ஐரோப்பா
:
பிரான்ஸ்
The French left and the referendum on
the European constitution
பிரெஞ்சு இடதும் ஐரோப்பிய அரசியலமைப்பு மீதான கருத்தெடுப்பும்
By Richard Dufour
8 April 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றிய மே 29 கருத்தெடுப்பை ஒட்டி நிகழ்த்தப்பட்டுள்ள
பலகருத்துக் கணிப்புக்கள் பலவற்றில், கூடுதலான பிரெஞ்சு வாக்காளர்கள் "வேண்டும்" என்பதைவிட "வேண்டாம்"
என்ற கருத்துக் கூறக்கூடும் என்று வெளிப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் முதலாவது கருத்துக் கணிப்புக்கு விடையிறுக்கும்
வகையில், சோசலிஸ்ட் கட்சியின் (PS)
செய்தித் தொடர்பாளரான ஜூலியான் டிரே, "இப்பொழுது அரங்கில் எழுதப்பட்டுள்ள காட்சி, ஏப்ரல் 21ம் தேதிக்
காட்சிதான்" என்று கூறினார்.
சோசலிஸ்ட் கட்சியின் பிரதம மந்திரி லியோனல் ஜொஸ்பன், 2002 பிரான்சின் ஜனாதிபதித்
தேர்தல் முதல் சுற்றில், நவ பாசிச வேட்பாளரான ஜோன் மரி லூபென்னிடம் தோற்று அகற்றப்பட்டுவிட்டதை
பற்றிய டிரேயின் குறிப்பு, சோசலிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் வரவிருக்கும் வாக்கேடுப்பில் "வேண்டும்"
என்பதற்காகக் குரல் கொடுக்கும் வகையில்தான் உள்ளது.
சோசலிஸ்ட் கட்சித் தலைவரான ஜாக் லாங், "ஒரு உறுதியான தேர்தலுக்குப் பின்
களைப்புடன் விழித்தெழுவதுபோல் இல்லாமல் கவனத்துடன் இருக்கவேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கட்சித்தலைவர் பிரான்சுவா ஒல்லாந் அதே மனப்போக்கில் தொடர்ந்தார்: "ஏப்ரல்21, வாக்கு எதையும் மாற்றிவிடாது
என்ற கருத்தாக இருந்தது."
2002 தேர்தல் படுதோல்வியில் இருந்து சோசலிஸ்ட் கட்சி கற்றுக் கொண்ட ஒரே
பாடம், அந்த அனுபவம், 1981ல் பிரான்சுவா மித்திரோன் காலத்தில் இருந்து ஜோஸ்பன்னுடைய "பன்முக இடது"
அரசாங்கங்கள்வரை அதிகாரபூர்வ இடது கட்சிகள் அனைத்துமே, தங்கள் முழு அர்ப்பணிப்பையும் முதலாளித்துவ
ஒழுங்குக்கு கொடுத்துள்ளன என்று நிரூபணம் ஆகியுள்ளது என்பதால், அவற்றில் இருந்து விலகி நிற்கவேண்டும் என்ற
கருத்தைக் கொண்டுவிட்ட தொழிலாள வர்க்க வாக்காளர்களை அரசியல்ரீதியாக அச்சுறுத்துவதற்கு உதவும்
என்பதுதான்.
இத்தகைய அச்சுறுத்தல் தந்திரோபாயங்களுக்கு சோசலிஸ்டுகள் சென்றுள்ளமை, இந்த
காலகட்டம்வரை, அவர்கள் தோல்வியுற்ற நிலையை கொண்டுள்ளது போன்ற நிலையில், ஐரோப்பிய
அரசியலமைப்பை பிரெஞ்சு மக்களுக்கு விற்க இருப்பதில் பெற்றுள்ள பீதி உணர்வை தெரிவிக்கிறது. இன்னும் இரண்டு
மாதங்களே மே 29 வாக்கெடுப்புத் தேர்தல் உள்ளபோது, பெரு நிறுவனங்களின் ஐரோப்பிய அரசியலமைப்பு
திட்டம் பற்றி பிரெஞ்சு மக்களுடைய அவநம்பிக்கை அதிகரித்து வருகின்றது.
மேல்மட்டத்தில் "வேண்டும்" வாக்கிற்கான கூட்டணி
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில், வலதுசாரி
தேசிய முன்னணியின் அச்சுறுத்தலானது, சோசலிஸ்ட் கட்சிக்கு,
முதலாளித்துவ நிறுவனத்தின் ஏகோபித்த வேட்பாளர் பழமைவாத
தலைவர் ஜாக் சிராக்கிற்கு வாக்களியுங்கள் என்று மக்களை கோரியதை நியாயப்படுத்துவதற்கு போதுமான
காரணமாக இருந்தது. அந்த சரணாகதி, ஒரு அரசாங்கம் ஓய்வூதியங்கள், கல்வி, வேலைகள் இவற்றின்மீதான
கடுமையான தாக்குதல்களை நிறைவேற்ற அர்ப்பணித்துக்கொண்டதை முறைமையாக்குவதற்கு உதவிபுரிந்தது.
இன்று, அரசியலமைப்பு ஒப்பந்தத்திற்கு எதிரானவர்கள்தாம் "ஒரு குறிப்பிட்டை
வகையில் வார்த்தைஜால அரசியல், மக்களை திருப்திப்படுத்தும் கோஷம்" இவற்றை மேற்கொண்டுள்ளனர் என்று
சோசலிஸ்ட் தலைவர் லாங் தெரிவிக்கிறார்; இந்த அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பிற்கு உள்ள
அனைத்து எதிர்ப்பையும் ஐரோப்பிய எதிர்ப்பு உணர்வுடன் சமன்படுத்தி பேசுவதை இலக்காகக் கொண்டுள்ளது;
அதுதான் லூ பென்னுடைய மூலதனம் ஆகும். இதைப்போன்றுதான், சோசலிஸ்ட் கட்சி இன்
Seine-Saint-Denis
பிரதிநிதியான Bruno Le Roux,
"'வேண்டாம்' என்ற வாக்கு தேசியவாத அல்லது இறைமைவாதத்தின் உள்நோக்கிய திருப்பத்தின் அடையாளம்
ஆகும்" என்று கூறியுள்ளார்.
