WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
An interview with Robert Hue, general secretary of the French Communist
Party
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் றொபேர்ட் ஹியூவுடன் ஒரு நேர்காணல்
By Ulrich Rippert
15 June 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
ஜூன்7
அன்று, பாராளுமன்றத் தேர்தல்களுக்கு இருநாட்களுக்கு முன்னர், உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள்,
பொதுச் செயலாளரும் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF)
பாராளுமன்ற வேட்பாளருமான றொபேர்ட் ஹியூவுடன், பாரிசுக்கு வடக்கே, அவரது தொகுதியான ஆர்ஜொன்தெய்யில்
(Argenteuil) பேசினர்.
உலக சோசலிச வலைத் தளமானது இசைக்கலைஞர்கள் குடியிருப்பில் ஹியூவை சந்தித்து,
இந்த வீட்டுப் பகுதிகளில் உள்ளூர் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
வாக்குப் பதிவுக்கு முன்னர் ஹியூவின் தோற்றம் அந்தப் பகுதி முழுவதும் பெரிய சுவரொட்டிகளில் விளம்பரம் செய்யப்பட்ட
போதிலும், ஆர்வம் குறைந்தே காணப்பட்டது. வேட்பாளர் அங்கு வந்து சேர்ந்தவேளை, அவரது சொந்த பரிவாரத்திற்கு
அப்பால் ஒரு ஆள் கூட காணப்படவில்லை.
ஒரு சமயம் பிரான்சில் மிகப் பலம் வாய்ந்த கட்சியாக இருந்ததன் தலைவரை வரவேற்க
கட்சி உறுப்பினர்களின் பேராளர் குழுவோ அல்லது தொழிற்சாலை தொழிலாளர்களோ அங்கு இல்லை. உள்ளூர்
தொலைக்காட்சி நிலையம் கூட வரத் தவறியது. உள்ளுர் சூப்பர் மார்க்கெட்டை விட்டு வந்த பின்னர் சந்திக்க நேர்ந்த
இல்லத் துணைவியர் மற்றும் ஓய்வூதியம் பெற்றோர் சிலரிடம் ஹியூ பேசும்படி முடிந்தது.
வால் டுவாஸ் (Val d'Oise)
ல் ஐந்தாவது தொகுதியான ஆர்ஜொன்தெய் பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்று, அது உயர்ந்த அளவு வேலையின்மை
மற்றும் வறுமையால் இழிபுகழ் பெற்றதாகும். வேலையின்மை 18 சதவீதம் ஆக, தேசிய சராசரியைப் போல் இரண்டு
மடங்காகும், அப்பகுதி உயர் கட்டிடங்கள் நிறைந்த சமூகப் பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பகுதி, செய்ன் நதிக்கரையில் அமைந்த அதன் நாட்டுப்புறப் பகுதி, கலைஞர்களை
சக்தி மிக்க வகையில் ஈர்த்தது மற்றும் பதிவுவாத வண்ணப் பூச்சாளர்களுக்கான தூண்டலைச் செய்யும் ஒரு வளமாக
இருந்த பொழுதான அந்தக் காலம் நெடுங்காலமாகி விட்டது. குளோட் மொனே எனும் கலைஞரின் அருமையான
பூச்சோவியங்களுள் ஒன்றான, "ஆர்ஜொன்தெய் பாலம்" (1874) போன்ற, சில படைப்புக்கள் இந்த காலகட்டத்தை
நினைவு கூர்வன.
இன்று அந்தப் பகுதி அழிந்துபோன தொழிற்சாலைகளால் குறிக்கப்படுகின்றது. மிக உயர்ந்த
அடுக்ககங்களுக்கு இடையில் மூடப்பட்ட கடைகளை, கைவிடப்பட்ட இளைஞர் மன்றங்களை மற்றும் மூடப்பட்ட உணவு விடுதிகளை
ஒருவர் காணமுடியும். சூப்பர் மார்க்கெட் ஜன்னல்கள் உலோகத்தாலான பாதுகாப்புக் கதவுகளால் பாதுகாக்கப்படுகின்றன.
