:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Religion, science and Hurricane Katrina
மதம், விஞ்ஞானம் மற்றும் கத்திரினா சூறாவளி
By Joseph Kay
19 September 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
சென்ற வியாழனன்று நியூ ஓர்லியன்சிலிருந்து நாட்டிற்கு உரையாற்றிய புஷ் திரும்பத்
திரும்ப மதத்தையும் மத அமைப்புக்களுக்கும் அழைப்புவிட்டார். ஜனாதிபதி தனது வழக்கமான மதபோதனைகளுக்கும்
அப்பால் சென்று வெற்றுப் பசப்புணர்வுடன் ஒரு மதபோதகரைப்போல் வேண்டுகோள்விடுத்தார்.
நியூ ஓர்லியன்சிலிருந்து வெளியேறியிருப்பவர்களை வரவேற்பவர்கள் பற்றி உரையாற்றிய
புஷ் ''மத வழிப்பாட்டு கூட்டங்களின்'' பங்கு பற்றி வலியுறுத்தி பேசினார். ''கருணை இராணுவங்கள்'' பற்றி
அவர் குறிப்பிட்டார், அந்த சொல் பெருமளவில் அடிக்கடி நிர்வாகத்தின் கிறிஸ்தவ அடிப்படைவாத அமைப்புக்களுக்கு
புனைப்பெயராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இராணுவங்கள் ''நமது மறுசீரமைப்பு முயற்சிக்கு அவற்றின்
மனிதநேயத்தை தருகின்றன'' என்று அவர் சொன்னார். மக்களை அவர் ''மீட்பு இராணுவம், செஞ்சிலுவைச் சங்கம்
மற்றும் இதர நல்ல அறக்கட்டளைகள் மற்றும் மதவழிப்பாட்டு கூட்டங்களுக்கு`` நன்கொடைகளை வழங்குமாறு
கேட்டுக் கொண்டார். மதசார்பற்ற செஞ்சிலுவைச்சங்கத்தை விட மதக்கருத்தியலோடு சம்மந்தப்பட்ட ஒரு அமைப்பை
முன்னிறுத்தி குறிப்பிட்டிருக்கிறார்.
பேரழிவிற்கு இரையான பிராந்தியம் மீண்டும் உருவாக்கப்படும் என்று புஷ் அறிவித்தார்
ஏனென்றால் ''பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உயிர் நாடியாக ஒரு பலம் உள்ளது. அதுதான் கடவுள் மீது
நம்பிக்கை அந்த நம்பிக்கையை எந்த சூறாவளியும் அசைத்துவிட முடியாது......`` இதற்கு முன்னர் நடைபெற்ற
இயற்கை பேரழிவுகளுக்கு பின்னர் நாடு சீரமைக்கப்பட்டதைப் போல் இப்போதும் செய்யப்படும் என்று அவர்
முடிவுரையில் கூறினார். இந்த சோதனைகளும் நமக்கு ஒன்றை நினைவுப்படுத்துகின்றன, நாம் அறிந்ததைவிட நாம்
வலுவானவர்கள். கடவுள் கருணையாலும் ஒருவருக்கொருவர் உதவுவதாலும் இதை நாம் பெறுகிறோம். எல்லா
துன்பத்திற்கும், மரணங்களுக்கும், அப்பாற்பட்ட நம்பிக்கை அவை நமக்கு நினைவுபடுத்துகின்றன. கடவுள், பாதை
தவறியவர்களை கையினால் கட்டப்படாத தனது இல்லத்திற்கு வரவேற்கிறார்''.
வெள்ளிக்கிழமையை தேசிய வழிபாட்டு தினமென்றும் நினைவுதினமென்று புஷ்
அறிவித்தார். அன்றைய தினம் பெரும்பகுதி நேரம் தொலைக்காட்சி அலைவரிசைகள் மத நிகழ்ச்சிகளையும், இறை
வழிபாடுகளையும் ஒளிபரப்பிக் கொண்டேயிருந்தன. அதைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று புஷ்ஷின் வாராந்திர
வானொலி உரை இடம் பெற்றது. அதில் அழுத்தமாய் ''கடவுளின் கருணை'' ''கடவுளின் ஆறுதல்'' ''இறைவனின்
வலிமை'' பற்றிய குறிப்புகள் இடம் பெற்றன.
