World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Spain: record abstention in referendum on European Union constitution

ஸ்பெயின்: ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பின் மீதான கருத்தெடுப்பில் இதுவரை இல்லாத அளவு எண்ணிக்கையினர் வாக்களிப்பை தவிர்த்தனர்

By Julie Hyland
23 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU), திட்டமிடப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பு பெப்ரவரி 20ம் தேதி ஸ்பெயினின் கருத்தெடுப்பு என்ற முறையில், பெரும்பாலான வாக்காளர்கள் அரசியல் அமைப்பிற்கு ஆதரவு கொடுத்த வகையில், தன்னுடைய முதல் தடையைக் கடந்தது. ஆனால் இந்த விளைவு, வாக்களிக்கக்கூடியவர்களில் பாதிக்கும் குறைந்தவர்கள்தான் கருத்தெடுப்பில் கலந்து கொண்டனர் என்பதால், ஸ்பெயினின் உத்தியோகபூர்வ கட்சிகளுக்கும் ஐரோப்பாவின் பெரும்பாலான ஆளும் தட்டுக்களுக்கும் பெருமளவில் செலவுசெய்து பெற்ற வெற்றி ஆகும். இது 1975 பிராங்கோ சர்வாதிகாரத்தின் முடிவிற்குப் பின் நிகழ்ந்த தேர்தல்களிலேயே மிகக் குறைவான வாக்குப்பதிவு ஆகும். வாக்குப்பதிவு செய்திருந்த 42 சதவிகித உரிமை பெற்ற வாக்காளர்களில், 77 சதவிகிதத்தினர் புதிய அரசியல் அமைப்பிற்கு ஆதரவாகவும், 17 சதவிகிதத்தினர் எதிர்த்தும், 6 சதவிகிதத்தினர் செல்லாத வாக்குகளையும் பதிவு செய்தனர்.

ஒரு பொருளாதார, இராணுவ, முகாமாக பெரிய போட்டியாளர்களிடம் இருந்து, குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிராக, ஐரோப்பிய ஒன்றியத்தை வலுப்படுத்தும் இலக்கை கொண்ட அரசியல் அமைப்பு ஒப்பந்தத்தைப்பற்றி, அடுத்த 18 மாதங்களில் நடக்க இருக்கும் தொடர்ச்சியான ஐரோப்பிய வாக்கெடுப்புக்களில், இந்த கருத்தெடுப்பு முதலாவது ஆகும்.

இந்த ஒப்பந்தம் அனைத்து 25 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளாலும் ஒப்புதல் கொடுக்கப்பட்ட பின்னர்தான் சட்டமாக முடியும். பத்து உறுப்பு நாடுகள் இந்தப் பிரச்சினையை பொறுத்தவரையில் கருத்தெடுப்பு நடத்துகின்றன: மற்றவை இவ்விஷயத்தை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடும். இந்த ஒப்பந்தம் இவ்விதத்தில் லித்துவேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேனியாவில் ஏற்கனவே இசைவினைப் பெற்று விட்டது.

கருத்தெடுப்பிற்கு முன்பு, உலக சோசலிச வலைத் தளம் ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பை நிராகரிப்பதற்கு அழைப்பு விடுத்து ஓர் அறிக்கையை வெளியிட்டு, சோசலிச அடித்தளங்களில் ஐரோப்பாவை ஒன்றிணைப்பதன் அடிப்படையில் ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க பதிலீட்டை முன்னெடுத்திருந்தது. [See: "Vote 'no' in Spaish referendum on European Union constitution"]

1986ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்ததில் இருந்து ஸ்பெயின் ஐரோப்பிய நிதிகள், மானியங்கள் ஆகியவற்றைப் பெருமளவில் பெற்றுள்ளது. அவ்வாறு இருக்கையில், ஐரோப்பிய ஒன்றிய செயல்திட்டத்திற்கு மிகவும் ஆதரவு கொடுக்கும் நாடாக அது இருக்கும் என்று கருதப்படுகிறது: எனவேதான் ஐரோப்பிய ஆளும் செல்வந்த தட்டுக்கள் அதை புதிய அரசியல் அமைப்பிற்கான கண்டம் தழுவிய பிரச்சாரத்தை ஆரம்பிக்க சிறந்த இடமாக இருக்கும் என்று கருதின.

