சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைகால பள்ளி விரிவுரை

நான்காம் அகிலத்தின் வரலாற்று, அரசியல் அடித்தளங்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பின்வரும் விரிவுரை ஜூலை 30 மற்றும் ஆகஸ்ட் 4, 2023 க்கு இடையே அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடை வகுப்புக்காக சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் கிளாரா வைஸ் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஜேர்மன் மொழி பதிப்பின் ஆசிரியர் ஜொஹானெஸ் ஸ்ரேர்ன் வழங்கியதாகும்.

இந்த கோடை வகுப்புகளுக்கு உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் வழங்கிய ஆரம்ப அறிக்கையான, ஏகாதிபத்திய போரும் சோசலிச புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்” என்பது கடந்த வாரம் பிரசுரிக்கப்பட்டது. உலக சோசலிச வலைத் தளம் இந்தக் கோடை வகுப்புகளின் அனைத்து விரிவுரைகளையும் எதிர்வரவிருக்கும் வாரங்களில் பிரசுரிக்கும்.

நான்காம் அகிலத்தின் வரலாற்று, அரசியல் அடித்தளங்கள்

அறிமுகம்

மார்க்சிசத்தின் ஒரேயொரு தொடர்ச்சியாக எழுந்த ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அனுபவங்களைக் கோடிட்டுக் காட்டுவதும், 1953 இல் இருந்து இதுவரை பப்லோவாதத்திற்கு எதிராக அனைத்துலகக் குழு நடத்திய போராட்டத்தில், பாதுகாத்து வந்துள்ள ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படை அரசியல் கருத்துருக்களை அறிமுகப்படுத்துவதுமே இந்த விரிவுரையின் நோக்கமாகும்.

நாம் வரலாற்றின் ஒரு கட்சி என அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம். ஆனால் நம் செயல்பாடுகளில் வரலாற்றை நோக்கிய அணுகுமுறை என்ன என்பதைப் புரிந்து கொள்வது முக்கியமாகும். நாம் வரலாற்றை அகநிலையாக அணுகவில்லை. அதாவது, தனிநபர்களின் “நன்மையான” அல்லது “கேடான” செயல்கள் அல்லது நோக்கங்களைக் குறித்து தார்மீக தீர்ப்புகளை வழங்கும் நிலைப்பாட்டில் இருந்து நாம் வரலாற்றை அணுகுவதில்லை. ஏங்கெல்ஸின் புகழ்பெற்ற வார்த்தைகளில் கூறினால், மார்க்சிஸ்டுகளின் பணி, ”நோக்கங்களுக்குப் பின்னால் உள்ள நோக்கங்களை வெளிப்படுத்துவதாகும்”: அதாவது, போக்குகள் மற்றும் தனிநபர்களின் அரசியல் சிந்தனை மற்றும் செயல்களுக்குப் பின்னால் உள்ள புறநிலை சமூக உந்து சக்திகளை ஸ்தாபித்துக் காட்டுவதாகும்.

ஆனால் வரலாற்றைப் பற்றிய இந்த புறநிலை அணுகுமுறை, ஒரு செயலற்ற அணுகுமுறை என்றாகாது. நாம் புரட்சிகர போராட்ட நிலைப்பாட்டில் இருந்து வரலாற்றை அணுகுகிறோம். சோசலிசப் புரட்சியானது, விதிகளால் உந்தப்படுகிறது என்றாலும் அதுவொரு இயங்குதிறனுள்ள நிகழ்சிப்போக்காகும். இது புரட்சிகர வர்க்கம் மற்றும் அதன் கட்சியின் வேலைத்திட்டம், தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளால் விமர்சனரீதியாக நோக்கப்பட்டு வடிவமைக்கப்படுகிறது.

வரலாறு தொடர்பான இந்த அணுகுமுறை, ஏகாதிபத்திய சகாப்தம் மற்றும் சோசலிசப் புரட்சியில் புரட்சிகர தலைமை வகிக்கும் பாத்திரம் பற்றிய நம் கருத்துருவுடன் உள்ளார்ந்த முறையில் பிணைந்துள்ளது. 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதை அடுத்து, 20 ஆம் நூற்றாண்டைக் குறித்து மூன்று வெவ்வேறு கருத்துருக்கள் உருவாக்கப்பட்டன. முதலாவது, மதிப்பிழந்த பிரகடனமான பிரான்சிஸ் ஃபுக்குயாமாவின் (Francis Fukuyama) “வரலாற்றின் முடிவு” பற்றிய விவரிப்பை இப்போது விரிவாக மறுத்துரைக்க வேண்டியதே இல்லை. அவர் சமீபத்தில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் நவ-நாஜி அசோவ் பட்டாலியன் உறுப்பினர்களுடன் மேடை ஏறியிருந்தார்.

ஆர்செனி பெடோசியுக், ஜூலியா பெடோசியுக் மற்றும் கத்தெரினா ப்ரோகோபென்கோவுடன் பிரான்சிஸ் ஃபுகுயாமா (இடதுபுறம் நிற்பவர்) [Photo: Facebook page of the Ukrainian Student Association at Stanford]

இரண்டாவது, பிரிட்டனின் ஸ்ராலினிசவாதியும் மற்றும் வரலாற்றாசிரியருமான எரிக் ஹோப்ஸ்பாம் (Eric Hobsbawm) ஆல் உருவாக்கப்பட்டது. அவரது பார்வையில், சோவியத் ஒன்றியத்தின் முடிவானது ரஷ்யப் புரட்சியின் “முடிவை” குறித்தது, அவ்விதத்தில், அது இந்நூற்றாண்டின் “முடிவை” குறித்ததால், அது ஒரு “குறுகிய இருபதாம் நூற்றாண்டு” (“short twentieth century”) என்றவர் வாதிட்டார்.[1]

“முடிவுறாத இருபதாம் நூற்றாண்டு” என்ற மூன்றாவது கருத்துருவை அனைத்துலகக் குழு முன்வைத்தது. சாராம்சத்தில், இரண்டு உலகப் போர்கள் மற்றும் பாசிசத்திற்கு மட்டுமல்ல, அக்டோபர் புரட்சிக்கும், வழிவகுத்த இந்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் அனைத்து அடிப்படை வரலாற்று முரண்பாடுகளும் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று இந்தக் கருத்துரு குறிப்பிடுகிறது.

“முடிவுறாத இருபதாம் நூற்றாண்டு” என்ற கருத்துருவில், முதலாவதாக, ஏகாதிபத்திய போர்கள் மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் சகாப்தமான எமது இந்த சகாப்தத்தில் மார்க்சிச புரிதலும், இரண்டாவதாக, இந்தப் புரட்சியில் மார்க்சிச தலைமை வகிக்கும் தொடர்ச்சியான பாத்திரமும் ஆபத்தில் இருந்தன எனக் குறிப்பிட்டோம். ஸ்ராலினிசத்திற்கு எதிரான இடது எதிர்ப்பின் போராட்டத்தை, எந்தவிதத்திலும் கவனத்திற்கெடுப்பதை “ஊகம்” என்று நிராகரித்த ஹோம்ஸ்பாம் எழுதிய கட்டுரைக்குப் பதிலளித்து, டேவிட் நோர்த் விவரிக்கையில், சோசலிசப் புரட்சியில் கட்சிகள், வேலைத்திட்டங்கள் மற்றும் அரசியல் போராட்டத்தின் நிகழ்ச்சிப்போக்கு என இந்த அகநிலை காரணிகள் வகிக்கும் பாத்திரத்தைப் “புறநிலை” வரலாற்று நிகழ்வுபோக்கில் இருந்து ஒதுக்கி விட முடியாது. உண்மையில், ஹோப்ஸ்பாமின் சொந்தக் கட்டுரை, இடது எதிர்ப்பின் போராட்டத்தை “உண்மைக்குப் புறம்பானதாக” நிராகரித்து, முக்கியமாக, ஸ்ராலினிசத்திற்கு அவர் அனுதாபம் காட்டியதன் மூலம், “அகநிலை” காரணியை அலட்சியப்படுத்துவது அல்லது குறைத்துக் காட்டுவது வரலாற்றுப் பதிவைச் சிதைப்பதில் தான் போய் முடியும் என்பதை எடுத்துக் காட்டியது.

1989 இல் மாஸ்கோ வரலாற்று பயிலகத்தில் டேவிட் நோர்த் உரையாற்றுகிறார்

ஹோப்ஸ்பாமின் கருத்துருக்களை மிகவும் அடிப்படை தத்துவார்த்த நிலையில் கையாளுகையில், நோர்த் பின்வருமாறு வலியுறுத்தினார். அக்டோபர் புரட்சியானது, ஹோப்ஸ்பாம் கூறுவதைப் போல, நிலநடுக்கம் அல்லது வெள்ளப்பெருக்கு போன்ற ஓர் இயற்கைப் பேரழிவுக்கு நிகரான சம்பவம் அல்ல. இத்தகைய நிகழ்வுகளை விஞ்ஞானிகளால் முன்கணிக்க முடியும் என்றாலும் அவற்றின் அளவின் மீது மனித நடவடிக்கைகள் மேலாளுமை செலுத்தவியலாது. அந்த சோசலிசப் புரட்சியோ, முதலாளித்துவப் புரட்சிகளில் இருந்து அதன் அளவின் தன்மையில் வித்தியாசமான முறையில் அபிவிருத்தி அடைந்தது என்று அவர் வலியுறுத்தினார். டேவிட் நோர்த் பின்வருமாறு விவரித்தார்:

மார்க்சிசத்தின் வருகையுடன், மனிதரின் சொந்த வரலாற்றுடனான அவர்தம் உறவு ஓர் ஆழமான மாற்றத்திற்கு உள்ளானது. மனிதன் தனது சிந்தனையையும் செயல்களையும், சமூகப் பொருளாதார அடிப்படையில் நனவுபூர்வமாக விளங்கிக் கொள்ளும் திறனைப் பெற்றான். அவ்விதத்தில், அவனின் சொந்த நடவடிக்கையை ஒரு தொடர் வரலாற்று நிகழ்வுகளுக்குள் துல்லியமாக நிலைநிறுத்திப் பார்க்கும் திறனைப் பெற்றான். … அரசியல் அமைப்புகளின் பகுப்பாய்வுகள், முன்னோக்குகள், மூலோபாயங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள், வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் ஒட்டுமொத்தமாக முன்னெப்போதும் இல்லாத பாத்திரத்தை எடுத்தன. வரலாறு என்பது சாதாரணமாக நிகழும் ஒன்றல்ல. அது எவ்வாறிருக்கும் என்று எதிர்நோக்கப்பட்டு, அதற்காக தயாரிப்புகள் செய்யப்பட்டு மற்றும், இதுவரை சாத்தியமில்லாத கருதப்பட்ட அளவில் நனவுபூர்வமாக வழிநடத்தப்பட்டது. [2]

புரட்சிகர வர்க்கத்தின் சமூக சிந்தனையும் நடைமுறையும் புறநிலை யதார்த்தத்துடன் ஒன்றிணைக்கப்பட்ட விதம், 1917 அக்டோபரில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றிய போது இதுவரை இல்லாதளவில் உச்சத்தை எட்டியது. முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர நிர்பந்தித்த மற்றும் 1917 புரட்சியின் எழுச்சிக்கு உந்துதலளித்த இந்தப் புரட்சிகர அலையின் வீழ்ச்சியின் மத்தியில் வரலாற்று ரீதியில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் மேலெழுந்தது.

ஒரு விதத்தில், இது வரலாற்றில் மிகவும் துன்பியலான காலகட்டமாக இல்லாவிட்டாலும், மிகவும் துயரகரமான ஒன்றாக இருந்தது. அக்டோபர் புரட்சிக்கும் இரண்டாம் உலகப் போரின் முடிவுக்கும் இடையிலான 30 ஆண்டுகளில், ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் அளப்பரிய புரட்சிகரப் போராட்டங்கள் தோல்வி அடையச் செய்யப்பட்டன, ஜேர்மனியில் நாஜிசம் அதிகாரத்திற்கு வந்ததுடன், 60 மில்லியன் மக்களின் உயிரிழப்புடன் இரண்டாம் உலகப் போரும் மற்றும் யூத இனப்படுகொலைகளும் நடத்தப்பட்டன. ஸ்ராலினிசத்தால் மார்க்சிஸ்டுகள் மற்றும் சோசலிஸ்டுகளின் தலைமுறைகள் நிர்மூலமாக்கப்பட்டன.

ஆனால் அது துயரகரமான தோல்விகள், பிற்போக்குத்தனம் மற்றும் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தின் காலகட்டமாக மட்டும் இருக்கவில்லை. அது, மார்க்சிசத்தின் தொடர்ச்சியைப் பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தைப் போராட்டத்தில் வழி நடத்தக்கூடிய ஒரு சர்வதேச புரட்சிகரக் காரியாளர்களை அணிதிரட்டுவதற்கும் ஒரு தீர்க்கமான வீரமிக்க போராட்ட காலக்கட்டங்களில் ஒன்றாகவும் இருந்தது. நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தின் முதல் வார்த்தையில், “ஒட்டுமொத்தமாக உலக அரசியல் நிலைமை, முக்கியமாக, பாட்டாளி வர்க்க தலைமைக்கான வரலாற்று நெருக்கடியாகக் குணாம்சப்படுகிறது,” என்று அந்தக் காலகட்டத்தின் மிக முக்கிய படிப்பினையை ட்ரொட்ஸ்கி தொகுத்தளித்தார்.[3]

இந்த மதிப்பீட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு இன்று அடித்தளமாக விளங்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களைத் தொகுத்தளிப்பதற்கு எங்கள் விரிவுரை அர்ப்பணிக்கப்படும்.

பகுதி 1: அக்டோபர் புரட்சியும், இடது எதிர்ப்பு உருவாதலும்

1991 உடன் அக்டோபர் புரட்சி “இறந்துவிட்டது” என்றும், ஸ்ராலினிசம் தவிர்க்க முடியாதது என்றும் எரிக் ஹோப்ஸ்பாமின் கூற்றுக்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு வாதங்களில் தங்கியிருந்தன: முதலாவதாக, புரட்சி என்பது பெரிதும் கட்டுப்படுத்த முடியாத, தானியங்கி நிகழ்ச்சிப்போக்கு என்பதிலும், இரண்டாவதாக, அது எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தேசிய நிகழ்வு என்பதால், அது தனிமைப்பட்டே இருக்கும் என்பதிலும் தங்கி இருந்தன. ஜேர்மனியில் ஒரு புரட்சி “நடக்க இருந்தது” என்ற கருத்தை ஹோப்ஸ்பாம் நிராகரித்தார்: “ஒரு ஜேர்மன் அக்டோபர் புரட்சி, கவனத்திற்குரிய ஒன்றாக இருக்கவில்லை, ஆகவே அது காட்டிக்கொடுக்கப்பட வேண்டியதாக இருக்கவில்லை”[4] என்று எழுதினார்.

இந்தக் கூற்றுக்கள் பொய்களாகும். அக்டோபர் புரட்சி திடீரென வானத்தில் இருந்து இறங்கி வந்துவிடவில்லை. அது புறநிலையான மற்றும் அகநிலையான முன்நிபந்தனைகளைக் கொண்டிருந்தது. இவை இரண்டுமே, அடிப்படையில், ஒரு சர்வதேச தன்மையைக் கொண்டிருந்தன. அதன் சமூக-பொருளாதார அடித்தளத்தின் அர்த்தத்தில், அக்டோபர் புரட்சி, முதல் உலகப் போருக்கு வழிவகுத்த உலக ஏகாதிபத்திய அமைப்புமுறையின் அதே முரண்பாடுகளில் இருந்து எழுந்தது. ஆனால் அந்தப் புறநிலை முரண்பாடுகள் ரஷ்யாவில் புரட்சிகரப் போராட்டங்கள் உருவானதை பற்றி விளக்கமளிக்கூடியதாக இருந்தபோதிலும் அவை தொழிலாள வர்க்கத்தால் வெற்றிகரமாக அதிகாரத்தைக் கைப்பற்றியதைப்பற்றி விளக்கமளிக்கவில்லை.

அக்டோபர் புரட்சியின் இரண்டாம் ஆண்டுவிழாவில் லெனினும் ட்ரொட்ஸ்கியும்

1917 இல் ரஷ்யாவில் தொழிலாள வர்க்கம் எட்டிய அரசியல் நனவு மட்டம், “அதற்கு முந்தைய 70 ஆண்டுகளில் ஐரோப்பிய மற்றும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தினுள் நடந்த மார்க்சிசத்திற்கான நீடித்த வரலாற்றுப் போராட்டத்தின்”[5] நனவான விளைவாகும். அந்தப் போராட்டம், அந்தப் புரட்சியின் இரண்டு மாபெரும் தலைவர்களான லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் பணிகளில் அதன் உச்சபட்ச தத்துவார்த்த மற்றும் அரசியல் மட்டத்தை எட்டியது. அது இரண்டு முக்கிய கூறுபாடுகளை உள்ளடக்கி இருந்தது: முதலாவது, தேசிய சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான புரட்சிகர கட்சிக்காக லெனினின் போல்ஷிவிக்குகள் நடத்திய போராட்டமாகும்.

இரண்டாவது, ட்ரொட்ஸ்கி அபிவிருத்தி செய்த நிரந்தரப் புரட்சி கருத்துருவாகும். சமூகப் புரட்சி மற்றும் உலகப் பொருளாதாரத்தின் முந்தைய ஒட்டுமொத்த வளர்ச்சியினது ஒரு வரலாற்று மதிப்பீட்டின் அடிப்படையில், ட்ரொட்ஸ்கி, நம் சகாப்தத்தில், ரஷ்யா போன்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாட்டில் கூட, தொழிலாள வர்க்கம் மட்டுமே புரட்சிகர வர்க்கமாகும், அது புரட்சியை வழிநடத்தி முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் பணிகளை பூர்த்திசெய்யும் ஆற்றல் கொண்டுள்ளது என்பதை உணர்ந்துகொண்டார். 1905 புரட்சியின் போது, அவர் பின்வருமாறு எழுதினார்:

எல்லா நாடுகளையும் அதன் உற்பத்தி முறை மற்றும் வணிகத்துடன் ஒன்றிணைத்து, முதலாளித்துவம் ஒட்டுமொத்த உலகையும் ஒரே பொருளாதார மற்றும் அரசியல் அலகாக மாற்றியுள்ளது. ... இப்போது கட்டவிழ்ந்து வரும் சம்பவங்களுக்கு, இது உடனடியாக ஒரு சர்வதேச தன்மையை வழங்குவதுடன், பரந்த வாய்ப்புகளைத் திறந்து விடுகிறது. தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ரஷ்யாவின் அரசியல் விடுதலை, இந்த வர்க்கத்தை வரலாற்றில் இதுவரை அறிந்திராத உயரத்திற்கு அதை உயர்த்தி, அதற்கு பிரமாண்டமான அதிகாரத்தையும் வளங்களையும் கைமாற்றும் என்பதோடு, உலக முதலாளித்துவத்தைத் தூக்கியெறியும் சக்தியாக அதை உருவாக்கும். இதற்கான அனைத்து புறநிலைமைகளையும் வரலாறு உருவாக்கி உள்ளது.[6]

ஆனால் ஒரு விவசாய நாட்டில் தொழிலாள வர்க்க சர்வாதிகாரத்திற்கு இடையிலான முரண்பாடுகளை, உலகளவில் புரட்சியை விரிவாக்குவதன் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும். ரஷ்யாவில் புரட்சியின் தலைவிதி, முதன்மையாக உலக அரங்கில் தீர்மானிக்கப்படும்.

