மீளாய்வு: 2005 ஆம் ஆண்டு உலக முதலாளித்துவத்தின் தோல்வியை அம்பலப்படுத்திய இரு பெரும் இயற்கைப் பேரிடர்களின் பாதிப்பின் கீழ் 2005 ஆம் ஆண்டு விடிந்தது. இந்தியப் பெருங்கடலின் பூகம்பமும் சுனாமியும் இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பெருநாசத்தை உண்டாக்கியதோடு சுமார் 300,000 பேர் உயிரிழந்தனர். காத்ரினா சூறாவளி அமெரிக்காவின் வளைகுடாக் கடற்கரையைத் தாக்கி நியூ ஓர்லியன்ஸை வெள்ளத்தில் மூழ்கடித்தது. இதில் 1800 பேர் இறந்தார்கள். உழைக்கும் மக்களை பொறுத்த வரை உலகின் செல்வச் செழிப்பானதொரு நாட்டில் இருப்பது வறியதொரு நாட்டில் இருப்பதை விடவும் அதிகப் பாதுகாப்பு என்று சொல்ல முடியவில்லை என்பதை அது எடுத்துக் காட்டியது. இந்தியப் பெருங்கடலின் பூகம்பம் மற்றும் சுனாமியும் சரி அமெரிக்காவின் காத்ரினா சூறாவளியும் சரி இரண்டுமே வரலாற்றில் பதிவாகி இருக்கக் கூடிய இரண்டு மிகப் பெரும் இயற்கைப் பேரழிவுகள். ஆனால் சாவு எண்ணிக்கையும் நாசத்தின் எல்லையும் கண்மூடித்தனமான இயற்கை சக்திகளின் விளைவு மட்டுமே அல்ல. இந்தப் பேரழிவுகள் குறித்து உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்ட செய்திகளில் குறிப்பிட்டது போல, சமூகக் காரணிகள் இந்த நாசத்தின் அளவில் மையமான பாத்திரத்தைக் கொண்டிருந்தன. மனிதனால் உருவாக்கப்பட்ட வறுமை தான் எல்லாவற்றுக்கும் மேலாக உயிரிழப்பின் பிரதான காரணமாய் இருந்தது. இந்தியப் பெருங்கடல் கரைகளிலும் அமெரிக்க வளைகுடாக் கரைப் பகுதிகளிலும் வாழும் மக்கள் இறந்தார்கள், பாதிக்கப்பட்டார்கள் என்றால் காரணம் அவர்கள் ஏழை என்பது தான். விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தொடர்ந்த எச்சரிக்கைகளை விடுத்து வந்திருந்தனர், ஆனால் ஆளும் வர்க்கங்களோ எதுவுமே செய்யாமல் மக்களை தயாரிப்பின்றி இருக்கும்படி விட்டு விட்டது. பேரழிவுகள் நடந்த பின்னர், அதிகாரிகளின் பதிலிறுப்பு என்பது திறனின்மை மற்றும் அலட்சியம் ஆகியவற்றின் ஒரு கலவையாக இருந்தது. குறிப்பாக, நூறாயிரக்கணக்கிலான தொழிலாள வர்க்க அமெரிக்கர்களின் நிலைக்கு புஷ் நிர்வாகம் காட்டிய அப்பட்டமான அலட்சியத்தை காத்ரினா புயல் அம்பலப்படுத்தியது. நியூ ஓர்லியன்ஸ் வழியே பறந்த ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் சன்னல் வழியே புஷ் கீழ் நோக்கிப் பார்க்கின்ற புகைப்படத்தில் இந்த அலட்சியம் சித்திரப்படுத்தப்பட்டிருந்தது. பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதான பேரில் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பிறவெங்கிலும் அமெரிக்க அரசாங்கம் போர் நடத்திக் கொண்டிருந்த நிலைமைகளின் கீழ் அமெரிக்காவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் இது ஆழமான அரசியல் தாக்கத்தைக் கொண்டிருந்தது.