இளைஞர் கூட்டங்கள் பேசிச் சலிப்படைந்த மற்றும் என்ன செய்வதென்று தெரியாமல் தெரு மூலைகளில் கூடி இருந்தனர்.
உள்ளூர் மக்கள் தொகையில் பெரும்பான்மை விகிதாச்சாரம் புலம்பெயர்ந்தோர் இனக்கூறாகும், பிரதானமாக வட
ஆபிரிக்காவிலிருந்து வந்தவர்கள் ஆவர்.
ஆர்ஜொன்தெய் உள்ளூர் சபை கடந்த ஆறு ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியால் கட்டுப்படுத்தப்பட்டு
வந்திருக்கிறது. கட்சியின் செல்வாக்கானது, Boulevard de
Résistance, the Place P. [Pierre] Sémard மற்றும்
Rue Marcel Cachin போன்று தெருக்களுக்குக் கூட பெயரை நீட்டிக்கும் அளவுக்கு இருந்தது, பிரான்சின்
இரு முக்கிய ஸ்ராலினிஸ்டுகளின் பின்னர் பெயரிடப்பட்டது.
கடந்த ஏப்பிரலில் ஜனாதிபதி தேர்தலின் முதலாவது சுற்று முடிவு கம்யூனிஸ்ட் கட்சியின்
மத்திய அலுவலகம் மூலம் அதிர்ச்சி அலையை அனுப்பியது. 1997 பாராளுமன்றத் தேர்தலில் 30.4 சதவீதம் பெற்றதிலிருந்து,
அவரது சொந்த மாவட்டத்தில் ஹியூவுக்கு கிடைத்த வாக்கு 9.8 சதவீதமாக சரிந்தது. நவ பாசிச தேசிய முன்னணி
வேட்பாளர், ஜோன் மேரி லு பென், 18.7 சதவீத வாக்குகள் பெற்று முதலாவதாக வந்தார்.
ஜோஸ்பன் அரசாங்கத்தின் குற்றச்செயலுக்கு உடந்தையாய் இருக்கும் அதன் சொந்தப்
பாத்திரம் உட்பட, ஏப்பிரல்21 முதலாவது சுற்று "பன்மை இடதுகளை" மறுதலிப்பதற்கு பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின்
பதிலானது, தற்போது பதவியில் இருக்கும் ஜாக் சிராக்கிற்காக வாக்குகளை அணிதிரட்டுவதாக இருந்தது. ஸ்ராலினிஸ்டுகள்
மே1 தலையங்கத்தில் கூறியவாறு: "இதைப் பொறுத்தவரை (லு பென்னின் தோல்வி) ஒருவர் தெளிவாக இருக்க
வேண்டும். தீர்க்கமாக அவரை (லு பென்) வாக்குப் பெட்டியில் தோற்கடிப்பது அவசியம் மட்டுமல்லாமல், இதனை வெற்றிகரமாக
முடிக்கும் ஒரே வாக்குச் சீட்டை, ஜாக் சிராக் பெயரைப் பெற்றிருக்கும் ஒன்றை, பயன்படுத்துவதன் மூலம் அவரது
வாக்கை மொத்தமாகக் குறைப்பதற்கு எல்லாம் செய்யப்பட வேண்டும்."
பாராளுமன்றத் தேர்தலில், தேசிய பாராளுமன்றத்தில் அவரது இருக்கையைத் தக்கவைத்துக்
கொள்வதற்கான அவரது முயற்சியில் ஹியூவுக்கு உதவ மற்றும் அதன் முன்னாளைய கோட்டையில் அவமானகரமான
துன்பத்தைத் தவிர்க்கவும், சோசலிசக் கட்சியானது- ஆர்ஜொன்தெய்யில் வேட்பாளரை நிறுத்தாது இருக்க முடிவு செய்தது.
