் என வாதிட்டது. இந்தக் கொள்கையின் பிற்போக்குத்தனமான தன்மை, 1980 ஆம் ஆண்டில், 'தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் மற்றும் அகில இலங்கைப் புரட்சியின் திவாலான சித்தாந்தம் பற்றிய அனுபவங்களை தமிழ் மக்கள் போதுமான அளவு பெற்றுள்ளனர்' என ஒரு LTTE விவாதத்தில் அறிவித்தபோது மிகத்தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது, [45]

ஆனால் தமிழ் தேசியவாதிகளை அரசியல்ரீதியாக சவால் செய்வதற்கும், இலங்கை தொழிலாள வர்க்கத்திற்கு சோகமான விளைவுகளுடன், தீவிரமடைந்து வரும் மோதலில் உள்ள பிரச்சினைகளை தெளிவுபடுத்துவதற்குமான அதன் திறனில் பெரிதும் RCL கட்டுப்படுத்தப்பட்டது. இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் பல்லாயிரக்கணக்கான போராளிகள் மற்றும் 100,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிர்களை பறித்து, பிளவுகளை மிகவும் ஆழப்படுத்துவதற்கும், அரசையும் பிற்போக்குத்தனமான அரசியல் சக்திகளை வலுப்படுத்துவதற்கும் மட்டுமே சேவை செய்தது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதற்கு முன்பே, WRP (உண்மையில் இது SLL இன் காலத்திற்கும் செல்கிறது) இப்பிராந்தியத்தில் உள்ள அரசியல் பிரச்சினைகளை நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் நிலைப்பாட்டில் இருந்து அணுகவில்லை. இதனால் ட்ரொட்ஸ்கிசத்தின் வளர்ச்சிக்கு கடுமையான பிரச்சினைகளை உருவாக்கின.

1971 இல், இந்திரா காந்தியின் இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் மீது போரை அறிவித்து, கிழக்கு பாகிஸ்தானில் (இப்போது பங்களாதேஷ்) பாகிஸ்தானுக்கும், வங்காள தேசியவாத சக்திகளுக்கும் இடையே நடந்து வரும் போரில் தலையிட்டது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கிழக்கு பாகிஸ்தானில் நியாயமான போராட்டத்தை ஆதரித்த அதேவேளையில் முழு துணைக்கண்டத்தின் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் நோக்கில் ஒரு சக்திவாய்ந்த அறிக்கையை தயாரித்து, அது ஒரு சோசலிசப் புரட்சியால் மட்டுமே நடத்தப்பட முடியும் என வலியுறுத்தியது.

இந்த முன்னோக்கின் இன்றியமையாத பகுதியாக, RCL பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் ஒரு புரட்சிகர தோற்கடிப்புவாத கொள்கைக்கு அழைப்பு விடுத்தது, கிழக்கு பாகிஸ்தான்/பங்களாதேஷின் தரப்பில் இந்தியாவின் தலையீடு அதன் வெற்றியின் விதிமுறைகளை நிர்ணயிப்பதும், இந்தியாவின் எல்லைகளுக்குள் உட்பட போராட்டத்தின் புரட்சிகர திறனை ஒடுக்குவதையும் நோக்கமாக கொண்டிருந்தது.

ஆனால் WRP, பங்களாதேஷின் விடுதலைக்கு உதவுவதாகக் கூறி, இந்திய அரசாங்கத்திற்கு 'விமர்சனரீதியான ஆதரவு' எனக் கூறப்படும் ஒரு நிலைப்பாட்டை திணித்தது. தோழர் கீர்த்தி பாலசூரிய இந்த விஷயத்தில் சர்வதேச கலந்துரையாடலைக் கோரி IC க்கு எழுதிய கடிதத்தில் தனது ஆட்சேபனைகளை எழுப்பியபோது, WRP அதை சுற்றுக்கு விடுவதைத் தடுத்தது.

இந்த நேரத்தில், 1970 களின் முற்பகுதியில், WRP இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான எந்தவொரு, விமர்சன ரீதியான ஆதரவையும் கூட எதிர்த்தது. அது பின்னர் எடுக்கவிருந்த நிலைப்பாட்டின் எதிர் துருவமுனையான நிலைப்பாடாக இருந்தது.

இந்த இரண்டு நிலைப்பாடுகளும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. பிளவுக்குப் பின்னர் தோழர் பாலசூரிய, “தமிழர் போராட்டமும், ஹீலி, பண்டா, சுலோட்டரின் துரோகமும்” என்ற கட்டுரையில், இலங்கையில் தமிழ் மக்கள் பிரச்சினையில் WRP இன் ஆரம்ப நிலைப்பாடுகள் குறித்து விளக்கினார்:

பண்டாவின் பார்வையில், புதிதாக உருவாக்கப்பட்ட 'சுதந்திர' அரசுகளில் சிறுபான்மை அரசு களின் சுயநிர்ணய உரிமையை நிலைநிறுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பின்தங்கிய நாடுகளில் பல்வேறு தேசிய இனங்களிடையே உருவான பலவீனமான ஒற்றுமையை சீர்குலைக்கும் என்ற வெளிப்படையான காரணத்திற்காக ஏகாதிபத்தியத்திற்கு சார்பாக அமையும்…

இந்த நிலைப்பாடு, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட முதலாளித்துவ அரசுகளை, ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை ஏதோ ஒரு வகையில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளாக மறைமுகமாக ஏற்றுக்கொண்டது. [46]

அதே காரணத்திற்காக, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதை முதன்மையான நோக்கமாகக் கொண்ட பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய முதலாளித்துவத்தின் நடவடிக்கைகளை பண்டா ஆதரித்தார்.

முந்தைய கொள்கை முற்றிலும் ஆராயப்படாமல் விடப்பட்டு, LTTE க்கு ஆதரவாக மாறிய நிலையில் WRP குறுக்குவழிகளைத் தேடுவதில் அதிக உந்துதல் பெற்றதுடன் மற்றும் தத்துவார்த்த ஒருமித்ததன்மையில் அக்கறை குறைவாக இருந்தது.