2002ல் போலவே, பிரெஞ்சுக் குடியரசு என்ற புனிதப் பெயரால், பிரான்ஸ் மற்றும்
ஐரோப்பிய ஆளும் செல்வந்த தட்டுக்களின் அடிப்படை நலன்களை பாதுகாப்பதற்கு அணிதிரள்வதை நியாயப்படுத்த
உத்தியோகபூர்வ இடது, மிகத்தீவிர வலதை ஒரு பின்னணியாய் பயன்படுத்துகிறது. சோசலிஸ்ட் கட்சியும் வலதுசாரி
அரசாங்கமும் ஒன்றாக இணைந்து மே 29ம் தேதி வாக்கெடுப்பில் "வேண்டும்" வாக்கிற்காக பிரச்சாரம் செய்தல்
மிக குறிப்பிடத்தக்க வேகத்தில் சென்று கொண்டுள்ளது.
UMP (Union for a Popular Movement -
மக்கள் இயக்கத்திற்கான ஐக்கியம்), எனப்படும் ஆளும் கூட்டணியின் முக்கிய
கட்சியின் தலைவரான நிக்கோலா சார்கோசி, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் துருக்கி நுழைதலை எளிதுபடுத்தும்
என்ற அச்சத்தை குறைத்ததின் மூலம், வலதுசாரி வாக்காளர்கள் அரசிலமைப்பிற்கு ஆதரவாக வாக்களிக்கும்
தன்மையில் சரிவு ஏற்பட்டதை தான் தடுத்துநிறுத்தியுள்ளதாக வாதிடுகிறார். சோசலிஸ்ட் கட்சி தன்பங்கிற்கு
வலதுசாரி வாக்காளர்களுக்கு "ஐரோப்பிய அரசியலமைப்பு சந்தைகள் நிறைந்த ஐரோப்பாவில் இருந்து
பாதுகாப்புக்களை கொடுக்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால்
"சோசலிஸ்ட் கட்சிக்காக இந்தப் பிரச்சாரத்தை செய்யுமாறு என்னை கேட்காதீர்கள்" என்று இகழ்வுடன் அவர்
கூறிவிட்டார்.
இந்த கேலிப் பேச்சானது
UMP தலைவரை, சோசலிஸ்ட் கட்சி தலைவர் பிரான்சுவா
ஒல்லாந் உடன் ஒன்றாக நின்று Paris-Match
என்னும் புகழ் பெற்ற இதழின் அட்டைப்படத்திற்காக
காட்சிகொடுப்பதை தடைசெய்து விடவில்லை.
சோசலிஸ்ட் கட்சி வெளிப்படையாக தன்னுடைய வலது நண்பர்கள் புறம் சாய்ந்து
நிற்பதின் மூலம் "வேண்டும்" என்பதற்கு எதிராக உள்ள கருத்துக் கணிப்புக்களுக்கு பதில் கொடுத்திருக்கிறது.
"ஒப்பந்த ஆவணத்தில் கையெழுத்திடுபவர்" என்ற முறையில் ஜனாதிபதி சிராக் "பிரெஞ்சு மக்களிடம் ஆதரவு திரட்ட
வேண்டும்" என்று LCI
செய்தித் தொலைக்காட்சிக்கு ஒல்லாந் கூறினார். "வேண்டும்" பிரச்சாரத்திற்காக சொந்த முறையில்
பாடுபடுவேன் என்று பிரதம மந்திரி ஜோன் பியர் ரஃப்ரன் உறுதி கொடுத்திருந்ததை "இது ஒரு நல்ல செயல்"
என்று சோசலிஸ்ட் கட்சி தலைமை பாராட்டி அறிக்கை விடுத்துள்ளது.
Le Monde
ஏடு குறிப்பிட்டுள்ளபடி, "2002 தேர்தலில் ஜோன் மரி லுபென்னுக்கு எதிராக தன்னுடைய மறுதேர்தலில் தனக்கு
கடமைப்பட்ட வகையில் இப்பொழுதும் சிராக்கிற்கு சோசலிஸ்ட் வாக்காளர்களின் ஆதரவு தேவைப்படுகிறது."
2002 தேர்தல் பற்றிய செய்தி ஊடகக் குறிப்புக்கள் மிகக் கவனத்துடன், அந்த
நேரத்தில் காணப்பட்டிருந்த சமூக பொருளாதார நிலைமை மற்றும் அரசியல் நடைமுறையில் இருந்து மக்களின்
வளர்ந்துவரும் மனமுறிவு எவ்வாறு லூபென்னுக்கு அதிக வாக்குகளை கொடுத்து ஜோஸ்பனிற்கு தோல்வியை
ஏற்படுத்தியது என்பதை தவிர்த்து பேசியுள்ளன. ஆயினும் இதே காரணிகள்தான் தற்போதைய அரசியல் நிலைமையை
உருக்கொடுக்கின்றன.
தொழிலாளர் வர்க்க எதிர்ப்பு நடவடிக்கைகள் மிக அதிகமாக தனியார் மயமாக்கும்
செயல்கள், மற்றும் ஓய்வூதிய வயதை தள்ளிப்போடும் பார்சிலோனா வாக்கு ஆகியவை அவருடைய "பன்மை இடது"
அரசாங்கத்தில் செயல்படுத்தப்பட்டதற்கு எதிரான மக்கள் சீற்றம்தான் ஜோஸ்பன் தோல்வியுற்ற வகையில்
தேர்தல்களில் எதிரொலித்தது. இன்று சிராக்-ரஃபரன் அரசாங்கத்தால் தொடர்ந்து, தீவிரமாக
செயல்படுத்தப்படும் அத்தகைய பிற்போக்கான சமூகக் கொள்கைகளுக்கு எதிர்ப்புக்கள், வேலை நிறுத்தங்கள்
ஆகியவற்றை அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல், ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு எதிராகவும் பகைமைப் போக்கை
பெருக்கியுள்ளது. பிந்தையதுதான் உலக நிதிச் சந்தைகளின் அழுத்தத்தின் பேரில் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய
அரசாங்கங்களினாலும் தொடரப்படும் கொள்கையின் அவசிய சாராம்சமான வியத்தகு முறையில் தனியார்
மயமாக்குதல் அதிகரிக்கப்படுதல், வேறிடத்துக்கு மாற்றுதல் மற்றும் சமூகச் செலவின வெட்டுக்கள், முதலியவற்றை
கொண்டுவருவதற்கு காரணமாக உள்ளது என்று தக்க நியாயத்துடன் தொழிலாள வர்க்கத்தால் கருதப்படுகிறது.
