உலக சோசலிச வலைத் தளத்தின்
ஐந்தாவது ஆண்டு
use this version to print | Send
feedback
செப்டம்பர்
11
தாக்குதல்களுக்குப்
பின்
அமெரிக்காவில்
புஷ்
நிர்வாகம்
தொடக்கிய
மோசடியான
“பயங்கரவாதத்திற்கு
எதிரான
போர்”,
ஜனநாயக
உரிமைகள்
மற்றும்
குடிமக்கள்
சுதந்திரங்களின்
மீதான
வரலாற்றுப்
பெரும்
தாக்குதல்களை
நியாயப்படுத்துவதற்கு
பயன்படுத்தப்படல்
2002
ஆம்
ஆண்டு
ஒரு
இடைமருவல்
ஆண்டாக
இருந்தது.
அதே
சமயத்தில்
ஆப்கானிஸ்தான்
ஆக்கிரமிப்பை
தொடர்ந்து
ஈராக்
மீதான
ஆக்கிரமிப்புக்கான
உறுதியான
தயாரிப்புகள்
பின்
தொடர்ந்தன.
உலகெங்கும்
ஆளும்
வர்க்கங்களிடம்
எதிரொலித்த
அமெரிக்காவின்
பொறுப்பற்றதும்
,இராணுவமயமாக்கப்பட்டதுமான
ஒரு
வெளியுறவுக்
கொள்கைக்கு
முக்கியமான
இரண்டு
உந்துசக்திகள்
இருந்தன.
முதலாவது,
ஒரு
தசாப்தத்திற்கு
முன்
நிகழ்ந்திருந்த
சோவியத்
ஒன்றியத்தின்
உடைவு.
இது
அமெரிக்க
இராணுவ
பலத்தை
பயன்படுத்துவதற்கு
இருந்த
முக்கிய
முட்டுக்கட்டையை
அகற்றி
விட்டது.
1991
பாரசீக
வளைகுடாப்
போரில்,
ஜோர்ஜ்
டபிள்யூ
புஷ்ஷின்
தந்தையின்
நிர்வாகம்,
சதாம்
ஹுசேனின்
முக்கியமான
சர்வதேச
ஆதரவு
நாடான
சோவியத்
ஒன்றியத்துடன்
ஒரு
மோதலுக்குள்
செல்லும்
ஆபத்தைக்
காட்டிலும்,
தெற்கு
ஈராக்கின்
ஒரு
சில
மைல்கள்
முன்னேறுவதுடன்
நிறுத்துவதே
உசிதம்
என்று
முடிவெடுத்தது.
2002
இல்
அவ்வாறனதொரு
கவலையே
அவர்களுக்கு
இல்லாது
போனது.
இரண்டாவது
காரணம்,
அமெரிக்க
முதலாளித்துவத்தின்
நெருக்கடி.
அதுவரையான
காலத்தின்
பெருநிறுவன
மோசடிகள்
மற்றும்
கொள்ளையில்
மிகப்
பெரிய
விடயமான
என்ரான்
நிறுவனம்
டிசம்பர்
2001
உருக்குலைந்தபோது
இது
மிகக்
கூர்மையாக
அம்பலப்பட்டது.
இதனைத்
தொடர்ந்து
2002
ஆம்
ஆண்டு
முழுவதிலும்
பாரிய
ஆட்குறைப்புகள்
மற்றும்
பெருநிறுவன
ஊழல்களின்
ஒரு
அலையும்
மற்றும்
பங்குச்
சந்தையின்
ஒரு
வீழ்ச்சியும்
பின்
தொடர்ந்தது.
அமெரிக்க
ஆளும்
வர்க்கத்திற்கு,
மூர்க்கமான
இராணுவ
நடவடிக்கை
என்பது
சமூகப்
பதற்றங்களுக்கான
ஒரு
வடிகாலாகவும்,
நவீன
தொழிற்துறைக்கான
மிக
முக்கிய
ஆதாரவளங்களான
எண்ணெய்
மற்றும்
எரிவாயுவை
கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவருவதன்
மூலமாக
தனது
நீடித்த
பொருளாதார
வீழ்ச்சியை
நிவர்த்திசெய்துகொள்வதற்கான
வழிமுறையாகவும்
இருந்தது.
அக்டோபர்
2002
இல்
ஈராக்கின்
மீது
இராணுவ
பலத்தை
பயன்படுத்துவதை
அங்கீகரிக்கின்ற
தீர்மானத்தை
அமெரிக்க
ஜனாதிபதி
ஜோர்ஜ்
புஷ்
அறிமுகம்
செய்கிறார்
ஆப்கானிஸ்தான்
மற்றும்
“தீய
அச்சில்”
தொடங்கி....
2002
ஜனவரியில்
ஜனாதிபதி
ஜோர்ஜ்
டபிள்யூ
புஷ்
வழங்கிய
நாட்டிற்கான
உரையில்
அமெரிக்க
வெளியுறவுக்
கொள்கையிலான
மாற்றத்தை
சுருங்க
விவரித்தார்.
வட
கொரியா,
ஈரான்,
ஈராக்
ஆகிய
நாடுகளை
“தீய
அச்சு”
என்று
பிரித்துக்
காட்டிய
ஜனாதிபதி,
நான்கு
மாதங்களுக்கு
முன்னால்
நடந்த
பயங்கரவாதத்
தாக்குதல்களுக்கும்
இந்த
நாடுகளுக்கும்
எந்த
சம்பந்தமும்
இல்லை
என்கிற
நிலையிலும்,
அவற்றின்
மீது
இராணுவ
நடவடிக்கைக்கு
அச்சுறுத்தினார்.
”உலகின்
மீதான
போர்”
அறிவிப்பு
என்று
இந்த
உரையை
WSWS
குணாதிசயப்படுத்தியது.
புஷ்ஷின்
“உலகை
வெற்றிகொள்வதற்கான
வேலைத்திட்டம்”
ஆழமான
சமூக
மற்றும்
பொருளாதார
வேர்களைக்
கொண்டிருந்தது
என்பதை
WSWS
ஆசிரியர்
குழு
அறிக்கை
விளக்கியது:
அமெரிக்க
ஏகாதிபத்தியம்
அபாயங்களை
முகம்கொடுத்து
நிற்பது
உண்மையே.
ஆனால்
அந்த
அபாயங்கள்
சிறு
பயங்கரவாதக்
குழுக்களிலோ
அல்லது
உலகின்
மறுபக்கத்தில்
இருக்கும்
பலவீனமான
வறுமைப்பட்ட
நாடுகளின்
அரசாங்கங்களிலோ
இல்லை.
உலக
முதலாளித்துவத்தின்
ஆழமடைந்து
வரும்
நெருக்கடியிலும்,
அமெரிக்காவிற்குள்
முன்னெப்போதையும்
விட
தீவிரமடைந்து
கொண்டே
செல்கிற
மிக
வசதியான
உயரடுக்கிற்கும்
மிகப்
பெரும்பான்மையான
உழைக்கும்
மக்களுக்கும்
இடையிலான
முரண்பாடுகளிலும்
இருந்து
தான்
இந்த
அபாயங்கள்
எழுகின்றன.
புஷ்ஷின்
உரையில்
சுருங்கக்
கூறப்பட்டிருந்த
வலிந்து
தாக்கும்
வேலைத்திட்டம்
வெகுவிரைவில்
கொள்கைப்
பரிந்துரைகளாக
உருமாறியது.
நிர்வாகம்
நாடாளுமன்றத்திற்கு
வழங்கிய ஒரு
இரகசியமான
அணு
நிலைப்பாட்டு அறிக்கையில்
அமெரிக்க
அணு
ஆயுதங்களுக்கான
சாத்தியமான
இலக்குகளாக
ஏழு
நாடுகளின்
பெயர்
குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில்
ரஷ்யா,
சீனா
ஆகிய
இரண்டு
அணு
ஆயுத
நாடுகளும்,
ஈராக்,
ஈரான்,
சிரியா,
லிபியா
மற்றும்
வட
கொரியா
ஆகிய
ஐந்து
அணு
ஆயுதமற்ற
நாடுகளும்
இடம்பெற்றிருந்தன.
வேறு
வார்த்தைகளில்
சொல்வதானால்,
அமெரிக்க
அரசாங்கம்,
ஒரு
உலகளாவிய
அணுமோதல்
படுகொலையைத்
தூண்டக்
கூடிய
நடவடிக்கைகளுக்கு
தயாரிப்பு
செய்தது
மட்டுமன்றி,
அணு
ஆயுதமற்ற
நாடுகளுக்கு
எதிராகவும்
ஒருதரப்பாக
அணு
ஆயுதங்களைப்
பயன்படுத்துவதற்கும்
தயாரித்துக்
கொண்டிருந்தது.
இவை
வரலாற்றில்
முன்னுதாரணம்
இல்லாத
மிகப்
பெரும்
அளவிலான
உயிர்ச்
சேதங்களில்
விளையத்தக்க
நடவடிக்கைகளாய்
இருந்தன.
பத்தாயிரக்கணக்கிலான
அமெரிக்கத்
துருப்புகள்
ஆப்கானிஸ்தானில்
முக்கியமான
இடங்களை
ஆக்கிரமித்ததுடன்
அந்த
ஆண்டு
ஆரம்பித்தது.
ஆப்கான்
மக்களின்
மிகப்
பெரும்பான்மையான
மக்கள்
பரிதாபகரமான
வறுமை மற்றும்
ஒடுக்குமுறை நிலைமைகளின்
கீழ்
வாழ்ந்து
கொண்டிருந்த
நிலைமைகளில்,
தலிபான்கள்
அகற்றப்பட்டு
ஜனாதிபதி
ஹமித்
கர்சாய்
தலைமையிலான
ஒரு
பலவீனமான
அமெரிக்காவால்
பதவியிருத்தப்பட்ட ஆட்சி
அங்கு
அமர்த்தப்பட்டது.
அந்த
ஆண்டு
முழுவதும்
போர்
நடந்தது.
அமெரிக்க
ஊடுருவல்
மற்றும்
ஆக்கிரமிப்பின்
ஒரு
மதிப்பீட்டை
செய்த WSWS,
ஒரு
பேரழிவான
சமூக
நெருக்கடி,
தலைநகரிலான
ஒரு
கைப்பாவை
அரசாங்கம்,
மற்றும்
கிராமப்புறங்களின்
அநேகப்
பகுதிகள்
அமெரிக்காவால்
நிதியாதாரமளிக்கப்படும்
ஊழலடைந்த
போட்டி
யுத்தப்பிரபுக்களால்
கட்டுப்படுத்தப்பட்டதாக
இருந்தமை
ஆகியவற்றை
எடுத்துரைத்தது.
அந்த
ஆண்டின்
ஆரம்பத்தில்,
வோல்
ஸ்ட்ரீட்
ஜேர்னலைச்
சேர்ந்த
டேனியல்
பேர்ல்
அல்கொய்தாவுடன்
தொடர்பு
கொண்ட
ஒரு
பாகிஸ்தானிய
குழுவினால்
கடத்தப்பட்டு
கொலை
செய்யப்பட்டார்.