உத்தியோகபூர்வமான பிரார்த்தனை தினம் நடைபெற்ற அன்று
Science
பத்திரிக்கையில் ஒரு புதிய அறிக்கை இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது, அந்த ஆவணம் பூகோள வெப்பநிலை
அதிகரிப்பதற்கும், கடுமையான சூறாவளிகள் அதிகரிப்பதற்கும் இடையிலான தொடர்பை விவரித்திருந்தது.
சுற்றுப்புறச் சூழல் ஆய்வு தொடர்பான ஜோர்ஜியா தொழில் நுட்ப மற்றும் தேசிய
நிலையம் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வலுவான நான்காவது அல்லது ஐந்தாவது தர சூறாவளிகளின்
எண்ணிக்கை ஏறத்தாழ இரட்டிப்பாகியிருப்பதாக தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. 1990 முதல், உலகில்
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக அத்தகைய 18 சூறாவளிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 1970 களில்
ஓராண்டிற்கு 11 வலுவான சூறாவளிகள்தான் நடந்தன. லூயிசியானா, மிசிசிப்பி மற்றும் அலபமாவைத் தாக்கிய
கத்திரினா ஒரு நான்காவது வகையைச் சார்ந்த புயலாகும்.
இப்படிப்பட்ட கடுமையான சூறாவளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதற்கான
ஒரு காரணி கடல்பகுதியில் மேல்மட்ட வெப்பநிலை உயருவதுதான் என்று விஞ்ஞான நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவர் பூகோள வெப்பநிலை அதிகரிப்பதற்கும், கடுமையான புயல்களின்
எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் இடையேயுள்ள தொடர்புகள் பற்றி ''அதிகரித்தளவில் நம்பிக்கையை'' ஆராய்ச்சிகள்
வழங்குவதாக குறிப்பிட்டிருக்கிறார்.
சூறாவளி கத்திரினா போன்ற சம்பவங்களில் உண்மையான விஞ்ஞான ஆய்விலிருந்து
மக்களது கவனத்தை திசை திருப்புவதற்காக மூடநம்பிக்கை மற்றும் ஊழ்வினை நம்பிக்கை போன்றவற்றால் மக்களது
கருத்துகளுக்கு மயக்கமருந்து கொடுக்க புஷ் முயன்று வருகிறார். மிகப்பெருமளவிற்கு விஞ்ஞான சான்றுகள் கிடைத்த
பின்னரும் நிர்வாகம் திரும்பத்திரும்ப பூகோள வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்பதை மறுத்து வருகிறது அல்லது
குறைந்த பட்சம் சந்தேகத்தை கிளப்பி வருகிறது. பூகோள வெப்பநிலையை உருவாக்குகின்ற பெட்ரோலிய
பொருட்களின் பயன்பாட்டிலிருந்து வெளிப்படுகின்ற CO2
கழிவுப் பொருட்களை குறைப்பதற்கான மிக மட்டுப்படுத்தப்பட்ட
சர்வதேச உடன்படிக்கைகளை கூட அது இரத்து செய்திருக்கிறது.
இப்படிப்பட்ட நடவடிக்கை மூலம், அமெரிக்க அரசாங்கம் அமெரிக்க எரிபொருள்
தொழிற்துறை மற்றும் இதர பெரு நிறுவன நலன்களின் ஒரு முகவாண்மையாக செயல்பட்டிருக்கிறது. பல நாட்டை
பாதிக்கும் மற்றும் உலகை சூழ்ந்துள்ள சுற்றுப்புறச்சூழல் பிரச்சனைகள் தொடர்பாக விஞ்ஞான நிபுணர்கள்
வெளியிட்டிருக்கின்ற கண்டுபிடிப்புக்களும் எச்சரிக்கைகளும் அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டின் முன்னணிப் பிரிவுகளின்
மேலாதிக்கப் பிரிவுகளின் நலன்களுக்கு பாதகமாக அமைந்திருக்கின்றன.