உலக சோசலிச வலைத் தளத்துடனான அவரது நேர்காணலுக்கு இரு நாட்கள் கழித்து,
ஹியூ இடதுசாரிகளின் இணைந்த வேட்பாளராக 38.6 சதவீதம் வாக்குகளை வென்றார். ஜனாதிபதி ஜாக் சிராக்கின்
ஜனாதிபதித்துவ பெரும்பான்மைக்கான ஐக்கியம் (யு.எம்.பி) -ன் ஜோர்ஜ் மொத்ரொன் (Georges
Mothron) 35.5 சதவீதம் வென்றார். ஹியூவின் முடிவு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்றத்
தேர்தலில் சோசலிசக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் இணைந்து பெற்ற வாக்குக்கு 9 சதவீதம் குறைவாகப்
பெற்றதைக் காட்டியது, மற்றும் வாக்களிக்காமை வீதம் 39.2 சதவீதமாக இருந்தது, எப்போதையும் விட அதிகமாக
இருந்தது.
அண்மைய வருடங்களில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அதிருஷ்டங்களில் திடீர்
வீழ்ச்சியின் விளைவாக, கட்சிக்குள்ளே பிளவுகள் மற்றும் மறைவான உள் சூழ்ச்சிகள் உக்கிரமடைந்தன. கடந்த இலையுதிர்காலத்தில்
நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், செய்ன்- செய்ன்ட் - டெனி
(Seine-Saint-Denis), வால்-டு-மார்ன்
(Val-de-Marne) மற்றும் சொம் (Somme)
போன்ற முக்கிய கட்சி மையங்கள் உள்பட, 15 உள்ளூர் கட்சி அமைப்புக்கள் (கூட்டமைப்புகள்) கட்சியின் யாப்பை
மாற்றுவதற்கான ஹியூவின் முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்தன. பத்திரிகை அறிவிப்புக்கள் கட்சிக்குள் உடனடி பிளவு
பற்றி ஊகம் வெளியிட்டிருக்கின்றன.
தனிப்பட்ட கலந்துரையாடலில், ஹியூ முன்னணி அரசியல் பிரமுகர் என்பதைக் காட்டிலும்,
உள்ளூர் தொழிற்சங்க செயலாளரது பதிவை ஏற்படுத்தினார். அவர் அனைத்துப் பிரச்சினையையும் மிக மட்டுப்படுத்தப்பட்ட
கண்ணோட்டத்தில் பார்ப்பதாகக் காணப்படுகிறார். அவர் பிரான்சில் தற்போதைய அரசியல் எழுச்சிகளின் வரலாற்று
முக்கியத்துவத்தையும் அவரது சொந்த நடவடிக்கைகளின் விளைபயன்களையும் புரிந்துகொள்ள திறனற்றவராகவும் பெரிதும்
அக்கறையற்றவராகவும் காணப்படுகிறார்.
வரலாற்றில் அடிக்கடி நிகழ்வதுபோல, கட்சியின் வீழ்ச்சியானது அதன் முன்னணி நபரைத்
தேர்ந்தெடுத்தலில் வெளிப்படுத்தப்படுகிறது. இது பிரெஞ்சு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை குற்றத்தனமாக
படுமோசமாகக் காட்டிக் கொடுத்த, கடந்த காலத்து பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அரசியல் சூரர்களாக
இருந்தார்கள். இருப்பினும், அவர்கள் குறிப்பிட்ட அரசியல் திறமைகளை இயற்பண்பாகக் கொண்டிருந்தனர் மற்றும் எந்த
அளவு மட்டுப்படுத்தப்பட்டதாக அல்லது சொல் அலங்காரமாக இருந்தாலும் பரவாயில்லை, ஒடுக்கப்பட்டவர்களுக்கு
வேண்டுதல் விடுக்கும் திறத்துடன் இருந்தனர்.