ட்ரொட்ஸ்கிசத்தின் இந்த அரசியல் நிலைப்பாடு, இந்த விரிவுரையின் அடுத்த பகுதியில் எடுத்துக்காட்டப்படவுள்ள மத்திய கிழக்கில் இன்னும் தெளிவாக வெளிப்பட்ட குழப்பங்களும் முரண்பாடுகளும் இலங்கையில் தோழர் பாலசூரிய தலைமையிலான கட்சியின் கொள்கை ரீதியான போராட்டம் இல்லையென்றால் இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை கூறத்தேவையில்லை.

அரபு முதலாளித்துவ தேசியவாதிகளுடன் WRP இன் கூட்டணிகள்

மத்திய கிழக்கு முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளுடன் WRP கொண்டிருந்த உறவுகள், IC இன் பிப்ரவரி 1984 கூட்டத்திற்கான தோழர் நோர்த்தின் அறிக்கையில் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது இந்த விரிவுரையின் எஞ்சிய பகுதியின் மையமாக இருக்கும்.

ஜூலை 1977 இல் முயம்மர் கடாபியின் லிபிய ஜமாஹிரியாவுடன் (தோராயமாக 'மக்கள் குடியரசு' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) ஒரு கூட்டணி கையெழுத்தானது. சிறிது காலத்திற்குப் பின்னர், ஈராக்கில் சதாம் ஹுசைனின் அரபு சோசலிஸ்ட் பாத் கட்சியுடன் உறவுகள் உருவாக்கப்பட்டன. பிப்ரவரி 1979 ஈரானியப் புரட்சிக்குப் பின்னர், கொமேனி ஆட்சிக்கும் ஒரு கை நீட்டப்பட்டது.

லிபியாவுடன் சுருக்கமாகத் தொடங்குவோமானால், லிபிய இராச்சியத்தின் ஆட்சியாளரான மன்னர் இட்ரிஸ் I தலைமையிலான, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை ஆட்சிக்கு எதிராக 1969 இல் ஒரு இளம் இராணுவ அதிகாரிகளின் சதித்திட்டத்தின் தலைவராக கடாபி ஆட்சிக்கு வந்தார்.

ஆட்சியில், அரசு மற்றும் பொருளாதாரத்தின் முதலாளித்துவ தன்மையை பராமரித்த அதே நேரத்தில் அடக்குமுறையுடன் கடாபி தேசியமயமாக்கல் மற்றும் சமூக சீர்திருத்தங்களின் ஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அவர் பசுமை புத்தகம் என வெளியிடப்பட்ட ஒரு அரசியல் தத்துவத்தை உருவாக்கி, அதில் சோவியத் ஒன்றியத்தை ஏகாதிபத்தியமாக அடையாளப்படுத்தி, தேசியவாதத்தை ஒரு முற்போக்கான சக்தியாக புகழ்ந்து, இஸ்லாமியவாதத்தை முன்னெடுத்தார்.

இவை அனைத்தும், ட்ரொட்ஸ்கிசக் கொள்கைகளுக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு காரியாளரை திசைதிருப்பக்கூடிய மற்றும் மனச்சோர்வடையச் செய்யும் வகையில் WRP ஆல் போற்றிப்புகழப்பட்டது.

கடாபி, 'லிபியாவில் சோசலிச வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்குமான பாதையை உருவாக்கினார்' என்று நியூஸ் லைன் அறிவித்தது.' [47] பின்னர் அது விபரமாக: 'லிபிய புரட்சியின் அனுபவம்' 'உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டம் அதிகாரத்துவத்தை என்றென்றைக்குமாக அழிக்க முடியும் மற்றும் அழிக்கும் என்பதை நிரூபித்துள்ளது.' [48] WRP “ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பசுமைப் புத்தகத்தின் படிப்பினைகளை விளக்க” தயாராக இருந்தது எனக் கூறியது. [49]

கடாபியே கூட, பப்லோவாதிகளின் 'நனவற்ற மார்க்சிஸ்டுகளின்' விதத்தில், காஸ்ட்ரோவை போலவே, தன்னிச்சையாக 'புரட்சிகர சோசலிசத்தின் திசையில் அரசியல் ரீதியாக வளர்ச்சியடைந்தார்.' [50] WRP அனைத்து அரபு தேசியவாத தலைவர்களுக்கும் இதேபோன்ற வரையறைகளை பயன்படுத்தியது, ஏகாதிபத்தியத்தின் அழுத்தம் 'தேசிய இயக்கத்திற்குள் பதட்டங்களை அதிகப்படுத்தவும், அரபு தேசிய இயக்கத்தில் உள்ள மிக தீவிரமயமான பிரிவுகளை 'தேசிய விடுதலைக்கான வரலாற்று ஆயுதம் வர்க்கப் போராட்டமாக மட்டுமே இருக்க முடியும் என்பதை அங்கீகரிக்கவும் மட்டுமே உதவும்' என்று 1979 இல் எழுதியது. [51] வர்க்கப் போராட்டம் என்பது வெறுமனே கடாபி மற்றும் ஹுசைன் போன்றவர்களால் விருப்பப்படி கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒரு கொள்கையாக இருந்தது போல.

ஈராக்கிற்கு திரும்புவோமாயின், ஹுசைன் அதன் ஈராக்கிய பிரிவின் தலைவராக இருந்த பாதிஸ்ட் பிரிவானது, 1940 களில் சில சோசலிச சொற்றொடர்களையும் கருத்துக்களையும் பயன்படுத்தி நிறுவப்பட்ட ஒரு அரபு தேசியவாத இயக்கமாகும். அதன் பிரதிநிதிகள் 1963 இல் சிரியாவிலும் ஈராக்கிலும் ஆட்சிக்கு வந்தனர்.

ஜனாதிபதி சதாம் ஹுசைன், சுமார் 1980 இல் எடுக்கப்பட்ட புகைப்படம் [புகைப்படம்: [Photo: "https://en.wikipedia.org/wiki/Saddam_Hussein#/media/File:Saddam_Hussein_in_uniform.jpg" by Old Yemen Arab Republic (now defunct) government brochure from 1980s in the public domain / CC BY-SA 4.0]

இந்த காலகட்டத்தில் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளின் தவறான கொள்கையின் விளைவாக பாத்திசத்தின் அரசியல் வெற்றிகள் கணிசமாக வளர்ந்தன. 1970 களின் நடுப்பகுதியில், ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிரிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டும் தேசிய முற்போக்கு முன்னணிகள் என்று அழைக்கப்படுபவற்றில் பாத்திஸ்டுகளுடன் கையெழுத்திட்டு அவற்றின் தலைமைக்கான உரிமையை அங்கீகரித்தன.