அவர்
கடத்தப்பட்டிருந்த
சமயத்தில்
ஜனவரி
31
அன்று
அவரை
விடுவிப்பதற்கு
அழைப்பு
விடுக்கும்
ஒரு
அறிக்கையை
WSWS
ஆசிரியர்
குழு
விடுத்தது.
பிப்ரவரி
21
அன்று
வெளியான
ஒரு
ஒளிப்பதிவுநாடாவில்,
பேர்ல் மூன்று
வாரங்களுக்கு
முன்
தலை
சீவப்பட்டது
வெளியிடப்பட்டமை
உலகெங்கும்
அதிர்ச்சியையும்
கொந்தளிப்பையும்
ஏற்படுத்தியது.
‘டானியல்
பேர்லை
படுகொலை
செய்தமை’
என்கிற
பரவலாய்
வாசிக்கப்பட்டதொரு
அறிக்கையில்,
கொலைகாரர்களை
WSWS
கண்டனம்
செய்தது.
“திகைக்க
வைக்கும்
அளவிலான
ஈவிரக்கமற்ற
தன்மையினை
மட்டுமல்ல,
இவர்களது
அரசியல்
திவால்நிலையையும்
கூட
இது
விளங்கப்படுத்தியிருக்கிறது”
என்று
அக்கண்டனம்
தெரிவித்தது.
அதே
நேரத்தில்,
செப்டம்பர்
11
தாக்குதல்களில்
கொல்லப்பட்டவர்களுடன்
சேர்த்து,
பேர்ல்
கொலையும்
கூட,
”கடந்த
20
ஆண்டுகளில்
எண்ணெய்
வளங்களை
கொள்ளையடிக்கவும்
மற்ற
ஏகாதிபத்திய
பூகோள-மூலோபாய
நலன்களைப்
பின்பற்றியும்
அமெரிக்காவில்
எடுக்கப்பட்ட
பொறுப்பற்றதும்
பிற்போக்குத்தனமான
முடிவுகளின்
பின்விளைவாக”
இருந்ததை
WSWS
சுட்டிக்
காட்டியது.
புஷ்ஷின்
நிர்வாகம்,
அதன்
“பயங்கரவாதத்தின்
மீதான
போரை”
சுற்றிய
பிரச்சாரத்தை
அபிவிருத்தி
செய்வதற்கு
ஜனநாயகக்
கட்சியையும்
மற்றும்
கல்வித்
துறையின்
மேலாதிக்கமிக்க
பிரிவுகளின்
சேவைகளையும்
நம்பியிருந்தது.
”நாம்
ஏன்
போரிடுகிறோம்:
அமெரிக்காவில்
இருந்து
ஒரு
கடிதம்”
என்ற
தலைப்பில்
60
வலதுசாரி
கல்வியாளர்கள்
எழுதிய
ஒரு
பகிரங்கக்
கடிதத்தை
வெளியிட்டமை
இதில்
ஒரு
முக்கியமான
அத்தியாயமாக
அமைந்தது.
இராணுவவாத
முரட்டுத்தனத்தின்
வெடிப்புக்கு
ஒரு
அறரீதியான
மற்றும்
“நியாயமான
போர்”
என்கிற
பாதுகாப்பை
வழங்க
இக்கடிதம்
முனைந்தது.
WSWS
ஆசிரியர்
குழுத்
தலைவரான
டேவிட்
நோர்த்
“அரசியல்
பிற்போக்குத்தனமும்
புத்திஜீவி
அரைவேக்காட்டுத்தனமும்”என்ற
தலைப்பில்
எழுதிய
கட்டுரையில்
கல்வித்துறையில்
இருந்து
போரை
ஆதரித்து
நிற்போர்
குறித்த
ஒரு
விரிவான
பகுப்பாய்வைச்
செய்தார்.
அவர்
எழுதினார்:
அமெரிக்காவில்
புத்திஜீவித
வாழ்க்கை
மட்டம்
எவ்வளவு
கீழிறங்கிச்
சென்றிருக்கிறது
என்பதற்கு
இக்கடிதம்
சாட்சியமளிக்கிறது.
அவமானகரமானதொரு
மட்டத்திற்கு,
அரசியல்
வலதுகள்
மற்றும்
அவர்களது
கல்வியியல்
வக்காலத்துவாதிகளின்
கொச்சையானதும்
தவறாக
வழிநடத்தக்
கூடியதுமான
வாதங்கள்
சவாலின்றியும்
பதிலளிக்கப்படாமலும்
விடப்படுகின்றன.
இவர்களில்
நன்கு
பயிற்சி
பெற்ற
கல்வியாளர்களும்,
சமூக
அறிவியலின்
பல்வேறு
துறைகளைச்
சேர்ந்த
நிபுணர்களும்
இருக்கின்றனர்.
புஷ்
நிர்வாகத்தின்
போர்
ஆதரவு
பிரச்சாரத்தில்
ஒருதொகை பொய்கள்
இருப்பது
இவர்களுக்கு
நன்கு
தெரியும்.
ஆனால்
இவர்கள்
எல்லாம்
தலையைக்
கவிழ்த்துக்
கொண்டு
வாயை
மூடிக்
கொண்டு
இருக்கின்றனர்.
இவ்வகையில்
அவர்கள்
அமெரிக்காவில்
நிலவுகின்ற
அரசியல்
பிற்போக்குத்தனம்
மற்றும்
பொதுவான
பின்
தங்கிய
நிலைக்கு
தங்களது
பங்களிப்பை
வழங்கிக்
கொண்டுள்ளனர்.
ஆனால்
இது
கடந்து
போகும்.
அமெரிக்காவின்
அரசியல்
உடலுள்
தீவிரமாய்
சிந்திப்பதற்கான
தனது
விருப்பத்தையும்
திறனையும்
தட்டி
எழுப்பக்
கூடிய
வகையில்
பலரும்
கற்பனைசெய்வதை
விடவும்
மிக
விரைவாகவே
நிகழ்வுகள்
கடும்
அதிர்ச்சிகளை
வழங்கும்.
அமெரிக்க
துருப்புகள்
ஆப்கானிஸ்தானில்
தீயணைக்கும்
பணியொன்றில்
ஈடுபடுகின்றன
மேலதிக
தகவல்கள்
31 January 2002
நாட்டின்
நிலைமை
தொடர்பான
பேச்சு:
புஷ்
உலகின்
மீது
போர்ப்
பிரகடனம்
செய்கிறார்
23 February 2002
டானியல்
பேர்ளின்
படுகொலை
11 March 2002
US plans widespread use of nuclear weapons in war
Bush orders Pentagon to target seven nations for attack
18 February 2002
அரசியல்
பிற்போக்குத்தனமும்
புத்திஜீவித பாசாங்கும்:
யுத்தத்துக்கு
ஆதரவாக
அமெரிக்க
கல்விமான்கள்
அறிக்கை
.....ஈராக்கிற்கு
எதிரான போருக்கான தயாரிப்புகள் வரை
கோடைகாலத்திற்குள்ளாக,
நிர்வாகம்,
துணை
ஜனாதிபதி ரிச்சர்ட் ஷென்னியின்
உரைகள் மற்றும் புஷ்ஷின் உரையினூடாகவுமே கூட,
தனது பொதுக் கவனத்தை
ஈராக்கிற்கு எதிரான போரை நோக்கி நகர்த்த ஆரம்பித்தது.
“உலகின்
எந்த இருண்ட மூலையிலும் தகவல் வந்த அடுத்த கணத்தில் தாக்குதல்
நடத்துமளவுக்கு இராணுவம் ஆயத்தமாக இருக்க வேண்டும்”
எனக் கோரும் ஒரு
முடிவில்லாத போர்க் கொள்கையை
வெஸ்ட்பாயிண்டில்
வழங்கிய ஒரு உரையில்
புஷ் சுருக்கமாய்க் கூறினார்.
அமெரிக்காவிற்கு எந்த அச்சுறுத்தலையும் முன்நிறுத்தியிராத,
செப்டம்பர்
11
தாக்குதல்களுக்கு
எந்தவிதத்திலும் தொடர்பில்லாத ஒரு மிகப் பலவீனமான நாடு ஒன்றின் மீது
மூர்க்கமாய் போர் தொடுப்பது என்கிற முடிவின் முன்கண்டிராதவொரு தன்மை,
அமெரிக்காவிற்கும் அதன்
கூட்டாளிகளுக்கும்,
ஒரு காரணத்தை
இட்டுக்கட்டுவதற்கான அவசியத்தை உருவாக்கியது. ஈராக்
“பேரழிவு
ஆயுதங்களை”
கொண்டிருந்ததாகவும்,
அவர் இந்த ஆயுதங்களை
அல்கொய்தாவுக்கு அல்லது மற்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு வழங்கக் கூடும்
என்பதான புனைவு,
இத்தனைக்கும்
ஹூசைனுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் ஆவேசமான குரோதம் இருந்தது
என்கிறபோதிலும் கூட,
உருவானது.
இந்த
மோசடியான கூற்றுகளை விளம்பரம் செய்வதில்,
நியூயோர்க் டைம்ஸ்
மற்றும் வாஷிங்டன் போஸ்ட் போன்ற முன்னணி நாளிதழ்கள் உள்ளிட்ட
அமெரிக்க
ஊடகங்களும்,
தாமஸ்
ஃப்ரீட்மான் போன்ற ஊடகவியலாளர்களும் அதிமுக்கியமானதொரு பாத்திரத்தை
ஆற்றினர். செனியின் உரைக்கு அடுத்த சில நாட்களிலெல்லாம்,
டைம்ஸ் ஜூடித் மில்லர்
இணைந்து எழுதிய ஒரு நீளமான அறிக்கையை வெளியிட்டது. ஈராக் அலுமினியக்
குழாய்களை வாங்கியிருந்தது என்றும் இவற்றிற்கெல்லாம் அணுவை பிரிப்பதற்கு (centrifuge)
மூலபாகங்களாய்
பயன்படுத்துவது என்பதைத் தவிர்த்து வேறு நோக்கமிருக்க முடியாது என்றும்
அந்த அறிக்கை திட்டவட்டமாய் தெரிவித்தது. இந்த மொத்த அறிக்கையுமே
பொய்யானதாகவும்,
போருக்குச் செல்வதென்கிற புஷ்ஷின் முடிவிற்கு பொதுமக்களின் கண்களில்
கூடுதலான நம்பகத்தன்மையைப் பெறுகின்ற பொருட்டு சி.ஐ.ஏ இனால் டைம்ஸ்
இதழுக்கு ஊட்டப்பட்டதாகவும் இருந்தது.
போரின் உண்மையான காரணங்களை பகுப்பாய்வு செய்த
WSWSம்
சோசலிச சமத்துவக் கட்சியும்
”பேரழிவு
ஆயுதங்கள்”
பற்றிய பொய்களை
அம்பலப்படுத்தியதோடு,
போர் ஆதரவு பிரச்சாரத்தைக் கண்டனம் செய்யும்
கூட்டங்களை நடத்தி
அறிக்கைகளை வெளியிட்டன. போருக்கு எதிரான போராட்டமென்பது
ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிராக தொழிலாள
வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல்ரீதியாய் அணிதிரட்டி ஜனநாயகக் கட்சிக்கு
எதிராக நடத்துகின்ற ஒரு போராட்டத்தின் மூலமாக முன்னெடுக்கப்பட வேண்டும்
என்பதை நாங்கள் விளக்கினோம்.