இப்படி சுற்றுப்புற சூழல்கள் தொடர்பான பிரச்சனைகளை அரசாங்கமே மறுத்துக்
கொண்டு வருவது உண்மையான ஆபத்துக்கள் வரும்போது பொதுமக்கள் ஒன்றும் செய்யவியலாத நிலைக்கு
தள்ளப்பட்டுவிடுகின்றனர். பூகோள வெப்பநிலை அதிகரித்து வருகின்ற பிரச்சனைகளை சமாளிப்பதற்கு பாரிய
முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவை மூலவளங்களில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் மற்றும்
எரிபொருள் உற்பத்தி முறைகளை மாற்றுவதாகவும் அமைவதுடன் சூறாவளி கத்திரினா போன்ற இயற்கை சீற்றங்கள்
ஏற்படும்போது அவற்றிலிருந்து தற்காத்து நிற்பதற்கு சமூக உள்கட்டமைப்பு வசதிகளை செய்வதில் பாரியளவிற்கு
முதலீடு செய்யப்பட வேண்டும், அதைச் செய்வதற்கு அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டினருக்கு எவ்விதமான
விருப்பமும் இல்லை.
மதம் பற்றிய கருத்துக்களுக்கு அழைப்புவிடுவதில் மிக உடனடியாக மோசமான அம்சம்
உள்ளது. அது என்னவென்றால், மத்திய நிதி ஒதுக்கீடுகளை மதக்குழுக்களுக்கு திருப்பிவிடுவதை அது
நியாயப்படுத்துகிறது. குறிப்பாக குடியரசுக் கட்சிக்கு நெருக்கமாகவுள்ள அடிப்படைவாத கிறிஸ்தவ வலதுசாரி
குழுக்களுக்கு அந்தப்பணம் வழங்கப்படுகிறது மற்றும் அவை புஷ் நிர்வாகத்திற்கு ஒரு பிரதான அடித்தளமாக
செயல்படுகின்றன. புஷ் தனது உரையில் வெளியிட்ட அறிவிப்பு என்னவென்றால் முன்னாள் ஜனாதிபதிகளான ஜோர்ஜ்
H.W.புஷ்ஷூம், பில் கிளின்டனும் திரட்டி வருகின்ற பணங்களில் ஒரு
பகுதி மத அமைப்புக்களுக்கு சேரும் என்பதுதான்.
கருக்கலைப்பு ஓரினச்சேர்க்கை போன்ற ''ஒழுக்கநெறிசார்ந்த பிரச்சனைகளுக்கு''
ஆதரவு திரட்டுவதற்கான தனது அடிப்படையாக குடியரசுக் கட்சி மத அமைப்புக்களை அதிக அளவில் பயன்படுத்த
முயன்று வருகிறது. இப்படி அவர்கள் செயல்படுவது குடியரசுக் கட்சி வலதுசாரிகள் பாரம்பரியமாக பயன்படுத்தி
வருகின்ற தேவாலயங்களோடு மட்டுப்படுத்தப்படவில்லை. மிக அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில், புஷ்
பிரச்சாரத்தில் பிரதானமாக கறுப்பு இன மக்கள் கூடுகின்ற மதவழிப்பாட்டு நிலையங்களில்
ஆபிரிக்க-அமெரிக்கர்களிடையே அதிக ஆதரவு திரட்டுவதற்காக குடியரசுக்கட்சி அந்த பாதிரிமார்களை
பயன்படுத்திக் கொண்டது.
இந்த மாத தொடக்கத்தில், மத்திய அரசாங்க அவசர உதவி நிர்வாக அமைப்பு
(FEMA)
தான் உதவியளிக்க பரிந்துரைத்துள்ள அறக்கட்டளைகள் அமைப்புக்களில்
Operation Blessing (ஆசீர்வாத நடவடிக்கை) என்ற
அமைப்பு முக்கிய இடம் பெற்றிருக்கின்றது. இந்த அமைப்பு வலதுசாரி மதபோதகரான
Pat Robertson உடன் தொடர்புகளை கொண்டிருக்கின்றது.
அவர் அண்மையில் வெனிசூலா ஜனாதிபதி ஹூகோ சாவேஸை படுகொலை செய்ய வேண்டுமென்று கூறினார்.
FEMA
பரிந்துரை செய்துள்ள டஜன் கணக்கான அமைப்புக்களில் மிகப் பெரும்பாலானவை ஏதவாதொரு வடிவில் செயல்படும்
மதக்குழுக்களாகும்.