ஹுசைன் 1979 இல் முறையாக ஆட்சிக்கு வந்தார். ஆனால் உண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஈராக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, அதன் உறுப்பினர்களில் பலரை தூக்கிலிடுவது உட்பட காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறை நடவடிக்கையை அவர் வெகுமதியாக வழங்கினார்.

WRP இந்த ஆட்சியை விமர்சனமற்ற முறையில் ஏற்றுக்கொண்டது, இந்த மரணதண்டனைகளை அது பாதுகாத்தது, நோர்த் தனது அறிக்கையில் விவரித்ததுபோல 'ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் எந்த முன்னுதாரணமும் இல்லாத ஒரு நிலைப்பாடாகும்”. [52]

நியூஸ் லைன் எழுதியது:

ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கத்திற்காக ஈராக் ஆயுதப் படைகளில் தமது பிரிவுகளை அமைக்க மாஸ்கோ முயற்சித்ததன் நேரடி நிகழ்வு இதுவாகும். அது விளைவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்... ஸ்ராலினிஸ்டுகளாக இருந்தாலும் சரி, திருத்தல்வாதிகளாக இருந்தாலும் சரி, சமூக ஜனநாயகவாதிகளாக இருந்தாலும் சரி, முதலாளித்துவ அரசின் தாக்குதல்களில் இருந்து தொழிலாளர்களை பாதுகாப்பது ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் கொள்கையாகும். ஆனால், உண்மைகள் எடுத்துக்காட்டுவது போல், அதற்கும் ஈராக்கில் நடந்த சம்பவங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. [53]

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவும் ஒரு புரட்சியின் அவசியத்திற்கு முறையான அங்கீகாரத்தினை கூட இல்லாமல் ஒதுக்கிவைத்த ஒரு களமாக, இந்த நேரத்தில் WRP எந்த அளவிற்கு முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளை புனிதமானதாக வைத்திருந்தது என்பதை இந்த வெளிப்படையான கோரமான அறிக்கை நிரூபிக்கிறது.

உண்மையில், 1979 இல் அதன் நான்காவது மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஒரு ஆவணத்தில், WRP எழுதியது, மத்திய கிழக்கில் 'ஆங்கிலோ-அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயம்' 'எண்ணெய் வயல்களை ஒரு தீவிர ஆட்சியின் கையகப்படுத்தலில் இருந்து பாதுகாக்கும் அதன் விருப்பத்தால் மட்டுமே கட்டளையிடப்பட்டது,' இதனால் தொழிலாள வர்க்கத்தை (மிகவும் சாதகமான சூழ்நிலையில்) முற்றிலும் இரண்டாம் நிலைப் பாத்திரத்திற்குத் தள்ளியது. [54] ஒரு வருடம் கழித்து, WRP பாத்திஸ்டுகளை 'நீண்ட காலப்போக்கில், மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத்தினதும் மற்றும் ஸ்ராலினிசத்தினதும் சூழ்ச்சிகளுக்கு' உண்மையான அச்சுறுத்தல்' என்று விவரித்தது. [55]

ஈரான்-ஈராக் போர்

முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளின் நடவடிக்கைகளின் அடிப்படையில் மத்திய கிழக்கிற்கான அதன் முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டிருந்த WRP, செப்டம்பர் 1980 இல் ஈரான்-ஈராக் போர் வெடித்ததன் மூலம் ஆழமாக சமரசம் செய்யப்பட்டது,
இதில் ஹுசைன் ஒரு வருடத்திற்கு முன்னர் புரட்சியால் பலவீனமடைந்த நிலப்பரப்பைக் கைப்பற்றி ஈரானைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நம்பினார். அந்த போர் 1988 வரை தொடர்ந்து, அது அரை மில்லியன் உயிர்கள் மற்றும் ஒரு டிரில்லியன் டாலர்கள் அளவில் இரு தரப்பினருக்கும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக மதிப்பிடப்பட்டது.

மூன்று மாத காலம் முன்னேறி சென்றதன் பின்னர், ஈராக் இராணுவப் படைகளின் நகர்வுகள் நிறுத்தப்பட்டன. ஈரான் பின்னர் 1982 இல் ஈராக்கை ஆக்கிரமித்தது மற்றும் 1983 இல் இருந்து இரத்தக்களரியான முட்டுக்கட்டைநிலை உருவானது.

இந்த ஆழ்ந்த பிற்போக்குத்தனமான ஈராக்கிய படையெடுப்பானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடனும், ஏகாதிபத்திய சக்திகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பு உட்பட, ஈராக்கிய ஆட்சியின் ஒரு நீடித்த வலதுபுறமான ஊசலாட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டது. WRP சரியாக அதை எதிர்த்தது. ஆனால் அதன் முந்தைய நிலைப்பாடுகளால் இவ்விடயத்தை குழப்புவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு, ஏகாதிபத்தியத்தின் சார்பாக செயல்பட்டதற்காக ஈராக்கைக் கண்டிக்க மறுத்தது.

உண்மையில், நோர்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டது போல, WRP அரசியல் குழுவின் ஒரு அறிக்கை, 'ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களின் போராட்டத்தில் அரபு பாத் சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஈரானிய புரட்சி உள்ளிட்ட தேசிய புரட்சிகர இயக்கங்களுக்கு முழு ஆதரவை நாங்கள் கோருகிறோம்' என அபத்தமாக அறிவித்தது. [56] மோதலுக்கு சில மாதங்கள் இருக்கையில் WRP பின்வருமாறு அறிவித்திருந்தது:

ஏகாதிபத்தியம் மற்றும் சியோனிசத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி பாலஸ்தீன புரட்சியை ஆதரிக்கும் வரையில், போருக்கான எங்கள் எதிர்ப்பு, ஈராக்கில் அரபு பாத் சோசலிஸ்ட் கட்சிக்கான எங்கள் ஆதரவைக் குறைக்காது. [57]

இந்தப் படையெடுப்பு மற்றைய வேளைகளில் ஒரு முற்போக்கான வரலாறு மற்றும் பாத்திசத்தின் எதிர்காலத்திலிருந்து ஒரு பிறழ்வாக கருதப்பட்டது. அதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட முற்படுவதற்கு பதிலாக, WRP, ஹுசைனை அதனை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்ததுடன், ஈரான், ஈராக் மற்றும் PLO ஆகியவற்றின் 'சமாதான மாநாட்டை', தொழிலாள வர்க்கத்தின் முதுகுக்குப் பின்னால் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க பரிந்துரைத்தது.