சோசலிசப் புரட்சியின் இயக்கவியல் பற்றிய இந்த மூலோபாயக் கருத்துரு, 1917 இல் அக்டோபர் புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் மற்றும் 1922 டிசம்பரில் சோவியத் ஒன்றியத்தை ஸ்தாபிப்பதற்கும் அடிப்படையாக இருந்தது. ஆனால் போல்ஷிவிக்குகளின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, ஐரோப்பியத் தொழிலாள வர்க்கம் அனைத்திற்கும் மேலாக அது சமூக ஜனநாயகத்தின் காட்டிக்கொடுப்புகளின் விளைவாக அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை. குறிப்பாக ஜேர்மனியில் 1918-1919 இல், ஹங்கேரியில் 1919 இல் மற்றும் இத்தாலியில் 1919 இல் நடந்தவை போன்ற பல புரட்சிகர இயக்கங்கள் இரத்த ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டன.

வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச வரைபடம், 1917-1923 [WSWS ஊடகத்திற்காக டேவிட் பென்சன்] [Photo: David Benson/WSWS]

பொருளாதார ரீதியாக சீரழிவுக்கு உள்ளான சோவியத் குடியரசு, எதிர்பாராத விதமாக முதலாளித்துவச் சுற்றி வளைப்பில் தனிமைப்படுத்தப்பட்டது. புதிய பொருளாதாரக் கொள்கை (1921) என்றழைக்கப்பட்டதன் மூலம், சோவியத் அரசாங்கம் ஒரு குறிப்பிடத்தக்க பின்வாங்கலைத் தொடங்க நிர்பந்திக்கப்பட்டது. அப்போதைய அந்த நிலைமைகளின் கீழ் அவசியமாக இருந்த அந்தக் கொள்கை, சோவியத் சமுதாயத்திற்குள் முதலாளித்துவ சக்திகள் பலமடைய பங்களிப்பு செய்தது. விடயங்களை இன்னும் கடினமாக்கும் விதத்தில், கட்சியில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவரான லெனின், 1922 இல் கடுமையாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். கட்சிக்குள் வளர்ந்து வந்த அதிகாரத்துவ மற்றும் தேசியவாதப் போக்குகளுக்கு எதிராக அவரால் ஒரு போராட்டத்தைத் தொடங்க முடிந்திருந்தது என்றாலும், ஜனவரி 1924 இல் அவர் அகால மரணமடைந்தார்.

டிசம்பர் 1922 இல் சோவியத் ஒன்றியம் நிறுவப்பட்ட போது. [WSWS ஊடகத்திற்காக டேவிட் பென்சன்] [Photo: David Benson/WSWS]

கட்சி தலைமைக்குள் அதிகரித்தளவில் பலமடைந்து வந்த ஒரு தேசிய சந்தர்ப்பவாத அணிக்கும், ட்ரொட்ஸ்கி மற்றும் லெனின் தலைமையிலான மார்க்சிச இடது அணிக்கும் இடையே தொடங்கி இருந்த ஒரு நீண்ட போராட்டம், 1923 ஜேர்மன் அக்டோபரின் உருக்குலைவின் சூழலில் பகிரங்கமாக வெடித்தது. கட்சியின் கொள்கைகளை மறுசீரமைக்கும் நோக்கில், ட்ரொட்ஸ்கியும் கட்சிக்குள் இருந்த சர்வதேசவாத புரட்சிகர அணியும் இப்போது ஒரு பகிரங்கமான போராட்டத்தை முன்னெடுத்தது. உள்கட்சி ஜனநாயகத்தின் அவசியம் குறித்த ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலுக்கும், அரசு தொழில்துறையின் திட்டமிடல் மற்றும் பலப்படுத்தலைப் பாரியளவில் வலியுறுத்திய அவரது அழைப்பிற்கும் தங்கள் அரசியல் ஆதரவைத் தெரிவித்து, அக்டோபர் 15, 1923 இல், 46 நீண்டகால அல்லது அனுபவம்வாய்ந்த போல்ஷிவிக்குகள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர்.

இடது எதிர்ப்பின் போராட்டத்திற்கு ட்ரொட்ஸ்கி முன்னெடுத்த அணுகுமுறை, சோசலிசப் புரட்சியில் மார்க்சிச தலைமையின் பாத்திரத்தை அவரும் லெனினும் வளர்த்தெடுத்த கருத்துருவின் அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். லியோன் ட்ரொட்ஸ்கியும் மார்க்சிசத்தின் வளர்ச்சியும் என்ற கட்டுரையில் டேவிட் நோர்த் குறிப்பிடுகையில், 1914 இல் இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சியில் இருந்தும் மற்றும் 1917 இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்தும் கிடைத்த அனுபவங்கள் அதில் ஈடுபடுத்தப்பட்டன என்று விவரித்தார்.

ஒரு புதிய வரலாற்று உள்ளடக்கத்தில் … காரியாளர்களைப் பயிற்றுவிப்பது குறித்த மற்றும் கம்யூனிச அகிலம் வகிக்கும் பாத்திரம் குறித்த கருத்துரு புறநிலை பொருளாதார சக்திகள் மற்றும் சமூக முரண்பாடுகளின் தவிர்க்கவியலாத அருவமான செயல்பாடுகளிடம் சோசலிசப் புரட்சியை விட்டுவிடமுடியாது என்ற அடிப்படை முன்முடிவில் இருந்து கம்யூனிச அகிலம் முன்நகர்ந்தது. மூன்றாம் அகிலத்தின் புரட்சிகரக் கட்சிகளின் தலைவர்கள் ... அவர்களின் அகநிலை நடைமுறையானது முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதற்கு வழிவகுத்த வரலாற்று நிகழ்வுகளின் சங்கிலியில் ஒரு தீர்க்கமான புறநிலைரீதியான இணைப்பு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டியிருந்தது.[7]

இந்த அடிப்படை கருத்துரு, 1917 க்கும் 1923 க்கும் இடையே தொழிலாள வர்க்கம் அடைந்த தோல்விகளால், எதிர்மறையாக, நிரூபிக்கப்பட்டது. 1917 இன் போல்ஷிவிக்குகளுடன் ஒப்பிட்டால், ஒரு புரட்சிகரத் தலைமை இல்லாததே, அந்தத் தோல்விகளுக்கான முக்கிய காரணமாக இருந்தது. 1924 இல் ட்ரொட்ஸ்கி பின்வரும் தீர்மானத்தை அறிவித்தார்:

வரலாறு, இயந்திரத்தனமாகப் புரட்சிக்கான நிலைமைகளை உருவாக்கி, அதன் பின்னர் கட்சி கேட்கும்போது, எந்த நேரத்திலும், அவற்றை தட்டில் முன்வைத்து தரும் என்று நினைக்க முடியாது: இதைக் கவனத்தில் கொண்டு, தயவுசெய்து ஒப்புக் கொள்ளுங்கள். அவ்வாறு நடக்காது. ஒரு வர்க்கம், ஒரு நீண்ட நெடிய போராட்டத்தின் போது, ஒரு முன்னணிப் படையை உருவாக்க வேண்டும், அது ஒரு சூழ்நிலையில் அதன் வழியைக் காண முடியும், சூழ்நிலை கதவைத் தட்டும்போது புரட்சியை அது அடையாளம் காணும், தேவையான தருணத்தில் பிரச்சினையைக் கையாளும் ஒரு கலையாக அது கிளர்ச்சியின் பிரச்சினைப் புரிந்து கொண்டு, ஒரு திட்டத்தை உருவாக்கி, வகிக்க வேண்டிய பாத்திரங்களை அவரவருக்கு வழங்கி, முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஓர் ஈவிரக்கமற்ற அடியைக் கொடுக்கும்.[8]

1917 புரட்சியின் போது போல்ஷிவிக் கட்சிக்குள் நடந்த அரசியல் போராட்டம் மீதான ஒரு மதிப்பாய்வாக, அக்டோபரின் படிப்பினைகள் என்ற படைப்பில், ட்ரொட்ஸ்கி அந்தப் பகுப்பாய்வைக் கூடுதலாக அபிவிருத்தி செய்தார். அந்த நேரத்தில், கிரிகோர் சினோவியேவ் (Grigory Zinoviev), லெவ் கமெனெவ் (Lev Kamenev) மற்றும் ஜோசப் ஸ்ராலின் (Joseph Stalin) ஆகியோர் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சிக்கான நிலைமைகள் போதுமானளவில் “முதிர்ச்சி” அடையவில்லை என்று வாதிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதை எதிர்த்த ஒரு கன்னைக்குத் தலைமை தாங்கினர். அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்டு வந்த கூர்மையான மாற்றங்களின் நிலைமைகளின் கீழ், முதலாளித்துவப் பொதுக் கருத்தை மற்றும் தேசிய போக்குகளை ஏற்பதற்கான அழுத்தங்கள் தவிர்க்க முடியாதவை என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். ஒரு புரட்சிகர கட்சி, வர்க்க விரோத சக்திகளின் அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும். கட்சி அதன் வர்க்கத்தின் வரலாற்றுக் கடமைகளை ஒட்டி நடப்பதை உறுதிப்படுத்த, அத்தகைய அழுத்தங்களை எதிர்த்துப் போராடுவதே ஒரு கட்சித் தலைமைக்கு விடுக்கப்பட்ட சவாலாக இருக்கும். இல்லையென்றால், அக்கட்சி “மற்ற வர்க்கங்களின் மறைமுக கருவியாகி விடும் அபாயம் உள்ளது,”[9] என்று ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்.

1927 இல் இடது எதிர்ப்பின் உறுப்பினர்கள். (முதல் வரிசையில் இடமிருந்து) லியோனிட் செரிப்ரியாகோவ், கார்ல் ரடெக், லியோன் ட்ரொட்ஸ்கி, மிக்கைல் போகஸ்லாவ்ஸ்கி, யெவ்ஜெனி ப்ரீபிரஜென்ஸ்கி; (பின்வரிசையில்) கிறிஸ்டியன் ராக்கோவ்ஸ்கி, ஜேக்கப் ட்ரோப்னிஸ், அலெக்சாண்டர் பெலோபோரோடோவ் மற்றும் லெவ் சோஸ்னோவ்ஸ்கி

இப்போது ஸ்ராலின், சினோவியேவ் மற்றும் கமெனெவ் ஆளுமையில் இருந்த கட்சித் தலைமை, ட்ரொட்ஸ்கிக்கும் நிரந்தரப் புரட்சிக்கும் எதிரான ஒரு எரிச்சலூட்டும் பிரச்சாரத்துடன் அக்டோபர் 1924 இல் வெளியிடப்பட்ட அக்டோபரின் படிப்பினைகள் படைப்புக்கு விடையிறுத்தது. இந்த நடவடிக்கையின் போக்கில், போல்ஷிவிக் கட்சி மற்றும் 1917 புரட்சியின் ஒட்டுமொத்த வரலாறும் திட்டமிட்டு பொய்மைப்படுத்தப்பட்டது. ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றாமலேயே, ரஷ்யாவில் “தனியொரு நாட்டில் சோசலிசத்தை” கட்டியெழுப்புவது சாத்தியம் என்ற கருத்துருவை ஸ்ராலின் 1924 டிசம்பரில் விவரித்தார். இந்த மார்க்சிச-விரோத மற்றும் தேசியவாத தத்துவம், அக்டோபர் புரட்சிக்கு எதிரான ஸ்ராலினிச பிற்போக்குத்தனத்திற்கு அரசியல் அடித்தளமாக உருவாக இருந்தது.

1923-1924 இல் அவர் ஏன் அரசியல் அதிகாரத்தை இழந்தார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட போதெல்லாம், ட்ரொட்ஸ்கி எப்போதுமே, விஷயங்களை “அதிகாரத்திற்கான” மோதலாகவும் தனிநபர்களின் வேறுபட்ட குணநலன்களுக்கு இடையிலான மோதலாகவும் குறைக்கும் விதமான அகநிலைரீதியான விளக்கங்களை நிராகரித்தார். போல்ஷிவிக் தலைமையின் அரசியல் நோக்குநிலையில் இருந்த மாற்றத்திற்கும் மற்றும் கட்சியின் சீரழிவுக்கும் அடியில், சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் சமநிலையில் ஆழமான மாற்றங்கள் இருந்தன, அவை சோவியத் ஒன்றியத்தின் அரசியல் மற்றும் சமூக உறவுகளில் ஓர் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன.

சர்வதேசப் புரட்சி தாமதமானதால், அது எண்ணிக்கையிலும் பொருளாதார ரீதியிலும் பலவீனமாக இருந்த சோவியத் தொழிலாள வர்க்கத்தில் ஏமாற்றமான மனநிலையை வளர்த்தது. அதே நேரத்தில், இந்தத் தோல்விகளும் அதன் விளைவாக ஏற்பட்ட சர்வதேச தனிமைப்படுத்தலும், வேகமாக வளர்ந்து கொண்டிருந்த மற்றும் கட்சித் தலைமைக்குள் தேசியரீதியில் நோக்குநிலை ஏற்றிருந்த சக்திகளால், அதிகரித்தளவில் வெளிப்படுத்தப்பட்ட அதிகாரத்துவத்தின் நிலைப்பாடுகளை உறுதிப்படுத்தின. ட்ரொட்ஸ்கி பின்னர் அந்த அரசியல் மற்றும் சமூக-உளவியல் நிகழ்ச்சிப்போக்குகளைப் பின்வருமாறு விளக்கினார்:

“எல்லாமும் எப்போதும் புரட்சிக்காக அல்ல, மாறாக தனக்காகவும் ஏதாவது வேண்டும்” என்ற உணர்வு, “நிரந்தரப் புரட்சி ஒழிக” என்று மாற்றப்பட்டது. மார்க்சிசத்தின் உறுதியான தத்துவார்த்த கோரிக்கைகளுக்கும், புரட்சியின் உறுதியான அரசியல் கோரிக்கைகளுக்கும் எதிரான கிளர்ச்சி, அந்த மக்களின் பார்வையில், படிப்படியாக “ட்ரொட்ஸ்கிசத்திற்கு” எதிரான போராட்டத்தின் வடிவை எடுத்தது. இந்த பதாகையின் கீழ் தான், அந்த போல்ஷிவிக் பிலிஸ்டைனை விடுவிக்க செயல்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இதனால் தான் நான் அதிகாரத்தை இழந்தேன், இது தான் இழப்பின் வடிவத்தை தீர்மானித்தது.[10]

சோவியத் அதிகாரத்துவத்தின் வளர்ச்சி, சோவியத் கட்சி ஆளுமை செலுத்திய மூன்றாம் அகிலத்தின் (Comintern) நோக்குநிலையில் ஏற்பட்டிருந்த ஆழ்ந்த மாற்றத்தையும் அடிக்கோடிட்டு காட்டியது. டிசம்பர் 1925 இல், போல்ஷிவிக் கட்சி உத்தியோகபூர்வமாக “தனியொரு நாட்டில் சோசலிசத்தை” கட்டியெழுப்பும் தேசியவாத வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது. இந்த நோக்குநிலை, வெளிப்படையாகவே, சோவியத் ஒன்றியத்திற்கும் முதலாளித்துவ நாடுகளுக்கும் இடையே “சமாதான சகவாழ்வு காலம்” தொடங்கி விட்டது என்ற கருத்துருவுடன் சேர்ந்திருந்தது. அதிகாரத்துவத்தின் நிலைப்பாட்டில் இருந்து, மூன்றாம் அகிலத்தின் முக்கிய பணி, முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதில் தொழிலாள வர்க்கப் போராட்டத்தை வழிநடத்துவதில்லை என்று அதிகரித்தளவில் மாறியிருந்தது. மாறாக, ஸ்ராலின் குறிப்பிட்டதைப் போல, முதலாளித்துவ வர்க்கத்தை “நடுநிலைப்படுத்தி,” சோவியத் ஒன்றியம் மீது இராணுவத் தாக்குதல்களுக்கான சாத்தியக்கூறு இருந்தால் அதைத் தடுப்பதே அதன் பணி என்றாகி இருந்தது.

இந்த தேசிய நோக்குநிலை, தொழிலாள வர்க்கத்தின் பேரழிவுகரமான தோல்விகளுக்கு வழிவகுத்தது. மே 1926 இல் பிரிட்டன் பொது வேலைநிறுத்தத்தின் தோல்வியே ஸ்ராலினிசத்தின் முதல் பெரிய காட்டிக்கொடுப்பாகும். ஸ்ராலினிச தலைமை, மிக முக்கிய ஏகாதிபத்திய நாடுகளில் ஒன்றில் தொழிலாள வர்க்கத்தின் சக்தி வாய்ந்த ஓர் இயக்கத்தை தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தவாதிகளுக்கு அடிபணியச் செய்தது. 1925-1927 சீனப் புரட்சி, இரண்டாவது பெரிய காட்டிக்கொடுப்பாக இருந்தது.

1917 இல் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியமை, நிரந்தரப் புரட்சியையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான புரட்சிகர கட்சியின் போராட்டத்தையும் வெற்றிகரமாக உறுதிப்படுத்தியது என்றால், சீனப் புரட்சி அவற்றைத் துயரகரமாக தோல்வியில் உறுதிப்படுத்தியது.