மக்களிடையே, ஜனநாயக ரீதியாக கலந்தாய்வு செய்யும் ஒரு பயிற்சிமுறை என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தபோதிலும், கருத்தெடுப்பை சுற்றி நடந்திருந்த பிரச்சாரம் முற்றிலும் ஒருதலைப்பட்சமாகவே இருந்தது. ஆளும் சோசலிஸ்ட் கட்சியும், எதிக்கட்சியான வலதுசாரி பாப்புலர் கட்சியும், பெரும்பாலான வட்டார, தேசிய கட்சிகளைப் போலவே முற்றிலுமாக ஒப்பந்தத்திற்கு கடப்பாடுடையனவாக இருந்தன.

கால்பந்துவீரர்கள், நடிகர்கள் மற்ற புகழ்வாய்ந்தவர்கள் "வேண்டும்" என்று வாக்களிப்பதை பிரகடனப்படுத்துவதற்கு மில்லியன் கணக்கான பணம் வனப்புடைய பளபளப்பான, பிரச்சாரத்திற்காக செலவிடப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமே திறனாய்வு முயற்சிகளை மழுங்கடித்து அரசியலமைப்பு ஒப்பந்தத்தில் எழுப்பப்பட்டுள்ள அடிப்படை பிரச்சினைகள் பற்றி பெரும் குழுப்பத்தை எழுப்பவேண்டும் என்பதேயாகும்.

அதிகாரபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளால் ஏற்கப்பட்ட நான்கு மாதங்களுக்குள்ளேயே அதுகுறித்து கருத்தெடுப்பு நடந்த விரைந்துள்ள பிரதம மந்திரி ஜோஸ் லூயி ரோட்ரிக்ஸ் ஜாபதெரோவின் நடவடிக்கையானது, 448 விதிகளையும் எந்தவித தீவிர விவாதத்திற்கோ அல்லது ஆய்வுக்கோ உரிமை இல்லாததாக்கி கட்டாயப்படுத்தியேனும் மக்களுடைய ஆதரவைப் பெற்றுவிடவேண்டும் என்ற முயற்சியாக இருந்தது. கருத்தெடுப்பு பிரச்சாரத்தின் முடிவில் நிகழ்த்தப் பெற்ற கருத்துக் கணிப்புக்களின்படி, பத்தில் ஒன்பது ஸ்பானிய மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய அரசியல் அமைப்பில் என்ன அடங்கியுள்ளது என்றே தெரியாமல் இருந்தது.

அப்பொழுதும் கூட, ஸ்பானிய முதலாளித்துவ வர்க்கம் பொது மக்களுடைய கருத்தை தங்கள் பால் ஈர்க்க முடியவில்லை என்றால் ஒரு பாதுகாப்பு மாற்றுவகையையும் கொண்டிருந்தனர். இந்த கருத்தெடுப்பானது, "ஆலோசனை கேட்கும்" செயல்பாடு என்றும் சட்டபூர்வமாக அரசாங்கத்தை கட்டுப்படுத்தாது என்றும் கூறப்பட்டது; இவ்விதத்தில் எதிர்பார்த்த முடிவை வாக்குகள் கொடுக்கவில்லை என்றாலும், ஆதரவு தரும் பாராளுமன்றத்தின் மூலம் ஒப்பந்தத்திற்கு வழிசெய்துவிட முடியும் என்று இருந்தது.

அரசியலமைப்பின் தன்மையினாலேயே இந்த சொல்விளையாட்டு தேவையானதாக ஆக்கப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தம் ஒரு முன்னேற்றகரமான, ஜனநாயக முறையில் கண்டத்தை ஒற்றுமைப்படுத்தும் வகையைக் கொடுக்கவில்லை. மாறாக, ஐரோப்பிய நிதி மூலதனம் மற்றும் பெரிய நாடுகடந்த நிறுவனங்கள், கண்டத்தில் இருக்கும் தங்களுடைய ஒற்றை, " சுதந்திர வர்த்தக" சந்தையின் நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும், அமெரிக்கா, சீனா, ஆசியா ஆகியவற்றின்மீது பொருளாதார சவாலை அதிகரிக்கவும்தான் பயன்படுத்தப்பட உள்ளது.