இந்தியப் பெருங்கடல் பூகம்பம் மற்றும் சுனாமி இந்தியப் பெருங்கடலில் சுனாமியை தோற்றுவித்த பூகம்பம் 2004 டிசம்பர் 26 அன்று தான் நடந்தது, ஆனால் இந்தப் பேரழிவின் வீச்சையும் அளவையும் முழுவதாகப் புரிந்து கொள்ளவே பல நாட்கள் பிடித்தது. இந்தோனேசியத் தீவான சுமத்ராவுக்கு கொஞ்சம் மேற்கே மையம் கொண்டு, ரிக்டர் அளவுகோலில் 9.1க்கும் 9.3க்கும் இடையில் பதிவான இந்த பூகம்பம், உலகில் இதுவரை நடந்த பூகம்பங்களில் மூன்றாவது பெரியதாக அறியப்பட்டது. இந்தோனேசியா தான் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகியவை அதற்கடுத்தபடியாக பாதிக்கப்பட்ட நாடுகள் ஆகும். வெள்ளத்திலும் வெள்ளம் மூழ்கடித்ததால்(சில கடலோரப் பகுதிகளில் இது 10 மீட்டர்கள் அதாவது 33 அடிகள் வரையும் சென்றது )ஏற்பட்ட நாசத்திலும் இந்தியப் பெருங்கடலை சுற்றிய 14 நாடுகளிலும் சுமார் 300,000 பேர் இறந்தனர். உயிர்தப்பியவர்களை காப்பாற்றுவதிலும் இறந்தவர்களது சடலங்களை மீட்பதிலும் பிராந்திய மக்கள் முயற்சிகளைத் தொடங்கிய சமயத்தில் WSWS அது குறித்த களச் செய்திகளில் பங்குபெற்றது. குறிப்பாக இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவர்கள் கடலோரப் பகுதிகளின் கிழக்கத்திய மற்றும் தெற்கத்திய பகுதிகளுக்குப் பயணம் செய்து சுகாதாரப் பராமரிப்புத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களின் முயற்சிகளை செய்திகளாக்கியது. தென்னிந்தியாவிலும் களத்திற்கு சென்று செய்திகள் சேகரிக்கப்பட்டன. தொழிலாளர்கள் மற்ற தொழிலாளர்களின் நிலைக்கு அளித்த பதிலிறுப்பு நெகிழ்த்தக்க கூடியதாக இருந்தது. இந்த துயர சம்பவத்தின் தாக்கம் தேசிய எல்லைகள் கடந்து இன மற்றும் மத வேறுபாடுகளையும் கடந்து சென்றது. இலங்கையில் எமது செய்தியாளர்களில் ஒருவர் குறிப்பிட்டது போல: ஆண்களும் பெண்களும், இளைஞர்களும் யுவதிகளுமாய் மண்வெட்டி, மண்வாரி மற்றும் பிற கருவிகளுடன் கிழக்கு திசையில் போய்க் கொண்டிருந்தனர். குப்பைகளை அகற்றுவதிலும், வீடுகளை மீட்பதிலும், குடும்பத்தினர் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்புவதற்கும் உதவுவதற்காக தமது சொந்த முன்முயற்சியில் இவர்கள் சென்று கொண்டிருந்தனர். மொழியும் மதமும் என்னவாக இருந்தாலும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஒன்று தான் என்ற அடிப்படையான உணர்வு உழைக்கும் மக்களிடையே தோன்றியிருந்ததை இந்த நெருக்கடி துரிதமாக வெளிக்கொண்டு வந்திருந்தது. நேர்காணல் செய்யப்பட்ட ஒருவர் இதைச் சுருக்கமாய்க் கூறினார்: “எண்ணிலடங்காதோர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற ஒரு சமயத்தில் இன அல்லது மத அடிப்படையில் சிந்திப்பதற்கு இடமில்லை. நாம் எல்லோருமே மனிதர்கள் தான்.” உலகெங்கும் இன மற்றும் மத வித்தியாசங்களை கடந்து சாதாரண மக்கள் கொடுத்த பெருந்தன்மையான பதிலிறுப்புக்கு நேரெதிரான வகையில், தேசிய அரசாங்கங்கள் ஒன்று அலட்சியத்தையோ அல்லது உணர்ச்சியின்மையையோ வெளிப்படுத்தின அல்லது தமது சொந்த நலன்களை முன்னெடுப்பதற்கு இந்தப் பேரழிவை பயன்படுத்தின. இலங்கையில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நாட்டின் 22 மாகாணங்களில் 12 இல் இராணுவ ஆட்சியை திணித்தார். இந்தோனேசியாவில் இராணுவ அதிகாரிகள் பூகம்பத்தாலும் பேரலையாலும் விளைந்த குழப்பத்தை, சுமத்ராவின் வடமுனையில் அமைந்திருக்கும் ஏசஹ் மாகாணத்தில் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ஒரு தாக்குதலை தொடக்குவதற்கு, சாதகமாக்கிக் கொள்ள முனைந்தனர். தாய்லாந்தில் பில்லியனரான தக்ஷின் ஷினாவட்ராவின் அரசாங்கம் இலாபம் தரும் சுற்றுலாத் துறைக்கு முன்னுரிமையளித்து விட்டு ஏழை மீன்பிடிக் கிராமங்களை உதாசீனம் செய்தது. இந்திய அரசாங்கம், பிராந்தியத்தில் தனது மேலாதிக்க சக்தியை வெளிக்காட்டிக் கொள்ளும் முயற்சியில், தாழ்வுப் பகுதியான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 80 சதவீத மக்கள் வீடிழந்த நிலையில் இருந்தும் அவர்களுக்கு அந்நிய உதவி எதுவும் கிட்டுவதை தடை செய்தது. ஏகாதிபத்திய சக்திகளை பொறுத்தவரை, அவை உதவியாக மிகச் சிறு தொகையையே அளிக்க முன்வந்தன. அதுவும் கூட வெளியுறவுக் கொள்கை மற்றும் பிரச்சாரம் குறித்த சிந்தனைகளால் தூண்டப்பட்டதாக இருந்ததே தவிர, சகமனிதருக்குத் தோள் கொடுக்கும் நோக்கத்தால் அல்ல. முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் ஒரு பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ வசதிகளை அமர்த்துவது “பயங்கரவாத நடவடிக்கையாக வளர்ச்சி காணத்தக்க அதிருப்திக் குவியல்களை வற்றச் செய்யும்” என்று அமெரிக்க வெளியுறவுச் செயலரான கோலின் பவெல் நம்பிக்கை தெரிவித்தார். வலது-சாரிப் பிரதமரான ஜோன் ஹோவார்டின் ஆஸ்திரேலிய அரசாங்கம், இந்தோனேசிய முன்னாள்-ஜெனரல் யுதோயோனாவின் ஆட்சியுடன் செய்து கொண்டிருந்த இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலமாக தனது உதவி முயற்சிகளைச் செலுத்தியது. நிதியுதவியின் பெரும்பகுதி ஆஸ்திரேலிய பெருநிறுவனங்களுக்கு செல்வதற்கு இந்த உடன்பாட்டின் வழி ஏற்பாடாகியிருந்தது. ஜனவரி 8-9 அன்று மிச்சிகன் ஆன் ஆர்பரில் ஒரு தேசிய அங்கத்தவர் கூட்டத்தில் “மார்க்சிசம், அனைத்துலகக் குழு மற்றும் முன்னோக்கின் விஞ்ஞானம்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி மீதான ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்ற ஒரு அறிக்கையை தொடங்கும்போது உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவரான டேவிட் நோர்த் உலகெங்கிலும் இருந்து இந்த துயர சம்பவம் குறித்து எழுந்த மிகப்பெரும் அக்கறை உணர்வைக் குறிப்பிட்டுக் கூறினார். உண்மையான துயரத்தின் இந்த வெளிப்பாடுகள் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தலைவர்களின் தரப்பில் இருந்து வெளிப்படும் வஞ்சமிக்க, வேடதாரித்தனமான மற்றும் சம்பிரதாயமான அக்கறைகளில் இருந்து எவ்வளவு வேறுபட்டதாக இருக்கிறது! இந்தப் பெருந்துயர் சம்பவத்தில் வாழ்க்கை நாசமடைந்து விட்டிருக்கும் மில்லியன் கணக்கான மக்களின் கதி குறித்த அக்கறையை புஷ்ஷினாலோ அல்லது பிளேயரினாலோ ஒருவருக்கு மன ஆறுதல் அடைகின்ற விதத்தில் வார்த்தைகளில் வெளிப்படுத்துவதற்கு இயலாமல் போனது. சுனாமிப் பேரழிவில் வெளிப்பட்டதாகச் சொல்லப்பட்ட “இயற்கையின் திகைக்க வைக்கும் நோக்கத்தை அறியவியலாத் தன்மை” குறித்து ஊடகங்களில் வெளியான வெற்றுக் கருத்துகள் குறித்து நோர்த் கூறினார்: சுனாமியின் பாதிப்பு முதலாளித்துவத்தின் பகுத்தறிவற்ற தன்மையையும் பரந்த மக்களின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்துகின்ற வகையில் உற்பத்தி சக்திகளை அபிவிருத்தி செய்வதற்கு அதனால் இயலாத நிலையையும் குறிப்பாக வரைபடம் போன்று அம்பலப்படுத்துகிறது. ”ஆசிய அற்புதம்” குறித்து ஊடகங்கள் குதூகலிக்கின்றன, ஆனால் உண்மை என்னவென்றால் இப்பிராந்தியத்தில் கடந்த தசாப்தத்தில் உட்செலுத்தப்பட்ட மூலதனத்தின் ஆதாயங்கள் சலுகைபடைத்த சிறு எண்ணிக்கையிலான உயரடுக்கினரின் மீது மட்டுமே பொழியப்படுகிறது. மிக சாதகமான காலநிலைகளில் கூட மிகக் குறைவான பாதுகாப்பையே தரக் கூடிய குடிசைகளில் தான் ஆசியாவின் மில்லியன்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பேரழிவு இன்னும் மோசமடைந்ததற்கு காரணம் பசிபிக் கடலில் 40 வருடங்களுக்கு முன்பே வந்து விட்ட சுனாமி எச்சரிக்கை அமைப்பு இந்தியப் பெருங்கடலில் இல்லாமலிருந்தது. இப்படியொரு அமைப்புக்கு தேவை இருப்பது நன்கறிந்த ஒரு விஷயம். உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டது போல, “இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் மலிவு உழைப்பைச் சுரண்டியதன் மூலமாக அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய பெருநிறுவனங்களால் குவிக்கப்பட்ட மலைபோன்ற இலாபங்களை கருத்தில் கொண்டால் இங்கு சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவுவதற்குத் தேவையான செலவு என்பது சொற்பம் தான்.” சுனாமியின் காரணங்கள் மற்றும் பின்விளைவுகள் குறித்தும் அது எழுப்பிய அரசியல் பிரச்சினைகள் குறித்தும் உலக சோசலிச வலைத் தளமும் அத்துடன் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவின் சோசலிச சமத்துவக் கட்சிகளும் பொதுக் கூட்டங்களை நடத்தின. இந்தக் கூட்டங்களுக்கு நல்ல பங்கேற்பு கிட்டியது என்பதோடு உலக சோசலிச வலைத் தளத்தின் பகுப்பாய்வுக்கான ஒரு முக்கியமான பதிலிறுப்பையும் இது எடுத்துக்காட்டியது. கொழும்பு கூட்டத்தில் பங்குபெற்றவரில் ஒருவர் கூறினார்: “சுனாமிப் பேரழிவு குறித்த ஒரு உண்மையான பகுப்பாய்வையும் இந்த வகை துயரங்களைத் தடுப்பதற்கான ஒரு விஞ்ஞானபூர்வமான வேலைத்திட்டத்தையும் நான் தேடிக் கொண்டிருந்தேன். ஆள்வோர் ஊக்குவிக்கும் ‘தேசிய ஒற்றுமை’ மற்றும் ‘தேசத்தின் மறுகட்டுமானம்’ போன்ற திட்டங்களில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. அதனால் தான் ஒரு புதிய பாதையைக் காண நான் இங்கு வந்தேன்.”