மருத்துவ செவிலியராக தொழில் முறை ரீதியாக பயிற்றுவிக்கப்பட்டவரான, ஹியூ 15
வயது இருக்கும்பொழுதே, 1962ல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1977ல் 17000 பேர் வசிக்கக்கூடிய பாரிசின்
தூரத்து புறநகர்ப்பகுதியான, மொன்ரினி-லே-கோர்மெய் (Montigny-les-Cormeilles)-ன்
உள்ளூர் மேயராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்து ஆண்டுகள் கழித்து அவர் கட்சியின் மத்திய குழுவுக்கு உயர்த்தப்பட்டார்
மற்றும் 1990ல் அதன் அரசியற் குழுவில் சேர்ந்தார். 1994ல் அவர் கட்சியின் தலைவரானார். அந்த நேரம்வரை
ஹியூ அரசியல் வட்டாரங்களில் பெரும்பாலும் அறியப்படாதவராக இருந்தார் மற்றும் அவர் தேசிய நலன்களின் பேரில்
அவர் குவிமையப்படுத்தப்பட்டார் மற்றும் தேசிய சம்பவத்தின்போது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார்.
1981 பிப்ரவரியில், ஹியூ "போதைப்பொருட்களுக்கு எதிரான தாக்குதல்"-க்கு அழைப்பு
விடுத்து, மொன்ரினியில் (Montigny) உள்ள
மொரோக்கன் குடும்பம் இருக்கும் வீட்டிற்கு அணிநடையிட்ட இனவாதக் கும்பலுக்கு தலைமை வகித்து சென்றார். அவ்வீட்டிலிருந்தோர்,
தங்களது உயிருக்கு அஞ்சி, அவர்களின் வீட்டிற்குள்ளேயே தங்களுக்கு தடுப்பிட்டுக் கொண்டனர். அணிநடைக்கு முன்பாக
மற்றும் ஆதாரம் எதுவும் இல்லாமல், கம்யூனிஸ்ட் இளைஞர் கழகம் போதைப் பொருளில் தொடர்புகொண்டிருப்பதாக
அக்குடும்பத்தைக் குற்றம் சாட்டி துண்டறிக்கைக்களை விநியோகித்தது, பின்னர் அது தெளிவாகத் தொடங்கிய விதமாய்,
குற்றச்சாட்டு பொய்யானதாக இருந்தது.
ஹியூவின் நடவடிக்கையானது, பிரான்சுவா மித்திரோன்னின்
சோசலிசக் கட்சி உடனான அதன் "இடது ஐக்கியம்" பொறிந்து போனதை அடுத்து, தனது செல்வாக்கை
மீண்டும் பெறும் முயற்சியில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியால் தொடுக்கப்பட்ட போலி ஜனரஞ்சக, பேரினவாத பிரச்சாரத்தின்
ஒரு பகுதியாக இருந்தது. மொன்ரினியில் சம்பவத்திற்கு இரு மாதங்களுக்கு முன்னர், இன்னொரு பிரெஞ்சு கம்யூனிஸ்ட்
கட்சி மேயர் பாரிசின் புறநகர்ப்பகுதியான வித்ரி-சுய்ர்-செய்ன் (Vitry-sur-Seine)-
ல் புலம்பெயர்ந்தோர் வசிக்கும் குடியிருப்புக்களை புல்டோசர் கொண்டு இடிப்பதற்கு அனுமதி அளித்தார்.
எதிர்ப்புக்களை எதிர்கொள்கையில், முன்னணி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இனவாத
அழிவுவேலைகளின் நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கு தொலைக் காட்சியில் தோன்றினர். இறுதியில், பிரெஞ்சு
கம்யூனிஸ்ட் கட்சி இன் புலம்பெயர்ந்தோர் விரோத பேரினவாதத்தின் பிரதான ஆதாயம் அடைபவராக தேசிய முன்னணி
ஆனது, அது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி -இன் கோட்டைகளில் செல்வாக்கை ஈட்டியது.