ஈராக்கின் ஆக்கிரமிப்பை தோற்கடித்த ஈரானின் எதிர்-ஆக்கிரமிப்பு, அதன் சொந்த விரிவாக்க நோக்கங்களால் உந்தப்பட்ட ஒரு பிற்போக்குத்தனமான செயலாகும். ஆனால் 1983 செப்டம்பர் வாக்கில், WRP 180 பாகை திருப்பமெடுத்து ஈரானின் இராணுவ வெற்றிக்காக அறிவித்தது. இந்த கட்டத்தில், WRP முதலாளித்துவ தேசியவாதிகளுக்கு மிகவும் நன்றிக்கடன்பட்டதாக இருந்தது. அது எந்த ஆட்சி முன்னணியில் இருப்பதாகத் தோன்றுகிறதோ அந்த ஆட்சியின் நீரோட்டத்தில் அது முக்கியமாக சிக்கியது.

நோர்த் தனது அறிக்கையில் சுருக்கமாக கூறுகிறார்:

நாங்கள் எங்கள் உறுப்பினர்களையும் தொழிலாள வர்க்கத்தையும் நோக்குநிலை பிறழச்செய்கிறோம். நாங்கள் எங்கள் அரசியல் நிலைப்பாட்டை நோக்கி சிடுமூஞ்சித்தனத்திற்கு அழைப்புவிடுக்கிறோம். நமது அரசியல் நிலைப்பாட்டில் தொடர்ச்சியான மாற்றங்கள், இதில் எந்த பகுப்பாய்வும் ஒரு புதிய முடிவை அது மாற்றியமைக்கும் மற்றும் முரண்படும் முடிவோடு தொடர்புபடுத்தப்படவில்லை. இது நடைமுறைவாதத்தின் தனிச்சிறப்பாகும் [58]

அரசியல் சந்தர்ப்பவாதமும் நடைமுறைவாதமும்

நோர்த்தின் அறிக்கை, அந்த நடைமுறைவாதமானது 1983 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சவாஸ் மிஷேல் எழுதிய ஈரானிய புரட்சியின் நிகழ்வுகள் பற்றிய உடனடி அறிக்கையில் வெளிப்படையாகவே மிகவும் மோசமான தோற்றப்பாட்டுவாதத்தின் ஒரு முறையை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதை ஸ்தாபித்துக்காட்டுகிறது. உள்ளடக்கத்தை பொறுத்தவரை, ஈரானியப் புரட்சி, ஷாவின் மிருகத்தனமான அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரத்திற்கு எதிராக அடிப்படை வர்க்கக் கேள்விகளுக்கு மில்லியன் கணக்கானவர்களைத் அணிதிரட்டியது. எவ்வாறாயினும், ஒரு புரட்சிகர தலைமை இல்லாததாலும், ஸ்ராலினிஸ்டுகளால் தவறாக வழிநடத்தப்பட்டதாலும், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை ருஹோல்லா கொமேனியின் தலைமையிலான முதலாளித்துவ-மதகுருத்துவ சக்திகளின் கைகளில் விழ அனுமதித்தது, பின்னர் அவர் அனைத்து தெளிவாக வரையறுக்கமுடியாத இடதுசாரி சக்திகளுக்கும் எதிராக ஆயிரக்கணக்கான மரணதண்டனைகள், கைதுகள் மற்றும் சித்திரவதைகளை பயன்படுத்துதல் உட்பட கடுமையான அடக்குமுறையை நடத்தினர்.

தெஹ்ரான் ஆஷுரா ஆர்ப்பாட்டம், 11 டிசம்பர் 1978 [Photo: Unknown photographer]

புரட்சி பற்றிய அதன் ஆரம்ப பிப்ரவரி 1979 அறிக்கையில், 'ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சிகர தலைமை இல்லாத நிலையிலும் ஈரானிய ஸ்ராலினிசத்தின் கோழைத்தனமான வர்க்க-ஒத்துழைப்புக் கொள்கைகளின் காரணமாகவும்”, கொமேனியின் கீழ் மதத் தலைவர்கள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்த முடிந்தது என்றும் 'கடைத்தெரு வணிகர்கள் மற்றும் ஈரானிய சொந்த முதலாளித்துவ வர்க்கம் மற்றும் குட்டி முதலாளித்துவத்தின் பிற கூறுகளின்' நலன்களைப் பாதுகாத்து வந்தனர் என்றும் அனைத்துலக்குழு சரியாக எச்சரித்தது. [59]

ஆனால் சவாஸ் மிஷேல் தனது விஜயத்தைப் பற்றி எழுதி, வெளியிடலாம் என்ற அளவுக்கு இந்த பகுப்பாய்வு WRP ஆல் விரைவாக கைவிடப்பட்டது: 'ஒரு உண்மை வியக்க வைக்கிறது: ஒரு போலீஸ்காரரை எங்கும் பார்க்க முடியாது. … ஒரு ஆட்சியின் அரசியல் ஸ்திரத்தன்மையின் அளவை மதிப்பிடுவதற்கான அடிப்படை அளவுகோலாக மக்கள் ஆதரவின் அளவை நாம் கருதினால், பின்னர் சந்தேகத்திற்கு இடமின்றி, தெஹ்ரானில் இஸ்லாமிய ஆட்சி மிகவும் ஸ்திரமானதாகக் கருதப்பட வேண்டும். அதன் அடித்தளம் வெகுஜனங்களாகும். வெகுஜனங்களுக்கும் அவர்களின் தலைமைக்கும் இடையே, குறிப்பாக இமாம் கொமேனிக்கு இடையே, புரட்சியின் உலையில் உருவாக்கப்பட்ட வலிமையான பிணைப்புகள் உள்ளன.' [60]

இது கவனிக்கப்பட்டது, மேலும் வெகுஜன கைதுகள் மற்றும் அடக்குமுறைகளின் போது சவாஸ் உண்மையில் தொலைக்காட்சியில் தோன்றினார். நோர்த் தனது அனைத்துலக்குழுவின் அறிக்கையில் விமர்சித்தது போல்:

மார்க்சிசத்திற்கான தோற்றப்பாட்டுவாதத்தின் முழுமையான மற்றும் தடையற்ற மாற்றீட்டின் ஒரு சிறந்த உதாரணம் இங்கே உள்ளது. வர்க்க சக்திகள் இனி இல்லை. ஈரானுக்குள் இருக்கும் வர்க்க இயக்கவியல் மற்றும் முரண்பாடுகள் பற்றி எதையும் விளக்காத ஒரு வகை 'வெகுஜனமாக' எல்லாம் மாறிவிட்டது. பகுப்பாய்வு சாதாரண அவதானிப்பாக குறைக்கப்படுகிறது. [61]

லிபியா மற்றும் ஈராக் உடனான WRP இன் உறவுகளைப் பொறுத்தவரை அதே தோற்றப்பாட்டுவாத முறையே ஆதிக்கம் செலுத்தியது. போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் இரு நாடுகளும் வருமானத்தில் மகத்தான பாய்ச்சலை அனுபவித்தன. தனிநபர் சராசரி வருமானம் உலகின் மிகக் குறைந்த இடங்களில் இருந்து பிராந்தியத்தில் மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தப்பட்டது, மேலும் சில ஏழ்மையான ஐரோப்பிய நாடுகளுக்கு கூட போட்டியாக இருந்தது. இது குறிப்பாக, 1960 கள் மற்றும் 1970 களில் அதீத வேகத்தில் நடந்தது.

மேலும், நாங்கள் எடுத்துக்காட்டியது போல், அந்தச் செல்வம் கல்வி, வீடு கட்டுதல், உள்கட்டமைப்பு, சுகாதாரம் போன்றசில குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தன. ஆயுட்காலம் வியத்தகு முறையில் அதிகரித்தது. சமூக நலக் குறியீடுகளின் வரம்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டது. திரும்பவும், நாம் பார்ப்பதுபோல், இவை நியாயமானளவு பகட்டாரவார சோசலிச வார்த்தையாடல்களுடன் இணைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகள் சந்தேகத்திற்கு இடமின்றி WRP தலைமையின் மீது அவற்றின் ஆதிக்கத்தைக் கொண்டிருந்தன. முற்றிலும் அனுபவவாத வழியில் விளக்கப்பட்டு, அவர்கள் ஒரு போல்ஷிவிக் வகை கட்சி தலைமையிலான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தினால் ஒரு சோசலிசப் புரட்சியின் மூலம் நீடித்த சமூக முன்னேற்றத்திற்கு ஒரு பாதையூடாக செல்லாத ஒரு நீடித்த சமூக மற்றும் சோசலிச சமூகத்திற்கான ஒரு பாதை திறந்திருக்கும் என்றும் கருதிய ஒரு அரசியல் நிலைப்பாட்டிற்கு பங்களித்தனர். முன்பு விவாதிக்கப்பட்ட மாதிரி பார்ன்ஸ் இன் பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகாரம் உயிர்த்தெழுப்பப்பட்டது.

உண்மையில், லிபியாவிலும் ஈராக்கிலும் என்ன நடக்கிறது என்பது குறிப்பிட்ட மற்றும் அரசியல்ரீதியாக தாக்குப்பிடிக்க முடியாத நிலைமைகளைச் சார்ந்தது. இதை ஒரு வரலாற்று சடவாத முறை தெளிவாக வெளிப்படுத்த முடியும். அதிகரித்த செல்வத்தின் ஆதாரம் எண்ணெய் வருவாயாகும். இதனை பின்வருமாறு விளங்கப்படுத்தலாம். ஈராக்கின் எண்ணெய் ஏற்றுமதி வருவாய் 1972 இல் 1 பில்லியன் டாலரிலிருந்து 1980 இல் 26 பில்லியன் டாலராக அதிகரித்தது.

எவ்வாறாயினும், அந்த வருவாயில் கணிசமான பங்கைக் பெற்றுக்கொள்வதற்கான இந்த அரசாங்கங்களின் இயலுமானதன்மை குறிப்பிட்ட மற்றும் இடைமருவும் வரலாற்று நிலைமைகளை சார்ந்திருந்தது: சோவியத் ஒன்றியத்தின் இருப்பு, அத்தகைய அரசுகளை அதற்கும் உலக ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் ஒப்பீட்டளவில் இலாபகரமாக சமநிலைப்படுத்த அனுமதித்தது, மேலும் ஏகாதிபத்திய முகாமின் பலவீனமான ஒரு காலகட்டமாகவும், நெருக்கடி மற்றும் வர்க்கப் போராட்டத்தால் பீடிக்கப்பட்டும் இருந்தது.

புதிய செல்வத்தில் கணிசமான பங்கை சீர்திருத்தங்களின் வடிவத்தில் தமக்கு கோருவதற்கான மக்களின் திறன் அதன் வலிமைமிக்க போராட்டங்களில் வேரூன்றி இருந்தது, அது பழைய ஆட்சிகளை வீழ்த்தியதுடன் மற்றும் முதலாளித்துவ தேசியவாத தலைவர்கள் அதற்கு பயந்து வாழ்ந்தபோதும், அது உற்பத்தி சாதனங்கள் மீதான உரிமையை கைப்பற்றாததால், அவற்றை திருப்பிக் கொடுக்கவேண்டியிருக்கவில்லை.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நிரந்தரப் புரட்சியின் உலக முன்னோக்கு வலியுறுத்துவது போல், உலக சோசலிசப் புரட்சியின் முன்னேற்றத்திற்கு வெளியே இந்த வெற்றிகள் நிலையானவை அல்ல. அது தடுக்கப்பட்ட நிலையில், ஏகாதிபத்திய முகாம் ஈராக்-ஈரான் போரினால் எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்ட நெருக்கடியைப் பயன்படுத்தி OPEC உற்பத்தியாளர்களின் சந்தைப் பங்கை பெரிதும் குறைமதிப்பிற்கு உட்படுத்த முடிந்தது. நிச்சயமாக, போரின் விளைவுகள் ஈராக்கிய பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியது. வளைகுடாப் போர், ஈராக் போர் மற்றும் லிபியாவில் நேட்டோ தலையீடு ஆகியவற்றால் மிருகத்தனமாக நிரூபிக்கப்பட்டதைப் போல, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் மூலம், ஏகாதிபத்தியத்தின் அழுத்தங்களில் இருந்து எந்தவொரு காப்பரணும் அகற்றப்பட்டது.

