சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

1985-86: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள் ட்ரொட்ஸ்கிசத்தின் வெற்றி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பின்வரும் விரிவுரை, ஜூலை 30, 2023 இல் இருந்து ஆகஸ்ட் 4, 2023 வரை நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைப் பள்ளிக்கு, பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர் கிறிஸ் மார்ஸ்டனும், துருக்கியின் சோசலிச சமத்துவக் குழுவின் (Sosyalist Eşitlik Grubu) முன்னணி உறுப்பினர் உலாஸ் அடெஸ்சியும் வழங்கிய உரையாகும். இந்தக் கோடைப் பள்ளியின் மற்ற அனைத்து விரிவுரைகளையும் இங்கே காணலாம்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு உள்ளேயே ட்ரொட்ஸ்கிசத்தை அழிப்பதற்கான ஒரு போக்காக இருந்த ஒரு தீர்மானகரமான முயற்சிக்கு எதிராக நடத்தப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தை இந்த விரிவுரை விவரிக்கிறது. சர்வதேச அளவில் அப்போதிருந்த அதன் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களும் அப்போராட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்தார்கள்.

நான்காம் அகிலத்தின் உயிர்வாழ்வே அதில் பணயத்தில் இருந்தது. கட்சியின் 2019 பள்ளியில் டேவிட் நோர்த் வழங்கிய ஆரம்ப உரையில் வலியுறுத்தப்பட்டவாறு:

அனைத்துலகக் குழுவைத் தவிர லியோன் ட்ரொட்ஸ்கி ஸ்தாபித்த இயக்கம் அரசியல்ரீதியில் பப்லோவாதிகளால் கலைக்கப்பட்டு இருந்தன. பப்லோவாதிகளால் அமைப்புரீதியில் கட்டுப்பாட்டை நிறுவ முடிந்திருந்த பிற நாடுகளிலும், ட்ரொட்ஸ்கிச அமைப்புகளை அவர்கள் ஸ்ராலினிச, சமூக ஜனநாயக அல்லது முதலாளித்துவ தேசியவாத அமைப்புகளின் அரசியல் தொங்குதசைகளாக மாற்றி, அவற்றை அழித்திருந்தனர். 1985 அளவில், அந்தக் கட்டத்தில் பப்லோவாதத்திற்கு சரணடைந்திருந்த தொழிலாளர் புரட்சிக் கட்சியும் அதே சிதைவு நடவடிக்கையை பூர்த்தியாக்குவதற்கு அண்மித்து இருந்தது. [1]

இந்த விரிவுரை பின்வரும் டேவிட் நோர்த்தின் ஆய்வு முடிவுகளை விரிவாக எடுத்துரைக்கும்:

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் காப்பாற்றி, நிச்சயமாக, மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நான்காம் அகிலத்தின் எல்லா பிரிவுகளிலும் ட்ரொட்ஸ்கிசத்திற்காக அர்ப்பணித்துள்ள தோழர்கள், நான்காம் அகிலத்தை மீளக்கட்டியெழுப்பத் தீர்மானமாக இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் 1985 நெருக்கடிக்கு அடித்தளத்தில் இருந்த காரணங்கள் மீது உயர்ந்த மட்டத்தில் செய்யப்பட்ட பகுப்பாய்வு இல்லாதிருந்திருந்தால், WRP இன் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட இருந்த நோக்குநிலை பிறழ்வால் அவர்களின் முயற்சிகள் சுமையேற்றப்பட்டிருக்கும். உண்மையில், பப்லோவாதத்திற்கு WRP சரணடைந்தமை குறித்தும் மற்றும் ஜெர்ரி ஹீலியின் தத்துவார்த்த தம்பட்டத்தைக் குறித்தும், 1982 மற்றும் 1984 க்கு இடையே வேர்க்கர்ஸ் லீக்கின் தலைமையால் விரிவாக எழுதப்பட்ட அந்த விமர்சனமே, WRP இன் அரசியல் நெருக்கடி ஒட்டுமொத்த அனைத்துலகக் குழுவிலும் “சமமாக ஏற்பட்ட சீரழிவில்” வெறும் ஒரேயொரு அம்சம் என்ற கிளிஃவ் சுலோட்டரின் எரிச்சலூட்டும் பொய்யை மறுத்துரைத்தது. [2]

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை (ICFI) அழிப்பதற்கான முயற்சி ஏன் தோல்வியடைந்தது என்பதையும், அதற்குப் பதிலாக உலகளவில் புரட்சிகர சோசலிசத்தின் மறுமலர்ச்சிக்கு அடித்தளத்தை வழங்கி, ICFI மட்டுமே புரட்சிகர சோசலிசத்திற்கான ஒரே சமகால பிரதிநிதி என்பதை உறுதிப்படுத்திய மரபார்ந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் ஒரு தீர்க்கமான வெற்றிக்கு அது வழிவகுத்தது என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்துவோம்.

ஜெர்ரி ஹீலி, கிளிஃவ் சுலோட்டர் மற்றும் மைக்கல் பண்டா ஆகியோர் ICFI க்குள் மிகப் பெரும் அரசியல் ஆளுமையைக் கொண்டிருந்தார்கள். 1961 மற்றும் 1964 க்கு இடையே பப்லோவாதிகள் உடனான அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) கொள்கையற்ற மறுஐக்கியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தலைமை கொடுத்தார்கள். அவர்கள் எழுதிய ஆவணங்கள் இப்போதும் நம் காரியாளர்களைப் பயிற்றுவிக்கப் பயன்படுகின்றன.

13 மார்ச், 1983 இல், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஒரு கூட்டத்தின் மேடையில், ஜெர்ரி ஹீலி, மைக்கல் பண்டா மற்றும் கிளிஃவ் சுலோட்டர்

மறுஐக்கியம், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு ஒரு கடுமையான அடியாக இருந்தது. பப்லோவாதிகள் உலகெங்கிலுமான நம்பிக்கைக்குரிய இயக்கங்களைக் கலைத்து, மார்க்சிச-விரோத போக்குகளுக்கு அடிபணிந்து கொண்டிருந்த நிலைமைகளின் கீழ், முக்கியமாக பிரிட்டனில் உள்ள சோசலிச தொழிலாளர் கழகம் (SLL), பிரான்சில் OCI இன் ஆதரவுடன், ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளைப் பாதுகாத்தது.

ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் அதன் பப்லோவாத அனுதாபிகளுக்கு எதிராக SLL இன் அடுத்தடுத்த அரசியல் போராட்டம், அமெரிக்காவில் வேர்க்கர்ஸ் லீக்கிற்கும் மற்றும் இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கும் அடித்தளம் அமைத்தது. இது, லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவக் கூட்டணி அரசாங்கத்தில் இணைந்த போது, இலங்கையில் 1964 இல் வரலாற்று முக்கியத்துவம் மிக்க அந்த “மாபெரும் காட்டிக்கொடுப்புக்கு” எதிரான எதிர்ப்பின் மூலமாக மேற்கொள்ளப்பட்டது.

பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து SLL எவ்வாறு பின்வாங்கியது என்பதை முந்தைய பேச்சாளர்கள் விளக்கி உள்ளனர். சுமார் 1967 இல் இருந்து, இந்த இயக்கத்தின் மீது ஏற்பட்ட மிகப் பெரும் அரசியல் மற்றும் சமூக அழுத்தங்களுக்கு ஏற்ப பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தங்களை மாற்றிக் கொள்ளத் தொடங்கினர். சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம், மாவோயிசம், காஸ்ட்ரோயிசம் மற்றும் பிற மார்க்சிச-விரோத சக்திகளின் அரசியல் மேலாதிக்கமானது, திருத்தல்வாதத்திற்கு எதிராகவும் மற்றும் சர்வதேசவாதத்திற்காகவும் இடைவிடாது போராட்டத்தைக் கோரிய நிலைமைகளின் கீழ், பிரிட்டனில் ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை கொடுப்பதும், அனைத்திற்கும் மேலாக ஸ்ராலினிச பத்திரிகையான Morning Star க்குப் போட்டியாக ஒரு நாளிதழைக் கொண்டு வருவதும், உலகக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை வழங்கும் என்ற கருத்துரு அபிவிருத்தி செய்யப்பட்டது.

வரலாறைக் கைவிட்ட ஒரு தேசியவாத அணுகுமுறையான தந்திரோபாய சந்தர்ப்பவாதத்தை (tactical opportunism) நோக்கிய ஒரு திருப்பமாக இதை நாம் வரையறுத்த நிலையில், இது பேரழிவுகரமாக நிரூபணமானது. தேசியப் பணிகளில் கவனம் செலுத்துவதை அர்த்தப்படுத்திய இது, சந்தர்ப்பவாதம் மற்றும் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்தும், சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக ICFI ஐ கட்டியெழுப்பும் முன்னோக்கில் இருந்தும் பின்வாங்குவதை அர்த்தப்படுத்தியது. இது WRP அதிகரித்தளவில் பப்லோவாத நோக்குநிலையை ஏற்க வழிவகுத்ததுடன், அனைத்துலகக் குழுவின் இருப்பையே அச்சுறுத்தியது.

இது ஒரு நீண்ட அரசியல் நிகழ்ச்சிபோக்காக இருந்தது. WRP எவ்வாறு ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக்கொடுத்தது என்பதில் விளக்கி இருப்பதைப் போல:

சீரழிவு தொடங்கிய குறிப்பிட்ட “தருணத்தை” உறுதிப்படுத்துவது நிச்சயமாக சாத்தியமில்லை. எப்படி இருந்தாலும், அத்தகைய நிகழ்ச்சிபோக்குகள் ஒரு நேர்கோட்டில் நடக்கவில்லை. இறக்கும் தருவாயில் உள்ள ஒருவர், அவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் வியக்கும் அளவுக்கு வீரியத்தைக் காட்டும் நாட்களும் உண்டு. ஆனால் 1970 களின் முற்பகுதியில் WRP இன் அரசியல் சீரழிவு, பிரிக்கவியலாதவாறு, உலகக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான முக்கிய தத்துவார்த்தப் போராட்டமான திருத்தல்வாதத்திற்கு எதிரான சர்வதேச போராட்டத்தில் இருந்து அது விலகியதுடன் பிணைந்திருந்தது. [3]

பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து SLL விலகியதன் முதல் தீவிர அரசியல் விளைவு, பிரான்சில் OCI இன் மத்தியவாத சீரழிவுக்கு அது காட்டிய விடையிறுப்பிலும் மற்றும் அதைத் தொடர்ந்து ஜூலை 1971 இல் ஏற்பட்ட பிளவிலும் வெளிப்பட்டது. 1963 இல் மறுஐக்கியத்திற்கு எதிரான போராட்டத்தில், முன்னோக்கு பற்றிய முக்கிய கேள்விகளை SLL முறையாகக் கையாண்டதுடன், முக்கிய ஆவணங்களை உருவாக்கி, SWP க்குள் இருந்த ICFI ஆதரவு அணியின் வளர்ச்சிக்கு உதவி இருந்தது. ஆனால் இந்த முறை, மத்தியவாத அரசியலை நோக்கி OCI திரும்பியதை எதிர்ப்பதற்குப் பதிலாக இயங்கியல் சடவாதம் மீதான கருத்து வேறுபாடுகளை மேற்கோளிட்டு, SLL வேக வேகமாக ஓர் அமைப்புரீதியான உடைவை நோக்கி நகர்ந்தது.

தொழிலாளர் புரட்சிக் கட்சி எவ்வாறு ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக்கொடுத்தது

அத்தகைய ஒரு முழுமையான போராட்டத்தை நடத்துவது பிரிட்டனில் உருவெடுத்து வந்த நெருக்கடிக்குள் SLL இன் நடைமுறை தலையீடுகளைக் பாதிப்பிற்குட்படுத்தி விடும் என்று ஹீலி அஞ்சியதால், அவர் அதைச் செய்ய தயங்கினார். OCI இனது போன்ற நிலைப்பாடுகளுக்கு 1966 உலக மாநாட்டில் சுலோட்டரும் குரல் கொடுத்திருந்தார் என்பதால், ஹீலியின் அச்சங்கள் அதிகரித்தன. நான்காம் அகிலத்தை “மறுசீரமைக்கும்” OCI இன் சூத்திரத்தை ஆரம்பத்தில் சுலோட்டம் ஆதரித்திருந்தார். பண்டா, அவர் பங்கிற்கு, மாவோ, ஹோ சி மின் மற்றும் கமால் அப்தெல் நாசர் போன்ற பிரமுகர்களுடனான அரசியல் மோகத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

ஆழமடைந்து வந்த உலக முதலாளித்துவ நெருக்கடியும் மற்றும் கட்சி உறுப்பினர்களின் அதிகரிப்பு ஆகிய நிலைமைகளின் கீழ், OCI உடனான பிளவின் படிப்பினைகளைப் பெற்று, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அடித்தளங்களை SLL அதன் பணிகளின் மையத்தில் வைக்கத் தவறியதால், SLL இன் தேசிய-சந்தர்ப்பவாத நோக்குநிலை வேகமெடுத்தது. 1970 களின் முற்பகுதியில் தீவிரமடைந்த வர்க்கப் போராட்டம், அரசியல்ரீதியில் டோரி-எதிர்ப்பு இயக்கத்தை SLL அதிகரித்தளவில் தழுவி, சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதில் ஒருமுனைப்படுவதில் இருந்து பின்வாங்கும் நிலையை உருவாக்கியது.

தோழர்கள் இவான் பிளேக் மற்றும் ரொம் மக்கமன் விரிவாக மீளாய்வு செய்துள்ளவாறு, அந்தக் காலக்கட்டம் அமெரிக்காவின் வேர்க்கர்ஸ் லீக்கும், பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளும் வேறு வேறு பாதைகளில், ஒரு முக்கிய திருப்புமுனையாக இருந்தது. வொல்ஃபோர்த்திற்கு எதிரான போராட்டத்தில் WRP தலைவர்கள் வேர்க்கர்ஸ் லீக்கை ஆதரித்திருந்தாலும், வேர்க்கர்ஸ் லீக்கிற்கு மட்டுமல்லாமல் மாறாக ஒட்டுமொத்த அனைத்துலகக் குழுவுக்குமான அந்த முக்கிய அனுபவத்தில் இருந்து அவர்கள் அவசியமான படிப்பினைகளைப் பெற தவறியிருந்தனர். தோழர் நோர்த் வலியுறுத்தியதைப் போல, வொல்ஃபோர்த் குறித்து WRP ஒரேயொரு முக்கிய அறிக்கையைக் கூட எழுதி இருக்கவில்லை என்ற உண்மையில் இது பிரதிபலித்தது. அதற்கு நேரெதிர் விதமாக, வேர்க்கர்ஸ் லீக் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றையும் மற்றும் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் படிப்பினைகளையும் அதன் அரசியல் பணியின் மையத்தில் வைத்தது.

1973 இல் WRP இன் ஸ்தாபக மாநாடு

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஸ்தாபகம்

அனைத்துலகக் குழுவுடன் கலந்துரையாடாமலேயே, 1973 இல் தேசிய பரிசீலனைகளின் அடிப்படையில் தொழிலாளர் புரட்சிக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. சோசலிச கொள்கைகளுக்காக கடமைப்பாடுள்ள ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதே அதன் இலட்சியமாகக் குறிப்பிடப்பட்டது.

எவ்வாறிருப்பினும் OCI இன் சீரழிவு தொடர்பாக சரியாகவும் நேர்மறையாகவும் இருந்த அதன் முன்வரலாறு உட்பட, பப்லோவாதத்திற்கு எதிராக WRP இன் கடந்த கால அரசியல் போராட்ட வரலாறு, சர்வதேச அளவில் அதற்குத் தொடர்ந்து அரசியல் உத்வேகத்தை வழங்கியது. இது ஜேர்மனியிலும் ஆஸ்திரேலியாவிலும் புதிய பிரிவுகளை உருவாக்க இட்டுச் சென்றது என்றாலும், ஒரு சர்வதேச அச்சில் இருந்தும் மற்றும் அதன் அரசியல் சக-சிந்தனையாளர்களுடன் ஒத்துழைப்புகளைத் தீவிரப்படுத்துவதிலிருந்து அது விலகியமையும், நீண்டகால அரசியல் நோக்குநிலை பிறழ்வுக்கான ஒரு காலகட்டத்தை திறந்துவிட்டது. இது மோசமான அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் காட்டிக்கொடுப்புக்குப் பாதை அமைத்தது.

1972 இல் ஜேர்மன் சோசலிச இளைஞர் குழுவின் ஸ்தாபக மாநாடு

டோரிகளை வீழ்த்தி தொழிற் கட்சி அரசாங்கத்தை திரும்பக் கொண்டு வருவதற்கான போராட்டத்தின் மீது WRP ஐ ஸ்தாபித்த பின்னர், அந்த அடிப்படையில் கட்சியை நோக்கி ஈர்க்கப்பட்ட நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் ட்ரொட்ஸ்கிச கொள்கைகளின் அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்டிராத நிலையில், அக்கட்சி அவர்களிடம் அதன் மேலாளுமையை இழந்தது என்பதை தொழிலாளர் புரட்சிக் கட்சி எவ்வாறு ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக் கொடுத்தது என்ற படைப்பு விளக்குகிறது.

அதன் வேலைத்திட்டத்தை மறுவரையறை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட அதன் தலைமை, அதன் ட்ரொட்ஸ்கிச அடையாளத்தையும் மற்றும் தொழிற் கட்சிக்கான எதிர்ப்பின் மீதும் புதிய வலியுறுத்தலை நிலைநிறுத்தியது. ஆனால் இது பிரிட்டிஷ் லேலண்ட் கார் ஆலைத் தொழிலாளரும் மற்றும் கட்சியின் அனைத்து தொழிற்சங்கக் கூட்டணியின் செயலாளருமான ஆலன் தொர்னெட் தலைமையில், மத்தியவாத அடிப்படையில் சேர்க்கப்பட்டு இருந்த தொழிலாளர்களின் கணிசமான ஒரு பிரிவிடம் இருந்து எதிர்ப்பைச் சந்தித்தது. இந்த வலதுசாரி தாக்குதல், ஹீலியைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் நோக்கில் OCI ஆல் இரகசியமாக வழி நடத்தப்பட்டது.

தொர்னெட் உடனான மோதலில் அனைத்துலகக் குழு சம்பந்தப்பட்டிருக்கவில்லை. அவருடன் அதிகாரத்துவ முறையில் அணுகப்பட்டது. அனைத்துலகக் குழுவின் தலையீடு இருந்திருந்தால், அடிப்படையில் அது அரசியல் இயக்கவியலை மாற்றி இருக்கும். OCI இற்கு எதிராகவும் மற்றும் தொர்னொட்டின் வலது-மத்தியவாத நிலைப்பாடு பிரதிநிதித்துவம் செய்த பப்லோவாத திருத்தல்வாதத்தின் மீள் எழுச்சிக்கு எதிராகவும் WRP தலைமை போராட்டத்தை மீண்டும் தொடங்கி இருந்தால், சர்வதேச அளவில் அரசியல் நிலைமையில் மேலெழுந்து கொண்டிருந்த கூர்மையான மாற்றத்தின் முன்னால் அந்த உலக இயக்கத்தை அரசியல்ரீதியில் மீளஆயுதபாணியாக்கி இருக்கலாம்.

ஆனால் அதற்குப் பதிலாக, WRP ஒரு அதிதீவிர இடது திருப்பத்தை எடுத்து, தொழிற் கட்சி அரசாங்கத்தை தூக்கி எறியுமாறு தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுத்தது. இவ்வாறு செய்வது டோரிக்களை மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டு வரும் என்பதைத் தொழிலாளர்கள் அறிந்திருந்தார்கள். அந்த அழைப்பு, கட்சிக்குள் நடந்து வந்த ஒரு வர்க்க மாற்றத்தைப் பிரதிபலித்ததோடு, ஆழப்படுத்தியது. ஏற்கனவே அதன் தொழிலாள வர்க்க அடித்தளத்தின் கணிசமான பகுதியை இழந்திருந்த நிலையில், WRP அதன் வரலாற்றில் போராடி இருந்த பாட்டாளி வர்க்க நோக்குநிலை கொண்ட அடிப்படை வேலைத்திட்டத்தில் இருந்து முறித்துக் கொண்டிருந்தது.

கட்சியின் வரலாற்றுடனோ அல்லது அரசியல் போராட்டத்துடனோ எந்த உண்மையான தொடர்பு இல்லாத, நடிகர்கள் வனேசா, கொரின் ரெட்கிரேவ் மற்றும் நியூஸ் லைன் ஆசிரியர் அலெக்ஸ் மிட்செல் போன்ற குட்டி-முதலாளித்துவ சக்திகள் அதிகரித்தளவில் செல்வாக்கு செலுத்திய ஒரு தலைமைக்குள் இது ஆதரவைக் கண்டது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அபிவிருத்திக்கு அவசியமான தத்துவார்த்த அடித்தளம் இல்லாமல் பொறுமையிழந்து அவர்கள் விடையிறுத்தனர்.