அக்டோபர் மாதத்தில் மிச்சிகனின் ஆன் ஆர்பரில் நடந்த ஒரு கூட்டத்தில் டேவிட்
நோர்த் ஒரு அறிக்கை வழங்கினார்.
“ஈராக்கிற்கு
எதிரான
போரும்
உலக
மேலாதிக்கத்திற்கான
அமெரிக்காவின்
செலுத்தமும்”
என்கிற
தலைப்பிலான இந்த அறிக்கை புஷ் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டிருந்த
“தேசிய
பாதுகாப்பு மூலோபாய”த்தை
பகுப்பாய்வு செய்தது. நோர்த் குறிப்பிட்டார்:
உலகின் எந்தப் பகுதியிலும் தான் தெரிந்தெடுக்கும் எந்தவொரு சமயத்திலும்,
அமெரிக்க நலன்களுக்கு
எதிராக இருப்பதாக தான் நம்புகிற அல்லது எதிர்காலத்தில் உருவாகக் கூடும்
என்று தான் கருதுகிற எந்தவொரு நாட்டிற்கும் எதிராகவும் இராணுவ வலிமையை
பயன்படுத்துவதற்கான உரிமையை அமெரிக்காவின் வழிகாட்டும் கொள்கையாக இந்த
ஆவணம் திட்டவட்டமாகக் காட்டுகிறது. நவீன வரலாற்றில்,
எந்தவொரு நாடும்,
ஹிட்லரின்
முட்டாள்த்தனம் உச்சத்தில் இருந்தபோதான நாஜி ஜேர்மனியும் கூட,
அமெரிக்கா இப்போது
செய்வதைப் போல உலகளாவிய செல்வாக்கிற்கு,
அல்லது இன்னும்
வெளிப்படையாகச் சொன்னால்,
உலக மேலாதிக்கத்திற்கு இப்படியொரு அப்பட்டமாக உரிமை கோரியதில்லை.
ஆக்கிரமிப்பு போரை நடத்திய நாஜி தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதான
(இப்போர் தான் பின்வந்த மற்ற அனைத்து குற்றங்களுக்கும் வேராக அமைந்ததாக
அமெரிக்காவின் இராபர்ட் ஜான்சன் உள்ளிட்ட வழக்கு தொடுத்தவர்கள் வாதிட்டனர்)
நூரெம்பேர்க் போர்க் குற்ற நீதிமன்றத்தையும் இந்த அறிக்கை ஆய்வு செய்தது.
அதே
மாதத்தின் பின்பகுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த கூட்டங்களில்,
சோசலிச
சமத்துவகட்சியின் தேசியச் செயலரான நிக் பீம்ஸ்
21
ஆம்
நூற்றாண்டில்
அமெரிக்க
இராணுவவாதத்தின்
அரசியல்
பொருளாதாரம்
என்கிற தலைப்பின் மீது ஒரு அறிக்கை வழங்கினார். போருக்கான உந்துதலுக்கு
பின்னால் அமைந்திருக்கும் விரிவான பொருளாதார மற்றும் வரலாற்று விளக்கத்தை
இது வழங்கியது.
புஷ்
நிர்வாகத்தின் போர் ஆதரவு பிரச்சாரம் ஒரு சிறிய மற்றும் அடிப்படையாக
தற்காத்துக் கொள்ள இயலாத ஒரு நாட்டிற்கு எதிராக அறிவிக்கப்படாத,
மற்றும் முன்
ஆத்திரமூட்டப்படாத ஒரு போரை நடத்த அமெரிக்க நாடாளுமன்றம் வரலாற்றுரீதியாக
ஆதரவளித்ததில் உச்சமடைந்தது.
இராணுவ
நடவடிக்கையை அங்கீகரித்து
ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் ஆகிய இரு கட்சியினருமே
வாக்களித்தனர். இருகட்சிகளின் ஒட்டுமொத்த நாடாளுமன்றத் தலைமையும்,
அத்துடன் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்படலாம் என்று
அனுமானிக்கப்பட்டவர்களும் இடம்பெற்றிருந்தனர்.
பிரிட்டனில் பிளேயரின்
தொழிற்கட்சி
அரசாங்கம் புஷ் நிர்வாகத்தின் வாதங்களை பவ்யமாக எதிரொலித்து ஒரு
சர்வதேச பார்வையாளர்கள் முன்பாக ஈராக்கிற்கு எதிரான போர் உந்துதலை
ஊக்குவிப்பதில் முக்கிய பாத்திரம் ஆற்றியது. ஆப்கானிஸ்தான் போரில்
பங்குபெற்றிருந்த பிரான்சும்
ஜேர்மனியும் ஈராக் மீது உத்தேசிக்கப்பட்ட தாக்குதலுக்கு ஆட்சேபம்
தெரிவித்தன. காரணம் சர்வதேசச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவது கீழிலிருந்து
புரட்சிகர எதிர்ப்புக்கு தூண்டுதலளித்து விடும் என்பதும்,
நாளுக்குநாள் அமெரிக்க ஏகாதிபத்தியம் வரம்பின்றி கட்டவிழ்த்து விடப்படுவது
தமது சொந்த நலன்களுக்கு அபாயமாகிக் கொண்டிருந்தது என்பதும் அந்நாடுகளின்
அச்சமாய் இருந்தது.
போரை
அங்கீகரிக்கும் காங்கிரஸின் வாக்கெடுப்புக்குப் பிறகு,
புஷ் நிர்வாகம்
ஈராக்கில் நீண்டகால இராணுவ ஆட்சியை ஸ்தாபிப்பதற்கான திட்டங்களை
வெளிப்படுத்தியது.
WSWS
ஆசிரியர்
குழு
வெளியிட்ட
ஒரு
அறிக்கை,
சில ஆண்டுகளுக்கு
முன்பு வரை அமெரிக்காவின் இராணுவ ஆதரவையும் இராஜதந்திர ஆதரவையும் பெற்று
வந்திருந்த ஹூசைன் ஆட்சியில் இருந்து
“விடுதலை
செய்வது”
என்னும்
பேரில் ஈராக்கிய மக்களின் ஜனநாயக உரிமைகளை கழுத்தை நெரிக்கின்ற காலனியத்தை
நோக்கிய பகிரங்க திருப்பம் என இதனை வருணித்தது.
ஈராக்
குறித்து நியூயோர்க் நகரில் நடந்த ஐ.நா. பொதுச்சபையில் புஷ்
உரையாற்றுகிறார்,
செப்டம்பர்
2002
மேலதிக
தகவல்கள்
4 June 2002
Bush speaks at West Point: from containment to "rollback"
2 September 2002
Cheney’s
brief for war: a mass of lies and historical falsifications
30
September 2002
ஈராக்கிய
ஆட்சியின்
எதிர்ப்பாளர்களும்
பாக்தாதில்
"ஆட்சி
மாற்றத்திற்கான"
அமெரிக்க திட்டங்களும்
பகுதி
I
1 October
2002
ஈராக்கிய
ஆட்சியின்
எதிர்ப்பாளர்களும்
பாக்தாதில்
"ஆட்சி
மாற்றத்திற்கான"
அமெரிக்க
திட்டங்களும்
பகுதி
II
11 October 2002
Why
the Democratic Party is backing Bush’s
war drive vs. Iraq
14 October 2002
US
plan for Iraq: Back to colonialism
போரும் ஜனநாயக
உரிமைகளும்
புஷ்
நிர்வாகம் தனது போர்த் திட்டங்களுக்கு வழியமைக்கும் பொருட்டு தனது பிரதான
எதிரியான,
அமெரிக்காவிலும்
சர்வதேச அளவிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின்,
எதிர்ப்பினைக் கடக்க
வேண்டியிருந்தது. பொதுமக்கள் கருத்தில் நெரிசலை உண்டாக்கத் தக்க
“பயங்கரவாத”
அச்சுறுத்தல்கள் மற்றும் அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்கான ஒடுக்குமுறை
நடவடிக்கைகள் ஆகியவற்றின் கலவையை இதற்காக அது பயன்படுத்தியது.
நூற்றுக்கணக்கான கைதிகள் மனிதாபிமானற்ற சூழலில் அடைத்து
வைக்கப்பட்டிருக்கும் கியூபாவின்,
குவாந்தானமோவில்
உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தில் அமைந்திருக்கும் சிறை அமைப்பை பெருமளவில்
விரிவுபடுத்துவது ஒரு முக்கியமான முடிவாக இருந்தது. முதலில்
ஆப்கானிஸ்தானில் பிடிக்கப்பட்ட கைதிகள் மட்டும் அங்கே வைக்கப்பட்டனர்,
பின் உலகெங்கிலும் இருந்து சி.ஐ.ஏ ஆலும் அதனுடன் தொடர்புபட்ட மற்ற உளவு
அமைப்புகளாலும் கொண்டு வரப்பட்ட மற்றவர்களும் (இவர்களில்
பெரும்பான்மையானோர் எந்தவித நம்பகமான ஆதாரங்களும் இன்றியே
கொண்டுவரப்பட்டவர்கள்) இவர்களுடன் சேர்க்கப்பட்டனர்.
தலிபான் உறுப்பினராக குற்றம் சாட்டப்பட்டு ஆப்கானிஸ்தானில்
பிடிக்கப்பட்டிருந்த
ஜான்
வாக்கர் லின்ட் என்கிற அமெரிக்க குடிமகன் மீது ஆயுள் தண்டனைக்கு
வழிவகுக்கக் கூடிய பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றப் பதிவு
செய்வதற்கு புஷ் நிர்வாகம் முனைந்தது. லின்டின் காயம்பட்ட நிலையில்,
எந்தவித தகவல்
பரிவர்த்தனைகளுக்கும் வசதி தரப்படாமல்,
ஒரு வழக்கறிஞருக்கான அணுகலும் கூட மறுக்கப்பட்ட நிலையில் இராணுவ
விசாரணையாளர்களுக்கு அவரே வழங்கிய சொந்த வாக்குமூலங்கள் தான் அவருக்கு
எதிரான பிரதான ஆதாரம். அமெரிக்காவின் ஆக்கிரோசத்தை உலகில் எவர்
எதிர்த்தாலும் அவர் கடுமையாக தண்டிக்கப்படுவார் என்பதை உலகிற்கு
அறிவிக்கும் பொருட்டான ஒரு கடுமையான தண்டனையாக இது முன்னுதாரணம் பெற
வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக இருந்தது.
