World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

US press enlists for war on Iraq

ஈராக் மீதான போருக்காக அமெரிக்கப் பத்திரிகைகள் பட்டியலிடுகின்றன

By Bill Vann
25 September 2002

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கிற்கு எதிரான காலனித்துவ பாணியிலான போருக்காக புஷ் நிர்வாகம் தயாரிக்கின்ற அதேவேளை, அமெரிக்க செய்தி ஊடகம் வெள்ளை மாளிகைக்கும் பெண்டகனுக்கும் ஆன அரை உத்தியோகபூர்வ கொள்கைப்பிரச்சார உறுப்பின் பாத்திரத்தை அதிகரித்த அளவில் பாவனை செய்கிறது.

தொலைக்காட்சி வலைப்பின்னல்களில், செய்தி அறிவிப்பாளர்கள் எப்பொழுது மற்றும் எப்படி அமெரிக்க ஐக்கிய அரசுகள் சதாம் ஹூசைனை "அகற்றும்" என்பது பற்றி ஊகம் செய்தனர். அதிலும் மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் பிரதான அமெரிக்க நாளிதழ்களின் தலையங்க பக்கங்களில் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை கிளிப்பிள்ளை போல் கூறுவதில் மற்றும் ஈராக்கிய ஆக்கிரமிப்பை எவ்வாறு சிறப்பாகத் தயாரிக்கலாம் என நட்பு ஆலோசனை கூறுவதில் கிட்டத்தட்ட கருத்தொற்றுமை இருப்பதாகும்.

ஏனைய பிரதான நாளிதழ்களைப் பற்றிக் கூறவே தேவையில்லை, ஒலிபரப்பு ஊடகத்தில் உள்ள அவர்களின் எதிரிணையாளர்களைப் போலவே, நியூயோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வோல்ஸ்ட்ரீட் பத்திரிகை ஆகியவற்றின் ஆசிரியத் தலையங்க எழுத்தாளர்கள், ஈராக்கிற்கு எதிரான போருக்கான புஷ் நிர்வாகத்தின் நியாயப்படுத்தலை எடுத்த எடுப்பில் ஏற்றுக் கொள்கின்றனர். இராணுவ ஆக்கிரமிப்புக்கான தெளிவான சாக்குப்போக்குக்கு முண்டு கொடுக்கும் விதமாய் உரத்த ஒலியுள்ள குதர்க்கம் ஒன்றை வழங்கும் அதேவேளை, "பரந்த மக்களை அழிக்கும் ஆயுதங்கள்" பற்றிய மந்திரத்தை அவை திருப்பிக் கூறுகின்றன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு புஷ் ஆற்றிய உரையை அடுத்தும் ஆயுத பரிசோதகர்களை அது திரும்ப அனுமதிக்கும் என்ற ஈராக்கின் அறிவிப்பை அடுத்தும் செப்டம்பர் 18 அன்று மூன்று செய்தித்தாள்களால் வெளியிடப்பட்ட ஆசிரிய உரைகளில் இதுதான் விஷயமாக இருக்கிறது.

டைம்ஸ் ஆனது ஈராக் ஆயுதப் பரிசோதகர்களை மீள அனுமதிப்பதற்கான ஈராக்கின் உடன்பாட்டை "இரட்டுற மொழிதல்" என தள்ளுவதன் மூலம் அதன் ஆசிரிய உரையைத் தொடர்ந்தது அது இப்பொழுது நாளிதளுக்கான பிரபல சடங்கைப் பின்பற்றுகின்றது; வெள்ளை மாளிகையில் வீற்றிருப்போரின் அரசியல் ஆண்மை மற்றும் பேச்சுத்திறமையாக அதி தகுதி அற்றதைப் படம் பிடித்துக்காட்டுவதற்கான அடிமைத்தனமாகப் புகழ்தல் ஆகும். தாராண்மை அமைப்பைப் பொறுத்தவரை கடந்து செல்லும் இந்த உறுப்பின் சிறப்புப் பாத்திரம் தேர்தல் பித்தலாட்டம் நீதிமன்ற பொருத்தநிலை ஆகியவற்றின் அடிப்படையில், அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட நிர்வாகத்திற்கு சட்டபூர்வதன்மையின் ஒளிவட்டத்தை வழங்குவதாகும் மற்றும் ஆளும் தட்டிற்குள்ளே மிகவும் குற்றத்தன்மை வாய்ந்த மற்றும் பிற்போக்கு சக்திகளின் பூகோள வேட்கைகள் தவிர சிலவற்றை அதன் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட புனைகதையை பராமரிப்பதாகும்.