* * *
உ.சோ.வ.த : தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
அதன் வெளிப்பாடு என்னவாக இருக்கும்?
UÎ : ஜனாதிபதி தேர்தலின்
விளைவால் அது ஆர்வமூட்டும் பிரச்சாரமாக இருக்கிறது, முந்தைய தேர்தல் பிரச்சாரம் உண்மையில் திட்டங்களைப்
பாழாக்கியது. அனைத்திற்கும் முதலாவதாக, ஜனாதிபதி தேர்தலில் அதிவலதுசாரி வேட்பாளர் லு பென் முடிவு செய்யும்
போட்டியில் வந்ததுடனும் இடதுசாரிகள் இல்லாததுடனும் அங்கு பெரிய அதிர்ச்சி இருந்தது. அதி வலதுசாரிகளைத் தவிர
ஜாக் சிராக்கிற்கு வாக்களிக்க அனைவரையும் கொண்டுவந்த மிகப் பெரிய பதில் நடவடிக்கை இருந்தது.
நானே ஜாக் சிராக்கிற்கு வாக்களித்தேன், ஆனால் சிராக்கிற்காக அல்ல, மாறாக
குடியரசின் மதிப்புக்களைப் பாதுகாக்கும் விதமாக வலதுசாரிகளைத் தடுக்க. மற்றும் நான் இதை உங்களுக்குக் கூறுவேனாயின்,
இன்று பிரச்சாரமானது குடியரசின் கோட்பாடுகளைப் பாதுகாத்தவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஜாக் சிராக்
என்ற உண்மையால் ஓரளவு துண்டிக்கப்பட்டுக் குறைக்கப்படுகிறது, ஆனால் அவர் பிரச்சாரத்தை பக்கம் சார்ந்த முறையில்
வலதுபக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார்.
உ.சோ.வ.த: கம்யூனிஸ்ட் கட்சி வாக்கில் ஏற்பட்ட கடும் சரிவை எதால்
விளக்க முடியும்?
UÎ: கம்யூனிஸ்ட் கட்சி வாக்கில்
அங்கு கடும் சரிவு இருந்திருக்கிறது, அது சரியாக சோசலிசக் கட்சி வாக்கிற்கும் ஒரே அளவினதாக இருக்கிறது.
நாங்கள் லியோனல் ஜோஸ்பனுடன் அரசாங்கத்தில் இருந்தோம், தொழிலாள வர்க்கத்திற்குள் இடதுசாரிகளின் கொள்கைகள்
புரிந்து கொள்ளப்படவில்லை மற்றும் அங்கீகரிக்கப்படவில்லை. மற்றும் அரசாங்கத்தினுள் நாங்கள், சோசலிசக் கட்சி
ஏனைய கொள்கைகளை பின்பற்றச் செய்வதற்கு நாங்கள் செயல் முனைப்பாக இருக்க விரும்பினோம் மற்றும் நாங்கள்
அதில் தோல்வி அடைந்தோம். அதனால்தான் அங்கு பொறிவு இருந்திருக்கிறது. ஆனால் இன்று கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்களைப்
பாருங்கள், தேர்தல்களில் இரண்டு நாள்களிலிருந்து, இப்பொழுது, கம்யூனிஸ்ட் கட்சியானது 6 சதவீதத்தை திரும்பப்
பெற்றிருக்கிறது.
உ.சோ.வ.த: முன்னாள் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி வாக்காளர்கள் கணிசமான
எண்ணிக்கையினர் இப்பொழுது தேசிய முன்னணிக்காக வாக்களித்துள்ளனர் என்று செய்தி அறிவிப்புக்கள் குறிகாட்டுகின்றன.
இதனை எப்படி நீங்கள் விளக்குவீர்கள்?