இந்த அதிஇடது திருப்பத்தின் சந்தர்ப்பவாத சாராம்சம், நிரந்தரப் புரட்சித் தத்துவத்தையும், உலக சோசலிசப் புரட்சிக்கான மூலோபாயத்தையும் கைவிட்டதில் மிகத் தெளிவாக வெளிப்பட்டது. ஏப்ரல் 1976 இல், அனைத்துலகக் குழுவுக்குத் தெரியாமல் லிபிய அரசாங்கத்துடன் WRP ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நிலையில், அது அரபு முதலாளித்துவ வர்க்கத்தின் விலைபோன பிரச்சாரகராகவும் அரசியல் முகவராகவும் WRP மாறுவதைத் தொடங்கி வைத்தது.

அதற்கடுத்தடுத்த ஆண்டுகளில், கட்சித் தலைமைக்குள் இருந்த நடுத்தர வர்க்க அடுக்குகளின் அரசியல் செல்வாக்கு அபாயகரமாக வளர்ந்ததால், அது WRP க்குள் அன்னிய வர்க்க நலன்கள் ஊடுருவுவதற்கான பாதையாக மாறியது. இவர்கள்தான், உச்சபட்ச அதி-இடது நடவடிக்கைகளில் இருந்து தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவப் பிரிவுகளைக் கண்மூடித்தனமாகத் தழுவுவதை நோக்கிய தொடர்ச்சியான பல அரசியல் மாற்றங்களை ஆதரித்தார்கள். தொழிலாள வர்க்கத்திற்குள் ஊடுருவுவதற்கான போராட்டத்தின் அடிப்படையில் அல்லாமல், இவர்கள் கணிசமான வருவாய் வளங்களையும் வழங்கினார்கள். இது கட்சியின் சாமானிய உறுப்பினர்களிடம் இருந்து தலைமையை அன்னியப்படுத்தியதோடு அவர்களை நோக்கிய வெறுப்பையும் ஆழப்படுத்தியது மற்றும் ஜனநாயக மத்தியத்துவத்தின் (democratic centralism) அடித்தளங்களை அழிப்பதை விரைவுபடுத்தியது.

“தொழிலாளர் புரட்சிக் கட்சி எவ்வாறு ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக் கொடுத்தது” என்பதில் இருந்து பின்வரும் இந்தக் குறிப்பிடத்தக்க பத்தியில், சர்வதேச அளவில் அதன் அழிவுகரமான தாக்கம் விவரிக்கப்படுகிறது:

உலக சோசலிசப் புரட்சியின் நலன்களை பிரிட்டிஷ் அமைப்பின் உடனடி நடைமுறைத் தேவைகளுக்கு அடிபணியச் செய்ததே ட்ரொட்ஸ்கிசம் மீதான இந்த காட்டிக்கொடுப்பின் பிரதான வெளிப்பாடாக இருந்தது. WRP க்குள் பேரினவாதத்தின் அதிகரிப்பு கட்சியின் மீது, அனைத்திற்கும் மேலாக அதன் தலைமை மீது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நேரடி அழுத்தத்தை வெளிப்படுத்தியது. WRP செல்வாக்கு செலுத்தும் பொதுநல அமைப்பின் ஒரு சிறிய பகுதியாக அனைத்துலகக் குழு உருவாக்கப்பட்டு இருப்பதைப் போலவும், WRP இன் சொந்த வெளியுறவுக் கொள்கை நலன்களுக்கு ஏற்ப அதை கையாண்டு நிதி திரட்டலுக்கான ஓர் ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்பதைப் போலவும் பார்த்த ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர், அதை அவ்விதத்தில் கையாண்டனர்.

1980 களில், அனைத்துலகக் குழுவில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தப் பயன்படுத்திய அணுகுமுறைகள், பல நூற்றாண்டுகளாக பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் பயன்படுத்திய நடைமுறைகளுடன் ஒத்திருக்கத் தொடங்கின: அதாவது, பகலில் உறுதிமொழிகளைக் கைவிடுவதும் மற்றும் இரவில் மோசடியில் இறங்குவதும் என்றிருந்தது — நாம் இதை நேரடியான அர்த்தத்திலேயே குறிப்பிடுகிறோம். [4]

இந்த அரசியல் பின்வாங்கலும் மற்றும் நச்சுத்தன்மையான தேசியவாதமும் தான், 1982 மற்றும் 1984 க்கு இடையே டேவிட் நோர்த் நெறிப்படுத்திய விமர்சனங்களுக்கு WRP இன் விடையிறுப்பைத் தீர்மானித்தது. ஒரு பிளவு ஏற்படுமென வேர்க்கர்ஸ் லீக்கை அச்சுறுத்தியும், அனைத்துலகக் குழுவில் அவர்களின் அறிக்கைகள் மற்றும் கலந்துரையாடல்களைத் தடுத்தும் அது விடையிறுத்தது.

WRP இன் தசாப்த கால சீரழிவுக்கு அடியில் இருந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த கேள்விகளைப் புறநிலையாக எதிர்கொள்ள, WRP க்கு பிப்ரவரி 1984 ஓர் இன்றியமையாத வாய்ப்பை வழங்கியது. ஆனால் அதை அது நிராகரித்துவிட்டது. அதற்கு ஒரு மாதம் கழித்து, சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வெடித்தது. அது, 1926 இன் பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், பிரிட்டனில் முழுமையாக ஓராண்டு காலம் நீடித்த ஒரு மிகப் பெரிய வர்க்க போராட்டமாகும். அதில் இராணுவ பாணியில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பொலிஸ் நடவடிக்கைகளின் போது, 20,000 சுரங்கத் தொழிலாளர்கள் காயமடைந்தனர் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், 13,000 பேர் கைது செய்யப்பட்டனர், 200 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர், இரண்டு பேர் மறியல் களத்திலேயே கொல்லப்பட்டனர், அந்த குளிர்காலத்தில் நிலக்கரியைத் தோண்டியதற்காக மூன்று பேர் கொல்லப்பட்டனர், 966 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.

1984 சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் போது அவர்களின் பாரிய அணிவகுப்பின் ஒரு பகுதி

தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் (NUM) சங்கத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஓர் அரசு நடவடிக்கையினால் கருங்காலி ஜனநாயக சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கப்பட்டது. அந்த வேலைநிறுத்த தோல்வியைத் தொடர்ந்து அதிகமான சுரங்கங்கள் மூடப்பட்டதுடன், அந்த ஒட்டுமொத்த சமூகங்களும் நாசமாயின. அந்தப் போராட்டம் தான் WRP இன் முழுமையான அரசியல் சீரழிவை உறுதிப்படுத்தியதுடன், மற்றும் அதைத் தொடர்ந்து வெடித்த வெடிப்பைத் துரிதப்படுத்த உதவியது.

WRP இன் அரசியல் நிலைப்பாடானது, அதிதீவிர இடது வாயடிப்பு மற்றும் படுமோசமான சந்தர்ப்பவாதத்தின் கலவையாக இருந்தது. தொழிற் கட்சிக்கு ஒரேயொரு முறை கூட ஒரேயொரு கோரிக்கை கூட வைக்கவில்லை. தொழிலாளர்களின் புரட்சிகர அரசாங்கத்தை நிறுவுவதற்காக ஒரு பொது வேலைநிறுத்த கோரிக்கைகள் வைத்திருந்தால், ஒரு புரட்சிகர சோசலிச மாற்றீட்டுக்கான சிந்தனை கொண்ட ஆயிரக் கணக்கான தொழிலாளர்களை வென்றெடுத்து அக்கட்சிக்குக் கொண்டு வந்திருக்கும், ஆனால் அந்தக் கோரிக்கைக்குப் பதிலாக, டோரி அரசாங்கத்தை இராஜினாமா செய்ய நிர்பந்திக்கவும், புதிய தேர்தல்களுக்காகவும் மற்றும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிற் கட்சியை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கும் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டும் அழைப்புகள் விடுக்கப்பட்டன.

தொழிற்சங்க காங்கிரஸூம் (TUC) தொழிற் கட்சியும் டோரி அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமென WRP கோர மறுத்ததற்கும் மற்றும் தொழிலாளர்களின் ஒரு புரட்சிகர அரசாங்கத்திற்கான அதன் பிரச்சார நடவடிக்கைக்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப, மார்கரெட் தாட்சரின் அரசாங்கம் ஒரு போனாபார்ட்டிச சர்வாதிகாரமாக மாறி விட்டதாக கட்சி வாதிட்டது. இது வர்க்கப் போராட்டத்தை நசுக்கவும், அதனை மேற்பார்வை செய்யவும் ஆளும் வர்க்கம் இப்போது அது அதிகாரத்துவத்தை நம்பியிருக்கவில்லை இல்லை என்பதை அர்த்தப்படுத்தியது. அதற்கு பதிலாக, தொழிலாள வர்க்கம் மீது தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் வைத்திருந்த பிடியை உடைக்காமலேயே, ஒரு நேரடி போராட்டத்தில் WRP ஐ அதிகாரத்திற்கு கொண்டு வரும் புரட்சிகரச் சூழல் உருவாகி இருந்ததாகக் கூறப்பட்டது.

தாட்சரின் சர்வாதிகார அதிகாரங்களைக் குறித்த கூற்று, நிலக்கரி தொழிலாளர்களின் தோல்விக்கான மூலகாரணமான தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்புகளுக்கு அனுதாபத்தை வழங்கியது. தொழிற்சங்க காங்கிரஸ் (TUC) மற்றும் தொழிற் கட்சியைச் சவால் செய்ய மறுத்து, அதற்குப் பதிலாக தொழிற்சங்க போர்குணத்தை மட்டுமே WRP வலியுறுத்திய நிலைப்பாடு, ஸ்ராலினிசவாதி ஆர்தர் ஸ்கார்கில் தலைமையிலான NUM இன் அதிகாரத்துவத்திற்கு கட்சியை அடிபணியச் செய்தது. தொழிற்சங்க அதிகாரத்துவம் அரசியல்ரீதியில் சவால் விடுக்கப்படுவதைத் தடுத்து பாதுகாக்கும் பணி ஸ்கார்கில் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அந்த வேலைநிறுத்தத்தின் போது அரசியல்ரீதியில் கல்வியூட்டப்படாமல் நாளாந்த தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த உறுப்பினர்களைப் பொறுத்த வரை, ஒரு குறிப்பிட்ட தருணம் வரையில் WRP பெரியளவில் முன்னேறி கொண்டிருப்பதாகத் தோன்றியது. முக்கியமாக மிகவும் போர்குணமிக்க சுரங்கத் தொழிலாளர்களின் ஆதரவை அது வென்று வருவதாகத் தோன்றியது. ஆனால் அந்த வேலைநிறுத்தத்தின் தோல்வியோடு, இத்தகைய வெளிப்படையான வெற்றிகள் கலைந்து போயின.

இதற்கான WRP இன் பிரதிபலிப்பு குற்றகரமாக இருந்தது. 1984 டிசம்பரில் கட்சியின் ஏழாவது மாநாட்டில் முன்கணிக்கப்பட்டவாறு, அந்த வேலைநிறுத்தத் தோல்வியை தொடர்ந்து, பாசிச சர்வாதிகாரம் திணிக்கப்படவில்லை என்ற கூற்றை விளங்கப்படுத்துவதற்கு, சுரங்கத் தொழிலாளர்கள் “காட்டிக்கொடுக்கப்பட்டார்கள் ஆனால் தோற்கடிக்கப்படவில்லை” என்று WRP அறிவித்தது. உறுப்பினர்களிடம் இருந்து, குறிப்பாக வடக்கு பகுதியில் இருந்து வந்த அழுத்தத்திற்கு விடையிறுப்பாக, சிறையில் அடைக்கப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களை விடுதலை செய் அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. மாவோவின் “நீண்ட அணிவகுப்பை” (Long March) பற்றி பண்டா குறிப்பிட்டு, புரட்சி வரையில் கட்சி அணிவகுத்து செல்லும் என்று அறிவித்த நிலையில், உறுப்பினர்களை வெறும் செயற்பாடுகளில் மட்டும் வைத்திருப்பதே அதன் நம்பிக்கையாக இருந்து.

தொடர்ந்து ஸ்கார்கில் மற்றும் NUM இன் வாலைப் பிடித்துக் கொண்டிருக்காமல், அதற்குப் பதிலாக அந்த அனுபவத்தில் இருந்து தொழிலாள வர்க்கத்திற்கான படிப்பினைகளைப் பெறுவதற்கு அது முனைந்திருந்தால் கட்சிக்கு என்ன வெற்றி கிடைத்திருக்கும் என்பதைக் காட்டும் விதத்தில், அந்த அணிவகுப்பு சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் மத்தியில் கணிசமான ஆதரவைப் பெற்றது.

இதில் எதுவுமே அந்த நெருக்கடியைத் தடுக்கப் போதுமானதாக இல்லை. சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் தோல்வி, WRP இன் பெரும் பகுதியினரை, குறிப்பாக அக்கட்சி எந்திரத்திற்குள் இருந்த குட்டி-முதலாளித்துவக் கூறுகள் மற்றும் வர்க்க நிலைப்பாடற்ற கூறுபாடுகளைத் தடுமாறச் செய்து, மனச்சோர்வு உண்டாக்கி, வெறுப்புக்கு உள்ளாக்கியது. ஒரு புரட்சி அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது, பாசிசம் குறித்து எச்சரிக்கப்பட்டிருந்தார்கள், இரண்டுமே நடக்கவில்லை. அதுநாள் வரையிலான அவர்களின் அனைத்து முயற்சிகளும் வீணாகி விட்டது என்றும், முதலாளித்துவம் உயிர் வாழ முடியும் என்றும், நிலவும் சமூக அமைப்பிற்குள் அனேகமாக அவர்களுக்கு இன்னும் வசதியான ஓரிடத்தை காணக்கூடியதாக இருக்கலாம் என்றும் அவர்கள் தீர்மானித்தார்கள்.

அந்த சம்பவம், இலண்டன் கிளாபம் நகரின் கட்சி மையத்தில் முற்றிலும் கொள்கையற்ற கோஷ்டி மோதல்கள் வெடிப்பதற்கு களம் அமைத்தது.

அந்தப் பிளவு மற்றும் அதன் மைய படிப்பினைகளைக் குறித்த குறிப்பிட்ட நிகழ்வுகளைக் கூறுவதற்கு முன்னர், சில பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தியாக வேண்டும்.

ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியை தக்க வைப்பதில் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்த ஹீலி, சுலோட்டர் மற்றும் பண்டாவின் தனிப்பட்ட சீரழிவும், அரசியல் சீரழிவும், ஒரு துயரகரமான பரிமாணத்தைக் கொண்டுள்ளது. 1985 நெடுகிலும் மற்றும் 1986 வரையிலும் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும், இந்த வரலாற்றுப் போராட்டங்களை இழிவுபடுத்துவதற்கான WRP தலைமையின் முயற்சிகளை ICFI எதிர்த்தது. கடுமையான அரசியல் நெருக்கடி சமயத்தில், “அனைத்துலகக் குழுவுக்கு ஆதரவாகவா அல்லது எதிராகவா” என்பதையும், ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இந்த உலக இயக்கத்தின் அரசியல் தலைமையைக் கொண்டிருந்தார்கள் என்பதால், அந்த இடத்தை அவர்கள் தக்க வைப்பதா, அல்லது அவர்களின் தேசிய சந்தர்ப்பவாத பிற்போக்குத்தனத்தைத் தொடர்வதா என்பதையும் தீர்மானிக்க வேண்டியிருந்ததே WRP முகங்கொடுத்த மைய பிரச்சினை என்று அனைத்துலகக் குழு வலியுறுத்தியது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கொள்கைரீதியான பாணியில் செயல்பட்டது. இந்த உலகக் கட்சியின் அரசியல் அதிகாரத்தை ஏற்று அவர்களின் சர்வதேச சக-சிந்தனையாளர்களுடன் செயல்படுவதன் மூலம் அதன் போக்கை மாற்றிக் கொள்ளுமாறு WRP இன் தலைமைக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் அது வலியுறுத்தியது. அவ்வாறு செய்ததில் ICFI சரியாக இருந்தது.

WRP ஓர் ஆழமான சீரழிவுக்கு உட்பட்டிருந்தது என்றாலும், அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவாக அது போலி-இடது குழுக்களை விட முற்றிலும் வேறுபட்ட அரசியல் அமைப்பாக இருந்தது. சமீபத்திய ஒரு விவாதத்தில் டேவிட் நோர்த் கூறியதைப் போல, மிலிட்டண்ட் (Militant) குழுவின் ரெட் கிராண்ட் மற்றும் பிரிட்டிஷ் SWP இன் டோனி கிளிஃவ் ஆகியோர் அவர்களின் சிறந்த நாட்களில் இருந்ததைவிட, ஹீலி அவரின் மோசமான நாட்களில் சிறப்பாக இருந்தார்.

கட்சி அதன் சீரழிவின் உச்சத்திலும் கூட, ஒரு சமயம் ஹீலி, சுலோட்டர் மற்றும் பண்டா பிரதிநிதித்துவம் செய்த அந்தப் புரட்சிகர முன்னோக்கு மீதும், ட்ரொட்ஸ்கிச போராட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு கட்சி முறையிடும் என்றும் நம்பிக்கைக் கொண்டிருந்த காரியாளர்கள் அதன் உள்ளே இருந்தார்கள்.

WRP இன் மத்திய தலைமையின் தேசியவாத அரசியல் சீரழிவு, கட்சியைக் காப்பாற்ற முடியாதளவுக்கு ஒட்டுமொத்தமாக வெகு தூரம் போய் இருந்தது என்பது வெளிப்பட்டது. ஆனால் அது பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கான அவசியத்தையும் உலகக் கட்சியின் கட்டமைப்புக்குள் ICFI இன் தொடர்ச்சியைத் தொடர்வதற்குமான அவசியத்தைத் தொடர்ந்து முன்னிறுத்துவதன் மூலமாக மட்டுமே தீர்மானிக்கக் கூடியதாக இருந்தது.

ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியை ICFI பிரதிநிதித்துவம் செய்தது என்பதை நடத்தப்பட்ட அந்தப் போராட்டம் மறுக்கமுடியாத வகையில் எடுத்துக்காட்டியது. நான்காம் அகிலத்தை நிறுவிய போது ட்ரொட்ஸ்கி கூறியது போல, அதன் அணிகளுக்கு வெளியே அந்தப் பெயருக்குத் தகுதியான எந்தப் புரட்சிகரக் கட்சியோ காரியாளர்களோ இருக்கவில்லை.

WRP இன் தேசிய சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக நிரந்தரப் புரட்சியின் பாதுகாப்பு

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அனுபவத்தையும், அதன் செயல்பாடுகளின் மையத்தில் பப்லோ-மண்டேலின் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்ட அனுபவத்தையும் உள்ளீர்த்து நிலைநிறுத்திய ஒரு நிலைப்பாட்டில் இருந்து மட்டுமே, டேவிட் நோர்த் 1982 இல் முனவைத்த விமர்சனத்தைப்பற்றி விபரிக்க முடியும். அந்த விமர்சனம் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை WRP கைவிட்டதை அம்பலப்படுத்தியதுடன், இயங்கியல் மற்றும் வரலாற்று சடவாதம் பற்றிய ஹீலியின் அகநிலையான கருத்துவாத திரித்தல்களுக்கும், முதலாளித்துவ தேசியவாதத்தை ஏற்ற WRP இன் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கும் இடையிலான உறவையும் அம்பலப்படுத்தியது. WRP ஐ சூழ்ந்த நெருக்கடி ஒரு நீடித்த அரசியல் சீரழிவின் விளைபொருள் என்பதைத் தெளிவுபடுத்திய அந்த விமர்சனம், அதைத் தீர்க்கக் கூடிய ஒரேயொரு அடித்தளத்தையும் வழங்கியது.

பப்லோவாதத்திற்குத் திரும்பிய அந்த நகர்வு குறித்த ஆழ்ந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் விமர்சனங்களை ஹீலி கலந்துரையாட மறுத்ததால், WRP க்குள் அதிகரித்து வந்த அரசியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான சாத்தியத்தை அது முன்கூட்டியே நிறுத்திவிட்டது. ஆனால், WRP க்குள் ஏற்பட்டிருந்த நெருக்கடியின் ஆரம்ப மாதங்களை ஒருவர் வரையறை செய்வதாக இருந்தால், இந்தக் காலகட்டத்தில் அனைத்துலகக் குழுவில் ஒரு புதிய ட்ரொட்ஸ்கிச பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதற்கான அடித்தளத்தை அந்த விமர்சனம் வழங்கியது. அது இலங்கை, ஜேர்மன் மற்றும் ஆஸ்திரேலிய பிரிவுகளின் ஆதரவையும், சுலோட்டர்/பண்டா ஓடுகாலிகள் உடனான இறுதி முறிவின் சமயத்தில் WRP க்குள் பெரும்பான்மையாக இருந்த ஓர் அணியின் ஆதரவையும் வென்றெடுத்தது.