ஈராக் மரபு அல்லாத நவீன ஆயுதத் தளவாடங்களைக் கொண்டிருப்பதன் காரணமாகவும் அணு ஆயுத ஏவுகணைகளை இறக்கும் நிலையில் இருப்பதன் காரணமாகவும் அது அமெரிக்க மக்களுக்கும் உலகுக்கும் உடனடியான ஆபத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது என்ற அவரது கூற்றை ஆதாரப்படுத்துவதற்கு ஜனாதிபதி சான்று வழங்கவில்லை என்பதை அலட்சியம் செய்து விட்டு. புஷ்ஷின் ஐ.நா சபை உரைக்கு பதிலில், டைம்ஸ் "ஜனாதிபதி புஷ்ஷால் கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட விவரங்களின் பட்டியல் விரிவானதாகவும் விலக்க முடியாததாகவும் இருந்தது" என எழுதியது.

மிகவும் புலனியல் காட்சி காணும் --அல்லது இன்னும் சொல்லப்போனால், மிக நேர்மையான--அவதானிப்பாளர்கள் புஷ்ஷின் தோற்றத்தை, அப்பொழுது ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர், கியூபாவில் சோவியத் ஒன்றியம் ஏவுகணைத் தளங்களை அமைக்கிறது என்பதற்கு உளவுப் படங்களை மற்றும் ஏனைய ஸ்தூலமான ஆதாரத்தை முன்வைத்தபொழுது, 1962 அக்டோபரில் அட்லை ஸ்டீவன்சனது (Adlai Stevenson) தோற்றத்துடன் மாறுபட்டுக் காண்பர். புஷ் அத்தகைய நிரூபணம் எதனையும் முன்வைக்காதது, அவரது குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாய் நம்பவைக்கும் சான்றை அவர் கொண்டிருக்கவில்லை என்ற தெளிவான முடிவுக்கு இட்டுச்செல்கிறது. அவரது பேச்சு ஒரு இறுதி எச்சரிக்கையை சேர்த்தது: பாக்தாதில் ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவும் அமெரிக்க போர் நோக்கத்தினை ஆராயாது அங்கீகரிக்க வேண்டும் அல்லது அது (ஐ.நா) "பொருத்தமற்றது" என்பதற்கு தீர்த்தொதுக்கப்படும் மற்றும் வாஷிங்டன் அதன் அனுமதி இன்றி மேற்செல்லும்.

புஷ்ஷின் வேண்டுதலானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 16 தீர்மானங்கள் ஈராக்கால் மீறப்பட்டது என குற்றம் சாட்டியுரைத்தபடி, டைம்ஸ் தொடர்கிறது: ".......அவை மட்டும்தான் பிரச்சினைகளாக இருந்தால், வாஷிங்டன் ஐக்கிய நாடுகள் சபையை ஹூசைன் ஆட்சியுடன் மோதுவதற்கு அழுத்தம் கொடுத்திருக்கும். விரிவான அக்கறைக்கு ஈராக்கை ஆளாக்கி இருப்பது... பாக்தாதின் அணு ஆயுதங்களின் வேலைத்திட்டத்தை கலைத்துவிடுமாறும் அதனது உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்களை மற்றும் அவற்றைச் செய்வதற்கான பொருட்களையும் அழித்துவிடுமாறும் கூறும் அறிவுறுத்தல்களை திரு . ஹூசைன் மறுத்தல் ஆகும்."