1925-1926 இல், சீனாவில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒரு மாபெரும் புரட்சிகர இயக்கம் உருவெடுத்தது. இருப்பினும், பெருந்திரளான ஏழை விவசாயிகளின் ஆதரவுடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகச் சீனத் தொழிலாள வர்க்கத்தையும் அதன் தலைமையையும் தயார்படுத்துவதற்குப் பதிலாக, ஸ்ராலினிசமயப்பட்ட மூன்றாம் அகிலம், தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சியான கோமின்டாங்கின் நலன்களுக்கு ஏற்ப சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் அடிபணிய செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்றது. கோமின்டாங்கை விமர்சிக்கவோ அல்லது ஒரு சுயாதீனமான பத்திரிகையை நடத்தவோ கூட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) அனுமதிக்கப்படவில்லை.

இந்த வர்க்க ஒத்துழைப்புவாதக் கொள்கை, “இரண்டு கட்ட” புரட்சிக்கான பழைய மென்ஷிவிக் கருத்துருவைப் புதுப்பிப்பதன் அடிப்படையில் இருந்தது. இந்தக் கருத்துருவின் அடிப்படையில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடுகளின் தொழிலாள வர்க்கம், முதலில் முதலாளித்துவத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வர உதவ வேண்டும் என்றும், முதலாளித்துவ வளர்ச்சியின் நீண்ட காலக்கட்டத்திற்குப் பின்னர், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பலாம் என்றும், சீனாவைப் பொறுத்த வரை, ஏகாதிபத்திய ஒடுக்குமுறை தொழிலாள வர்க்கம், விவசாயிகள், நகர்ப்புற குட்டி முதலாளித்துவம் மற்றும் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஆகிய “நான்கு வர்க்கங்களின் கூட்டு என்ற” கூட்டணிக்கான அடித்தளத்தை அமைக்கும் என்றும் ஸ்ராலின் வாதிட்டார். ஆனால் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு விளக்கினார்:

ஏகாதிபத்தியம் வெளியில் இருந்து தானாகவே சீனாவின் எல்லா வர்க்கங்களையும் ஒருங்கிணைக்கும் என நினைப்பது மிகப் பெரிய தவறு. … ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால், முதலாளித்துவ வர்க்கத்திற்கும் பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் பலவீனமடைவதில்லை, மாறாக ஒவ்வொரு தீவிர மோதலிலும் இரத்தந்தோய்ந்த உள்நாட்டுப் போர் ஏற்படும் நிலைக்கு, ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால் அது கூர்மைப்படுத்தப்படுகிறது.[11]

மூன்றாம் அகிலத்தின் அரசியல் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியது. ஏப்ரல் 1927 இல், கோமின்டாங் தலைவர் சியாங் கேய்-ஷேக் ஷங்காயில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு சதியை நடத்தியதுடன், பத்தாயிரக் கணக்கான சீனத் தொழிலாளர்களையும் கம்யூனிஸ்டுகளையும் படுகொலை செய்தார்.

ஏப்ரல் 1927 இல் ஷங்காயில் பொது வெளியில் கம்யூனிஸ்ட் ஒருவரின் தலை துண்டிக்கப்படுகிறது

சர்வதேச புரட்சிக்கு ஏற்பட்ட இந்தப் புதிய பின்னடைவு, சோவியத் தொழிலாள வர்க்கத்தின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், பழமைவாதம் மற்றும் விரக்தி மனநிலைகளை உண்டாக்கியது, அதேவேளையில் அதிகாரத்துவத்தின் சமூக மற்றும் அரசியல் நிலையை மீள வலுப்படுத்தியது. டிசம்பர் 1927 இல் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் 15வது மாநாட்டில், இடது எதிர்ப்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு சில வாரங்களில், ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பில் இருந்த கிட்டத்தட்ட அனைத்து தலைவர்களும் நாடு கடத்தப்பட்டனர். 1928 முழுவதும், ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு, கைது செய்யப்பட்டு மற்றும் நாடு கடத்தப்பட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவங்களுக்கு ட்ரொட்ஸ்கியின் பிரதான விடையிறுப்பு, தொழிலாள வர்க்கம் கடந்து வந்திருந்த மூலோபாய அனுபவங்களை முறையாக மதிப்பாய்வு செய்வதாக இருந்தது. இதன் விளைவாக வந்த ஆவணம், அதாவது மூன்றாம் அகிலத்தின் 6 ஆவது மாநாட்டுக்கான வரைவு வேலைத்திட்டம் மீதான அவரது விமர்சனம், நம் வரலாற்று முன்னோக்கிற்கு மட்டுமல்ல, ICFI மற்றும் WSWS இன் அரசியல் பகுப்பாய்வு மற்றும் வளர்ச்சிக்காக நாம் எடுக்கும் அணுகுமுறைக்கும் அடித்தளமாகத் தங்கி உள்ளது.

மார்க்சிசத்தை தேசியவாத ரீதியில் ஸ்ராலினிசம் மாற்றியதன் மீதான ட்ரொட்ஸ்கியின் மறுப்புரை, நம் சகாப்தத்தை ஏகாதிபத்திய போர் மற்றும் சோசலிச புரட்சியின் சகாப்தமாக எடுத்துக்காட்டிய அவருடைய மூலோபாய வரையறை மீதான வலியுறுத்தலை மையத்தில் வைத்திருந்தது. உலகப் பொருளாதாரத்தின் மற்றும் நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் அத்துடன் புற சூழ்நிலையில் கூர்மையான மாற்றங்களால் குணாம்சப்பட்ட இந்த சகாப்தத்தில், புரட்சிகர தலைமை வகிக்கும் பாத்திரம் பிரத்யேக முக்கியத்துவம் கொண்டிருந்தது. ஆகவே, அந்தத் தலைமையின் சரியான மூலோபாய மற்றும் வேலைத்திட்ட நோக்குநிலை பற்றிய கேள்வி தீர்க்கமானதாக இருந்தது. ட்ரொட்ஸ்கி, அகிலத்தின் அரசியல் நோக்குநிலைக்கு அடித்தளத்தில் இருந்த அடிப்படை சர்வதேச கோட்பாடுகளைப் பின்வருமாறு தொகுத்தளித்தார்:

சர்வதேச வேலைத்திட்டமானது, உலகப் பொருளாதார உலக அரசியல் அமைப்பை முழுமையாகக் கொண்டதாகவும், நிலைமைகளின் போக்குகளின் அவற்றின் அனைத்துத் தொடர்புகளையும் முரண்பாடுகளையும் அதாவது அதன் தனிப் பகுதிகள் பரஸ்பர ரீதியாகப் பகைமையுடன் ஒன்றிலொன்று தங்கியுள்ள நிலைமைகள் பற்றிய ஆய்விலிருந்தே நேரடியாக ஆரம்பிக்க வேண்டும் … தற்போதைய சகாப்தத்தில், பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலையானது, கடந்த காலத்தைவிட மிக அதிக அளவில் ஒரு உலக நோக்குநிலையிலிருந்தே ஊற்றெடுக்க வேண்டும்; ஊற்றெடுக்க முடியும், எதிர்மாறாக அல்ல. இங்கேதான் கம்யூனிச சர்வதேசியத்திற்கும் தேசிய சோசலிசத்தின் அனைத்து வகையறாக்களுக்கும் இடையிலான அடிப்படையான பிரதானமான வேறுபாடு இருக்கின்றது. [12]

தற்செயலாக, 1928 கோடையில் மாஸ்கோவில் நடந்த மூன்றாம் அகிலத்தின் மாநாட்டில் அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதியாகக் கலந்து கொண்ட ஜேம்ஸ் பி. கனன், இந்த ஆவணத்தின் ஒரு நகலைப் பெற்று, அதை ஆய்வுக்கு உட்படுத்தி, சோவியத் ஒன்றியத்தில் இருந்து தெரியாமல் வெளியே எடுத்து வந்தார். இதிலிருந்து அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கம் உருவெடுத்து, சர்வதேச இடது எதிர்ப்பின் அமைப்பு ரீதியான பணிகள் தொடங்கின.

1922 இல் மாஸ்கோவில் ஜேம்ஸ் பி. கனன் (நடுவில் இருப்பவர்), இவருடன் “பிக் பில்” ஹேவுட் (வலதுபுறம் இருப்பவர்), மற்றும் மக்ஸ் ஈஸ்ட்மன் உள்ளனர்.

ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புகள் மற்றும் இடது எதிர்ப்பு மீது அதிகரித்தளவில் வன்முறையான ஒடுக்குமுறைக்கு மத்தியிலும், ட்ரொட்ஸ்கி இந்தக் காலகட்டம் நெடுகிலும், சோவியத் கட்சி மற்றும் மூன்றாம் அகிலத்தைச் சீர்திருத்துவதை நோக்கியே எதிர்ப்பு அணி நோக்குநிலைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் அரசியல் பேரழிவுகளில் ஒன்றாக, ஜேர்மனியில் ஹிட்லர் பதவிக்கு வந்ததற்கு விடையிறுப்பாக மட்டுமே இந்தப் போக்கு மாற்றப்பட்டது.

பகுதி 2: 1933, பாசிசத்திற்கு எதிரான போராட்டமும், பிரான்சிலும் ஸ்பெயினிலும் மக்கள் முன்னணிவாதத்தின் துரோகமும்

“ஜேர்மன் பேரழிவில்” ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியும் (KPD) ஒட்டுமொத்த மூன்றாம் அகிலமும் (Comintern) வகித்த மிக அழிவுகரமான பாத்திரம், ஒரு புதிய, நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதை அவசியமாக்கியது. இந்த புதிய நோக்குநிலை, துன்பகரமான நிகழ்வுகளுக்கு ஓர் அகநிலை எதிர்வினையாக அல்ல, மாறாக வரலாற்று வளர்ச்சி குறித்தும் ஸ்ராலினிசத்தின் பங்கு குறித்தும் செய்யப்பட்ட புறநிலையான பகுப்பாய்வின் அடிப்படையில் இருந்தது.

ஜேர்மன் பேரழிவுக்கு இட்டுச் சென்ற அதிகாரத்திற்கான போராட்டத்தில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டும் ஓர் ஐக்கிய முன்னணி கொள்கைக்காக ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி போராட மறுத்தது.

நிச்சயமாக, ஹோப்ஸ்பாம் இதை “அனுமானம்” என்று கண்டிக்கலாம், ஆனால் ஹிட்லரைத் தடுத்திருக்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கவில்லை. 6 மில்லியன் சோசலிச மற்றும் கம்யூனிச தொழிலாளர்களுடன், உலகிலேயே மிகப் பெரியளவில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களின் இயக்கம் ஜேர்மனியில் இருந்தது. அது போராடுவதற்கான அதன் விருப்பத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை எடுத்துக்காட்டி இருந்ததுடன், நிறைவான மார்க்சிச வரலாற்றைக் கொண்டிருந்தது. தொழிலாளர்கள் ஹிட்லரை எதிர்க்க தயாராக இருந்தனர். நவம்பர் 1932 இல் கடைசியாக ஓரளவு சுதந்திரமாக நடந்த தேர்தல்களில், இரண்டு பெரிய தொழிலாள வர்க்கக் கட்சிகளான சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) கம்யூனிஸ்ட் கட்சியும் மொத்தமாக 37.3 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தன. இது 33.1 சதவீதத்தை பெற்ற ஹிட்லரின் NSDAP இன் வாக்குகளை விட அதிகமாகும். உத்தியோகபூர்வ தேர்தல்கள், உண்மையான அதிகார சமநிலையின் ஒரு பலவீனமான பிரதிபலிப்பு மட்டுமே ஆகும்.

மார்ச் 21, 1933, பொட்ஸ்டாம் தினத்தில், ஜேர்மன் ஜனாதிபதி பௌல் வொன் ஹின்டன்பேர்க் (வலதுபுறம் இருப்பவர்) நாஜி தலைவர் அடோல்ஃப் ஹிட்லர் ஜேர்மன் சான்சிலராக நியமிக்கப்படுவதை ஆமோதிக்கிறார். [Photo by Theo Eisenhart/Bundesarchiv, Bild 183-S38324 / CC BY-NC-SA 3.0]

ஆனால் பாசிசத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்குப் பதிலாக, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD), சமூக ஜனநாயகத்தைப் பாசிசத்துடன் ஒப்பிட்டு, ஓர் அதிதீவிர இடதுசாரி நிலைப்பாட்டை எடுத்து, அவ்விதத்தில் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி குழப்பத்தில் ஆழ்த்தியதுடன், குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும் பகுதிகளை ஹிட்லரின் பாசிச வார்த்தையாடல்களிடம் கையளித்தது. ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த நிகழ்ச்சிப்போக்கில், பாசிச ஆபத்திற்கு எதிராக சமூக ஜனநாயகக் கட்சியுடன் எந்த விதத்திலும் ஒத்துழைக்க மறுத்தது மட்டுமல்லாது, சில சந்தர்ப்பங்களில், நாஜிக்களுடன் பொதுவான பாதையையும் கூட எடுத்தது. 1931 இல் புரூஷ்சியாவின் ஜேர்மன் அரசில் இருந்து SPD தலைமையிலான அரசாங்கத்தை வெளியேற்ற, NSDAP தொடங்கிய “சிவப்பு வெகுஜன வாக்கெடுப்பை” ஆதரித்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு மிகவும் மதிப்பிழந்த ஒன்றாகும்.

ஐக்கிய முன்னணி கொள்கையின் அரசியல் இலக்குகள் மற்றும் முக்கியத்துவத்தை விளக்கி, மே 1933 இல் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

கம்யூனிஸ்ட் கட்சியின் எந்தக் கொள்கையும், நிச்சயமாக, சமூக ஜனநாயகத்தைப் புரட்சியின் ஒரு கட்சியாக மாற்றிவிட முடியாது. மாறாக அது அதன் நோக்கமாகவும் இருக்கவில்லை. பாசிசத்தைப் பலவீனப்படுத்தவும், அதே நேரத்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் இயலாமையைத் தொழிலாளர்களுக்கு அம்பலப்படுத்துவதன் மூலம் சீர்திருத்தவாதத்தைப் பலவீனப்படுத்தவும், சீர்திருத்தவாதத்திற்கும் பாசிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டினை முற்றாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியமாக இருந்தது. இந்த இரண்டு பணிகளும் இயல்பாகவே ஒன்றோடொன்று பிணைந்துள்ளன. மூன்றாம் அகிலத்தின் அதிகாரத்துவத்தின் கொள்கை எதிர்விளைவுக்கு வழிவகுத்தது. அதாவது, சீர்திருத்தவாதிகளின் சரணாகதியானது, அது கம்யூனிசத்தின் நலன்களுக்கு அல்ல, பாசிசத்தின் நலன்களுக்கு சேவையாற்றியது; சமூக ஜனநாயகக் கட்சித் தொழிலாளர்கள் தங்கள் தலைவர்களுடன் தங்கி இருந்தனர்; கம்யூனிஸ்ட் கட்சித் தொழிலாளர்கள் தங்கள் மீதும் மற்றும் தலைமையின் மீதும் நம்பிக்கை இழந்தனர்.[13]

மூன்றாம் அகிலம், ஹிட்லர் அதிகாரத்திற்கு வர வழிவகுத்த கொள்கைகளை மட்டும் நடைமுறைப்படுத்தவில்லை, மாறாக அது அந்த சம்பவங்கள் மீது எந்தவொரு முக்கிய விவாதத்திற்கும் தடை விதித்தது. மூன்றாம் அகிலம் வரலாற்று ரீதியில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர அமைப்பாக இருக்கவில்லை என்பதேயே இது அர்த்தப்படுத்தியது. 1914 இல் சமூக ஜனநாயகக் கட்சி போலவே, ஸ்ராலினிசமும் இறுதியில் முதலாளித்துவ எதிர்புரட்சிகர முகாமுக்குள் சென்று விட்டது.

அவசியமான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. இதற்குமேல், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கம்யூனிச அகிலத்தைச் சீர்திருத்த முயலும் முன்னோக்கு செல்லுபடியாவதாக இருக்கவில்லை. லியோன் ட்ரொட்ஸ்கியும் மார்க்சிசத்தின் வளர்ச்சியும் என்ற நூலில் டேவிட் நோர்த் குறிப்பிடுவது போல், “ஒன்றுதிரண்டிருந்த அரசியல் காட்டிக்கொடுப்புகளின் அளவானது ஸ்ராலினிசத்திலேயே பண்பு ரீதியிலான மாற்றத்தை உருவாக்கி இருந்தது. அது அதிகாரத்துவ மத்தியவாதத்தில் (bureaucratic centrism) இருந்து நனவுபூர்வமான எதிர்புரட்சிக்கு சென்றுவிட்டிருந்தது.”[14]

“கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஒரு புதிய அகிலத்தையும் கட்டியெழுப்ப” என்ற அவரின் முக்கிய வேலைத்திட்டக் கட்டுரையில், ட்ரொட்ஸ்கி இந்த “நோக்குநிலை மாற்றத்தை” குறித்து எழுதினார்:

அரசியலில் மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், நேற்றைய தினம் பொருத்தமானது, ஆனால் இன்று அனைத்து உள்ளடக்கமும் இல்லாமல் உள்ளது என்ற ஒருவரின் சொந்த சூத்திரத்திற்கு ஒருவர் தானே சிக்குவதுதான். [...] பாசிச பேரிடியால் கிளர்ந்தெழாத, மற்றும் அதிகாரத்துவத்தின் அதேபோன்ற மூர்க்கமான செயல்களுக்குப் பணிவுடன் அடிபணியும் ஓர் அமைப்பு, அவ்விதத்தில் அது உயிரற்றது என்பதையும், அதை ஒருபோதும் இனி மீட்டுயிர்ப்பிக்க முடியாது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. பாட்டாளி வர்க்கத்தையும் அதன் எதிர்காலத்தை நோக்கி இதை பகிரங்கமாகவும் நேரடியாகவும் கூறுவது நம் நேரடி கடமையாகும். இதை தொடர்ந்து நம் பணிகள் அனைத்திலும், உத்தியோகபூர்வ கம்யூனிச அகிலத்தின் வரலாற்று தோல்வியை நம் தொடக்கப் புள்ளியை எடுப்பது அவசியமாகும். [15]

அரசியல் மற்றும் வரலாற்று சூழலையும், அதிலிருந்து எழும் பணிகளையும் தெளிவுபடுத்துவதே ட்ரொட்ஸ்கியினது பணியின் மையத்தில் இருந்தது. இந்த அடித்தளத்தில் மட்டுமே இடது எதிர்ப்பைத் தொழிலாள வர்க்கத்தின் புதிய அரசியல் தலைமையாக வளர்த்தெடுக்க முடியும். ஒரு காரியாளரை வளர்த்தெடுப்பது என்பது, “வெறுமனே அமைப்பு ரீதியான பிரச்சினை அல்ல, அதுவொரு அரசியல் பிரச்சினை: காரியாளர்கள் ஒரு தீர்க்கமான முன்னோக்கின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறார்கள்,” என்று, “ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியா அல்லது புதிய கட்சியா” என்பதில் அவர் விவரித்தார்.