பப்லோவாதமும் தொழிலாள வர்க்கத்தை கைவிடுதலும்

இந்த வரலாற்றுக் காரணிகளையும் வர்க்கப் போராட்டத்துடனான அவற்றின் தொடர்பையும் புறக்கணித்து, WRP துல்லியமாக பப்லோவாதிகளைப் போலவே நடந்து கொண்டிருந்தது. நோர்த்தின் அறிக்கையை மேற்கோள் காட்டினால், 'இயங்கியல் சடவாத முறை மற்றும் வரலாற்று சடவாதத்தின் அடிப்படையிலான வர்க்க உறவுகளின் விஞ்ஞான ஆய்வுக்கு பதிலாக, அவர்களின் மேலோட்டமான பதிவுகளால் பிரதியீடு செய்ததுடன்' மற்றும் 'வாழும் நிகழ்வுகளின் யதார்த்தத்திற்கு' ஏற்ப கொள்கை ரீதியான நிலைப்பாடுகள் அனைத்தையும் நுகரும்' 'ட்ரொட்ஸ்கிசத்திற்கு ஒரு திருத்தம் தேவைப்பட்ட மற்றும் அதனை கைவிட வேண்டியதன் அவசியத்தை' பின்பற்றுபவர்களின் பாதையை அது பின்பற்றுகிறது. 'ஏகாதிபத்தியம் மற்றும் தொழிலாளர் இயக்கம் மற்றும் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்குள் தற்காலிகமாக ஆதிக்கம் செலுத்தும் அந்த அரசியல் சக்திகளின் மாயையான ஸ்திரத்தன்மைக்கு விமர்சனமற்று அடிபணிந்து போகின்றன'. [62]

சாவாஸின் ஈரான் அறிக்கை, 1980 ஆம் ஆண்டில் நிகரகுவாவிலிருந்து திரும்பிய அமெரிக்க SWP உறுப்பினர் மேரி ஆலிஸ்-வாட்டர்ஸின் அறிக்கையுடன் ஒரு வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருந்தமை ஒரு தெளிவான ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது, அங்கு சாண்டினிஸ்டாக்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தனர்.

அரசியல் நிகழ்வுகளை இந்த வழியில் அணுகும்போது, WRP தவிர்க்க முடியாமல் அரசியல் ரீதியாக பேரழிவு தரும் முரண்பாடுகள் மற்றும் கொள்கை ஊசலாட்டங்களில் சிக்கியது. ஒரு ஒருங்கிணைந்த உலக முன்னோக்கைக் காட்டிலும், நீண்ட காலத்திற்கு ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவும், தங்கள் சொந்த நலன்களின் மோதல்களைக் கடக்கவும், தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமைக்கு ஒரு சாத்தியமான வேலைத்திட்டத்தை உருவாக்கவும் இயல்பாக இயலாத தேசியவாத போக்குகளுடன் தொடர்ச்சியான நடைமுறை கூட்டணிகளின் அடிப்படையில் அது பெருகிய முறையில் தனது திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.

எனவே, பண்டாவிற்கு எழுதிய கடிதத்திலும், இந்த அறிக்கையிலும், 'சர்வதேச சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக அனைத்துலகக் குழுவின் வளர்ச்சிக்கு' முனைவதே பணியாக இருந்தது என்பதை வலியுறுத்தி, தேசிய விடுதலை இயக்கங்கள் தொடர்பான அனைத்துலகக் குழுவின் அனுபவத்தின் இருப்புநிலைக் குறிப்பை வரைவதற்கு நோர்த் அழைப்பு விடுத்துள்ளார். [63] இதுபோன்ற ஒரு நடைமுறை, முறையாக நடத்தப்பட்டால், WRP ஆல் அடுத்தடுத்து எடுக்கப்பட்ட பரஸ்பர முரண்பாடான நிலைப்பாடுகளை அம்பலப்படுத்தி தடுத்திருக்கும்.

நிச்சயமாக, இந்த நிலைப்பாடுகள் முற்றிலும் வழிமுறை பற்றிய பிழைகள் அல்ல. ஆனால் அரசியல் அழுத்தங்கள் மற்றும் அந்த அழுத்தங்களை உணர்ந்து எதிர்த்துப் போராடத் தவறியதன் ஒட்டுமொத்த தாக்கத்துடனும், நீண்ட காலமாக ஒரு சந்தர்ப்பவாதப் போக்கைப் பின்பற்றியதுடனும் பிணைக்கப்பட்டுள்ளது. WRP இன் சந்தர்ப்பவாத, மற்றும் பெருகிய முறையில் நிதிய உறவுகளின் தேவைகளால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளை வழங்குவதற்காக, ஒரு தோற்றப்பாட்டுவாத முறை அடிக்கடி துல்லியமாக பயன்படுத்தப்பட்டது. அது இங்கிலாந்தில் ஒரு வலுவான தேசிய அமைப்பின் விரிவாக்கமாகவே புரட்சிகர கட்சி கட்டப்படும் என்ற தவறான கருத்தாக்கத்தில் வேர்களைக் கொண்டிருந்தது.

நோர்த்தும் வேர்க்கர்ஸ் லீக்கும் இதை கண்டுணர்ந்ததோடு, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மீதான உலக ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்திற்கான வழித்தடமான பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டத்தின் தொடர்ச்சியாக அவர்களின் விமர்சனங்களை கருத்திற்கொண்டனர்.