1978 இல் ஆஸ்திரேலியாவில் நடந்த ICFI பள்ளி. இதில் நிக் பீம்ஸ் மற்றும் லிண்டா தெனென்பவும் (ஆஸ்திரேலியா), ஸ்பைக் பெரேரா மற்றும் கீர்த்தி பாலசூரியா (இலங்கை), மைக் பண்டா (பிரிட்டன்) ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

WRP எவ்வாறு ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக்கொடுத்தது என்பதில் விளக்கப்பட்டுள்ளவாறு, வேர்க்கர்ஸ் லீக்கின் விமர்சனங்களை முறையாகச் சுற்றுக்கு அனுப்பி அதை விவாதித்திற்கு உட்படுத்துவதை WRP அனுமதிக்கவில்லை என்ற உண்மை, வேர்க்கர்ஸ் லீக்கின் கண்ணோட்டங்கள் ICFI க்குள் பரந்த ஆதரவைப் பெறக்கூடும் என்று ஹீலி, பண்டா, சுலோட்டர் சந்தேகித்தனர் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. இது பின்னர் வரலாற்றுரீதியில் நிரூபணமானது.

ஏனென்றால் சர்வதேச காரியாளர்களில் பெரும் பகுதியினர், 1960 கள் மற்றும் 1970 களின் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நிரந்தரப் புரட்சியின் சர்வதேச முன்னோக்கை பாதுகாத்ததன் அடிப்படையில் உள்ளீர்க்கப்பட்டு இருந்ததால், வேர்க்கர்ஸ் லீக் முன்னெடுத்த விமர்சனங்கள், அவர்களுக்குத் தெரிய வந்த உடனேயே, அவை பெரும் ஆதரவைப் பெற்றன. 1985 இன் இலையுதிர் காலத்தில், இது, அனைத்துலகக் குழுவுக்குள் விரைவான அரசியல் மறுஅணிச்சேர்க்கைக்குக் காரணமாக இருந்து, இந்த சர்வதேச இயக்கத்தின் வேலைகளுக்கு ஒரு புதிய அடித்தளத்தை நிறுவியது.

ஒருவர் அந்த விமர்சனத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அவர் WRP இல் வெடித்திருந்த அரசியல் மோதலின் தன்மையையும், மற்றும் வேர்க்கர்ஸ் லீக் தலைமையில் ICFI இன் தலையீட்டுக்கு முன்னர் அது எவ்வாறு அபிவிருத்தி அடைந்திருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

20 ஆண்டுகள் ஹீலியின் பிரத்யேக செயலாளராக இருந்த ஏய்லீன் ஜென்னிங்ஸ் (Aileen Jennings), ஜூலை 1, 1985 இல், இலண்டனில் இருந்து தலைமறைவானார். WRP மற்றும் ICFI இன் பெண் உறுப்பினர்களை ஹீலி பாரிய துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டி, ஜூன் 30 தேதியிட்ட கடிதத்தை அவர் விட்டுச் சென்றிருந்தார். இதில் சம்பந்தப்பட்ட சிலரின் பெற்றோர்களுக்கும் அந்த அருவருப்பான கடிதம் அனுப்பப்பட்டது. “ஓரினச் சேர்க்கையாளர் ஒருவர் இளைஞர் பயிற்சி முகாமை நடாத்துவது” என்ற பொலிஸ் ஆத்திரமூட்டல் அபாயத்தை எழுப்பிய அதன் ஆரம்பப் பத்திகளே அதன் பொதுவான தன்மையைச் சுட்டிக்காட்டி விடுகிறது. “கட்சியைப் பொலிஸ் ஆத்திரமூட்டலுக்கும் திறந்து விடுகின்ற, 155 Clapham High Street அடுக்குமாடி வீடுகளில்” நடந்த சம்பவங்களை ஜென்னிங்ஸ் இவ்விதத்தில் தான் முன்வைத்திருந்தார்.

திட்டமிட்டு வேண்டுமென்றே உருவாக்கப்பட்டிருந்த ஒரு நிதி நெருக்கடியுடன் சேர்ந்து, அந்தக் கடிதம் கட்சியின் மையத்தில் இருந்த ஒரு கோஷ்டிக்கு ஓர் அரசியல் ஆத்திரமூட்டலாக இருந்தது. ஹீலியைப் பதவி இறக்கவோ அல்லது ஓய்வு பெறச் செய்யவோ நிர்பந்திப்பதும், அவ்விதத்தில் WRP இன் சந்தர்ப்பவாதத் திருப்பத்தை வேகப்படுத்தி வலுப்படுத்துவதுமே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஹீலியின் அப்போதைய மிகச் சமீபத்திய பரிணாமம் என்னவாக இருந்தாலும், கட்சிக்கான ஹீலியின் தலைமையை வரலாற்றுரீதியில் அவர் பிரதிநிதித்துவம் செய்த அனைத்திற்கும் எதிரானதாக ஒரு போலி இடதினால் வரையறுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதற்கடுத்த மூன்று மாதங்களுக்கு, WRP அரசியல் குழு ஒருமித்து, அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஊழலை மறைக்க முயற்சித்தது. இது ICFI க்குப் பொய் உரைப்பதையும், ஒரு சுதந்திரமான விசாரணையை கோருவதற்கான மத்திய குழு உறுப்பினர் டேவ் ஹைலன்டின் முயற்சிகளை எதிர்ப்பதையும் அர்த்தப்படுத்தியது. ஹீலி உடல்நலக் குறைபாடு காரணமாக அவரின் ஓய்வை அறிவிப்பார், அதேவேளையில் அப்போதும் மார்க்சிசக் கல்வியியல் கல்லூரியில் விரிவுரைகள் வழங்க அனுமதிக்கபட்டிருப்பார் என்பதே திட்டமாக இருந்தது.

“5/7/85 தேதியிட்ட எங்கள் உடன்படிக்கைக்கு இணங்க, இளைஞர்கள் உடனான என் தனிப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு, நான் முழு மனதோடு உறுதியளிக்கிறேன்” என்று குறிப்பிடும் ஒரு கடிதத்தில் ஹீலியின் கையெழுத்தைப் பெறுவதன் மூலம் கட்சியின் நெருக்கடியைச் சமாளிக்க, பண்டா இந்த முயற்சியை மேற்கொண்டார்.

அது தோல்வி அடைந்தது. நாம் காக்கும் மரபியத்தில் விளக்கப்பட்டுள்ளவாறு:

அக்டோபர் 1985 இல், நடுத்தர வர்க்கத்தின் அடங்கிக் கிடந்த மனக்குறைகள் WRP க்குள் வெடித்தன. எந்தப் பலனும் தராத பல ஆண்டுகால கடின உழைப்பால் விரக்தி அடைந்து, கசப்புணர்வோடு சோர்ந்து போயிருந்த, தங்களின் தனிப்பட்ட நிலைமைகள் மீது அதிருப்தி கொண்டிருந்த, இழந்த காலத்தை ஈடுசெய்ய ஆர்வம் கொண்ட, புரட்சியைக் குறித்த எல்லா பேச்சுக்களாலும் நலிந்து சோர்வடைந்திருந்த, இந்த நடுத்தர வர்க்க சக்திகளின் அகநிலையான சீற்றம் பகுதியாக ஓய்வூ பெற்றிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பல தரப்பினரின் ஒரு கூட்டத்தின் தலைமையில் அரசியல்ரீதியில் கலைப்புவாதமாக (liquidationism) மாற்றப்பட்டது. [5]

அந்த வார்த்தையின் அர்த்தம், இது தான்:

… இப்போது ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்டுள்ள, சந்தர்ப்பவாதத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான அணி, ட்ரொட்ஸ்கிசத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்பாடான, அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் தேசிய பிரிவுகளைக் கலைக்கக் கோருகிறது.

இந்தப் போக்கின் வர்க்க அடித்தளமானது, அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள குட்டி-முதலாளித்துவம் ஆகும். அவர்கள் ஏகாதிபத்திய அழுத்தங்களுக்கு அடிபணிந்து, சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர முன்னோக்கின் நம்பகத்தன்மை மீது நம்பிக்கை இழந்துள்ளனர். [6]

நாம் காக்கும் மரபியம்

தோழர் நோர்த் தலைமையிலான அந்தத் தலையீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, ஒரு சுதந்திரமான விசாரணைக் குழுவுக்கு அழைப்பு விடுத்த அந்த அணி, ஜென்னிங்ஸின் வெளியீடுகளுக்கு ஒரு கொள்கைரீதியான விடையிறுப்பை எடுத்தபோது, அது யோர்க்க்ஷேர் (Yorkshire) மற்றும் மான்செஸ்டரின் தொழிலாள வர்க்க காரியாளர்கள் மத்தியிலும் மற்றும் இளம் சோசலிஸ்டுகள் அமைப்பின் தேசிய தலைமைக்குள்ளும் ஆதரவைக் கண்டது. உறுப்பினர்கள் மிகப் பெரும் அரசியல் குழப்பத்தில் இருந்த நிலைமைகளின் கீழ் அந்த ஆதரவு வளர்ந்தது என்றாலும், WRP இன் அரசியல் சீரழிவு காரணமாக, அவர்கள் அதில் சம்பந்தப்பட்டிருந்த மிகவும் பரந்த இன்றியமையாத பிரச்சினைகளின் அடித்தளத்தைப் புரிந்து கொண்டிருக்கவில்லை.

மூன்று மாதங்களுக்குள், அக்கட்சியின் ஒவ்வொரு முன்னணி உறுப்பினரும், ICFI ஒருபோதும் ட்ரொட்ஸ்கிசமாக இருந்ததில்லை என்றும் அல்லது WRP அளவுக்கு அதேயளவில் அதுவும் சீரழிவுக்கு உள்ளாகி இருந்ததாகவும் உரக்க அறிவித்தனர். “ஹீலியிசம்” மீதான அவர்களின் சொந்த இற்றுப்போன எதிர்ப்பு நிரூபிக்கப்பட்டு இருப்பதாக வலியுறுத்த, ICFI இன் ஒவ்வொரு எதிரியும் பொந்துக்குள் இருந்து வெளியே வந்தனர், “ஹீலியிச வீழ்ச்சிகள்” என்று ஸ்பார்டசிஸ்டுகள் பிரசுரித்த ஒரு துண்டறிக்கை போன்றவையும் வந்தன.

பப்லோவாதத்திற்கு எதிராக ICFI நடத்திய போராட்டத்திற்கு எதிர்ப்பைக் காட்டும் இந்த வார்த்தை, இப்போது பண்டா, சுலோட்டர் மற்றும் அவர்களின் பரிவாரங்களால் கைப்பற்றப்பட்டு வந்தது.

ஒரு கட்டுப்பாட்டு குழுவுக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தனித்து விடப்பட்டிருந்த நிலையில், தங்களை அரசியல்ரீதியாக நோக்குநிலைப்படுத்தவும், பப்லோவாத மற்றும் ஸ்ராலினிச புதைகுழியில் வீழ்ந்த அவர்களின் கூட்டாளிகளினதும் மற்றும் WRP மையத் தலைமையினதும் கலைப்புவாத முனைவைத் தோற்கடிக்கவும் திறமை இல்லாமல் இருந்திருக்கலாம்.

சுலோட்டர் மற்றும் பண்டா ஏற்படுத்திய விஷமப் பிரச்சாரத்தை முறியடித்து, WRP சீரழிவின் அடியில் இருந்த நிஜமான பிரச்சினைகளைப் பற்றி, ICFI இன் வரலாறு மற்றும் வேலைத்திட்டத்தைப் பாதுகாப்பதில் வேரூன்றிய ஒரு பகுப்பாய்வை முன்வைக்கும் திறமையே தீர்க்கமானதாக இருந்தது. உண்மையில், WRP உம் அனைத்துலகக் குழுவும் “சம அளவில் சீரழிவு” நிகழ்ச்சிபோக்குக்கு உட்பட்டுள்ளதாக பின்னர் சுலோட்டர் முன்வைத்த வாதத்திற்கு, டேவிட் நோர்த் விவரித்ததைப் போல, இந்த விமர்சனத்தின் இருப்பே ஒரு கடுமையான மறுப்புரையாக இருந்தது.

இன்னொரு முக்கியப் புள்ளி: WRP மீதான அவரின் விமர்சனத்தை திரும்பப் பெற்றமை டேவிட் நோர்த்தின் அரசியல் கோழைத்தனம் என்று சுலோட்டரும் அவரின் ஆதரவாளர்களும் மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டினர். அரசியல் துஷ்பிரயோகம் மற்றும் அமைப்புரீதியான துஷ்பிரயோகத்திற்கு, ஹீலி மட்டுமே பொறுப்பாகிறார் என்று வலியுறுத்தி, அது பற்றி வாய் திறக்காமல் இருந்த தமது மௌனத்துடன் ஒப்பிடக் கூடியதாக இருந்ததாக நோர்த்தின் விமர்சனத்தை அவர்கள் வலியுறுத்தினார்கள். நோர்த்தின் விமர்சனங்கள் அனைத்துலகக் குழுவுக்கு உள்ளேயும் மற்றும் WRP உறுப்பினர்களுக்கு மத்தியிலும் மறைக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட நிலைமைகளின் கீழ், வேர்க்கர்ஸ் லீக்கின் உடனடி வெளியேற்றதை தடுக்கும் விதமாக அதைச் செய்ததில் நோர்த் சரியாகவே இருந்தார் என்பதைச் சம்பவங்கள் நிரூபித்தன.

WRP இல் அரசியல் நெருக்கடி வெடிப்பதற்கு ஓராண்டுக்கு முன்னரே அந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. அப்படி ஏற்பட்டிருந்தாலும் கூட, அனைத்துலகக் குழுவின் பிரிவுகளுக்கு உள்ளேயும் WRP உறுப்பினர்கள் மத்தியிலும் தொடர்ந்து நடந்து வந்த போராட்டத்தில் தலையீடு செய்ய வேர்க்கர்ஸ் லீக் அப்போதும் ஒரு வழியைக் கண்டு பிடித்திருக்கும் என்பதையும் ஒதுக்கி விட முடியாது என்றாலும், அது நிச்சயம் இன்னும் கடினமானதாக இருந்திருக்கும் என்பதை உறுதியாகக் கூறலாம். நோர்த்தின் விமர்சனமும் மற்றும் அதை வாசிப்பிற்காகச் சுற்று விடுவதும் எல்லா விதத்திலும் தீர்க்கமான காரணியாக இருந்தது, ஆனால் அது 1985 இல் தான் நடந்தது.

1928 இல் ஜேம்ஸ் பி. கனன் மாஸ்கோவிற்குப் பயணித்ததன் விளைவாக, அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கம் எவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டது என்பதை டேவிட் நோர்த் இந்தப் பள்ளியின் அவரது ஆரம்ப உரையில் குறிப்பிட்டார். அந்த நேரத்தில், கனன், அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நிலவிய கன்னை மோதல்களில் ஆழமாக ஈடுபட்டிருந்தார். எதிர்த்து மோதிய ஜே லவ்ஸ்டோன் (Jay Lovestone) மற்றும் வில்லியம் Z. ஃபோஸ்டர் (William Z. Foster) அணி மற்றும் கனன் அணி இரண்டுமே அவர்களின் உள்அரசியல் மோதல்களில் மாஸ்கோவின் ஆதரவை எதிர்பார்த்தன.

எவ்வாறிருப்பினும், மாஸ்கோவில், கனனுக்கும் மற்றும் கனடா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான மொரிஸ் ஸ்பெக்டருக்கும் (Maurice Spector), ட்ரொட்ஸ்கியின் கம்யூனிஸ்ட் அகிலத்தின் வரைவு வேலைத்திட்டம் மீதான விமர்சனம் என்பதன் நகல் வழங்கப்பட்டது, இது தான் பின்னர் லெனினுக்குப் பின் மூன்றாம் அகிலத்தில் பிரசுரிக்கப்பட்டது. இதை வாசித்தப் பின்னர், மக்ஸ் சாக்ட்மன் மற்றும் மார்டின் அபெர்ன் உடனான பிரச்சினைகள் உட்பட, இதற்கு முன்னர் அவருக்கு இருந்த எல்லா பிரச்சினைகளும் அடிப்படையில் முக்கியத்துவமற்றவை என்ற முடிவுக்கு வந்த அவர், இடது எதிர்ப்பு அணியின் கொள்கைகளுக்கான போராட்டத்தைத் தொடங்கும் முடிவோடு அமெரிக்கா திரும்பினார், இதற்காக அவர் அக்டோபரில் வெளியேற்றப்பட்டார்.

ஜேம்ஸ் பி. கனன்

வரலாறு மீண்டும் ஒரே மாதிரியாக திரும்பாது என்றாலும் அது அவ்வப்போது ஒத்திசைந்ததாக இருப்பது உண்டு. இது, 1985 இல் குறிப்பிடத்தக்க அளவிற்கு WRP இல், பெரும் வரலாற்று முக்கியத்துவத்துடன் மீண்டும் ஒலித்தது. உண்மையில் அந்த அமைப்புக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காண, தோழர்கள் லாரி போர்ட்டரும் டேவிட் நோர்த்தும் செப்டம்பர் மத்தியில் [14-15] எவ்வாறு இங்கிலாந்துக்குச் சென்றனர் என்பதை டேவ் ஹைலண்டுக்கான டேவிட் நோர்த்தின் 2014 இரங்கல் செய்தி விவரிக்கிறது. உடல்நலக் குறைபாடு மற்றும் வயோதிகம் காரணமாக ஹீலி இராஜினாமா செய்வதாக மட்டுமே அவர்களுக்குக் கூறப்பட்டு இருந்தது.

செப்டம்பர் 3 இல், “கூட்டணியை மீண்டும் தொடர” கோருவதற்காக பண்டா தோழர் நோர்த்தை அழைத்தார். இது, WRP இன் பிழையான தத்துவார்த்த மற்றும் அரசியல் கருத்துருக்கள் மீதான ஒரு விவாதத்தை ஆதரிப்பதற்காக அக்டோபர் 1982 இல் செய்த உடன்பாட்டை அவர் முறித்துக் கொண்டது சம்பந்தமாக இருந்தது. முற்றிலும் சந்தர்ப்பவாத பாணியில் நடந்து கொண்டவர்கள் என்றும், தங்களின் குழுவாதப் பிரச்சினைகளைச் ஒழுங்குபடுத்திக்கொள்ள அனைத்துலகக் குழுவைப் பயன்படுத்த முயல்பவர்கள் என்றும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட எந்தவொரு WRP தலைவர்களுடனும் எந்தக் கூட்டணியும் இல்லை என்பதில் வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் குழு ஏகமனதாக உடன்பட்டிருந்தது.

நோர்த் இலண்டனில் பண்டாவைச் சந்தித்த போது, 1982 மற்றும் 1984 இல் முன்வைத்த அரசியல் விமர்சனங்களை நோர்த் அவருக்கு நினைவூட்டினார். பண்டா அவரது கோப்புகளை அலசிப் பார்த்து, அனைத்துலகக் குழுவுக்கு அனுப்பப்பட்ட பிப்ரவரி 1984 அறிக்கையின் நகலைக் கண்டு பிடித்தார். அந்த விமர்சனங்கள் சரியானவை என்று ஏற்றுக் கொண்ட அவர், நோர்த் அவருடன் யோர்க்ஷேயருக்கு வர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். அங்கே ரோதர்ஹாமில் அவர் டேவ் ஹைலண்டைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.

அங்கே, ஓர் அதிருப்தியான விவாதத்தின் முடிவில், “ஹீலியின் ‘இயங்கியல் சடவாத ஆய்வுரைகள்’ மீதான விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு” என்பதன் ஒரு நகலையும் மற்றும் ICFI க்கு அனுப்பப்பட்ட 1984 அறிக்கையையும் பண்டா முன்யோசனையின்றி, அவருக்கு பாதகத்தை ஏற்படுத்தும்வகையில் ஹைலண்டிடம் வழங்கினார்.

அவற்றை வாசித்த டேவ் ஹைலண்ட், பின்னர் அவரது அணியின் முன்னணி உறுப்பினர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் அதை அவரது அறையில் இருந்தே வாசிப்பதற்காக அவர்களை அவர் வீட்டுக்கு வரவழைத்தார்.

ஹீலியின் “இயங்கியல்” மீது டேவிட் நோர்த்தின் விமர்சனம்

அந்த விமர்சனத்தின் வாசிப்பு எங்கள் அனைவருக்கும் புதிய விபரமாக இருந்தது. முதல்முறையாக அந்த உடைவைக் குறித்து ஓர் அரசியல் விளக்கத்தை வழங்கிய அது, ICFI க்குள் எதிர்ப்பைச் சந்தித்திருந்ததை தெளிவுபடுத்தியது. ஹீலியின் அப்போதைய அரசியல் ஆளுமைக்கு அடித்தளமாக இருந்த ஹீலியின் ஹெகலிய பாணியிலான இயங்கியல் நோக்குநிலை மீதான தீவிரமான விமர்சனம் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அந்த நிலைமைகளின் கீழ் நிறைய விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டியிருந்தாலும், தத்துவார்த்தரீதியிலும் அரசியல்ரீதியிலும் மற்றவர்களால் வெறும் உளறல் என்று நிராகரிக்கப்பட்ட விஷயங்களை அது புரிந்து கொள்ளச் செய்தது.

