World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

May Day in France: 1.5 million march against neo-fascist Le Pen
Socialist Party, unions campaign for Chirac

பிரான்சில் மேதினம்: நவபாசிச லு பெனுக்கு எதிராக பதினைந்து இலட்சம் பேர் அணிவகுப்பு

சோசலிசக் கட்சி, தொழிற்சங்கங்கள் சிராக்கிற்காக பிரச்சாரம் செய்கின்றன

By David Walsh in Paris
2 May 2002

Use this version to print | Send this link by email | Email the author

தசாப்த காலங்களாக பாரிசில் நடைபெற்ற மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களுள் ஒன்றில், இலட்சக் கணக்கான தொழிற் சங்கவாதிகள், மாணவர்கள்,புலம் பெயர்ந்தோர் மற்றும் தொழிலாளர்கள், பிரான்சில் ஜோன் மரி லு பென் மற்றும் அவரது தேசிய முன்னணியால் பிரதிநிதித்துவப் படுத்தப்படும், அதி வலதுசாரியினரை எதிர்த்து மே 1 அன்று அணி நடையிட்டனர். பிரான்சு முழுவதும் பதினைந்து இலட்சம் பேர் என மதிப்பிடப்படும் எண்ணிக்கையினர் லு பென் எதிர்ப்பு ஊர்வலங்களில் பங்கேற்றனர்.

பாரிஸ் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுடன், சுமார் 400 உள்ளூர் எதிர்ப்பு போராட்டங்களும் நடத்தப்பட்டன, பெரிய அளவில் லியோனில் (50,000), போர்டோ, துலூஸ் மற்றும் க்ரோனோபிள் (40,000), மார்சை, லில் மற்றும் நாந் (30,000) மற்றும் ஸ்ராஸ்பேர்க்கில் (15,000) என பங்கு கொண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடந்தன. சென்ட்-நசேர் (14,000) மற்றும் றுவான் (13,000) போன்ற சிறிய நகர்களிலும் கூட கணிசமான அணிவகுப்புக்கள் நடைபெற்றன.

லு பென் ஏப்ரல் 21ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் 17.2 சதவீத மக்கள் வாக்குகளைப் பெற்று, சோசலிஸ்ட் கட்சியின் பிரதமரும் ஜனாதிபதி வேட்பாளருமான லியோனல் ஜொஸ்பனை முந்தி வந்தார். லு பென் பெற்ற இரண்டாவது இடமானது அவரை ஜனாதிபதி பதவி வகிக்கும் கோலிஸ்ட் கட்சியின் ஜாக் சிராக்கிற்கு எதிராக வரவிருக்கும் தேர்தலில் நிறுத்துகிறது. அந்த இரண்டாவது சுற்று மே 5, ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது.

முதல் சுற்றில் ஜொஸ்பனின் பொறிவு மற்றும் லு பெனின் வெற்றி பிரான்ஸ் முழுவதும் அரசியல் அதிர்ச்சி அலையை அனுப்பியது. அரசாங்க இடது கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் செய்தி ஊடகம் ஆகியவற்றின் பதிலானது சிராக்கை மீண்டும் தேர்ந்தெடுப்பதன் பின் பாசிச எதிர்ப்பு உணர்வை கொண்டு செலுத்துவதாக இருந்து வருகிறது. சிராக் வலதுசாரி சட்ட ஒழுங்கு பிரச்சாரத்தைச் செய்வதுடன் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள் மீது தாக்குதல்களை உக்கிரப்படுத்த ஆதரவு தருகிறார்.

பெரும் மேதின எதிர்ப்பின் தலைமையினர் அதனை சிராக்கிற்கான தேர்தல் அணிதிரளலாகத் திருப்ப ஒவ்வொரு முயற்சியையும் செய்தனர்.

உண்மையில் பாரிசில் லூ பென் எதிர்ப்பு அணிவகுப்புகள் நான்கு நடைபெற்றன. தொழிற் சங்கங்களால் ஒழுங்கு செய்யப்பட்ட மற்றும் டசின் கணக்கான இடதுசாரி மற்றும் எதிர்ப்பு இயக்கங்களால் ஆதரிக்கப்பட்ட பிரதானமான ஒன்றுக்கு, Place de la République எனும் இடத்திலிருந்து Place de la Nation வரை செல்வதற்கு பல மணி நேரங்கள் பிடித்தன. போலீசார் ஊர்வலத்தினருக்கு புதிய வழித்தடங்களை உண்டு பண்ணி வசதி செய்து தரவேண்டிய அளவுக்கு கூட்டம் பெரிதாக இருந்தது, அவர்களில் பெரும்பாலோர் ஊர்வலத்தைத் தொடங்குவதற்கு முன்னரே பலமணி நேரங்களாக காத்துக் கிடந்தனர்.

