World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: high school students demonstrate against education "reforms"

பிரான்ஸ்: கல்வி "சீர்திருத்தங்களுக்கு" எதிராக உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கண்டனப்பேரணி

By a WSWS reporting team
17 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

பிரதமர் ஜோன்-பியர் ரஃப்ரன் வலதுசாரி அரசாங்கத்தின் கல்வியமைச்சர், பிரான்சுவா பிய்யோன் ஆல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கல்வி சீர்திருத்த சட்டத்தை எதிர்ப்பதற்காக ஒரு நூறாயிரம் பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வேலைநிறுத்த கண்டனப் பேரணியை பெப்ரவரி 10-ல் நடாத்தினர். நாட்டில் ஏறத்தாழ பாதி உயர்நிலைப்பள்ளிகள் விடுமுறைக்காக மூடப்பட்டுள்ள நிலையில் இந்தப் பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை மிக குறிப்பிடத்தக்கதாகும்.

மாணவர்களால் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்ட பிரச்சனை, உயர்நிலைப்பள்ளி தேறியதும் வழங்கப்படுகின்ற பட்டத் தகுதி பேறு சம்மந்தப்பட்டது, இதை baccalauréat அல்லது ''Bac" என்றழைப்பார்கள். இது பெப்ரவரி 15க்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

இப்படி பரந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதற்கு பதிலளிக்கின்ற வகையில் கல்வியமைச்சர் பிய்யோன் உடனடியாக "Bac" சீர்திருத்தத்தை நிறுத்தி வைத்தார் மற்றும் நாடாளுமன்ற விவாதத்திலிருந்து அதனை நீக்கி வைத்தார். என்றாலும், தனது இதர முன்மொழிவுகள் அப்படியே விவாதத்திற்கு வரும் என்பதில் தனது தீர்க்கமான முடிவை உறுதிப்படுத்தினார்.

பிரான்ஸ் முழுவதிலும் பிரதமர் ரஃபரன் மற்றும் ஜனாதிபதி ஜாக் சிராக் அரசாங்கம் நடத்திவரும் ஆழமான தாக்குதல்களுக்கு எதிராக தொழிற்சங்கங்களால் விடுக்கப்பட்ட ஒரு நாள் வெகுஜன நடவடிக்கையில் பெப்ரவரி 5-ல் 500,000-ற்கு மேற்பட்ட மக்கள் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டதை அடுத்து, மாணவர்கள் எதிர்ப்புக்கள் தொடர்ந்தன. தற்போதுள்ள வாரத்திற்கு 35 மணி நேரத்திற்கு அதிகமாக வேலை நேரத்தை நீடிப்பதற்கான சட்டத்திற்கும் மற்றும் வேலை வாய்ப்புக்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதாக நடத்தப்படுகின்ற இதர தாக்குதல்களுக்கும் எதிராக பெப்ரவரி 5- அணிதிரட்டல் நடைபெற்றது.

வலதுசாரி அரசாங்கமும் அது பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும் செல்வந்தத்தட்டினரும் நடத்தி வருகின்ற தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள், ஒய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் மாணவர்களை ஐக்கியப்படுத்த ஒரு சோசலிச மூலோபாயத்தை முன்னெடுத்து வைக்கின்ற ஒரு அறிக்கையை பெப்ரவரி 5 கண்டனப் பேரணிகளின் போது உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்டது. (பிரெஞ்சு தொழிலாளர்களுக்கு ஒரு புதிய அரசியல் முன்னோக்கு தேவை. சிராக் மற்றும் ரஃபரன் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சனைகள்)

பிய்யோன் உறுதியளித்திருந்த கல்வி ''சீர்திருத்தங்களில்'' ஒன்று உயர் நிலைப்பள்ளிகளில் பிரபலமாக உள்ள பல்வேறு பள்ளிப்பாடங்களும், விருப்பப்பாடங்களும் ஆராய்சிகளும் இணைந்த நெறிமுறைப்படுத்தப்பட்ட தனிநபர் செயல்திட்டங்களை -travaux personnels encadrés- ஐ தடுத்து நிறுத்துவதாகும்.

மற்றொரு நடவடிக்கை ஒரு குறைந்த பட்ச முக்கிய பள்ளிப் பாடத்திட்டம் ஆகும், இதில் கலை தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டிருக்கும்.

