WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
European Union continues to build a "fortress Europe"
ஐரோப்பிய ஒன்றியம் ஒரு "ஐரோப்பிய அரணைக்கட்டுவதில்" தொடர்ந்து கவனம்
செலுத்துகின்றது
By Richard Tyler
6 January 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
2004 இறுதியில் ஐரோப்பிய ஒன்றியமானது (EU)
"ஐரோப்பிய கோட்டையை" வலுப்படுத்துவதற்கு மேலும் நடவடிக்கை
எடுப்பது குறித்து உடன்பாடு தெரிவித்தது. Luxemburg-ல்
நடைபெற்ற 25 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் பொதுவானதொரு தஞ்சம்புகும் ஏற்பாட்டிற்கு
ஒரு அடிப்படையை உருவாக்கினர், ஒரு
ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்காவல், பாஸ்போர்ட்டுகளிலும், விசாக்களிலும்
Biometric
புள்ளி விவரங்களை சேர்ப்பது, தேசிய போலீஸ் படைகள், மற்றும் பாதுகாப்பு சேவைகளிடையே பரவலான அடிப்படையில்
தகவல் பரிமாற்றத்திற்கு ஏற்பாடு செய்வது ஆகியவை அதில் அடங்கும்.
இந்த ஹாக் வேலைத்திட்டம் (Hague
Programme) திட்டம் என்றழைக்கப்படும் ஒரு ஐந்தாண்டு
திட்டத்தில், "சுதந்திரம், நீதி, மற்றும் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட" நடவடிக்கைகள் அடங்கியுள்ளன.
இரட்டை வேடத்திற்கு தலைசிறந்த உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம்
புக விரும்புவோர் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுப்பதும் அவர்களது ஜனநாயக உரிமைகள் மீது
தாக்குதல்கள் தொடுப்பதும், "ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் அடிப்படை உரிமைகளை ஏற்படுத்துவதிலும்,
நீதி கிடைக்கச் செய்வதிலும், பொதுவான வல்லமையை மேம்படுத்துவதாக அமைந்திருக்கிறது" என்று கூறியிருக்கிறது.
உண்மையிலேயே, "உறுதி செய்து தரப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள்" ஐரோப்பிய
ஒன்றிய அதிகாரிகளுக்கும் பல்வேறு உறுப்பு நாடுகளுக்கும் "சட்ட விரோதமாக குடியேறியவர்கள்" என்று கருதப்படுபவர்களை
வெளியேற்றுவதற்கும் மற்றும் தங்களது குடிமக்கள் பற்றி முடிந்த அளவிற்கு அவர்களது சொந்த வாழ்க்கை பற்றி
தகவல் திரட்டுவதும்தான். "நீதி கிடைக்கச் செய்வது" என்பது, புகலிடம் கோருவோர் தொடர்பான விசாரணை
நடைமுறைகளை விரைவுபடுத்தி அவர்களை நாடுகடத்த வேண்டும் என்பதுதான்.
ஹாக் வேலைத்திட்டம் என்பது ஐரோப்பிய ஒன்றியம் முழுவதற்கும் ஒட்டுமொத்த
குடியேற்றம் மற்றும் பயணம் தொடர்பான நெறிமுறைகளை உருவாக்குவதுதான். என்றாலும், உறுப்பு நாடுகள் தங்களது
சொந்த எல்லைகளுக்குள் மிகக் கூடுதலான கெடுபிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அந்தத்திட்டம் வகை செய்கிறது.
எடுத்துக்காட்டாக, தஞ்சம் புகுதல் என்பதற்கு மிகக் குறுகலான விளக்கம் தருவது, அகதி அந்தஸ்தை பெற தவறிவிட்டவர்களுக்கு
நலன்புரி உதவிகளை வாபஸ் பெறுவது மற்றும் தஞ்சம் புக விரும்புவோரை, தங்களது சொந்த நாட்டு சமுதாயங்கள்
வாழ்கின்ற இடத்திற்கு வெகுதூரம் தள்ளி குடியமர நிர்பந்திப்பது, ஆகிய தனித்தனி நாடுகளின் நடவடிக்கைகளும் இதில்
அடங்கும்.