கட்சி சீர்திருத்தம் என்ற முழக்கத்தை மீண்டும் சூடேற்றுவது, தெரிந்தே ஒரு கற்பனாவாத நோக்கத்தை அமைத்து அதன் மூலம் நம் சொந்த காரியாளர்களைப் புதிய மற்றும் முன்பினும் கூர்மையான ஏமாற்றங்களை நோக்கி தள்ளுவதாகும். அத்தகைய ஒரு பாதையின் மூலம், இடது எதிர்ப்பு, இந்தச் சிதைந்து கொண்டிருக்கும் ஒரு கட்சியின் தொங்குதசையாக மட்டுமே ஆக முடியும் என்பதோடு, அதனுடன் சேர்ந்து காட்சியிலிருந்து மறைந்து விடும். [16]

சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச அதிகாரத்துவமும், ஸ்ராலினிசமயப்பட்ட மூன்றாம் அகிலமும் அப்போது முன்பினும் அதிக வெளிப்படையாகப் புரட்சியின் எதிர்ப்பாளர்களாகச் செயல்பட்ட வேளையில், ட்ரொட்ஸ்கியின் கொள்கை சர்வதேச வர்க்கப் போராட்டம் மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் வளர்ச்சியை நோக்கி நோக்குநிலை கொண்டிருந்தது. ட்ரொட்ஸ்கி, தொழிலாள வர்க்கத்தின் நனவை உயர்த்துவதற்கும், வரலாற்று நிலைமைகளின் தேவைகளுக்கு ஏற்ப அதைக் கொண்டு வருவதற்கும் ஒரு சரியான அரசியல் நிலைப்பாட்டை உருவாக்குவதில் அக்கறை கொண்டிருந்தார்.

முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே பாசிசத்தை எதிர்த்துப் போராட முடியும் என்பதை ஒட்டுமொத்த வரலாற்று அனுபவமும் எடுத்துக்காட்டுகிறது. பாசிசம் என்பது ஒரு தவறான அல்லது மோசமான கொள்கை அல்ல, மாறாக முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடிக்கு அது ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பாகும். ஜனவரி 1932 இல் “அடுத்து என்ன?” (What Next?) என்ற கட்டுரையில் ட்ரொட்ஸ்கி எழுதியது போல, “முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் ‘வழமையான’ பொலிஸ் மற்றும் இராணுவ வளங்களும், அவற்றின் நாடாளுமன்ற மூடுமறைப்புகளும், சமூகத்தை ஒரு சமநிலையில் வைத்திருக்க போதுமானதாக இல்லை என்னும் ஒரு தருணத்தில், பாசிச ஆட்சியை நோக்கிய திருப்பம் வருகிறது.” [17]

ஜேர்மனியில், மார்ச் 24, 1933 இல், அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் விதிவிலக்கின்றி ஹிட்லரின் அதிகாரத்தை வழங்கும் சட்டத்திற்கு (Enabling Act) ஆதரவாக வாக்களித்தன. அவ்விதத்தில் அவை நாஜி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்குச் “சட்ட” அடித்தளங்களை அமைத்தன. அவ்வாறு செய்ததன் மூலம், ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு இலக்குகளைப் பின்தொடர்ந்தது: முதலாவது, தொழிலாளர் இயக்கத்தை நசுக்குவது, இரண்டாவது, முதல் உலகப் போரின் பேரழிவிற்குப் பின்னர் மற்றொரு ஏகாதிபத்திய போருக்குத் தயாரிப்பு செய்வது.

“தேசிய சோசலிசம் என்றால் என்ன?” என்பதில் ட்ரொட்ஸ்கி இதைப் பின்வருமாறு விரிவாக விவரித்தார்:

பாசிச சர்வாதிகாரத்தின் உண்மையான வரலாற்று பணியான ஏகாதிபத்திய நலன்களுக்காக அனைத்து சக்திகளையும் மற்றும் மக்களின் ஆதார வளங்களையும் பலவந்தமாகத் திரட்டுவது போருக்கான தயாரிப்பு என்பதை அர்த்தப்படுத்துகிறது. மேலும் இந்த பணியானது, அதைத் தொடர்ந்து, உள் எதிர்ப்பு இல்லாமல், இயந்திர கதியில் அதிகாரத்தைக் கூடுதலாகத் திரட்டுவதற்கு இட்டுச் செல்கிறது. பாசிசத்தைச் சீர்திருத்த முடியாது அல்லது பாதையை விட்டு அகற்றிவிட முடியாது. அதை வீழ்த்த மட்டுமே முடியும். இந்த ஆட்சிமுறையின் அரசியல் சுற்றுவட்டம், போரா அல்லது புரட்சியா என்ற மாற்றீட்டைச் சார்ந்துள்ளது. [18]

ஜேர்மனியில் நாஜிக்களின் வெற்றிக்கு விடையிறுப்பாக, ஐரோப்பா முழுவதுமான தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் முதலாளித்துவம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பு மிகப் பெரியளவில் அதிகரித்தது. ஆனால் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தாக்குதல்கள் தோல்வியில் முடிந்தன. “மக்கள் முன்னணி” என்ற மூன்றாம் அகிலத்தின் கொள்கை, அதாவது சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் மட்டுமல்லாமல் முன்னணி முதலாளித்துவக் கட்சிகளுடனும் ஸ்ராலினிசமயப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒரு கூட்டணி என்ற மூன்றாம் அகிலத்தின் கொள்கையே இந்த தோல்விகளுக்கான காரணமாக இருந்தது. சித்தாந்த ரீதியாக, அது பாசிசத்திற்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக என்று வாதிட்டு ஸ்ராலினிசவாதிகள் இந்தக் கூட்டணியை நியாயப்படுத்தினார்கள். ஆனால், முக்கியமாக அது, தொழிலாளர்களின் புரட்சிகர விருப்பங்களுக்கு எதிராக முதலாளித்துவ நலன்களைப் பாதுகாப்பதாக இருந்தது.

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில், முதலாளித்துவ வர்க்கத்தின் ஜனநாயக அணியாகக் கூறிக் கொண்ட அணியை — அல்லது இன்று போலி-இடதுகள் கூறுவதைப் போல, “தீமையில் குறைந்தவர்களின்” அணியைத் தொழிலாள வர்க்கம் ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு எதிராக ட்ரொட்ஸ்கி போராடினார். அவர் தொழிலாள வர்க்கம் எதிர் கொண்டிருந்த மத்திய அரசியல் பிரச்சினைகள் மற்றும் பணிகளைத் தெளிவுபடுத்தும் நிலைப்பாட்டில் இருந்து அதைச் செய்தார்.

பிரான்சிஸ்கோ பிரான்கோ

“ஸ்பெயின் படிப்பினைகள்: இறுதி எச்சரிக்கை” என்ற கட்டுரையில் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

பாசிசம் என்பது ... நிலப்பிரபுத்துவம் அல்ல மாறாக முதலாளித்துவப் பிற்போக்குத்தனமாகும். முதலாளித்துவப் பிற்போக்குத்தனத்திற்கு எதிரான ஒரு வெற்றிகரமான போராட்டத்தைப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் சக்திகளைக் கொண்டும் அதன் வழிமுறைகளாலும் மட்டுமே நடத்த முடியும். முதலாளித்துவச் சிந்தனையின் ஒரு பிரிவான மென்ஷிவிசத்தில், இந்த உண்மைகள் பற்றிய எந்த உணர்வும் இல்லை மற்றும் இருக்கவும் முடியாது.

நான்காம் அகிலத்தின் இளம் பிரிவால் மட்டுமே தெளிவாக வெளிப்படுத்தப்பட்ட, போல்ஷிவிச கண்ணோட்டம், நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அதன் தொடக்க புள்ளியாகக் கொள்கிறது, குறிப்பிட்டு கூறுவதானால், அரை-நிலப்பிரபுத்துவ நில உடைமையைக் இல்லாதொழிப்பது போன்ற முற்றிலும் ஜனநாயகப் பிரச்சனைகளைக் கூட, பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றாமல் தீர்க்க முடியாது; இதனால் இது சோசலிசப் புரட்சியை நாளாந்த நிகழ்ச்சி நிரலில் கொண்டு வந்து நிறுத்துகிறது. [19]

ஸ்ராலினிச கட்சிகளுக்கும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கும் இடையே, அதாவது சீர்திருத்தவாத அரசியலுக்கும் மற்றும் புரட்சிகர அரசியலுக்கும் இடையே நடுவில் ஒரு வழியைக் காண முயன்ற மத்தியவாத அரசியல் போக்குகளுக்கு எதிரான, ஒரு தொடர்ச்சியான விவாதத்தில், ட்ரொட்ஸ்கி, தொழிலாள வர்க்கத்திற்குத் தேவையான புரட்சிகர முன்னோக்கையும் தலைமையையும் வளர்த்தெடுத்தார்.

“மத்தியவாதமும் நான்காம் அகிலமும்” என்ற அவரது கட்டுரையில், ட்ரொட்ஸ்கி ஓர் அரசியல் போக்காக மத்தியவாதத்தின் மிக முக்கிய அம்சங்களை விவரித்தார்: “தத்துவார்த்த ரீதியில், மத்தியவாதம் வரையறுக்கப்படாததும் பன்முகத்தன்மை கொண்டதுமாகும்; மார்க்சிச கோட்பாடு மட்டுமே புரட்சிகர திசையில் நடைமுறையைக் கொண்டு செல்ல முடியும் என்ற புரிதல் இல்லாமல், தத்துவத்தை விட ‘புரட்சிகர நடைமுறைக்கு’ முன்னுரிமை வழங்க அது இதுவரையில் சாத்தியமானளவுக்கு தத்துவார்த்தக் கடமைப்பாடுகளையும், (வார்த்தைகளில்) அதை நோக்கி சாய்வதையும் கூட தவிர்க்கிறது.” ஒரு மத்தியவாதி, “புரட்சிகரக் கோட்பாட்டை வெறுப்புடன் பார்க்கிறார்: உள்ளதை அவ்வாறே கூறிக்கொண்டு” மற்றும் “ஒரு கோட்பாட்டு ரீதியான கொள்கையைத் தனிப்பட்ட சூழ்ச்சி மற்றும் சிறிய அமைப்பு ரீதியான இராஜதந்திர நடவடிக்கைகளைக் கொண்டு பிரதியீடு செய்வதை” நோக்கி சாய்கிறார். “முடிவெடுக்க முடியாமல் குழப்பத்திலேயே ஊசலாடும் மத்தியவாதி, அடிக்கடி ‘குறுங்குழுவாத’ ஆபத்தைக் குறிப்பிட்டு அதை மூடிமறைக்கிறார். அதன் மூலம் அவர் ஒதுங்கி இருக்கும்-பிரச்சாரவாத செயலின்மையை அல்லாது கோட்பாடுகளின் தூய்மை, தெளிவான நிலைப்பாடு, அரசியல் பின்விளைவு, அமைப்பு ரீதியான முழுமைத் தன்மை பற்றி தீவிர கவலையை வெளிப்படுத்துகிறார்.” மேலும் “தற்போதைய சகாப்தத்தில் ஒரு தேசிய புரட்சிகரக் கட்சியை ஒரு சர்வதேச கட்சியின் ஒரு பகுதியாக மட்டுமே கட்டியெழுப்ப முடியும் என்பதை” அவர் புரிந்து கொள்ளவில்லை. [20]

1936 ஸ்பானிய உள்நாட்டுப் போரின் போது நடந்த சண்டை

ஸ்பெயினில் அராஜகவாத-சிண்டிக்கலிசவாதிகள் (anarcho-syndicalists) மற்றும் மத்தியவாத POUM இன் உதவி இன்றி, சோசலிஸ்டுகளாலும் ஸ்ராலினிஸ்டுகளாலும் ஸ்பானிய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தாக்குதலைத் திணறடித்திருக்க முடியாது. மக்கள் முன்னணியின் இடது அணியை உருவாக்கிய இவர்கள், முக்கிய தருணத்தில் அந்த அரசாங்கத்தில் இணைந்து, எதிர்புரட்சிக்கான பாதையைத் தயாரிப்பு செய்தனர். “ஸ்பெயின் படிப்பினைகள்: இறுதி எச்சரிக்கை” என்ற அவரது கட்டுரையை ட்ரொட்ஸ்கி 1937 இல் பின்வருமாறு நிறைவு செய்தார்: “POUM, அதன் சொந்த நோக்கங்களுக்கு நேர்மாறாக, இறுதி ஆய்வில், ஒரு புரட்சிகரக் கட்சியை உருவாக்குவதற்கான பாதையில் முக்கிய தடையாக இருப்பதை நிரூபித்தது.” POUM வகித்த பாத்திரத்தின் படிப்பினைகளை அவர் பின்வருமாறு தொகுத்தளித்தார்:

புரட்சியின் பிரச்சனையை இறுதிவரை, அதன் உறுதியான இறுதி முடிவுகள் வரை சிந்திக்க வேண்டியது அவசியம். புரட்சியின் அடிப்படை விதிகளுக்கு ஏற்ப கொள்கையை, அதாவது போராடும் வர்க்கங்களின் இயக்கத்திற்கு மாற்றியமைப்பது அவசியமே தவிர, தங்களை “மக்கள்” முன்னணிகள் என்று குறிப்பிடும் மற்றும் அம்மாதிரியான வேறு வித முன்னணியாகக் குறிப்பிடும், மேலோட்டமான குட்டி-முதலாளித்துவ குழுக்களின் தவறான கருத்துக்களுக்கோ அல்லது பயங்களுக்கோ அல்ல. புரட்சியின் போது குறைந்த எதிர்ப்பு நிலைப்பாடாக இருப்பது மிகப் பெரிய பேரழிவான நிலைப்பாடாகும். முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து “தனிமைப்படுவதற்கு” அஞ்சுவது, பெருந்திரளான மக்களிடம் இருந்து தனிமைப்படுவதாக இருக்கும். தொழிற் கட்சிப் பிரபுத்துவத்தின் தவறான பழமைவாத கருத்துக்களைத் தழுவுவது என்பது தொழிலாளர்களையும் புரட்சியையும் காட்டிக்கொடுப்பதாகும். அதிகப்படியான “எச்சரிக்கை” என்பது, மிக மோசமாக எச்சரிக்கையின்றி இருப்பதாக இருக்கும். இதுதான், ஸ்பெயினில் அந்த மிக நேர்மையான அரசியல் அமைப்பின், அதாவது மத்தியவாத POUM இனது சீரழிவின் முக்கிய படிப்பினையாக உள்ளது. இலண்டன் அலுவலத்தின் (London Bureau) கட்சிகளும் குழுக்களும், வெளிப்படையாகவே வரலாற்றின் கடைசி எச்சரிக்கையிலிருந்து தேவையான முடிவுகளை எடுக்க விரும்பவில்லை அல்லது அதைச் செய்ய இலாயக்கற்று உள்ளன. இந்த நடவடிக்கை மூலம் அவை தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றன. [21]

நான்காம் அகிலத்தின் வளர்ச்சிக்குப் பிரான்சில் மக்கள் முன்னணி அரசியலின் அனுபவத்திலிருந்து பெற்ற படிப்பினைகளும் மையமாக இருந்தன. பிரான்ஸ் எங்கே செல்கிறது போன்ற படைப்புகள் நம் இயக்கத்தின் அத்தியாவசிய அடித்தளங்களாக உள்ளன. அனைத்திற்கும் மேலாக, புறநிலை ரீதியாக அபிவிருத்தி அடைந்து வரும் புரட்சிகர சூழ்நிலையில், அகநிலைக் காரணியின் தீர்மானகரமான முக்கியத்துவத்தை அவை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஸ்ராலினிஸ்டுகளின் அணுகுமுறைக்கு எதிராக ட்ரொட்ஸ்கி கடுமையாக எதிர்விவாதம் செய்தார். “புரட்சிகர நடவடிக்கைக்கான தத்துவத்தை விதிவசத்தின் மதத்தைக் கொண்டு” பிரதியீடு செய்த அவர்கள், சூழ்நிலை “புரட்சிகரமாக இல்லை” என்று கூறி, முதலாளித்துவ வர்க்கத்தை நோக்கிய அவர்களின் நோக்குநிலையை நியாயப்படுத்தினர். ட்ரொட்ஸ்கி எழுதினார்:

மூன்றாம் அகிலத்தின் ஆய்வுகள் முற்றிலும் தவறானது. தொழிலாள வர்க்க கட்சிகளின் புரட்சிகரமல்லாத கொள்கைகளுக்கு மத்தியிலும், சூழ்நிலை எவ்வளவு புரட்சிகரமாக இருக்க முடியுமோ அவ்வளவு புரட்சிகரமாக உள்ளது. இன்னும் துல்லியமாக கூறினால், அது புரட்சிக்கு முந்தைய சூழ்நிலையாக உள்ளது. சூழ்நிலைமையை அதன் முழுமையான முதிர்ச்சிக்குக் கொண்டு வருவதற்கு, சோசலிசத்தின் பெயரில் அதிகாரத்தைக் கைப்பற்றும் முழக்கத்தின் கீழ், பெருந்திரளான மக்கள் உடனடியாக, வீரியத்துடன், இடைவிடாது அணிதிரட்டப்பட வேண்டும். புரட்சிக்கு முந்தைய சூழ்நிலைமையை ஒரு புரட்சிகரமான சூழ்நிலைமையாக மாற்றுவதற்கு ஒரே வழி இது மட்டுமே ஆகும். மறுபுறம், நாம் நேரங்காலம் பார்த்துக் கொண்டிருந்தால், இந்தப் புரட்சிக்கு முந்தைய சூழ்நிலைமை தவிர்க்கவியலாமல் எதிர்புரட்சிக்கான சூழ்நிலைமையாக மாற்றப்பட்டு, அது பாசிசத்திற்கு வெற்றியைக் கொண்டு வந்துவிடும். [22]