ஆசிரியர்கள் தங்களது கற்பிக்கும் வேலைச் சுமை அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு எதிராக அணிதிரண்டிருக்கின்றனர், விடுமுறையில் இருக்கும் அல்லது பணிக்கு வராத சகபணியாளர்களுக்கு பதிலாக பணிக்கு வந்த ஆசிரியர்கள் பாடம் எடுக்க வேண்டும் மற்றும் தங்களது துறைக்கு சம்மந்தமில்லாத பாடங்களை நடத்துவதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

பிற நீண்டகாலமாக நிலவுகின்ற குறைபாடுகளில், வகுப்பில் அளவிற்கு அதிகமான மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, ஓய்வு பெற்றவர்களுக்கு பதிலாக ஆசிரியர்கள் நியமிக்கப்படாதிருப்பது மற்றும் மேற்பார்வை அலுவலர்களில் கடுமையான வீழ்ச்சி ஆகியவையும் அடங்கும்.

Baccalauréat என்றழைக்கப்படும் பட்டத் தகுதி பேறுதான் உயர்கல்விக்கான ஒரு பாஸ்போர்ட் (அனுமதி) ஆகும் மற்றும் அதன்மூலம் நல்ல பாதுகாப்பான வேலை கிடைக்கும். ஆனால் பல ஆண்டுகளாக உயர்கல்வி கற்ற பின்னர்கூட நிலையான கண்ணியமான வேலை வாய்ப்பு கிடைப்பதென்பது பெருமளவில் கடினமாகிக் கொண்டு வருகிறது. இதற்கு காரணம் பலதசாப்தங்களாக வேலையில்லா திண்டாட்ட விகிதம் 10 சதவீதமாக நீடிக்கிறது, இது தொழிலாளர் வர்க்கப் பகுதிகளிலும் கவுன்சில் குடியிருப்பு பகுதிகளிலும் இதைவிட அதிகமாக உள்ளது. குறுகிய கால ஒப்பந்தங்கள் ஒரு மகத்தான அளவிற்கு பெருகியிருப்பதும் உயர் வேலையில்லா திண்டாட்டத்தோடு இணைந்துவிட்டது.

பல உயர்நிலைப்பள்ளிகளில் "Bac" ஐ ஈடுகட்டுவதற்கு ஓரளவு ஆசிரியர்களுடைய மதிப்பீடுகள் பயன்படும் என்ற கருத்து பாரபட்சம் தொடர்பான அச்சங்களை உருவாக்கியுள்ளது. ஒருவர் படிக்கின்ற பள்ளி நல்ல பெயர் அல்லது செல்வாக்கு இல்லாத ஒன்றாக இருக்குமானால், அந்தப் பள்ளியிலிருந்து பெறுகின்ற தகுதி உயர் மதிப்புள்ள பள்ளியிலிருந்து வருகின்ற மாணவரது கல்வித் தகுதிக்கு இணையாக இருக்க முடியாது. இது குறிப்பாக சிறுபான்மை மாணவர்கள் மற்றும் தொழிலாள வர்க்க பகுதிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாகிவிடும்.

உயர்நிலைப்பள்ளிகளில் தரப்படுகின்ற மதிப்பெண்களில் 20 சதவீதமானது ஆசிரியர்களது மதிப்பீட்டை அடிப்படையாக கொண்டிருக்கும் என்று பிய்யோன் முன்மொழிந்திருப்பது, தகுதி அடிப்படையில் மேலும்கல்வி பெறவும் மற்றும் வேலை வாய்ப்புபெறவும் நேர்மையான வாய்ப்புக்களை வழங்குகின்ற ஒரே வழி என "bac"-ல் நம்பிக்கை வைத்திருப்பதில் ஒரு கடுமையான அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இன்றைய இளைஞர்கள் தாங்கள் தங்களுக்கு உறுதியான எதிர்காலத்தை வழங்காத சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அதிக அளவில் உணர்வுக்குள்ளாகின்றனர். சமூகத்தில் ஒரு தொழில்நுட்ப மற்றும் நிர்வாகவியல் செல்வந்தத்தட்டினர் வசதியான வாய்ப்புக்களை எல்லாம் கையகப்படுத்தி கொண்டுவிட்டு தங்களை ஒரு மலிவுக்கூலியாக நினைத்தால் நீக்கிவிடத்தக்க ஒரு உழைப்பாகவே கருதுகின்றனர் என்ற கருத்தும் இளைஞர்களிடையே பரவலாக வளர்ந்து வருகிறது. ஆயினும், உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்ற இயக்கங்கள் அரசியல் மீது கொண்டிருக்கும் உறுதியான குரோதத்தால் பண்பிடப்படுகிறது. ஏறத்தாழ இந்த கண்டனங்கள் பிரெஞ்சு முதலாளித்துவ சமூகத்தை கேள்விக்குள்ளாக்கவில்லை, மாறாக தற்போதைய சமூக மற்றும் பொருளாதார அமைப்புக்குள்ளே மாணவர்களது கவலைகளுக்கு பதிலளிக்க முயன்று வருகின்றன.