Featured material1. 3 January 2005 ஆசிய சுனாமி: ஏன் எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை2. 6 January 2005 இலங்கையின் கிழக்கில் சுனாமியில் இருந்து உயிர்தப்பியவர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடுகின்றனர்3. 10 January 2005 இந்தியா: சுனாமி அலை பற்றிய எச்சரிக்கைகளை கொடுத்திருக்க இயலும் 5. 14 January 2005 இலங்கை ஜனாதிபதி நிவாரண நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இராணுவத்தை நியமித்துள்ளார் 6. 9 February 2005 ஆசிய சுனாமி பேரழிவை எதிர்கொள்ள ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கு 7. 23 July 2005 கிழக்கு இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்டோர் உயிர்வாழப் போராடுகின்றனர்31 December 2005 One year after the Asian tsunami: an indictment of the profit system காத்ரீனா புயலும் வளைகுடாக் கடற்கரையும் காத்ரீனா புயல் முதலில் பஹாமாசுக்கு மேலே ஆகஸ்டு 23, 2005 அன்று உருவானது. இது தெற்கு ஃபுளோரிடாவைக் கடந்தபோது - அதனையொட்டி பல உயிரிழப்புகளும் வெள்ளங்களும் ஏற்பட்டன - அது முதல் நிலை புயலாக இருந்தது. மெக்சிகோ வளைகுடாவின் சூடான நீருக்குள் நுழைந்ததும் அதன் சக்தி மேலும் அதிகரித்தது. ஆகஸ்டு 29, திங்களன்று காலை தென்கிழக்கு லூசியானா மற்றும் கடலோர மிசிசிபி மற்றும் அலபாமாவைக் கடக்கும்போது அது அமெரிக்க வரலாற்றின் வலிமையான புயல்களில் ஆறாவது பெரியதாக ஆகி விட்டிருந்தது. இந்தப் புயலுக்கு 1,800க்கும் அதிகமான மக்கள் பலியாகியிருந்தனர். குறிப்பாக நியூ ஓர்லியன்ஸில், நீர்த்தேக்கங்கள் உடைந்து நகரின் அநேகப் பகுதி வெள்ளத்தில் சிக்கியதில் உயிர்ப்பலி அதிகமாக இருந்தது. பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல முடியாத மக்கள் - குறிப்பாக வயதானவர்களும் கார்கள் இல்லாத ஏழை மக்களும் - கட்டிட உச்சிகளில் இருந்து மீட்கப்பட்டனர் அல்லது நகரின் உட்பகுதிகளில் உள்ள மையங்களில் பரிதாபகரமான நிலைமைகளின் கீழ் தங்க வைக்கப்பட்டனர். மக்கள் மீது சுமத்தப்பட்ட உயிர்பலியும் மற்றும் பொருள்நாசமும் அமெரிக்க முதலாளித்துவத்தின் சிதைவடைந்த உள்கட்டமைப்பு மற்றும் பாதிக்கப்பட்டோரின் துயர நிலைக்கு ஆளும் வர்க்கம் காட்டிய அப்பட்டமான அலட்சியம் மற்றும் குரோதம் ஆகியவற்றின் விளைவே என்று WSWS விளக்கியது. செப்டம்பர் 2 அன்று வெளியான ஆசிரியர் குழு அறிக்கை ஒன்று காத்ரினா அமெரிக்க அரசியலில் ஒரு தீர்மானமான திருப்புமுனை என்ற முடிவுக்கு வந்திருந்தது: நியூ ஓர்லியன்ஸிலும் மிசிசிபியின் கடலோரக் கரைப் பகுதியிலும் கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் பெருந்துயரமானது அமெரிக்க வரலாற்றில் இணை கூற முடியாத ஒரு தேசிய அவமதிப்பாக உருவெடுத்து விட்டிருக்கிறது. நியூ ஓர்லியன்ஸின் இத்தனை நாசங்களுக்கும் இடையில் கடுமையான மனிதப் பாதிப்பு, நம்பிக்கையின்மை, நிர்க்கதி நிலை மற்றும் உதாசீனப்படலின் காட்சிகள் ஒட்டுமொத்த உலகத்தின் கண்களுக்கு முன்பாக, மிக முக்கியமாய், அமெரிக்காவின் சொந்த மக்களின் திகைத்த கண்களுக்கு முன்பாக அமெரிக்க முதலாளித்துவ சமூகத்தின் இற்றுப் போன மையக் கருவை அம்பலப்படுத்தியிருக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் போலிசின் மிருகத்தனமான பதிலிறுப்பு மற்றும் நியூ ஓர்லியன்ஸ் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நேர்காணல்கள் மற்றும் புகைப்படங்கள் உடன் கண்ணால் கண்டவர்களிடம் இருந்தான செய்தி சேகரிப்பு ஆகியவையும் உலக சோசலிச வலைத் தளத்தின் செய்திகளில் இடம்பிடித்திருந்தன. செய்திகள் வாசகர்களுடனான இருவழி உரையாடலாக இருந்தன. திகைப்பில் மாட்டிக் கொண்டிருந்த குடியிருப்புவாசிகளிடம் இருந்த கடிதங்களும் இடம்பெற்றன, உலகெங்கிலும் இருந்தான மக்களின் கருத்துரைகளும் இடம்பெற்றன. ஆகஸ்டு இறுதி முதல் டிசம்பர் இறுதி வரையான நான்கு மாதங்களில் உலக சோசலிச வலைத் தளம் இந்தத் துயர சூழலின் சமூகக் காரணங்களை அம்பலப்படுத்தும் 60 கட்டுரைகள் மற்றும் வருணனைகளை வெளியிட்டது. பல தசாப்த கால தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம் மற்றும் பொது முகமைகள் மற்றும் வேலைத்திட்டங்களின் அகற்றம் ஆகியவை இந்தப் புயலின் சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கத்தை பன்மடங்காக்கியது. காத்ரினா தாக்கி