புரட்சியின் அபிவிருத்தியில் அரசியல் ரீதியான தயாரிப்பு வகிக்கும் முக்கிய பங்கை வலியுறுத்திய ட்ரொட்ஸ்கி, அதில் என்ன உள்ளடங்கி இருக்கிறது என்பதை விளக்கினார்:

இது பெருந்திரளான மக்களைப் புரட்சிகரமாக ஐக்கியப்படுத்துவதிலும், “அடிமைகளின் ஜனநாயக எஜமானர்களது” கருணை, தாராள மனப்பான்மை மற்றும் விசுவாசத்தின் மீது அடிமைத்தனமாக நம்பிக்கை வைப்பதில் இருந்து விடுவிப்பதிலும், உத்தியோகபூர்வ பொதுக் கருத்தை எப்படி மீறுவது என்றும், முதலாளித்துவ வர்க்கம் உழைப்பாளர்களை நோக்கி காட்டும் விடாப்பிடியான தன்மையில் பத்தில் ஒரு பங்காவது முதலாளித்துவ வர்க்கத்தை நோக்கி எவ்வாறு காட்டுவது என்றும் அறிந்த புரட்சிகர காரியாளர்களுக்குக் கல்வியூட்டுவதில் தங்கியுள்ளது. [23]

“முதலாளித்துவ அமைப்புமுறையின் இறுதி நெருக்கடி” இன்னும் தொடங்கவில்லை என்ற ஸ்ராலினிஸ்டுகளின் கூற்றுக்கு, ட்ரொட்ஸ்கி பின்வருமாறு பதிலளித்தார்:

பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஒரே விஞ்ஞானபூர்வ கோட்பாடான மார்க்சிசம், “இறுதி” நெருக்கடிக்கான விதிவசமான நம்பிக்கையோடு பொதுவான எதையும் கொண்டிருக்கவில்லை என்பதை, எல்லாவற்றுக்கும் மேலாக, புரட்சிகரத் தொழிலாளி புரிந்து வைத்திருக்க வேண்டும். மார்க்சிசம், அதன் சாராம்சத்தில், புரட்சிகர நடவடிக்கைக்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பாகும். மார்க்சிசம் விருப்பத்தையும் தைரியத்தையும் புறக்கணிக்கவில்லை, மாறாக சரியான பாதையைக் கண்டறிய அவர்களுக்கு உதவுகிறது [24]

அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்:

முதலாளித்துவத்திற்கு மரண ஆபத்தான நெருக்கடி என்று எதுவும் இல்லை. வணிகச் சுழற்சியின் ஏற்ற இறக்கங்கள், முதலாளித்துவத்தைத் தூக்கியெறிய பாட்டாளி வர்க்கத்திற்கு சுலபமாகவோ அல்லது கடினமாகவோ இருக்கும் ஒரு சூழலை மட்டுமே உருவாக்குகின்றன. ஒரு முதலாளித்துவ சமூகத்திலிருந்து ஒரு சோசலிச சமூகத்திற்கு மாறுவது, தங்கள் சொந்த வரலாற்றை உருவாக்கும் உயிர்வாழும் மனிதர்களின் செயல்பாட்டை முன் வேண்டி நிற்கிறது. அவர்கள் தற்செயலாகவோ, அல்லது அவர்களின் அதிரடியான திடீர் நடவடிக்கைகளைக் கொண்டோ வரலாற்றை உருவாக்குவதில்லை, மாறாக புறநிலை ரீதியாகத் தீர்மானிக்கப்பட்ட காரணங்களின் செல்வாக்கின் கீழ் அதை உருவாக்குகிறார்கள். ஆனாலும், அவர்களின் முன்முயற்சி, துணிச்சல், அர்ப்பணிப்பு, அதேபோல அவர்களின் முட்டாள்தனம் மற்றும் கோழைத்தனம் என, அவர்களின் சொந்த நடவடிக்கைகள், வரலாற்று அபிவிருத்தியின் சங்கிலியில் தவிர்க்கவியலாத பிணைப்புகளாக உள்ளன. [25]

இந்தக் கேள்விகள் இன்று அதிமுக்கியமான யதார்த்தமாக உள்ளன. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ள நிலைமைகளின் கீழ், இன்றைய போலி-இடது அமைப்புகள் மீண்டுமொருமுறை, இந்த சூழ்நிலை “புரட்சிகரமாக இல்லை” என்றும், ஆகவே தொழிலாளர்களுக்கு ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கு மற்றும் தலைமை தேவையில்லை, மாறாக அவர்களின் நடவடிக்கைகளை முதலாளித்துவ வர்க்கத்தின் முதலாளித்துவக் கொள்கைகளின் இப்போதிருக்கும் கட்டமைப்புக்குள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.

1930 களில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் ஸ்ராலினிச கட்சிகளைப் போலன்றி, இவை தொழிலாள வர்க்கத்தில் ஒரு பரந்த அடித்தளத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதோடு, எந்த அர்த்தத்திலும் இவற்றைத் தொழிலாளர்களின் அமைப்புகள் என்று அழைக்க முடியாது. ஆனால் இந்த மக்கள் முன்னணி அரசியலின் இன்றியமையா வர்க்க உள்ளடக்கமும் அரசியல் நோக்குநிலையும் அதேதான். ஆளும் வர்க்கம் ஒட்டுமொத்தமாக அதிகரித்தளவில் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்திற்குத் திரும்பும் அதேவேளையில், போலி-இடது அமைப்புகளோ தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் அதிக “ஜனநாயகத் தன்மை கொண்ட” பிரதிநிதிகள் என்று கூறப்படுபவர்களை ஆதரிக்க வேண்டும் என்று அறிவிக்கின்றன. இவ்விதத்தில் அவை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வலதுசாரி, எதிர்புரட்சிகர சதியின் பாகமாகத் தங்களை ஆக்கிக் கொள்கின்றன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மட்டுமே, 1930 களின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அன்று போலவே இன்றும், பாசிசத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் ரீதியிலான அணித்திரட்டல் தேவைப்படுகிறது. தொழிலாள வர்க்கம், முதலாளித்துவத்திற்கு எதிராகவும், அதன் அரசியல் பாதுகாவலர்களுக்கு எதிராகவும், அதன் பொது வர்க்க நலன்களின் அடிப்படையில், சோசலிசத்திற்காக சர்வதேச அளவில் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும். அரசியல் தலைமை பற்றிய கேள்வி தீர்க்கமானது என்பதோடு, அதை 1930 களின் எதிர்புரட்சிகர அனுபவங்களுடனும், குறிப்பாக ஸ்ராலினிசத்தின் தன்மை பற்றிய ஒரு தெளிவான அரசியல் கணக்குத்தீர்ப்புடனும் மட்டுமே தீர்க்கப்பட முடியும்.

பகுதி 3: சோவியத் ஒன்றியத்தில் அரசியல் இனப்படுகொலையும் ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரமும்

ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களை அதிகாரத்துவம் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த வேளையில், அது சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்குள்ளும் வெளியேயும் புரட்சியாளர்களை பாரியளவில் படுகொலை செய்யும் பிரச்சாரத்தில் இறங்கியது. ஆகஸ்ட் 19, 1936 அன்று, மூன்று போலி வழக்குகளில் முதலாவது மாஸ்கோவில் தொடங்கியது. இந்த வழக்குகளில், எதிர்ப்பாளர்களின் தரப்பிலிருந்த அக்டோபர் புரட்சியின் மிக முக்கியமான தலைவர்களில் பலர் “எதிர் புரட்சிகர நடவடிக்கைகளுக்காக” குற்றம் சாட்டப்பட்டனர். பொய்யான வாக்குமூலங்களை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில், அவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு, பொது இடங்களில் சேற்று வழியாக இழுத்துச் செல்லப்பட்டனர். முக்கிய பிரதிவாதிகளாக லியோன் ட்ரொட்ஸ்கியும் அவரது மகனும் நெருங்கிய ஒத்துழைப்பாளருமான லெவ் செடோவும் இருந்தனர். ட்ரொட்ஸ்கி சுதந்திரமான டுவி ஆணைக்குழுவைத் (Dewey Commission) தொடங்கியதன் மூலம் இந்த வழக்குகளுக்கு பதிலளித்தார். ட்ரொட்ஸ்கி ஜனவரி 1937 இல் இந்த ஆணைக்குழுவை உருவாக்குவதாக அறிவித்து இந்த வழக்குகள் பற்றி ஒரு சுருக்கமான உரையாற்றினார்.

லியோன் ட்ரொட்ஸ்கி மாஸ்கோ வழக்குகள் குறித்து பேசுகிறார் (ஜனவரி 30, 1937)

டுவி ஆணைக்குழு அவரையும் விசாரணைகளின் மற்ற அனைத்து பிரதிவாதிகளையும் “குற்றவாளி அல்ல” எனக் கண்டறிந்தது.

இந்தப் பயங்கரத்தை பற்றி பேசும்போது, “அரசியல் இனப்படுகொலை” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். இது வெறுமனே தார்மீக சீற்றத்தை வெளிப்படுத்தும் முயற்சி அல்ல. இந்த வார்த்தைக்கு ஒரு விஷேடமான அரசியல், வரலாற்று அர்த்தம் உள்ளது. ஒரு முழு வரலாற்றுக் காலகட்டத்திற்கும் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்த மார்க்சிச மற்றும் சோசலிச கலாச்சாரத்தை உருவாக்கியவர்களை சரீரரீதியாக அழிப்பதை இலக்காக கொண்ட ஒரு திட்டமிட்ட முயற்சி 1930களின் இரண்டாம் பாதியிலும், 1940களின் முற்பகுதியிலும் நிகழ்ந்து. ட்ரொட்ஸ்கி விளக்கியது போல், பாரிய படுகொலைச் செயலுடன் இடம்பெற்றது:

இந்த ஆளும் தட்டு அதன் புரட்சிகர கடந்த காலத்தில் அதன் மத்தியிலிருந்த சோசலிச கோட்பாடுகள், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் உலகப் புரட்சியின் தீர்க்கப்படாத பணிகளையும் நினைவுபடுத்தும் அனைவரையும் அகற்றுகிறது. இந்த அடக்குமுறைகளின் மிருகத்தனம், சலுகை பெற்ற சாதியினர் புரட்சியாளர்களிடம் கொண்டிருந்த வெறுப்புக்கு சாட்சியமளிக்கிறது. [26]

சோவியத் புரட்சியாளர்களை பாரியளவில் படுகொலை செய்யும் இந்த பிரச்சாரம், போலந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் உட்பட கம்யூனிச அகிலத்தின் பெரும் பகுதிகளை உடலியல்ரீதியாக அழித்ததுடன் ஒன்றாக இணைந்து செய்யப்பட்டது. சர்வதேச அளவில், அது ஸ்பெயினில் புரட்சியாளர்களின் படுகொலைகளுடன் ஒன்றாக இணைந்து செய்யப்பட்டது.

குறைந்தது 1 மில்லியன் மக்களைக் கொன்று, இன்னும் பலரைக் கைது செய்து சிறையில் அடைத்த பயங்கரம், சோசலிஸ்டுகள் மற்றும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை மட்டுமே பாதித்தது என்று கூறுவது தவறானதாக இருக்கும். ஆனால், உறுதியான புரட்சிகர தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அதன் முக்கிய இலக்குகளாக இருந்தனர் என்பது ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று உண்மையாகும். 1920 களில் எதிர்ப்பு இயக்கத்தின் ஆவணங்களில் கையெழுத்திட்ட ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் திட்டமிட்ட முறையில் கண்காணிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். அவர்களில் நூற்றுக்கணக்கான ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இருந்தனர். அவர்களின் பெயர்களும் படைப்புகளும் இன்றுவரை பெரிதும் அறியப்படவில்லை, ஆனால் அவர்கள் ஒருபோதும் ஸ்ராலினிசத்திற்கு அடிபணியாத்துடன், அவர்கள் தூக்கிலிடப்படும் நாட்கள் வரை சோசலிசத்திற்கான போராட்டத்தைத் தொடர்ந்தனர். பல சந்தர்ப்பங்களில், அவர்களின் இளம் பிராயத்து குழந்தைகள் உட்பட அவர்களது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

உதாரணமாக, இந்த படத்தில், இந்த கொலை பட்டியல்களில் ஒன்றிற்கான மேல்அட்டையை கீழே இடதுபுறத்தில் காணலாம். ஸ்ராலின், மொலோட்டோவ், ககனோவிச் மற்றும் வோரோஷிலோவ் உள்ளிட்ட பொலிட்பீரோவின் பல உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டிருந்தனர்.

ஸ்ராலின், மொலோட்டோவ், ககனோவிச் மற்றும் வோரோஷிலோவ் ஆகியோரின் கையொப்பங்களுடன், மே 1937 முதல் கொலைப் பட்டியலின் அட்டைப் பக்கம்.

இந்த படம் அத்தகைய கொலை பட்டியலில் இருந்து ஒரு பக்கத்தைக் காட்டுகிறது. இதில் மிக்கைல் போகஸ்லாவ்ஸ்கி உட்பட பல முன்னணி போல்ஷிவிக்குகளும் முன்னாள் எதிர்ப்பாளர்களும் இருந்தனர்.

1920களில் ஒரு பழைய போல்ஷிவிக்கும் இடது எதிர்ப்பாளருமான மிக்கைல் போகஸ்லாவ்ஸ்கி உட்பட 24 நபர்கள் பட்டியலிடப்பட்ட கொலை பட்டியலில் இருந்து ஒரு பக்கத்தை காணலாம்.

இந்த பட்டியல், செப்டம்பர் 7, 1937 மற்றும் மே 3, 1938 க்கு இடையில் இத்தகைய கொலைப் பட்டியல்களின் அடிப்படையில் மரண தண்டனை அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை பற்றிய ஒரு மேலோட்டமாகும். உதாரணமாக, ஜனவரி 3, 1938 அன்று, மொத்தம் 2,771 பேருக்கு இந்த முறையில் “தண்டனை” விதிக்கப்பட்டது என்பதை இது காட்டுகிறது. இவர்களில் 2,548 பேரை சுட்டுக் கொல்லவும், 223 பேரை சிறையில் அடைக்கப்படவும் உத்தரவிடப்பட்டது.

செப்டம்பர் 7, 1937 மற்றும் மே 3, 1938 க்கு இடையில் பொலிட்பீரோ உறுப்பினர்களால் மரண தண்டனை மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விவரிக்கும் கொலைப் பட்டியலில் இருந்து ஒரு பக்கம்.

இயங்கிக்கொண்டிருந்த மற்றும் முன்னாள் இடது எதிர்ப்பாளர்களுக்கு மிகவும் இலக்கு வைக்கப்பட்ட துன்புறுத்தல் இருந்தது. 1920 களில் இடது எதிர்ப்பின் கொள்கைகளுக்கு கையொப்பமிட்டவர்களின் பெயர்கள், பிறந்த நாள், பணிபுரியும் இடங்கள் மற்றும் அவர்கள் கட்சியில் சேர்ந்த ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிக்கும் விரிவான பட்டியல்களை இரகசிய சேவை தொகுத்தது. கொலை செய்யப்பட்ட மிக சிறந்த ஆனால் அதிகம் அறியப்படாத நபர்களில் ஒருவர் போரிஸ் எல்ட்சின் ஆகும். அவர் 1928-1929 இல் இடது எதிர்ப்பின் பொதுச் செயலாளராகவும் ரஷ்ய தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றில் மிகச் சிறந்த நபர்களில் ஒருவராகவும் இருந்தார். அவர் ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சி நிறுவப்படுவதற்கு முன்பே (1898 இல்) 1897 இல் இயக்கத்தில் சேர்ந்திருந்தார்.

அவர் மூன்று ரஷ்ய புரட்சிகளிலும் பங்கேற்றார். அவர் மட்டுமல்ல, அவரது மூன்று குழந்தைகளும் எதிர்ப்பு இயக்கத்தின் போராளிகளாக ஆனார்கள். அவர் கொல்லப்பட்ட விதம், ஒருபோதும் சரணடையாதவர்களின் ஒரு உதாரணமாக இருந்தது. அவர் கைது செய்யப்பட்ட பின்னர், ஒரு முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். அப்போது அவர் தனது 60வயதுகளிலும், மிகவும் உடல்நிலமற்ற நிலையிலும் இருந்தார். மேலும் அவரும் மற்ற போராட்ட தலைவர்களும் நவம்பர் 1937 இல் தூக்கிலிடப்பட்டனர். அவரது மகன், விக்டர் எல்ட்சின், ட்ரொட்ஸ்கியின் முன்னாள் செயலாளராகவும், முன்னணி எதிர்ப்பு இயக்கத்தவராகவும் இருந்தார். வோர்குட்டாவில் உள்ள மற்றொரு முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த பின்னர், நூறு ட்ரொட்ஸ்கிஸ்டுகளுடன் சேர்ந்து நான்கு மாதங்களுக்குப் பின்னர் அவரும் கொல்லப்பட்டார். இந்த உண்ணாவிரதப் போராட்டங்கள் விரக்தியின் அடையாளம் அல்ல, மாறாக எதிர்ப்பின் வெளிப்படுத்தல் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இதுதான் சோவியத் ஒன்றியத்தில் உள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு தாங்கள் ஸ்ராலினிசத்திற்கு அடிபணியாத எதிர்ப்பாளர்களாகவும், தொழிலாள வர்க்கத்திற்காக போராடுபவர்களாகவும் காட்டுவதற்கு எஞ்சியிருக்கும் ஒரே வழிமுறையாக இருந்தது.

விக்டர் எல்ட்சின் (மேல் வலது) மற்றும் இகோர் போஸ்னன்ஸ்கி (நடுவில் இடது) உட்பட 1928 இல் சோவியத் இடது எதிர்ப்பின் நாடுகடத்தப்பட்ட தலைவர்கள் [Photo: MS Russ 13 (T 1086), Houghton Library, Harvard University, Cambridge, Massachusetts]

இந்த படம் பயங்கரத்தின் அளவையும், இது தொடர்பாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் உண்மையில் எந்த அளவிற்கு ஆராயப்படவில்லை என்பதையும் உணர்த்துகிறது. இது மாஸ்கோவிற்கு வெளியே பயங்கரவாதத்தின் மிக முக்கியமான கொலை தளமாக இருந்தது. சோவியத் அரசாங்கத்தின் பெரும்பகுதியினரும் மற்றும் போல்ஷிவிக் தலைமையும் இங்கு கொலைசெய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அகழ்வாராய்ச்சி வேலை 1991 க்குப் பின்னர் மட்டுமே தொடங்கப்பட்டது மற்றும் போர் தொடங்குவதற்கு சற்று முன்பு 2021 இல் மட்டுமே முடிக்கப்பட்டது. பயங்கரத்தின் உச்சத்திற்கு 85 ஆண்டுகளுக்குப் பின்னரும், நினைவுச் சின்னங்கள் இல்லாத இடங்கள், அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறாத இடங்கள் உட்பட இதுபோன்ற இன்னும் பல கொலைத் தளங்கள் உள்ளன.

