World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

The killing of Daniel Pearl

டானியல் பேர்ளின் படுகொலை
By David North
23 February 2002

Use this version to print | Send this link by email | Email the author

புஷ் நிர்வாகத்தின் யுத்தக் கொள்கைகளுக்கு ஆதரவு தராதது மட்டுமல்லாமல், தேசிய வெறியுடன் சம்பந்தப்படாத காரணத்துக்காக, செய்தியாளர் டானியல் பேர்ளின் படுகொலையானது திடீர் உணர்ச்சி வேறுபாட்டை மட்டும் அல்ல, ஆழமான துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பேர்ளைப் பணயக் கைதியாகக் காட்டிய, அவரது கைகள் கட்டப்பட்டு தானியங்கி துப்பாக்கி அவரது தலையை நோக்கிக் குறி வைத்திருந்தவாறு தொடக்கத்தில் இருந்து வெளியிடப்பட்ட நிழற்படங்களில் இருந்து அந்த இளைஞர் அவரின் கட்டுப்பாட்டில் இருந்திராத சம்பவங்களுக்கு பொறுப்பாக பிடித்து வைக்கப்பட்டிருந்த, ஆற்றொணா நிலையில் உள்ள மனிதனாகக் காணப்பட்டிருந்தார். இப்பொழுது டானியல் பேர்ள் கொல்லப்பட்டிருக்கிறார் என்ற செய்திக்கு அவரது குடும்ப வட்டாரத்திற்கும் அப்பால், நண்பர்கள், சகாக்கள் மற்றும் பலர் அவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

டானியல் பேர்ள் மிகப் பண்பாடு வாய்ந்த திறமையான பத்திரிகையாளர் ஆவார். அவரது எழுத்துக்கள் வோல்ஸ்ட்ரீட் பத்திரிகையின் மூளைக்கோளாறு பண்பை எடுத்துக் காட்டுகிறது, அங்கு ஆசிரியர் குழுவின் பிற்போக்கு கசடு பத்திரிகையின் சிறந்த செய்தியாளர்களின் ஒருமனதான செய்தி அனுப்புகையினால் தொடர்ந்து --எப்போதும் முரண்பட்டுக் கொண்டிருக்கும் பேர்ளின் எழுத்துக்கள் பற்றிய மீள் பார்வை அவர் தான் எடுத்த நிகழ்ச்சிகள் தொடர்பாக புறநிலை ரீதியான மற்றும் சுதந்திரமான மனப்பான்மையைப் பேணினார் என்று காட்டுகிறது மற்றும் அது அப்பத்திரிகையின் தலையங்கங்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுக்களை சவால் செய்யும் தகவல்களை முன்வைப்பதை விருப்பம் கொண்டிருந்தது.

அமெரிக்க ஏவுகணையால் எல் ஷிபா மருந்துத் தொழிற்சாலை (El Shifa Pharmaceutical Industries) அழிக்கப்பட்டதன் பின்னர் 1998-ல் பேர்ள் சூடானுக்குப் பயணமானார். கிளின்டன் நிர்வாகமானது அந்நிறுவனம் இரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டிருந்தது என்ற அடிப்படையில் அத்தாக்குதலை நியாயப்படுத்தி இருந்தது. பேர்ளின் விசாரணையானது நிர்வாகத்தின் கூற்றுக்களை கேள்விக்கு உள்ளாக்கியது. "அமெரிக்க அதிகாரிகளால் குறிப்பிடப்பட்ட தொடரான சான்றுகளில் உள்ள தொடர்புகள் கடந்த அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளதை விடவும் பலவீனமாக இருக்கின்றன" என்று அவர் எழுதினார். தாக்குதலை நியாயப்படுத்துவதற்கு நிர்வாகத்தால் பயன்படுத்தப்பட்ட தகவல்களில் பெரும்பாலானவை சூடானிய அரசு எதிர்ப்பாளர்களிடம் இருந்து பெறப்பட்டவை. அதில் அவர்களுக்கு சொந்த நலன்கள் மற்றும் தனக்கெனத் தனி தன்னல நோக்கமும் இருந்தது.

மற்றொரு குறிப்பிடத் தகுந்த தொடரான கட்டுரைகள் கொசோவாவில் சேர்பிய இனப்படுகொலை பற்றிய குற்றச்சாட்டுகளை அலசுகிறது. ''யூகோஸ்லாவிய படைகள்" கடுங் கொடிய செயல்களை செய்திருந்தனர் என்று உறுதிப்படுத்தும் அதேவேளை ''பாரபட்சமான பரந்த அளவிலான படுகொலைகள், கற்பழிப்பு முகாம்கள், சுடுகாடுகள், இறந்தவர் தலையைத் துண்டித்தல் ஆகிய ஏனைய குற்றச்சாட்டுக்கள் கொசோவாவில் நேட்டோ துருப்புக்கள் நுழைந்ததன் பின்னரான ஆறுமாதங்களின் பின்னர் இடம்பெறவில்லை. அல்பேனிய இனக் குழு போராளிகள், மனித உரிமை இயக்கங்கள், நேட்டோ மற்றும் செய்தி ஊடகங்கள் இனப்படுகொலை வதந்திகளுக்கு நம்பகத்தன்மை வழங்குவதில் ஒருவருக்கொருவர் ஊட்டமளித்துவந்தனர். இப்பொழுது, வேறுபட்ட விளக்கம் வெளிப்படுகிறது" என்று பேர்ள் (றொபர்ட் பிளாக்குடன் இணை ஆசிரியராக இருந்து எழுதிய கட்டுரையில்) எழுதினார்.

