: மத்திய
கிழக்கு
Mahmoud Abbas and the degeneration of the Palestinian
national movement
மஹ்மூத் அப்பாசும் பாலஸ்தீனிய தேசிய இயக்கத்தின் சீரழிவும்
பகுதி 1 | பகுதி
2
By Jean Shaoul and Chris Marsden
17 February 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
பின்வரும்பகுதி இரு பகுதிகளை கொண்ட கட்டுரை தொடரின் முடிவுப் பகுதியாகும்.
முதல் பகுதி தமிழில்
மார்ச் 3ம் தேதி பிரசுரிக்கப்பட்டது.
ஏனைய செல்வந்தர்களான பாலஸ்தீனிய வணிகர்களுடன் அப்பாசும் ஓஸ்லோவிற்குப்
பின்னர் பாலஸ்தீனத்திற்கு திரும்பினார்.1995ல் அவர் காசாவிற்கும், ரமல்லாவிற்கும் சென்று அங்கு பிஎல்ஓ இன்
நிர்வாகக் குழுவின் தலைமை செயலாளராக 1996ல் பொறுப்பு ஏற்றார். இஸ்ரேலுடன் நிகழ்த்தப்பட்ட
பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் அவர் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.
இன்டிபாடா உட்பட அனைத்து இஸ்ரேலிய எதிர்ப்புக்களையும் கைவிடுதல், இஸ்ரேல்
அரசிற்கு அங்கீகாரம் அளித்தல், பாலஸ்தீனிய பகுதியில் 22 சதவிகிதம் (மேலைக் கரை, காசா) தவிர மற்றைய
பகுதிகளுக்கு பாலஸ்தீன விடுதலை இயக்கம் உரிமையைக் கைவிடல், இஸ்ரேலிய இராணுவ நிர்வாகம் கொண்டுள்ள செயல்பாடுகளில்
பெரும்பாலானவற்றை, போலீஸ் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரங்கள் உட்பட எடுத்துக் கொண்டு, பிஎல்ஓ
தலைமையிலான இடைக்கால பாலஸ்தீனிய நிர்வாகத்தை (PA)
நிறுவுதல், இஸ்ரேலுக்கு வெளிநாட்டு உறவுப் பொறுப்பு, பாதுகாப்பு, இஸ்ரேலிய குடியேற்றங்களின் பாதுகாப்பு,
எல்லைகள் பாதுகாப்பு, இஸ்ரேலுக்குள் மற்றவர் புகாமல் தடுக்கும் நடவடிக்கை எடுக்கும் உரிமை ஆகியவற்றை அளித்தல்
என்பவை ஒஸ்லோவின் பயனாக ஏற்படுத்தப்படுவன ஆகும். இறுதி எல்லைகள், கிழக்கு ஜெருசலேத்தின் நில, நீர்வளங்களை
கட்டுப்படுத்தல் பாலஸ்தீன அகதிகள் திரும்பிவருவதற்கான உரிமை ஆகியன பேச்சுவார்த்தைக்காக விடப்பட்டன.
அமெரிக்க ஏகாதிபத்தியம், சியோனிச அரசு இவற்றின் முன்னோக்கில், பிஎல்ஓ வினால்
பிரதிநிதித்துவம் செய்யப்படும் பாலஸ்தீனிய முதலாளித்துவ வர்க்கம், பாலஸ்தீனிய தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்தவும்,
இஸ்ரேலுக்குப் பாதுகாப்பு அளிக்கவுமான பணியை கொள்ளவேண்டும். புலம் பெயர்ந்த நிலையில் கணிசமான
செல்வத்தை சேர்த்துள்ள பாலஸ்தீனிய முதலாளித்துவ வர்க்த்தின் முன்னோக்கில், அத்தகைய தொடர்ச்சியில்லாத,
அடிப்படையில் நீடிக்கமுடியாத அரசு கூட, தங்களது சொந்த தொழிலாள வர்க்கத்தையே சுரண்டுவதன் மூலம்,
தங்களுடைய செல்வத்தை பெருக்க வைப்பதை சாத்தியமாக்கும், அது அவர்களின் சொந்த ஒடுக்குமுறை சாதனத்தினால்
உத்திரவாதம் உள்ளதாக்கும்.