ஒரு வாரத்திற்குப் பின், WSWS வெளியிட்ட ஆசிரியர் குழு அறிக்கை ஒன்றில், இந்த பெருந்துயர் சம்பவத்தில் வெளிப்பட்டிருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படையான சமூக முரண்பாடுகளைக் குறித்து விளக்கியது. சமூக உள்கட்டமைப்பை செயல்பாட்டில் பராமரிக்கக் கூடிய உழைப்பை வழங்குவது உழைக்கும் மக்கள் தான், ஆனாலும் அவர்களுக்கு அதில் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. இந்தச் சமூக அமைப்புமுறைகள் பெரும்பாலும் பகாசுர பெருநிறுவனங்களின் உடமையிலும் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன. இந்நிறுவனங்களுக்கு இலாபம் தான் தீர்மானிப்பதற்கான தகுதியே தவிர மனிதத் தேவை அல்ல. நியூ ஓர்லியன்ஸை சுற்றியிருக்கும் நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்கள் போன்ற அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் பொறுப்பு கோரும் இதுபோன்ற அமைப்புமுறைகளும் கூட, செல்வம் படைத்தவர்கள் தான் அமெரிக்க அரசியலைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதால், இலாப நலன்களுக்குக் கீழ்ப்படியச் செய்யப்படுகிறது. செப்டம்பர் 15 அன்று ஆசிரியர் குழு விடுத்த இரண்டாவது அறிக்கையில், நியூ ஓர்லியன்ஸை மறுகட்டுமானம் செய்வதற்கு அவசியமான ஆதாரவளங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க ஆளும் உயரடுக்கின் திரட்டப்பட்ட செல்வத்தில் இருந்து இந்த ஆதார வளங்களை எளிதாக எடுத்துக் கொள்ள முடியும் என்று அதில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருந்தது. எப்படியிருந்தபோதிலும், சமூகத்தை சோசலிசரீதியில் மறுகட்டுமானம் செய்வதன் அடிப்படையிலமைந்த, தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு புதிய முன்னோக்கு தான் அவசியமாக இருந்தது: நியூ ஓர்லியன்ஸ் மற்றும் வளைகுடாக் கரையை மறுகட்டுமானம் செய்வதென்பது எல்லாவற்றுக்கும் முதலாய் சமூகத் திட்டமிடலுக்கான அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது. நிலம், நீர், தாது வளம், உழைப்பு மற்றும் கருவிகள் என பொருள்ரீதியான வள ஆதாரங்களின் ஒரு விரிவான கையிருப்பு விவரத்துடன் இது தொடங்கப்பட வேண்டும். இந்த சமூகத் திட்டமிடலானது, பிராந்தியத்தில் வாழும் அத்துடன் மறுகட்டுமானப் பணியின் மையமாகத் திகழவிருக்கும் உழைக்கும் மக்களுடன் முழுக்க விவாதிக்கப்பட்டு ஜனநாயகமுறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். சந்தையின் அராஜகமும் பெருநிறுவன அமெரிக்காவின் இலாப நலன்களும் மக்களின் தேவைக்குக் கீழ்ப்படியச் செய்யப்பட வேண்டும். வர்க்க அறியாமை, அறிவீனம் மற்றும் அலட்சியம் இவற்றின் ஒரு கலவையாக புஷ் அரசாங்கம், புயலால் அதிகமாக நாசம் செய்யப்பட்டிருந்தவர்களை புறக்கணித்தது, உதவி மறுத்தது, பழி கூறியது, சுரண்டியது. இறுதியாக புஷ் தேசத்திற்கான ஒரு உரை வழங்க நியூ ஆர்லியன்ஸுக்கு பயணம் செய்தபோது ஆளும் உயரடுக்கிடம் இருந்த பதட்டத்தையும், ஒரு “தீர்மானகரமான நிகழ்வாக - ஒட்டுமொத்த அரசியல் மற்றும் சமூக அமைப்புமுறைக்கும் எதிரான வெகுஜன எதிர்ப்புக்கு எரியூட்ட அச்சுறுத்திய ஒரு நிகழ்வாக - காத்ரினா ஆகியிருந்ததோ என்கிற அதன் அச்சத்தையும் WSWS சுட்டிக் காட்டியது. இதன் அரசியல் தாக்கம் அமெரிக்காவிற்குள் மட்டுமல்லாமல் உலகெங்கும் உணரப்பட்டது. ஆண்டின் மூன்றாம் பெரிய இயற்கைப் பேரிடராக, காஷ்மீரில் நடந்த ஒரு பூகம்பத்தில் 20,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதை ஒட்டி, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலரும் அந்த சமயத்தில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான விஜே டயஸ், கருத்து தெரிவித்தார்: ஆசிய சுனாமிக்கும் காஷ்மீர் பூகம்பத்திற்கும் காட்டிய அதே மனபாவத்தையே அமெரிக்க ஆளும் வர்க்கம் நியூ ஓர்லியன்ஸின் உழைக்கும் மக்களை நோக்கியும் காட்டியது. சென்ற டிசம்பரில் தெற்காசியாவின் ஏழைப்பட்ட கிராமவாசிகள் விடயத்தில் போலவே ஆகஸ்டில் அமெரிக்கத் தொழிலாளர்களுக்காகவும் புஷ் தனது விடுமுறைத் திட்டங்களை மாற்றுவதற்கு தயாரில்லை. காத்ரினா புயல் தாக்குவதற்கு முன்பாகவும் சரி, தாக்கிய போதும் சரி, தாக்கிய பின்னும் சரி, பெருநிறுவன உயரடுக்கின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது மட்டுமே புஷ் நிர்வாகத்தின் பின்னால் இருந்த வழிகாட்டும் கோட்பாடாக இருந்தது.