பேர்ளின் கொலைகாரர்கள் அவர் எழுதியதில் அல்லது எண்ணியதில் சிறிதளவேனும் அக்கறை கொண்டிருப்பார்களா என்பது பெரிதும் ஐயத்திற்குரியதாகும். பேர்ளை படுகொலை செய்தவர்கள் திகைக்க வைக்கும் அளவிலான உணர்வற்ற தன்மையினை மட்டும் காட்டவில்லை, அரசியல் திவாலையும் கூட எடுத்துக் காட்டுகின்றனர். மனிதப் பண்பு மற்றும் ஒழுக்கம் பற்றிய அனைத்துவிதமான கருதிப்பார்த்தல்களையும் ஒருவர் ஒருபுறம் தள்ளி வைத்தாலும் கூட (முக்கிய அரசியலில் அதன் சாத்தியம் அரிது), பேர்ளின் படுகொலையானது, கருதிப்பார்க்கத்தக்க எந்த வழியிலும், புஷ் நிர்வாகத்தின் யுத்தக் கொள்கையைக் இல்லாதொழிக்கவில்லை. அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பில்லாத தனிநபர் அர்த்தமற்ற வகையிலும் கொடூரமான வகையிலும் படுகொலை செய்யப்பட்டமை மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கின் மக்களுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்க அரசுகளால் நடத்தப்படும் மிகப் பயங்கரமான பரந்த அளவிலான வன்முறை நடவடிக்கைகளை எளிதாக்குகின்ற அரசியல் சூழலை நீடித்திருக்கச் செய்யவும் மற்றும் சீற்றத்தைத் தூண்டிவிடவும் மட்டுமே சேவை செய்யும்.

பேர்ளின் மரணத்தை தங்களின் பிற்போக்கு மற்றும் இராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்தும் அமெரிக்க அரசாங்கத்தினதும், செய்தி ஊடகங்களின் முயற்சிகள் கட்டாயம் எதிர்க்கப்பட வேண்டும் மற்றும் நிராகரிக்கப்பட வேண்டும். பேர்ளின் படுகொலை அரசியல் காரணிகளைக் கொண்டுள்ளது, அது அவரைக் கடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியவர்களின் உடனடி நோக்கங்களை விடவும் மிகஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைப் புரிந்து கொள்வது பயங்கரவாதத்திற்கு சாக்குப்போக்கையோ நியாயப்படுத்தலையோ வழங்கவில்லை. இருப்பினும் நீதி அற்றதும் அநியாயமுமான பேர்ளின் துன்பகரமான முடிவு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளின் விளைபயனாகும் என்பது பயங்கரமான உண்மை ஆகும். வோல்ஸ்ட்ரீட் பத்திரிகை பேர்ள் பற்றிய புகழுரையில், "டானி (Daniel) செப்டம்பர் 11ல் இறந்த ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களில் இருந்து வேறுபட்டவராக இருக்கவில்லை" என்று எழுதுகையில், அது கூற விரும்புகிறதை விட அதிகமாக கூறுகின்றது.

உலக வர்த்தக மையத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் இறந்த 3,000 அப்பாவி மக்களைப் போல, டானியல் பேர்ள் ஐக்கிய அமெரிக்க அரசுகளால் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளின் பலியாள் ஆவார். அவர்களது மரணங்கள் கடந்த 20 ஆணைடுகளாக, எண்ணெய் மற்றும் ஏகாதிபத்திய பூகோளமூலோபாய நலன்களின் ஈடுபாட்டில், வாஷிங்டனால் எடுக்கப்பட்ட முரட்டுத்தனமான மற்றும் பிற்போக்கு முடிவுகளின் விளைபயனாக இருக்கின்றன.

நாம் திரும்பக் கூறுகிறோம்: பயங்கரவாதத்திற்கான சமூக மற்றும் அரசியல் வேர்களை விவரிப்பது அதனை நியாயப்படுத்துவதற்காக அல்ல. பேர்ளின் மரணம் "செப்டம்பர் 11ல் இருந்து ஏனைய பலரைப்போன்ற தீயசக்தி இவ்வுலகை இன்னும் மறைந்து நின்று வேட்டையாடுகிறது என்பதன் பயங்கரமான நினைவூட்டல்" எனும் வோல்ஸ்ட்ரீட் பத்திரிக்கையின் அறிவித்தல், நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் இடையிலான யுத்த களமே உலகம் எனும் மதப் பிதற்றல் ஆகும்.