இந்த உடன்பாடும், ஒரு நாடு பொருளாதார ரீதியில் இஸ்ரேலை சார்ந்து அரசியல்ரீதியாக
இஸ்ரேலுக்கு முற்றிலும் தாழ்ந்து இருக்க வேண்டிய எதிர்பார்ப்புத்தான் காசாவை இஸ்லாமிய அடிப்படைவாதிகளின்
வலிமையான தளமாக மாற்றியுள்ளது. அனுபவமற்ற அரசானது தகுதிகளை பொருட்படுத்தாது நெருங்கிய நண்பர்களை
அதிகாரத்தில் வைத்தல் மற்றும் தவறான நிர்வாகம் ஆகியவற்றால் பண்பிடப்பட்டிருந்ததுடன், ஒரு மெல்லிய முதலாளித்துவ
அடுக்கின் சலுகைகளை உத்திரவாதப்படுத்த பிஎல்ஓ ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தது.
கடந்த பத்தாண்டில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில், அரசியல் மற்றும் சமூக உறவுகள்,
பெருகிய வறிய நிலையிலும், புண்பட்ட நிலையிலும் உள்ள மக்களை ஓஸ்லோ ஒப்பந்தத்துடன் சமரசப்படுத்தும் பாலஸ்தீனிய
நிர்வாகத்தின் முயற்சிகளால் பண்பிடப்படுகிறது. தொடர்ச்சியாக பதவியில் இருந்த இஸ்ரேலிய அரசாங்கங்கள் ஒப்பந்தத்தின்
ஒரு விதியைக்கூட செயல்படுத்த மறுத்ததால் இத்தகைய நிலைமை இன்னும் கடினமாயிற்று. மேற்குக்கரை, கிழக்கு
ஜெருசெலம் இவற்றில் குடியேற்றங்கள் மற்றும் குடியேறியோர் எண்ணிக்கை ஓஸ்லோ ஒப்பந்தத்திற்கு பின்னர் இரு
மடங்காகி விட்டன.
பொருளாதார நிலைமைகளும் மோசமடைந்துவிட்டன. இராணுவ ஊடுருவல்கள், சாலை
அடைப்புக்கள், ஊரடங்கு சட்டங்கள், வீடுகள் இடித்தல், விசாரணையின்றி காவலில் வைத்தல் அதிகரித்தல்
போன்றவை தொடர்ந்தன. இஸ்ரேலுடைய அரசியல் செயல்பட்டியல், பாலஸ்தீனியர்களுக்கு எவ்விதச் சலுகைகள்
கொடுப்பதையும் எதிர்க்கும் சமய மற்றும் குடியேற்றக்காரர்களின் கட்சிகளின் வலதுசாரி தீவிர தேசியவாதிகளால்
அதிகரித்த அளவில் இயக்கப் பெறுகின்றது.
இப்படிப்பட்ட நிலைமை இருந்தபோதிலும், எகுட் பரக்கின் தலைமையிலான இஸ்ரேலிய
தொழிற்கட்சி அரசாங்கம், அரபாஃத் ஏற்கமுடியாத கோரிக்கைகளான கிழக்கு ஜெருசலேம் முழுவதையும் இழத்தல்
மற்றும் பாலஸ்தீனிய அகதிகள் திரும்பும் உரிமையில் விதிக்கப்பட்ட கடுமையான வரம்புகள் இவற்றை வைத்தபொழுது,
ஜூலை 2000த்தில் கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தை வரை, பாலஸ்தீனிய நிர்வாகம் இஸ்ரேலுடன் ஒரு உடன்படிக்கையை
மேற்கொள்ளத்தான் தொடர்ந்து முயற்சித்தது.