அக்கூட்டமானது, பிரெஞ்சு உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக இருந்தது, அதேபோல அதன் இளந் தலைமுறையினரின்: தொழிற்சங்கவாதிகள், முறைசாரா தொழிலாளர்கள், அரபு மற்றும் ஆபிரிக்க புலம்பெயர்ந்தோர், அதேபோல வியட்நாமியர்கள், சீனர்கள் மற்றும் துருக்கிய புலம் பெயர்ந்தோர், தொழில் நுட்ப மற்றும் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள், உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்திலிருந்து வந்த மாணவர்கள் மற்றும் வேலை இல்லாதோர் இவர்களின் பிரதிநிதியாக இருந்தது.

அரசியல் ரீதியாக ஸ்ராலினிச கம்யூனிச கட்சியுடன் இணைந்த சி.ஜி.டி-ன் தொழிற்சங்கத் தலைவர் பேர்னா திபோல் மற்றும் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்துள்ள CFDT-ன் நிக்கோல் நோத்தா பிரதான பேரணியின் முன்னணியில் இருந்தனர், அவர்களுடன் இனவாதத்திற்கு எதிரான மற்றும் மக்களுக்கிடையே நட்புறவுக்கான இயக்கத்தின் Mouloud Aounit, விவசாயிகள் கூட்டமைப்பின் ஜொசே போவே (1999ல் மக் டொனால்ட் சிற்றுண்டி விடுதியைத் தாக்கியதில் பிரபலமானவர்) மற்றும் பசுமைக் கட்சியினரின் டானியல் கோன்-பென்டிட் மற்றும் பசுமைக் கட்சியின் நோயல் மாமேர் ஆகியோரும் இருந்தனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் பாரிஸ் அணிவகுப்பில் தலையீடு செய்தன, ஏப்ரல் 21 அன்று 10 சதவீதத்திற்கும் அதிகமாக இணைந்து வாக்குகளைப் பெற்ற - Lutte Ouvrière (LO), Ligue Communiste Révolutionnaire (LCR) மற்றும் Parti des Travailleurs (PT) ஆகிய இடதுசாரிக் கட்சிகள் மத்தியில் ஆயிரக் கணக்கான பகிரங்கக் கடித பிரதிகளை விநியோகித்தன.

உலக சோசலிச வலைத் தளத் திடமிருந்து விநியோகிக்கப்பட்ட பகிரங்கக் கடிதம் "பிரெஞ்சுத் தேர்தலைப் புறக்கணிக்க சிராக் மற்றும் லு பெனை நிராகரி!" என்று தலையங்கமிடப்பட்டிருந்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் மட்டுமே இரண்டு வலதுசாரி வேட்பாளர்களுக்கும் இடையிலான மே5 போட்டியைப் புறக்கணிப்பதற்காக செயலூக்கத்துடன் பிரச்சாரம் செய்த பங்கேற்பாளர்கள் ஆவர்.

LO வும் LCR-ம் அணிவகுத்தன, ஆனால் எதிர்ப்பு ஒழுங்கமைப்பாளர்களுக்கு எதிர்ப்பாக சுதந்திரமான கொள்கையை முன்னெடுப்பதற்கு கருத்தார்ந்த அக்கறையுடன் கூடிய முயற்சி செய்யவில்லை. உலக சோசலிச வலை தளம் ஆர்ப்பாட்டத்தில் அரசியல் பிரசுரத்தை விநியோகிக்கும் ஒரு எல்.ஓ உறுப்பினரையோ அல்லது ஆதரவாளரையோ கூட பார்க்கவில்லை.

ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இந்தக் கட்சிகள், சிராக்கிற்கு வாக்களிக்கும்படி அழைக்கவில்லை, நடைமுறையில் அவர்கள் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் நிலையை தழுவிக் கொண்டு, சிராக்கின் பிற்போக்கு வேலைத் திட்டத்தையும் அதேபோல பாசிச அபாயத்தையும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்வதற்கான சுதந்திரமான (சுயாதீனமான) கொள்கைக்காக, செயலூக்கத்துடன் போராட மறுத்தது. பாரிசில் மேதின ஊர்வலத்தில் அவர்களின் இணங்கிப் போகும் பாங்கு, கோலிச ஜனாதிபதிக்கு ஆதரவான பிரச்சாரத்தில் சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கத்துடன் மோதலைத் தவிர்ப்பதற்காக கணக்கிடப்பட்டது என்பது தெள்ளத் தெளிவாகியது.

பிரான்சில் அரசியல் மற்றும் செய்தி ஊடகத்தால் சிராக்கிற்கு மக்கள் நெருக்கி அடித்துக்கொண்டு வாக்களிக்கவும் அவரது வலதுசாரி வேலைத் திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க உரிமை ஆணையை வழங்குதற்கும் எல்லா முயற்சியும் செய்யப்பட்டு வருகின்றன. அவர்கள் லு பென் தேர்தல் முடிவு பற்றி பதட்டச் சூழ்நிலையை வேண்டுமென்றே உருவாக்கி வருகின்றனர். பின்னவர் முற்றிலும் வெறுக்கத்தக்க மற்றும் பிற்போக்கு நபர் ஆக இருக்கிறார், ஆனால் பாசிச சர்வாதிகாரியாக வரும் உடனடி அச்சுறுத்தல் எந்த அர்த்தத்திலும் இல்லை.

தேர்தல் முடிவுகள் தன்னில் வெளிப்படுத்தப்பட்ட பெரும் அபாயம், உண்மையான சோசலிச முன்னோக்கு அடிப்படையில், தொழிலாள வர்க்கத்திற்கான சுதந்திரமான (சுயாதீனமான) அரசியல் மாற்றின் இல்லாமையிலிருந்து வருகிறது. வளர்ந்து வரும் பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் நெருக்கடி சூழ்நிலைமைகளின் கீழ், இந்த அரசியல் வெற்றிடம், அரசியல் குழப்பத்திற்கான, திசை வழிவிலகலுக்கான மற்றும் சோர்வுக்கான செழிப்பிடமாக ஆவது, பாசிச சக்திகளால் சுரண்ட முடிகிறதாக இருக்கின்றது.

தொழிலாள வர்க்கத்தின் முதுகின் மேல் ஐரோப்பிய ஒருங்கிணைப்பிற்கான பிரான்சை அடிப்படையாகக் கொண்ட நாடுகடந்த நிறுவனங்களின் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கங்கள் அனைத்தும் உடந்தையாய் இருந்தன. தன்னை நிறுவனத்திற்கு எதிரான வேட்பாளராகக் காட்டிக் கொண்டு, தொழிலாளர்கள், வேலை இல்லாதோர் மற்றும் நடுத்தரவர்க்கப் பகுதியினரின் கோபத்தையும் விரக்தியையும் தேசிய, இனவாதம் மற்றும் புலம் பெயர்ந்தோர் விரோத இனவாதத்தின் திசைவழியில் வடிகால்இட்டுக் கொண்டு, தொழிலாளர்கள், வேலை இல்லாதோர் மற்றும் நடுத்தரவர்க்கப் பகுதியினரின் சமூக அக்கறைகளின்பால் லு பென் வாய்ச்சவடால் வேண்டுகோளைச் செய்ய முடிகிறது.

காலையில் லு பெனால் நடத்தப்பட்ட ஊர்வலத்தில், பிரெஞ்சு தேசிய அடையாளமான ஜோன் டார்க்கை கெளரவிக்கும் தேசிய முன்னணியின் ஆண்டு விழா, லு பென் அவரது பாசிசக் கொள்கைக்கு பரந்த மக்கள் ஆதரவைக் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையைக் கோடிட்டுக் காட்டுகிறது. பிரான்சு முழுவதும் இருந்து சுமார் இருபதாயிரம் அல்லது முப்பதாயிரம் மக்கள் பிரெஞ்சுக் கொடியையும் வாசகங்கள் எழுதிய அட்டைகளையும் ஆர்வத்துடன் உயர்த்திக் கொண்டு லு பென்னுக்கு ஆதரவாகக் கூடினர், அந்த அட்டைகள் "பிரெஞ்சு என்பதில் பெருமைகொள்" என்று கூறின.