இவ்வாறு, செய்தித்தாளானது புஷ்ஷின் அணு ஆயுதங்கள் பற்றிய நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை அதுவே சான்று என காட்டுகின்றது. அணு ஆயுத கருவிகள் உட்பட, "பரந்த அழிவை ஏற்படுத்தும் கருவிகளை "பாக்தாத் கட்டுகிறது என்று கூறப்படுவதற்காக இல்லாத ஒரு போருக்காக புஷ் நிர்வாகம் "அழுத்தம் கொடுக்காது" என அது வலியுறுத்துகின்றபொழுது, அது தெரிந்தே பொய் சொல்கிறது. புஷ் நிர்வாகத்தில் மிகவும் செல்வாக்குள்ள நபர்களான --உதவி ஜனாதிபதி டிக்செனி, பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் மற்றும் துணை பாதுகாப்பு செயலாளர் பால் வொல்போவிட்ஸ்-- முதலாவது வளைகுடாப் போர் முடிவுற்ற ஒரு தசாப்தத்தின் பின்னர், "சதாம் ஹூசைன் ஆட்சியுடன் ஒரு மோதலுக்காக" அழுத்தம் கொடுத்திருக்கின்றனர்.

செப்டம்பர்11க்குப் பின்னர், பாக்தாத் மீதான தாக்குதலை நியாயப்படுத்த, விமானக் கடத்தல்காரர்களுக்கும் ஈராக்கிய உளவுத்துறைக்கும் இடையில் பயங்கரவாத தாக்குதல்கள் மீதான அதிர்ச்சியையும் கோபத்தையும் பயன்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் நாடினர். இந்தப் பொய் அம்பலப்படுத்தப்பட்ட பிறகும் கூட, பாக்தாதிற்கும் அல்கொய்தாவிற்கும் இடையில் தொடர்பு பற்றி ஆதாரமற்ற கூற்றுக்களை அவர்கள் தொடர்ந்து பரவவிட்டனர். அதேபோல, கொலைகார கடிதங்கள் அமெரிக்க இராணுவத்திற்குள்ளே/ உளவுத்துறைக்குள்ளே அதன் தோற்றுவாயைக் கொண்டிருந்தது என்று சாட்சியம் நிரூபிக்கப்படும் வரைக்கும், அவர்கள் கடந்த ஆண்டு அந்த்ராக்ஸ் தாக்குதல்களை ஈராக்குடன் தொடர்புபடுத்த முயற்சித்தனர்.

போருக்கான நியாயப்படுத்தலாக அவர்கள் "பரந்த அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை" விட்டிருக்கின்றனர். ஈராக்கில் ஐ.நா உயர் ஆயுதப் பரிசோதகரான முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரும் ஏழு ஆண்டுகள் அதில் பணியாற்றியவருமான ஸ்காட் ரிட்டருடைய மதிப்பீட்டை மறுதலிக்கும் ஆதாரத்தை நிர்வாகம் எங்குமே வைக்கவில்லை. அவர் கூறினார்: "1998க்குப் பின்னர், ஈராக் அடிப்படை ரீதியில் நிராயுதபாணி ஆகிவிட்டது." முன்னாள் காலனித்துவ நாடு 1991ல் அமெரிக்க இராணுவ பலத்தால் சூறையாடப்பட்டது மற்றும் அது பாழ்படுத்தும் பொருளாதாரத் தடைகளுக்குக் கீழ்ப்படுத்தப்பட்டுள்ளது முதற்கொண்டு அது உலகுக்கு பேராபத்தான மற்றும் உடனடி அச்சுறுத்தலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று நிர்வாகம் கருத்தார்ந்த விவாதத்தை முன்வைக்க முடியாது.

"பெரும்பாலான அமெரிக்கர்களைப் போல, இந்த நெருக்கடியின் அமைதியான தீர்மானத்தை நாம் வரவேற்போம்" என டைம்ஸ் புனிதத்தனமாய் அறிவிக்கிறது. ஆனால் பாக்தாதினால் என்ன விட்டுக்கொடுக்கப்படுகின்றன என்பது பொருட்டல்ல, "பெரும்பாலான அமெரிக்கர்கள்" எதை விரும்பினாலும் -- புஷ் நிர்வாகமானது போரைத் தவிர வேறு எதனையும் ஏற்றுக்கொள்வதற்கு தயாரிப்பு செய்யவில்லை என்பது சந்தேகத்திற்கிடமில்லாதது.