செப்டம்பர் 2000த்தில் ஷரோன் மலைக்கோயிலுக்கு படை அணியுடன் ஆத்திரமூட்டும்
வகையில் வருகை புரிந்ததை அடுத்து பொதுமக்களின் சீற்றம் வெடித்தது. இஸ்ரேலுக்கு மக்கள் எதிர்ப்புக் காட்டுவதற்கு
மிகவும் உறுதியான எதிர்ப்பாளராக மீண்டும் அப்பாஸ் முன்வந்து, இரண்டாம் இன்டிபாடாவின் நடவடிக்கைகளை
முடிவுக்கு கொண்டுவருமாறு அழைப்பு விடுத்தார். 2003ல். அரஃபாத்திற்கு எதிரெடையாக, அவரை மந்திரியாக்குவதற்கு
இந்த நிலைப்பாடு போதும் என்று வாஷிங்டன், டெல் அவிவ் இரண்டும் கருதின. 2005 அளவில் காசாப் பகுதியிலும்,
மேற்கு கரையிலும் ஒரு விதமான பாலஸ்தீனிய சுயாட்சி கொடுக்கப்படும் என்ற உறுதிமொழிக்குப் பதிலாக
இன்டிபாடாவிற்கு முற்றுப்புள்ளி வைப்பது அவரது பணியாக இருந்தது.
அராபத்துடன் உள்ளுக்குள் அதிகாரப் போராட்டத்தில் தோற்றபின்னர், அப்பாஸ் சில
மாதங்களில் ராஜிநாமா செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்டார். நவம்பர் 2004ல் அரஃபாத் இறந்த நிகழ்வு,
வெள்ளை மாளிகை தன்னிடத்தில் கொண்டுள்ள எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு மிக உறுதிப்பாட்டுக்கு அப்பாஸ்
செல்வதை சாத்தியமாக்கியது.
இடைத் தரகர் ஆட்சி
பாலஸ்தீனிய மக்களை அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய முதலாளித்துவ
வர்க்கத்தின் சார்பாக ஒடுக்கும் ஒரு கருவியாக தொழிற்படும் பாலஸ்தீனிய நிர்வாகத்திற்கு அப்பாஸ் தலைமை
தாங்குகிறார். மக்களின் விருப்பத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் இல்லாத நிறுவன அமைப்புக்களைத்தான்
ஓஸ்லோ ஒப்பந்தம் கொண்டு வந்தது: தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற முறை என்று இல்லாமல், தேர்ந்து
எடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவைக் கொண்ட ஒரு ஜனாதிபதி ஆட்சியை விதிகளில் ஒன்றாக நிர்ணயித்தது.
புதிதாக ஏற்பட்ட பாலஸ்தீனிய நிர்வாகத்திற்கு, இந்த உடன்படிக்கைகள், அடிப்படையில்
இடைத்தரகர் தன்மை உடைய, ஒரு முதலாளித்துவ ஆளும் கும்பலை வலுப்படுத்துவதற்காக, சர்வதேச நிதியமைப்புக்களில்
இருந்து கடன்கள், உதவிகள் ஆகியவற்றை பெறுவதற்கும், உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிதிய,
வணிக சக்திகள், பெருநிறுவனங்கள், வங்கிகள் இவற்றின் உள்ளூர் பிரதிநிதி போல் செயல்படுவதற்கும், அவற்றின்
ஆதரவில், அதிலும் குறிப்பாக வாஷிங்டனின் ஆதரவில்தான் பொறுப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலை
காணப்படுகிறது.
நாடுகடத்தப்பட்டிருந்த பாலஸ்தீனிய முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதி
போல் இடைக்கால நிர்வாகம் செயல்பட்டது; புலம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 1948க்கு முந்தைய
பெரும் குடும்பங்களை சேர்ந்தவர்களாக இருந்து, வெளியே இருந்த காலத்தில், அமெரிக்கா, ஐரோப்பா,
வளைகுடா பகுதிகளில் செல்வம் திரட்டியிருந்தனர். அவர்கள் வெளியில் இருந்து வந்தவுடன், அனைத்துப் பெரிய
பண்டங்கள், பணிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஏகபோகங்களை நிறுவுவதற்கு பாலஸ்தீனிய நிர்வாகம் உதவிய
வகையில், அவர்கள் இன்னும் கூடுதலாக செல்வத்தைத் திரட்டினர்.