பெப்ரவரி 10 ஆர்ப்பாட்டங்களில் WSWS பல மாணவர்களை பேட்டி கண்டது, Créteil அருகிலுள்ள Villemomble-ல் உள்ள Georges Clémenceau Lycée லிருந்து Thibault கூறுகிறார்: "இன்றைய தினம் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பதற்கு காரணம் அரசாங்கம், எங்களை முட்டாள்கள் என்று கருதுகிறது!

"நாங்கள் செம்மறியாடுகளாக, எதிர்காலத்தில் வெறும் தொழிலாளர்களாகத்தான் இருப்போம் என்று நினைக்கிறார்கள். கல்வியில் விரிவான முன்னோக்கு இல்லை. இந்தக் கல்வி இப்படித்தான் அமைந்திருக்கிறது. நீ ஒரு தொழிலாளி, நீ ஒரு முதலாளி அது உனக்கே தெரியுமல்லவா? இதெல்லாம் எங்களுக்கு தெரியும், நடப்பதையெல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டிருக்க முடியாது, இதற்கு முன்னர் இதுபோன்று நாங்கள் பார்த்திருக்கிறோம்" என்று மேலும் கூறினார்.

அவரது வகுப்பை சேர்ந்த Soza கூறினார், "இது ஒரு பொது கிளர்ச்சி. இன்றைய தினம் போலீஸார் இளைஞர்களுக்கு எதிராக உண்மையிலேயே கொடூரமாக உள்ளனர் என்று நான் நினைக்கிறேன். இங்கே சில உண்மையிலேயே ஒடுக்குமுறை சட்டங்கள், சார்கோஷி சட்டங்கள் மற்றும் பெர்பன் சட்டங்கள் உள்ளன. அடுத்து நாங்கள் எல்லாம் கடமை தவறியோர் என்று முத்திரை குத்தப்படுவோம். எங்களுக்கு இனி சுதந்திரம் இல்லை. அமெரிக்காவைப் போன்று பிரான்ஸ் மாறுவதற்கு நாங்கள் எதிராக உள்ளோம், அங்கே வாலிபர்கள் இளம் குற்றவாளிகள் என்று ஆண்டுக்கணக்கில் சிறையிலிருக்கின்றனர்."

Soza-வின் நண்பரான Florian, "நாங்கள் பள்ளிக்கு செல்வது படிப்பதற்காக, கும்மாளம் போடுவதற்கல்ல" என்று கூறினார்.

Thibault கூறினார்: "எங்களுடைய பகுதியில், உயர்நிலைப்பள்ளி பட்டத் தகுதி பேறு, ஒன்றுக்கும் மதிப்பில்லாதது. அந்தப்பகுதியில் நாங்கள் பள்ளிக்கு செல்வது மற்றும் நாங்கள் படிப்பது உழைப்பு சந்தைக்காகத்தான்."

ரம்புயே, லூயி பாஸ்கன் உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 15 வயது மாணவர் சாமுவேல் WSWS-இடம் கூறினார்: "எங்களது பள்ளியில் தற்போதைய நிலவரம் சரிதான். ஆனால் பிய்யோன் சட்டத்தினால் அது மாறிவிடும். சுயமாக சோதனை செய்து பார்க்கும் மாணவர்களின் தனிப்பட்ட ஆய்வு செயல்திட்டங்களை அவர்கள் நீக்கிவிட விரும்புகிறார்கள். அப்படி TPE ஐ நீக்கிவிடுவது மாணவர்களுக்கு நல்லதல்ல.