டைம்ஸில் சிடுசிடுப்பு "அமைதியான தீர்மானம்" ஒரு மாற்றுத் தேர்வு என்பதில் அவர்களுக்கு பிரமைகள் இல்லை என சொல்லிச்செல்கிறது. இருப்பினும், போருக்காக தயாரிக்கும் சிறந்த வழி அமெரிக்காவானது ஒரு அமைதியான மாற்றீடை பின்பற்றுவதில் உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கிறது என்ற பாசாங்கை பராமரிப்பதாக இருக்கிறது. புஷ் வெள்ளைமாளிகையை எதிரொலித்து, பத்திரிகையானது ஐ.நா பாதுகாப்பு சபை "உடன்படுவதற்கான யதார்த்தபூர்வமான காலக்கெடுவுடன், அதன் ஆயுதம் அகற்றும் கோரிக்கைகளை மீள உறுதிப்படுத்தும் கடினமான புதிய தீர்மானத்தை அங்கீகரிக்கிறது, "அந்தத் தீர்மானம்" ஈராக் பின்வாங்கினால் இராணுவம் தொடர்வது விரும்பத்தக்கது என்று தெளிவான எச்சரிக்கையை சேர்த்துக் கொள்ள வேண்டும்" என்று இன்னும் சேர்த்தது.

ஆசிரிய உரை புஷ் போர் சூழ்ச்சிக்கு துண்டு ஆலோசனையை வழங்குவது, சிறிய தந்திரோபாய வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறது. பாதுகாப்பு சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதா அல்லது இரு தீர்மானத்தை நிறைவேற்றியதா --முதலாவது, பரிசோதனைகள் மீதாக போர் அச்சுறுத்தல், மற்றும் இரண்டாவது, அதனை அங்கீகரித்தல்-- என்பது பற்றி சொல்விளையாட்டில் ஈடுபடல் வேண்டாம் என அது வெள்ளைமாளிகையை வலியுறுத்தியது. வாஷிங்டன் "ஐ.நாவுக்கு ஒவ்வொரு நகர்வையும் அறிவுறுத்த வேண்டும் என எதிர்பாக்க முடியாது" என்று அது ஆலோசனை கூறியது.

வாஷிங்டன் போஸ்டில், அதன் அணுகுமுறையில் மிகவும் இராணுவ அச்சுறுத்தல் ஏதாவது இருக்குமாயின், "சோதனைகள் பொறி" என தலைப்பிடப்பட்ட அதன் ஆசிரிய தலையங்கம் ஆகும். அச்செய்தித்தாள் முழுவதும் புஷ்ஷின் புகழாரமாக இருந்தது. அவர் "ஐக்கிய நாடுகள் சபைக்கு அவரது காரணத்தை எடுத்துச் செல்வதில் சரியாக இருக்கிறார்", அதன் ஆதரவு "பாக்தாதின் பரந்த அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை அழிப்பதற்கும் ஸ்திரமான மற்றும் முற்போக்கு அரசாங்கத்தால்-- அதாவது அமெரிக்க கைப்பொம்மை ஆட்சியால் சதாம் ஹூசைனை இடப்பெயர்ச்சி செய்ய ஒரு பரந்த கூட்டை உயிர்ப்பிக்க முடியும்."

ஈராக்கின் முழு ஒத்துழைப்புடன் கூட, "பரந்த அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை ஈராக் சேமித்து வைத்திருக்கிறதா மற்றும் எப்படி சேமித்து வைத்திருக்கிறது என உத்தியோகபூர்வமான தீர்மானத்திற்கு ஒரு வருடம் எடுக்க முடியும்" என ஆசிரிய உரை எச்சரிக்கிறது. அமெரிக்கா அத்தகைய தீர்மானத்திற்காக காத்திருக்கக்கூடாது, போஸ்ட் ஆலோசனை கூறியது, ஆனால் பதிலாக "ஈராக் உடன்பட்டுப்போகாத முதல் செயலுடன் பலப்பிரயோகத்திற்காக அனுமதிக்கும் சிறப்பு விசைகளை" உள்ளடக்குவதற்கு, "விரைவுபடுத்தப்பட்ட" ஒரு பரிசோதனை திட்டத்தை வகுக்க வேண்டும். "சாத்தியமுள்ள இராணுவ தாக்குதலுக்கான தயாரிப்புக்களை" தொடர அது மேலும் வலியுறுத்தியது, "அப்பொழுதுதான் தாமதப்படுத்தும் நடவடிக்கை பாதுகாப்பு சபையிலிருந்து வரும் பலனற்ற அறிக்கைகளுக்கு அப்பால் விளைவுகளை வரவேற்கும்."

