WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா
One year since September 11: an
unprecedented assault on democratic rights
செப்டம்பர்11லிருந்து ஒர் ஆண்டு: ஜனநாயக உரிமைகள் மீதான முன்னர் என்றும் எதிர்பார்த்திருந்திராத
தாக்குதல்
By the WSWS Editorial Board
11 September 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெற்றிருக்கின்ற அரசியல்
மாற்றங்களை புறநிலை ரீதியாக எண்ணிப்பார்த்தால் அந்நாளின் துன்பகரமான சம்பவங்கள் அமெரிக்க உள்நாட்டுக்
கொள்கையிலும் அதேபோல வெளிவிவகாரக் கொள்கையிலும் ஏற்பட்ட பரந்த மாற்றங்களுக்கான தொடக்கப் புள்ளியாக
இருந்தது என்ற முடிவுக்கு கட்டாயம் இட்டுச்செல்லும்.
இருப்பினும், அமெரிக்க இராணுவவாத வெடிப்பும் சரி, குடிமக்கள் சுதந்திரங்கள் மீதான
தாக்குதலும் சரி, அவை எவ்வளவுதான் கொடூரமானதாக இருந்தாலும், அவை ஒரு ஆண்டுக்கு முன்னால் ஏற்பட்ட
சம்பவங்களில் இருந்து வெறுமனே விளக்கப்பட முடியாது. இன்னும் சொல்லப்போனால், ஆயிரக் கணக்கான குடிமக்களின்
இறப்பு பற்றிய அதிர்ச்சியானது, அமெரிக்க ஆளும் தட்டின் மிக வலதுசாரிப் பகுதியினால் நீண்டகாலமாய் கோரப்பட்டுவந்த
கொள்கைகளை நிர்ப்பந்திப்பற்கு புஷ் நிர்வாகத்தால் சுரண்டிக் கொள்ளப்பட்டது.
இந்த ஒரு ஆண்டின் இடைவெளியிலேயே, நாட்டின் வரலாற்றிலேயே ஜனநாயக உரிமைகளின்
மீது மிகவும் துடைத்துக்கட்டும் தாக்குதலை இந்த நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது. அதில் சம்பந்தப்பட்டது போலீஸ்
அதிகாரங்களை வெறுமனே பலப்படுத்துவது அல்ல, மாறாக அமெரிக்கப் புரட்சியின் காலத்தை திருப்பிப் பார்க்க
வைக்கும் அந்தக் கொடுங்கோன்மைக்கு எதிரான அரசியற்சட்ட பாதுகாப்புக்களைச் சின்னாபின்னமாக்குவதாகும். அரசாங்கத்தின்
அதே கட்டமைப்பு தீவிரமாக மாற்றப்பட்டிருக்கிறது, அதன் மூன்று கிளைகளுக்கு --நிறைவேற்றல், சட்டமியற்றல்
மற்றும் நீதிவழங்கல் ஆகியவற்றுக்கு-- இடையிலான உறவு மட்டுமின்றி, மக்களுக்கும் போலீஸ் மற்றும் இராணுவத்தின்
ஆயுதம் ஏந்திய அதிகாரத்திற்கும் இடையிலான உறவையும் மாற்றி இருக்கிறது.
பிரதான நீரோட்ட செய்தி ஊடகமும் கூட இந்த மாற்றங்களை புறக்கணிக்க முடியாதிருக்கிறது.
செப்டம்பர் 10 அன்று நியூயோர்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆசிரிய தலையங்கம் அமெரிக்காவில்
தாராண்மை அமைப்பைப் பொறுத்தவரை என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது-அப்பகுதிகளால் எழுப்பப்பட்டிருக்கும்
எச்சரிக்கைகள் மற்றும் விமர்சனங்களின் மட்டான அளவு மாதிரியாக இருக்கிறது. "குடிமக்கள் உரிமைகள் மீதான
போர்" எனத் தலைப்பிடப்பட்ட, ஆசிரிய உரை செப்டம்பர் 11க்குப் பின்னர் இயற்றப்பட்ட அதிதீவிர நடவடிக்கைகள்
சிலவற்றுக்கு விதிவிலக்கு எடுக்கிறது.
அதேநேரத்தில் அந்த செய்தித்தாளானது, இந்த உள்நாட்டு நடவடிக்கைகள், புஷ் நிர்வாகத்தின்
"பயங்கரவாதம் மீதான போர்" உடன் முரண்பாடு கொண்டு இருக்கின்றன. "நாம் வெளியில் சுதந்திரத்தின் பகைவர்களுடன்
கட்டாயம் போராட வேண்டும் ஆனால் அவை உள்நாட்டில் முரண்படாமல்", என்று டைம்ஸ் எழுதியது.
ஜனநாயக உரிமைகளும் இராணுவ வாதமும்
அத்தகைய பறைசாற்றல்கள், பாசாங்கு மற்றும் சுய ஏமாற்று இவற்றின் சேர்க்கையை
மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, டைம்ஸ் மற்றும் அது சுருக்கமாகக் காட்டும் வறண்டுபோன
தாராண்மை வாதத்தைப் பண்பிட்டுக்காட்டுகிறது. ஒருவர் வெளியில் அமெரிக்க இராணுவ வாதத்தையும்
வலுச்சண்சண்டைக்குப் போதலையும் ஆதரிக்கும் அதேவேளை, உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும்
என்ற கருத்து அடியோடு பொய்யானதாகும். புஷ் நிர்வாகத்தால் பொறுப்பெடுக்கப்பட்டிருக்கும் போலீஸ்- அரசு
நடவடிக்கைகள் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து ஈராக் வரை மற்றும் அதற்கு அப்பாலும் அதன் போருக்கான முன்னெடுப்பு,
இவை அதே நிதித்தட்டுக்களின் நலன்களில், அதே அரசியல் சக்திகளால் பின்னபற்றப்படும், ஒரே கொள்கையின் இரு
பக்கங்களாகும்.