இந்தச் சமூகத் தட்டிற்கு உதாரணமாகத்தான் முனிப் மஸ்ரியும் மற்றும் அவர்
குடும்பமும் உள்ளன. டெக்சாசில் படித்த நப்லசை சேர்ந்த பில்லியனரான இவர், லண்டனில் இருந்து அரஃபாத்தின்
அழைப்பில் மேற்குக் கரைக்கு திரும்பி அவருடைய முதல் மந்திரிசபையிலும் சேர்ந்து,
(PADICO)
பாலஸ்தீனிய வளர்ச்சி மற்றும் முதலீட்டு நிறுவனத்தை அமைத்துச் செயல்படுவதற்கு உதவினார்.
இவருக்கு கொடுக்கப்பட்ட பணி, அனுபவமற்ற பொருளாதாரத்தில் புலம் பெயர்ந்தோருக்கு
"முதலீட்டு வாய்ப்புக்களை உருவாக்குதல்" என்பதாக இருந்தது. இந்த இலக்குடன் இவர் உலகெங்கிலும் இருந்த பாலஸ்தீனிய
முதலீட்டாளர்களுடன் நன்கு பழகி 1 பில்லியன் டாலர்களுக்கும் மேலான நிதியைத் திரட்டினார்.
பாலஸ்தீன நிர்வாகத்தால்
ஏகபோக உரிமைகள் கொடுக்கப்பட்டு இருந்ததால்,
PADICO
பாலஸ்தீன நிர்வாகத்தின் மிகப்பெரிய உற்பத்தித் துறையான காசாவின் தொழிற்பூங்காவையும் அதனுடைய இஸ்ரேலிய
சுங்க நிர்ணயத்தையும் கட்டுப்படுத்துகிறது. அது பாலஸ்தீனிய பங்குச் சந்தைகளையும் கட்டுப்படுத்துவதோடு, மின்
உற்பத்தி, ஆடம்பர விடுதிகள், நிலங்கள் இவற்றில் பெரும் ஆதிக்கத்தையும் கொண்டுள்ளது. அரசு உரிமம் இருக்கும்
மற்ற ஏகபோக அமைப்புக்களான தொலைத் தொடர்புகள், மின்சாரம் ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க பங்குகளை
கொண்டுள்ளது. மாஹெர் மஸ்ரி பாலஸ்தீன இடைக்கால நிர்வாகத்தின் வணிகம் மற்றும் தொழில் துறை
அமைச்சராகவும் உள்ளார்.
பிரதம மந்திரி அஹ்மெட் குரே கூட சிகரெட்டுக்கள், குளிர்பதனப் பொருட்கள்,
பால்பொருட்கள் மற்ற அடிப்படைத் தேவைப் பொருட்களில் ஏகபோகங்கள் கொண்ட நிறுவனங்களில் மிக அதிக
பங்குகளை கொண்டுள்ளார். இஸ்ரேல் தன்னுடைய பாதுகாப்புச் சுவரை எழுப்புவதற்கு தேவைப்படும் சிமென்ட்
விற்பனையில் பெரும் இலாபத்தை ஈட்டியதாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு
PADICO இன் நிர்வாகக் குழுவினரின் சொந்த சொத்துக்களின்
மதிப்பு 20 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டு இருந்தது. இந்தப் பின்னணியில் ஆக்கிரமிக்கப்பட்ட
எல்லைப்பகுதிகளின் முழு உள்நாட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பும் சுமார் 3 பில்லியன் டாலர்கள்தான் என்பது
குறிப்பிடத்தக்கது.
இலாபம் அடைதல் மற்றும் விலை நிர்ணயிப்பதில் ஏகபோகம் இவை முழுவதுமே
பாலஸ்தீனிய மக்களால்தான் ஏற்கப்படுகிறது. உலகத்திலேயே தனிநபர் விகிதக் கணக்கில் இடைக்கால நிர்வாகத்தின்
கீழ்தான் அதிகமான போலீசார் இயங்குகின்றனர். இடைக்கால நிர்வாகத்தின் செலவீனங்களில் மூன்றில் ஒரு பங்கு
பாதுகாப்பிற்காக, இஸ்ரேலை எதிர்ப்பதற்கு அல்ல, மாறாக 1993ல் இருந்து மேலேயிருக்கும் மிகச் சிறிய
பாலஸ்தீன சமூக அடுக்கை காப்பாற்றுவதற்காகத்தான் முக்கியமாக செலவழிக்கப்படுகிறது.