போகின்ற போக்கில், "ஜெனீவா, ஒப்பந்தப்படி அகதிகளுக்கு பாதுகாப்பு தரவேண்டிய
அவசியம் குறித்து" குறிப்பிடப்பட்டிருந்தாலும், திட்டத்தின், பிரதான ஆலோசனைகள் தனிமனிதர்களுக்கு, உரிமைகளை
விரிவுபடுத்துவதற்கு பதிலாக, அரசாங்கத்திற்கு மேலும் அதிகாரங்களை வழங்குவதாக மட்டுமே அமைந்திருக்கிறது.
இந்த அதிகாரங்களில் கீழ்கண்ட நடவடிக்கைகளும் அடங்கும்.
தஞ்சம் தரப்படுபவர்களுக்கு ஒரே சீரான மற்றும் பொதுவான தஞ்சம் அளிக்கும்
நடைமுறை உருவாக்கப்படவேண்டும்.
-
தஞ்சம் மறுக்கப்படுபவர்களை உடனடியாக, வெளியேற்றி நாடு கடத்தும்
கொள்கை.
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையில் ஒருங்கிணைந்த நிர்வாக முறையை
உருவாக்குவது மற்றும், ஒன்றியத்தின் எல்லைகளில் கண்காணிப்பையும், கட்டுப்பாடுகளையும் வலுப்படுத்துவது.
-
பயண ஆவணங்கள், விசா, குடியிருப்பு அனுமதிகள்,
ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களது பாஸ்போர்ட்டுகள் மற்றும்
தகவல் சேகரிப்பு முறைகளில் பயோமெட்ரிக் தகவல்முறைகளை ஒருங்கிணைப்பது.
-
Europol -க்கும் உறுப்பு
நாடுகளின் போலீஸ் மற்றும் சுங்க அதிகாரிகளுக்கும் இடையே ஒத்துழைப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது.
முதலாவதாக, ஐரோப்பிய அரண் கொள்கை, தனது வெளி எல்லைகளை கட்டுப்படுத்துவதை
அடிப்படையாகக் கொண்டது, அதற்கெல்லாம் மேலாக, புதிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு, கிழக்கேயுள்ள,
ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளின் பொது எல்லைகளை கண்காணிப்பதில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வது.
ஹாக் வேலைத்திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில்
உள்ள நாடுகள் குடியேற்றத்தை சிறப்பாக நிர்வகிக்கவும், அகதிகளுக்கு, போதுமான பாதுகாப்புக்களை வழங்கவும்,
முக்கியத்துவம் கொடுக்கிறது." இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஐரோப்பாவின் மேற்கு மற்றும்
வடக்கு பகுதிகளிலுள்ள பணக்கார நாடுகள் புதிதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிதாக சேர்ந்துள்ள நாடுகளின்
எல்லைகளில் "சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்" என்று கருதப்படுபவர்களை நாடுகடத்துவதற்கு கூடுதலாக,
எல்லைக் காவலர்களை நியமிக்க வேண்டுமென்று விரும்புகின்றன.
வார்சோ (போலந்து), புடாபெஸ்டு (ஹங்கேரி),
Ljubljana
(ஸ்லோவேனியா) மற்றும் Bratislava
(ஸ்லோவேக்கியா), Tallinn
(எஸ்தோனியா), ரிகா (லாத்வியா) மற்றும்
Vilnius (லுத்வேனியா) ஆகிய நாடுகளில் உள்ள அரசாங்கங்கள்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, கிழக்கிலுள்ள புதிய எல்லைகளை காக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்தியதரைக்கடல்
பகுதியில் Valleta
(மால்டா) ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு குடியேறுபவர்களை தடுப்பதில் முதல் பொறுப்பு வகிக்கிறது.
"ஒன்றியத்தின் வெளி எல்லைகளில், கட்டுப்பாடுகளையும், கண்காணிப்பையும் வலுப்படுத்தவும்
ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டுக்கோப்பை உருவாக்கவும்" அந்த ஆவணம் வலியுறுத்துகிறது.
சில நூற்றாண்டுகளாக இல்லாவிட்டாலும், பலதலைமுறைகளாக கிழக்கு
ஐரோப்பாவிற்கு, குடியேறும் மற்றும் தங்கிச் செல்லும் இடங்களை கட்டுப்படுத்துகின்ற வகையிலும் ஐரோப்பிய
ஒன்றியத்தின் வெளிஎல்லைகளை முடிந்தவரை புகமுடியாதவாறு புதிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்
வலுப்படுத்துவதற்கும் நிதி, நிபுணர்கள் மற்றும் சாதனங்கள் வழங்கப்படும்.