மேம்போக்கில், தற்போதைய கருத்தெடுப்பு பிரச்சார நடவடிக்கைகளுக்கும் மே
2002 இரண்டாம் சுற்று தேர்தலில், பழமைவாத சிராக்கின் பின் அரசியல் நிறமாலையில் கிட்டத்தட்ட
அணிதிரண்டதற்கும் இடையே வேறுபாடு உள்ளது. செய்தி ஊடகங்களும், பெரு முதலாளித்துவ முகாம்களான
உத்தியோகப்பூர்வ இடது மற்றும் பழமைவாத வலதுகளும் ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு ஆதரவாக இருந்தாலும்,
பல அரசியல் குழுக்களும் மே 29 வாக்கெடுப்பில் "வேண்டாம்" என வாக்களிக்கமாறு மக்களுக்கு அழைப்பு
விடுத்துள்ளன. வலது புறத்தில், எதிர்ப்பு என்பது அப்பட்டமான தேசிய, பிறதேசிய பழிப்பு உணர்வு மற்றும்
இனவெறியின் அடிப்படையில் (லூ பென்னுடைய தேசிய முன்னணி)
அல்லது பிரான்சின் இறையாண்மை (Philippe de
Villier's Mouvement pour la France, மற்றும்
Charles Pasqua's Rassemblement pour
la France) நிலைப்பாட்டிலிருந்து ஆகும். இடதைப்
பொறுத்தவரையில் எதிர்ப்புக் குழுக்கள் ஐரோப்பிய அரசியலமைப்பின் "புதிய தாராளவாத" கொள்கையை
தாக்குகின்றன (சோசலிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே உள்ள ஒரு சிறுபான்மை, கம்யூனிஸ்ட் கட்சி,
Attac போன்ற
பூகோளமயமாக்கல் எதிர்ப்பு குழுக்கள், "மிகத் தீவிர இடதான" புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (Ligue
Communiste Revolutionnaire), லுத் ஊவ்றியேர் (Lutte
Ouviere) மற்றும் தொழிலாளர் கட்சி
(Parti des Travailleurs)
ஆகியவை அத்தகைய எதிர்ப்பை தெரிக்கின்றன.)
அரசியலமைப்பிற்கு விரோதத்தைக்காட்டும் இடது எதிர்ப்பாளர்களின் செய்தித்
தொடர்பாளர்கள் இதனை 2002 தேர்தலுடன் ஒப்பிட்டுக் கூறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்; இதில் மிக
உரத்த குரலை கொடுத்திருப்பது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்தான்
(LCR). "
'ஏப்ரல் 21 ஆபத்துக்கள்' 'வேண்டாம்' முகாமிற்கு வெற்றி போல் கொள்ளலாம் என்பதுபோல் ஒல்லாந்
தொடர்ந்து சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார்" உண்மையில் மே 5, 2002ல் ஏற்படுத்தப்பட்ட நிலைமையின்
தன்மையைத்தான் இது முற்றிலும் கொண்டுள்ளது, அதாவது வலது மற்றும் சமூக தாராளவாதம் இரண்டையும்
நிராகரிப்பது ஆகும்" என்று LCR
இன் வார ஏடான Rouge
இன் சமீபத்திய கட்டுரை ஒன்றில் கூறியுள்ளது.
ஆயினும், "புதிய தாராளவாத கொள்கை வேண்டாம் எனக் கூறுக" என்ற
நிலைப்பாடுகளின் பிரச்சாரத்தை பகுப்பாய்ந்தால்,
LCR-ஆல் கூறப்படும் "மீண்டும் திரும்புக" என்ற வாதங்கள்
வெறும் மேல்தோற்றத்திற்காகத்தான் எனத் தெரியும்
மே 2002ல் தீவிரப்போக்கு மற்றும் "தீவிர இடது" அமைப்புக்கள்
(LCR மற்றும்
பூகோளமயமாக்கல் எதிர்ப்பு இயக்கம்) சிராக்கிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரின அல்லது "குடியரசு"
அலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு (Lutte Ouvriere)
வாக்களிக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டைக் கூறின.
LCR மற்றும்
Lutte Ouvriere (LO)
இரண்டுமே Parti des Travailleurs (PT)
உடன் சேர்ந்து ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் 10 சதவிகிதத்திற்கும் மேலாக இணைந்த வாக்குகளை பெற்றன;
இதையொட்டி புதிய பாசிச லூபென் மற்றும் வலதுசாரி, பிரெஞ்சு பெருவணிக ஏகோபித்த வேட்பாளர் சிராக்கிற்கும்
இடையே இரண்டாம் சுற்றில் தொழிலாள வர்க்கம் தீவிர புறக்கணிப்பை கொள்ள வேண்டும் என்ற கருத்து நிராகரிக்கப்பட்டது.
அத்தகைய ஆரம்ப முயற்சி உலக சோசலிச வலைத் தளத்தினால் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்கும்,
அனைத்து முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்து சுயாதீனமான போக்கை வெளிப்படுத்துவதற்கும் பிரெஞ்சு தொழிலாளர்
வர்க்கத்திற்கு உள்ள ஒரேவழி என்று முன்வைக்கப்பட்டது. அத்தகைய அரசியல் பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்தின்
நிலையை அரசியல் முறையில் தெளிவுபடுத்தவும், மறுபடியும் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய சிராக்கின் கீழ் அவர்களுடைய
வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் கடுமையாக தாக்கப்படுவதை எதிர்க்கும் வகையிலும்
முன்கூட்டியே அதனை பலப்படுத்தவும் உதவியிருக்கும்.