மாஸ்கோவிற்கு அருகிலுள்ள கொம்முனார்கா கொலைத் தளத்தில் தூக்கிலிடப்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய அட்டவணைகள். [© WSWS Media]

ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பாரிய படுகொலை சர்வதேச அளவில் நடாத்தப்பட்டது. ஐரோப்பாவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மிக முக்கியமான தலைவர்களான எர்வின் வொல்ஃப், ருடோல்ஃப் கிளெமென்ட் மற்றும் ட்ரொட்ஸ்கியின் மகன் லெவ் செடோவ் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த பாரிய படுகொலை பிரச்சாரம் இந்த நூற்றாண்டின் அரசியல் குற்றமான ஆகஸ்ட் 1940 இல் மெக்சிகோவில் லியோன் ட்ரொட்ஸ்கி ஒரு ஸ்ராலினிச முகவரால் படுகொலை செய்யப்பட்டதுடன் உச்சக்கட்டத்தை அடைந்தது.

இந்த அரசியல் இனப்படுகொலையின் பின்விளைவுகள் 20 ஆம் நூற்றாண்டு முழுவதும் உணரப்பட்டதுடன், உண்மையில் இன்றுவரை உணரப்படுகின்றன. 1937ல், பயங்கரத்தின் உச்சக்கட்டத்தில், லியோன் ட்ரொட்ஸ்கி, தொழிலாள வர்க்கத்தின் நனவின் மீது ஸ்ராலினிசத்தின் பேரழிவுகரமான தாக்கத்தை பற்றி சுருக்கமாகக் கூறினார். அவர் எழுதினார், “ஹிட்லரைத் தவிர ஸ்ராலினைப் போன்று வேறு எவரும் சோசலிசத்தின் மீது கொடிய தாக்குதல்களை செய்ததில்லை”. ட்ரொட்ஸ்கி கணித்தார்:

சுய-விருப்பம் மற்றும் சலுகைகளுக்கான ஒரு துன்புறுத்தும் அமைப்பிற்காக பலியிடப்பட்டுவதற்கு தியாகம் செய்த ஒரு துளி இரத்தத்தையும் வரலாறு மன்னிக்காது. … புரட்சி, அனைத்து இரகசியப் பெட்டிகளையும் திறக்கும், அனைத்து வழக்குகளையும் மறுபரிசீலனை செய்யும், அவதூறு செய்யப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும், இரக்கமற்ற முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னங்களை எழுப்பும் மற்றும் மரணதண்டனை நிறைவேற்றியவர்களின் பெயர்களுக்கு நித்திய அவதூற்றை கொடுக்கும். புரட்சிக்கு புதைகுழி தோண்டியவராக மட்டுமின்றி மனிதகுல வரலாற்றில் மிகக் கொடிய நபராகவும், தான் செய்த அனைத்து குற்றங்களையும் சுமந்து கொண்டு ஸ்ராலின் மறைந்து போவார்.[27]

ஸ்ராலினிசத்தின் குற்றங்களின் மிருகத்தனம் மற்றும் அதன் வரலாற்று பரிமாணம் இருந்தபோதிலும், ட்ரொட்ஸ்கி ஒருபோதும் ஜோசப் ஸ்ராலினை ஒரு தனிநபராக அல்லது சோவியத் அதிகாரத்துவத்தின் பாத்திரம் பற்றி ஒரு அகநிலையான அணுகுமுறையையோ எடுத்ததில்லை. ஸ்ராலினின் கொடூரமான பாத்திரத்தை அவர் பிரதிநிதித்துவப்படுத்திய சமூக சக்திகளின் அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

முதல் மாஸ்கோ வழக்கு தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, ட்ரொட்ஸ்கி தனது காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி என்ற நூலின் கையெழுத்துப் பிரதியை முடித்திருந்தார். இந்த பணி நான்காம் அகிலத்தின் வரலாற்று மற்றும் வேலைத்திட்ட நோக்குநிலைக்கு அடித்தளமாக இருந்தது. ஸ்ராலினிசத்தின் எழுச்சிக்கு மனச்சோர்வடைந்த மத்தியதர வர்க்க தீவிரவாதிகளின் தோற்றப்பாட்டுவாத பதில்களுக்கு மாறாக, ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவச் சீரழிவை ஒரு விஞ்ஞான, வரலாற்று சடவாத ஆய்வுக்கு உட்படுத்தினார்.

காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி

1917க்குப் பின்னர் தொழிலாளர் அரசு எதிர்கொண்ட சர்வதேச தனிமைப்படுத்தல் மற்றும் பொருளாதாரப் பின்தங்கிய நிலைமைகள், பாட்டாளி வர்க்கத்திடம் இருந்து அரசியல் அதிகாரத்தை அபகரித்து, பரந்த சமூகச் சலுகைகளை அனுபவித்த ஒரு அதிகாரத்துவத்தை உருவாக்கியது. சமூகவியல் ரீதியாக, இந்த அதிகாரத்துவத்தின் சமூகநிலை ஒரு சலுகை பெற்ற சாதியாக இருந்ததே ஒழிய ஒரு சமூக வர்க்கமாக அல்ல. முதலாளித்துவத்தின் சமூக-பொருளாதார நிலைக்கு மாறாக, அதிகாரத்துவத்தின் சலுகைகள், உற்பத்திச் சாதனங்களின் உடமையில் வேரூன்றவில்லை. மாறாக, அக்டோபர் புரட்சியின் விளைவாக உற்பத்திச் சாதனங்களை கட்டுப்பாட்டில் கொண்டிருந்த அரசில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்துவம் அரசியல் அதிகாரத்தை அபகரித்ததை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

“சோசலிசம்” மற்றும் “முதலாளித்துவம்” போன்ற வரையறைகளின் எளிமையான மற்றும் வரலாற்றுதொடர்பற்ற பயன்படுத்தலை நிராகரித்த ட்ரொட்ஸ்கி, சோவியத் ஒன்றியம் ஒரு “இடைமருவு சமூகம்” என்று விளக்கினார், அதன் தலைவிதி இன்னும் வரலாற்றால் தீர்மானிக்கப்படவில்லை. அவர் எழுதினார்:

அக்டோபர் புரட்சி ஆளும் தட்டினால் காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறதே அன்றி இன்னும் தூக்கியெறியப்பட்டு விடவில்லை. ஸ்தாபிக்கப்பட்ட சொத்துறவுகளுடன், பாட்டாளி வர்க்கத்தின் உயிர்ப்பான ஆற்றல், அதன் சிறந்த கூறுகளது நனவு, உலக முதலாளித்துவத்தின் முடங்கியநிலை மற்றும் உலகப் புரட்சியின் தவிர்க்கவியலாத்தன்மை ஆகியவை துணையுடன் அது மாபெரும் எதிர்ப்பு ஆற்றலையும் கொண்டிருக்கிறது. [28]

சோவியத் ஒன்றியம் ஒரு தீவிரமான அதிகாரத்துவச் சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருந்தாலும், அது ஒரு தொழிலாளர் அரசாகவே இருந்தது. அந்த தொழிலாளர் அரசுக்குள்ளும், இன்னும் விரிவாக தொழிலாளர் இயக்கத்திற்குள்ளும், ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஏகாதிபத்தியத்தின் எதிர் புரட்சிகர முகமையாக செயல்பட்டது. இந்த நிலைமைகளின் கீழ், அக்டோபர் புரட்சியின் வெற்றிகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்திற்கு ஒரே வழி, புரட்சியை சர்வதேச அளவில் நீட்டிப்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு அரசியல் புரட்சியின் மூலம் அதிகாரத்துவத்தை தூக்கியெறிவதே என ட்ரொட்ஸ்கி முடிவிற்கு வந்தார். அத்தகைய அரசியல் புரட்சி இல்லாவிடின், “முதலாளித்துவத்தை நோக்கித் திரும்புவது முற்றிலும் சாத்தியம்” என்று எச்சரித்தார்.

உண்மையில், சோவியத் அதிகாரத்துவம் 1985ல் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னரே, அதிகாரத்துவத்தை ஒரு புதிய சொத்து உடைய வர்க்கமாக மாற்றுவதும் சோவியத் அரசை அழிப்பதும் நிகழ்வுகளின் சாத்தியமான பாதைகளில் ஒன்று என்பதை ட்ரொட்ஸ்கி உணர்ந்தார். இருப்பினும், முதலாளித்துவ புனருத்தாரணம் ஒரு முன்கூட்டிய முடிவு அல்ல. “இறுதிப் பகுப்பாய்வில், இந்த கேள்வியானது தேசிய மற்றும் உலக அரங்கில் உயிர்வாழும் சமூக சக்திகளின் போராட்டத்தால் தீர்மானிக்கப்படும்” என ட்ரொட்ஸ்கி எழுதினார்.

சோவியத் தலைவர் மிக்கைல் கோர்பச்சேவ் (வலமிருந்து இரண்டாவது) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் (இடமிருந்து இரண்டாவது) இருவரும் அக்டோபர் 11, 1986 அன்று ஐஸ்லாந்தின் ரெய்க்ஜாவிக் நகரில் ஒரு தொடர் பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் ஹோஃப்டி வீட்டுக்கு வெளியே கைகுலுக்கினர். மற்றவர்கள் அடையாளம் தெரியவில்லை. [AP Photo/Ron Edmonds] [AP Photo/Ron Edmonds]

இந்த விஞ்ஞானபூர்வமான நிலைப்பாடு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை, “சோசலிஸ்ட்” அல்லது “ட்ரொட்ஸ்கிஸ்ட்” என்று கூட கூறிக்கொள்ளும் அனைத்துக் குட்டி முதலாளித்துவப் போக்குகளிலிருந்தும் வரலாற்று ரீதியாக வேறுபடுத்தியுள்ளது. பப்லோவாதிகளும் மற்றும் அரசு முதலாளித்துவவாதிகளும், வெவ்வேறு வழிகளில், சோவியத் அதிகாரத்துவத்திற்கு அதற்கு இல்லாத ஒரு பங்கைக் வழங்கினர். அதிகாரத்துவம் ஒரு புதிய ஆளும் வர்க்கம் என அரசு முதலாளித்துவவாதிகள் பிரகடனம் செய்தனர். “சுய சீர்திருத்தம்” மூலம் சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தை “நடைமுறைப்படுத்துவதற்கு” அழுத்தம் கொடுக்க முடியும் எனக் கூறி, பப்லோவாதிகள் தங்கள் பங்கிற்கு, அதிகாரத்துவத்திற்கு ஒரு புரட்சிகர பாத்திரத்தை வழங்கினர்.

வெளித்தோற்றத்தில் எதிர் முடிவுகளுக்கு வந்தாலும், இந்த இரண்டு நிலைப்பாடுகளும் இறுதியில் அக்டோபர் புரட்சியின் முன்னோக்கை நிராகரித்து, தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சக்தி என்பதைக் கைவிட்ட குட்டி முதலாளித்துவ அடுக்குகளின் சமூக நலன்களில் வேரூன்றியிருந்தன. இவை ஸ்ராலினிசத்தின் எதிர்ப் புரட்சிகர பாத்திரத்தை குறைத்து மதிப்பிடுவது அல்லது வெளிப்படையாக மறுப்பதுடன் மற்றும் அதன் மோசமான குற்றங்களை மூடிமறைப்பதுடன் தொடர்புபட்டிருந்தன.

ஸ்ராலினிசத்தினதும், ஏகாதிபத்தியத்தின் வரலாற்று கூட்டாளிகளாகவும் பப்லோவாதிகளின் பங்கு, லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை தொடர்பாக அனைத்துலகக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அவர்கள் காட்டிய தீவிர எதிர்ப்பினால் மறுக்கமுடியாத வகையில் நிரூபிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள இன்றைய அரசு முதலாளித்துவத்தின் ஆதரவாளர்களான அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் தலைவர்கள், ட்ரொட்ஸ்கியின் ஸ்ராலினிச படுகொலையை வெளிப்படையாகக் கொண்டாடுகிறார்கள்.

நான்காம் அகிலத்தின் வரலாற்று முழுவதும், தேசிய சந்தர்ப்பவாதத்திற்கும், திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டமானது, ஸ்ராலினிசத்தின் குற்றங்களை அம்பலப்படுத்துவதையும், அக்டோபர் புரட்சியின் ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பு பற்றிய ட்ரொட்ஸ்கியின் விஞ்ஞானபூர்வ பகுப்பாய்வின் பாதுகாப்பையும் மையமாக கொண்டுள்ளது. இந்த பகுப்பாய்வின் அடிப்படையில், 1985-1991ல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ புனருத்தாரணத்திற்கு எதிரான போராட்டத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னரே எதிர்பார்த்து, அபிவிருத்தி செய்ய முடிந்தது. எண்ணற்ற குட்டி முதலாளித்துவ முன்னாள்-இடது சக்திகளுக்கு மாறாக, ஸ்ராலினிசத்தின் இறுதி வீழ்ச்சி மற்றும் தொழிலாளர் அரசின் அழிவுக்கு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பிரதிபலிப்பு சோசலிசத்திற்கான முன்னோக்கை நிராகரிப்பதாக இருக்கவில்லை.

மாறாக. ஸ்ராலினிசத்திற்கு எதிரான இடது எதிர்ப்பின் போராட்டம் மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முழு வரலாறு பற்றிய வரலாற்று உண்மையை வெளிக்கொணர்வதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை சோவியத் வரலாற்றாசிரியர் வாடிம் ரோகோவினுடன் இணைந்து அபிவிருத்தி செய்ததன் மூலம் 1991நிகழ்வுகளுக்கு ICFI பதிலளித்தது. இந்தப் பிரச்சாரத்தின் ஆரம்பமானது ஒரு மூலோபாய முடிவாகும்: வரலாற்று உண்மைக்கான போராட்டம், தொழிலாள வர்க்கத்தில் மார்க்சிச நனவு மற்றும் ஒரு சோசலிச கலாச்சாரத்தின் மறுமலர்ச்சிக்கும், புதிய தலைமுறை புரட்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் அடித்தளமாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம். இந்த நோக்குநிலையின் விளைவாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தயாரிக்கப்பட்ட படைப்புகளில் பல தொகுதிகள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கட்டுரைகளாக உலக சோசலிச வலைத் தளத்தில் உள்ளன.

வாடிம் ரோகோவின் 1996 இல் ஜேர்மனியின் போஹ்கூம் பல்கலைக்கழகத்தில் விரிவுரை ஆற்றுகிறார்

எல்லாவற்றிற்கும் மேலாக, நான்காம் அகிலத்திற்கான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் அசாதாரண அறிவாற்றல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் நடத்தப்பட்டு வந்த மற்றும் நடத்தப்பட்டு வரும் பணிகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. டேவிட் நோர்த் தனது “ட்ரொட்ஸ்கிசம் எதிர் ஸ்ராலினிசம்” என்ற ஆகஸ்ட் 1987 உரையில் குறிப்பிட்டது போல், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பாரிய படுகொலை பிரச்சாரத்தின் மத்தியில் நான்காம் அகிலத்தை ஸ்தாபித்ததில், ட்ரொட்ஸ்கி “மார்க்சிசத்தின் வரலாற்று தொடர்ச்சியை உறுதி செய்வதிலும், தொழிலாள வர்க்கத்தின் எதிர்கால சந்ததியினருக்கு சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் சிறந்த தத்துவார்த்த மரபுகளையும் பரந்த நடைமுறை அனுபவத்தையும் உள்ளடக்கிய ஒரு உலகக் கட்சியை வழங்குவதிலும் வெற்றி பெற்றார்.” [29]

பகுதி 4: நான்காம் அகிலத்தின் ஸ்தாபகமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்

லியோன் ட்ரொட்ஸ்கியும் மார்க்சிசத்தின் வளர்ச்சியும், என்ற நூலில் டேவிட் நோர்த், செப்டம்பர் 1938 இல் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகமானது “ஒரு மார்க்சிச மற்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளராக லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது” என்று கூறுகிறார். [30]

இது ட்ரொட்ஸ்கியின் சொந்த மதிப்பீடாகவும் இருந்தது. மார்ச் 25, 1935 இல் அவர் தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டார்:

இரண்டு அகிலங்களின் சரிவு, இந்த அகிலங்களின் தலைவர்களில் எவரும் தீர்க்கக்கூடிய நிலையில் இல்லாத ஒரு பிரச்சினையை முன்வைத்துள்ளது. எனது தனிப்பட்ட விதியின் மாறுபாடான நிலைமைகள் இந்த சிக்கலை எதிர்கொண்டதோடு, அதை கையாள்வதில் முக்கியமான அனுபவத்துடன் என்னை ஆயுதபாணியாக்கி உள்ளன. இரண்டாம், மூன்றாம் அகிலங்களின் தலைவர்களின் தலைக்கு மேல் புரட்சிகர வழிமுறையுடன் புதிய தலைமுறையை ஆயுதபாணியாக்கும் பணியை மேற்கொள்ள என்னைத் தவிர வேறு யாரும் இப்போது இல்லை.[31]

ஒருவேளை “புரட்சிகர வழிமுறையின்” மிக முக்கியமான கூறு என்னவென்றால், மார்க்சிசம் தொழிலாள வர்க்கத்திற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும், அத்தோடு புரட்சிகர தலைமை என்பது ஒரு நனவற்ற, தன்னிச்சையான நிகழ்ச்சிப்போக்கின் விளைபொருள் அல்ல என்பதாகும். 1938 இல் பாரிஸில் நான்காம் அகிலத்தின் ஸ்தாபக மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தின் முதல் வாக்கியம், முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும் என்ற தலைப்பில், இந்தக் கேள்வியை அதன் அனைத்து அர்த்தத்திலும் ஆழத்திலும் சுருக்கமாகக் கூறுகிறது: “ஒட்டுமொத்த உலக அரசியல் நிலைமை முதன்மையாக பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் வரலாற்று நெருக்கடியால் குணாம்சப்படுத்தப்படுகிறது.” [32]

டேவிட் நோர்த் இது குறித்து லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற நூலில் கருத்துரைக்கிறார்:

இச்சொற்களுடன் ட்ரொட்ஸ்கி 1938ல் இருந்த நிலைமையை சுருக்கிக் கூறியது மட்டுமல்லாமல், தற்கால வரலாற்றின் முக்கிய அரசியல் பிரச்சினையையும் சுருக்கிக் கூறினார். முதலாளித்துவத்தை சோசலிசத்தால் பிரதியீடு செய்வதற்கான புறநிலை முன்னிபந்தனைகளான, உற்பத்தி சக்திகளின் சர்வதேச வளர்ச்சி மற்றும் புரட்சிகர வர்க்கத்தின் இருப்பு ஆகியவை இருந்தன. ஆனால் புரட்சி என்பது புறநிலைப் பொருளாதார சூழ்நிலையின் தன்னியல்பான விளைவு அல்ல. அதற்கு வரலாற்று நிகழ்வின் மீதான சோசலிச வேலைத்திட்டத்தை அடித்தளமாக கொண்டு, ஒரு தெளிவாக விரிவாக்கப்பட்டுள்ள ஒரு மூலோபாய வேலைத்திட்டத்தினால் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் நனவான தலையீடு தேவை. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அரசியல், அது அகற்ற விரும்பும் முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்ப்புரட்சி அரசியலைவிட சற்றும் குறைந்த நனவைக் கொண்டிருக்கக் கூடாது. இங்குதான் ஒரு புரட்சிகர கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. [33]

நான்காம் அகிலத்தின் ஸ்தாபகமானது, விஞ்ஞான ரீதியானதும் கோட்பாட்டு ரீதியானதுமான கருத்தாய்வுகளை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு வரலாற்றுத் அவசியத்திற்கு வெளிப்பாட்டை கொடுத்ததோடு அதில் வேரூன்றி இருந்தது. இடைமருவு வேலைத்திட்டத்தின் தொடக்கப் பகுதியில், ஒரு சோசலிசப் புரட்சிக்கான புறநிலை முன்நிபந்தனைகள், “முதலாளித்துவத்தின் கீழ் அடையக்கூடிய முதிர்ச்சியின் மிக உயர்ந்த புள்ளியை பொதுவாக ஏற்கனவே அடைந்துவிட்டன” என்று ட்ரொட்ஸ்கி கூறுகிறார்.