அப்பாசின் பதவி ஏற்புரையின் மையக் கருத்தாக ஆயுதமேந்திய குழுக்களின்
வன்முறையை கட்டுப்படுத்துவதற்கான தேவை, பாலஸ்தீனிய போலீஸ் படை ஒன்றுதான் ஆயுதம் ஏந்தும் உரிமையைக்
கொண்டிருக்கவேண்டும் எனக் கூறப்பட்டதானது தற்செயல் நிகழ்வு அல்ல. இது இஸ்ரேலிய நலன்களுக்கு உதவிபுரிவதுடன்,
பாலஸ்தீனிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கும் ஆதரவாகத்தான் இருக்கிறது.
பிஎல்ஓ வின் சீரழிவானது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு தேசியப் பாதை
இல்லை என்பதைத்தான் நிரூபிக்கிறது. இண்டிபாடாவுடன் தொடர்புடைய மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள்,
எல்லாவற்றிற்கும் குறைந்த அளவிலான இஸ்லாமிய குழுக்களால் ஆதரிக்கப்படும் தற்கொலைக்குண்டு வெடிப்புகளை
தொடர்தல் அடிப்படையில் பாலஸ்தீனிய முதலாளித்துவ செல்வந்தத் தட்டையோ அல்லது இஸ்ரேலையோ, இஸ்ரேலிய
பாதுகாப்புப்படைகளையோ எதிர்க்க இயலாது. இந்நடவடிக்கைகள் பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய தொழிலாளர்களுக்கு
இடையே இருக்கும் பிளவுகளை இன்னும் அதிகப்படுத்தி, சர்வதேச அளவில் மற்ற உழைக்கும் மக்களை அந்நியப்படுத்தி,
இஸ்ரேலியரின் அடக்குமுறை இன்னும் கூடுதலாவதற்குப் போலிக் காரணங்களைத்தான் வழங்கும். இஸ்லாமிய குழுக்கள்தாமே,
மதச்சார்பற்ற முதலாளித்துவ அரசு என்பதை காட்டிலும் மதச்சார்புடைய முதலாளித்துவ அரசை உருவாக்க ஆதரவாக
இருக்கும் அரபு முதலாளித்துவ வர்க்கத்தின் பல்வேறு பகுதிகளின் நலன்களை மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
தொழிலாள வர்க்கத்திற்கு தேவையான சோசலிச கட்சியை கட்டியெழுப்புவதற்கான
ஒரு புதிய அரசியல் பாதை தேவைப்படுகின்றது. பூகோளரீதியாய் ஒருங்கிணைந்த முதலாளித்துவ பொருளாதார நிலமையின்
கீழ், ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்குதான் முன்னேறுவதற்கான வழியை கொடுக்க முடியும். தேவைப்படுவது
யாதெனில், முதலாளித்துவ சுரண்டல் முறை மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறை இவற்றுக்கு எதிரான ஒரு பொதுப்
போராட்டத்தின் அடிப்படையில், பாலஸ்தீனிய தொழிலாளர்களை, இஸ்ரேல், எகிப்து, சிரியா, லெபனான்,
ஜோர்டான் மற்றும் முழு மத்திய கிழக்கில் இருக்கும் அவர்களுடைய வர்க்க சகோதரர்களுடன் ஐக்கியப்படுத்துவதற்கான
ஒர் உறுதியான போராட்டமே ஆகும்.
முடிவுற்றது
See Also :
யாசர் அரஃபாத்:
1929-2004
பி.எல்.ஓ
வின் அரசியல் தோல்வியும் ஹமாஸ் இன் தோற்றமும்
பகுதி1|பகுதி2|பகுதி3
Top of page
|