தற்பொழுதுள்ள கருத்தெடுப்பு பிரச்சாரத்தில், அதே சக்திகளால் அதிகரிக்கப்படும்
"இடதுசாரி" எதிர்ப்பு அரசியலில் சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாடு வெளிப்படுவதை தடுப்பதை
குறியாகக் கொண்டுள்ளது.
மக்களுடைய சீற்றம், ஐரோப்பிய மூலதனத்தின் இடம் பெயரும் தன்மையை
ஆதரித்தும், வறுமையில் வாடும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பயிற்சி பெற்ற தொழிலாளர் தொகுப்பை
குறைவூதியத்திற்கு பயன்படுத்துவதை ஆதரிக்கும் அரசியல் அமைப்பின் விதிகளை நோக்கி செலுத்தப்படுகிறது. அந்த
விதிகள் காலம் கடந்துவிட்ட தேசிய - அரசு முறையின் இரும்பு பிடியில் இருந்து உடைத்துக்கொள்ளும் உற்பத்தி
சக்திகளின் அடக்க முடியாத மற்றும் புறநிலைப்போக்கின் சட்டபூர்வ பதங்களில் மொழிபெயர்க்கப்படாமல், "புதிய
தாராளவாத கொள்கையின்" அதிகப்படியான அளவு என்று வண்ணம் பூசப்படுகின்றன.
இந்தப் போக்கு தனியார் சொத்துடைமையின் அடிப்படையில் முதலாளித்துவ அமைப்பின்
கீழ் சமூக ரீதியான அழிவு வடிவங்களை எடுக்கும். ஆயினும் கூட, சமூக முன்னேற்றத்திற்கான பெரும் திறனை
தன்னகத்தே அது கொண்டுள்ளது. இதை அடைவதென்பது, ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம்
இதில் சுயாதீனமான அரசியல் சக்தியாக தலையிட்டு, பூகோள ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள
பொருளாதாரத்தின் உற்பத்தி சக்திகளை, ஒரு சிலரின் இலாபங்களுக்காக என்று இல்லாமல், சமுதாயம்
முழுவதற்குமான சேவைகளுக்காக வைப்பதில் தங்கி இருக்கிறது.
சோசலிச சர்வதேசியம் என்ற இந்த முன்னோக்கு ஒன்றுதான் கூடுதலான அரசியல்
மற்றும் இராணுவரீதியில் ஒன்றுபடுத்தப்பட்டுள்ள முதலாளித்துவ ஐரோப்பாவிற்கு முற்போக்கான எதிர்ப்பை
கட்டியமைப்பதற்குவல்ல ஒரே அடிப்படை ஆகும். ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற முழக்கத்தில் இது
வேலைத்திட்ட ரீதியாக சுருக்கமாக கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு கருத்தெடுப்பில் "வேண்டாம்" வாக்குக்கான இடதுகளின்
பிரச்சாரத்தால் இத்தகைய முன்னோக்கு நிராகரிக்கப்படுகிறது. பல்வேறு "இடது", "தீவிர இடது" குழுக்கள்
"புதிய தாராளவாதத்தை" முதலாளித்துவத்தில் இருந்தே பிரிக்கின்றன, இதன் மூலம் கீன்சிய தேசிய சீர்திருத்தவாத
கொள்கைகளின் பொறிவிற்கான புறநிலை காரணங்களை அவர்கள் மறைத்துவிடுகின்றனர். இலாப முறையை
சவால்விடாமலேயே கடந்தகால சமூக வெற்றிகள் பாதுகாக்கப்பட முடியும், தொழிலாளர்களின்
வாழ்க்கைத்தரங்கள் உயரும் என்ற பிரமையை ஊக்குவிக்கத்தான் இது பயன்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தாராளவாத கொள்கையினை "தகாச்செயல்கள்"
என்று கண்டனத்திற்குட்படுத்தும் இந்த அமைப்புக்கள் ஒன்றிணைந்த முதலாளித்துவ ஐரோப்பாவிற்கான உந்துதலின்
அடிப்படை இயல்பை குறிவைக்க தவறுகின்றன: அது பூகோள மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதலுக்கு
எதிரான ஐரோப்பிய ஏகாதிபத்திய நலன்களை வலியுறுத்தவும் கண்டம் முழுவதும் தொழிலாளர்கள் மீதான
தாக்குதலை தீவிரப்படுத்தவுமான அரசியல் சூழ்நிலைகளை உருவாக்கவுமான, பிரெஞ்சு, ஜேர்மன் மூலதனங்களால்
வழிநடத்தப்படும் ஐரோப்பிய பெரும் வணிகத்தின் மேலாதிக்கம் செய்யும் பகுதிகளின் முயற்சி ஆகும்.
"வேண்டாம்" என்ற வாக்கிற்காக பிரச்சாரம் செய்யும் இடதுசாரிகள்,
ஐரோப்பாவின் பாதுகாப்பு கொள்கை NATO -
அதாவது
LCR -ன்
வார்த்தைகளில் "வாஷிங்டனால்
கட்டுப்படுத்தப்படும் ஒரு கூட்டு" அமைப்பின் வடிவமைப்பிற்குள் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ள அரசியலமைப்பின்
விதியை கோபத்துடன் சுட்டிக்காட்டுகிறார்கள். இப்பொழுது நடைபெற்று வரும், அமெரிக்காவில் இருந்து
சுதந்திரமான நிலையில் ஏற்பட உள்ள, ஐரோப்பாவின் சொந்த இராணுவ தலையீட்டிற்கான படைகள் பற்றி
அவர்கள் எந்தக் குறிப்பும் கொடுக்கவில்லை. ஐரோப்பாவின் "சமூக மாதிரியை" "ஆங்கிலோ-சாக்சன்"
தாக்குதல் முறைகளில் இருந்து காக்கவேண்டும் என்ற போர்வையிலும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழான
"ஒற்றை ஆதிக்க" உலகை எதிர்க்க வேண்டும் என்ற கருத்திலும் இந்தக் கூறுகள் ஐரோப்பிய ஏகாதிபத்திய
செயற்பாட்டிற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள முற்படுகின்றன; வரலாற்றளவில் இதுவும் அமெரிக்க முறையை
போலவே அதிக மிருகத்தனமானதும் கொள்ளையடிக்கும் தன்மையுடையதும் ஆகும்.