வாஷிங்டன் டிசி மீது ஒரு பயங்கரவாத அணு ஆயுதத் தாக்குதல் நிகழும்பட்சத்தில்
இராணுவச் சட்ட நிலைமைகளின் கீழ் அதிகாரத்தைக் கையிலெடுத்துச் செயல்படுகின்ற
வகையில் நூற்றுக்கணக்கான அதிகாரிகளைக் கொண்ட ஒரு
“நிழல்
அரசாங்க”த்தை
புஷ் நிர்வாகம்
உருவாக்கியிருந்ததென மார்ச்சில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த
திட்டத்தின் மிக முக்கியமான அம்சமாக இருந்தது என்னவென்றால் இந்த இரகசிய
அரசாங்கத்தில் முழுக்க முழுக்க நிர்வாக அதிகாரிகள் மட்டுமே இருந்தனர்.
சட்டத் துறை அல்லது நீதித் துறையின் பிரிவுகள் இல்லை,
அல்லது நாடாளுமன்றத்திற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவர்களும் இல்லை
அல்லது ஜனாதிபதி பதவிக்கு அரசியல்சட்ட ரீதியாக வர வாய்ப்பிருந்தவர்களுக்கு
இப்படியொரு திட்டம் இருந்தது பற்றிய செய்தி கூட தெரிவிக்கப்படவில்லை.
இதனிடையே,
செப்டம்பர்
11
தாக்குதல்களுக்கு சில
வாரங்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்டிருந்த தேசப்பற்று சட்டத்தின் கீழ்
போலிஸ் அதிகாரங்கள் மிகப் பெருமளவில் விரிவுபடுத்தப்பட்டன. புலம் பெயர்ந்த
மக்களது,
குறிப்பாக மத்திய கிழக்கு
மற்றும் மத்திய ஆசியப் பகுதியைச் சேர்ந்த
முஸ்லீம்களது
உரிமைகள்
தாக்கப்பட்டன. செப்டம்பர்
11
தாக்குதல்களுக்குப் பிந்தைய
மாதங்களில் இவர்களில்
1,000க்கும்
அதிகமானோர் வலைவீசித் தேடி கொண்டுவரப்பட்டனர்.
ஜோஸ்
பாடில்லா மற்றும்
யாசர்
எசாம் ஹம்தி ஆகிய இரண்டு அமெரிக்க குடிமக்கள் அவர்களது ஆட்கொணர்வு
உரிமைகளை அப்பட்டமாக மீறிய வகையில் காலவரையின்றி தடுத்து
வைக்கப்பட்டிருந்தனர். பல பத்து தனித்தனி போலிஸ் முகமைகளை மிகப்பெரும்
தாயகப்
பாதுகாப்புத் துறை என்கிற ஒரே அமைப்புக்குள் உறுதிப்படுத்த தான்
முனைந்து கொண்டிருப்பதாக ஜூன் மாதத்தில் புஷ் அறிவித்தார்.
செப்டம்பர்
11
முதலாமாண்டு நினைவு தினத்தில்,
WSWS ஆசிரியர் குழு
விடுத்த
ஒரு
அறிக்கை
அறிவித்தது:
வெறும் ஒரு ஆண்டு இடைவெளிக்குள்ளாக,
நாட்டின் வரலாற்றில்
காணாத அளவுக்கு ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு மிகப் பெரும் தாக்குதலை இந்த
நிர்வாகம் நடத்தி விட்டிருக்கிறது. இதில் போலிஸ் அதிகாரங்களை
அதிகப்படுத்துவது என்பது மட்டும் சம்பந்தப்படவில்லை,
மாறாக அமெரிக்கப்
புரட்சி காலத்தில் ஆரம்பித்து கொடுங்கோன்மைக்கு எதிராக வென்றெடுத்த
அரசியல்சட்ட பாதுகாப்புகளைக் கழற்றி விடுவதும் அடங்கியிருக்கிறது.
அரசாங்கம் என்பதன் அடிப்படையான கட்டமைப்பே தீவிரமாக மாற்றப்பட்டுக்
கொண்டிருக்கிறது,
இது நிர்வாகம்,
சட்டம் மற்றும்
நீதித்துறை ஆகிய அதன் மூன்று பிரிவுகளுக்கு இடையிலான உறவை மட்டுமன்றி,
மக்களுக்கும் மற்றும் போலிஸ் மற்றும் இராணுவம் ஆகிய ஆயுதமேந்திய
சக்திகளுக்கும் இடையிலான உறவையும் கூட உருமாற்றிக் கொண்டிருக்கிறது.
குவாந்தனாமோ சிறையின் எக்ஸ்-ரே
முகாமில் கைதிகள்
மேலதிக
தகவல்கள்
4 March
2002
சர்வாதிகாரத்தின்
நிழல்:
செப்டம்பர்
11க்குப்
பின்னர்
புஷ்
இரகசிய
அரசாங்கத்தை
நிறுவினார்
7 October 2002
WSWS
interview with defense attorney
John Walker Lindh sentenced to 20 years
ஐரோப்பா
மற்றும் அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் நெருக்கடி
ஏகாதிபத்தியப் போரும்,
அத்துடன் கைகோர்த்து
நிகழ்ந்த அரசு ஒடுக்குமுறையும் தான் உலக அரசியலின் பிரதான அச்சாக இருந்த
அதே நேரத்தில்,
அமெரிக்காவிலும்
ஐரோப்பாவிலும் ஆழமடைந்து கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின் மீதும்
WSWS
கவனத்தைக்
குவித்தது.
டிசம்பரில் என்ரோனின் நிலைக்குலைவைத் தொடர்ந்து அமெரிக்காவில் திவால்
சம்பவங்கள் மற்றும் பெருநிறுவன ஊழல் மோசடிகளின் ஒரு அலை பின் தொடந்து
வந்தது. இது அமெரிக்க முதலாளித்துவத்தின் இருதயத்தானத்தில் இருந்து அழுகலை
அம்பலப்படுத்தியது. பங்குச் சந்தையும் அதிகரிக்கும் பங்கு மதிப்புகளும்
ஆளும் வர்க்கம் செல்வத்தைக் குவிப்பதற்கு உதவிய பிரதான பொறிமுறையாக இருந்த
நிதிமயமாக்கம்,
அமெரிக்கப்
பொருளாதாரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றதில் தான் இந்த எரிசக்தி
நிறுவனத்தின் வீழ்ச்சிக்கான காரணம் இருந்தது என்பதை
WSWS
விளக்கியது.
இந்த நிதிமயமாக்க நிகழ்முறையில்,
பெருநிறுவன
உயரடுக்கினர் ஒரு பெரும் கொள்ளையில் ஈடுபட்டனர். இதில் என்ரோன்
கலிபோர்னியாவில்
பில்லியன்கணக்கான டாலர்களைத் திருடியதென்பது
ஒரேயொரு உதாரணம் மட்டுமே.
என்ரோனுக்கும் அரசியல் ஸ்தாபகத்திற்கும் இடையிலிருந்த ஆழமான தொடர்புகளை
WSWS
பகுப்பாய்வு செய்தது.
என்ரோனும் புஷ் நிர்வாகமும்
“மோசடியிலும்
குற்றவியல்
தன்மையிலும்
ஒரே
குணம்
படைத்தவையே”.
மற்ற எதனை விடவும் ஈராக்கிய எண்ணெய் வயல்களைக் குறித்து விவாதிப்பதற்கெனவே
துணை ஜனாதிபதி டிக் ஷென்னியால் அமைக்கப்பட்டிருந்த இரகசியமான எரிசக்தி
செயற்படையில் என்ரோனின் உயர் நிர்வாகி கென்னத் லே செயலூக்கத்துடன்
பங்குபற்றியிருந்தார்.
என்ரோனுக்குப் பிறகு,
பல நிறுவனங்களில்
பெருநிறுவன ஊழல் மோசடிகள் தொடர்ச்சியாக வெளிவந்தன.
WorldCom, Tyco, Xerox
உள்ளிட்ட பல
நிறுவனங்கள் கணக்குகளில் முறைகேடு செய்ததன் மூலம் தமது பங்கின் விலைகளை
உயர்த்தி நிறுத்துவதற்கு முனைந்திருந்தன.
Kmart , USAir
உள்ளிட்ட பிற பெருநிறுவன முதலைகள் திவால்நிலைக்கு தாக்கல் செய்தன. இது
ஆயிரக்கணக்கான வேலைகள் அழிக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது.
ஐரோப்பாவில் அந்த ஆண்டு யூரோ நாணயமதிப்பின் அறிமுகத்துடன் தொடங்கியது.
முக்கியமாக கிரேட் பிரிட்டன்,
டென்மார்க் மற்றும்
ஸ்வீடன் ஆகிய நாடுகள் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தின்
15
நாடுகளில்
12
நாடுகளுக்கான
பொது நாணயமதிப்பாக இது அறிமுகமானது.
பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலரான கிறிஸ் மார்ஸ்டென்
அளித்த
ஒரு
ஆய்வு,
யூரோ விடயத்தில் முதலாளித்துவ வர்க்கத்திற்குள் இருந்த ஆழமான பிளவுகளை
குறிப்பிட்டுக் காட்டியது. தொழிலாள வர்க்கம் யூரோவுக்கு ஆதரவான அல்லது
யூரோவுக்கு எதிரான கன்னைகளின் பின்னால் அணிதிரள முடியாது என்று அது
எச்சரித்தது. முதலாளித்துவ ஐரோப்பாவிற்குள்ளான வர்க்க மற்றும் தேசியப்
பிரிவினைகளை யூரோ தீர்க்காது மாறாக கூர்மைப்படுத்தும்.
ஒரு
பொதுவான நாணயமதிப்பை உருவாக்குதல் மட்டுமே கண்டமெங்கும் ஒத்திசைவான
பொருளாதார வாழ்க்கை அபிவிருத்தி காண்பதற்கான அடிப்படையை வழங்கி விடாது.
பூகோளரீதியாக ஒருங்கிணைக்கிப்பட்ட உற்பத்திக்கும் முரண்பாடான தேசிய
அரசுகளாக உலகம் பிரிக்கப்பட்டுள்ளமைக்கும் இடையிலான அடிப்படை மோதலைத்
தீர்க்கும் திறன் முதலாளித்துவ வர்க்கத்திற்கு இயல்பாகவே இல்லை. இதற்கு
மாறாக,
ஒரே ஐரோப்பியச் சந்தை
என்கிற கட்டமைப்பிற்குள்ளாக,
கண்டத்தின் மேலாதிக்கத்திற்காக ஐரோப்பாவின் போட்டி சக்திகள் இடையிலான
போட்டி தொடரும் இன்னும் ஆழமடையும்....
இந்த
புள்ளியில் ஜேர்மனி,
பிரான்ஸ் மற்றும்
10
பிற அரசுகளை ஒன்றாக
இணைத்திருப்பது என்ன என்றால்,
அமெரிக்காவிற்கு எதிரான வர்த்தகப் போருக்கும் ஐரோப்பிய தொழிலாள
வர்க்கத்திற்கு எதிராக சமூக மற்றும் பொருளாதாரத் தாக்குதலைப்
பின்பற்றுவதற்குமான ஒரு கூட்டு மூலோபாயத்தை வரையும் பொருட்டு தான்.