குறிப்பிட்ட கட்டுறுதியான மற்றும் நவ -நாஜி பாணிகள் ஒருபுறம் இருக்க, தேர்தல் மரியாதை பற்றிய நலன்களுக்காக, கிட்டத்தட்ட கடிவாளமிட்டு கட்டுப்படுத்தப்பட்டிருந்த, லு பென் சக்திகள், இங்குமங்குமாக மாணவ இளைஞர்கள் மற்றும் உறுதியில்லாத நகர்ப்புற சக்திகளையும் கொண்ட, பிரதானமாக சிறு நகர்ப்புறத்து குட்டி முதலாளித்துவப் பகுதியினர் ஆக இருந்தனர். லு பென் ஆதரவு மற்றும் லு பென் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு இடையில் அளவில் உள்ள வேறுபாடு தேசிய முன்னணியின் குறுகிய அடித்தளத்தின் குறிகாட்டல் ஆகும். இந்தக் கட்சி மற்றவற்றின் செயல் தவறால் முன்னணிக்கு வந்தது: பாரம்பரிய தொழிலாள வர்க்க இயக்கங்களின் துரோகம் மற்றும் திராணி இன்மையின் விளைவாக.

எண்ணற்ற எதிர்ப்பு இயக்கங்களின், சோசலிச கட்சி சீர்திருத்தவாதிகள் மற்றும் ஸ்ராலினிச வாதிகளின் அடிப்படைவிவாதம் இரு தீமைகளில் சிராக் குறைவான தீமை கொண்டவர் என்பது, மற்றும் பிரெஞ்சு மக்கள் எவ்வளவு தயக்கம்தான் கொண்டிருந்தாலும் அதுபற்றிக் கவலை இல்லை, அவர்கள் கோலிச வேட்பாளருக்கு கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பது மற்றும் யூனில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இடதுகளின் வெற்றிக்காக நம்பிக்கை வைப்பது ஆகியனவாகும். தங்களின் மேதின ஆசிரிய தலையங்கத்தில், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ராலினிஸ்டுகள் அறிவித்ததாவது: "வாக்குச் சீட்டில் சாதாரணமாக அவரைத் (லு பென்னை) தோற்கடிப்பது அவசியமானதல்ல, ஒரே பெயர் ஜாக் சிராக்கை அனுமதிக்கக் கூடிய வாக்குச்சீட்டை மட்டும் பயன்படுத்துவதன் மூலம் அவரது வாக்கு எண்ணிக்கையைக் குறைக்க எல்லாவற்றையும் கட்டாயம் செய்ய வேண்டும்."

சோசலிசக் கட்சிக்குள் உள்ள "இடது" குழுவான Gauche Socialiste, பின்வருமாறு குறிப்பிட்டது: ஜனாதிபதித் தேர்தலில் முடிவு பிரதான நெருக்கடியை சுமத்தி இருக்கிறது. அது எப்படி முடியும் என்று ஒருவரும் அறியார். ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது சுற்றில் ஜாக் சிராக்கிற்காக வாக்களிக்க கடப்பாடுடையவராக இருக்கிறோம். ஆனால் அதனை சட்டமன்றத் தேர்தலில் திரும்பச்செய்வதற்கு நாம் விரும்பவில்லை."

"SOS Racisme" குழு எழுதியது: "சுருக்கமாக, (தேசிய) முன்னணியின் இயக்க ஆற்றலை உடைப்பதற்கு, ஒரே ஒரு தேர்வு சாத்தியமானது: சிராக்கிற்கு வாக்கு."

இது கொச்சைத்தனமான, செயல்முறைவாத மற்றும் பிற்போக்கு வாத முறை ஆகும். இந்தத் தர்க்கத்தின்படி, ஒருவர் முதலாளித்துவத்தின் மிக வலதுசாரி கட்சிக்குள் சோசலிச இயக்கத்தை உடனடியாகக் கரைக்கலாம் மற்றும் ஒருவரின் அர்ப்பணிப்பை கெடுத்து விடலாம். தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் தங்களின் வர்க்கப் பகைவரான, உலகம் முழுதும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாக்கும் பாதுகாவலர் சிராக்கிற்கு வாக்களித்தல், அதிவலதுகளின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த, அடிப்படை உரிமைகளையும் பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களையும் மிகக் குறைவாகப் பாதுகாக்க, தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் வழிநடத்தும் என்பது பற்றி இந்த அமைப்புக்களில் எதுவும் விளக்க முடியவில்லை. உண்மையில், "இடதுகளின் பண்பு மதிப்புக்கள்" பற்றி உணர்ச்சியுடன் முழங்குவதற்கு பெரும் காலத்தைச் செலவு செய்யும், சமூக ஜனநாயகவாதிகள், ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் நடுத்தரவர்க்க எதிர்ப்பு இயக்கங்கள் பரந்த மக்களின் தேவைகளுக்கு பெரும்பாலும் கவலையற்றவர்களாக இருந்தனர்.

ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது சுற்றைப் புறக்கணிப்பதற்கான -நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழு மற்றும் உலக சோசலிச வலைதளத்தின் அறிக்கையால் எழுப்்பப்பட்ட அடிப்படைக் கோரிக்கையானது, தொழிலாள வர்க்கம் சொந்த சுதந்திரமான அரசியல் நோக்குநிலையைத் தனதாக்கிக் கொள்வதற்கான தேவையில் வேரூன்றி உள்ளது - இடது எதிர்ப்பாளர் சிலரல்லாதோரின் கோபத்தைத் தூண்டி விட்டதில் அல்ல. மேற்குறிப்பிட்ட Gauche Socialiste உறுப்பினர் ஒருவர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பேராளர்களை, சிராக்கிற்கு வாக்களிக்க அழைப்புவிட மறுப்பதற்காக "மறைந்துள்ள பாசிஸ்டுகள்" என கண்டனம் செய்தார்.

ஊழல் மிக்க மற்றும் செல்வாக்கிழந்த பதவியில் இருக்கும் ஜனாதிபதி பதவிக்கான இந்த "இடதுசாரி" பற்றார்வமிக்க பிரச்சாரத்தின் எதிர் அர்த்தமானது உண்மையில் அவருக்குப் புரியாதிருந்தது மற்றும் வெளிப்படையாக ஏனைய பலருக்கும் புரியாதிருந்தது. மேலும், சோசலிசக் கட்சியும் அதன் பின்னே சுற்றித் திரிபவர்களும் இப்பொழுது சிராக்கின் மிக ஆர்வமிக்க ஆதரவாளர்களாக இருக்கின்றனர். அவரது தேர்தல் சுவரொட்டிகள் பாரிஸ் முழுவதும் தளிர்ந்து வெளிப்படும் (ஸ்டிக்கர்) ஒட்டிகள், "மே5 -நான் சிராக்கிற்கு வாக்களிக்கிறேன்" எனக் கூறியதுடன் சோசலிஸ்ட் கட்சியின் இலச்சினையையும் சுமந்து வந்திருந்தது.

இருப்பினும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு/ உலக சோசலிச வலைத் தள அறிக்கையானது பல தொழிலாளர்களாலும், அங்கே பிறந்த மற்றும் புலம் பெயர்ந்த மற்றும் பல இளைஞர்களாலும் ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டது.

பிரெஞ்சு அரசியல் மற்றும் செய்தி ஊடக நிறுவனத்தால் சிராக்கிற்கான பிரச்சாரத்தைச் சுற்றி கொண்டுவரப்பட்ட அரசியல் மற்றும் சமூக அழுத்தமானது முதலாவது சுற்று ஜனாதிபதி தேர்தலில் தங்களது வேட்பாளர்களை நிறுத்திய மற்றும் கணிசமான அளவு ஆதரவைப் பெற்ற, Ligue Communiste Révolutionnaire மற்றும் Lutte Ouvrière ஆகிய இடதுசாரி இயக்கங்கள் மீது உண்மையான பாதிப்புக்களைக் கொண்டிருந்தன.