போஸ்ட் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பகுதியினரால் விடப்படும் கருத்தை, எந்த புதிய ஆயுத பரிசோதனை திட்டமும் இராணுவ "அமல் படுத்தும்" சக்தியால் பிற்சேர்ப்பாக ஆக்கப்படும் என்று குறிப்பதை அங்கீகரித்தது. இது -- ஈராக் தேசிய இறையாண்மை பற்றிய கூற்றை கைவிடுவதை மற்றும் அமெரிக்கப் படை உள்பட, வெளியாட்டுப் படைகளை அதன் மண்ணில் இருப்பதற்கு இணங்க வேண்டும் என்ற கோரிக்கையின் வகை-- திட்டவட்டமாக நிராகரிப்பதற்கு வடிவமைக்கப்பட்டது. இது 1999ல் ரம்புயே (Rambouillet) "அமைதிப் பேச்சுக்களில்" பெல்கிரேடுக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கைகளை நினைவூட்டுகிறது, அது அமெரிக்காவிற்கும் நேட்டோவுக்கும் ஏற்கனவே தீர்மானித்திருந்த போரைத் தொடுப்பதற்கு ஒரு சாக்குப்போக்கை வழங்கியது.

இவ்வாறு, ஆயுதப் பரிசோதகர்களை ஈராக் திரும்ப அனுமதிப்பதற்கு முன்வருதலை சதாம் ஹூசைனின் "புத்தம் புதிய (காய்களை வெட்டுக்கொடுத்து ஆடும்) விளையாட்டு முறை" என தள்ளுபடி செய்யும் அதேவேளை, ஆசிரிய உரையானது, பரிசோதனைக்கான கோரிக்கை, ஈராக் வாஷிங்டன் கூறுகிறவாறு ஆயுதங்களை உண்மையில் அபிவிருத்தி செய்துள்ளதா என்பதைத் தீர்மானம் செய்வதை நோக்கங்கொண்டது அல்ல, மாறாக அமெரிக்க ஆக்கிரமிப்புக்கான சாக்குப்போக்கை வழங்குவதற்கே ஆகும் என்பதைத் தெளிவாக்குகிறது.

செப்டம்பர்22 அன்று, போஸ்ட் "ஈராக் முடிவு" என்று தலைப்பிடப்பட்ட இன்னொரு ஆசிரிய உரையைத் தொடர்ந்த்து, அது "பார்ப்பதற்கு பலவீனமான பகைவர்களால் பெரும் தீங்கு செய்யக்கூடிய இந்த சகாப்தத்தில், ஈராக்கால் முன்வைக்கப்படும் அத்தகைய அச்சுறுத்தல் கட்டாயமாக வெறுமனே நடத்தப்பட முடியாது மாறாக கடுமையாக நடத்தப்பட வேண்டும் என்ற படிப்பினையை "9/11 அதிர்ச்சி இந்த நாட்டிற்குக் கொடுத்திருக்கிறது" என விளக்கமளித்துக் கொண்டு, புஷ்ஷின் போர்த்திட்டங்களுக்கு வெளிப்படையாக அங்கீகாரம் வழங்கியது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள நலன்களுக்கு ஒரு தடையாகக் கருதப்படும் எந்த "பலவீனமான" நாட்டிற்கும் எதிரான இராணுவ நடவடிக்கைக்கான ஒரு நியாயப்படுத்தலாகும்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மேலாதிக்கம் செய்யும் அதிவலதுசாரி சக்திகளின் சிந்தனையை மிக நெருக்கமாய் அடியொற்றிச்செல்லும், வோல்ஸ்ட்ரீட் பத்திரிக்கையின் ஆசிரிய உரை, டைம்ஸ் அல்லது போஸ்டை விட மிக வெளிப்படையாக ஆணவம் பிடித்ததாக இருக்கிறது. அமெரிக்கப் போருக்காக பாதுகாப்பு சபையின் அங்கீகாரத்தை வேண்டிக் கொண்டு, அது அதன் செப்டம்பர் 18 ஆசிரிய உரையில் " எந்த நடவடிக்கையையும் தாமதம் செய்வது சிறந்த ஆக்கிரமிப்புக் காலமான குளிர் பருவத்தை கடந்துபோனதாக்கிவிடும்" என எச்சரித்தது.