"அது அச்சமூட்டுவதாக இருக்கிறது. அவர்கள் நடனம், நாடகம் மற்றும் ஏனையவவற்றை வெட்டப்போகிறார்கள். இது மிகவும் எள்ளி நகையாடத்தக்கது, ஏனென்றால் இந்தப் பாடங்கள் மாணவர்களுக்கு நல்லது, இது எல்லாவற்றிற்கும் போதுமான பணம் இல்லை. அங்கு வேலை வாய்ப்புகளும் குறைவு, ஆசிரியர்கள் எண்ணிக்கை அதைவிட குறைவு.

"தற்போது baccalauréat பரீட்சைகள் அநாமதேய என்று கருதத்தக்க வகையில் நடைபெறுகிறது. ஏழைகள் வாழும் பகுதிகளிலிருந்து வருகின்ற மாணவர்களும் மிகுந்த செல்வாக்கு மிக்க செலவு பிடிக்கும் தனியார் பள்ளிகளிலிருந்து வருகின்ற மாணவர்களும் ஒரே மாதிரியாக ஒரே தரத்தோடு தேர்வுகளுக்கு உள்ளாகின்றனர். முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்த திட்டத்தின்படி ஆசிரியர்கள் தொடர்ந்து மாணவர்கள் திறமை மதிப்பீடுகளில் ஈடுபடுவார்களானால் சில கெட்ட ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண்களை வழங்கி விடுவார்களானால் சான்றிதழ் கிடைக்காது. இனி அது அநாமதேயமாய் இருக்காது.

Saint Germain en Laye-யிலுள்ள Jean d'Albret பள்ளியை சேர்ந்த 17 வயது Fanny WSWS-ற்கு கூறினார்: "உயர்நிலைப்பள்ளி சான்றிதழ் தேர்வுகளை சீர்திருத்துவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவிற்கு எதிராக, புற மதிப்பீட்டு முறையை மற்றும் சில பாடங்களை மற்றும் சில விருப்பப்பாடங்களை நீக்கிவிட, முன்மொழிவு செய்யப்பட்டிருப்பதற்கு எதிராக நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறோம். இந்த சீர்திருத்தத்தின் பொருள் ஏற்றதாழ்வுகளால் பாரபட்சம் காட்டுகின்ற வகையில் அமைந்திருக்கிறது, ஏனெனில் கல்விமுறையில் பள்ளிக்கூடங்கள் ஒரே தரமானவையாக இல்லை.

"மாணவர்கள் அணிதிரளளால் அமைச்சர் அந்த மசோதாவை திரும்பப் பெறுவாரா என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் சமூகத்தின் எதிர்காலம் பற்றி சிந்திப்பதில்லை-----அவர்கள் பணத்தைப் பற்றி தங்களது சொந்த செல்வத்தைப்பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். பிரான்ஸ் சீர்குலைந்துவிடாது இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் இப்போதுள்ள முறையை நீடிக்க வேண்டும். அப்படியில்லையென்றால், எல்லா இடங்களிலும் நிலைமை படுமோசமாகிவிடும்.....நாம் ஒற்றுமையாக வாழ முடியாது-----எல்லா காலங்களிலுமே சமத்துவமின்மை நீடித்துக்கொண்டே இருக்கும்.

"மற்ற அரசியல் கட்சிகள் ஒரு மாற்றை தருகின்றனவா என்று எனக்கு தெரியாது. இளைஞர்கள் ஒன்று திரண்டு அரசாங்கத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதுதான், மிக முக்கியமான நடவடிக்கை என்று நான் நினைக்கிறேன், நமது கருத்தை சொல்வதற்கு உரிமையுண்டு, சில கட்சிகள் சில மாற்றீடுகளை முன்மொழிய விரும்புவதாக நான் நினைக்கிறேன், ஆனால் நீங்களும் கூட இளைஞர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கட்டும் என்ற நிலையைக் கொண்டிருக்கிறீர்கள்."

Top of page