இது சோசலிஸ்ட் கட்சியின் அரசியல்பாதுகாப்பின் கீழ் மக்களுடைய எதிர்ப்பை
ஐரோப்பிய அரசியல் அமைப்பிற்கு வழிப்படுத்தும் முயற்சிகளில் அரசியல் வெளிப்பாட்டை காண்கிறது.
சோசலிஸ்ட் கட்சிக்கு அரசியல் அடிபணிதல்
சோசலிஸ்ட் கட்சிக்குள்ளேயே இருக்கும் ஒரு சிறுபான்மை போக்கின் ஏற்கப்பட்ட குறியிலக்காக
இது உள்ளது; கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் வகையில் மே 29 அன்று நடக்க இருக்கும் கருத்தெடுப்பில்
"வேண்டாம்" என்று வாக்களிக்குமாறு இது கோரிய வகையில், கட்சி நிறுவனத்தின் சினத்தைப் பெற்று, கட்சியில்
இருந்து நீக்கப்படக்கூடும் என்ற அச்சுறுத்தலையும் பெற்றுள்ளது. ஆனால் அத்தகைய அச்சுறுத்தல்கள் நிறைவேற்றப்படவில்லை
என்பது தகவலுக்குரியதாக உள்ளது.
தேசிய தேர்தல்களை இன்னும் இரண்டு ஆண்டுகளில் எதிர்கொள்ளவேண்டும் என்ற
நிலையில், கட்சிப் பிளவுகளை சூழ்ச்சியினால், தனிநபர்கள் செல்வாக்கினால் வெல்வதற்கும் அப்பால், ஓர்
அடிப்படை உண்மை உள்ளது: தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு கீழ்மட்டத்தில் இருந்து வரும்போது, அதை
கட்டுப்படுத்தும் முறையில், அதன் இடது பிரிவால் தொழிலாள வர்க்கத்திற்கு ஆதரவான அழைப்பு
கொடுக்கப்படுவதை பொறுத்துக் கொள்ளாமல், தன்னுடைய பங்கை சோசலிஸ்ட் கட்சி செய்ய முடியாது; எனவே
முடிந்த அளவு அத்தகைய எதிர்ப்புக்களை எதிர்ப்பற்றதாக சமநிலைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டு வருகிறது.
"வேண்டாம்" பிரச்சாரத்திற்கான சோசலிஸ்ட் கட்சியில் உள்ள முக்கிய ஆதரவாளர்கள்
இதைப்பற்றி மிகவும் வெளிப்படையாகவே கூறியுள்ளனர். முன்னாள் சோசலிஸ்ட் பிரதம மந்திரியும், தற்போது ஜனாதிபதி
பதவிக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையை கொண்டிருப்பவருமான லோரன் ஃபாபுய்ஸ் (Laurent
Fabius) கடந்த நவம்பர் மாதம் கூறினார்: "2002 ஏப்ரல்
21ஐ நாங்கள் மறந்து விடவில்லை; சோசலிஸ்டுகள் தங்களுடைய இடதை முதலில் பார்க்கவில்லை என்றால், அவர்கள்
தோற்றுவிடுவர்."
சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரான என்றி எம்மானுயெலி கூட "வேண்டாம்"
வாக்கெடுப்பிற்குத்தான் அழைப்பு விடுத்துள்ளார்: ஆனால் தற்போதைய கட்சித் தலைமை "கட்சி ஜனநாயக
முறையை" மீறுபவர்கள் மீது தடைகள் கொண்டுவரப்படும் அல்லது அவர்கள் வெளியேற்றப்படுவர் என
அச்சுறுத்தப்படுவது பற்றி தக்க அணுகுமுறை இல்லை என்று புலம்புகிறார். கட்சி ஜனநாயக முறை பற்றி
குறிப்பிட்டுள்ளது ஐரோப்பிய அரசியல் அமைப்பிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கட்சிக்குள்ளேயே நடத்திய
வாக்கெடுப்பில் வந்த பெரும்பான்மையை சுட்டிக் காட்டுகிறது. மித்திரோன் சகாப்தத்தை பெருமிதத்துடன் நினைவு
கூர்ந்த எம்மானுயெலி குறிப்பிட்டார்: "அவராவது (மித்திரோன்) இடதைப் பற்றி தெரிந்திருந்தார். விகிதாசார
முறையின் படி, ஒரு பெரிய கட்சியை அமைத்திட முடியும் என்பதை அவர் நிரூபணம் செய்தார். ஆனால் இப்பொழுது
இருக்கும் பெரும்பான்மையின் அணுகுமுறை அப்பொழுது பெற்ற வெற்றிகளையெல்லாம் ஆபத்திற்கு உட்படுத்திவிடும்
போல் உள்ளது."
"இடதுகளின் போர்" என்ற தலைப்பில் ஒரு பகுப்பாய்வு மார்ச் 24 பதிப்பில்
Le Nouvel Observateur
இல் வெளியாயிற்று; இந்த இதழ் சோசலிஸ்ட் கட்சிக்கு மிகவும் நெருக்கமானது ஆகும்; அதிலும் இதேபோன்ற
கருத்துத்தான் வந்துள்ளது: "உத்தியோக இடது பின்னர் இதற்காக பதிலடி வாங்க நேரிடலாம். சோசலிஸ்ட்
கட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது பழையபடி வந்துள்ளது" என்று இந்தக் கட்டுரையை எழுதியவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து "தீவிர இடதுடனும் பிரிந்து ஒரு தலைமையை ஏற்க ஃபாபுய்ஸ் தொண்டர்களை பிரித்தார்"
என்றும் அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை கூறியுள்ளனர்.