UÎ: இல்லவே இல்லை! அது உண்மை அல்ல. கம்யூனிஸ்ட் தொகுதிகளில் பெரும்
வாக்களிக்காமை இருந்தது. மக்கள் தொகையினரின் அனைத்துத் தட்டினரிலும் - சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள்
பசுமைக் கட்சியினர்- தேர்தல் தொகுதியினரின் ஒரு பகுதியினர் லு பென்னுக்கு வாக்களித்ததன் மூலம், அல்லது அதி வலதுசாரிகளுக்கு
வாக்களித்ததன் மூலம் எதிர்ப்பைக் காட்டினர், ஆனால் லு பென்னை நோக்கி கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கம் இருந்தது
என்பதை எந்த குறிப்பிட்ட மட்டத்திலும் காட்டும் வாக்களிப்பு இருக்கவில்லை. அது உண்மை கிடையாது.
எமது பிரச்சினை வேறொன்று. கம்யூனிஸ்ட் கட்சியின் பலவீனம்: கம்யூனிஸ்ட் கட்சி இந்தத்
தேர்தலில் 6 சதவீதத்தைக் கணக்கில் கொள்ள முடியும், ஆனால் 1லிருந்து 1.5 சதவீதம் ஜோஸ்பனுக்கு வாக்களித்தனர்
ஏனென்றால் அவர்கள் அதிவலதுகளின் வருகை பற்றி அஞ்சினார்கள். பின்னர் இன்னொரு பகுதியினர் வாக்களிக்காது சென்றனர்.
அதுதான் விஷயம் பற்றிய உண்மை.
உ.சோ.வ.த : உங்களது தேர்தல் முழக்கங்களுள் "பிரான்ஸ், அது உனது"
என்ற ஒன்றும் இருந்ததை நாங்கள் பார்த்தோம். தேசியவாதம் தொடர்பாக உங்களது நிலை என்ன?
UÎ : நாங்கள் அடிப்படையில் தேசியவாதத்துக்கு எதிரானவர்கள்.
நாங்கள் "பிரான்ஸ், அது உனது " என்று கூறும்பொழுது இதன் அர்த்தம் பிரெஞ்சு மக்கள் பிரச்சினையை
புலம்பெயர்ந்தோர் சம்பந்தமான ஒன்று அல்ல, மாறாக குடிமக்கள் மற்றும் சமுகப் பொறுப்புணர்ச்சி பற்றிய பிரச்சினை
என்று உணர்கிறார்கள் என்பதாகும். இந்தத் தேர்தலில் பிரெஞ்சு மக்கள் செல்வந்தத்தட்டை நிராகரித்தார்கள் மற்றும்
அவர்கள் பிரான்ஸ் மேல்மட்ட மக்களை, தலைவர்களை அர்த்தப்படுத்துவதை விரும்பவில்லை: ஆகையால் எங்களது
முழக்கம் எங்களைப் பொறுத்தவரை, பிரான்சானது பொருட்களை இயக்கும், தொழில் நுட்ப அறிஞராட்சிக்
கோட்பாட்டாளரது அல்ல, அது உனது, சாதாரண ஆணும் பெண்ணும் ஆன குடிமக்களது என்று கூறுவதாக இருந்தது.
உ.சோ.வ.த: சோவியத் ஒன்றியத்தின் முழு அனுபவத்தையும் இப்பொழுது எப்படிப்
பார்க்கிறீர்கள்?