கத்திரினா சூறாவளி ஏற்படுத்திவிட்ட பேரழிவை கிறிஸ்தவ தேவாலயங்களையும்
அரசையும் இணைப்பதற்கு ஒரு வாய்ப்பாக நிர்வாகம் கருதுகிறது. முதலாளித்துவ அமைப்புமுறையினால் மிகக்
கடுமையாக நசுக்கப்பட்டுவிட்ட சமூகநலத்திட்டங்களுக்கு பதிலாக அரசாங்கம் ''மத நம்பிக்கையில்'' அமைந்த
குழுக்களுக்கு நிதியளிப்பதை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் விரும்புகிறது.
உடனடி அரசியல் நோக்கங்கள் ஒருபுறம் இருக்க, நிர்வாகம் இடைவிடாது மத
அடிப்படைகளை வளர்ப்பது நீண்டகால அடிப்படையில் விஞ்ஞானத்தை சீர்குலைக்கவும், மூடநம்பிக்கைகள் மற்றும்
பழைமைவாதத்தின் மூலம் மக்களது உணர்வுகளை நச்சுத்தன்மையாக்கும் நோக்கத்தை கொண்டது. இயற்கை மற்றும்
சமூக நிகழ்ச்சிபோக்கில் பொதுமக்களிடையே குழப்பநிலை வளருமானால் அரசாங்கத்தின் கொள்கைகளால்
நிதியாதிக்க செல்வந்த தட்டின் கொள்கைகளால் பழிவாங்கப்படுகின்றபோது வெகுஜனங்கள் கருத்தியல் ரீதியாகவும்
அரசியல் ரீதியாகவும் நிராயுதபாணியாகிவிடுவார்கள்.
கடவுளை பிரார்த்திப்பது கத்திரினா பேரழிவிற்கு அடிப்படைக்காரணங்களை ஒரு
கடுமையான ஆய்வு செய்வதற்கு தடைக்கல்லாக அமைவதாகும். அதற்கெல்லாம் மேலாக, இயற்கையில் உருவாகின்ற
சீற்றங்களை மட்டுமல்லாமல் முதலாளித்துவ முறையில் சமூகத்திற்கு அழிவுதருகின்ற முறையில் செயல்படுகின்ற மற்றும்
செயலிழந்து நிற்கின்ற தன்மைகளையும் கட்சிகள் ஊடக அமைப்புக்கள் மற்றும் அரசாங்க அமைப்புக்கள் அந்த
முறையை தற்காத்து நிற்பதற்கு அடிப்படைக்காரணமென்ன என்பதை ஆய்வு செய்யாது தடுப்பதும் நோக்கமாகும்.
எங்கிருந்து லூயிசியானா மற்றும் மிசிசிப்பி மக்களை பாதித்த இந்த பேரழிவு வந்தது?
அது ஒரு குருட்டுத்தனமான இயற்கை சக்திகளாக முக்கியமாக இல்லாதிருந்திருக்குமானால் அது ''ஒரு கடவுள்
செயலாக'' இருந்திருக்கும். அதை எதிர்பார்த்திருக்க முடியாது, ஆனால் அது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும்.
பலதசாப்தங்களாக பொறியாளர்களும் விஞ்ஞான நிபுணர்களும் மற்றவர்களும் நியூ
ஓர்லியன்ஸ் நகரம் கடல்மட்டத்திற்கு கீழேயுள்ளது மற்றும் சுற்றியுள்ள நீர்பரப்பிலிருந்து போதுமான அளவிற்கு
பாதுகாக்கப்படவில்லை எனவும், நான்காவது அல்லது ஐந்தாவது வகைகளை சார்ந்த சூறாவளிகள் தாக்குமானால்
அவற்றிலிருந்து தற்காப்பதற்கான போதுமான அரண்கள் இல்லை என்பதை எச்சரித்து வந்தனர். பூகோள
வெப்பநிலை அதிகரித்துக் கொண்டு வருவதால் அத்தகைய சூறாவளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வருகிறது.
இறுதியாக இந்த பிராந்தியம் தாக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்று எச்சரிக்கைகள் செய்யப்பட்டன. கடந்த
தசாப்தத்தில் பல சூறாவளிகள் நெருங்கி வந்தது உண்டு.