ஃபாபுய்ஸ் இன் நிலையில் மற்றொரு குறிப்பிடத்தக்க கூறுபாடு "சக்திவாய்ந்த மற்றும்
ஒன்றுபட்ட ஐரோப்பாவுக்கான நமது பேரவா அனைவருக்கும் திறந்து வைக்கும் மிகப் பெரிய சந்தை மற்றும்
அரசியல் அளவில் நீர்த்துப்போவதை நோக்கிய நெறிபிறழ்வில்" முடிந்துவிடும் என்ற அவரது அச்சம் ஆகும். இவ்வாறு
ஃபாபுய்ஸ் கடந்த மாதம் Le Figaro
வில் ஒரு கட்டுரையில், "உலக விவகாரங்களை செல்வாக்கிற்கு உட்படுத்தக் கூடிய ஓர் அரசியல் அமைப்பு முறை"
தேவை என்று வலியுறுத்தி எழுதியுள்ளார்.
இந்த அறிக்கை அரசியலமைப்பிற்கு ஃபாபுய்ஸ் கொண்டுள்ள எதிர்ப்பின் சாரத்தை
காட்டுகிறது. முன்னாள் சோசலிச பிரதம மந்திரி தான் "நீர்த்த தன்மையுடையதாகிவிடும்" என்று நினைக்கும்
அரசியலமைப்பிற்கு ஆதரவு கொடுப்பதற்கு தயக்கம் காட்டுகிறார்; ஆனால் ஐரோப்பிய பெருவணிகத்தின் நலன்களை
உறுதிப்படுத்துவதில் போதுமான "பேரவாக்களை" காட்டவில்லை. ஆயினும் கூட ஃபாபுய்ஸ் "இடதுசாரி"
பிரச்சாரமான "வேண்டாம்" வாக்குகளில் இடம் பெற்றுள்ளது நடந்துவரும் நிகழ்வுகளைப்பற்றி நிறையவே கூறுகிறது;
அதுவும் LCR
போன்றவற்றின் உதவியை கொண்டு சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் படிப்பினைகள் மூலம் மக்களுடைய அதிருப்தியை
பெருக வகைக்கும் முறையில் நடத்தப்படும் நடவடிக்கை புலனாகின்றது.
ATTAC
உம் உலகம் தழுவிய முறைக்கு எதிர்ப்பு இயக்கமும்
Le Nouvel Observateur
வழங்கியுள்ள பகுப்பாய்வில் ஓர் உண்மை குறிப்பிடப்பட்டுள்ளது: "பூகோளமயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
கூறுபாடுகள் சோசலிஸ்ட் சிறுபான்மையுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளன" என்பதேயாகும் அது.
பூகோளமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முக்கிய அமைப்பான
ATTAC- இன்
பிரெஞ்சுக் கிளை எப்பொழுதுமே சோசலிஸ்ட் கட்சியின், அரசியல் செல்வாக்கிற்கு, அல்லது கட்டுப்பாட்டிற்கு
உட்பட்டது என்று கூட கூறலாம். இதில் ஐயம் ஏதும் இல்லை. முதல்தடவையாக இந்தக் குழு அதிகாரபூர்வமாக ஒரு
தேசிய தேர்தலில் பங்கு பெற்று மே 29 கருத்தெடுப்பில் "வேண்டாம்" என போடுக என அழைப்பு விடுத்துள்ளது.
அரசியலமைப்பின் பொருளுரையில் "எவ்வித சமூக முயற்சிக்கும் முற்றுப்புள்ளி வேண்டும்"
என்ற அழைப்பு உள்ளது என்று அட்டாக்-பிரான்சின் தலைவரான ஜாக் நிக்கோனோவ் கூறுகிறார். "ஐரோப்பா
ஒரு பொருளாதார, சமூக, சுற்றுச் சூழல் நெருக்கடியில் சென்று கொண்டிருக்கிறது" என்று அவர் பல
வருடங்களாக சுட்டிக்காட்டியுள்ளார். "இடது சாரி" வாக்குகள் அனைத்தின் முழுப் பிரச்சாரமும், ஐரோப்பிய
அரசியலமைப்பிற்கு எதிரான வாக்கு வேண்டும் என்ற அரசியல் முன்னோக்கு முறையில் அடிப்படையைக் கொண்டிருக்க
வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். "ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பியக் குழு இரண்டும்
மேற்கொண்ட அரசியல் விருப்பங்களின் நேரடி விளைவுதான் இந்த நெருக்கடியாகும்; இதன் விளைவாக போட்டியும்
சந்தையும் மற்ற கருத்துக்களைவிட அதாவது ஒத்துழைத்தல், ஒன்றுபட்டிருந்தல், சமூக நீதி போன்றவற்றைவிட
கூடுதலான சிறப்பை கொண்டுள்ளன."
இவ்வாறு ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவ நெருக்கடிக்கு எவ்வித புறநிலை
அடிப்படையையும் மறுத்து, "பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச் சூழல்" சார்ந்த இந்நெருக்கடி தன்மைகளை
மோசமான "அரசியல் தேர்வுகளின்" விளைவுகள் என்று வண்ணம் பூசும் நிக்கோனோவ் இலாபமுறையின் காப்பாளராக
உள்ளார்.
தன்னுடைய அமைப்பு, அடிப்படையில் சோசலிஸ்ட் கட்சிக்காக உழைக்கிறது என்ற
உண்மையையும் அவர் மறைக்க முற்படவில்லை. " 'வேண்டாம்' வாக்கின் ஒரு வெற்றி ஐயத்திற்கு இடமின்றி, சமூக
மற்றும் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஊக்கம் கொடுக்கும். ... இத்தகைய வெற்றி நம்முடைய
காலகட்டத்தின் முக்கிய விஷயங்கள் பற்றிய, சோசலிஸ்ட் கட்சி மற்றும் பசுமைகளின் நிலைப்பாட்டில் ஒரு தெளிவிற்கு
வழிசெய்யும்: அதாவது (புதிய) தாராளவாதக் கொள்கை பிரச்சினை பற்றி தெரியவரும். அத்தகைய
தெளிவுபடுத்துதல் 2007 ஜனாதிபதி மற்றும் சட்ட மன்ற தேர்தல்கள் வருவதற்கு முன்பு கனிந்த உரிமை நிலையை
அடையக்கூடும்; அந்தக் கட்டத்தில் இதன் விளைவு வெறுமனே மாறுதல் என்றில்லாமல், உண்மையான மாற்றாக
ஆகும்."