நோர்த் தனது அறிக்கையில் விளக்கினார்:

அனைத்துலகக் குழுவானது அனைத்து முந்தைய தலைமுறை மார்க்சிஸ்டுகளின் அரசியல், தத்துவார்த்த மற்றும் அமைப்பு ரீதியான போராட்டங்களின் மூலம் நிறுவப்பட்ட பாரம்பரியங்கள் மற்றும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இந்த முந்தைய தலைமுறையினருடனான அனைத்துலகக் குழுவின் இந்த தொடர்ச்சியானது, தொழிலாளர் இயக்கத்துக்குள், குறிப்பாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்குள் வெளிப்பட்ட அனைத்து விதமான மார்க்சிச எதிர்ப்புக்கும் எதிரான போராட்டத்தின் மூலமாகவே வளர்ச்சியடைந்தது. [64]

WRP இன் மீது செயல்படும் வர்க்க அழுத்தங்கள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வெளிப்படுத்தப்பட்டன. அங்கு கட்சி மத்தியவாத மற்றும் நடுத்தர வர்க்க தீவிரக் கூறுகளை, அனைத்திற்கும் மேலாக தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இடது பக்கத்தை நோக்கியதாக இருந்தது. இது, தொழிலாள வர்க்கம் இன்னும் கணிசமான மாயைகளைக் கொண்டிருக்கும் தொழிற் கட்சி மீது கோரிக்கைகளை வைப்பதை ஒரு அதிதீவிர நிலைப்பாட்டில் மறுத்ததில் வெளிப்படுத்தப்பட்டது, இது தொழிலாளர்களுடன் ஒரு போராட்டத்தில் ஈடுபடுவதற்கான அதன் பொறுப்பிலிருந்து WRP ஐ விடுவிக்க உதவியது. அவ்வாறான ஒரு போராட்டமானது கென் லிவிங்ஸ்டன் மற்றும் டெட் நைட் போன்ற பிரமுகர்களுடனும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினருடனும் அதன் வளரும் உறவுகளை வெட்டியிருக்கும்.

உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்தின் மையப்பகுதியாக இருந்த நிரந்தரப் புரட்சியை கைவிடுவதும், பிரிட்டனில் வர்க்கப் போராட்டத்திற்கான இந்த பிரதிபலிப்பின் மையத்தில், தொழிலாள வர்க்கத்தின் மீது ஆழ்ந்த அவநம்பிக்கை மற்றும் பொறுமையின்மை, குறுக்குவழிகளுக்கான தேடலை உந்துதல் மற்றும் அது தொடர்புடைய தேசியவாத கண்ணோட்டம் இருந்தது, இது ஒரு சர்வதேச சோசலிசக் கட்சியின் வளர்ச்சி மற்றும் புரட்சிகர போராட்டத்தின் நிலைப்பாட்டில் இருந்து அல்லாமல், குறிப்பிட்ட நாடுகளில் செய்யப்பட்ட வெளிப்படையான முன்னேற்றங்களின் நிலைப்பாட்டில் இருந்து 'வெற்றிகளை' விளக்குகிறது.

இந்தப் போக்கை மாற்றியமைப்பது 1961 மற்றும் 1964 க்கு இடையில் பப்லோவாதிகளுடன் SWP இன் மறுஐக்கியத்திற்கு எதிராக SLL தலைமையிலான போராட்டத்தை முழுமையாக மீண்டும் உள்ளீர்த்துக்கொள்வதன் அடிப்படையில் மட்டுமே இருக்க முடியும், இது நோர்த் விளக்கியது போல், 'பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அடிப்படை பிரச்சினைகளையும் முன்னுக்கு கொண்டுவந்தது. அதாவது முதலாளித்துவத்தின் சவக்குழி தோண்டுபவராக மற்றும் ஒரு சோசலிச சமுதாயத்தை கட்டியெழுப்புபவராக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரித்தல்; பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிராகரித்தல்; தன்னிச்சைக்கு எதிரான போராட்டத்திற்கு மறுப்பு மற்றும் மார்க்சிச தத்துவத்திற்கான நனவான போராட்டத்தின் அவசியம்; நான்காம் அகிலத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை கைவிடுதல்' என்பனவே அவையாகும்.[65]

WRP இன் சமகால நிலைப்பாடானது இந்த பிரச்சினைகளின் வெளிச்சத்திலும், அந்த போராட்டத்தின் படிப்பினைகளிலும் இருந்து விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்யப்பட வேண்டியிருந்தது. நோர்த் தனது அறிக்கையை, அனைத்துலக்குழுவிற்குள் ஒரு தீவிர கலந்துரையாடலுக்கும், ஆவணங்களை சுற்றுக்கு விடுவதற்கும், ஒரு அனைத்துலக்குழுவின் மாநாட்டை தயாரிப்பதற்கான முன்மொழிவோடும் முடித்தார்.

எவ்வாறாயினும், அந்த நேரத்தில், அழுகல் மிகவும் ஆழமாக இருந்தது. தோழர் நோர்த்தை, இந்த விரிவுரையைத் தயாரிக்க உதவுவதற்காக அழைத்தபோது, ரொம் மற்றும் என்னிடம், அவர் தனது உரையை ஆற்றும்போது கூட்டத்தில் ஏற்பட்ட வெறித்தனத்தால் (இது ஹீலி, சுலோட்டர், பண்டா ஆகியோரால் குழப்பச் செய்யப்பட்டது) அவ்வாறான ஒரு உரையை முடிக்க அவருக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார். விஷயங்கள் ஒரு கலந்துரையாடலுக்கு அப்பாற்பட்டு போயிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஒரு கோட்பாட்டு ரீதியான அரசியல் போராட்டம் நடத்தப்பட வேண்டியிருந்தது.

இதைத்தான் அவர்கள் எதிர்கொண்டார்கள் என்பதை உணர்ந்த WRP இன் தலைவர்கள், ஒரு இறுதி எச்சரிக்கையை முன்வைத்து, விமர்சனங்கள் திரும்பப் பெறப்படாவிட்டால் பிளவு ஏற்படும் என்று அச்சுறுத்துவதன் மூலம் வேர்க்கர்ஸ் லீக்கிற்கு எதிராக ஒரு முன்கூட்டிய தாக்குதலை தொடுக்க முயன்றனர். முடிந்தவரை ICFI காரியாளர்களின் ஒரு பரந்த பிரிவை ட்ரொட்ஸ்கிச நிலைப்பாட்டுக்கு தெளிவுபடுத்தி வென்றெடுப்பதே நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய பணி என்பதில் கவனம் செலுத்தி, WRP இன் அரசியல் போக்கு பற்றிய விமர்சனத்தை முன்வைக்கக்கூடிய சிறந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, வேர்க்கர்ஸ் லீக் தந்திரோபாய ரீதியாக தனது விமர்சனங்களை பின்வாங்கிக் கொண்டது.

எவ்வாறாயினும், இது அடுத்த விரிவுரையின் கருப்பொருளை மீறத் தொடங்குகிறது.

குறிப்புகள்:

[1] David North, “A Contribution to a Critique of G. Healy’s ‘Studies in Dialectical Materialism,’” available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/02.html

[2] David North, “Leon Trotsky and the Development of Marxism,” Leon Trotsky and the Struggle for Socialism in the Twenty-First Century (Oak Park, MI: Mehring Books, 2023), pp. 1-56.