இந்தத் தாக்குதலின் ஒரு கவனப் புள்ளியாக இத்தாலி அமைந்திருந்தது. இங்கு ஊடக
அதிபரான பில்லியனர் சில்வியோ பெர்லுஸ்கோனி
2001
மே மாதத்தில் பதவிக்கு
வந்திருந்தார். தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சமூக நலன்கள் மீது பெரும்
தாக்குதலை அமுல்படுத்தவும் தொடங்கியிருந்தார். மார்ச்
23
அன்று
போருக்குப் பிந்தைய ஐரோப்பிய வரலாற்றின் மிகப் பெரிய மக்கள்
ஆர்ப்பாட்டங்களில் ஒன்று என்று கூறத்தக்க ஒரு ஆர்ப்பாட்டம் ரோமில்
நடைபெற்றது. இதில் சுமார் மூன்று மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர்.
இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஸ்ராலினிஸ்டுகளது இரண்டு
கன்னைகளையுமே கொண்டிருந்த ஆலிவ் மர கூட்டணி என்று அழைக்கப்படுவதான ஒரு
அரசியல் கூட்டணியின் காட்டிக் கொடுப்புகளில் இருந்தே பெர்லுஸ்கோனி
அதிகாரத்தைக் கைப்பற்றியமை நிகழ்ந்தது என அனைத்துலகக் குழுவின் செயலரான
பீட்டர் சுவார்ட்ஸ்
விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து,
பெர்லுஸ்கோனியின்
அரசாங்கம்,
அவரது சொந்த அரசியல்
கட்சியான
Forza Italia
ஆகியவற்றின் மீதான ஒரு
விரிவான பகுப்பாய்வும்,
அத்துடன்
இத்தாலிய
தொழிலாள வர்க்கத்தின்
போராட்டங்கள் குறித்த மேலதிக செய்திகளும் இடம்பெற்றன.
ஜேர்மனியில்,
தொழிலாள வர்க்கத்தின்
வாழ்க்கைத் தரங்களில் ஒரு பெரும் குறைப்பைத் அமுல்படுத்துவதற்கு
முதலாளிகளிடம் இருந்து வந்த கோரிக்கையை சமூக ஜனநாயகத்தினரும் தொழிற்சங்க
அதிகாரத்துவமும் திணித்தனர். மார்ச்சில் நடந்த
உருக்குத்
தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
போன்ற தொழிலாள வர்க்கத்தின் பெரும் போராட்டங்களுக்கு குழிபறிக்க
தொழிற்சங்கங்கள் வேலை செய்தன.
தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் மீது ஒரு முற்றுமுதலான
தாக்குதலுக்கு நெம்புகோலாக செயல்படத்தக்க ஒரு பெரும் மலிவு ஊதியத் துறையை
உருவாக்கும் நோக்கத்துடன் சமூக நலத்திட்டங்கள் மற்றும் தொழிலாளர் சந்தையில்
ஒரு
“சீர்திருத்த”த்தினை
வரைவு செய்வதற்கு வோல்க்ஸ்வேகன் மேலாளர்
பீட்டர்
ஹார்ட்ஸின்
கீழ் ஒரு குழுவை சமூக ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பசுமைக் கட்சியினரது
கூட்டணி அரசாங்கம் நியமனம் செய்தது. இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில்
கூட்டணி அரசாங்கம் பெரும் முதலாளிகளின் ஆதரவை பெற்றுக்கொண்டு
இரண்டாம் தரம் செப்டம்பர் மாதம் தேர்தலில் வெற்றி பெற்றது.
2002
ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில்,
ஊதியம் மற்றும் வேலை
நிலைமைகள் தொடர்பாக
தீயணைப்புத்
துறை ஊழியர்களின் வேலைநிறுத்தங்களை
பிரதமர் டோனி பிளேர் தலைமையிலான தொழிற்கட்சி அரசாங்கம் கண்டனம் செய்தது.
தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒரு அடுக்கிற்கு (இவர்களில் பலரும் தொழிற்கட்சியை
சோசலிசத்துக்கு “மீண்டும்
வென்றெடுக்க”
போராடுவதாக கூறிக் கொண்ட
சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சி போன்ற போலி-இடது
குழுக்களில் இருந்து வந்திருந்தனர்) இந்தப் பிரச்சினை முதல் சோதனையாக
அமைந்தது.
இந்தத்
தலைவர்களையும் அவர்கள் மீதான பிரமைகளை ஊக்குவிக்க முனைந்தவர்களையும்
WSWS
அம்பலப்படுத்தியது. இந்த விமர்சனம் விரைவாக ஊர்ஜிதமானது. தீயணைப்புத் துறை
ஊழியர்களது தொழிற்சங்கம் இந்த வேலைநிறுத்தங்களைக் கைவிட்டு முதலாளிகளுடன்
பேச்சுவார்த்தையில் நுழைந்தது. சுதந்திரமான திறனாய்வு என்று
அழைக்கப்பட்டதான ஒன்று சில தீயணைப்புத் துறை சேவைகளை
தனியார்மயமாக்குவதற்குப் பரிந்துரை செய்தது.
என்ரோன்
சர்வதேசத் தலைமையகம்
மேலதிக
தகவல்கள்
8 January
2002
ஈரோ
தொழிலாள
வர்க்கத்திற்கு
எதை அர்த்தப்படுத்துகிறது?
29
January 2002
என்ரோன்
பொறிவும்
இலாப
அமைப்பின் நெருக்கடியும்
15 April 2002
A
portrait of Italy’s
Berlusconi government: "All for One, and One for Himself"
Berlusconi’s
Forza Italia: Part 1
16 April 2002
A portrait of Italy’s
Berlusconi government: "All for One, and One for Himself"
Berlusconi’s
Forza Italia: Part 2
9 July 2002
The Hartz Commission proposals
German SPD election campaign attacks jobless and welfare benefits
23 November 2002
The political issues raised by
Britain’s
firefighters strike
உலக சோசலிச
வலைத் தளமும் பிரெஞ்சுத் தேர்தல்களும்
பிரான்சில் நடைபெற்ற பொதுத் தேர்தல் ஐரோப்பாவின் மையமான அரசியல்
அபிவிருத்தியாகவும்,
WSWS முக்கியமான
தலையீடு செய்த ஒரு நிகழ்வாகவும் இருந்தது. இத்தேர்தல் நான்கு கட்டங்களாக
நடைபெற்றது: ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பின் இரண்டு சுற்றுகள்
2002
ஆம் ஆண்டு ஏப்ரல்
21
மற்றும் மே
5
அன்று நடந்தது,
அடுத்த ஒரு மாதத்தின் பின் நாடாளுமன்ற இடங்களுக்கான இரண்டு சுற்று
வாக்கெடுப்பு நடந்தது.
தேர்தல் பிரச்சாரத்தின் சமயத்தில்,
பிரான்சில் ஒரு
பிளவுபட்ட அரசாங்கம் இருந்தது.
1995
இல் தேர்ந்தெடுக்கப்பட்டு வலது
சாரி கோலிஸ்ட் ஜாக் சிராக் ஜனாதிபதியாக இருந்தார். நாடாளுமன்றத்திலோ
1997
இல் தேர்ந்தெடுக்கப்பட்டு
பிரதமர் லயனல் ஜொஸ்பன் தலைமையிலான சோசலிஸ்ட் கட்சி தான் பெரும்பான்மை
கொண்டிருந்தது. சகவாழ்வு (cohabitation)
என்று வருணிக்கப்பட்ட
இந்த அதிகாரப் பகிர்வு,
சிராக்கிடம் அயலுறவு
மற்றும் இராணுவக் கொள்கையினை விட்டிருந்தது. ஜொஸ்பின் மந்திரிசபையிடம்
உள்நாட்டுக் கொள்கை ஒப்படைக்கப்பட்டிருந்தது,
பிரெஞ்சுத் தொழிலாளர்கள் ஐரோப்பா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வந்த
தனியார்மயமாக்கம் மற்றும் ஆட்குறைப்பு வேலைத்திட்டத்துடன்
அடையாளப்படுத்திக் காணத்தக்கதாக இந்த மந்திரிசபை இருந்தது.
சிராக் தொழிலாள வர்க்கத்தால் பரவலாக வெறுக்கப்பட்டார்,
அவரை மறுதேர்வு செய்ய
முயற்சி நிகழ்ந்தமை ஒரு அபாயமாக பார்க்கப்பட்டது என்கிற அதேநேரத்தில்
ஜொஸ்பனும் சோசலிஸ்ட் கட்சியும் எந்தவித மாற்றையும் வழங்கவில்லை.
நவ-பாசிசவாத தேசிய முன்னணியின் வேட்பாளரான அதி-வலதுசாரி ஜீன் மேரி லு பென்
தான் ஆள்வோரின் கருத்தொற்றுமைக்கு எதிரான ஒரே முக்கியமான வேட்பாளராக
தன்னைக் காட்டிக் கொள்ள முடிந்தது. மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள்
வாக்களிக்கவில்லை,
சோசலிஸ்ட் கட்சி
மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தமக்கான ஆதரவை
“அதி
இடது”
கட்சிகளின் வேட்பாளர்களிடம்
இழந்திருந்தன. அந்த வேட்பாளார்கள்
11
சதவீத வாக்குகளை,
அதாவது சுமார் மூன்று மில்லியன் வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
தேர்தலின்
முதல் சுற்றில்
சிராக் 20
சதவீதத்துக்கும் அதிகமான
வாக்குகளுடன் முதலிடத்தைப் பெற்று விட்டிருந்தார் -இது அவரின்
மதிப்பிழப்பிற்கு ஒரு அளவீடாக இருந்தது- ஆனால் எதிர்பாராவிதமாக ஜொஸ்பின்
இரண்டாவது இடத்தைப் பெறத் தவறி இறுதிப் போட்டிக்கான தகுதியை லு பென்னிடம்
இழந்து விட்டிருந்தார். இதனால் மே
5
அன்று நடைபெறுவதாக இருந்த
தேர்தலில் சிராக்கா அல்லது லு பென்னா என வாக்காளர்கள் தெரிவு செய்ய வேண்டிய
நிலை தோன்றியிருந்தது. இருவரும் சேர்ந்தே வாக்களிக்கத் தகுதியுடையோரில்
கால்வாசிக்கும் குறைவானோரின் ஆதரவையே பெற்றிருந்த வலதுசாரி வேட்பாளர்களாக
இருந்தனர். நூறாயிரக்கணக்கிலான தொழிலாளர்களும் இளைஞர்களும் பாசிஸ்டுகளை
நோக்கிய தங்களது வெறுப்பையும்,
லு பென் அதிகாரத்துக்கு வருவது குறித்த தமது கவலையையும் வெளிப்படுத்தும்
முகமாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முதல்
சுற்று முடிவுகளுக்கான பதிலிறுப்பாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு
ஒரு
அறிக்கை
விடுத்தது. “தேர்தல்
மோசடிக்கான அங்கீகாரத்தை மறுக்கவும் வெகுஜன அதிருப்தியை தாக்கம்மிக்க
நடவடிக்கையாக மாற்றுவதற்கான வழிவகையை வழங்கவும்”
தொழிலாள வர்க்கம் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பை புறக்கணிக்க
வேண்டும் என்று அந்த அறிக்கை அழைப்பு விடுத்தது.