ஆழ்ந்த கலந்துரையாடல்களுக்குப் பின்னர், அக்டோபர் 9 இல், டேவ் ஹைலண்ட் வேர்க்கர்ஸ் லீக்கிற்கு அழைப்பு விடுத்து, டேவிட் நோர்த்துடன் பேச வேண்டுமென கேட்டுக் கொண்டார். தோழர் நோர்த்தின் இரங்கல் அஞ்சலியில், டேவ் ஹைலண்ட் அவருக்கு 2005 இல் எழுதிய ஒரு கடிதத்தை அவர் மேற்கோளிட்டார். அதில் அவர், அந்த ஆவணங்களை வாசித்ததையும் மற்றும் டேவிட் நோர்த்துடன் தொலைபேசியில் அழைத்து பேசியதையும் “என் வாழ்வின் மிக முக்கிய அரசியல் முடிவு” என்று விவரித்திருந்தார். அது பலருடைய வாழ்வில் மிக முக்கிய முடிவாக இருந்தது.

பின்னர், அக்டோபர் 10 இல், தோழர்கள் நோர்த் மற்றும் லாரி போர்ட்டர் பிரிட்டனுக்குத் திரும்பினர். ஜேர்மனியில் இருந்த போது டேவ் ஹைலண்டின் தொலைபேசி அழைப்பைப் பற்றி அவர்களுக்கும் கூறப்பட்டிருந்ததுடன், அவரும் திரும்பி அழைத்திருந்தார். டேவிட் குறிப்பிடுவதைப் போல:

அது எவ்வளவு முக்கியமான மற்றும் அதிமுக்கியமான விஷயம் என்பது நான் மிகைப்படுத்தி கூறுவதல்ல. அந்தத் தருணம் வரையில், நாங்கள் அப்போதும் வெளியில் இருந்து தான் உள்ளே பார்த்துக் கொண்டிருந்தோம். நாங்கள், எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட ஓர் அமைப்பிற்குள், அரசியல் தலையீடு செய்ய வந்தவர்களைப் போல இருந்தோம். ஆனால் இப்போதோ, WRP க்கு உள்ளே நிலவும் நெருக்கடியைக் குறித்து எங்களுடன் பேச விரும்பியவர்களும் இருந்தார்கள். நாங்கள் எழுதி இருந்த ஆவணங்களில் ஆர்வம் காட்டியவர்களும் இருந்தார்கள். [7]

டேவிட், லாரி மற்றும் ICFI இன் ஜேர்மன் பிரிவான சோசலிசத் தொழிலாளர்கள் கழகத்தின் (Bund Sozialistischer Arbeiter - BSA) தேசியச் செயலாளர் உலி ரிப்பேர்ட் ஆகியோர் அக்டோபர் 10 இல் பிரிட்டனை வந்தடைந்தனர். வேர்க்கர்ஸ் லீக் அரசியல் குழுவுக்கு டேவிட் வழங்கிய நவம்பர் 2 அறிக்கையின் குறிப்புகளில் தெளிவாக விவரிக்கப்பட்டிருந்தவாறு, அவர்கள் கோஷ்டி மோதல் நிலையில் இருந்த ஒரு கட்சியைக் கண்டார்கள்.

1985 இல் டேவிட் நோர்த்தும் உல்றிச் ரிப்பேர்டும்

அரசியல் குழுவில் இருந்த ஹீலியின் ஆதரவாளர்கள், ஹீலியைக் கட்சி மையத்திற்கு அழைப்பதற்கும், மத்திய குழு உறுப்பினர்களும், இளம் சோசலிஸ்டுகள் அமைப்பின் தலைவர்களுமான ஜூலி ஹைலண்ட் மற்றும் டோலி ஷோர்ட் ஆகியோர் பகிரங்கமாக ஒரு சுதந்திர விசாரணைக் குழு கோரியதற்காக அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைத் தயாரிக்கவும் வாக்களித்தனர். இதற்காக வெளிநடப்பு செய்த பண்டாவின் ஆதரவாளர்கள், கட்சியின் நியூஸ் லைன் பத்திரிகையையும், லிவர்பூல் ரன்கார்னில் இருந்த அதன் அச்சுக் கூடத்தையும் முடக்கினர். பண்டா இதை மிகைப்படுத்தி “மைக்கல் பண்டாவின் 18 ஆம் புரூமர்” (The 18th Brumaire of Michael Banda - அதாவது பிரெஞ்சு குடியரசு நாட்காட்டியின்படி 18 ஆம் மாதம்) என்று விவரித்தார்.

அன்று இரவு 25 முன்னணி உறுப்பினர்களும் உள்ளடங்கி இருந்த ஒரு ஆரம்பக் கூட்டத்திலும், அதன் பின்னரும், பண்டா, அடுத்து நடக்கவிருக்கும் மத்திய குழுக் கூட்டத்தில் ஹீலியின் ஆதரவாளர்கள் அனைவரையும் வெளியேற்ற இருப்பதாக அச்சுறுத்தினார். அனைத்துலகக் குழு ட்ரொட்ஸ்கிச இயக்கம் இல்லை என்று மறைமுகமாகக் குறிப்பிடும் விதத்தில், பிரிட்டனில் ஒருபோதும் ஒரு ட்ரொட்ஸ்கிச இயக்கம் இருந்ததில்லை என்ற தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

டேவிட், லாரி மற்றும் உலியும் அடுத்த நாள், அக்டோபர் 11 இல் யோர்க்க்ஷேயரில் உள்ள லீட்ஸுக்குச் செல்ல முடிவெடுத்தனர். டேவ் ஹைலண்ட் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில், ஹீலி ஆதரவாளர்களுக்குச் சிறுபான்மையினருக்கான உரிமைகளை வழங்க வாதிடுவதற்காக அவர்கள் சுலோட்டரிடம் இருந்து உடன்பாட்டைப் பெற்றனர். அதன் பின்னர், டேவிட் நோர்த் முதல்முறையாக டேவ் ஹைலண்டுடன் அவரது முதல் கலந்துரையாடலை நடத்தினார்.

பிரிட்டனில் ஒருபோதும் ஒரு ட்ரொட்ஸ்கிச இயக்கம் இருந்ததில்லை என்பதை ஆரம்பத்தில் ஹைலண்டும் முன்நிறுத்தி இருந்தார் என்றாலும், அனைத்துலகக் குழுவுக்குள் பப்லோவாதத்தின் வளர்ச்சிக்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தொடர்ச்சியை அங்கீகரித்துப் பாதுகாப்பதன் அடிப்படையிலேயே WRP இனுள்ளான மோதலை முன்னெடுக்க வேண்டும் என்று பப்லோவாதத்திற்கு எதிரான போராட்ட வரலாறை டேவிட் நோர்த் நீளமாக மீளாய்வு செய்த பின்னர், அவர் அதை ஏற்றுக் கொண்டார்.

டேவ் ஹைலண்டும் டேவிட் நோர்த்தும்

அதற்கடுத்த நாள், அக்டோபர் 12 இல், சுலோட்டரும், பண்டாவும் மற்றும் மத்திய குழுவின் மற்ற 23 உறுப்பினர்களும் ஹீலியை வெளியேற்ற வாக்களித்தனர், ஆனால் அவருடைய 12 ஆதரவாளர்களுக்கு சிறுபான்மையினருக்கான உரிமைகளை வழங்கினர்.

கிரேக்க மற்றும் ஸ்பானிஷ் பிரிவுகள், ஹீலியை வெளியேற்றுவதை ஏற்க மறுத்து அக்டோபர் 21 இல் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. அந்த அறிக்கை ஹீலியை “இந்த இயக்கத்தின் வரலாற்று புகழ்மிக்க தலைவர், பத்தாம் உலக மாநாட்டு தலைவர், அத்துடன் அதன் முன்னோக்குகளுக்காக மிகவும் சிறப்பாக போராடிய போராளி” என்று குறிப்பிட்டதுடன், “ICFI இன் ஓர் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறோம், அதன் பெயரில் மோசடியாகக் கூட்டப்பட்ட எந்த அணியின் கூட்டத்தையும் நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்,” என்று குறிப்பிட்டது.

அக்டோபர் 25 இல், ICFI இன் உண்மையான ஓர் உச்சி மாநாடு நடத்தப்பட்டது, அதில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று ICFI இல் இருந்து ஹீலியை வெளியேற்றியது, அதேவேளையில் அனைத்துமே பாலியல் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற சுலோட்டர்/பண்டா அணியின் நிலைப்பாட்டை எதிர்த்தது. அதற்குப் பதிலாக அது குறிப்பிட்டது, “அவர் மேற்கொண்ட நடைமுறைகள், வரலாற்றுரீதியில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட காரியாளர்கள் மீதான ஒரு தாக்குதலாகும்.”

அந்தத் தீர்மானம், ஹீலியின் கடந்த கால பங்களிப்பை இழிவுபடுத்துவதற்கும், ICFI இன் வரலாறு மற்றும் அரசியல் ஆளுமை மீது தாக்குதல் நடத்துவதற்குமான எல்லா முயற்சிகளையும் நிராகரித்தது.

அது குறிப்பிட்டது:

ஹீலியை வெளியேற்றுவதன் மூலம், கடந்த காலத்தில், குறிப்பாக 1950 கள் மற்றும் 1960 களில் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அவர் ஆற்றிய அரசியல் பங்களிப்புகளை மறுக்கும் எண்ணம் ICFI க்கு இல்லை.

உண்மையில், இந்த வெளியேற்றம், கடந்த கால போராட்டங்கள் அடித்தளமாகக் கொண்டிருந்த ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை அவர் நிராகரித்ததின் இறுதி விளைவாகும், மற்றும் சந்தர்ப்பவாதத்தின் மிக மோசமான வடிவங்களுக்குள் அவர் வீழ்ந்ததன் விளைவாகும்.

பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நடைமுறை வெற்றிகள் மற்றும் அமைப்புரீதியான வெற்றிகள், ஸ்ராலினிசம் மற்றும் திருத்தல்வாதத்திற்கு எதிராக சர்வதேச ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் அடித்தளம் கொண்ட போராட்டங்களில் இருந்து கிடைத்திருந்தன என்ற நிலையில், அவர் மேலும் மேலும் அந்த வெற்றிகளை இந்தப் போராட்டங்களில் இருந்து வெளிப்படையாகப் பிரித்ததில், அவரின் அரசியல் மற்றும் தனிப்பட்ட சீரழிவைத் தெளிவாக காணலாம். [8]

பிரிட்டிஷ் பிரிவின் நெருக்கடி குறித்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தீர்மானம் என்று அதனுடன் இருந்த மற்றொரு தீர்மானமும் பின்வருமாறு உறுதிப்படுத்தியது:

சோசலிசப் புரட்சியின் உலக கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான மூலோபாயப் பணியில் இருந்து விலகி, அதிகரித்தளவில் WRP தலைமை நீண்ட காலமாக தேசியவாத முன்னோக்கு மற்றும் தேசியவாத நடைமுறையை நோக்கி மாறியதே, ஜெர்ரி ஹீலியின் மோசடி நடைமுறைகளையும் மற்றும் அவற்றை மூடிமறைக்க WRP அரசியல் குழு செய்த முயற்சிகளையும் அம்பலப்படுத்தியதன் மூலம் வெடித்துள்ள தற்போதைய இந்த நெருக்கடியின் வேர்களாகும். [9]

“ஜெர்ரி ஹீலியின் மோசடிகளோடு மட்டுமல்ல, மாறாக அரசியல் குழு மற்றும் WRP இன் நிதி நெருக்கடியை மூடிமறைத்ததை விசாரிக்கவும் ஒரு சர்வதேச கட்டுப்பாட்டுக் குழுவை”, உருவாக்கவேண்டும் மற்றும் அதில் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அப்போதிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமென அந்தத் தீர்மானம் முன்மொழிந்தது.

மிக முக்கியமாக அது பின்வருமாறு கோரியது:

ICFI இன் அரசியல் ஆளுமையையும், அதன் முடிவுகளுக்கு பிரிட்டிஷ் பிரிவு கீழ்ப்படிந்திருப்பதையும் வெளிப்படையாக அங்கீகரிக்கும் அடிப்படையில் WRP இன் உறுப்பினர்களை மீள்பதிவு செய்விக்க வேண்டும். [10]

அதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களில் இதுதான் மையப் பிரச்சினையாக மாற இருந்தது. அந்த தீர்மானத்தை, அக்டோபர் 25 ICFI கூட்டத்தில் பிரிட்டிஷ் பிரிவின் பிரதிநிதிகள் குழுவும், WRP இன் மத்திய குழுவும் ஒருமனதாக ஆமோதித்தன. மிக முக்கியமாக, அக்டோபர் 26 மற்றும் 27 இல் நடத்தப்பட்ட WRP இன் சிறப்பு மாநாட்டின் மூலமாக அது எதிர்ப்பு வாக்குகள் எதுவும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அரசியல் வரலாறு மற்றும் WRP இன் சீரழிவுக்கான காரணங்களை விரிவாக விவரித்து, அந்த சிறப்பு மாநாட்டின் முதல் நாளில் டேவிட் நோர்த் வழங்கிய உரை, இந்த முடிவைப் பெறுவதில் தீர்க்கமாக இருந்தது. ICFI இன் அரசியல் அதிகாரத்தைப் பலமாக உறுதிப்படுத்திய அது, ஏறக்குறைய அனைத்து பிரதிநிதிகளின் ஆதரவை வென்றிருந்ததுடன், அனைத்துலகக் குழுவின் மிக முக்கிய எதிர்ப்பாளர்களாக பின்னர் மாற இருந்த பலரிடம் இருந்தும் பாராட்டைப் பெற்றது.

இதை நான் வலியுறுத்தியே ஆக வேண்டும். உங்கள் நினைவுகளில் பதியப்படவேண்டிய சில தருணங்களும் உள்ளன. அத்தகைய தருணங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. அதைப் பார்க்கவும் கேட்கவும் அதிர்ச்சிகரமாக இருந்தது என்பதை என்னால் நேர்மையாக கூற முடியும். அந்த சிறப்பு மாநாட்டுக்கு முன்னதாக, ஏதாவது மோசமான விஷயங்கள் நடந்தாலோ, அல்லது அந்தக் கட்டிடத்தில் அவர்கள் நுழைவதைத் தடுக்க முயற்சி செய்யப்பட்டாலோ, எவ்வாறு ஆயுதத்துடன் செல்வது என்பதைக் குறித்து மைக் பண்டாவின் ஆதரவாளர்கள் விவாதித்து வந்தார்கள். இரும்பு கொக்கி மற்றும் அதுபோன்ற பொருட்களை அவர்கள் வைத்திருந்தார்கள். சரி தான், அவர்கள் இரும்பு கொக்கியோடு ஆயுதபாணியாகி இருந்தார்கள், ஆனால் டேவிட் நோர்த் நம்மை மார்க்சிசம் மற்றும் ஒரு மார்க்சிசப் பகுப்பாய்வு கொண்டு ஆயுதபாணி ஆக்கினார்.

அக்டோபர் 26 இல், ஹீலி அணி வேறொரு இடத்தில் அதன் கூட்டத்தை நடத்தி, பண்டா மற்றும் சுலோட்டருடன் “நீண்டகாலமாக நிலுவையில் இருந்த அவசியமான முறிவு” “வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளதாக” அறிவித்தது. அவர்கள் தங்களை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவாக அறிவித்துக் கொண்டதுடன், டேவிட் நோர்த்தை “எச்சசொச்ச ICFI” இன் (the rump ICFI) தலைவராகக் குறிப்பிட்டனர்.

கிரேக்கத்தின் சர்வதேசவாத தொழிலாளர் கழகம் (Workers Internationalist League) அனைத்துலகக் குழுவின் அக்டோபர் 25 மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்ததைக் குறித்து, அதன் மத்திய குழுவுக்கு எழுதப்பட்ட நவம்பர் 9 கடிதம் பின்வருமாறு குறிப்பிட்டது:

நமது இயக்கம் அடித்தளத்தில் கொண்டுள்ள சர்வதேசவாதக் கொள்கைகளை இவ்வாறு நிராகரிப்பது, அடிப்படையில் தேசியவாதமாகும். இது வர்க்க எதிரியின் அழுத்தத்தை வெளிப்படுத்துகிறது... அனைத்துலகக் குழுவின் அக்டோபர் 25 கூட்டத்தில் கலந்து கொள்ள மறுப்பதற்கு வழிவகுத்த சர்வதேசவாத-எதிர்ப்பு நிராகரிக்கப்பட வேண்டும். இல்லையெனில், WIL ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியாக அழிவை எதிர்கொள்கிறது. [11]

இதுவும் புறக்கணிக்கப்பட்டது. WRP மற்றும் ICFI இல் தொடர்ந்து இருந்த பண்டா-சுலோட்டர் அணிக்கும் அதன் எச்சரிக்கை சம பலத்துடன் செல்லுபடியானது. ஹீலி-ஆதரவு அணிக்கு எதிராக ICFI இன் ஆதரவைப் பெறுவதற்காக ஒரு தந்திரோபாய உத்தியாக மட்டுமே அக்டோபர் 25 தீர்மானத்தை ஏற்றுக் கொண்டிருந்த அவர்கள், வாய்ப்பு கிடைத்த உடனேயே அதை மறுத்தளிக்கும் உத்தேசத்தில் இருந்தார்கள்.

அந்த சிறப்பு மாநாட்டில் நோர்த்தின் தலையீட்டுக்கு உறுப்பினர்களின் விடையிறுப்பைக் கண்டு, அவர்கள் வேகமாக செயல்பட வேண்டி இருந்ததாக உணர்ந்தார்கள். அவர்கள் ICFI க்குப் பிரிட்டிஷ் பிரிவு அடிபணிவதை எதிர்க்கவும், அந்தத் தீர்மானத்தை மாற்றவும், மற்றும் WRP உறுப்பினர்களுக்குள் பல ஆண்டுகளாக விதைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு விதமான தேசியவாத தப்பெண்ணங்களை முடுக்கி விடவும் முனைந்தார்கள்.

பாலியல் துஷ்பிரயோகமே அந்தப் பிளவின் அடிப்படைப் பிரச்சினையாக இருந்தது என்ற ஒரு கலவையான வலியுறுத்தல் வடிவெடுத்த நிலையில், இதை ICFI குறைத்துக் காட்ட உத்தேசித்ததாகக் கூறப்பட்டதுடன், ICFI உம் WRPஅளவுக்கு “சம அளவில் சீரழிவு” நிகழ்ச்சிபோக்கில் சென்றிருந்ததாகவும், “ஹீலியிசத்துடன்” ஓர் அடிப்படை முறிவு ஏற்படாமல் தடுக்க முயன்று வந்ததாகவும் கூறப்பட்டது.

இதை பண்டா, “ஒழுக்கமும் புரட்சிகரக் கட்சியும்” என்ற நவம்பர் 2 நியூஸ் லைன் கட்டுரையில் வெளிப்படுத்தி பின்வருமாறு அறிவித்தார்:

முதன்முறையாக, ஒருவேளை கடைசியாகக் கூட இருக்கலாம், கட்சியின் தந்திரோபாய மற்றும் வேலைத்திட்ட பிரச்சினைகள் மீதல்லாமல், மாறாக புரட்சிகர ஒழுக்கநெறி பற்றிய மிக அடிப்படையான கேள்வி தொடர்பாக கட்சி பிளவுபட்டுள்ளது. இந்தப் பிளவு கட்சியின் பாலினங்களுக்கு இடையிலான உறவு சம்பந்தமாக நடந்துள்ளது… [12]

நவம்பர் 21 இல் வேர்க்கர்ஸ் லீக் மத்தியக் குழு பின்வருமாறு விவரித்து WRP இன் மத்திய குழுவுக்கு எழுதியது:

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமை, வார்த்தையளவிலும் மற்றும் மேலெழுந்தவாரியாகவும் தவிர நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆளுமையை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதே நம் கருத்து வேறுபாட்டுக்கான அடிப்படை ஆதாரமாகவும், நமக்கிடையே அதிகரித்து வரும் மோதலுக்குக் காரணமாகவும் உள்ளது. சர்வதேச இயக்கத்தை பிரிட்டிஷ் பிரிவின் நடைமுறை தேவைகளுக்கு அவர் அடிபணிய செய்ததே ஹீலியினது அரசியல் சீரழிவின் மிக முக்கிய அம்சம் என்பதை அது துல்லியமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், WRP தலைமை, ஏதோவிதத்தில் வேறு வடிவமாக இருந்தாலும், அதே தேசியவாத-சந்தர்ப்பவாத போக்கைத் தொடரும் நிஜமான ஆபத்தில் உள்ளது.