ஆனால் முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அந்த நகரத்தையும் அந்த
பிராந்தியத்தையும் பாதுகாப்பதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அத்தகைய
தடுப்புக்களுக்கு செலவிட வேண்டிய தொகையில் மிக சொற்பமான தொகையை செலவிட்டு இருப்பார்களானால்
இவ்வளவு பெரிய சேதத்தை ஓரளவிற்கு தவிர்த்திருக்க முடியும். கத்திரினாவால் உருவாக்கப்பட்ட தாக்கத்தால்
இவ்வாறான மோசமான முறையில் அழிவு ஏற்படுத்தப்பட்டதற்கான அரசாங்கத்தின் தோல்வியே காரணம்.
கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்கவின் ஆளும் வர்க்கம் இரண்டு கட்சிகளின்
நிர்வாகத்தின் கீழும் பொது உள்கட்டமைப்பு வசதிகள் செலவினம் உட்பட அனைத்து சமூக செலவினங்களையும் திட்டமிட்டு
வெட்டின. நெறிமுறைகள் தளர்வு, தனியார்மயமாக்கல், சமூகநலத்திட்டங்கள் இரத்து ஆகியவை அமெரிக்க மக்கள்
அனைவருக்கும் பாதகமாக, மக்களில் ஒரு சிறு பிரிவினருக்கு மட்டும் சலுகைகளை வாரிவழங்குவதை அடிப்படையாகக்
கொண்டது. இந்த வகையில் அந்தக் கொள்கைகள் எல்லா முக்கிய தொழில்வளர்ச்சி பெற்ற நாடுகளையும்விட அமெரிக்காவை
மிகப் பெரிய சமுதாய ஏற்றத்தாழ்வுள்ள நாடாக மாற்றிவிட்டது.
சூறாவளி கத்திரினா அமெரிக்க முதலாளித்துவ சமுதாயத்தின் அழுக்கு முகத்தை வெளிச்சம்
போட்டுக்காட்டிவிட்டது - பாரிய சமூக ஏற்றத்தாழ்வு மக்களில் விரிவான பிரிவினரின் ஏழ்மையை நிதியாதிக்க சக்திகள்
சமுதாயத்தில் சூறையாடிக் கொண்டிருக்கின்றன. இந்த உண்மைகளை மறைப்பதற்காக கடவுள் பெயராலும் மதத்தின்
பெயராலும் அறிவுரைகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
மதத்தை முன்னிறுத்தி காட்டுவதன் மூலம், புஷ் தனது சொந்த வலதுசாரி ஆதரவாளர்களுக்காக
மட்டுமே பேசவில்லை. சூறாவளியால் பாதிக்கப்பட்ட நூறாயிரக்கணக்கான மக்களுக்காகவும் மற்றும் அதிர்ச்சியாலும்
பயங்கர உணர்வுகளாலும் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களுக்கும் அவர் சொல்லிக் கொண்டிருப்பது
என்னவென்றால்: உங்களது பிரச்சனைகளுக்கு தீர்வாகவோ அல்லது அதற்கான காரணமாகவோ சமுதாயத்தையும்
அரசியலையும் பார்க்க வேண்டாம். ஒரு விளக்கம் தருவதற்கு அல்லது பொறுப்பெடுப்பதற்கு என்னையோ நான்
பிரதிநிதித்துவப்படுத்தும் நலன்களையோ எதிர்பார்க்க வேண்டாம், மீட்பதற்கும் நம்ப வேண்டாம். கடவுளைக் கேளுங்கள்.
துன்பத்தில் தவிப்பவர்களுக்கு ஆறுதல் தரும் போர்வையில் பொய்களை விற்ற மற்றும்
போர்களை தொடங்கிய இந்த வெட்கம் கெட்ட மனிதர், இந்த மண்ணையும், சமூகநலன்களின் சடப்பொருள்களையும்
பாதுகாப்பதற்கு இறைவனை நோக்கி சுட்டிக்காட்டுகிறார்.
See Also :
நியூ ஓர்லியன்சை திரும்ப
கட்டியெழுப்புவதற்கு பிரதான தடைக்கல் இயற்கையல்ல, இலாப முறையே
Top of page |