நவ-பாசிசவாதியான லு பென் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டுமென்றால்
சிராக்குக்கு வாக்களிப்பது அவசியம் என்று தொழிற்சங்கங்கள்,
சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன கூறியதை நான்காம்
அகிலத்தின் அனைத்துலக்குழு நிராகரித்தது. உண்மையில் இவை தான் லு பென்னின்
வாக்குகள் அதிகரிப்புக்கு பொறுப்பானவை ஆகும். ஒரு காலத்தில் சோசலிஸ்ட்
கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டைகளாக இருந்த முன்னாள்
தொழிற்துறை தொழிலாள வர்க்கப் பகுதிகளில் தான் லு பென்னுக்கு வாக்குகள்
அதிகம் கிடைத்திருந்தது.
தேசிய
முன்னணி முன்வைத்துள்ள உண்மையான அபாயங்கள் இருந்தன என்றபோதிலும்
சிராக்குக்கு வாக்களிப்பதன் மூலமாக இவற்றைத் தவிர்த்து விட முடியாது என்று
அந்த அறிக்கை வாதிட்டது. கோலிச வலது மற்றும் சமூக ஜனநாயக
”இடது”
உள்ளிட்ட முதலாளித்துவ அரசியலின் மொத்த கட்டமைப்பிலுமே இருந்த
நம்பிக்கையில் நெருக்கடி உருவாகியிருந்ததை தேர்தல் முடிவுகள் காட்டின.
தொழிலாள வர்க்கம் ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கினை முன்வைப்பது
அவசியமாயிருந்தது.
தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தெளிவுபடலை ஆரம்பிக்க சோசலிஸ்ட் மற்றும்
கம்யூனிஸ்ட் கட்சிகளின் துரோகத்தினால் உருவான நோக்குநிலைபிறழ்வை
எதிர்கொள்வதற்கு தேர்தல்
புறக்கணிப்பு
அவசியமாக இருக்கிறது. தேர்தல் முடிவுகளில் கோபத்தில் கொதித்து நிற்கும்
தொழிலாளர்கள்,
மாணவர்கள் மற்றும்
புத்திஜீவிகள் தனிமைப்படும்படி விடப்படுவதோ,
அல்லது இன்னும் மோசமாக,
தொழிலாள வர்க்கத்தின்
மீது தாக்குதல் நடத்துவதற்கு உறுதிப்பாடு கொண்டதொரு அரசாங்கத்தை
தேர்ந்தெடுப்பதில் உதவும் வகையில் ஒன்றுபடும்படி விடப்படுவதோ முடியாது.
புறக்கணிப்பை,
ஆர்ப்பாட்டங்களை மற்றும் அரசியல் வேலைநிறுத்தங்களை ஊக்குவிக்கும்
கூட்டங்களை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட ஒரு செயலூக்கமான கொள்கை அவசியமாக
இருக்கிறது. சிராக்கிற்கு வாக்களிப்பது தான் தேசியக் கூட்டணியைத்
தோற்கடிப்பதற்கான ஒரே வழி என்று கூறுபவர்கள் தமது சொந்த முடக்கநிலையையும்
அவநம்பிக்கையையும் வெளிக்காட்டி நிற்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.
ஜனநாயகத்தின் காவலனாக ஒரு சித்திரத்தைக் காட்டும் ஒரு அரசியல் ஸ்தாபகம்
உண்மையில் தனது தளர்ச்சியை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் பெரும் வலது-சாரி பெரும்பான்மையினரின் ஆதரவுடன்
அமர்ந்திருக்கிற ஒரு வலது-சாரி ஜனாதிபதி என்கிற முதலாளித்துவ
வர்க்கத்திற்கு மிகவும் விருப்பமானதொரு முடிவு தான் சிராக்கிற்கான
“இடது”
ஆதரவின் அநேக விளைவாக இருக்கும் என்று அந்த அறிக்கை எச்சரித்தது. அது
பின்வருமாறு முடித்தது:
தொழிலாள வர்க்கமானது,
லு பென்னினால்
ஊக்கமளிக்கப்பட்டு இடது என்றழைக்கப்படுவதன் பெரும் பகுதிகளாலும்
எதிரொலிக்கப்படுகின்ற தேசிய வெறி,
வெளிநாட்டவரு மீதான எதிர்ப்பு மற்றும் சுயகாப்புவாதம் ஆகியவற்றுக்கு எதிராக
வாழ்க்கைத் தரங்களையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாத்து ஐரோப்பா எங்கும்
நடக்கின்ற தொழிலாளர் போராட்டங்களை ஐக்கியப்படுத்துகின்ற தனது சொந்த சர்வதேச
வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். நாடுகடந்த நிறுவனங்களின் ஒரே
ஐரோப்பியச் சந்தை என்கிற திட்டத்திற்கு தொழிலாளர்கள் கொண்டிருக்கிற
மாற்றீடு ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் என்பதற்கான போராட்டமே.
பிரான்சின் அரசியல் நெருக்கடி ஐரோப்பிய மற்றும் சர்வதேச கவனத்திற்கான
மையப்புள்ளியாக ஆகியமையால்,
ஒரு காலத்தில்
ட்ரொட்ஸ்கிசக் கட்சிகளாகக் கூறிக்கொண்ட மூன்று
“இடது”
கட்சிகளான
Lutte Ouvrière
(LO), Ligue Communiste Révolutionnaire
(LCR), மற்றும்
Parti des Travailleurs
(PT) ஆகியவற்றின்
பாத்திரமும் அதிமுக்கியமாகியது. தேர்தல் புறக்கணிப்புக்கான தொழிலாள
வர்க்கத்தின் பிரச்சாரத்தில் இணைந்து கொள்வதற்கு இக்கட்சிகளை அழைக்கும்
ஒரு
பகிரங்க கடிதத்தை
விநியோகித்த நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு,
இக்கட்சிகளுக்கு அவ்வாறான எண்ணமெதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை என்பதையும்
இந்த அமைப்புகளுக்கு வாக்களித்தோரிடம் எச்சரித்தது.
இறுதிக்கட்ட தேர்தலை புறக்கணிக்கக் கோரும் அறிக்கையை பாரிஸ் மற்றும் பிற
நகரங்களில் நடந்த மேதின ஆர்ப்பாட்டங்களின் போது நான்காம் அகிலத்தின்
அனைத்துலக்குழுவின் ஆதரவாளர்கள் பரவலாக விநியோகித்தனர். அந்தத் தருணத்திலான
அரசியல் நிகழ்வுகள் குறித்து செய்தியளிப்பதற்காக நான்காம் அகிலத்தின்
அனைத்துலக்குழுவின் செயலாளரான பீட்டர் சுவார்ட்சும்,
WSWS
இன் கலைப் பிரிவு ஆசிரியர் டேவிட் வால்ஷும் பாரிசுக்கு
வந்தனர்.
தேர்தலின் முதல் சுற்றுக்கும் இரண்டாம் சுற்றுக்கும் இடையிலான இரண்டு
வாரகால இடைவெளியில்,
ஏராளமான களச்
செய்திகளையும் பிரெஞ்சு நெருக்கடி குறித்த கட்டுரைகளையும்
WSWS
வெளியிட்டது.
Lutte Ouvrère
(LO) இன் ஜனாதிபதி
வேட்பாளரான
ஆர்லெட்
லாகியே, Ligue
Communiste Révolutionnaire
(LCR)
இன் ஜனாதிபதி வேட்பாளரான
ஒலிவியே
பெசன்சனோ மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாரான
ரொபேர்ட்
ஹியூ ஆகியோருடனான நேர்காணல்களும் இதில் அடக்கம்.
தொழிற்சாலைத் தொழிலாளர்கள் மற்றும்
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்,
Young Communists Movement
ஆகியவற்றின் சாமானிய உறுப்பினர்கள் ஆகியோரிடம் எமது செய்தியாளர்கள்
விவாதங்கள் நடத்தினர். பிரான்சில் தொழிலாள வர்க்கம் முகம் கொடுக்கும்
நடவடிக்கைப் பாதை குறித்து கடிதங்களும் அன்றாட கருத்து எதிர்விவாதங்களும்
நிகழ்ந்தன.
போலி-இடது கட்சிகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு முன்வைத்த தேர்தல்
புறக்கணிப்பை நிராகரித்தன அல்லது உதாசீனம் செய்தன. அவை சிராக்கை பகிரங்கமாக
ஆதரித்தன,
அல்லது சோசலிச கட்சி,
கம்யூனிஸ்ட் கட்சி
மற்றும் தொழிற்சங்கங்களது சிராக்-ஆதரவு பிரச்சாரத்தில் இருந்து அடிப்படையாக
ஒதுங்கிக் கொண்டன/சவால் செய்ய மறுத்தன. இறுதிக் கட்டத் தேர்தலில் வலது-சாரி
வேட்பாளர் பெரும் வித்தியாசத்தில்,
அதாவது
80
சதவீதத்துக்கும் அதிகமான
வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கும்,
அத்துடன் ஜூன்
மாதத்தில் நடந்த
நாடாளுமன்றத்
தேர்தலிலும்
அவர்கள் வெற்றி கொள்வதற்கும் இது உதவியது.
WSWS
மற்றும்
ICFI
எச்சரித்திருந்ததைப் போலவே,
தேர்தலுக்குப்
பின் அமைந்த சிராக் அரசாங்கம்
உழைக்கும் வெகுஜன மக்களுக்கு எதிரான தனது பிற்போக்குத்தனமான சிக்கன
நடவடிக்கைக் கொள்கைகளையும் புலம் பெயர்ந்தவர்கள் மீதான இனவெறித்
தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியது.
லு
பென்னுக்கு எதிராக தொழிலாளர்களும் இளைஞர்களும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்,
மே
2002
மேலதிக
தகவல்கள்
27 April
2002
பிரெஞ்சு
ஜனாதிபதி
தேர்தல்:
புள்ளிவிவரங்கள் என்ன
கூறுகின்றன
29 April
2002
பிரெஞ்சு
ஜனாதிபதி
தேர்தலை தொழிலாள
வர்க்கம்
புறக்கணிப்பதற்காக
சிராக்கையும்
லு
பென்னையும்
நிராகரி!
2 May 2002
பிரான்சில்
மேதினம்:
நவபாசிச
லு பெனுக்கு
எதிராக
பதினைந்து
இலட்சம்
பேர்
அணிவகுப்பு
11 June
2002
பிரெஞ்சு
பாராளுமன்ற
தேர்தலில்
வலதுசாரி
உறுதியான
பெரும்பான்மையைப்
பெற்றது
வாக்களிக்க
செல்லாமையின்
அளவு
மக்களின்
அதிருப்தியைப்
பிரதிபலிக்கிறது
15 June
2002
பிரெஞ்சு
கம்யூனிஸ்ட்
கட்சியின்
பொதுச்
செயலாளர்
றொபேர்ட்
ஹியூவுடன்
ஒரு
நேர்காணல்
ஏனைய அரசியல்
நிகழ்வுகள்
அந்த
ஆண்டு முழுவதிலும்,
WSWS
ஒவ்வொரு கண்டத்திலுமான பல்தரப்பட்ட அரசியல் அபிவிருத்திகளை
பகுப்பாய்வு செய்து கருத்துகளை வெளியிட்டது.