… எங்களைப் பொறுத்த வரையில், ட்ரொட்ஸ்கிச கொள்கைகளைப் பாதுகாப்பதில் இருந்தும் மற்றும் திருத்தல்வாதத்தின் அனைத்து வடிவங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்தும் எந்தவிதத்தில் பின்வாங்குவதும், மிகப் பெரியளவில் பிற்போக்குத்தனமான நடைமுறை பாதிப்புகளைக் கொண்டிருக்கும் என்பதே அனைத்துலகக் குழுவின் ஒவ்வொரு காரியாளரும் உள்ளீர்த்துக் கொள்ள வேண்டிய தற்போதைய போராட்டத்தின் மிக முக்கிய படிப்பினையாகும். [13]

அதன் கலைப்புவாத தாக்குதலை அதிகரித்ததன் மூலம் WRP இதற்கு விடையிறுத்தது.

சுலோட்டர் ஸ்ராலினிச தாக்குதல்-நாய் மொன்டி ஜோன்ஸ்டோனுடன் கைகுலுக்கிறார்

நவம்பர் 26 அன்று, இலண்டனில் உள்ள Friends Hal மண்டபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் சுலோட்டர், பரம ஸ்ராலினிசவாதியான மொன்டி ஜோன்ஸ்டோனுடன் இழிந்த முறையில் கைகுலுக்கி, அனைத்துலகக் குழுவின் வரலாற்று அடித்தளங்களை அதன் அரசியல் எதிரிகளின் பார்வையாளர்களுக்கு முன்பாக பகிரங்கமாக கேள்விக்குள்ளாக்கியதை, 'புரட்சிகர ஒழுக்கநெறியும் WRP இல் பிளவும்' என்ற தலைப்பில் நியூஸ் லைனில் செய்தி வெளியிடப்பட்டது. அவ்வாறான 'பழைய ஸ்ராலினிசவாதி' என அப்படி எதுவும் இல்லை. ஆனால் ட்ரொட்ஸ்கிசத்தைத் தாக்குவதில் ஸ்ராலினிச இயக்கத்திற்கு மொன்டி ஜோன்ஸ்டோன் ஒரு நம்பகரமான கையாளாவார். 1960களில் அவரது முன்னோடிகள் சோசலிச தொழிலாளர் கழகத்திற்கு எதிரான மூன்று-பகுதி விவாத தாக்குதல்களை நடத்தியது மட்டுமல்லாமல், ட்ரொட்ஸ்கி மீதான தொடர்ச்சியான தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தனர்.

1987 இல் பீட்டர் சுவார்ட்ஸ், கீர்த்தி பாலசூரியா மற்றும் டேவிட் நோர்த்

இது, தோழர் பீட்டர் சுவார்ட்ஸை WRP மத்திய குழுவிற்கு ஒரு கடிதம் அனுப்பத் தூண்டியது:

ICFI இன் செயலாளரால் பிரிட்டிஷ் திருத்தல்வாதத்தின் ஒட்டுமொத்த கூட்டத்திற்கும் முன்னால் நிகழ்த்தப்பட்ட இந்த உரையை, தோழர் சுலோட்டர் ICFI உடன் முற்றிலும் உடைத்துக்கொண்டு, திருத்தல்வாத மற்றும் ஸ்ராலினிச சதுப்பு நிலத்தில் மீண்டும் சேர விரும்புகிறார் என்பதற்கான தெளிவான அறிகுறியாக என்னால் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. [14]

நான்கு நாட்களுக்குப் பின்னர், டிசம்பர் 6 அன்று, ஜெஃப் பில்லிங் 'மறைக்க எதுவும் இல்லை ... அல்லது பயப்பட எதுவுமில்லை' என ஒரு கட்டுரையில் பகிரங்க மறுப்பை வெளியிட்டார். அதில் 'ட்ரொட்ஸ்கியின் இறப்பின் பின்னரான காலத்திலிருந்து இயக்கத்தின் வரலாற்றின் ஒவ்வொரு அம்சத்தையும்” சூழ்ந்திருந்த “மிகவும் வெளிப்படையானதும் பரந்த அளவிலானதுமான கலந்துரையாடலில்” சேர அவர் வெளிப்படையாக ஸ்ராலினிஸ்டுகளுக்கும், பப்லோவாத அலன் தொர்னெட்டுக்கும், மற்றும் 'ஹீலியின் தன்னிச்சையான அத்துடன் கம்யூனிச விரோத முறைகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும்…' அழைப்பு விடுத்தார்.

ICFI மீதான WRP இன் தாக்குதலின் இரண்டாவது முக்கிய புள்ளி நவம்பர் 26 இல் சுலோட்டரால் நோர்த்திற்கு எழுதிய கடிதத்தில் விரிவாகக் கூறப்பட்டது. அத்தாக்குதலில் முழு ICFIயும் 'சமமான சீரழிவு' நிகழ்ச்சிப்போக்கிற்கு உட்பட்டுள்ளது என்று வலியுறுத்தி, இந்த அடிப்படையில், அதன் முழு வரலாற்றையும் இன்றைய அரசியல் ஆளுமையையும் மறுத்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, டிசம்பர் 11 அன்று வேர்க்கர்ஸ் லீக் அரசியல் குழுவிடமிருந்து ஒரு கடிதம் WRP இன் மத்திய குழுவிற்கு அனுப்பப்பட்டது. அது பிளவுக்கு வழிவகுத்த WRP இன் கலைப்புவாதம் மற்றும் ட்ரொட்ஸ்கிச-விரோத அரசியல் பிரச்சினைகளின் தன்மை மற்றும் அளவு பற்றிய மிக விரிவான சமகால எடுத்துக்காட்டு ஆகும்.

WRP இன் தேசியவாத சீரழிவால் எழுப்பப்பட்ட முக்கிய பிரச்சினைகளை தெளிவாக வரையறுக்கும் பின்வரும் முக்கியமான எச்சரிக்கையை அது கொண்டிருந்தது:

இப்போது நாம் எதிர்கொள்ளும் பெரிய ஆபத்து என்னவெனில், தலைமையால் சர்வதேசவாத-விரோதம் ஊக்குவிக்கப்படுகிறது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தேசிய சுயாதீனம், உலக சோசலிசப் புரட்சியின் முன்னணி அமைப்பாக உள்ள அனைத்துலகக் குழுவின் ஆளுமைக்கு எதிராக உள்ளது. தோழர் சுலோட்டர், நோர்த்திற்கு எழுதிய கடிதத்தில், 'சர்வதேசவாதம் என்பது துல்லியமாக ... வர்க்க நிலைப்பாடுகளை வரையறுத்துக் கொண்டு அவற்றினூடாகப் போராடுவதாகும்' என்று கூறியதன் உண்மையான அர்த்தம் இதுதான். ஆனால் இந்த 'வர்க்க நிலைப்பாடுகள்' எந்த நிகழ்ச்சிப்போக்கால் தீர்மானிக்கப்படுகின்றன? அதற்கு நான்காம் அகிலத்தின் இருப்பு தேவையா?…

ட்ரொட்ஸ்கியின் சர்வதேசியவாதத்தை தோழர் சுலோட்டரின் வரையறையுடன் (“வர்க்க நிலைப்பாடுகளை வகுத்து அவற்றினூடாக போராடுவது”) ஒப்பிட்டுப் பாருங்கள்: “சர்வதேசியவாதம் என்பது ஒரு அருவமான கோட்பாடு அல்ல. அது உலகப் பொருளாதாரத்தின் குணாம்சம், உற்பத்தி சக்திகளின் உலகளாவிய வளர்ச்சி மற்றும் உலகளாவிய வர்க்கப் போராட்டத்தின் அளவு ஆகியவற்றின் தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரதிபலிப்பாகும்.' (நிரந்தரப் புரட்சி, New Park, p. 9) பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தின் அடித்தளமும் உலக சோசலிசப் புரட்சிக் கட்சியில் அதன் ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்பாட்டின் அவசியமும் இங்குதான் உள்ளது. எந்த ஒரு தேசிய அமைப்பும், மார்க்சிசத்தின் மீதான தனது விசுவாசத்தை எவ்வளவு உரத்த குரலில் பிரகடனப்படுத்தினாலும், சர்வதேச சக சிந்தனையாளர்களுடன் நிலையான தொடர்பையும் ஒத்துழைப்பையும் தவிர்த்து, ஒரு புரட்சிகர முன்னோக்கை உருவாக்கி பராமரிக்க முடியாது. ... இந்த அமைப்பு விதிகள் வலியுறுத்தும் சர்வதேச இயக்கத்திற்கு தேசியப் பிரிவுகளை கீழ்ப்படியச் செய்வதை எதிர்ப்பவர்கள், தமது 'சுதந்திரத்திற்கான' விலைகொடுப்பு, தேசிய முதலாளித்துவம் மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிவதாகும் என்ற உண்மையை புறக்கணிக்கின்றனர்.[15]

WRP இன் சிறப்பு மாநாட்டின் அக்டோபர் 26 முதல் அமர்வில் நோர்த் ஆற்றிய உரை 'ஒருதலைப்பட்சமானதும், தவறானதும்' என்று சுலோட்டர் விவரித்தார். அது “ஹீலியால் எந்த அளவுக்கு WRP உம் WRP தலைமையும் சிதைக்கப்பட்டிருந்தது என்ற விபரணத்தைக் கொடுத்ததுடன், WRP யில் உள்ள எவரும் ஹீலியின் மார்க்சிச-எதிர்ப்பு எழுத்துக்கள் மற்றும் நடைமுறைகள் பற்றி ஒரு விமர்சனத்தை எழுப்பவோ முடியாதிருந்தது. மறுபுறம் டேவிட் நோர்த் 1982 முதல், ஹீலிக்கு எதிராக போராட தயாரான அல்லது சரியான நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.'

வேர்க்கர்ஸ் லீக் இவ்வாறு பதிலளித்தது:

…சிறப்பு மாநாட்டில் நோர்த் முன்வைத்த விமர்சனங்கள் எந்த வகையிலும் பொதுவாக WRP காரியாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்படவில்லை. [நோர்த்] அரசியல் குழுவிற்குள் ஒரு கொள்கையற்ற குழுவைப் பற்றி பேசியபோது, அவர் ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகள் பற்றிய கேள்விகளை பிரிட்டிஷ் பிரிவிற்குள் உள்ள நடைமுறைப் பணியின் தேவைகளுக்கு அடிபணிய வைத்தவர்களை மட்டுமே குறிப்பிட்டிருந்தார். தோழர் சுலோட்டர் அந்தக் குழுவின் தலைமையின் முக்கிய அங்கமாக இருந்தார்.[16]

இந்த கடிதம் வேர்க்கர்ஸ் லீக்கிற்கும், அதன் வரலாற்றுக்கும் ஒரு விரிவான பாதுகாப்பை வழங்குகிறது. பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியால் பாட்டாளி வர்க்க சர்வதேசவாதத்தை கைவிட்டதற்கு எதிராக எவ்வாறு அதன் ஸ்தாபகமும் அதைத் தொடர்ந்த நடைமுறையும் வேரூன்றியிருந்தது என்பதையும், தொழிலாள வர்க்கத்தை நோக்குநிலை கொண்ட ஒரு தீர்க்கரமான போக்கினால் இந்தப் போராட்டம் எவ்வாறு தொடரப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டது என்பதையும் இது விளக்குகிறது. பின்வரும் அத்தியாவசிய புள்ளிகள் எடுத்துக்காட்டப்படுகின்றன:

தத்துவார்த்த வேலை என்பது பிரபஞ்சத்தைப் பற்றி சிந்திக்கும் தனிமைப்படுத்தப்பட்ட நபரின் செயல்பாடு அல்ல. இது புரட்சிகர நடைமுறையில் இருந்து பிரிக்க முடியாதது. டேவிட் நோர்த்தும் வேர்க்கர்ஸ் லீக்கும் செய்த 'நேர்மறையான மற்றும் தத்துவார்த்த வேலைகளின்' உந்து சக்தியானது திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் ஆகும். இது பற்றி சுலோட்டர் துல்லியமாக எதுவும் கூறவில்லை, இது சோசலிச தொழிலாளர் கட்சிக்கு எதிராகவும், IC மற்றும் WRP க்குள் திருத்தல்வாதத்திற்கு எதிராகவும் நடத்தப்பட்ட ஒரு போராட்டமாகும்...

மேலும்:

அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்குள் வேர்க்கர்ஸ் லீக்கின் போராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிலான சர்வதேச வேலைகளுடன் இணைந்து நடத்தப்பட்டன. கெல்ஃபான்ட் வழக்கில் உச்சக்கட்டத்தை அடைந்த, பாதுகாப்பும் நான்காம் அகிலமும் பற்றிய விசாரணை, புரட்சிகர இயக்கத்திற்கு எதிரான ஸ்ராலினிச, ஏகாதிபத்திய கூட்டு சதித்திட்டங்கள் குறித்து உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் பரந்த வரலாற்று அறிவை முன்கொண்டு வந்தது.

அது தொடர்ந்தது:

Friends Hall மண்டபத்தில் நடந்தது கூட்டம் அல்ல; அது ஒரு முன்னோக்காகும். அந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது என்னவெனில், SWP ஒரு காலத்தில் 'மறுகுழுவாக்கம்' என்று அழைத்ததை நோக்கிய நகர்வாகும். அதாவது, தீவிரமயப்பட்டவர்கள், திருத்தல்வாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளுடனான கொள்கையற்ற கூட்டணிகளுக்கு ஆதரவாக ட்ரொட்ஸ்கிசத்தை கைவிடுவதாகும்.

... தற்போதைய சூழ்நிலையில், ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் சர்வதேச ஒத்துழைப்பை ஸ்தாபிப்பதற்கான அனைத்துலகக் குழுவின் முயற்சிகளுக்கான WRP தலைமையின் வெறுப்பானது, சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியில் உறுப்பினராக இருப்பதன் மூலம் பிரிட்டிஷ் பிரிவின் மீது சுமத்தப்பட்டுள்ள அரசியல் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபடுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. [17]

ICFI, WRP ஐ இடைநிறுத்துகிறது: டிசம்பர் 16, 1985

டிசம்பர் 16-17 அன்று, அக்டோபர் 25 ஆம் தேதி அதன் கூட்டத்தில் நிறுவப்பட்ட கட்டுப்பாட்டு ஆணையம் தயாரித்த இடைக்கால அறிக்கையை கேட்க அனைத்துலகக் குழு கூடியது. ஹீலியின் தலைமையிலான WRP, மத்திய கிழக்கில் முதலாளித்துவ ஆட்சிகளுடன் அரசியல் ரீதியாக ஊழல் உறவை ஏற்படுத்தியது, பாலஸ்தீன விடுதலை அமைப்பை மேலும் பணம் திரட்டும் திட்டங்களுக்கு இழிந்த முறையில் பயன்படுத்தியது, மற்றும் அதன் தலைவர்கள் IC இன் பிரிவுகளுக்கும் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்திற்கும் திட்டமிட்டு பொய் சொன்னார்கள் என்பதற்கான விரிவான ஆதாரங்களை இந்த அறிக்கை முன்வைத்தது. இந்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், ICFI பின்வருமாறு அறிவித்தது:

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எந்தவொரு தனிப்பட்ட தலைவரையும் குறை கூற முற்படவில்லை மாறாக முழு தலைமையையும் அதற்குப் பொறுப்பாக்குகிறது.

அதன் கொள்கைகளையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் பொருட்டு, WRP இன் 8 வது மாநாட்டை தொடர்ந்து, மார்ச் 1 க்கு முன்னர் ICFI இன் அவசரகால மாநாட்டிற்கு அழைப்புவிடும் வரை WRP ஐ அனைக்குலக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவாக இருப்பதிலிருந்து அது இடைநிறுத்தி வைக்கிறது.

இந்த கொள்கையற்ற உறவுகள் தொடர்பான அனைத்து உண்மைகள் பற்றிய கட்டுப்பாட்டு ஆணையத்தின் முழு அறிக்கையை கேட்டவுடன் அந்த அவசரகால ICFI மாநாடு ICFI க்கும் WRP க்கும் இடையேயான உறவை தீர்மானிக்கும். [18]

சுலோட்டர் தலைமையிலான அனைத்துலகக் குழுவிற்கான பிரிட்டிஷ் பிரதிநிதிகள், தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். WRP இன் சீரழிவின் உண்மையான உள்ளடக்கம், முழு WRP தலைமையினாலும் ட்ரொட்ஸ்கிசத்தை நிராகரிப்பது தான் என்பதை இது உறுதிப்படுத்தியது.

டிசம்பர் 17 ICFI அறிக்கை பிரிட்டிஷ் பிரிவு தனது உறுப்புரிமையை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை விவரித்து கூறியது. '1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட உலக சோசலிசப் புரட்சிக்கான கட்சியின் வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட ஒரே தலைமையாக அனைத்துலகக் குழுவில் பொதிந்துள்ள” ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்ட அடித்தளங்களுடனான தனது உடன்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துமாறு அழைப்பு விடுத்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, 'உலக இயக்கத்தின் அனைத்துக் காரியாளர்களையும் ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளிலும் வேலைத்திட்டத்திலும் மீண்டும் கல்வியூட்டி, ஆயுதபாணியாக்குவதற்கு உறுதியளித்தது.' அந்த அறிக்கை பின்வருமாறு அறிவித்தது:

ஸ்ராலினிசத்தின் மீதான எங்கள் அசைக்க முடியாத வெறுப்பை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஸ்ராலினிசத்தில் இருந்து எங்கள் இயக்கம் இரத்த ஆற்றால் பிரிக்கப்பட்டுள்ளது. சமூக-ஜனநாயக அதிகாரத்துவங்களுக்கு சமாந்திரமாக, ஸ்ராலினிசம் என்பது சர்வதேச தொழிலாளர் இயக்கத்திற்குள் ஏகாதிபத்தியத்தின் பிரதான கைக்கூலியாகும். இது 'முற்றுமுழுதாக எதிர்ப்புரட்சிகரமானது”

உலக சோசலிசப் புரட்சியின் உள்ளடங்கிய அங்கமாக, சீரழிந்த மற்றும் ஊனமுற்ற ஸ்ராலினிச அதிகாரத்துவங்களுக்கு எதிரான அரசியல் புரட்சிக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம்…

ஏகாதிபத்தியத்தின் தாக்குதலுக்கு எதிராக அரைக் காலனித்துவ மக்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புதிய பிரிவுகளை, நிரந்தரப் புரட்சி மூலோபாயத்தின் அடித்தளத்தில் நிர்மாணிப்பதன் மூலம், பாட்டாளி வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர அணிதிரட்டலுக்கு நாங்கள் அனைத்து காலங்களிலும் ஆதரவளிக்கின்றோம்.…

அனைத்துலகக் குழுவினால் பாதுகாக்கப்பட்டு, அதனுள் பொதிந்துள்ள நான்காம் அகிலத்தின் தொடர்ச்சியை அடித்தளமாக கொண்டுள்ள, பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று சரியான தன்மையை ICFI உம் WRPயும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. 1961 இல் சோசலிச தொழிலாளர் கழகத்தின் தேசியக் குழு கூறியது போல், பப்லோவாத திருத்தல்வாதம் 'ட்ரொட்ஸ்கிசத்திற்குள் ஒரு போக்காக' பிரதிநிதித்துவம் செய்யவுமில்லை, மற்றும் அவ்வாறு கருதவும் முடியாது. [19]

WRP இன் இடைநீக்கம் பற்றிய தீர்மானங்கள் வேர்க்கர்ஸ் லீக், சோசலிச தொழிலாளர் கழகம் (Bund Sozialistischer Arbeiter), ஆஸ்திரேலியாவில் உள்ள சோசலிச தொழிலாளர் கழகம் மற்றும் பிரிட்டனில் உள்ள இளம் சோசலிஸ்டுகளின் அறிக்கைகளால் ஆதரவளிக்கப்பட்டன.

1977 இல் பிரிட்டிஷ் இளம் சோசலிஸ்டுகளின் வருடாந்திர மாநாடு

சுலோட்டர்-பண்டா குழு இதை ஒரு பிளவுக்கான சம்பிரதாயபூர்வ அறிவிப்பாகக் கருதியது. கட்சி மாநாட்டிற்கு இட்டுச் செல்லும் IC தீர்மானத்தின் மீது வாரக்கணக்கில் கலந்துரையாடப்படும் ஒரு சூழ்நிலையை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாததுடன், மேலும் இதை சாத்தியமற்றதாக மாற்றும் முயற்சியில் இறங்கினார்கள். அதுவரை இருந்த உறுப்பினர்களில் ஒரு தெளிவான பெரும்பான்மை நிலையையும், WRP இன் கணிசமான சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் WRP இன் தலைமையையும் அவர் இழக்க நேரிடும் என்பதை சுலோட்டர் அறிந்திருந்தார்.