[3] North, “A Contribution to a Critique of G. Healy’s ‘Studies in Dialectical Materialism,’” Section 6: Political Summary of Critique of G. Healy’s ‘Studies,’ available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/02.html

[4] Karl Marx, “Address of the Central Committee to the Communist League,” March 1850, available: https://www.marxists.org/archive/marx/works/1847/communist-league/1850-ad1.htm

[5] Leon Trotsky, “Contribution Toward a Discussion on the Basic Theoretical Conceptions of the International Communist League,” Writings of Leon Trotsky 1933-34, pp. 164-65.

[6] Letter from Cliff Slaughter to David North, November 26, 1985, available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/17.html

[7] David North, “Chapter 7: Trotskyism Betrayed,” Gerry Healy and his Place in the History of the Fourth International, 1991, available: https://www.wsws.org/en/special/library/healy/07.html

[8] Letter from Keerthi Balasuriya to a Sri Lankan Comrade in London, January 11, 1972, Fourth International, Vol. 14 No. 1, March 1987, p. 44.

[9] Political Committee of the Workers League, A Provocateur Attacks Trotskyism, (Detroit: Labor Publications, 1983), p. 8.

[10] Ibid. p. 15.

[11] Ibid. p. 13.

[12] Ibid. pp. 1-2.

[13] Ibid. p. 9.

[14]V.I. Lenin, “Letters on Tactics,” April 1917, available: https://www.marxists.org/archive/lenin/works/1917/apr/x01.htm

[15] V.I. Lenin, “The Tasks of the Proletariat in the Present Revolution a.k.a. The April Theses,” available: https://www.marxists.org/archive/lenin/works/1917/apr/04.htm

[16] A Provocateur Attacks Trotskyism, p. 14.

[17] Quoted in “Political Report by David North to the International Committee of the Fourth International,” February 11, 1984, available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/06.html

[18] A Provocateur Attacks Trotskyism, p. 2.

[19] Ibid. p. 20.

[20] Ibid. pp. 24-25.

[21] Letter of the National Committee of the SLL to the National Committee of the SWP, January 2, 1961, Trotskyism vs Revisionism Volume 3, Cliff Slaughter, ed. (London: New Park Publications, 1974), pp. 48-49.

[22] “Political Report by David North to the International Committee of the Fourth International,” February 11, 1984, available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/06.html

[23] Letter from Cliff Slaughter to David North, December 1983, available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/03.html

[24] Christoph Vandreier, “1982: Marxism, the revolutionary party, and the critique of Healy’s Studies in Dialectics,” World Socialist Web Site, September 28, 2023, available: https://www.wsws.org/en/articles/2023/09/28/heal-s28.html

[25] Workers League Political Committee, “Mobilize Labor Against US Imperialism,” Bulletin, October 28, 1983, p. 6.

[26] Statement by the Bulletin Editorial Board, “Class issues in the Grenada coup,” Bulletin, October 25, 1983, p. 3.

[27] Workers League Political Committee, “The Coup in Grenada,” Bulletin, October 21, 1983, p. 10.

[28] “Mobilize Labor Against US Imperialism,” Bulletin, October 28, 1983, p. 7.

[29] Letter from Cliff Slaughter to David North, December 1983, available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/03.html

[30] Ibid.

[31] Letter from David North to Cliff Slaughter, December 27, 1983, available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/04.html

[32] Ibid.

[33] Cliff Slaughter, “Opportunism and Empiricism,” Trotskyism Versus Revisionism, Volume 4, Cliff Slaughter, ed. (London: New Park Publications, 1974), pp. 82-83.

[34] “Arafat’s Role,” News Line, December 30, 1983.

[35] Letter from David North to Mike Banda, Fourth International, Vol. 13, no.2 (1986), p. 36, available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/05.html

[36] Ibid.

[37] “Arafat’s role,” News Line.

[38] International Committee of the Fourth International, “How the Workers Revolutionary Party Betrayed Trotskyism, 1973-1985,” Fourth International 13, no.1 (1986), p. 52, https://www.wsws.org/en/special/library/how-the-wrp-betrayed-trotskyism/22.html

[39] Letter from David North to Mike Banda, Fourth International, Vol. 13, no. 2, p. 38.

[40] Second World Congress of the Fourth International, “Struggles of the Colonial Peoples and the World Revolution,” Fourth International, July 1948, p. 157.

[41] Letter from David North to Mike Banda, Fourth International, Vol. 13, no. 2, p. 38.

[42] Ibid.

[43] Workers Revolutionary Party, “Perspectives of the Fourth Congress,” 1979. [See “How the Workers Revolutionary Party Betrayed Trotskyism,” available: https://www.wsws.org/en/special/library/how-the-wrp-betrayed-trotskyism/20.html]

[44] “How the Workers Revolutionary Party Betrayed Trotskyism,” p. 48.

[45] Anran Balasingam, Towards a Socialist Tamil Eelam, 1980.

[46] Keerthi Balasuriya, “The Tamil Struggle and the Treachery of Healy, Banda and Slaughter,” Fourth International Vol. 14, no. 1 (1987), p.55, available: https://www.wsws.org/en/special/library/fi-14-1/08.html

[47] Political Committee of the WRP, News Line, December 12, 1981.

[48] News Line, September 5, 1979.

[49] Political Committee of the WRP, “Draft Resolution,” July 28, 1980.

[50] Political Committee of the WRP, News Line, December 12, 1981.

[51] “Fourth Congress,” 1979.

[52] David North, “Political Report by David North to the International Committee of the Fourth International,” Fourth International Vol. 13, no. 2 (1986), p. 43, available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/06.html

[53] News Line, March 8, 1979.

[54] “Fourth Congress,” 1979.

[55] Workers Revolutionary Party, “Documents of the Fifth Annual Congress,” 1980.

[56] News Line, September 25, 1980.

[57] News Line, February 7, 1981.

[58] North, “Political Report by David North to the International Committee of the Fourth International,” p.44.

[59] News Line, February 17, 1979.

[60] News Line, February 24, 1983.

[61] North, “Political Report by David North to the International Committee of the Fourth International,” p. 44.

[62] Ibid, p. 39.

[63] Ibid, p. 42.

[64] Ibid, p. 39.

[65] Ibid, p. 39.

Loading