2007 ல் சோசலிஸ்ட் கட்சியின்
வெற்றியை, "ஒரு மாற்று" என்று கூறும் வகையில் நிக்கோனோவ், ஜோஸ்பன் அரசாங்கத்தின் வரலாற்றை
வசதியுடன் மறந்துவிடுகிறார்: அது தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுடன் தன்னுடைய ஆட்சியை
தொடக்கியது; அத்தாக்குதல்தான் இப்பொழுது வலதுசாரி சிராக்கின் தலைமையில் முழுவீச்சுடன் நடைபெற்று
வருகிறது. இதே போல், "2007க்கான செயல்திட்டம்" என்று சமீபத்தில் சோசலிஸ்ட் கட்சியால் முகத்திரை
விலக்கப்பட்டது பற்றி எதுவும் கூறவில்லை; அது, "சோசலிஸ்டுகள் சந்தை பொருளாதாரத்தில் இருந்து ஒரு
முறிவையோ, பூகோளமயமாக்கலில் இருந்து மாறுபட்டிருப்பதையோ முன்வைக்கவில்லை. இது நடைமுறையில்
ஏற்கனவே நிரூபணம் ஆகிவிட்டது; இதை வெளிப்படையாக கூறத்தான் வேண்டும்" என்று தம்பட்டம் அடிக்கிறது.
இடது தீவிரம்
LCR தன்னுடைய
"முதலாளித்துவ-எதிர்ப்பு" கட்சியை பெரிதாக கட்டுவதற்கு நெருக்கமான உறவு கொண்டுள்ள அரசியல் சக்திகளில்
ATTAC-ம்
ஒன்றாகும். இந்த இரு அமைப்புக்களுமே ஒன்றாக சேர்ந்து கொண்டு "புதிய தாராள கொள்கை" அரசியல்
அமைப்பு பற்றியதில் "வேண்டாம்" என்ற வாக்கைத்தான் போடவேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றன.
சோசலிஸ்ட் கட்சிக்குள் இருக்கும் ஒரு சிறுபான்மையானது செயற்பாட்டிற்கான
இன்னொரு அரசியற்களமாக இருக்கிறது. LCR
இன் முக்கிய உறுப்பினர் கிறிஸ்ரியான் பிக்கே (Christian
Picquet) சமீபத்தில் பாரிசில் ஒரு கூட்டுக் கூட்டத்தில்
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்டுகளுடன் பங்கு பெற்றார்; "வேண்டாம்" என்ற வாக்குப் பிரச்சாரத்தின்
ஒரு பகுதியாக அது இருந்தது. வாக்கெடுப்புப் பிரச்சாரத்தின் தொடக்கத்தில் இருந்து, "வேண்டாம்"
வாக்கிற்காக சோசலிஸ்ட் கட்சியின் அமைப்பில், அதிகம் குரல் கொடுக்கும் தலைவராக இருந்து வரும் சோசலிஸ்ட்
செனட் உறுப்பினர் ஜோன் லூக் மெலோன்சோன் (Jean-Luc
Mélenchon) க்குப் பக்கத்தில் இவர் அரங்கில்
அமர்ந்திருந்தார்.
இக்கூட்டத்தில் தன்னுடைய தலையீட்டைப்பற்றி சுருக்கி இவ்விதமாக
பிக்கே தெரிவித்தார்: "மே 29 அன்று நாம் சிராக்கிடம்
தெரிவிக்க வேண்டும்: "இருபது ஆண்டுகள், அவை போதுமானவை!" என்று. இவ்வாறு, பல வாரங்களாக அதன்
அரசியல் நடவடிக்கையின் மையக் கூறாக இருக்கும் LCR
போராடுவதாக உறுதி கூறிவரும், தீவிர ஒலி கொடுக்கும்
"வேண்டாம்", என்பது சிராக்கிற்கு எதிரான வெறும் எதிர்ப்பாக முடிவடைகிறது.
LCR, தூண்டில் போட்டுப் பிடிக்க
நினைக்கும் அரசியல் "பிடித்தல்", கம்யூனிஸ்ட் கட்சி
(PCF) என்ற வடிவில் பிரான்சின் ஸ்ராலினிசத்தின் எஞ்சியுள்ள
கூறுபாடு ஆகும். நீண்ட நாட்கள் LCR-ன்
தலைவராக இருந்த அலன் கிறிவின் (Alain
Krivine), "இதுவரை
PCFன் தேசிய
செயலாளர் PCF
ஏற்பாடு செய்யும் கூட்டங்களில்தான் பங்குபற்றி வருகிறார்,
LCR உட்பட மற்றய சக்திகளுக்கு அவை ஆதரவு கொடுக்கும்
என்றாலும் இதைத்தான் கருத்திற் கொண்டுள்ளார்" என்று வருத்தப்படுகிறார்.
PCF ன் தலைமையின் உள்ளே சில
கூறுபாடுகள் 'சிறுபான்மை அளித்துவிடக் கூடிய' LCR
உடனான கூட்டை மறுத்து, நாளைய சோசலிஸ்ட் கட்சி
உடனான கூட்டை காப்பதற்கு தங்களால் இயன்றதை செய்து
வருகின்றனர்; இதற்கு ஆதரவான 'வேண்டும்' வாக்கு என்பது 'வலதுசாரியின் வேண்டும்' என்றுதான்
கொள்ளப்படவேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் கூறுகின்றனர்" என்று கிறிவின்
புலம்பியுள்ளார்.