பெப்ரவரியில்,
முன்னாள் சேர்பிய
ஜனாதிபதியான ஸ்லோபோடன் மிலோசெவிக் முன்னாள் யூகோசுலாவியாவிற்காக சர்வதேச
குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக ஆஜரானார். இதுதொடர்பாக
மூன்று
பாகத் தொடராக வந்த கட்டுரை,
யூகோசுலாவியாவில் நடந்த இரத்த வெள்ளத்திற்கு மிலோசெவிக் தான் சகல
பொறுப்பாளி என்பதான கூற்றுகளை தூக்கியெறிந்தது. இந்நாட்டினை உடைப்பதில்
மேற்கத்திய சக்திகள் ஆற்றிய பாத்திரத்தை மறைப்பதாக அக்கூற்றுகள்
அமைந்திருந்தன.
அத்துடன்,
பெப்ரவரி மாதத்தில்,
இலங்கையில் ஐக்கிய
தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள்
(LTTE)
அமைப்புடன் ஒரு
முறைப்படியான
போர்-நிறுத்தத்தில்
கையெழுத்திட்டது. போரையும் அது இந்திய துணைக்கண்டத்தில் உருவாக்குகின்ற
ஸ்திரம் குலைக்கும் செல்வாக்கையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய சக்திகள் கடும் நெருக்குதல் கொடுத்திருந்தன
என்பதையும்,
ஆனால் இந்த ஒப்பந்தம்
உறுதியற்றதாகவும் எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவியலாததாகவும் இருந்தது
எனப்தையும் WSWS
விளக்கியது.
அடிப்படை ஜனநாயக உரிமைகளைத் தளர்ச்சியின்றி பாதுகாப்பதன்
பகுதியாகவும்,
தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்களின் ஐக்கியத்தின் பொருட்டும்,
இலங்கையின் சோசலிச சமத்துவக்கட்சி,
நாட்டின் படுபயங்கரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகால
நெறிமுறைகளின் கீழ் தடுத்து க்கப்பட்டிருந்த சுமார்
1,000
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரும்
ஒரு
பிரச்சாரத்தை
நடத்தியது.
அதே
மாதத்தில்
குஜராத்தில்
இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டிலான மாநில
அரசாங்கத்தின் ஆதரவுடன் நடந்த பல தசாப்தங்களின் மிக மோசமானதொரு மதவாத
வன்முறையில் 800க்கும்
அதிகமான முஸ்லீம்களின் உயிர்கள் பலியாகின. இந்தத் துயர சம்பவத்திற்கான
பொறுப்பு பாரதிய ஜனதாக் கட்சிக்கு மட்டும் அல்ல,
காங்கிரஸ் கட்சி
மற்றும் இந்திய ஸ்ராலினிசத்தின் போட்டி பிரிவுகளுக்கும் கூட உரியது என்பதை
WSWS
விளக்கியது.
மார்ச் மாதத்தில் ஜிம்பாப்வே தேர்தல் வந்தது,
இதில்
ரொபேர்ட்
முகாபேயின்
நீண்டகால இரும்புத் திரை ஆட்சிக்கு எதிரான ஜனநாயக மாற்றத்திற்கான
இயக்கத்தின்
(MDC) பின்னால்
பிரிட்டன் தலைமையிலான ஐரோப்பிய சக்திகள் தங்களது ஆதரவைச் பயன்படுத்தின.
ரொபேர்ட் முகாபே ஜனநாயக உரிமைகளை மீறினார்,
அரசியல் எதிரிகளுக்கு
எதிராக வன்முறையைப் பிரயோகம் செய்தார்,
அத்துடன் வெள்ளை இனத்தவருக்குச் சொந்தமான பண்ணைகளைக் கையகப்படுத்தினார்
ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஏகாதிபத்திய சக்திகள் அவருக்கு எதிரான ஒரு
பிரச்சாரத்தை முன்னெடுத்து நாட்டின் பொருளாதாரம் உருக்குலைக்கும்
பொருளாதாரத் தடைகளை அமுல்படுத்தின.
மார்ச் மாதத்தில் இஸ்ரேலிய இராணுவம் மேற்குக் கரையில் ஊடுருவியதும்
நிகழ்ந்தது. ஷரோன் அரசாங்கம் பாலஸ்தீன அதிகாரத்தின் ஜனாதிபதியும் பாலஸ்தீன
விடுதலை இயக்கத்தின் தலைவருமான யாசர் அரபாத்தின் தலைமையகத்தை
முற்றுகையிடுவதற்கு டாங்கிகளை அனுப்பியதோடு,
ஜெனினில்
ஒரு படுகொலை
நிகழ்த்துவதிலும் ஈடுபட்டது.
WSWS
கட்டுரைகள்
1982
இல் பாலஸ்தீன அகதிகள் படுகொலை
செய்யப்பட்டதில் உச்சமடைந்த லெபனானுக்குள் இஸ்ரேல் ஊடுருவிய போது
நிகழ்த்தப்பட்ட
போர்க்
குற்றங்களில் ஷரோனின் பாத்திரத்தை
ஆய்வு செய்ததோடு,
பாலஸ்தீன
விடுதலை இயக்கத்தின் அரசியல் திவால்நிலையையும்
விரிவாக ஆய்வு செய்தது. மதச்சார்பற்ற அரபு முதலாளித்துவ தேசியவாதத்தின்
தோல்வியைப் பிரதிநிதித்துவம் செய்த பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஹமாஸின்
பிற்போக்குத்தனமான இஸ்லாமிய அடிப்படைவாத அரசியலின் எழுச்சிக்கு வழியமைத்து
தந்திருந்தது.
இஸ்ரேலியக்
கல்வியாளர்களை சர்வதேசரீதியாக புறக்கணிப்பதான
ஒரு உத்தேசிப்பையும்
WSWS
கண்டனம் செய்தது. இது ஜியோனிச
ஆட்சியின் குற்றங்களை ஒட்டுமொத்த இஸ்ரேலிய மக்களுடன் அடையாளப்படுத்திக்
காண்கிற அரசியல்ரீதியாய் பிற்போக்குத்தனமான ஒரு முயற்சி என்று
WSWS
எதிர்த்தது.
ஏப்ரல் மாதத்தில் வெனிசூலாவின் ஜனாதிபதி
ஹியூகோ
சாவேஸை
அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு தோல்வியடைந்த ஆட்சி கவிழ்ப்பு
முயற்சிக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை
WSWS
அம்பலப்படுத்தியதோடு அதன்
முக்கியத்துவத்தையும் பகுப்பாய்வு செய்தது. திரைக்குப் பின்னால் புஷ்
நிர்வாகம் வழங்கிய ஊக்கத்தினாலும்,
அந்நாட்டின் பெரும்
எண்ணெய் கையிருப்பைக் கட்டுப்படுத்தும் விருப்பத்தாலும் மேற்கொள்ளப்பட்ட
இந்த ஆட்சிசதி முயற்சி ஒரு படுதோல்வியில் முடிந்தது. எப்படியிருந்தபோதிலும்,
சாவேஸின் தேசியவாத அரசியல் இலத்தீன் அமெரிக்காவின் உழைக்கும் மக்களுக்கு
ஒரு முட்டுச் சந்தாகவே அமைந்திருந்தது.
ஆஸ்திரேலியாவில்,
அகதிகள் மீதான ஹோவார்டு
அரசாங்கத்தின் தாக்குதல்கள் அதிகரித்து
உண்ணாவிரத போராட்டங்களையும்,
பிற ஆர்ப்பாட்டங்களையும்
தூண்டியிருந்தது. இது குறித்த செய்திகள் இந்த ஆண்டு முழுவதிலும்
WSWS
இல் வந்து கொண்டிருந்தன.
2001
இன் பிற்பகுதியில் ஒரு அகதிப்
படகு மூழ்கி 353
பேர் இறந்த சம்பவம்
குறித்த உத்தியோகப்பூர்வ செனட் விசாரணை மீதான ஒரேயொரு ஆழமான ஆய்வை
நான்கு
பாகங்கள் கொண்ட
கட்டுரைத் தொகுதியாக
WSWS
வெளியிட்டது.
SIEV X
மூழ்குவதற்கு
முன்பாக அது குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்குத் தெரியாது என்பதான
அரசாங்கத்தின் முந்தைய கூற்றுகளுடன் முரண்படுகின்றதாக கடற்படை தளபதிகளின்
சாட்சியம் அமைந்திருந்தது.
அக்டோபர் மாதத்தில்,
இந்தோனேசியத்
தீவான பாளியில் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் நடந்தது.
இதில் 88
ஆஸ்திரேலியர்கள் உட்பட
200க்கும்
அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்தோனேசியாவின் சுற்றுலா மையங்களுக்கு
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருந்தது பற்றிய தகவல்கள் முன்னதாகவே உளவுத்
துறை முகமைகளிடம் இருந்தது என்கிற செய்தி வெளியானதற்குப் பிறகு
பொதுமக்களுக்கு இது குறித்து
எந்த
எச்சரிக்கையும் விடுக்கத் தவறியது குறித்து
ஹோவார்டு அரசாங்கத்தின் மீதான கோபம் பெருகியது. இந்த குண்டுவெடிப்புகள்
நிகழ்ந்த அடுத்த சில நாட்களுக்குள்ளாக,
ஆஸ்திரேலியாவின்
உள்நாட்டு உளவுத் துறையான
ASIO
ஐச் சேர்ந்த போலிஸ் மற்றும்
அதிகாரிகள் பெரும் ஆயுதங்களுடன் சிட்னி மற்றும் பேர்த்தில் இருந்த
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பங்களின் வீடுகளில்
அச்சமூட்டும்
சோதனைகளை
நடத்தினர்.
கனடாவில்,
ஜீன் செரடியன் விரைவில்
பிரதமர் பதவியில் இருந்து விலகுவார் என்று ஆகஸ்டு மாதம் அறிவிக்கப்படுவதில்
விளைந்த கனடாவின் ஆளும் தாராளவாதக் கட்சிக்குள்ளான நெருக்கடியையும்
WSWS
பகுப்பாய்வு
செய்தது.
கனடாவின் வரலாற்றில் மிகக் கூர்மையான சமூகச் செலவின வெட்டுகளுக்கு
செரெடியன் தலைமை கொடுத்திருந்தார். பின்
100
பில்லியன் டாலர் பெருநிறுவன,
மூலதன ஆதாய மற்றும்
வருமான வரி வெட்டுகள் வேலைத்திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.