மனிதகுலத்தின் உற்பத்தி சக்திகள் தேக்கமடைகின்றன. ஏற்கனவே புதிய கண்டுபிடிப்புகளும் மேம்பாடுகளும் சடரீதியான செல்வத்தின் மட்டத்தை உயர்த்தத் தவறுகின்றன. ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையின் சமூக நெருக்கடியின் நிலைமைகளின் கீழான அவ்வப்போதைய காலகட்டத்திலான நெருக்கடிகள் பரந்துபட்ட மக்களின் மீது முன்னெப்போதினும் கடினமான இழப்புகளையும் துன்பங்களையும் ஏற்படுத்துகின்றன. பெருகும் வேலைவாய்ப்பின்மையானது, அதன் பங்கிற்கு, அரசின் நிதி நெருக்கடியை ஆழப்படுத்தி ஸ்திரமற்ற நாணய அமைப்புமுறைகளை பலவீனப்படுத்துகிறது. ஜனநாயக ஆட்சிகளும், அதேபோல பாசிச ஆட்சிகளும், ஒரு திவால் நிலையில் இருந்து இன்னொன்றுக்காய் தாவித் தடுமாறுகின்றன. ... நிச்சயமாக, முதலாளித்துவம் அதன் ஆதிக்கத்திற்கு ஒரு புதிய போரால் முன்வைக்கப்படும் மரண ஆபத்தை அறிந்திருக்கிறது. ஆனால் அந்த வர்க்கம் 1914 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட இப்போது போரை தடுக்கும் திறனை அளவிடமுடியா வகையில் குறைவாகவே கொண்டுள்ளது. [34]

சோசலிசத்துக்கான வரலாற்று நிலைமைகள் இன்னும் “முதிர்ச்சியடையவில்லை” என்ற வகையான பேச்சுகள் எல்லாம் அறியாமை அல்லது திட்டமிட்ட ஏமாற்றுவேலையின் விளைபொருளேயாகும். பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான புறநிலையான முன்நிபந்தனைகள் “முதிர்ச்சியடைந்துவிட்டன” என்பது மட்டுமல்ல, ஓரளவு அழுகவும் கூடத் தொடங்கி விட்டன. ஒரு சோசலிசப் புரட்சி இல்லையென்றால், அடுத்த வரலாற்றுக் காலகட்டத்தில் மனிதகுலத்தின் ஒட்டுமொத்தக் கலாச்சாரத்தையும் ஒரு பேரழிவு அச்சுறுத்துகிறது. இது பாட்டாளி வர்க்கத்தின், அதாவது பிரதானமாக அதன் புரட்சிகர முன்னணிப் படையின் காலகட்டமாகும். மனிதகுலத்தின் வரலாற்று நெருக்கடி புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியாகியுள்ளது. [35]

இதனுடன், அனைத்து வகையான அகநிலை வாதங்களையும் பயன்படுத்தி, நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்தை நிராகரித்த மத்தியவாத போக்குகளுக்கு எதிராகவும் ட்ரொட்ஸ்கி விவாதித்தார். ஸ்ராலினிசம் பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு மற்றும் அவரது அரசியல் முன்னோக்குடன் மத்தியவாதிகள் உடன்படுவதாகக் கூறிக்கொண்டாலும், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகம் காலத்திற்கு முந்தியது அல்லது பயனற்றது அல்லது அவை இரண்டுமாக அவர்கள் கருதினர். ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஒரு புதிய அகிலத்தை “பிரகடனப்படுத்துவதற்கு” மிகவும் சிறியதாகவும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது என்பது அவர்களின் முக்கிய வாதங்களில் ஒன்றாகும். ஒரு புதிய கட்சி “மாபெரும் நிகழ்வுகளில்” இருந்து மட்டுமே உருவாக முடியும் என்றனர்.

ட்ரொட்ஸ்கி இதற்கு பதிலளித்தார்:

நான்காம் அகிலம் மாபெரும் நிகழ்வுகளினூடாக ஏற்கனவே தோன்றிவிட்டது: வரலாற்றில் இடம்பெற்ற பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தோல்விகளே அந்த மாபெரும் நிகழ்வுகள். இந்தத் தோல்விகளுக்கான காரணத்தினை பழைய தலைமையின் சீரழிவிலும், துரோகத்திலுமே கண்டுகொள்ள முடியும். வர்க்கப் போராட்டம், ஒரு தடங்கலையும் சகித்துக்கொள்ளாது. இரண்டாம் அகிலத்தினை தொடர்ந்து, மூன்றாம் அகிலம் புரட்சியின் நோக்கங்களை பொறுத்தவரை இறந்துவிட்டது. நான்காம் அகிலம் நீடூழி வாழ்க!

ஆனால் இதன் உருவாக்கத்தை பிரகடனம் செய்வதற்கான காலம் வந்துவிட்டதா?... ஐயுறவுவாதிகள் ஓய்ந்தபாடாய் இல்லை. எமது பதில், நான்காம் அகிலத்தினை ‘பிரகடனம்’ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அது இருந்து வருகின்றது. போராடுகின்றது. இது பலவீனமானதா? ஆம், அதன் அங்கத்தவர்கள் எண்ணிக்கையில் குறைவானதாக உள்ளனர். ஏனெனில் இது இன்னமும் இளமையாய் உள்ளது. அவர்கள் முக்கியமாக இன்னமும் காரியாளர்கள். ஆனால் இந்தக் காரியாளர்கள் எதிர்காலத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளார்கள். இந்தக் காரியாளர்களுக்கு வெளியே இந்தப் பூகோளத்தில் புரட்சிகர என்ற பெயருக்கு பொருத்தமான எந்தவொரு புரட்சிகர நீரோட்டமும் இல்லை. நமது அகிலம் இன்னும் எண்ணிக்கையில் பலவீனமாக இருக்கிறது என்றால், அது கோட்பாடு, வேலைத்திட்டம், பாரம்பரியம், அதன் காரியாளர்களின் ஒப்பிடமுடியாத மனவுறுதி ஆகியவற்றில் வலுவாக உள்ளது. இன்று இதை யார் உணரவில்லையோ, தற்போது அவர் ஒதுங்கி நிற்கட்டும். நாளை அது இன்னும் தெளிவாகிவிடும்.[36]

சோசலிச சமத்துவக் கட்சி அதன் வரலாற்று அடித்தளங்கள் அறிக்கையில் கூறுவது போல, 20 ஆம் நூற்றாண்டின் வரலாறு, “நான்காம் அகிலத்தின் வரலாற்றுத் தேவை பற்றிய மதிப்பீட்டின் சரியான தன்மையை நிரூபிக்கும்.” [37] நமது சகாப்தத்தின் மைய மூலோபாயப் பணி, புறநிலை புரட்சிகர நிலைமைகளின் முதிர்ச்சிக்கும் பாட்டாளி வர்க்கத்தினதும் மற்றும் அதன் முன்னணிப் படையினதும் முதிர்ச்சியின்மைக்கும் இடையிலான இடைவெளியை கடப்பதாகும்.

இந்த மூலோபாய இலக்கை அடைவதற்காக, இடைமருவு வேலைத்திட்டம் பல பொருளாதார மற்றும் அரசியல் கோரிக்கைகளை அபிவிருத்தி செய்தது: ஒரு நெகிழ்வான ஊதியம், தொழில்துறை, வங்கிகள் மற்றும் விவசாயத்தின் தேசியமயமாக்கல், பாட்டாளி வர்க்கத்தை ஆயுதபாணியாக்குதல், தொழிலாளர்களினதும்’ விவசாயிகளினதும்’ அரசாங்கத்தை உருவாக்குதல் போன்றவை. பாட்டாளி வர்க்கம் உறுதியாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு வழிவகுக்கும் இந்த இடைமருவு கோரிக்கைகள், தொழிலாள வர்க்கத்தின் நனவிற்கும் அவர்கள் எதிர்கொள்ளும் இறுதிப் புரட்சிகரப் பணிக்கும் இடையே ஒரு பாலத்தைக் கட்டியெழுப்புவதாக இருந்தது.

கோரிக்கைகளுக்கு ஒரு மைய இலக்காக இருந்தது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர நனவின் வளர்ச்சியாகும். அவை சந்தர்ப்பவாத சூழ்ச்சிக்கையாளலுக்கான நியாயப்படுத்தலாகவோ அல்லது தொழிலாளர்களிடம் தற்போது இருக்கும் நனவு மட்டத்திற்கு அடிபணிவதாகவோ கருதப்படவில்லை. “இந்த வேலைத்திட்டம் தொழிலாளர்களின் பின்தங்கிய தன்மையை விட தொழிலாள வர்க்கத்தின் புறநிலை பணிகளை கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும்” என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். “அது சமுதாயத்தை உள்ளதை உள்ளபடியே கட்டாயம் பிரதிபலிக்க வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் பின்தங்கிய நிலையை அல்ல. அது பின்தங்கிய நிலையைக் கடப்பதற்கும் தோற்கடிப்பதற்கும் ஒரு கருவியாகும்.”[38]

லியோன் ட்ரொட்ஸ்கி, நான்காம் அகிலத்தின் ஸ்தாபகர்

ட்ரொட்ஸ்கிச இயக்கம் மட்டுமே இரண்டாம் உலகப் போரின் தன்மையைப் புரிந்து கொண்டு, நிலைமையைப் பற்றிய தெளிவான புரிதலுடன், முதலாளித்துவ வர்க்கத்தின் போர் வரைபடத்தை, பாட்டாளி வர்க்க உலகப் புரட்சிக்கான வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தை கொண்டு எதிர் கொள்ள தேவையான வேலைத்திட்டத்துடன் தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்க போராடியது என்பது வரலாற்று உண்மையாகும். இது ஒரு சில தீவிரமான முழக்கங்களை முன்னெடுப்பது தொடர்பான கேள்வி அல்ல. மாறாக, இதற்கு மார்க்சிசத்தின் நிலையான பாதுகாப்பும், மேலும் இந்த அடிப்படையில், ஒரு புரட்சிகர தலைமை மற்றும் காரியாளர்களின் வளர்ச்சியும் தேவைப்பட்டது.

டேவிட் நோர்த், “ட்ரொட்ஸ்கியின் இறுதி ஆண்டு” என்ற தனது கட்டுரையில், நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்ட உடனடிக் காலத்திலேயே ட்ரொட்ஸ்கியின் தீவிரமான வேலையைப் பற்றிய ஒரு சக்திவாய்ந்த கண்ணோட்டத்தை வழங்குகிறார். ஜேம்ஸ் பேர்ன்ஹாம், மக்ஸ் சாக்ட்மன் மற்றும் மார்ட்டின் அபேர்ன் தலைமையிலான அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியில் (SWP) உள்ள சிறுபான்மை பிரிவுக்கு எதிராக ட்ரொட்ஸ்கியின் புகழ்பெற்ற “கடைசி போராட்டம்” குறிப்பாக குறிப்பிடத்தக்கது. சோவியத் ஒன்றியத்தை ஒரு உருக்குலைந்த தொழிலாளர் அரசாக அறிவித்ததிலிருந்து பின்வாங்கியதன் மூலம், ஆகஸ்ட் 1939 இல் ஹிட்லர்-ஸ்ராலின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு அவர்கள் எதிர்வினையாற்றினர்.

இது வெறுமனே சோவியத் அரசை வரையறுக்க என்ன சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற வார்த்தைப்பிரயோகம் தொடர்பான கேள்வி அல்ல. டேவிட் நோர்த் எழுதுவது போல், இந்த கருத்துவேறுபாடு “இரண்டாம் உலகப் போரின் போதும், அதன்பின்னரும் எழவிருந்த புரட்சிகர மூலோபாயம், வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு குறித்த பல மிகக் கடினமான பிரச்சினைகளை எதிர்பார்த்தது.”[39] முன்னோக்கு மற்றும் வழிமுறை பற்றிய மிக அடிப்படையான கேள்விகள் ஆபத்தில் இருந்தன: அதாவது சகாப்தத்தை சோசலிசப் புரட்சியின் சகாப்தமாக மதிப்பீடு செய்தல், ஒரு சோசலிச சமுதாயத்தை கட்டமைக்கும் திறன் கொண்ட ஒரு புரட்சிகர சக்தியாக தொழிலாள வர்க்கத்தின் பாத்திரம், அக்டோபர் புரட்சியினதும் சோவியத் அதிகாரத்துவத்தினதும் தன்மை, அதேபோல் மார்க்சிச வழிமுறையும். சோவியத் ஒன்றியத்தின் பின்தங்கிய நிலை மற்றும் தனிமைப்படல் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச தோல்விகளின் விளைவாக அதன் மேலாதிக்கம் மற்றும் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை கொண்டிருந்த அதிகாரத்துவம் ஒரு ஒட்டுண்ணி சாதியா? அல்லது மார்க்சிசம் முன்கூட்டியே கணித்திராத ஒரு புதிய சுரண்டல் வர்க்கமா? என்ற கேள்விகளை உள்ளடக்கியிருந்தன.

பேர்ன்ஹாம், சாக்ட்மன் மற்றும் அபேர்ன் ஆகியோரின் நிலைப்பாடுகள் அடிப்படையில் அக்டோபர் புரட்சியையும் முழு சோசலிச திட்டத்தையும் நிராகரித்தன. தொழிலாள வர்க்கத்தின் தோல்விகளிலிருந்து அவர்களின் முக்கிய முடிவு, தொழிலாள வர்க்கமும் மார்க்சிசமும் தோல்வியடைந்தது, தலைமை காட்டிக் கொடுத்தது என்பதல்ல என்ற நடுத்தர வர்க்க பேராசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகளின் முழு அடுக்கின் வலதுபுறம் நோக்கிய ஒரு கூர்மையான மாற்றத்தை அவர்கள் பிரதிபலித்ததோடு மேலும் எதிர்பார்த்தனர்.

வர்க்கம், கட்சி மற்றும் தலைமை என்ற அவரது கடைசிக் கட்டுரையில், ட்ரொட்ஸ்கி இந்தப் பிரச்சினையைத் துல்லியமாகக் கையாண்டார். ஸ்பானியப் புரட்சியின் தோல்வியை உழைக்கும் மக்கள் மீது சுமத்த முற்பட்டவர்களை பின்வருமாறு அடையாளப்படுத்தினார்.

பிரபஞ்ச வளர்ச்சிகளின் சங்கிலியில் தோல்விகளை அத்தியாவசிமான ஒரு கண்ணியாக ஏற்றுக்கொள்ளும் இந்த இயலாமை மெய்யியல், தோல்விக்கு பொறுப்பான வேலைத்திட்டங்கள், கட்சிகள், நபர்கள் போன்ற உறுதியான காரணிகளின் கேள்வியை முன்வைக்க முற்றிலும் திறனற்றதுடன், அதனை மறுக்கின்றது. தலைவிதியின்படி நடக்கும் மற்றும் அடிபணிந்துபோவதற்கான இந்த மெய்யியல் புரட்சிகர நடவடிக்கைக்கான கோட்பாடாக மார்க்சிசத்திற்கு முற்றிலும் நேரெதிரானது. [40]

போரின் நிலைமைகள் மற்றும் ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புகளின் கீழ், இந்த “இயலாமை மெய்யியல்வாதிகள்” தீவிரமாக வலது பக்கம் மாறினர் மற்றும் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கான ஆதரவின் புதிய மற்றும் கூச்சமில்லாத அடித்தளமாக மாறினார்கள். பேர்ன்ஹாம் மற்றும் சாக்ட்மன் விஷயத்தில் இந்த பரிணாமம் குறிப்பாக அப்பட்டமாக இருந்தது. பேர்ன்ஹாம் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அணு ஆயுதப் போரை முன்வைப்பவராகவும், முதன்மையான நவ-பழமைவாத சித்தாந்தவாதியாகவும் ஆனார், சாக்ட்மன் கம்யூனிச எதிர்ப்பு AFL-CIO அதிகாரத்துவத்தின் அரசியல் ஆலோசகராக ஆனார். மற்றும் CIA ஆல் ஒழுங்கமைக்கப்பட்ட கியூபா மீதான ஆக்கிரமிப்பான Bay of Pigs மற்றும் வட வியட்நாம் மீது அமெரிக்க குண்டுவீச்சு போன்ற குற்றவியல் ஏகாதிபத்திய நடவடிக்கைகள் மற்றும் போர்களை ஆதரித்தார்.