LCR இன் அரசியல் வளைவரை
பாதை தெளிவாகத்தான் உள்ளது. அது "சோசலிஸ்ட் கட்சி உடன் நாளைய கூட்டை காப்பாற்ற வேண்டும் என்ற
நினைப்பு மட்டும் கொண்டுள்ள", PCF
ஸ்ராலினிச வாதிகளை ஈர்க்கும் வகையில் செயல்படுகிறது. அட்டாக்கை விட இன்னும் கடினமான சுற்றுப் பாதையில்
இருக்கும் LCR-ம்
அதே இடத்தில்தான் போய் முடியும்; அதாவது சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் சுற்றுப் பாதைக்குள் சென்றுவிடும்.
லுத் உவ்றியேர்-ஐ பொறுத்தவரையில் மே 29 கருத்தெடுப்பு பற்றி அதன்
நிலைப்பாடானது, 2002 இறுதி முடிவுக்கான தேர்தலில் காட்டிய அதே அரசியல் செயலற்ற தன்மை, ஓரளவு
ஒதுங்கிக் கொள்ளாலம் என்ற நினைப்பு இவற்றால் ஆதிக்கம் செய்யப்படுகிறது. மார்ச் 18ல் அதன் செய்தித்
தாழின் முக்கிய தலையங்கத்தில் அமைப்பின் செய்தித் தொடர்பு பெண்மணியான ஆர்லட் லாகியே கீழ்க்கண்டவாறு
எழுதியுள்ளார்:
"மார்ச் 10 ஆர்ப்பாட்டங்களுக்கு முன்பும் அதற்குப் பின்பும், அவற்றின் வெற்றிகள்
கருத்தெடுப்பில் 'வேண்டாம்' வாக்கின் வெற்றிக்காக மாற்றப்படவேண்டும் என்று கூறப்பட்டது. இவ்வாறு
கூறுபவர்கள் அனைவரும் தொழிலாளர்களின் நலன்களை காட்டிக் கொடுப்பவர்கள்தாம். பெருகி வரும் சீற்றம்
வாக்குப் பெட்டியில் செலுத்தப்படக் கூடாது. ...அது கடைகளின் தளங்களில் உள்ளது; தெருக்களில் நாம்தான்
வலிமையுடையவர்கள்."
LCR, மற்றும்
LO உடன்
ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனக் கூறிக்கொள்ளும் மூன்றாம் குழு தொழிலாளர் கட்சி (Parti
des Travailleurs -PT) ஆகும்; இது மே 29
கருத்தெடுப்பு பற்றி வெளிப்படையான தேசிய நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளது.
Informations Ouvrières
எனப்படும் PT
இன் செய்தித்தாளின் மார்ச் 10ம் தேதி பதிப்பில், அதன் தேசிய செயலாளர் டானியல் க்ளுக்ஸ்டைன் எழுதுகிறார்:
"தொழிலாளர் கட்சியின்
இன்றைய நடவடிக்கைகளில் பங்கு பெறுவோர் அனைவரும் அவர்கள் எதிர்கொண்டுள்ள
தாக்குதல்கள் அனைத்திற்கும் காரணம் ஐரோப்பிய ஒன்றியம்தான் என்பதை அறியவேண்டும் என்று விரும்புகிறது.
ஐரோப்பிய கட்டளைகளுக்கு நாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்தால்தான் அவர்களுடைய தேவைகள் சாத்தியமாக்கப்படலாம்."
Informations Ouvrières 23
டிசம்பர், 2004 பதிப்பிற்கு பின்னர் உரத்த குரலில் முழக்கமிட்டு வருவதாவது: "ஐரோப்பிய அரசியல் அமைப்பிற்கு
வேண்டாம் என கூறுக! சுதந்திரமான மக்கள், சுதந்திரமான நாடுகள்தான் ஐரோப்பாவில் தேவை. பிராந்திய
உணர்விற்கு வேண்டாம் எனக் கூறுங்கள். கட்டாயப்படுத்தப்படும் சமூகத்திற்கு இடையிலான தன்மை வேண்டாம் எனக்
கூறுங்கள், தனியார் மயமாக்கலுக்கு வேண்டாம் என்று கூறுங்கள். பொதுப் பணிகளை காப்பாற்றுங்கள். 36,000
கம்யூன்களை காப்பாற்றுங்கள். ஒரே, பிரிவினையற்ற, மதச்சார்பற்ற குடியரசை காப்பாற்றுங்கள். ஐரோப்பிய
ஒன்றியத்தின் தளைகளில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளுவோம்! ஐரோப்பிய மக்கள் தடையற்ற சகோதரத்துவ
கூட்டாக இருக்க வேண்டும் என்று விழைவோம்!"
இத்தகைய குறுகிய பிறஇன பழிப்புவெறி சொல் அலங்காரத்தினால் தொழிலாளர்
கட்சி (PT)
வலதுசாரி மற்றும் ஐரோப்பிய அரசியலமைப்பின் தீவிர வலது எதிர்ப்பினர் புறம் பெரும் அடியை எடுத்து வைத்துக்
கொண்டிருக்கிறது. பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஆளும் செல்வந்த தட்டுக்களின் அரசியலைப்பு திட்டமான "வலிமையான"
முதலாளித்துவ ஐரோப்பா என்பதற்கு வரும் எந்த எதிர்ப்பினையும், ஒரு குறுகிய தேசிய பார்வை உந்துதலினால்தான்
உருவாகின்றன என்று வண்ணம் பூசும் அவற்றின் கூற்றிற்கு அவர்கள் உதவுகின்றனர்.
தொழிலாளர் கட்சி விடயத்தில், இந்தக் குற்றச்சாட்டு நன்றாக நியாயப்படுத்தப்பட்டது.
ஆனால் ஒரு மறைந்துள்ள வடிவில், LCR, ATTAC
போன்ற அமைப்புக்கள் முன்னேடுத்துள்ள முன்னோக்கின் மையத்தானத்தில் தேசியவாதம் உள்ளது. கீழ்மட்டத்தில்
இருந்து போதிய அழுத்தம் கொடுக்கப்பட்டால், முதலாளித்துவ தேசிய அரசானது, பூகோள நிதிச் சந்தையை
கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக செயல்படும் மற்றும் "சமூக ஐரோப்பாவை" காக்க உதவும் என்ற பயனற்ற, ஆபத்தான
பிரமையை இவை விதைக்கின்றன.
See Also :
Top of page |