இந்த நடவடிக்கைகளையும் மீறி ஒருசில ஓட்டைகளை பயன்படுத்தி ஆசியா அல்லது
ஆபிரிக்க நாடுகளில், இருந்து குடியேறுவோர், புகுந்துவிட்டால், அவர்கள் மேற்கு நோக்கி பயணம் செய்து,
பேர்லின், பாரிஸ், அல்லது லண்டனுக்கு, சுமையாக ஆகிவிடாமல் தடுப்பதற்கு புதிய உறுப்புநாடுகள் நடவடிக்கை
எடுத்து அங்கேயே நிறுத்திவிடவேண்டும்.
இதற்கிடையில் ஐரோப்பிய அரணுக்குள் குடியிருப்பதற்கு உரிமையில்லாதவர்கள்
தொடர்பாக போலீஸ் மற்றும் குடியேற்ற அதிகாரிகளது நிரந்தர அதிரடிச் சோதனைகளுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கிறது.
மனித உரிமை அமைப்பான சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு ஹாக்
வேலைத்திட்டத்தை கண்டித்து ஒரு பகிரங்கக் கடிதத்தை அனுப்பியிருக்கிறது. "நீதி" மற்றும் " 'சுதந்திரம்
தொடர்பான அம்சங்களை பலியிடுகின்ற வகையில், 'பாதுகாப்பு' பற்றி ஒருதலைப்பட்சமான வலியுறுத்தல்
ஹாக் வேலைத்திட்டத்தில் தரப்பட்டிருப்பதாக
சர்வதேச பொதுமன்னிப்பு சபை (Amnesty
International) கூறியிருக்கிறது.
"தஞ்சம் புகுதல் என்பது பிரதானமாக மனித உரிமைகள் சம்மந்தப்பட்ட ஒரு
பிரச்சனை, புலம்பெயர்ந்தோர் நிர்வாகம் பற்றிய விவாதங்களுக்கு நடுவே, இந்த அம்சம் அடிபட்டு
போய்விட்டது." ஐரோப்பிய ஒன்றியம் நீதி மற்றும் உள்விவகாரங்கள் செயல்திட்டம், "பயங்கரவாதத்திற்கெதிரான
நடவடிக்கைகள் மற்றும் 'சட்டவிரோத குடியேற்றத்தை' தடுக்கும் போர் என்ற உந்துதலால்
செயற்படுத்தப்பட்டிருக்கிறது", என்று அந்த சர்வதேச மனித உரிமை அமைப்பின் பகிரங்கக் கடிதம்
சுட்டிக்காட்டுகிறது.
ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு கட்டாய கைரேகை பதிவு
"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற வேடத்தில் ஐரோப்பிய ஒன்றிய
அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுகின்ற கடுமையான, நடவடிக்கைகளை உத்தேசித்திருக்கிறது. அகதிகளும்
மற்றும் தஞ்சம் புகவிரும்புவோரும், ஒரு குறிப்பிட்ட இலக்காக கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும்,
பாஸ்போட்டுகளில் பயோமெட்ரிக் புள்ளிவிவரங்கள், இடம் பெறவேண்டும் என்பதும் ஐரோப்பா முழுவதிலும்
பணியாற்றும் போலீஸ் மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கிடையில் தகவல் பரிமாற்றத்திற்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருப்பதும் குடிமக்கள் ஒவ்வொருவரையும் இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கின்ற
நடவடிக்கையாகும்.
எதிர்காலத்தில் பாஸ்போர்ட்டிற்கு மனுச் செய்யும் எந்த ஒரு ஐரோப்பிய ஒன்றிய
குடிமகனும் கட்டாயமாக, பெருவிரல் ரேகை பதிவை தாக்கல் செய்ய வேண்டும். "பயோமெட்ரிக் அடையாளச்
சின்னங்கள் (டிஜிட்டல் முக சாயல் படம் போன்ற) இடம் பெறுவது புதிய கம்பியூட்டர் பதிவு பாஸ்போர்ட்டுகளில்
இடம் பெறும் என்று ஹாக் வேலைத்திட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது.