மக்ஸ் சாக்ட்மன் (1904-1971) [Photo: Marxists.org]

பேர்ன்ஹாம் மற்றும் சாக்ட்மன் ஆகியோரை வியக்கவைக்கும் வகையில், ட்ரொட்ஸ்கி இயங்கியல் தர்க்கம் பற்றிய கேள்வியை விவாதத்தில் அறிமுகப்படுத்தினார் என்று நோர்த் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். நியூ யோர்க் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியரான பேர்ன்ஹாம், இயங்கியல் முறையை முற்றிலுமாக நிராகரித்தார். சாக்ட்மன் தத்துவப் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படவில்லை என்றும், இயங்கியல் சடவாதத்திற்கும் புரட்சிகர அரசியலுக்கும் உள்ள தொடர்பைக் கருத்தில் கொள்வதில் குறிப்பாக ஆர்வம் காட்டவில்லை என்றும் அறிவித்தார். ஆனால் ட்ரொட்ஸ்கி, புரட்சிகர நடவடிக்கையின் நோக்கத்திற்காக புறநிலை யதார்த்தத்தை பகுப்பாய்வு செய்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் ஒரு முறையாக இயங்கியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த முக்கியமான விஷயத்தை நோர்த் மேலும் பின்வருமாறு விவரிக்கின்றார்:

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலைக்கு அவசியமான ஒரு விஞ்ஞான முன்னோக்கின் வளர்ச்சிக்கு, ஒரு சிக்கலான, முரண்பாடான, எனவே, விரைவாக மாறிவரும் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலையின் ஒரு உயர்மட்ட பகுப்பாய்வு தேவைப்பட்டது. இதனை, நடைமுறைவாதத்தால் நீர்த்துப்போக செய்யப்பட்ட பொதுவான தர்க்கத்தினால் அடையமுடியாது. விஞ்ஞான வழிமுறை இல்லாததும், மெய்யியல் நிபுணத்துவத்திற்கான அவரது அனைத்து பாசாங்குகளும், சோவியத் சமூகம் மற்றும் கொள்கைகள் பற்றிய பேர்ன்ஹாமின் பகுப்பாய்வில் வரலாற்று உள்ளடக்கம் இல்லாமல் இருந்ததுடன், சமூகத்தின் மேற்பரப்பில் காணக்கூடிய நிகழ்வுகளின் தோற்றப்பாட்டுவாத விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சிக்கலான சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளுக்கு பேர்ன்ஹாமின் நடைமுறைவாத பொது அறிவு அணுகுமுறை கோட்பாட்டளவில் பயனற்றது. தற்போதைய சோவியத் ஒன்றியத்தை, சிறந்த முறையில், ஒரு உண்மையான தொழிலாளர் அரசாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்ததுடன் ஒப்பிடுகிறார். அதன் சீரழிவுக்கு அடித்தளத்திலுள்ள தேசிய மற்றும் சர்வதேச அளவில் சமூக மற்றும் அரசியல் சக்திகளின் வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளையும் மோதலையும் அவர் விளக்க முற்படவில்லை.[41]

இந்த வரலாற்று, தத்துவ மற்றும் அரசியல் வழிமுறையின் பாதுகாப்பின் அடிப்படையில், அதாவது மார்க்சிசம், ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலம் இரண்டாம் உலகப் போரின் தன்மையை பகுப்பாய்வு செய்து உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கை வளர்க்க முடிந்தது.

மே 19-26, 1940 இல் நடைபெற்ற நான்காம் அகிலத்தின் அவசரகால மாநாட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏகாதிபத்தியப் போர் பற்றிய நான்காம் அகிலத்தின் அறிக்கை, “சர்வதேச முதலாளித்துவ நலன்களின் முரண்பாடுகளில் இருந்து தவிர்க்கமுடியாமல் உருவாகிய இரண்டாம் உலகப் போரின் ஏகாதிபத்தியத் தன்மையை விளக்கியது. உத்தியோகபூர்வ கட்டுக்கதைகளுக்கு மாறாக, மக்களுக்கு மயக்கமூட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட போருக்கானதும், ஏனைய அனைத்து சமூகத் தீமைகளான வேலையின்மை, அதிக வாழ்க்கைச் செலவு, பாசிசம், காலனித்துவ ஒடுக்குமுறைக்குமான முக்கிய காரணம் உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமை அடித்தளமாக கொண்டுள்ள முதலாளித்துவ அரசுமே என்பதை அது குறிப்பிட்டது”

எவ்வாறாயினும், சமூகத்தின் முக்கிய உற்பத்தி சக்திகள் தனிமைப்படுத்தப்பட்ட முதலாளித்துவக் குழுக்களின் கைகளில் இருக்கும் வரையும், இந்தக் குழுக்களின் கைகளில் தேசிய அரசு ஒரு வளைந்துகொடுக்கும் கருவியாக இருக்கும் வரை, சந்தைகளுக்கான போராட்டம், மூலப்பொருட்களின் ஆதாரங்களுக்காக, ஆதிக்கத்திற்கான போராட்டம். உலகின், தவிர்க்க முடியாமல் மேலும் மேலும் அழிவுகரமான தன்மையை எடுக்கமுடியும். அரசு அதிகாரம் மற்றும் பொருளாதாரத்தின் மேலாதிக்கம் ஆகியவை புரட்சிகர தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே இந்த வெறித்தனமான ஏகாதிபத்திய கும்பல்களின் கைகளில் இருந்து பறித்தெடுக்கப்பட முடியும்.”[42]

ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை ஒரு நீண்ட கால முன்னோக்கில் நோக்குநிலைப்படுத்தவும், முதலாளித்துவ அமைப்பு மற்றும் உலகப் புரட்சியின் நெருக்கடியில் ஒரு புதிய கட்டத்திற்கு காரியாளர்களை தயார்படுத்தவும் முயன்று கொண்டிருந்தார் என்று டேவிட் நோர்த் தனது கட்டுரையில் விளக்குகிறார். “ஒரு நீண்ட கால மரண வேதனையைத்தவிர, முதலாளித்துவ உலகத்திற்கு எந்த வழியும் இல்லை. போர், எழுச்சிகள், தற்காலிய போர் நிறுத்தங்கள், புதிய போர்கள் மற்றும் புதிய எழுச்சிகள் ஆகியவற்றிற்கு பல தசாப்தங்கள் இல்லையென்றாலும் நீண்ட ஆண்டுகளுக்கு தயாராக வேண்டியது அவசியம்” என்று நான்காம் அகிலத்தின் அறிக்கை வலியுறுத்தியது.

“தலைமையின் பிரச்சனை” என்ற தலைப்பில் ஒரு பகுதியில் அறிக்கை வலியுறுத்தியது:

ஒரு இளம் புரட்சிகரக் கட்சி இந்த முன்னோக்கின் அடிப்படையில் தன்னை அடித்தளமாகக் கொள்ள வேண்டும். தன்னைப் பரிசோதிக்கவும், அனுபவத்தைக் குவிக்கவும், முதிர்ச்சியடையவும் போதுமான வாய்ப்புகளையும் சாத்தியங்களையும் வரலாறு அதற்கு வழங்கும். முன்னணிப்படை எவ்வளவு விரைவாக ஒன்றிணைக்கப்படுகிறதோ, அவ்வளவு இரத்தக்களரி வலிப்புகளின் சகாப்தம் குறைக்கப்படும், நமது கிரகம் குறைவான அழிவை சந்திக்கும். ஆனால், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஒரு புரட்சிகரக் கட்சி இல்லத வரை, மாபெரும் வரலாற்றுப் பிரச்சனை எந்த வகையிலும் தீர்க்கப்படாது. வேகங்கள் மற்றும் நேர இடைவெளிகள் பற்றிய கேள்வி மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது; ஆனால் அது பொதுவான வரலாற்றுக் கண்ணோட்டத்தையோ அல்லது நமது கொள்கையின் திசையையோ மாற்றாது. முடிவு எளிமையானது: பத்து மடங்கு ஆற்றலுடன் பாட்டாளி வர்க்க முன்னணிப் படைக்கு கல்வி கற்பிக்கும் மற்றும் ஒழுங்கமைக்கும் பணியைத் தொடர வேண்டியது அவசியம். துல்லியமாக இதிலேயே நான்காம் அகிலத்தின் பணி தங்கியுள்ளது.[43]

ட்ரொட்ஸ்கிச இயக்கம் இந்தப் பணியை நிறைவேற்றியது என்பதற்கு இந்தப் பள்ளியில் நாம் மதிப்பாய்வு செய்யவிருக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முழுப் பதிவும் சான்றாகும். இப்போது, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் ஐந்தாவது காலகட்டமாக நாம் வரையறுத்த, வேகமாக வளர்ந்து வரும் புதிய போரும் புரட்சியுமான நிலைமைகளின் கீழ், “பாட்டாளி வர்க்க முன்னணிப் படைக்கு கல்வி மற்றும் ஒழுங்கமைக்கும்” வேலை மீண்டும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். தோழர் நோர்த் தனது “ஜூன் 2023 இல் சோசலிச சமத்துவக் கட்சியின் காரியாளர்கள் கூட்டத்திற்கான அறிமுகக் குறிப்புகளில் கூறியது போல்:

பரந்துபட்ட தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் வளர்ச்சியடைந்து வரும் காலகட்டத்தில், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர பதிலையும் புரட்சிகர வேலைத்திட்டத்தையும் எங்கள் கட்சியால் வழங்க முடியும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால் அது நடைபெற வேண்டுமானால், எமது காரியாளர்கள் வரலாற்று அனுபவங்கள், முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படைக் கேள்விகள் மீதான போராட்டம் ஆகியவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மற்ற எல்லா அரசியல் போக்கிலிருந்தும் நமது இயக்கத்தை வேறுபடுத்துவது எது என்பதை காரியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஏன் நமது இயக்கம் மட்டுமே, வேறு எந்த இயக்கமும் மார்க்சிசத்திற்கான போராட்டத்தின் வரலாற்று தொடர்ச்சியை பிரதிபலிக்கவில்லை. அந்த தொடர்ச்சியே, லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற சமீபத்திய நூலின் தலைப்பில் எடுத்துக்காட்டப்படுகிறது என நான் நினைக்கிறேன். ட்ரொட்ஸ்கிசம் பற்றிய நமது குறிப்பிட்ட கருத்து என்னவென்றால், சோசலிசத்தின் எதிர்கால வளர்ச்சி ஒரு வெகுஜன புரட்சிகர இயக்கம் லியோன் ட்ரொட்ஸ்கியின் அரசியல் மரபு சார்ந்ததாக இருக்கும் என்பதை அனைத்து வரலாற்று அனுபவங்களும் நிறுவியுள்ளன, ஏனெனில் கடந்த 60 ஆண்டுகளில் நான்காவது அகிலத்தின் அனைத்துலக்குழுவின் பணிகளின் மூலம் இந்த மரபு உருவாக்கப்பட்டுள்ளது. மார்க்சிச இயக்கத்தின் அனைத்து வரலாற்று அனுபவங்களும் இதுதான் உண்மையான புரட்சிகரப் பணிக்கான இன்றியமையாத அடிப்படை என்பதை நிரூபிக்கிறது. [44]

[1] Eric Hobsbawm, “Can We Write the History of the Russian Revolution?” in On History, New York: The New Press 1997, p. 242.

[2] David North, “Leon Trotsky and the Fate of Socialism in the Twentieth Century. A Reply to Eric Hobsbawm” in: The Russian Revolution and the Unfinished Twentieth Century. URL: https://www.wsws.org/en/special/library/russian-revolution-unfinished-twentieth-century/04.html. Emphasis in the original.

[3] Leon Trotsky,The Transitional Program (1938). URL: https://www.wsws.org/en/articles/2008/10/prog-o21.html.

[4] Hobsbawm, “Can We Write the History of the Russian Revolution?”, pp. 249 and 247.

[5] David North, “After the Demise of the USSR: The Struggle for Marxism and the Tasks of the Fourth International.” Report to the 12th Plenum of the ICFI, March 11, 1992. URL: https://www.wsws.org/en/special/library/fi-19-1/18.html.

[6] Leon Trotsky, The Permanent Revolution (London: New Park, 1971), pp. 239-40.

[7] David North, “Leon Trotsky and the Development of Marxism” in: Leon Trotsky and the Struggle for Socialism in the Twentieth-First Century, Mehring Books 2023, p. 43. URL: https://www.wsws.org/en/special/library/leon-trotsky-development-marxism-tom-henehan/04.html. Emphasis in the original.

[8] Leon Trotsky, “Through What Stage Are We Passing?” Speech given on June 21, 1924 and published in Russian at the time first in Pravda and then the pamphlet “Zapad I Vostok.” URL: https://www.marxists.org/archive/trotsky/1924/06/stage.html.

[9] Leon Trotsky, Lessons of October, 1924. URL: https://www.wsws.org/en/special/library/lessons-of-october-leon-trotsky-1924/01.html

[10]Leon Trotsky, My Life. https://www.marxists.org/archive/trotsky/1930/mylife/ch41.html.

[11]Leon Trotsky, “The Chinese Revolution and the Theses of Comrade Stalin,” May 17, 1927. URL: https://www.marxists.org/archive/trotsky/1932/pcr/01.html.

[12] Leon Trotsky, The Third International After Lenin. URL: https://www.marxists.org/archive/trotsky/1928/3rd/ti01.htm.

[13] Leon Trotsky, “The German Catastrophe: The Responsibility of the Leadership,” May 1933. URL: https://www.marxists.org/archive/trotsky/germany/1933/330528.html.

[14] David North: “Leon Trotsky and the Development of Marxism,” in Leon Trotsky and the Struggle for Socialism in the Twenty-First Century, p. 26.

[15] Leon Trotsky, “To Build Communist Parties and an International Anew,” July 1933. URL: https://www.marxists.org/archive/trotsky/germany/1933/330715.htm

[16] Leon Trotsky, “The Collapse of the KPD,” in Writings of Leon Trotsky (1932-33), New York 1972, p. 195.

[17] Leon Trotsky, “What Next? Vital Questions for the German Proletariat,” January 1932. URL: https://www.marxists.org/archive/trotsky/germany/1932-ger/index.htm

[18] Leon Trotsky, “What Is National Socialism?” June 1933. URL: https://www.marxists.org/archive/trotsky/germany/1933/330610.htm

[19] Leon Trotsky, “The Lessons of Spain: The Last Warning,” December 1937. https://www.marxists.org/archive/trotsky/1937/xx/spain01.htm

[20] Leon Trotsky, “Centrism and the Fourth International,” 1934. URL: https://www.marxists.org/archive/trotsky/1934/02/centrism-tm.htm

[21] Leon Trotsky, “The Lessons of Spain: The Last Warning,” 1937. URL: https://www.marxists.org/archive/trotsky/1937/xx/spain01.htm

[22] Leon Trotsky, “Whither France? Once Again, Whither France”, March 28, 1935. URL: https://www.marxists.org/archive/trotsky/1936/whitherfrance/ch01.htm

[23] Leon Trotsky, “Whither France?”, November 1934. URL: https://www.marxists.org/archive/trotsky/1936/whitherfrance/ch00.htm

[24] Leon Trotsky: “Whither France? Once Again Whither France,” March 28, 1935. URL: https://www.marxists.org/archive/trotsky/1936/whitherfrance/ch01.htm

[25] Ibid.

[26] Leon Trotsky, “The Beginning of the End,” October 1937. URL: https://www.marxists.org/archive/trotsky/1937/10/begin.htm

[27] Ibid.

[28] Leon Trotsky, The Revolution Betrayed. URL: https://www.marxists.org/archive/trotsky/1936/revbet/ch09.htm

[29] David North, “Trotskyism versus Stalinism,” August 23, 1987. URL: https://www.wsws.org/en/special/library/trotskyism-versus-stalinism/speech.html

[30] David North, “Leon Trotsky and the Development of Marxism,” in Leon Trotsky and the Struggle for Socialism in the Twenty-First Century, p. 31.

[31] Leon Trotsky, Diary in Exile 1935, London, 1958, p. 54.

[32] Leon Trotsky, “The Death Agony of Capitalism and the Tasks of the Fourth International: The Transitional Program,” 1938. URL: https://www.marxists.org/archive/trotsky/1938/tp/

[33] David North, “Seventy-Five Years of the Fourth International 1938–2013,” in Leon Trotsky and the Struggle for Socialism in the Twenty-First Century, p. 31.

[34] Leon Trotsky, “The Death Agony of Capitalism and the Tasks of the Fourth International: The Transitional Program,” 1938. URL: https://www.marxists.org/archive/trotsky/1938/tp/

[35] Ibid.

[36] Ibid.

[37] The Historical and International Foundations of the Socialist Equality Party (US), 2008. “The Founding of the Fourth International.” URL: https://www.wsws.org/en/special/library/foundations-us/17.html.

[38] Leon Trotsky, “The Death Agony of Capitalism and the Tasks of the Fourth International: The Transitional Program,” 1938. URL: https://www.marxists.org/archive/trotsky/1938/tp/

[39] David North, “Trotsky’s Last Year: 1939-1940,” in Leon Trotsky and the Struggle for Socialism in the Twenty-First Century, p. 165.

[40] Leon Trotsky, “The Class, the Party and the Leadership,” 1940. URL: https://www.marxists.org/archive/trotsky/1940/xx/party.htm

[42] David North, “Trotsky’s Last Year: 1939-1940,” in Leon Trotsky and the Struggle for Socialism in the Twenty-First Century, pp 172-173.

[42] Leon Trotsky, “Manifesto of the Fourth International on Imperialist War,” May 1940. URL: https://www.marxists.org/history/etol/document/fi/1938-1949/emergconf/fi-emerg02.htm

[43] Ibid.

[44] David North, “Introductory Remarks to the Friday Night Aggregate Meeting on June 23, 2023.” Socialist Equality Party Internal Bulletin: June 2023.

Loading