பல்வேறு இடது எதிர்ப்பு இயக்கங்களின் நடவடிக்கைகளில் ஆழமாக ஈடுபட்டிருந்த உறுப்பினர்களைக் கொண்ட (LCR) புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அதன் வழக்கமான போலிச் சாக்குப்போக்கு பாணியில் சிராக் ஆதரவு தாக்கத்திற்குள் சரணாகதி அடைந்துள்ளது. எப்போதும் போல, இந்த அமைப்பானது அதன் "மிக- இடது" வண்ணத்தைப் பராமரிப்பதற்கான தேவை பற்றி அதிக நனவாக இருக்கிறது. ஆனால் "தொழிலாளர்களின் மோசமான பகைவனான லு பென்னின் வழியை, தெருவிலும் தேர்தல்களிலும் தடைசெய்வது அவசியமானது" என்ற சொற்றொடர், சிராக் ஆதரவு நிறுவனத்திற்கு மறைமுகமான ஒத்துழைப்பைத் தவிர வேறு எதனை அர்த்தப்படுத்த முடியும்? மேதினத்திற்கான அதன் துண்டறிக்கையில், எல்.சி.ஆர் ஆனது சிராக்கிற்கான பிரச்சாரத்தைப்பற்றி மிக விமர்சனத்துடன் இருந்தது, ஆனால் அதன் தலைப்பு லு பென்னை யும் தேசிய முன்னணியையும் சாதாரணமாகக் குறிப்பிட்டது. சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் தொடர்பான அதன் விமர்சனம் அதன் தலையங்கத்திற்குள் ஆழமாகப் புதைக்கப்பட்டது.

Lutte Ouvrière-ஐப் பொறுத்தமட்டில், அதன் மனப்பாங்கு அந்த அமைப்பின் செய்திப் பத்திரிகையின் ஏப்பிரல் 26 பதிப்பில் வந்த தலையங்கத்தினால் தொகுத்துக் கூறப்பட்டது: "இதனால்தான் தொழிலாளர்கள் லு பென்னுக்கு கட்டாயமாக வாக்களிக்கக் கூடாது. மற்றொருபுறம், சிராக் குறைந்த தொழிலாளர்களது வாக்குகளை வெல்லக்கூடியவராக இருப்பார், தொழிலாளர் இயக்கத்தைப் பொறுத்தவரை அது சிறப்பானதாகும். ஒவ்வொருவரும் கட்டாயமாக செய்கின்ற தேர்வு ஆனது அவரை நியாயப்படுத்துவதாகத் தெரியும், ஆனால் ஒவ்வொருவரும் இந்தத் தேர்வு எதிர்காலத்தில் எதை இன்றியமையாததாய் ஆக்கும் என்பது பற்றி கட்டாயம் எண்ணிப் பார்க்க வேண்டும்."

இவ்வாறு Laguiller சிராக்கிற்கான வாக்கிற்கு தந்திரமாக இசைவாணை அளிக்கிறார். இது வாக்களிக்காமை மட்டத்துக்குக் கூட அழைப்புவிடுதற்கு எழுகிறது, அதுதாமே முற்றிலும் போதுமானதன்று. Laguiller மற்றும் LO ஆகியவற்றின் நிலைப்பாடு முற்றிலும் பிறர் செயலுக்கு ஆட்பட்ட நிலையாக இருத்தலானது, சிறிதளவே நடைமுறை விளைவு இருப்பதற்கு கணக்கிடப்பட்டது.

தற்போதைய நிலைமை கோருவது என்னவெனில், கருத்தார்ந்த அக்கறையுடன் கூடிய அரசியல் பிரச்சாரத்தை, தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் பெரும் பகுதியினர் இந்த ஜனநாயகமற்ற கேலிக்கூத்தை மற்றும் இரு வலதுசாரி வேட்பாளர்களுக்கு எதிரான எதிர்ப்பை எடுத்துக் காட்ட, ஜனாதிபதித் தேர்தலைப் பரந்த அளவில் புறக்கணித்தலை ஒழுங்கு செய்வதாகும். அத்தகைய பிரச்சாரம் முன்னே வர இருக்கிற பிரதான வர்க்கப் போர்களில் தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான (சுயாதீனமான) அரசியல் இயக்கத்தின் அபிவிருத்திக்கான சிறந்த சூழ்நிலைகளை உண்டு பண்ணும்.

See Also :

பாரீசில் மே தின ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரெஞ்சு தேர்தலைப் பற்றி பேசுகிறார்கள்

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலை தொழிலாள வர்க்கம் புறக்கணிப்பதற்காக சிராக்கையும் லு பென்னையும் நிராகரி!

பிரான்சின் தேர்தலை பகிஸ்கரி--
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அறிக்கை

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்: புள்ளிவிவரங்கள் என்ன கூறுகின்றன

ஜனாதிபதி தேர்தலில் நவ-பாசிச லு பென் கோலிச சிராக்கை எதிர்கொள்ளகின்றார்
தேசிய முன்னணியின் தலைவருக்கு வழங்கப்பட்ட வாக்குக்கள் பிரான்சின் அரசியல் நெருக்கடியை தீவிரமாக்குகின்றது