இத்தனைக்குப் பின்னும் கூட,
செரெடியனின் முன்னாள்
நிதி அமைச்சரான பால் மார்ட்டின் இன்னும் மேலதிகமான வலது-சாரிக் கொள்கைகளைப்
பின்பற்றுவார் என்கிற எதிர்பார்ப்பில்,
பெரு வணிகங்கள் செரடியனின் தலைமைக்கு பௌல் மார்ட்டின் கொடுத்த
முன்னொருபோதுமில்லாத சவாலுக்கு ஆதரவளித்தன.
பிரேசிலில்
தொழிலாளர்கள் கட்சியின்
(PT)
தலைவரான லூயிஸ் இனாசியா லூலா
டி சில்வா அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து,
இலத்தீன் அமெரிக்காவின்
மிகப் பெரியதும் மிக முக்கியமானதுமான நாட்டில் தொழிற்சங்கத்தை
அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்திருந்தது. உருக்குத்
தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரது ஜனரஞ்சகமான வாக்குறுதிகள்
சர்வதேச நாணய நிதியத்தினதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் மற்றும்
பிரேசிலின் முதலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்கு இணக்கமானதாக இல்லை
என்பதையும் அவர் இவர்களது கோரிக்கையைத் தான் செய்து முடிப்பார் என்பதையும்
WSWS
விளக்கியது.
அமெரிக்காவில்
2000
இல் ஜனாதிபதித் தேர்தல்
திருடப்பட்டதற்குப் பிந்தைய முதல் தேசிய அளவிலான வாக்கெடுப்பில் அமெரிக்க
அரசியல் நெருக்கடி புதிய வெளிப்பாட்டைக் கண்டது.
ஜனநாயக
கட்சி பெற்ற படுதோல்வியை
ஆய்வு செய்த WSWS,
இது
2000
தேர்தலின்
போதும் அதற்கு முன்னதாக பில் கிளிண்டன் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு
தீர்மானத்திற்கான அதன் பதிலிறுப்பின் சமயத்திலும் இந்த பெரு வணிகக் கட்சி
வெளிக்காட்டிய அரசியல் கோழைத்தனம் மற்றும் திவால்நிலை தொடர்வதையே
பிரதிபலித்தது என விளக்கியது.
ஹேக்கில்
அமைந்திருக்கும் நீதிமன்ற கட்டிடம்
மேலதிக
தகவல்கள்
28 February 2002
The Hague Tribunal: Milosevic charges NATO with war crimes
Part 1
1 March 2002
The Hague Tribunal: Milosevic charges NATO with war crimes
Part 2
2 March 2002
The Hague Tribunal: Milosevic charges NATO with war crimes
Part 3
5 July
2002
பி.எல்.ஓ
வின்
அரசியல்
தோல்வியும்
ஹமாஸ் இன்
தோற்றமும்
பகுதி3
13 August 2002
The tragedy of SIEV X
Did the Australian government deliberately allow 353 refugees to drown?
Part 1 of a four part series
14 August 2002
The tragedy of SIEV X
Did the Australian government deliberately allow 353 refugees to drown?
Part 2 of a four part series
15 August 2002
The tragedy of SIEV X
Did the Australian government deliberately allow 353 refugees to drown?
Part 3 of a four part series
16 August 2002
The tragedy of SIEV X
Did the Australian government deliberately allow 353 refugees to drown?
Part 4 of a four part series
7 November 2002
US midterm election: the meaning of the Democratic
debacle
கலையும்
கலாச்சாரமும்
The Royal Tenenbaums, Black
Hawk Down, Rabbit-Proof
Fence, The
Fellowship of the Ring, Frida, Insomnia, 8
Mile,
The Quiet American
ஆகியவை உள்ளிட்ட
ஏராளமான திரைப்படங்களின் விமர்சனங்களையும் தவிர உலகெங்கிலும் பேர்லின்,
புவனர்ஸ் அயர்ஸ்,
சான் பிரான்சிஸ்கோ,
சிட்னி,
டோரொண்டோ மற்றும்
ஜேர்மனியின் கொட்புஸ் ஆகியவை உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த திரைப்பட
விழாக்களில் WSWS
விமர்சகர்கள் பங்குபெற்றனர்.
நினைவஞ்சலிக் கட்டுரைகள் இயக்குநர்களான பில்லி வைல்டர் மற்றும் ஜான்
ஃபிராங்கைமர் மற்றும் நடிகர் ரிச்சர்டு ஹாரிஸ் ஆகியோர் உள்ளிட்ட பல
முக்கியமான திரைப்பட நபர்களின் வாழ்க்கைப் பாதையை அலசியது.
பிரிட்டிஷ் இன்பியல் நாடக மற்றும் தொலைக்காட்சி நடிகரான
ஸ்பைக்
மில்லிகன்,
ஜாஸ் பாஸ் கலைஞரான
ரே
பிரவுன்,
மற்றும்
1960களில்
ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த மக்களிசை பாடகர்
டேவ் வன் ரொங் ஆகியோருக்கான புகழாரங்களும் இடம்பெற்றன.
கலைப்
பிரிவில் முன்னெப்போதையும் விடப் பரந்த அளவில் பல்தரப்பட்ட கலைத் துறைக்
கட்டுரைகள் வெளியாகின. மரண தண்டனைக்கு எதிரான
“Strange
Fruit”
பாடலின் தோற்றுவாய்கள் குறித்த
ஒரு கருத்து,
Ken Burns documentary profile of Mark Twain
ஆவணச் சித்தரிப்பு
குறித்த ஒரு திறனாய்வு,
மற்றும் வழமையாகக் கூறப்படும் புத்தரின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக்
கொண்டு ஒரு
புதிய சிங்கள
மொழி இசைநாடகம் குறித்து பியசீலி விஜேகுணசிங்க எழுதிய ஒரு
திறனாய்வு ஆகியவை இதில் அடங்கும்.
கனடாவில் நடந்த ஸ்ட்ராஃபோர்டு விழாவில் திரையிடப்பட்ட
King Lear
நாடகத்திற்கு டேவிட்
வால்ஷ் எழுதிய திறனாய்வு,
ஷேக்ஸ்பியரின் இந்த துயரநாடகத்தின் சமூக அம்சங்களை, குறிப்பாக அவரது
முன்னைய விடயங்களான மன்னர் முட்டாள்த்தனத்தில் இறங்கி வறிய நாடுவிட்டு நாடு
திரியும் ஏழைகள் மீது கட்டவிழ்த்துவிடுவது குறித்து விவாதித்தது.
ஜேர்மனியில் நடந்த
எதார்த்தக்
கலை கண்காட்சி
குறித்த திறனாய்வு,
மற்றும் டெட்ராயிட்
கலைத்துறை நிலையத்தில் நடந்த
“Degas
and the Dance”
கண்காட்சி
ஆகியவை உள்ளிட்ட பல முக்கியமான கலைத் துறை திறனாய்வுகள் இடம்பெற்றன.
2002
இல் நடைபெற்ற மிக
முக்கியமானதொரு கண்காட்சியில்,
அமெரிக்காவின் சுமார்
ஆறு இடங்களில்
ஆபிரிக்க-அமெரிக்க
ஓவியரான ஜேகப் லாரன்ஸின்
படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
20
ஆம் நூற்றாண்டின் முதல்
பாதியில் தெற்கில் இருந்து நீக்ரோக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தமை குறித்த
60
ஓவிய வரிசை,
அத்துடன் அடிமைத்தனம்
ஒழிக்கப் போராடிய ஜோன் பிரவுனின் வாழ்வு மற்றும் மரணத்தை விவரிக்கும்
24
பலகை வரிசை
ஆகியவை இதில் இடம்பெற்றிருந்தன.
கிளாரெ ஹர்லி
தனது திறனாய்வில் எழுதினார்:
உலகளாவிய சித்தரிப்பு என்பதில்,
குறிப்பிட்ட சிலவற்றை
கலை தவிர்த்து விட முடியாது. ஆயினும் தனிமனிதச் சித்தரிப்பாக இல்லாத மானுட
அனுபவத்தின் அம்சத்தைக் காண லாரன்ஸ் முற்படுகிறார். அவர் குறிப்பான
முகங்களை தீட்டுவதற்கு (அல்லது முகங்களை தீட்டுவதற்கு என்றும் சொல்லலாம்)
ஒருபோதும் முனைவதாகத் தெரிவதில்லை என்கிற உண்மையில் இது உயர்ந்து
நிற்கிறது. தலைகள் கவிழ்ந்து காணப்படுகின்றன,
திரும்பி நிற்கின்றன,
முகமில்லாமல்
நிற்கின்றன,
அல்லது
வெறும் கோடுகளாய் இருக்கின்றன.
இது
லாரன்ஸ் எந்த அரசியல் சூழலில் தனது படைப்பு வாழ்க்கையை (1917-2000)
கழித்தாரோ அந்த அரசியல் சூழலுடன் தொடர்புபட்ட கலைத்துறை பிரச்சனைகளை
உருவாக்குகின்றது:
சமூக
அர்ப்பணிப்பு கொண்ட கலையின் தளத்திலும் கூட லாரன்சின் நிலை என்பது சிக்கலான
ஒன்றாகவே இருந்தது. போதுமான தீவிரமாய் இல்லை என்பதாக அவர் மீது விமர்சனம்
ஒரு பக்கத்தில் இருந்த அதே நேரத்தில்,
இன்னொரு பக்கத்திலோ வன்முறையின் கறுப்பின அனுபவத்தை நுண்மையாக சூசகம்
செய்தாலும் கூட அவர் சார்ந்திருந்த வெள்ளையின ஸ்தாபகத்தின் தணிக்கைக்கு
ஆளாக நேர்ந்தது.
கலை
ஆசிரியரான டேவிட் வால்ஷ் இரண்டு வெவ்வேறு சமயங்களில் மிச்சிகன் பகுதியில்
உரை நிகழ்த்தினார். ஜனவரி மாதத்தில் புதிய ஆயிரமாண்டை ஒட்டி புதுக் கலை
அருங்காட்சியகத்தில் இருக்கும்
forum in Detroit
அவர் உரையாற்றினார்.
டிசம்பர் மாதத்தில் அதே அருங்காட்சியகத்தில்
“கலைஞர்களும்
ஈராக்கிற்கு
எதிரான
போரும்”
என்கிற தலைப்பில் அவர் உரையாற்றினார்.
தொல்பொருள்
காலத்து வாழ்வாராய்ச்சி அறிஞரான
Stephen Jay Gould.
இரங்கல் செய்தி உள்ளிட்ட பல கலைத் துறை கட்டுரைகள்
இடம்பெற்றன.
“ஐன்ஸ்ரைன்
கோப்பு: உலகின் மிகப் பிரபல விஞ்ஞானிக்கு எதிராக ஜே.எட்கர் ஹூவர் நடத்திய
இரகசியப் போர்”
என்கிற
புத்தகத்தின்
திறனாய்வுக்
கட்டுரை,
20 ஆம் நூற்றாண்டின்
மத்திய காலத்தில் எழுந்த கம்யூனிச அச்சுறுத்தல் மற்றும் மெக்கர்திய வேட்டை
ஆகிய முக்கிய பிரச்சினைகளையும்,
ஆல்பர்ட் ஐன்ஸ்ரைனின் அரசியல் பாத்திரத்தையும் விவாதித்தது.