சுலோட்டர் அவரைச் சுற்றி 'நான்கு பேராசிரியர்கள்' என்று அழைக்கப்படும் டொம் கெம்ப், சிரில் ஸ்மித் மற்றும் ஜெஃப் பில்லிங் ஆகிய கல்வியாளர்களின் குழுவைக் கூட்டினார்.” அவர்கள் கட்சியின் நடுத்தர வர்க்க உறுப்பினர்களை ஒரு பிளவுக்கு தயார்படுத்தத் தொடங்கினர். ட்ரொட்ஸ்கிசத்தை 'ஒரு அழுகிய கயிறு' என வர்ணிக்க இருந்த மைக் பண்டாவின் சகோதரர் டோனி தலைமையிலான Runcorn அச்சகத்தின் நோக்குநிலை குழம்பிய முழுநேர ஊழியர்களும், சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது காணப்பட்ட சந்தர்ப்பவாத 'கூட்டணி கட்டுவதற்கும்', 'குறுங்குழுவாதத்திற்கும்' முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய டேவ் டெம்பிள் போன்ற தொழிற்சங்க எந்திரத்திற்குள் பதவிகளைப் பெற்ற தொழிலாளர்களும் இதில் அடங்குவர்.

மைக் பண்டா அதற்குள் இலங்கைக்கு திரும்புவதற்காக WRP இன் தலைமையில் தனது பதவியை கைவிட்டு விலகினார். அங்கு அவர் தனது 'அனைத்துலகக் குழு ஏன் புதைக்கப்பட வேண்டும் என்பதற்கான 27 காரணங்கள்' என்பதை எழுதினார். பண்டா, தான் குறைந்தது ஒரு தசாப்த காலமாக ட்ரொட்ஸ்கிஸ்டாக இருக்கவில்லை என்பதையும், அனைத்துலகக் குழுவுடனான தனது முறிவைத் தாமதப்படுத்திய வருடங்களுக்காக வருந்துவதாகவும் தெரிவித்தார். நான்காம் அகிலத்தின் முழு வரலாற்றையும் 'பிளவுகள், காட்டிக்கொடுப்புகள், துரோகம், தேக்கம் மற்றும் குழப்பம் ஆகியவற்றின் இடைவிடாத தொடர்' என்று அவர் கண்டனம் செய்தார். 'நான்காம் அகிலம் பிரகடனப்படுத்தப்பட்டது ஆனால் கட்டமைக்கப்படவில்லை என்பது திட்டவட்டமாக உறுதியாக கூறப்பட வேண்டும்' என்றார். அவர் 32 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த அனைத்துலகக் குழுவை 'ஒரு பெரிய மாயை, ஒரு இழிவான சூழ்ச்சி மற்றும் ஒரு வெறுப்பூட்டும் பாசாங்கு' என்று தாக்கினார்.

ட்ரொட்ஸ்கிச-விரோத LSSP உறுப்பினர்களுடன் பண்டா தனிப்பட்ட தொடர்பையும் மீண்டும் தொடங்கினார். இது அவர்களுடன் சேருவதற்கு அழைக்கப்படுவதற்கான கலந்துரையாடல்களுக்கு வழிவகுத்தன.

சுலோட்டரின் அழைப்பு 'வெளித்தலையீட்டுக்கு' எதிரான தேசியவாத தப்பெண்ணத்தின் நச்சுக் கலவையை அடிப்படையாகக் கொண்டதுடன், 'புரட்சிகர ஒழுக்கநெறி'க்காக ஒரு சிலுவைப் போரில் ஈடுபட்டதற்கான கூட்டுத்தற்பெருமை மற்றும் 'இடது' சதுப்பு நிலத்தினுள் வரவேற்கப்படுவதற்கான வாய்ப்பை வெளிப்படுத்தியதையும் அடித்தளமாக கொண்டதாகும். மேலும் WRP போலி-இடது மற்றும் ஸ்ராலினிச எதிர்ப்பாளர்களால் இனி வெளியே நிற்பவர்களாக கருதப்படாது, வசதியானதும், ஓரளவு கடுமைகுறைந்த வாழ்க்கை முறைக்கு ஆதரவாக 'தனிமைப்படுத்தலையும்' மற்றும் கடினமான அரசியல் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததுமாகும். தாட்சரிச தொழில்முறை வாழ்க்கை முறையினால் உயர்ந்த சகாப்தத்தின் உச்சத்தில் அவர்களின் சமகாலத்தவர்கள் பணம் சம்பாதிப்பதில் மும்முரமாக இருந்த சூழ்நிலையில், அவர்களும் பல்வேறு தொழில்முறைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் இதில் அடங்கும்.

ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளபடி, பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை இந்த பிரச்சாரத்தின் முக்கிய இலக்காக இருந்தது. பிப்ரவரி 2, தோழர் நோர்த், 'பாதுகாப்பையும் நான்காம் அகிலத்தையும் பாதுகாத்தல்', மற்றும் பிளவுக்குப் பிந்தைய, 'SWPதொடர்பான விடயங்களும் - உண்மைகள் எதை காட்டுகின்றன' போன்ற பதிலில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் அவசியமான வாசிக்கவேண்டியவையாகும். உடனடி கன்னைப் பரிசீலனைகளைத் தவிர, இந்தத் தாக்குதலின் நோக்கம் (1) சோசலிச தொழிலாளர் கட்சியின் (அமெரிக்கா) பப்லோவாத கூட்டாளிகளுடன் அரசியல் நல்லிணக்கத்தை எளிதாக்குவது, மற்றும் (2) சோவியத் அதிகாரத்துவத்தின் முகவர்களுடனான ஒத்துழைப்பை நியாயப்படுத்தும் நோக்கத்திற்காக ஸ்ராலினிசத்தின் அரசியல் மறுவாழ்வை நோக்கி செயய்படுவதாகும்.

'இரட்டை முகவரின் ஆவணம்: ஜோசப் ஹான்சனின் பொய்கள்,” பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் ஒரு பகுதி

கட்சிக்குள் அவருக்கு இருந்த சிறுபான்மை ஆதரவின் காரணமாக அதற்கு எதிராக செயற்படவும், WRP இன் அரசியல் அச்சை மாற்றவும், WRP மிகவும் சீரழிந்துவிட்டதாகவும், அரசியல் நடவடிக்கையை விட்டு வெளியேறியவர்கள் தங்கியிருந்தவர்களை விட 'ஆரோக்கியமானவர்கள்' என்றும், அவர்கள் திரும்பி வருவதற்கு வரவேற்கப்படுவதாகவும் சுலோட்டர் அறிவித்தார். அறியப்படாத மற்றும் சந்தேகத்திற்குரிய அரசியல் வம்சாவளியைச் சேர்ந்த தனிநபர்களின் வெளிப்படுதல்களுடன், கெம்ப் போன்ற பல தசாப்தங்களாகக் காணப்படாத முகங்கள் மீண்டும் தோன்றின அல்லது தேசிய முக்கியத்துவம் பெற்றன.

“ஹீலியின் IC பற்றிய பொது கலந்துரையாடலுக்காக” டேவ் குட் எழுதி பிப்ரவரி 7, 1986 இல் Workers Press இல் வெளியிட்ட கட்டுரையை, ICFI ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாக்கிறது என்ற இதழில் மீண்டும் வெளியிட்டது. டேவ் குட் அவர் இதுவரை யாரும் கேள்விப்படாத பண்டாவின் ஆதரவாளராக இருந்ததுடன், மேலும் IC க்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதிராக சுலோட்டரின் தாக்குதல் நாயாக செயல்பட்டார். பண்டாவின் 13 ஆதரவாளர்களைக் கொண்ட சிறிய குழுவைப் போலவே, பின்னர் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

இந்த '27 காரணங்கள்' வெளியீடு ஜனவரி நடுப்பகுதியில் பிரிட்டனுக்கு வந்துவிட்டது. ஆனால் அது WRP அல்லது IC இன் உறுப்பினர்களுக்கு காட்டப்படவில்லை. அதற்கு பதிலாக, அது WRP இன் 8 வது காங்கிரஸிற்கு முன்னர் குட் இனால் தொகுக்கப்பட்டு வேர்க்கர்ஸ் பிரஸ்ஸில் வெளியிடப்பட்டது.

ஜனவரி 26, 1986 அன்று WRP மத்திய குழுவின் பெரும்பான்மையினரால் முன்வைக்கப்பட்ட இரண்டு தீர்மானங்களுக்கு பண்டாவின் ஆவணம் அரசியல் அடிப்படையாக இருந்தது, ICFI இன் ஆளுமையை வெளிப்படையாக அங்கீகரிப்பதன் அடிப்படையில் WRP உறுப்பினரை மீண்டும் பதிவு செய்ய கட்டாயப்படுத்தும் அக்டோபர் 27 சிறப்பு மாநாட்டு தீர்மானத்தை இரத்து செய்தல். இந்தத் தீர்மானங்களின் அரசியல் மற்றும் நடைமுறை உள்ளடக்கம் அனைத்துலகக் குழுவுடன் ஒரு பிளவை அறிவிப்பதாகும்.

தீர்மானம் 1 கூறியது:

ஹீலி மற்றும் WRP இன் தலைமையின் கீழ் அனைத்துலகக் குழு அரசியல், தத்துவார்த்த, தார்மீக மற்றும் அமைப்புரீதியான சீரழிவுக்கு உட்பட்டுள்ளது.

அனைத்துலகக் குழு என்பது உலகக் கட்சியோ அல்லது உலகக் கட்சியின் கருவோ கூட அல்ல…

ட்ரொட்ஸ்கிசத்தின் முன்னோக்குகள், தத்துவம் மற்றும் அமைப்பு ஆகியவை ஹீலிசத்தின் அனைத்து அம்சங்களுக்கும் எதிரான ஒரு கடுமையான போராட்டத்தில் மட்டுமே விரிவுபடுத்தப்பட முடியும்... [மற்றும்]

IC ஒரு சர்வதேச தலைமையாக அரசியல் ஆளுமையை கோர முடியாது. IC ஆல் தீர்மானிக்கப்படும் ஒரு சர்வதேச ஒழுங்குமுறைக்கு எந்தப் பிரிவுகளையும் கீழ்ப்படுத்த முடியாது.[20]

தீர்மானம் 2 அறிவித்தது:

எனவே பொதுச் செயலாளர் பெயரில் வெளியிடப்பட்ட 11-8-85 பதிவுப் படிவத்தை திரும்பப் பெறுகிறோம். [21]

இந்தத் தீர்மானங்களை டேவ் ஹைலண்ட் தலைமையிலான மத்திய குழு சிறுபான்மையினர் எதிர்த்தனர். ஜனவரி 27 அன்று, வேர்க்கர்ஸ் லீக் மத்திய குழு 'நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பிரிவுகளுக்கும் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஒரு கடிதம்' அனுப்பியது. அது கூறியது:

ஜனவரி 26, 1986 அன்று தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மத்திய குழுவால் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனான பிளவுக்கான ஒரு பிரகடனமும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு மற்றும் கோட்பாடுகளை பகிரங்கமாக கைவிடுதலும் ஆகும். மைக்கல் பண்டாவுடன் சேர்ந்து, இந்த தீர்மானத்திற்கு வாக்களித்த மத்திய குழுவின் 12 உறுப்பினர்களும், தமது சொந்த அமைப்பிற்குள் ஏற்பட்ட நெருக்கடியின் மத்தியில், தமது பதவியை கைவிட்டவர்களும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து வர்க்க எதிரியின் சேவைக்கு தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மார்க்சிசத்தின் விட்டோடிகளாவர். …

இந்தத் தீர்மானங்கள் 1940ல் இருந்து மார்க்சிசத்திற்கான போராட்டத்தின் முழு வரலாற்றையும் வெளிப்படையாக நிராகரிக்கின்றன. உண்மையில் அவை ட்ரொட்ஸ்கியின் படுகொலை மூலம் ஸ்ராலினிச அதிகாரத்துவம் நான்காம் அகிலத்தின் மீது அதன் அரசியல் வெற்றியை அடைந்தது என அறிவிக்கிறது. [22]

சுலோட்டர் மற்றும் பண்டாவின் பிளவு நடவடிக்கைகளை நிராகரிக்குமாறு வேர்க்கர்ஸ் லீக் WRP உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்தது மற்றும் பில் சாண்ட்ஃபோர்ட் மற்றும் ரோபர்ட் பியூஹ்லர் தலைமையிலான ஒரு பிரிவின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரசியல் நாசவேலைக்கான அவர்களின் முயற்சிகளுக்கு எதிராக பாதுகாக்க IC இன் பிரிவுகளை எச்சரித்தது. அது பின்வருமாறு கூறி முடித்தது:

இந்த முன்னாள் தலைவர்கள் ஒரு காலத்தில் சிறந்த பாத்திரங்களை வகித்த ட்ரொட்ஸ்கிசத்திற்கான கடந்தகால போராட்டங்களில் இருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் பண்டா, சுலோட்டர் மற்றும் ஹீலியைப் போல் பின்வாங்காது. அவர்கள் ஒரு காலத்தில் நம்பியிருந்து, அவர்கள் எங்களுக்கு கற்பித்த பாடங்களையும் நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். ஆனால் இறந்தவர்கள் தங்கள் இறப்பை அடக்கம் செய்யட்டும். WRP ஓடுகாலிகளின் காட்டிக்கொடுப்பு ICFI ஐ அழிக்கவில்லை. அவர்கள் இல்லாமலும் அவர்களுக்கு எதிராகவும், சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கான ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டம் முன்னோக்கி செல்கிறது.[23]

பிப்ரவரி 8 அன்று, பண்டா மற்றும் சுலோட்டரின் ஆதரவாளர்கள் ICFI உடனான தங்கள் பிளவை பொதுவாக அறிவிக்க சந்தித்தனர். அவர்களின் 8வது மாநாடு வெட்கக்கேடான அரசியல் மோசடியாகும். IC க்கு ஆதரவாக முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது, அதே நேரத்தில் மற்ற அரசியல் போக்குகளிலிருந்து 'விருந்தினர்' பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டு மண்டபத்திற்கு வெளியே உள்ள வாயில்கள் பூட்டப்பட்டு, பாதுகாப்புக்காக 25 போலீசார் வெளியே நின்றிருந்தனர். சுலோட்டர் போலீஸ் பாதுகாப்புடன் கட்டிடத்திற்குள் நுழைந்தார்.

பிளவைத் தொடர்ந்து WRP க்குள் இருந்து வரும் அறிக்கைகள் இந்த இழிவான செயல் ஏன் அவசியம் என்பதை உறுதிப்படுத்துகிறது, WRP இன் உறுப்பினர் எண்ணிக்கை அதற்குள் வெறும் 70 ஆகக் குறைந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.

'நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, 1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் தொடர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை' என்றும், 'ஹீலிசத்திற்கு எதிரான தொழிலாளர் புரட்சிக் கட்சியின் கொள்கை ரீதியான போராட்டத்தை' பாராட்டி சுலோட்டர்வாதிகள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர்.

இது 'ஹீலியிசத்தை தோற்கடிக்க போராடும் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளில் உள்ள அனைவரையும்' மீண்டும் ஒருங்கிணைப்பதற்கும், 'நிரந்தரப் புரட்சி, இடைமருவு வேலைத்திட்டம், கம்யூனிச அகிலத்தின் முதல் நான்கு மாநாடுகள் ஆகியவற்றிற்கு ஆதரவாக நிற்கும் அனைவரின் சர்வதேச முன்-மாநாட்டினை 1986 இன் இறுதிக்குள் தயாரிப்பதற்கான ஒரு பொது கலந்துரையாடலுக்கும்' அழைப்பு விடுத்தது.

அக்டோபர் 26-27ல் நடைபெற்ற WRP இன் சிறப்பு மாநாட்டின் முடிவின்படி தேர்ந்தெடுக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பிரதிநிதிகள் வேறொரு இடத்தில் ஒன்றுகூடினர். அங்கு அவர்கள் WRP (சர்வதேசவாதிகள்) இன் முறையான 8வது மாநாட்டைக் கூட்டினர். அந்த காங்கிரஸ் பின்வரும் ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது:

அக்டோபர் 26-27, 1985 சிறப்பு மாநாட்டின் முடிவுகளின் அடிப்படையில் முறையாக அழைப்புவிடப்பட்ட இந்த மாநாடு, ஓடுகாலிகளினால் முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானங்கள் ICFI இல் பொதிந்துள்ள ட்ரொட்ஸ்கிசத்தின் அனைத்து வரலாற்று தேட்டங்கள் மற்றும் தத்துவார்த்த வெற்றிகளிலிருந்து ஒரு முறிவையும், ட்ரொட்ஸ்கிச காரியாளர்களை கலைக்கும் முயற்சியையும் குறிக்கிறது என அறிவிக்கிறது. [24]

பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் பாதுகாப்பு

'பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை தொடர்பாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் மற்றும் கெல்ஃபான்ட் வழக்குடன் வேர்க்கர்ஸ் லீக்கால் தொடரப்பட்ட போராட்டம் ஸ்ராலினிசத்திற்கும், திருத்தல்வாதத்திற்கும் எதிரான போராட்டத்திலும் மற்றும் அரசு தாக்குதலுக்கு எதிராக ஒரு உறுப்பினருக்கு பயிற்சியளிப்பதிலும் ஒரு வரலாற்று வெற்றியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.” [25]

WRP ஓடுகாலிகளுக்கு எதிரான போராட்டம் சர்வதேச அளவில் தொடர்ந்தது. இது மார்ச் 4-5 கட்சி மாநாட்டைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் சோசலிச தொழிலாளர் கழகத்தில் (SLL) இருந்து சாண்ட்ஃபோர்ட் மற்றும் பியூஹ்லர் பிரிவு உடைவதற்கு இட்டுச்சென்றது. SLL எழுதியது, 'இந்த மறு-குழுவாக்கத்திற்கான அழைப்புக்கு பதிலளிப்பதில், சாண்ட்ஃபோர்ட்-பியூஹ்லர் ஓடுகாலிகள் 'ஹீலிசத்தில்' இருந்து உடைக்கவில்லை, மாறாக பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்திய கொள்கை ரீதியான போராட்டத்தில் இருந்தும்', 'அதன் கொள்கைகளைத் தாக்குபவர்களுடனும் மீண்டும் அணிதிரள்கின்றார்கள்.'

ஜூன் 2 அன்று, பெருவியாவின் லிகா கொமுனிஸ்டா (Liga Comunista -LC) வின் ஓடுகாலித்தனம் குறித்து ICFI ஒரு அறிக்கையை வெளியிட்டது. 'நிரந்தரப் புரட்சி தத்துவம், உலகப் புரட்சி மூலோபாயம் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம்' உட்பட, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தத்துவார்த்த, அரசியல் மற்றும் வேலைத்திட்ட அடித்தளங்களை முற்றிலுமாக நிராகரித்து, ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான ஒரு நவ-ஸ்ராலினிச, மாவோயிச-சார்பு மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாத எதிர்ப்பை LC வெளிப்படையாக முன்னெடுத்தது. 'ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் தலைமையை, பெரு மற்றும் இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஊழல்மிக்க, விலைபோகும் தேசிய முதலாளித்துவத்திற்கு' விட்டுக்கொடுத்தது.

ஹ்யூகோ பிளாங்கோ, ரிக்கார்டோ நாப்புரி, நஹுவல் மொரேனோ மற்றும் போசாடாசைட்வாதிகள் போன்ற திருத்தல்வாதிகள் உட்பட அனைத்து 'பெருவிய மற்றும் இலத்தீன் அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளுடன்' ஒரு பொது கலந்துரையாடலுக்கான LC யின் சொந்த அழைப்புக்கு இதுவே அடிப்படையாக இருந்தது. இது 'ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முழு காலத்துடனும் மற்றும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி, மூன்றாம் அகிலத்தின் முதல் நான்கு மாநாடுகள், அத்துடன் சீனா, வியட்நாம் மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் பிற்கால புரட்சிகரமான அனுபவங்கள் எடுத்துக்காட்டிய 'ஒரு புரட்சிகர நடைமுறையை நோக்கிய நோக்குநிலையுடனும் மீளமுடியாத வகையில் முறித்துக் கொள்ளுதலின்' அடித்தளத்திலான ஒரு மறுஅணிதிரளலுக்காகும்.'[26]

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முழு வரலாறும் ஒரேயடியாக அழிக்கப்பட்டதுடன், 'புரட்சிகர அனுபவமானது' லெனினின் மரணத்திற்குப் பின்னர் ஸ்ராலினிசம், மாவோயிசம், காஸ்ட்ரோயிசம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தின் பிற வடிவங்களுக்கு வழங்கப்பட்டது.

பிளவின் பின்விளைவுகளை எடுத்துரைப்பதற்கும், அதன் நீடித்த அரசியல் முக்கியத்துவத்தை சுருக்கமாகக் கூறுவதற்கும் முன், 1985 இல் அனைத்துலகக் குழுவின் தலையீட்டிலிருந்து மற்றொரு அத்தியாவசிய படிப்பினை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

WRP க்குள் உள்ள கன்னை உட்பூசல் தீவிரமான, மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் வெடிக்கும் பிரச்சினையாக இருந்தது. குற்றச்சாட்டுகள், எதிர்க் குற்றச்சாட்டுகளின் சூழல் நச்சுத்தன்மையுடையதாக இருந்தது. கட்சித் தலைமை மற்றும் காரியாளர்களுக்குள்ளேயே அமைப்புரீதியான கணக்குத்தீர்ப்புக்கான கோரிக்கைகள் அதிகமாக இருந்தன. மத்திய குழு அனைத்து அரசியல் அதிகாரங்களையும் இழந்துவிட்டது, ஜனநாயக மத்தியத்துவம் ஒரு உயிரற்ற எழுத்தாகிவிட்டது.