அப்பத்திரிகையானது புஷ் நிர்வாகத்தை அரித்தழிக்கும் போர் வேட்கையை மறைப்பதற்கு முயற்சிக்கவில்லை. அது "உண்மையில் சதாமை நிராயுபாணி ஆக்கக் கூடிய ஒரே ஒரு வகை சோதனை ஆட்சி அங்கு இருக்கிறது --அது கவச வண்டி மற்றும் வான்படை ஆற்றலால் உதவி அளிக்கப்படும் 82வது வான்வழி இறக்கும் படை" என்று அறிவித்துக்கொண்டு, அது அதனைப்பற்றி பகட்டாரவாரம் செய்தது.

அதன் அரசியல் நிகழ்ச்சி நிரலை மேலும் முன்னெடுக்க மிகவும் நம்புதற்கரிய பொய்களையும் அவதூறுகளையும் பயன்படுத்துதற்கான பத்திரிகையின் ஆசிரியப் பக்கத்தின் மனவிருப்பத்தின் எடுத்துக்காட்டு, அமெரிக்காவில் மேற்கு நைல் வைரஸ் அண்மையில் பரவியதற்குப் பின்னால் எப்படியோ சதாம் ஹூசைன் இருக்கிறார் என்ற கருத்துரைப்பாகும்.

போர்ப் பறையை அடிப்பதற்கு அதன் வெட்கங்கெட்ட அணுகுமுறையை அது வைத்திருப்பதில், பத்திரிகையானது இரண்டு நாட்கள் முன்னதாக ஒரு ஆசிரிய உரையில் ஈராக்கிற்கு எதிரான உண்மையான நோக்கத்தைச் சுட்டிக் காட்டியது. "எண்ணெய் விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான சிறந்த வழி, ஈராக் மீதான காலம் தாழ்த்தல் அல்லாத விரைவில் தொடங்குகின்ற ஒரு குறுகியகால, வெற்றிகரமான போராகும்," என அது எழுதியது.

தற்போதிருக்கும் போரின் உண்மையான இலக்கு இதுதான் என்பது நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் குழுவை நடத்துபவர்களுக்கு நன்கு தெரியும். "பரந்த அழிவை உண்டு பண்ணும் ஆயுதங்கள்" -ன் சாக்குப் போக்கிற்குப் பின்னால் மற்றும் ஆயுத பரிசோதனைகளின் "விசைகளுக்கு" பின்னால், ஈராக்கிற்கு எதிரான போரின் நோக்கம், நிரூபிக்கப்பட்ட எண்ணெய் சேர்ம இருப்புக்களின் அர்த்தத்தில் செளதி அரேபியாவுக்கு மட்டுமே இரண்டாவது இடமாக இருக்கும், அதன் எண்ணெய் வயல்களைக் கைப்பற்றல், மற்றும் முழு வளைகுடாப் பிராந்தியம் மீதும் சவால் செய்யப்பட முடியாத அமெரிக்கக் கட்டுப்பாட்டை நிலைப்படுத்துதல் ஆகும்.

அமெரிக்க போர் தயாரிப்பு தொடர்பான பத்திரிகைகளின் நடத்தை பற்றிய இரண்டாவது அம்சம், ஒரு தலைப்பட்சமான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கான ஆதரவை நிறுத்தி வைப்பதற்காக ஜேர்மனி மற்றும் ரஷ்யாவை கண்டனம் செய்யும் நச்சுத்தன்மையுள்ள வர்ணனைகள் மற்றும் வன்மம் பாராட்டும் தொனியும் ஆகும். எடுத்துக்காட்டாக, வாஷிங்டன் போஸ்ட், இரு நாடுகளையும் "சதாம் ஹூசைனை திருப்திப்படுத்துபவர்கள்" என்று முத்திரை குத்தியது.