ஐக்கிய அமெரிக்க அரசுகளின் வன்முறையை அதன் வழியில் அனைவரும் பரிசாகப் பெற்றது உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் கோபத்தையும் வெஞ்சினத்தையும் தூண்டிவிட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானதா? அமெரிக்க அடாவடித்தனத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் ஒரு சிறிய எடுத்துக்காட்டைக் காட்ட பின்வருவதை குறிப்பிடலாம். பேர்ளின் மரணம் உறுதிப்படுத்தப்பட்ட அதேநாளில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் அமெரிக்கத் துருப்புக்கள் தவறுதலாக 16 தலிபான் எதிர்ப்பு ஆப்கான் போராளிகளைக் கொன்றுவிட்டதாக ஒப்புக் கொண்டார், ஆனால் மன்னிப்புக் கேட்க மறுத்தார்.

பேர்ளை படுகொலை செய்ததற்கான முடிவில், பழிக்குப்பழி வாங்கல் பிரதான அகநிலைக் காரணியாக இருந்தது என்பதை உணர்வதற்கு பிரத்தியேக அரசியல் நுண்ணறிவு தேவையில்லை. குறைந்தது இந்த அம்சத்தில், பேர்ளை படுகொலை செய்தவர்களின் கண்ணோட்டம் ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள பெரும்பான்மையோர் பரவலாக வாசிக்கும் பகுதியை எழுதுபவர்களிடமிருந்து எல்லாவகையிலும் வேறுபடவில்லை. ஒரு வாரத்திற்கு முன்னர்தான் புஷ்ஷின் "தீய அச்சுக்கள்" பேச்சு பற்றிப் புகழும் ஒரு பத்திரிகை பகுதியில், நியூயோர்க் டைம்ஸின் தோமஸ்.எல்.பிரைட்மன் (Thomas L. Friedman) பின்வருவனவற்றை சொன்னார்:

"செப்டம்பர் 11 நிகழ்ந்தது ஏனெனில் அமெரிக்கா அச்சமூட்டி தயக்கமடைய செய்யும் அதன் திறனை இழந்தது. நாம் அதனை இழந்தோம் ஏனெனில் 20 ஆண்டுகளாக அமெரிக்கர்களை படுகொலை செய்தவர்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் திருப்பித் தாக்கவில்லை அல்லது அவர்களை நாம் ஒரு போதும் நீதியின் முன் நிறுத்தவில்லை..... அப்பாவி அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நாம் ஒன்றும் செய்யவில்லை.

"ஆகையால் எமது பகைவர்கள் எம்மைப்பற்றி மேலும்மேலும் குறைவாகக் கவலை எடுத்துக் கொண்டார்கள் மற்றும் மேலும் மேலும் துணிவு கொண்டவர்களானார்கள்...

"அமெரிக்காவின் பகைவர்கள் எம் மீதுள்ள பலவீனத்தை அறிந்து கொண்டார்கள், மற்றும் நாம் அதற்காக அதிக விலை கொடுத்தோம்."

சில வார்த்தைகளை மட்டும் மாற்றுவதன் மூலம், பாக்கிஸ்தானிய பயங்கரவாதிகள் தாம் பேர்ளை படுகொலை செய்ததை நியாயப்படுத்துவதற்கு பிரைட்மனின் வாதத்தைப் பயன்படுத்த முடியும்: "நாம் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கத் தவறி விட்டோம்..... அப்பாவி அரபுகள், ஆப்கானியர்கள் மற்றும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் நாம் ஒன்றும் செய்யவில்லை.... அமெரிக்கா நம்மைப் பற்றி மேலும்மேலும் குறைவாக கவலை எடுத்துக் கொண்டார்கள் மற்றும் மேலும் மேலும் துணிவு கொண்டவர்களானார்கள்."

பகட்டாரவாரமுடைய மற்றும் போரில் ஈடுபடுகின்ற அமெரிக்க பத்திரிகைகளில் சில பத்திகளின் எழுத்தாளர்களின் சிந்தனைப் பாணிகளும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் சிந்தனைப் பாணிகளும், இவர்கள் கற்பனை செய்து பார்ப்பதிலும் பார்க்க மிகப் பொதுவான தன்மைகளை கொண்டிருக்கின்றன. இருவரும் இன, மத மற்றும் தேசிய ரீதியாக ஒரே முறையிலேயே சிந்திக்கின்றார்கள். இருவரும் செயல், பண்பு இவற்றில் வன்முறையால் வசியப்பட்டு இருக்கின்றார்கள். மேலும் உண்மையான சமத்துவம் மற்றும் ஐக்கியத்தின் அடிப்படையில், வகுப்புவாத சச்சரவு புதைசேற்றிலிருந்து உலகை விடுவிப்பதற்கும் அனைத்து ஒடுக்கு முறைகளையும் வன்முறைகளையும் துடைத்துக் கட்டுவதற்கும் சாத்தியம் அங்கு இருக்கின்றது என்பதை ஒருவரும் ஒருகணமும் கற்பனை செய்தும் பார்க்கவில்லை.