இதற்கான விலை ஐரோப்பா முழுவதும் உள்ள உழைக்கும் மக்களால் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மூலதனத்தின்மீது இருக்கும் அனைத்து தடைகளும் அகற்றப்பட்டுவிட்டன: ஒவ்வொரு தேசிய அரசாங்கமும் வரிகளைக் குறைப்பதற்கும், கெளரவமான சுகாதரக்காப்பு, ஓய்வூதிய உரிமைகள் உட்பட பல பொது நலச் செலவினங்களை குறைப்பதற்கும், கருணையற்ற முறையில் அவற்றை தகர்ப்பதற்கு பொறுப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கில் விரிவிடைந்தமை --பெரும்பாலும் முந்தைய ஸ்ராலினிச கிழக்கு ஐரோப்பிய வறுமை பீடித்த அரசுகளை இணைத்ததானது-- தொழிலாளர்கள் கண்டம் முழுவதும் ஒருவரோடு ஒருவர் போட்டியிடும் நிலைக்கு நிர்பந்திக்கும் நோக்கத்துடனும் சம்பளங்கள், வாழ்க்கைத்தர நிலைமைகளுக்கான மட்டக்குறியீடுகளை என்றும் குறைவான அளவுக்கு நிர்ணயிப்பதன் மூலம் இந்த வழிவகைக்கு பெரிதும் உதவியுள்ளது.

இது இராணுவவாதத்தின்பால் திரும்புதலுடன் இணைந்துள்ளது. இராணுவ வலிமையை பயன்படுத்தி பூகோளத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவவேண்டும் என்ற அமெரிக்க கொள்கை, ஐரோப்பாவின் முக்கிய சக்திகளின் ஏகாதிபத்திய நலன்களை அச்சுறுத்தி, அவற்றையும் சுதந்திரமான இராணுவத் திறனை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட உந்ததுதல் கொடுத்து, புதிய காலனித்துவ பாணியில் உலகத்தை கொள்ளை அடிப்பதில் அவற்றிற்கும் பங்கை கொடுக்க உத்தரவாதம் அளிக்கும்.

ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தமானது இந்தப் பொருளாதார, இராணுவ இலக்குகளை அதிக அக்கறையோடு போற்றிப்பேண வைத்துள்ளது, இதன்மூலம் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆணைகள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக செயல்படுத்தப்படுவதற்கான சட்ட அடிப்படை தோற்றுவிக்கப்படும் மற்றும் நவீன காலனித்துவ முறையும், இராணுவவாதமும் ஐரோப்பாவின் வல்லரசுகளால் புதுப்பிக்கவும் படும்.

இந்தப் புதிய ஒப்பந்தத்திற்கான பிரச்சாரத்தின் முன்னணியில் தன்னை இருத்திக் கொண்ட வகையில், ஸ்பானிய அரசாங்கம் இத்தாக்குதலில் தனக்குத்தானே ஒரு பெரிய பங்கை எடுத்துக் கொள்ளும் நம்பிக்கையை கொண்டிருந்தது. கடந்த ஆண்டு மக்களுடைய பெரும் எதிர்ப்பானது ஈராக் போருக்கு காட்டப்பட்டதை அடுத்து, இது பதவியில் இருத்தப்பட்டதில் இருந்தே, ஜாபதெரோ அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்கள் கொண்டுள்ள எதிர்ப்பை பயன்படுத்தி, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பங்கில் மிகவும் வலியுறுத்தும் தன்மையுடைய செயற்பட்டியலின் மையத்தில், ஸ்பெயினை மத்திய இடத்தில் மறுநிலைப்படுத்தும் வகையில் தன்னுடைய நடவடிக்கைகளை கொண்டுள்ளது.

கருத்தெடுப்பின் முடிவு வந்த பின்னர், ஜாபெதெரோ கூறினார்: "இன்று ஸ்பெயின் நாட்டினர் ஐரோப்பிய வரலாற்றை படைத்து விட்டனர்; ஏனெனில் நம்முடைய வாக்கு, நாம் கொடுக்கும் விடைக்கு ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய குடிமக்களை வழிநடத்துவதற்கான ஒரு செய்தி ஆகும்.."