தனி ஆசிரிய உரையில், போஸ்ட் ஜோர்ஜியாவில் இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துதற்கு பயங்கரவாத்த்தைத் தூண்டுவதற்காக விளாதிமிர் புட்டினின் அரசாங்கத்தைக் கண்டனம் செய்தது. அதனை "முன்னதே தாக்கித் தனதாக ஆக்கிக் கொள்வதற்கான தாக்குதல் எனும் திரு புஷ்ஷின் புதிய கோட்பாட்டில் பழைய பாணியிலான இராணுவ ஆக்கிரமிப்பை மூடிமறைக்கும் வியப்பூட்டும் அப்பட்டமான முயற்சி" என பண்பிட்டது. அந்தக் குறிப்பிட்ட "மூடிமறைப்பு" க்கான காப்புரிமையை ஐக்கிய அமெரிக்க அரசுகள் கொண்டிருப்பதாக ஆசிரிய உரை ஆசிரியர்கள் வெளிப்படையாக நம்புகின்றனர்.

வோல்ஸ்ட்ரீட் பத்திரிகை ஈராக் மீதான அமெரிக்கப் போரை எதிர்க்கும் ஜேர்மன் அதிபர் Gerhard Schröder- ஐ கண்டிக்கும் பல ஆசிரிய உரைக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறது. கிறித்தவ ஜனநாயக சங்கத்தின் நிழல் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் Wolfgang Schauble-க்கு ஜேர்மன் தேர்தல் நிகழ்வு பற்றிய அதன் ஆசிரிய உரைப் பக்கங்களை ஆரம்பிக்கின்ற பொழுதும் கூட அதனை வெளியிட்டிருக்கிறது.

ஜேர்மன் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மோதலுறும் நலன்களை அல்லது ரஷ்யாவில் உள்ள அவற்றை புறநிலை ரீதியாக எண்ணிப்பார்ப்பதற்கு முயற்சி செய்யப்படவில்லை. நிகழ இருக்கும் போரை அணுகும் அனைத்துப் பிரச்சினைகளிலும் போலவே, இதன்மீதும் இதழியல்துறையின் அடிப்படை கடப்பாடு உத்தியோகபூர்வ உச்சரிப்புக்களின் முன்னர் ஐயுறவாக தொடர்ந்து இருந்தது, புலனாய்வது, கல்வியூட்டுவது மற்றும் பொதுமக்களுக்கு அறிவிப்பது ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. மிகவும் பலவீனமான நாடுகளுக்கு எதிரான தூண்டப்படாத போர்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கு மற்றும் தனது சொந்த அரசாங்கத்தைத் திணிப்பதற்கு அமெரிக்கா "உரிமை" பெற்றிருக்கிறதா என்பது ஒரு விஷயமாகக் கூட இல்லை. பதிலாக, புஷ் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை கிளிப்பிள்ளை போல் கூறுவது, அமெரிக்க நலன்களை சவால் செய்யும் எந்த போட்டி வல்லரசையும் இந்த செய்தித்தாள்கள் இழிவு படுத்துவதும் இருக்கிறது.

செய்தி ஊடகம் மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு இடையிலான ஒத்துழைப்பு புதியது அல்ல. William Randolph Hearst போன்ற பத்திரிகைக் கோமான்களினதில் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இழிபுகழ் பெற்ற "மஞ்சள் இதழியல்" ஆகியவற்றில் ஒருவர் இதனைப் பார்க்க முடியும், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பல் முளைக்கப் பெறுகையில், அந்தப் பாத்திரத்திற்கான ஒரு தெளிவான முன் நிகழ்வை பத்திரிக்கைகள் இன்று ஆற்றுகின்றன.

20ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில், "சுதந்திரப் பத்திரிகைகள்" என கூறப்படுவனவற்றுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான புதிய ஒத்துழைப்பு, உலக அரங்கில் அமெரிக்க நடவடிக்கைகளை "கொடுங்கோன்மைக்கு" எதிரான "விடுதலை" யின் பாதுகாப்பாக ஆசிரிய உரையாளர்கள் காட்டுவதுடன், கம்யூனிச எதிர்ப்பு மீது நிறுவப்பட்டது.