இந்த நெருக்கடிக்குள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எந்த கன்னையினராலும் முன்வைக்கப்பட்ட அரசியல் கட்டுக்கதைகளை ஏற்க மறுத்துவிட்டது, அதன் தலையீட்டை வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் அடிப்படை பிரச்சினைகள் மீது அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிரிவுகளுக்குள் மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக அகிலத்திற்குள்ளும் ஜனநாயக மத்தியத்துவ நடத்தை விதிமுறைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என அது வலியுறுத்தியது.

1986 இல் நடந்த வரலாற்று வெற்றியும், மிகவும் திறந்த மற்றும் ஒத்துழைப்பான முறையில் தன்னை நடத்தும் ஒரு உலக இயக்கத்திற்குள் சர்வதேச முன்னோக்குகளின் வளர்ச்சிக்கு அசாதாரண கவனம் செலுத்துவதும், ICFI க்கு அசாதாரண அளவிலான அரசியல் உடன்பாட்டையும், ஒருமித்த தன்மையை அடையவும் பராமரிக்கவும் உதவியது. இதன் விளைவாக, பெருமளவில் அகநிலை விரோதங்களின் அதிகரிப்போ அல்லது கன்னை மோதல்களின் இதேபோன்ற வெடிப்போ ஒருபோதும் இருந்ததில்லை.

எவ்வாறாயினும், நாம் இப்போது நுழைந்துள்ள வெடிக்கும் அரசியல் காலகட்டத்தில், ஒவ்வொரு பிரிவிலும் கட்சி உறுப்பினர்களின் வளர்ச்சி மற்றும் நமது அரசியல் பாரம்பரியத்திற்கு வெளியே இருந்து புதிய மற்றும் அனுபவமற்ற சக்திகள் சர்வதேச அளவில் ஈர்க்கப்படுவதற்கு மத்தியில், இதுபோன்ற மோதல்கள் ஒருபோதும் வெளிவராது என்று கருதுவது அரசியல் ரீதியாக அப்பாவித்தனமாக இருக்கும். எங்கள் உறுப்பினர்களுக்கும் தலைவர்களுக்கும் அவர்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதில் கல்வி கற்பிப்பது, 1985 போராட்டத்தின் படிப்பினைகளை உள்ளீர்த்துக்கொள்வதன் மூலம் தொடங்குகிறது: எல்லா காலங்களிலும் அடிப்படை வேலைத்திட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதும் மற்றும் மிகவும் தீவிரமான மோதல்களுக்கு மத்தியில் கூட, சோசலிச புரட்சியின் உலகக் கட்சியின் கட்டுப்பாட்டையும் அரசியல் ஆளுமையையும் பேணவேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்களில், 'நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் பிளவு ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் முக்கியத்துவம் பற்றி மேலும் ஒரு கருத்து' விளக்குகிறது:

1953 ஆம் ஆண்டைப் போலவே, அனைத்துலகக் குழுவில் 1982 க்கும் 1986 க்கும் இடையில் உருவான பிளவும் மகத்தான மாற்றங்களை எதிர்பார்த்தது. அம்மாற்றங்கள், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து நான்கு தசாப்தங்களில் இருந்ததைப் போலவே உலக அரசியலின் கட்டமைப்பையும் 1980 களின் கடைசி பாதியில் சிதறடிக்கும்…

WRP இன் நெருக்கடியானது, வரலாற்றுரீதியாக தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்து வெகுஜனக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளிலும் பரவிய ஒரு பரந்த நிகழ்ச்சிப்போக்கின் ஒரு பகுதியாகும். அமைப்பு ரீதியான கட்டமைப்பு மற்றும் அரசியல் விசுவாசங்களில் அவர்களுக்கு வேறுபாடுகள் இருந்தாலும், ஸ்ராலினிச, சமூக-ஜனநாயக மற்றும் சீர்திருத்த அமைப்புகள் அனைத்தும் ஒரே தேசியவாத வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை.[27]

நுண்சில்லுகளுடன் (microchip) தொடர்புடைய தொழில்நுட்பத்தின் அடிப்படை வளர்ச்சிகள் முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளமயமாக்கலுக்கு காரணமாக அமைந்தன. இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் தேசிய சீர்திருத்தவாத முன்னோக்குகளை காலாவதியாகப் போகச் செய்தது. உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள் மற்றும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தில் அவற்றின் தாக்கம் ஆகியவை அனைத்துலகக் குழுவிற்குள் பிரதிபலித்தன. இறுதிப் பகுப்பாய்வில், அவை பிளவுக்கு இட்டுச் சென்றது.

தேசிய தன்னிறைவு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் வீழ்ச்சியானது, ஸ்ராலினிஸ்டுகள் முதல் சீர்திருத்தவாதிகள் வரை மற்றும் அமெரிக்காவில் உள்ள கம்யூனிச எதிர்ப்பு AFL-CIO அதிகாரத்துவம் வரை அதிகாரத்துவமயமாக்கப்பட்ட தொழிலாளர் இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு தேசிய அடிப்படையிலான அமைப்பையும் பற்றிக் கொண்ட ஒரு பரந்த நெருக்கடியின் மிகவும் மேம்பட்ட வெளிப்பாடாக இருந்தது.

இந்த தேசியவாத அதிகாரத்துவங்களுக்கு, எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ராலினிசத்தினை நோக்கிய WRP இன் பலவேறு உடைந்த துண்டுகளின் நோக்குநிலைதான், அவற்றின் தொடர்ச்சியான சீரழிவின் முழுமையான வெளிப்பாட்டைக் கண்டதுடன், அது பெரும்பாலும் அரசியல் அழிவிலேயே முடிந்தது.

மிக்கையில் கோர்பச்சேவ் சோவியத் ஒன்றியத்தில் ஒரு அரசியல் புரட்சிக்கு தலைமை தாங்குகிறார் என ஜெர்ரி ஹீலி உறுதியாக நம்பினார். இந்த அடிப்படையில் ஷீலா டோரன்ஸுடன் பிரிந்து, 1987 இல் வனேசா மற்றும் கோரின் ரெட்கிரேவ் ஆகியோருடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கினார்.

டிசம்பர் 14 அன்று அவர் இறப்பதற்கு சற்று முன்பு நவம்பர் 1989 இல் வெளியிடப்பட்ட 'ஐயுறவுவாதமும் அரசியல் புரட்சியும்' உட்பட 'முரண்பாடான நிகழ்ச்சிப்போக்கு' என அரசியல் புரட்சி தொடர்பாக ஹீலி மூன்று கட்டுரைகளை எழுதினார்.

1988 செப்டம்பரில், 'மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் போதனைகளை அருவமான விபரிப்புக்கள் மூலம் முன்வைக்கும் 'மாறாநிலைவாதிகள்' மற்றும் 'கோர்பச்சேவ் மற்றொரு ஸ்ராலின் ஆவார், சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தை எவ்வளவு விரைவாக அறிமுகப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக அறிமுகப்படுத்த தயாராகிறார்' எனக் கூறும் 'ஐயுறவுவாதிகள்' ஆகியோரைக் கண்டித்தார்.

முதலாளித்துவ புனருத்தாரணத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் அதிகாரத்துவத்தின் ஒரு பிரிவின் அமைப்பான மெமோரியல் யூனியன் (Memorial Union) இன் இணை சிந்தனையாளர்களாக ஹீலியும் ரெட்கிரேவும் தங்களை அறிவித்தனர். ஹீலி சோவியத் ஒன்றியத்திற்கு நான்கு பயணங்களை மேற்கொண்டார். அவர் நவம்பர் 1988 இல் எழுதினார்:

பெரெஸ்த்ரோய்காவும் கிளாஸ்னோஸ்ட்டுக்கான போராட்டமும் (ஜனநாயகமயமாக்கல்), அரசியல் புரட்சிக்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் வரலாற்று உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் எப்போதும் மாறிவரும் வடிவங்களாகும். [28]

பல வருடங்களாக கடினமான சூழ்நிலையில் எங்கள் இயக்கத்தில் இதுபோன்ற அசாதாரணமான பங்கை வகித்த ஒரு மனிதரை பற்றி விபரிக்கையில் இதுபோன்ற ஒரு வருந்தத்தக்க குறிப்புடன் முடிப்பது தவறானது. அதற்கு பதிலாக டேவிட் நோர்த் ஜெர்ரி ஹீலியும் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அவரது இடமும் என்பதில் தனது இரங்கல் உரையை நிறைவுசெய்கையில் குறிப்பிட்ட மிகவும் உருக்கமான அஞ்சலியை ஒருவர் நினைவு கூர வேண்டும்:

நீண்டதும் கடினமானதுமான காலத்தில், ஜெர்ரி ஹீலி நான்காம் அகிலத்தின் வரலாற்று தொடர்ச்சியில் ஒரு முக்கியமான மனித இணைப்பாக இருந்தார். பல தசாப்தங்களாக அவர் ஸ்ராலினிசத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் எதிராக போராடினார். இறுதியில், இந்த மிகப்பெரிய போராட்டத்தின் அழுத்தத்தின் கீழ் அவர் உடைந்தார். ஆனால் அவர் தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் சாதித்தவற்றில் மிகச் சிறந்தவை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உயிர்வாழ்கின்றன. மேலும் அவரது சாதனைகள் மற்றும் தோல்விகள் இரண்டிலுமிருந்து கற்றுக்கொண்ட மீள் எழுச்சி பெற்ற சர்வதேச புரட்சிகர தொழிலாளர் இயக்கம், அவரது நினைவுக்கு பொருத்தமான அஞ்சலியை செலுத்தத் தவறாது. [29]

கொரின் மற்றும் வனேசா ரெட்கிரேவ் ஆகியோர் 2004 இல் மார்க்சிஸ்ட் கட்சியை (Marxist Party) கலைத்துவிட்டனர். ஒரு அடிப்படை உரிமைகள் கட்சிக்கான மிகவும் முந்தைய முன்மொழிவின் மாதிரியில் இப்போது காணாமல் போய்விட்ட 'அமைதி மற்றும் சுதந்திரம்' (Peace and Freedom) அமைப்பை நிறுவினர்.

2018 இல், சவாஸ் மிஷேல்-மட்சாசும் அவரது தொழிலாளர் புரட்சிக் கட்சியும் (EEK), ஆர்ஜென்டினாவில் உள்ள தொழிலாளர் கட்சி (பார்டிடோ ஒப்ரேரோ- PO) துருக்கியில் உள்ள புரட்சிகர தொழிலாளர் கட்சி (DIP) ஆகியவற்றுடன் சேர்ந்து, ரஷ்யாவின் வெறித்தனமான ஸ்ராலினிச சார்பு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியையும் (OKP) உள்ளடக்கிய ஒரு மறுஅணிதிரளலின் மூலம் நான்காம் அகிலத்தை 'மீளஸ்தாபிப்பதற்கான' ஒரு பணியை அறிவித்தது. அன்றிலிருந்து இந்த நோக்குநிலையை அது தொடர்கிறது.

ஷீலா டோரன்ஸின் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP), அரசியல் குழப்பத்தில் உறைந்துள்ளது, இன்னும் சில உறுப்பினர்களுடன், அடையாளம் காட்டப்படாத நிதிய ஆதரவாளர்களுடன் நியூஸ் லைனை ஒரு தினசரி செய்தித்தாளாக வெளியிடுகிறது. WRP மத்திய கிழக்கில் முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகள் மற்றும் கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்கிறது. அத்தோடு ரஷ்யாவிலும் சீனாவிலும் உருக்குலைந்த அல்லது ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள் உள்ளன என்று இன்னும் வலியுறுத்துகிறது.

சுலோட்டர்/பண்டா பிரிவினரின் தலைவிதியும் சோகத்தில் குறைவானது அல்ல. பண்டா தனது '27 காரணங்கள்' ஐ எழுதி ஒரு வருடத்திற்குள், 'ட்ரொட்ஸ்கிசம் என்றால் என்ன? அல்லது உண்மையான ட்ரொட்ஸ்கி தயவு செய்து எழுந்து நிற்பாரா?” ஆகியவற்றை அவர் எழுதினார். நாம் காக்கும் மரபியம் இதை 'ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான வெறித்தனமான கண்டனம், ஜோசப் ஸ்ராலினுக்கு தாமதமான அஞ்சலி மற்றும் கிரெம்ளின் அதிகாரத்துவத்திற்கான அரசியல் விசுவாசப் பிரகடனம்' என்று விவரிக்கிறது. அதன் இறுதி மூன்று அத்தியாயங்களில், “எம். பண்டா ஸ்ராலினிசத்தைத் தழுவுகிறார்' என்ற பொதுத் தலைப்பின் கீழ் இது விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. 2014 இல் அவர் இறக்கும் வரை, பண்டாவின் அரசியல் வாழ்க்கை அப்துல்லா ஓச்சாலன் (Abdullah Öcalan) தலைமையிலான குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) ஒரு கைக்கூலியாக இருந்து முடிந்தது.

செப்டம்பர் 1986 இல், ஒரு மறுஅணிதிரளலின் மூலோபாயத்தை நோக்கிய சிரில் ஸ்மித், சுலோட்டரின் வேர்க்கர்ஸ் பிரஸ்ஸில் பின்வருமாறு எழுதினார். 'ஒரு காலத்தில் மார்க்சிஸ்டுகளுக்கு விஞ்ஞானபூர்வ முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சொல்லாக இருந்த 'திருத்தல்வாதி' என்ற சொல், இப்போது வெறும் துஷ்பிரயோகத்தின் ஒரு வார்த்தையாக மாறியுள்ளது. ஐக்கிய செயலகத்துடன் தொடர்புடைய அமைப்புக்களைப் பற்றிப் பேசும்போது 'பப்லோவாத' என்ற பதத்தை பயன்படுத்துவதை நாம் நிறுத்த வேண்டும். இது கலந்துரையாடலை மோசமாக்க மட்டுமே முடியும்.”

பப்லோவாதிகள், ஸ்ராலினிஸ்டுகளை நோக்கிய சுலோட்டரின் திருப்பம், பல தசாப்தங்களாக ஸ்ராலினிஸ்டுகளுடன் ஒத்துழைத்த ஆர்ஜென்டினா மொரேனோவாதிகளுடன் 'அகிலம்' என்று அழைக்கப்படுவதை உருவாக்கும் ஒரு தோல்வியுற்ற முயற்சிக்கு 1987 இல் வழிவகுத்தது. இதுபற்றி மார்ச் 1987ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கையில் “ஸ்ராலினிசமும், மக்கள் முன்னணியும் வேண்டாம்! நான்காம் அகிலத்தை கட்டியெழுப்புங்கள்! தோழர்கள் நோர்த் மற்றும் கீர்த்தி பாலசூரியா இணைந்து எழுதியதில் விரிவாக உள்ளது.

லாரி போர்ட்டர், டேவிட் நோர்த் மற்றும் கீர்த்தி பாலசூரியா

இந்த அறிக்கையானது, பிளவின் அனைத்து திரட்டப்பட்ட அனுபவங்களையும் விளக்குகிறது:

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் பாதை தவிர்க்க முடியாமல் வர்க்க எதிரியின் முகாமில் இறங்கும் என அனைத்துலகக் குழு மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளது. மேலும், சுலோட்டர், பிளவுக்கு முன் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் கலந்துரையாட மறுத்த ஒரு அரசியல் முன்னோக்குடன் வேலை செய்து வருகிறார் என்று நாம் எச்சரித்துள்ளோம். அவர் WRP உறுப்பினர்களிடமிருந்தே அதை மறைத்து வைத்திருந்தார். தனது நீண்டகால திட்டங்களை இதுவரை வெளிப்படுத்தாமல், அவர் இப்போது தொழிலாளர் புரட்சிக் கட்சியை, அதன் தலைவர்கள் ஆர்ஜென்டினா ஸ்ராலினிஸ்டுகளுடன் ஒரு மக்கள் முன்னணி உருவாக்கத்திற்குள் செயல்படும் ஒரு அரசியல் கட்சியுடன் ஒன்றிணைப்பதற்கு வெகுஅருகாமையில் கொண்டு வந்துள்ளார்.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் வரலாற்றின் நிலைப்பாட்டில் இருந்து, மொரேனோயிசத்தின் மத்தியவாத சகதிக்குள் அது கலைக்கப்படுவது, ட்ரொட்ஸ்கிசத்துடனான ஒரு மீளமுடியாத முறிவையும், இந்த அமைப்பை ஏகாதிபத்தியத்தின் முகமையாக விரைவாக மாற்றுவதையும் குறிக்கும்.[30]

தொழிலாளர் இயக்கத்திற்கு மார்க்சிசத்தின் இத்தகைய காட்டிக்கொடுப்பின் புறநிலை முக்கியத்துவம் பல ஆண்டுகளுக்கு முன்பு கிளிஃவ் சுலோட்டராலேயே பின்வருமாறு விளக்கப்படுத்தப்பட்டது:

ஏகாதிபத்தியம் ('நவ-முதலாளித்துவம்' அல்ல!) அதன் மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குள் வேகமாக நகரும் போது, புதிய வெகுஜனங்கள் அரசியல் போராட்டத்தில் தள்ளப்படும்போது, நெருக்கடியின் அந்த கட்டத்தை சமாளிக்க, இந்த நடுத்தர வர்க்க கூறுகளை மத்தியவாத அரசியல் சக்திக்குள் தீவிரமாக உறிஞ்ச வேண்டும்.

இத்தகைய மத்தியவாத சக்திகளை எங்கேயாவது இருந்து உள்ளிளுக்க முடியாது. அதற்கு பொருத்தமான அரசியலை மண்டேல் பாதுகாத்து வருகிறார். நிச்சயமாக, ஏகாதிபத்தியம் இந்த வழியில் மத்தியவாதிகளை பாசிச மற்றும் சர்வாதிகார அடக்குமுறைக்கான பாதையில் ஒரு சிறிய படியாக மட்டுமே பயன்படுத்துகிறது. (நான்காம் அகிலம், கோடை 1972, ப. 215, அசலில் வலியுறுத்தல்)[31]

1985-86ல் நடந்த பிளவை பற்றி நேரடியாக கையாளும், நமது காரியாளர்களின் அரசியல் கல்விக்கு அடிப்படையான WRP க்கு எதிரான போராட்டத்தை ஆழப்படுத்தியும் ICFI ஆல் தயாரிக்கப்பட்ட பல ஆவணங்களில் இதுவும் ஒன்றாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிளவுக்குப் பிந்தைய அகல்பேரவைகளை மையமாகக் கொண்டு நான்காம் அகிலம் இதழில் பல இணைக்கப்பட்டுள்ளன: கீர்த்தி பாலசூரியா எழுதிய தமிழ் போராட்டமும் ஹீலி, பண்டா, சுலோட்டரின் துரோகமும்; டேவிட் நோர்த் எழுதிய மைக்கல் பண்டா: ஒரு ஸ்ராலினிசவாதி; பில் வான் ஆக்கென் எழுதிய ஜி. ஹீலி: நிரந்தரப் புரட்சியின் எதிரி; வேர்க்கர்ஸ் லீக் அரசியல் குழு எழுதிய, கிரேக்க WRP ஒரு அரசியல் மோசடிக்கு முயற்சிக்கிறது; கீத் ஜோன்ஸ் எழுதிய நிரந்தரப் புரட்சியை ஹீலி கைவிடுகிறார்; கீர்த்தி மற்றும் பலரால் எழுதப்பட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திலிருந்து தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கு ஒரு பகிரங்க கடிதம்; இந்தப் பள்ளியின் ஒவ்வொரு அம்சத்தையும், நாம் காக்கும் மரபியத்தை வெளிப்படுத்தும் மிக அத்தியாவசியமான வேலையுடன், படிக்கப்பட வேண்டும்.

1986 இல் கிறிஸ் மார்ஸ்டன், பில் வான் ஆக்கென், டேவ் ஹைலண்ட், கீர்த்தி பாலசூரியா மற்றும் நிக் பீம்ஸ்

1990 ஆம் ஆண்டின் இறுதியில், சுலோட்டர் ட்ரொட்ஸ்கிசத்தை வெளிப்படையாக நிராகரித்து எழுதினார்: “லெனினினதும் போல்ஷிவிசத்தினதும் வாரிசுகள் ஸ்ராலினும் ஸ்ராலினிஸ்டுகளும், என்ற பொய்யை வார்த்தைகளாலும் செயலாலும் மறுக்க, மார்க்சிஸ்டுகள் பல ஆண்டுகளாக, சில சமயங்களில் அவர்களது முழு அரசியல் வாழ்க்கையிலும் போராடினார்கள். அவர்கள் இப்போது இந்த பிரச்சினை பொருத்தமற்றதாகத் தோன்றும் சூழ்நிலையில் தங்களைக் காண்கிறார்கள்.”