UÎ: சோவியத் ஒன்றியம் பொறிந்தது. என்னைப் பொறுத்தவரை, 1970 களுக்குப்
பின்னால் சோவியத் ஒன்றியத்தில் நடந்தது கம்யூனிசம் அல்ல, மற்றும் நான் ஸ்ராலினிசத்திற்கு அதி குரோதமாக
இருந்தேன், இருக்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து வருவதால் எம்மைப் பொறுத்தவரை
ஸ்ராலினிசத்தை நிராகரிக்க நான் போராடி இருக்கிறேன். நாம் ஸ்ராலினிசம் மக்கள் அக்கறையில் மட்டும் கொள்ளை
நோயாக இருக்கவில்லை, மாறாக கம்யூனிசம் தன்னுக்கும் அப்படி இருந்தது என்கிறோம், கம்யூனிசம் என்ற பெயரில்
அது மக்களைச் செய்யவைத்தது கம்யூனிசத்துடன் ஒன்றும் சம்பந்தம் கொண்டிராதிருந்தது. கம்யூனிசம் என்பது வேறொன்று.
அது ஒரு இயக்கம், அது பகிர்ந்து கொள்ளும் கண்ணோட்டத்துடனான நடவடிக்கை. அது அதிகாரத்துவமல்ல, அது
அரசவாதமல்ல, அது ஸ்ராலினது குற்றங்கள் அல்ல.
உ.சோ.வ.த : ட்ரொட்ஸ்கி தொடர்பாக உங்கள் நிலை என்ன?
UÎ: நீங்கள் அறிவீர்கள், நான்
ட்ரொட்ஸ்கிச கலாச்சாரத்தில் வளர்க்கப்பட்டவனல்ல. எனக்கு அது பற்றி கருத்துக் கிடையாது. ரஷ்யப் புரட்சியில்
ட்ரொட்ஸ்கி பங்காற்றினார். எப்படி நான் கூறுவது, இன்று பிரான்சில் ட்ரொட்ஸ்கிஸ்டாக இருப்பதாகக் கூறிக்கொள்பவர்கள்
அடிக்கடி, குழுக்களாக விளிம்பில் முனைப்பாய் நிற்கக் கூடியதன்மையால் பண்பிடப்படுகின்றனர், அவர்கள் நிறுவனங்களில்
பங்கெடுத்துக் கொள்ள விரும்பாதவர்களாக இருக்கின்றனர். இன்று பிரான்சில் ட்ரொட்ஸ்கிசம் அதிக முக்கியத்துவத்தைக்
கொண்டிருக்கவில்லை. ட்ரொட்ஸ்கியைப் பின்பற்றுபவர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் குழுக்கள் இருக்கின்றன, ஆனால்
அவர்கள் அவர்களின் சுவரொட்டிகளில் ட்ரொட்ஸ்கியின் படத்தைப் போடவில்லை.
உ.சோ.வ.த: இன்னுமொரு கேள்வி. 20 ஆண்டுகளுக்கு முன்னர், 1980களில்
ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சி புதிய குடிவரவுக்கு முடிவு கட்டுமாறு அழைத்து, புலம் பெயர்ந்தோர் விரோத நிலைப்பாட்டை
எடுத்தது
UÎ: இல்லை, இல்லை
உ.சோ.வ.த: எடுத்துக்காட்டாக,
வித்ரி-சுயிர்-செய்ன்-ன் மேயர், ஒரு கம்யூனிஸ்ட்
கட்சி மேயர், புல்டோசரைக் கொண்டு புலம்பெயர்ந்தோர் குடியிருப்புக்களை இடித்துத் தள்ளினார்,
மொன்ரினி-லே- கோர்மெய் மேயராகிய நீங்கள் வட ஆப்பிரிக்க குடும்பத்தை போதைப் பொருள் விற்பவர்
என்று கண்டனம் செய்தீர்கள். இந்நடவடிக்கைகளை நீங்கள் பேணுகிறீர்களா, அல்லது அவை புலம்பெயர்ந்தோர்
விரோத பேரினவாதத்துக்கு பங்களிப்பு செய்தன என்று இப்பொழுது நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?
UÎ: இல்லை, இல்லை! அது புலம்பெயர்ந்தோருக்கு எதிரானது என்று கூறுபவர்களால்
சேர்ந்திசைக்கப்பட்டது. உண்மையில், அந்தக் காலகட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி பின்வருமாறு கூறியது: "நீங்கள்
எல்லா புலம் பெயர்ந்தோரையும் ஒரே இடத்தில் வைத்து அளவிடமுடியாது."