இருப்பினும், பத்திரிகை அமைப்புக்குள்ளே குறிப்பிட்ட அளவு விமர்சனத்திற்கு மற்றும் அமெரிக்க இராணுவ வாதத்துக்கும் ஆளும் தட்டின் ஏகாதிபத்திய சூறையாடல்களுக்கும் எதிர்ப்புக்குக் கூட இடம் இருந்தது. நியூயோர்க் டைம்ஸ் நிக்சன் நிர்வாகத்தை சவால் செய்து 1971ல் "பெண்டகன் தாள்களை" வெளியிட்டதை மற்றும் ஒரு ஆண்டு கழித்து வாஷிங்டன் போஸ்ட் பாப் உட்வர்ட் மற்றும் கார்ல் பெர்ன்ஸ்டைன் ஆகியவர்களின் வாட்டர்கேட் அம்பலப்படுத்தல்களை வெளியிட ஆரம்பித்ததையும் நினைவு கூருதல் அறிவூட்டத் தக்கதாக இருக்கிறது.

இன்று, வாஷிங்டன் சில உயர் அழைப்புக்களை, பூகோள திட்டப் பணியை ஜனநாயகப்படுத்தலை பின்பற்றுகிறது என பழையவற்றின் சிறிய அளவு --மற்றும் போலி-- நடிப்புக்கள் அங்கு இருக்கிறது. இருந்தும் செய்தி ஊடகமானது, அரசாங்க நிலையில் இருந்து எந்தவிதமான அதிருப்தியின் மறைமுகக் குறிப்பையும் உண்மையில் விலக்குகிறது. பதிலாக, இன்னொரு செப்டம்பர்11-ஐ தடுப்பதற்கு அது அவசியம் என்ற அடிப்படையில் போருக்கு அமெரிக்க மக்களை உணர்ச்சியின்றி இணங்கச் செய்வதற்கு அது பயங்கரமூட்டுவதை நாடுகிறது.

வெல்வதற்கான நவ காலனித்துவப் போருக்கு ஆதரவு தருவதில் நியூயோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ேவால்ஸ்ட்ரீட் பத்திரிைக ஆகியவற்றின் உறுதியான அணியானது இரு தீர்க்கமான அரசியல் உண்மைகளை எதிரொலிக்கிறது. முதலாவது, போருக்கு ஆதரவு அமெரிக்க முதலாளித்துவ அரசியலின் முழு ஒளிக்கற்றையிலும் நிலவுகிறது. இரண்டாவது, ஆளும் தட்டினுள் உள்ளே உள்ள படுபிற்போக்கு மற்றும் இராணுவ சக்திகளுக்கு முன்னால் அமெரிக்க தாராண்மைவாதம் சிதறுண்டு போனது மற்றும் மண்டியிட்டது.

இந்த அரசியல் யதார்த்தங்கள் இரண்டிலும் கீழே இருப்பது அமெரிக்க ஜனநாயகத்தின் ஆழமான வீழ்ச்சியாகும். பத்திரிகையின், பொய் கூறும் மற்றும் போர் தூண்டும் பாத்திரமானது ஜனநாயக நிறுவனங்களின் இன்னும் பொதுவான பொறிதலின் மற்றும் அவற்றின் பாதுகாப்புக்கு அர்ப்பணிக்கும் எந்த பிரிவும் (கன்னை) ஆளும் வர்க்கத்திற்குள்ளே இல்லாமையின் ஒரு வெளிப்பாடாகும். அதுதான் சர்வதேசரீதியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பின் உள்நாட்டு ரீதியில் தவிர்க்க முடியாத அரசியல் இயல்விளைவாகும்.

See Also :

சர்வதேச சங்கத்திற்கு உண்மையில் என்ன நிகழ்ந்தது

புஷ் நிர்வாகம் போரை விரும்புகிறது

ஐ.நா சபையில் புஷ்: உலகத்துக்கு வாஷிங்டனின் போருக்கான இறுதி எச்சரிக்கை

செனியின் போருக்கான விவரம்: பரந்த பொய்களும் வரலாற்று ரீதியான பொய்மைப்படுத்தல்களும்

Top of page