உண்மையில், இந்த கருத்தெடுப்பு ஸ்பெயினின் பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கும் ஆளும் செல்வந்தத்தட்டிற்கும் இடையே உள்ள பெரும் பிளவைத்தான் குறிப்பிடுகிறது. கிட்டத்தட்ட முழு கருத்தொருமித்ததன்மை, அதிகாரபூர்வ அரசியல் நிறமாலையிலும் செய்தி ஊடகத்திலும் கூறப்பட்டிருந்தபோதிலும் கூட, ஐந்தில் இருவர்தான் ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்குப் போடுவதற்கே வந்திருந்தனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் வரிசையில் நின்று ஜாபெதெரோவை, "வேண்டும்" வாக்குப் பதிவை பெறுவதற்காக பாராட்ட நின்றிருந்தபோது, வாக்குப்போடாதவர் எண்ணிக்கை மிக அதிகமாக போய்விட்டதை பற்றிய கவலையும் அக்கறையையும் மறைக்க முடியவில்லை. பிரான்சும், நெதர்லாந்தும் தங்களுடைய வாக்கெடுப்பை வசந்தகாலத்தில் வைத்துக் கொள்ளுவதாக உள்ளன; அங்கு ஸ்பெயினில் வந்துள்ளதை விட முடிவு உறுதியற்றதுதான்: அடுத்த ஆண்டு பிரிட்டனும் செக் குடியரசிலும் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது இன்னும் கூடுதலான முறையில் உறுதியற்றதாகத்தான் உள்ளது.

ஸ்பெயினில் வந்துள்ள முடிவு, ஜனநாயக உரிமைகள் மற்றும் உழைக்கும் மக்களின் சமூக அக்கறைகள் கீழறுக்கப்படலை வலியுறுத்தும் ஒரு ஒப்பந்தத்திற்காக மக்களுடைய ஆதரவைப் பெறுதல் என்ற சூழ்ச்சிகளை உறுதிசெய்ய முயலும் ஐரோப்பிய ஆளும் செல்வந்தத்தட்டுக்களால் செய்யப்படும் முயற்சிகளானது மலையேறுவது போல் ஒரு கடினமான போராட்டம் என உறுதிப்படுத்துகிறது.

ஆயினும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்கள் என்ற பார்வையில், கருத்தெடுப்பின் அடிப்படை படிப்பினை, முதலாளித்துவ அரசியல் வடிவமைப்பிற்குள் மற்றும் ஐரோப்பிய ஆளும் செல்வந்தத்தட்டின் பெரு வர்த்தக செயற்பட்டியலுக்கான, இருக்கும் வெகுஜனக் கட்சிகளுக்குள், எத்தகைய முற்போக்கான பதிலீடும் இல்லை என்பது ஆகும்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான விரோதப் போக்கும் மனமுறிவும் மட்டும், ஐரோப்பா முழுவதிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு தங்கள் வர்க்கத்தின் நலன்களை வலியுறுத்திக் கூறுவதற்கு தேவையான முயற்சிகளுக்கான அஸ்திவாரங்களை கொடுத்துவிடாது. இந்தக் கண்டம் ஜனநாயக முறையில் மற்றும் ஒத்திசைவான முறையில் ஐக்கியப்படுவது ஓர் இன்றியமையாத தேவையாகும். ஐரோப்பா பலவிதப் போட்டியிடும் தேசிய அரசுகளாக பிளவுபடுவதில் இருந்து கடந்து வருவதன் மூலம், அனைத்து வகையான வறுமை, பின்தங்கியிருத்தல் இவற்றிற்கு முடிவுகட்டும் வகையில், கண்டத்தின் பெரும் தொழில்நுட்ப, பண்பாட்டு, சடரீதியான வளங்கள், பயன்படுத்தப்படுவதற்கு தடைகள் அகற்றப்பட வேண்டும்.

ஆனால் இது, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் எனும் முன்னோக்கில், பெருவணிகம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிரான சமரசத்திற்கு இடமில்லாத போராட்டத்தில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தால் மூலமே அடையப்பட முடியும். உழைக்கும் மக்கள் அமெரிக்கா மற்றும் அவர்களின் சொந்த ஆட்சியாளர்களால் பின்பற்றப்படும் இராணுவ வாதத்திற்கான உந்துதலை எதிர்ப்பதற்கு அத்தியாவசியமான வழிமுறைகளை இந்த வேலைத்திட்டம் மட்டுமே வழங்கும், அதேநேரத்தில் மிகப்பாடுபட்டுப் பெற்ற சமூக நலன்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை, நாடுகடந்த நிறுவனங்கள் மற்றும் பெருவணிக அரசியல்வாதிகளின் தாக்குதல்களிடம் இருந்தும் காப்பாற்றும்.

See Also:

ஐரோப்பாவில் புஷ்: அட்லாண்டிக் கடந்த ஐக்கியம் பற்றிய பேச்சு வார்த்தைக்கு கீழே பதட்டங்கள்

ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பிற்கான ஸ்பெயினின் வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வாக்களிக்கவும்

Top of page