சிவில் உரிமைகள் அமைப்பான
Statewatch-ற்காக
Essex
பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் டாக்டர்
Steve Peers தயாரித்துள்ள ஒரு ஆய்வில் அத்தகைய ஒரு
ஆலோசனை சட்டவிரோதமானது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
"ஐரோப்பிய ஒன்றிய கடவுச்சீட்டுக்களில் (பாஸ்போர்ட்டுகளில்) பெருவிரல் ரேகை
பதிவு இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், உத்தேச நெறிமுறை நாட்டு எல்லைகளின் சோதனைகள் தொடர்பாக
சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்ட அதிகாரங்களை மீறுவதாக அமைந்திருக்கிறது. சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள
வேறு எந்த அதிகாரங்களையும் விட அதிகமாக உள்ளது. கட்டாய பெருவிரல் ரேகை பதிவும், இந்த நெறிமுறையில்
சேர்க்கப்பட்டால் சமுதாயத்தின் செயல்பாட்டு சட்டபூர்வமான நடைமுறைத் தேவை, கொள்கை மீறுவதாக
அமைந்துவிடும். சமுதாயச் சட்டத்தின் பொதுவான கொள்கைகள் என்னவென்றால் தனிமனித வாழ்வுரிமைப்
பாதுகாப்பு ஆகும்".
2004 அக்டோபரில் ஐரோப்பிய ஒன்றிய, நீதி மற்றும் உள்விவகாரங்கள் கவுன்சிலின்
இரகசிய கூட்டத்தில் (JHA)
கட்டாய பெருவிரல் ரேகைத்திட்டம், அவசர கோலத்தில் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய நாடாளுமன்றம்
JHA-வின்
முடிவை அப்படியே ஏற்று அங்கீகார முத்திரை தரக்கூடும் என்று இப்போது தோன்றுகிறது.
உலக வர்த்தக மையத்தின் மீது 9/11 தாக்குதல்களை தொடர்ந்து அமெரிக்கா, வெளிநாடுகளில்
இருந்து அமெரிக்காவுக்கு வருவோருக்கு கட்டாய பெருவிரல் ரேகைப்பதிவு மற்றும் முகச்சாயல் ஸ்கேனிங் முறையை
புகுத்தியது. இப்போது ஐரோப்பிய ஒன்றியம் அதற்கு மேலே போய், தனது சொந்த குடிமக்கள்
தொடர்பாகவே, ஒரு பாரியளவு பயோமெட்ரிக் புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறது. இதில் 450 மில்லியனுக்கு
மேற்பட்ட தனிமனிதர்களது விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்த கட்டாய ரேகைப்பதிவு ஆலோசனைகளை தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்று
ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு ஒரு பகிரங்க கடிதத்தை
State Watch Privacy International
மற்றும் ஐரோப்பிய
டிஜிட்டல் உரிமைகள் அமைப்போடு இணைந்து அனுப்பியிருக்கிறது. ஏற்கனவே "விவரங்கள்,
மற்றும் புள்ளிவிவரங்கள், பரிவர்த்தனையோடு இணைத்து இதையும் சேர்த்துக்கொண்டால் ஒரு கண்காணிப்பு ராட்சதன்
உருவாகிவிடுவான்" என்று அந்த பகிரங்கக் கடிதம் எச்சரிக்கிறது.
இதர தனிமனிதர்களது விவரங்களோடு சேர்த்து சுகாதாரம் சமூகப்பாதுகாப்பு
வேலை வாய்ப்பு நிதி நிலவரம் போக்குவரத்து ஆகிய விவரங்களையும், ஐரோப்பா முழுவதிலும், அரசாங்க ஏஜென்சிகள்
உருவாக்கி கொண்டு வருவது, 18-ம் நூற்றாண்டு அரசியல் சிந்தனையாளர்
Jeremy Bentham,
குறிப்பிட்டுள்ள "எல்லோரையும் கண்காணிக்கும்" ஒட்டுமொத்த சிறையாக நாடே மாறிவிடுகின்ற நிலை உருவாகி வருகிறது.
ஐரோப்பிய ஒன்றிய திட்டங்கள் நிறைவேறி ஐரோப்பிய அரண் உருவாகிவிடுமானால்
அது புகமுடியாத கோட்டையாக ஆகி சட்ட விரோதமாகக் குடியேறுபவர்களை வெளியேற்றுவதுடன் இல்லாமல்,
அந்த ஐரோப்பிய அரண் ஒரு பெரிய தண்டனை வளாகமாக அப்பாவி மக்களது ஆவணங்கள் கூட கிரிமினல்கள்
போன்று பதிவுசெய்யப்பட்டுவிடும்.
Top of
page |