Featured material1. 2 September 2005 Hurricane Katrina’s aftermath: from natural disaster to national humiliation 3. 15 September 2005 நியூ ஓர்லியன்சை திரும்ப கட்டியெழுப்புவதற்கு பிரதான தடைக்கல் இயற்கையல்ல, இலாப முறையே 4. 16 September 2005 Bush’s vision for New Orleans: a profiteer’s paradise 5. 19 September 2005 மதம், விஞ்ஞானம் மற்றும் கத்திரினா சூறாவளி 6. 21 October 2005 The Asian tsunami, Hurricane Katrina and the Kashmiri earthquake: lessons for the working class 7. 14 December 2005 Three months after the Katrina disaster: New Orleans left for dead
களேபரத்தில் மத்திய கிழக்கு 2005 முழுவதிலும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலான அமெரிக்க ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்பின் பின்விளைவுகள் லெபனான், காசா, ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவெங்கிலும் பெருகிய நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்புகளில் உணரப்பட்டது. ஈராக்கிலான அமெரிக்கப் போர் அதன் மூன்றாம் ஆண்டை எட்டிய நிலையில், WSWS ஆசிரியர் குழு அறிக்கை அறிவித்தது: இந்த ஊடுருவலின் குற்றவியல் தன்மையானது புற்றுநோயைப் போல ஈராக்கிலான அமெரிக்க நடவடிக்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பரவி விட்டிருக்கிறது. காலனியப் போர்கள் மற்றும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா, மற்றும் உலகின் பிற ஒடுக்கப்பட்ட பகுதிகள் மீதான ஆக்கிரமிப்புகளுடன் தொடர்புபட்ட அத்தனை குற்றங்களையும் ஒட்டுமொத்தமாக இது மறு உற்பத்தி செய்திருக்கிறது. போரின் மிருகத்தன்மையானது மறைப்பதற்கு மேலும் மேலும் கடினமாகிக் கொண்டிருந்தது. ஜெனிவா மாநாடு மற்றும் பிற ஒப்பந்தங்களின் கீழ் தடை செய்யப்பட்டிருக்கக் கூடிய வெள்ளை பாஸ்பரஸ் உள்ளிட ஆயுத வழிமுறைகளைப் பயன்படுத்தி முந்தைய நவம்பரில் எவ்வாறு அமெரிக்கப் படைகள் ஃபலுஜாவை நாசமாக்கின என்பது குறித்த புதிய தகவல்கள் 2005 ஆம் ஆண்டு முழுவதிலும் வந்த வண்ணம் இருந்தன. ஃபலுஜாவில் வெளிப்பட்ட காட்டுமிராண்டித்தனம் ஒரு தனிமைப்பட்ட சம்பவம் அல்ல. அமெரிக்கப் படைகள் அப்பாவி மக்களைப் படுகொலை செய்வது குறித்த செய்திகள் அடிக்கடி இடம்பெற்றன. குறைந்தது இரண்டு பிற நகரங்களேனும் திட்டமிட்டு அழிக்கப்பட்டன: செப்டம்பரில் டல் அஃபார் மற்றும் நவம்பரில் ஹூசேபா. அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் செய்த குற்றங்களை விசாரணை செய்வது மிகவும் ஆபத்து வாய்ந்ததாக இருந்தது. பல சந்தர்ப்பங்களில், வெகுதொலைவில் இருந்து சுடும் அமெரிக்க இராணுவ துப்பாக்கிதாரிகள் செய்தியாளர்களைச் சுட்ட சம்பவங்கள் நடந்தன. செப்டம்பரில், அமெரிக்க தொலைதூர துப்பாக்கிவீரர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் ஒலிப் பணியாளர் ஒருவரை பாக்தாத்தில் சுட்டுக் கொன்று விட்டார். அமெரிக்கப் படைகளின் கரங்களில் சிக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட செய்தியாளர் அல்லது ஊடக உதவியாளர் எண்ணிக்கையில் அவர் பதினெட்டாவது ஆவார். மற்ற சந்தர்ப்பங்களில், எல் சல்வடோரில் பயன்படுத்தப்பட்ட மாதிரியின் அடிப்படையில் அமெரிக்காவில் ஒழுங்கமைக்கப்பட்ட ஈராக்கிய கொலைப் படையினர் ஆட்களைக் கடத்தினர் அல்லது கொலை செய்தனர். உதாரணத்திற்கு ஜூலை மாதத்தில் ஒரு வேனுக்குள் பத்து பேர் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த நிலையில் கண்டறியப்பட்டார்கள், வேனுக்குள் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தொட்டிருந்தது. 