அவர் பொஸ்னியாவில் அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்திய தலையீட்டை உற்சாகமாக ஆதரித்தார். பின்னர் கொசோவோ விடுதலை இராணுவத்திற்கு உற்சாகமாக செயல்பட்டார். அவர் 1996ல் புரட்சிகர கட்சி மற்றும் மார்க்சிசம் பற்றிய லெனினிச-ட்ரொட்ஸ்கிச கருத்தாக்கத்தை நிராகரித்து, 'தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கட்சி மற்றும் வேலைத்திட்டத்தை வழங்கும் யோசனை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும்' என்று அறிவித்தார்.

பிளவுக்குப் பின்னர்: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் ட்ரொட்ஸ்கிசத்தின் மறுமலர்ச்சி

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைப் பொறுத்தவரை, பிளவு என்பது மார்க்சிசத்தின் உலகளாவிய மறுமலர்ச்சியை சாத்தியமாக்கிய ஒரு திருப்புமுனையாகும். SEP (US) இன் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் கூறுவது போல்:

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தேசியவாத சந்தர்ப்பவாதத்திற்கான வேர்க்கர்ஸ் லீக்கின் எதிர்ப்பானது, உலக அரசியலில் நிலவும் கட்டமைப்பையும் உறவுகளையும் தகர்க்கும் மற்றும் ஏற்கனவே முன்னேறிய அபிவிருத்தி அடைந்த நிலையில் இருந்த சமூக, பொருளாதார நிகழ்ச்சிபோக்குகளுடன் தத்துவார்த்தரீதியாக இணைந்திருந்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அடுத்தடுத்த வளர்ச்சியானது, ஒரு புதிய பொருளாதார மற்றும் அரசியல் சூழலுக்கான மார்க்சிச முன்னணிப் படையின் நனவான பதிலாக இருந்தது. இயக்கத்தை மறுநோக்குநிலைப்படுத்தல் தேசியவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான ஒரு திட்டமிட்ட போராட்டத்தின் அடிப்படையில் இருந்தது. இந்த மறுநோக்கு நிலை ஒரு சர்வதேச முன்னோக்கின் அபிவிருத்தியிலிருந்து பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டிருந்தது. [32]

2019 ஜூலை 21 முதல் 27, வரை, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி, WRP உடன் ICFI பிளவுபட்டதன் வரலாற்று மூலங்களும் அரசியல் விளைவுகளும் பற்றிய சர்வதேச கோடைக்காலப் பள்ளியை நடத்தியது. இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கழகங்களை சோசலிச சமத்துவக் கட்சிகளாக மாற்றும் முடிவிற்கு வழிவகுத்த 1982 முதல் 1995 வரையிலான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாறு குறித்த தொடர் விரிவுரைகளை மையமாகக் கொண்டது.

அடிப்படை வரலாற்றுப் பிரச்சினைகளில் நமது நிலைப்பாட்டை கணிசமாக மாற்றிய பூகோளமயமாக்கத்தின் தாக்கம் தொடர்பாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வின் வளர்ச்சியை விவரிக்கும் ஒரு தீவிர மதிப்பாய்வு இதுவாகும். இதில்:

  • ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் எவ்வாறு மீட்டெடுக்கப்பட்டது
  • இதற்கும், பழைய தொழிலாளர் அதிகாரத்துவங்களின் பெருநிறுவன சார்பான மாற்றத்திற்கும் இடையிலான உறவு
  • பெரும்பாலும் இனப் பிரத்தியேகவாதத்தை அடிப்படையாகக் கொண்டு, இருக்கும் நாடுகளை உடைத்து, தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதற்கான உரிமையை பெறுவதற்காக, உலகச் சந்தைக்கான நேரடியான அணுகலை உறுதிப்படுத்திக்கொள்ளும் வெளிச்சத்தில் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பது தொடர்பான ஒரு மறுமதிப்பீடு.
  • கைவிடுதல்வாதத்தின் அரசியல் நிகழ்வுப்போக்கும் போலி இடது போக்குகள் பற்றிய எமது மதிப்பீடும்
  • எல்லாவற்றிற்கும் மேலாக பூகோளமயமாக்கம், உலக ஏகாதிபத்தியத்திற்குள் உள்ள அடிப்படை முரண்பாடுகளான உலகப் பொருளாதாரத்திற்கும் அது விரோதமான தேசிய அரசுகளாகப் பிரிக்கப்படுவதற்கும் மற்றும் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்தி சாதனங்களின் மீதான தனியார் கட்டுப்பாட்டிற்கும் இடையிலான அடிப்படை முரண்பாடுகளை எவ்வாறு அதிகப்படுத்துகிறது. இது எவ்வாறு தொழிலாள வர்க்கத்தை சமூகப் புரட்சியை நோக்கி புறநிலையாக உந்தித்தள்ளுகையில், அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளை வர்த்தகம் மற்றும் இராணுவப் போரின் மூலம் உலகின் ஒரு புதிய துண்டாடலை நோக்கித் தூண்டியது.

'நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் 1982-86 உடைவின் அரசியல் மூலங்களும் பின்விளைவுகளும்' என்ற டேவிட் நோர்த்தின் ஆரம்ப விரிவுரை, 2019 வரையிலான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் நான்கு வேறுபட்ட காலகட்டங்களை அடையாளம் காட்டியது.

முதல் இரண்டு காலகட்டங்கள் அக்டோபர் 1923 இல் இடது எதிர்ப்பை உருவாக்கியது முதல் 1938 செப்டம்பரில் நான்காம் அகிலத்தின் ஸ்தாபக மாநாடு வரையிலான 15 ஆண்டுகளைக் கொண்டிருந்தது; பின்னர் செப்டம்பர் 1938 ஸ்தாபக மாநாட்டிலிருந்து பப்லோவாதிகளுடனான பிளவு மற்றும் நவம்பர் 1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உருவாக்கம் வரையான காலப்பகுதியை உள்ளடக்கி இருந்தது.

மூன்றாம் காலகட்டம் இந்தப் பள்ளியின் இன்றியமையாத விடயமாகஉள்ளது: இது, கனனின் பகிரங்கக் கடிதம் வெளியிடப்பட்டது முதல் 1985 டிசம்பரில் WRP இடைநிறுத்தம் வரை மற்றும் பிப்ரவரி 1986 இல் பிரிட்டிஷ் தேசிய சந்தர்ப்பவாதிகளுடனான அனைத்து உறவுகளையும் இறுதியாகத் துண்டிப்பது வரையான காலப்பகுதியை உள்ளடக்கி இருந்தது.

இந்த உரையிலிருந்து, வர்க்கப் போராட்டத்தின் புறநிலை வளர்ச்சிக்கும் உலக சோசலிசப் புரட்சிக்கும் இடையிலான உறவின் அத்தியாவசிய விளக்கத்திற்கு தோழர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இது வெறுமனே ஒரு இறுதிப் புள்ளியாக இல்லாது, வளர்ந்து வரும் நிகழ்ச்சிப்போக்காகவே கருதப்படுகிறது. பிளவுகளில் இருந்து பெறப்பட வேண்டிய இறுதியானதும், அடிப்படையானதும், முக்கியமானதுமான பாடம் இதுதான் என நோர்த் வலியுறுத்தினார்:

வேர்க்கர்ஸ் லீக்கின் எதிர்ப்பானது, ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் உலக முதலாளித்துவத்தின் பூகோளரீதியான மறுகட்டமைப்பு ஆகியவற்றின் வளரும் நெருக்கடியில் இருந்து தானாகவே எழவில்லை. நிச்சயமாக, இது சமூக சக்திகளின் புதிய உறவையும் மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு மிகவும் சாதகமான சூழலையும் உருவாக்கியதோடு, ட்ரொட்ஸ்கிச-எதிர்ப்பு சந்தர்ப்பவாதிகள் மற்றும் ஓடுகாலிகளின் மீதான வெற்றிக்கும் பங்களித்தது.

எவ்வாறாயினும், WRP இன் தோல்வியும் அனைத்துலகக் குழுவில் இருந்து சந்தர்ப்பவாதிகளின் வெளியேற்றமும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட மற்றும் தானியங்கி நிகழ்ச்சிபோக்கு அல்ல. இது நனவுபூர்வமாகவும் ஆழ்ந்து ஆராய்ந்தும் மேற்கொள்ளப்பட்ட ஒரு போராட்டமாகும். [33]

புரட்சிகர நடைமுறையின் புறநிலை முக்கியத்துவம் பற்றிய இந்த விளக்கம்தான், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அடிப்படையாகக் கொண்ட கட்சி பற்றிய லெனினிச-ட்ரொட்ஸ்கிச தத்துவத்தின் சாராம்சமாகும். புரட்சிகரக் கட்சியின் செயலூக்கமான பாத்திரம் விலக்கப்பட்டால், எந்தவொரு சூழ்நிலையிலும் புரட்சிகர ஆற்றலைப் புரிந்துகொள்வதோ, சரியான பகுப்பாய்வை செய்வதோ சாத்தியமற்றது என நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளோம்.

1986 இல் ஆரம்பித்து, 2019 இல் முடிவடைந்துவிட்டதாக நோர்த் கூறிய நான்காம் காலகட்டமானது, பிளவுபட்டதைத் தொடர்ந்து வந்த 33 வருட காலப்பகுதியை உள்ளடக்கியது. இக்காலப்பகுதியில் பரந்த அளவில் பலப்படுத்தப்பட்ட அனைத்துலகக் குழு, அசாதாரண அரசியல் முன்னேற்றங்களைக் கண்டது. இவை அனைத்தும் WRP தலைமையின் மீதான வரலாற்று வெற்றியால் மட்டுமே சாத்தியமானது. அவை ஒரு சர்வதேசிய அடித்தளத்தில் உலகக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புதல், ICFI இன் சர்வதேச மூலோபாயத்தை விரிவுபடுத்துதல், நான்காம் அகிலத்தின் வரலாற்று மரபியத்தைப் பாதுகாத்தல், அனைத்துலகக் குழுவின் பகுதிகளான கழகங்களை கட்சிகளாக மாற்றுதல் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தை நிறுவுதல் ஆகியவற்றைக் கொண்டிருந்தன. இந்த முன்னேற்றங்கள் அனைத்துலகக் குழுவின் அரசியல் செல்வாக்கில் ஒரு பரந்த விரிவாக்கத்தையும் அதன் உறுப்பினர்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் சாத்தியமாக்கியுள்ளன.

விரிவுரை வலியுறுத்தியது:

இந்த அனைத்து வேலைகளிலும், எங்கள் முயற்சிகளுக்கு வழிகாட்டிய அடிப்படை அரசியல் கோட்பாடு மார்க்சிச சர்வதேசியம் ஆகும். தேசிய தந்திரோபாயங்களை விட உலக மூலோபாயத்தின் முதன்மையை நாங்கள் வலியுறுத்தினோம், மேலும் தேசிய எல்லைக்குள் எழும் பிரச்சனைகளுக்கு பொருத்தமான பதிலை உலகளாவிய நிகழ்ச்சிப்போக்குகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே பெற முடியும் என வலியுறுத்தினோம். [34]

WRP உடனான பிளவும் அதன் பின்னர் நடத்தப்பட்ட அசாதாரண அரசியல் பணிகளும் ICFI இன் தற்போதைய, ஐந்தாவது காலகட்ட வேலைக்கான இன்றியமையாத அரசியல் அடித்தளமாக உள்ளது. இது, 'அனைத்துலகக் குழுவின் அரசியல் நடவடிக்கையுடன் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர எழுச்சி ஒன்றிணையும் புள்ளி' என வரையறுக்கப்பட்டது. நாம் பகுப்பாய்வு செய்து கொண்டிருக்கும் உலக நெருக்கடியில், அனைத்துலகக் குழு பெருகிய முறையில் செயலூக்கமானதும், நேரடியாகவும் பங்கேற்பாளராக உள்ளது.'

உலக ஏகாதிபத்தியத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடிக்கு மத்தியில் எமது பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இது போர் மற்றும் சமூக, அரசியல் பிற்போக்குத்தனத்திற்குள் இறங்குதல் மற்றும் புறநிலை ரீதியாக புரட்சிகர தாக்கங்களுடன் தொழிலாள வர்க்கத்தின் புதிய உலகளாவிய போராட்ட அலையின் ஆரம்ப வெடிப்பு ஆகியவற்றால் குணாம்சப்படுத்தப்படுகிறது. இதற்கு ஒரு புரட்சிகர நோக்குநிலையையும் தலைமையையும் வழங்கி நாம் அதை வழிநடத்த வேண்டும்.

தொழிலாளர்கள் நடத்தும் ஒவ்வொரு பெரிய போராட்டத்திலும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தாக்கம் உணரப்படுகிறது. சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களின் வலையமைப்பின் உருவாக்கம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணியை (International Workers Alliance of Rank-and-File Committees - IWA-RFC) அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவை நிரூபித்துள்ளது. நாம் எதிர்பார்த்தபடி, ஆளும் வர்க்கம் மற்றும் பெருநிறுவன-சார்பு தொழிற்சங்கங்களுக்கு எதிராக பல்வேறு தொழிற்சாலைகள், தொழில்கள் மற்றும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு பாதையை உருவாக்கியுள்ளதோடு, அதிகாரத்துவத்தின் பிடியை உடைப்பதற்கும், தொழிலாளர்களை ஒரு புரட்சிகர சர்வதேசிய முன்னோக்கில் அணிதிரட்டுவதற்கும் இது வழிவகைகளை வழங்குகிறது.

தொழிலாள வர்க்கத்தின் இளைய தலைமுறையினரை மையமாகக் கொண்ட ஒரு புதிய வெகுஜன, போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நமது போராட்டம், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர், சீனாவுடனான மோதலுக்கான மேம்பட்ட தயாரிப்புகள் மற்றும் ஒரு புதிய உலகப் போரின் தீவிரமடைந்த ஆபத்து ஆகியவற்றிற்கு ஒரு தனித்துவமான பதிலளிப்பாகும். இது, சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டத்தின் மையத்தில் நிற்கிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் (ICFI) சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பையும் ஸ்தாபிக்கும்.

எவ்வாறாயினும், அனைத்துலகக் குழுவின் அரசியல் பாதையும் மற்றும் நாம் சாதித்துள்ள அனைத்தும் WRP இன் தேசியவாத சீரழிவுக்கு எதிராகவும் மற்றும் முதலாளித்துவ தேசியவாதம், ஏகாதிபத்தியம் மற்றும் அதன் அதிகாரத்துவ முகாமைகள், அவற்றின் போலி-இடது பிற்சேர்க்கைகளுக்கு அதன் அடிபணிவுக்கு எதிராக நடத்தப்பட்ட அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டத்தையும் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்பாடாக ICFI ஐ பாதுகாப்பதிலும் தங்கியிருந்தது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

இன்று, நாம் பெற்ற எந்த அமைப்புரீதியான முன்னேற்றமும், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அமைப்புடன் பிணைக்க முற்படும் போலி-இடது, அரை-அராஜகவாத மற்றும் பிற குட்டி முதலாளித்துவ போக்குகளுக்கு எதிராக இடைவிடாத கருத்தியல், தத்துவார்த்த போராட்டத்தின் அவசியத்தையும் குறைக்கவில்லை. மேலும் கட்சி மீதான அந்நிய வர்க்க அழுத்தங்களின் தத்துவார்த்த அல்லது நடைமுறை வெளிப்பாடுகளுக்கு எதிரான உள் போராட்டத்தின் அவசியத்தையும் குறைக்கவில்லை.

நாம் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு உண்மையான சோசலிச நனவை வளர்த்து, எமது கட்சியைக் கட்டியெழுப்புவோம், மிக உயர்ந்த மட்டத்தில் நடத்தப்படும் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்குக்கான போராட்டத்தின் ஊடாக மட்டுமே உலக சோசலிசப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வோம். எனவே 1985 ஆம் ஆண்டின் படிப்பினைகளை உள்ளீர்த்துக்கொள்வது என்பது எமது கட்சியையும் அதன் காரியாளர்களையும் ஆயுதபாணியாக்குவதிலும், அவர்களுக்கு முன்னால் உள்ள சிக்கலான சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவுவதிலும் இன்றியமையாததாக இருந்ததுடன், இப்போதும் இருப்பதுடன், இன்னும் தொடர்ந்தும் இருக்கும்.

குறிப்புகள்:

[1] David North, “The Political Origins and Consequences of the 1982–86 Split in the International Committee of the Fourth International,” The Fourth International and the Perspective of World Socialist Revolution, 1986–1995 (Sheffield: Mehring Books Ltd, 2020), p. 15. Available: https://www.wsws.org/en/articles/2019/08/03/icfi-a03.html

[2] Ibid, pp. 15-16.

[3] “How the Workers Revolutionary Party Betrayed Trotskyism, 1973-1985,” Fourth International Vol.13, no.1, (1986), p. 118, available: https://www.wsws.org/en/special/library/how-the-wrp-betrayed-trotskyism/44.html

[4] Ibid.

[5] David North, The Heritage We Defend: A Contribution to the History of the Fourth International (Oak Park, MI: Mehring Books, 2018), p. 12.

[6] “How the Workers Revolutionary Party Betrayed Trotskyism, 1973-1985,” p. 9. Available: https://www.wsws.org/en/special/library/how-the-wrp-betrayed-trotskyism/02.html

[7] David North, “A tribute to Dave Hyland,” World Socialist Web Site, January 23, 2014, https://www.wsws.org/en/articles/2014/01/23/dave-j23.htm

[8] “Statement of the International Committee of the Fourth International on the Expulsion of G. Healy,” Fourth International Vol. 13, no. 2 (1986), p. 52. Available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/11.html

[9] “Resolution of the International Committee of the Fourth International on the Crisis of the British Section,” Fourth International Vol. 13, no. 2 (1986), p. 50. Available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/10.html

[10] Ibid.

[11] “Letter from the International Committee to the Central Committee of the Workers Internationalist League, Greek Section of the ICFI,” Fourth International Vol. 13, no. 2 (1986), p. 57. Available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/15.html

[12] Mike Banda, “Morality and the Revolutionary Party,” Fourth International Vol. 13, no. 2 (1986), p. 55. Available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/14.html

[13] David North, “Letter from the Workers League Political Committee to the Workers Revolutionary Party Central Committee,” Fourth International Vol. 13, no. 2 (1986), pp. 59-61. Available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/16.html

[14] Peter Schwarz, “Letter from Peter Schwarz to the Central Committee of the Workers Revolutionary Party,” Fourth International Vol. 13, no. 2 (1986), p. 73. Available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/19.html

[15] “Letter from the Workers League Political Committee to the Workers Revolutionary Party Central Committee,” pp. 77-78. Available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/21.html

[16] Ibid, p. 81.

[17] Ibid, pp. 96-100.

[18] “Resolution of the International Committee of the Fourth International on the Suspension of the Workers Revolutionary Party,” Fourth International Vol. 13, no. 2 (1986), p. 101. Available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/22.html

[19] Ibid., p. 102. Available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/23.html

[20] “Resolution 1 of the WRP Central Committee,” Fourth International Vol. 13, no. 2 (1986), p. 118. Available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/30.html

[21] “Resolution 2 of the WRP Central Committee,” Fourth International Vol. 13, no. 2 (1986), p. 119. Available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/31.html

[22] “A Letter to All Sections of the International Committee of the Fourth International and to the Members of the Workers Revolutionary Party,” Fourth International Vol. 13, no. 2 (1986), p. 120. Available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/32.html

[23] Ibid, p. 128.

[24] “Resolutions of the 8th Congress of the Workers Revolutionary Party (Internationalist),” Fourth International Vol. 13, no. 2 (1986), p. 149. Available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/39.html

[25] Ibid.

[26] “Liga Comunista (Peru) Breaks with Trotskyism: Statement of the International Committee of the Fourth International,” Fourth International Vol. 13, no. 2 (1986), p. 194. Available: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/50.html

[27] The Historical and International Foundations of the Socialist Equality Party (United States) was adopted at the founding congress of the Socialist Equality Party in 2008. “A Further Comment on the Cause and Significance of the Split in the ICFI,” The Historical and International Foundations of the Socialist Equality Party (United States) (Oak Park, MI: Mehring Books, 2008), pp. 122-124. Available: https://www.wsws.org/en/special/library/foundations-us/54.html

[28] Gerry Healy, “Political Revolution in the USSR—A Process of Contradiction,” Marxist Monthly Vol. 1, no. 7 (1988), available: http://www.gerryhealy.net/polrevussr.html

[29] David North, Gerry Healy and His Place in the History of the Fourth International (Detroit, MI: Labor Publications, 1991), p. 117. Available: https://www.wsws.org/en/special/library/healy/11.html

[30] David North and Keerthi Balasuriya, “No to Stalinism and the Popular Front! Build the Fourth International!: Statement of the International Committee of the Fourth International on the ‘Reorganization Conference’ of the Workers Revolutionary Party,” Fourth International Vol. 14, no. 2 (1987), p. 1. Available: https://www.wsws.org/en/special/library/fi-14-2/02.html

[31] Ibid.

[32] “A Further Comment on the Cause and Significance of the Split in the ICFI,” pp. 125-126.

[33] “The Political Origins and Consequences of the 1982–86 Split in the International Committee of the Fourth International,” p. 13.

[34] Ibid., p. 19.

Loading