அது சேரிகளுக்கு எதிரான போராட்டம் ஆகும் மற்றும் அது மாற்றி அமைக்கப்பட்டது:
வலதுசாரிகளும் சமூக ஜனநாயகவாதிகளின் ஒரு பகுதியினரும் கூட, "அது புலம்பெயர்ந்தோருக்கு எதிரானது" என்று
கூறிக்கொண்டு, கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக திருப்பிய பிரச்சாரமாகும். புலம்பெயர்ந்தோர் தொடர்பாக மிக வெளிப்படையான,
எம்மைப் போன்ற கட்சி அங்கு ஒருபோதும் இருக்கவில்லை, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகத்தினருடன் பலமான
புலம்பெயர்ந்தோர் இருந்தனர், மற்றும் நாங்கள் சர்வதேசிய திலைப்பாட்டைக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் காலனித்துவ யுத்தங்களுக்கு எதிராக, காலனித்துவ எதிர்ப்புக் கட்சியாக
இருக்கிறோம், மற்றும் ஆகையால் குடிவரவு தொடர்பான எங்களது தொடர்பானது சாதகமான உறவாகும். அவர்கள்
பிரச்சாரங்களைச் செய்த அளவு, அங்கு உண்மையில் அவை முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை. நான் அதற்கு
உங்களுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும்.
உ.சோ.வ.த : பிரான்சில்
கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்காலத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
UÎ: நான் நினைக்கிறேன் இந்தக் கட்சி அடைந்து கொண்டிருக்கும் ஆழமான மாறுதல்களில்
எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது, அது நான் முன்முயற்சி எடுத்தது மற்றும் அதனை நான் "கம்யூனிஸ்ட் கட்சியின் உரு
மாற்றம்" என அழைத்தேன் - திறந்த மனப்பான்மைக் கொள்கை, சமூக செயல்திட்டத்தில் நவீன கம்யூனிசம் அது நமது
காலத்தின் நிதித் தர்க்கத்தைத் தாக்குகிறது, அதைச் சொல்வதானால், அது முதலாளித்துவ பூகோளமயமாக்கலை
எதிர்க்கிறது.
இந்தக் கட்சிக்கு பெரிய எதிர் காலம் இருக்கிறது என நான் நினைக்கிறேன்,
ஏனென்றால் ஜனரஞ்சகவாத மற்றும் அதி-வலதுசாரிக் கட்சிகள் தவிர்த்து, வேறு எந்தக் கட்சிகளும் கடினமான பகுதிகளில்
மற்றும் வீடு குடியிருப்பு பகுதிகளில் இருக்க முடியாது. கஷ்டத்தில் இருக்கும் இந்த மக்களுடன் மிக நெருக்கமாக புதியவழிகளில்
இருப்பது மற்றும் அவர்களுடனான இந்த மாற்றங்களூடாக இதனை கொண்டு செல்வது எமது வாழ்க்கைத் தொழிலாகும்.
அது கடினமானது, ஆனால் அந்தப் போராட்டத்தில் நான் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்காலத்தைப் பார்க்கிறேன்.
See Also :
பிரெஞ்சு பாராளுமன்ற தேர்தலில்
வலதுசாரி உறுதியான பெரும்பான்மையைப் பெற்றது
வாக்களிக்க செல்லாமையின் அளவு
மக்களின் அதிருப்தியைப் பிரதிபலிக்கிறது
பிரெஞ்சு பாராளுமன்ற தேர்தல்கள்:
இடதுகளின் அடிபணிதல்களில் இருந்து வலதுகள் அரசியல் ஆதாயம் அடைகிறது
பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் மே2002 (முழு உள்ளடக்கல்)
Top of page
|