2005 ஆம் ஆண்டின் கோடை மற்றும் இலையுதிர் காலத்தில் சதாம் உசேன் மீதான கபடவேடத்தனமான கண்துடைப்பு விசாரணை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அவரது பாதுகாப்பு வழக்கறிஞர்களில் இருவர் கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். வரவிருந்த விசாரணை குறித்து wsws கருத்திட்டது: ஹூசைன் பல குற்றங்களுக்குப் பொறுப்பானவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு நாட்டின் மீது [ஈரான்] ஊடுருவல் செய்ததற்காக, ஆயுதமேந்திய எதிர்த்தரப்பை மிருகத்தனமாக ஒடுக்கியதற்காக, நிராயுதபாணியான அப்பாவி மக்களுக்கு எதிராக கொலைபாதகப் பதிலடி தாக்குதலை மேற்கொண்டதற்காக மற்றும் தடம்புரண்ட நீதிக்காக அவர் மீது விசாரணை நடத்தப்பட இருக்கிறது என்றால், ஈராக்கை ஆக்கிரமித்து அடிபணியச் செய்ததில் இவை அத்தனை குற்றங்களையும் புஷ் நிர்வாகமும் இழைத்திருக்கிறது. அதுவும் இதே அளவுக்கு விசாரணை செய்யப்பட வேண்டும். ஆப்கானிஸ்தானில், ஈராக்கை விட குறைந்த மட்டத்தில் என்றாலும், அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்புப் படைகளுக்கும் ஆப்கான் கெரில்லாக்களுக்கும் இடையிலான சண்டை தொடர்ந்தது. அமெரிக்கப் படைகள் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசியது அடிக்கடி கிளர்ச்சியை பற்றவைத்தது. ஈராக்கில் அமெரிக்காவின் நிலை மேலும் மேலும் அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில், குறிப்பாக ஹமீத் கர்சாய் ஆட்சியை உறுதி செய்த அமெரிக்கக் கட்டுப்பாட்டிலான ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்தைய காலத்தில், புஷ் நிர்வாகம் அதன் நேட்டோ மற்றும் ஆசியக் கூட்டாளிகளுக்கு மேலும் துருப்புகளை அனுப்ப நெருக்குதல் அளித்தது. மத்திய கிழக்கு பகுதியில் பரவலான இந்த ஏகாதிபத்திய போர்களின் ஸ்திரம்குலைக்கும் தாக்கமானது பிப்ரவரியில் லெபனானின் முன்னாள் பிரதமரான ரபிக் ஹரிரியியின் படுகொலையில் வெளிப்பாடு கண்டது. சிரியா மீது புஷ் நிர்வாகம் வம்பிழுக்கும் அச்சுறுத்தல்களையும் டமாஸ்கஸில் பதவியில் இருந்த ஆட்சி தான் இந்தக் கொலைக்கு நேரடியான காரணம் என்ற உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளையும் முன்வைப்பதற்கு இது தூண்டியது. ஹரிரியின் மரணத்தால் யாருக்கு இலாபம் என்பதை உலக சோசலிச வலைத் தளம் ஆய்வு செய்தது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் நெருக்குதலின் கீழ் சிரியா லெபனானில் இருந்து தனது இராணுவப் படைகளை விலக்கிக் கொண்டது. ஆனால் பிரதானமான ஷியா கட்சியான ஹெஸ்போல்லா அமெரிக்கத் தலையீட்டு அச்சுறுத்தலுக்கு எதிராக மில்லியன்கணக்கானோர் பங்குபெற்ற ஒரு பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்தது. பாலஸ்தீன ஜனாதிபதியாக மக்மூத் அப்பாஸ் தேர்வானதைத் தொடர்ந்து விரிந்து சென்ற அமெரிக்க இராணுவ நெருக்குதலுக்கு ஏற்ப தன்னை சரி செய்து கொள்வதற்கு பாலஸ்தீன அதிகாரம் (PA)முனைந்தது. ஏரியல் ஷரோன் தலைமையிலான இஸ்ரேல் அரசாங்கம் ஒரு கைதியை விடுதலை செய்ததற்கும் நிதி மானியங்கள் வழங்கியதற்கும் பிரதிபலனாக அதனுடன் அப்பாஸ் ஒரு சண்டைநிறுத்தத்தில் கையெழுத்திட்டார். ஆகஸ்டு மாதத்தில், இஸ்ரேலின் ஆட்சி காசா பகுதியில் குடியேறியிருந்த அத்தனை ஜியோனிச மக்களையும் பலவந்தமாக அகற்றி பதிலிறுப்பு செய்தது. பகுதியாக அமெரிக்காவை திருப்திப்படுத்துவதற்கும், அதேபோல பெரும்பான்மையினர் சூழ நடுவில் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகக் கூடியவர்களாய் அவர்கள் இருப்பதை அகற்றும் பொருட்டுமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இஸ்ரேலியப் படைகள் மேற்குக் கரை, காசா பகுதி மற்றும் கோலன் குன்று ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிய 1967 போருக்குப் பிந்தைய காலத்தில் நடந்தேறிய வலது-சாரி குடியேற்ற இயக்கத்தின் எழுச்சி குறித்து WSWS நான்கு பகுதிகளாக வெளியான கட்டுரை ஒன்றில் பகுப்பாய்வு செய்தது. ஈரானில் ஜூனில் மக்மூத் அகமதினிஜாத் ஜனாதிபதியாகத் தேர்வானதை தொடர்ந்து, அதன் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் அமெரிக்க இராணுவ முஸ்தீபுகளுக்கான பதிலிறுப்பாக ஈரானின் இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சி இன்னும் சமரசமற்ற அமெரிக்க-எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தது. அமெரிக்கா மீதும் மற்றும் ஈரானிய முதலாளித்துவ வர்க்கத்தின் மிக சலுகைபடைத்த பிரிவுகளின் மீதும் தொடுத்த ஜனரஞ்சகத் தாக்குதல்களினால் அகமதினிஜாத் மக்கள் ஆதரவை வெல்ல முடிந்தது. ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க விநியோகத்தின் பாதையில் ஒரு முக்கியமான இடைப்புள்ளியான உஸ்பெகிஸ்தானில் மே மாதத்தில் நடைபெற்ற அரசாங்க-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரியான இஸ்லாம் கரிமோவின் ஒரு மிருகத்தனமான படுகொலை நடவடிக்கைக்கு இட்டுச் சென்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதே மாதத்தில் குவோண்டானோமோவில் குரான் அவமதிப்பு உள்ளிட கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டது குறித்த நியூஸ்வீக்கில் வெளியான ஒரு செய்தியறிக்கை முஸ்லீம்கள் அதிகமாய் வாழும் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் நாடுகளில் கலவரங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தூண்டியது. இந்த அபிவிருத்திகள், குறிப்பாக போர் தொடுக்கும் முடிவின் சதி போன்ற தன்மை குறித்த புதிய அம்பலப்படுத்தல்கள் வெளியாகிக் கொண்டிருந்த சமயத்தினால், அமெரிக்காவிற்குள்ளும் ஐரோப்பாவிற்குள்ளும் போர் எதிர்ப்பு மனோநிலைக்கு எரியூட்டியது. மே மாதத்தில் பிரிட்டிஷ் ஊடகங்களுக்குக் கசிந்த டவுனிங் ஸ்டிரீட் மெமோ என்பதான ஒன்று, 2001, செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்த சில மாதங்களுக்குள்ளாகவே ஈராக்குடனான போரை புஷ் நிர்வாகம் தீர்மானித்து விட்டிருந்தது என்றும், பிரிட்டிஷ் பிரதமரான டோனி பிளேயர் 2002 பிப்ரவரி வாக்கிலேயே போருக்கு ஒப்புதல் கையெழுத்திட்டிருந்தார் என்றும், சதாம் உசைனைத் தூக்கியெறிவதற்கான போரில் இறங்குகின்ற “கொள்கையைச் சுற்றி உளவுத் தகவல்களும் உண்மைகளும்” பின்னப்பட்டுக் கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் கேபினட் எச்சரிக்கப்பட்டிருந்தது என்றும் எடுத்துக் காட்டியது. பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் இருந்த அமெரிக்க ஊடகங்கள் போருக்கான வெகுஜன எதிர்ப்பை நிராகரித்த அதே நேரத்தில் அவை தூபமிட்ட பொய்கள் அம்பலப்படுவதை தணிப்பதற்கு முனைந்தன. இந்த ஊடக இருட்டடிப்பு மற்றும் போருக்கு ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் அரசியல்வாதிகள் அளித்த இருகட்சி ஆதரவு இவற்றைத் தாண்டி, அமெரிக்கர்கள் மூன்றில் இரண்டு பங்கினர் அளவுக்கு ஈராக்கில் இருந்து உடனடியாக துருப்புகளைத் திரும்பப் பெற விரும்பினர் என்பதை கருத்துக்கணிப்புகள் சுட்டிக் காட்டின. ஈராக்கில் கொல்லப்பட்ட ஒரு அமெரிக்கப் படைவீரரின் தாயான சிண்டி ஷீகன், புஷ் அவரது ஒரு மாத கால ஆகஸ்டு விடுமுறைக் கழிப்பின் போது டெக்சாசின் கிராபோர்டில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் இருந்த சமயத்தில், அவ்வீட்டின் முன்பாக தனது தனிநபர் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கியதற்கு பின்னர் பாரிய போர் எதிர்ப்பு கருத்து குறித்த நிதர்சனம் அமெரிக்க ஊடகங்களிலும் கூட மறுக்கவியலாததாக ஆகிவிட்டது. நூற்றுக்கணக்கானோர் அவருக்கு ஆதரவாகத் திரண்டனர். ஷீஹனின் பிரச்சாரம், புஷ் நிர்வாகம் மற்றும் போருக்கு அவர் வெளியிட்ட நெகிழச் செய்யும் கண்டனம், மற்றும் “அவர்களை உடனே தாயகம் வரச் செய்யுங்கள்” வாகனத்தின் மூலமாக அவர் தூண்டிய பரவலான போராட்டங்கள் ஆகியவை குறித்த விரிவான செய்திகளை WSWS வெளியிட்டது. உத்தியோகபூர்வ போர் ஆதரவு கருத்தொற்றுமையின் ஊடாக உடைத்துக் கொண்டு அமெரிக்க அரசியலில் புதிய சக்திகள் எழுந்திருப்பதை இது குறிக்கிறது என WSWS குறிப்பிட்டது. இந்தப் பிரச்சாரம் வாஷிங்டனில் நடந்த ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் உச்சம் பெற்றது. 2003 பிப்ரவரியில் நடந்த உலகளாவிய ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் நடந்த மிகப் பெரிய எதிர்ப்பு வெளிப்பாட்டில் நூறாயிரக்கணக்கிலானோர் அமெரிக்கத் தலைநகருக்கு படையெடுத்தனர். ஷீஹன்(Sheehan)போரை நேர்மையுடன் எதிர்த்தார் இருகட்சிகளையும் விமர்சனம் செய்தார், என்றபோதிலும் ஆர்பாட்டத்தில் பேசியவர்கள் முன்னோக்கிய எந்தவொரு வழியையும் வழங்கவில்லை என்பதை WSWS எச்சரிக்கை செய்தது. ஜனநாயகக் கட்சியுடனும் ஒட்டுமொத்த இரு-கட்சி அரசியல் அமைப்புமுறையில் இருந்தும் உடைத்துக் கொள்வதற்குப் பதிலாக, நெடுங்காலமாய் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கான சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பின் கல்லறையாகத் திகழ்ந்து வரும் ஜனநாயகக் கட்சிக்கு அழுத்தமளிப்பதையே அவர்கள் முன்வைத்தனர்.
Featured material16
February 2005
மஹ்மூத் அப்பாசும் பாலஸ்தீனிய தேசிய இயக்கத்தின் சீரழிவும்
|