அமெரிக்க தாராண்மை வாதத்தின் மிச்சசொச்சங்கள் மறுப்பு நிலையில் இருக்கின்றன.
அவர்கள் தொடச்சியாக, ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதலை, மனமாறாட்டமாக அல்லது தவறாகப் புரிதலாக
நடத்துகின்றனர். சர்வாதிகார ஆட்சி வடிவத்தின் திக்கில் இடம் பெற்றிருக்கும் அடிப்படை விலகலை அமெரிக்க மக்களிடமிருந்து
இருட்டடிப்பு செய்வதை அவர்கள் நாடுகின்றனர்.
கடந்த ஆண்டின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் செப்டம்பர் 11-ஐ அடுத்த
சூடான நிகழ்வுகளால் இழைக்கப்பட்ட தவறுகள் அல்ல. ஒருவர் புஷ் நிர்வாகத்தின் வாத்தைகளை கணக்கில் எடுத்தால்,
அவை படிமுறைரீதியானது மற்றும் நிரந்தரமானது. அவை பயங்கரவாதத்தின் மீதான என்றும் முடியாத பூகோள போர்
இருக்கும் வரை நீடிக்கும்.
சட்டவிரோத தேடுதல்கள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் வழக்கு எதுவுமின்றி சிறையிடுவதற்கு
எதிரான அத்தியாவசியமான அரசியற்சட்ட ரீதியான பாதுகாப்புக்கள் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன, மற்றும் அரசாங்கமானது
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கருதும் புலம் பெயர்ந்தோர் மற்றும் அமெரிக்க குடிமக்கள் இருவரது தொடர்புறவுகளை
பற்றிக் கொள்வதற்கு மற்றும் நிறுத்துவதற்கான உரிமையை வலியுறுத்தி இருக்கிறது.
அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலின் ஆழத்தையும் அகலத்தையும் மதிப்பீடு செய்வதற்கு
கடந்த ஆண்டு சட்டமியற்றப்பட்ட மிக முக்கியமான சில நடவடிக்கைகளை மீள்பார்வை செய்வது அவசயமானதே ஆகும்.
தாக்குதல்களின் ஒரு மாதத்துக்குப் பின்னர் உண்மையில் ஒரு விவாதமும் இல்லாமல் விட்டுக்
கொடுக்கும் காங்கிரசினூடாக, தள்ளப்பட்ட அமெரிக்க தேசபக்த சட்டமானது, மத்திய முகவாண்மைகளால் அரசாங்க
விமர்சகர்களுக்கு எதிராக பரந்த அளவிலான குற்றவியல் தவறாகப் பயன்படுத்தலைப் பற்றிய வாட்டர்கேட் வெளிக்காட்டல்களை
அடுத்து, காங்கிரசால் திணிக்கப்பட்ட எப்.பி.ஐ உள்நாட்டு வேவுபார்த்தல் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.
புதிய சட்டமானது புலம்பெயர்ந்தோருக்கு குறைவான உரிமைகளை விடுகிறது அல்லது உரிமைகள்
இல்லாமல் செய்கிறது --அவர்களின் அரசியல் கருத்துக்களின் அடிப்படையில் தவிர்த்தலைச் செய்கிறது, சட்டரீதியான
அரசியல் தொடர்பின் அடிப்படையில் வெளியேற்றல் மற்றும் மத்திய (புலனாய்வுத் துறை) முகவர் அவ்வாறு இருப்பதாக
சொன்னாலே தடுப்புக்காவலில் வைக்கப்படுவர்.
தேசபக்த சட்டமானது மக்கள்தொகை மொத்தத்திற்கும் எதிராக போலீஸ் அதிகாரங்களை
விஸ்தரித்துள்ளது, தொலைபேசியை ஒட்டுக் கேட்டல் மற்றும் மின்னனுவியல் தொடர்புகளை இடைமறித்தல் எப்.பி.ஐக்கு
பெரும் வாய்ப்பை நல்கியது. அட்டர்னி ஜெனரல் ஜோன் ஆஷ்குரொப்ட்
(John Ashcroft) கடந்த இலையுதிர்காலத்தில் வெளியிடப்பட்ட ஆணையால் ஊதிப்பெருக்கப்பட்ட இந்த
அதிகாரம், சட்ட ஆலோசனை பெறுவதற்கான அரசியற்சட்ட உரிமையைக் கீழறுத்தது. ஆஷ்குரொப்ட் ஆணையானது,
வழக்குரைஞர்களுக்கும் அவர்களின் கட்சிக்காரர்களுக்கும் இடையிலான உரையாடல், பயங்கரவாதத்தைத் தொடக்கூடும்
என்ற "சரியான காரணத்தை" கொடுத்தால், அந்த தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்க முகவர்களை
அனுமதித்தது.
மின்கம்பிகளை ஒட்டுக்கேட்க "இலக்கின்றி சுற்றித் திரிதலுக்கான" வேண்டுகோள், பயங்கரவாதிகள்
என்று சந்தேகப்படுவோர் வசிக்கும் வசிப்பிடங்கள் முழுவதும் உள்ள கட்டண தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டபதற்கு வெளிநாட்டு
உளவுக் கண்காணிப்பு நீதிமன்றம் இப்பொழுது இரகசியமாக அக்கீகரித்துள்ளது.
தேசபக்த சட்டத்தின் கீழ், பள்ளிக் கூடங்கள் மாணவர்களது நிலைச்சான்றுகளை
(பதிவேடுகளை) ஒப்படைப்பது தேவையானதாக இருந்தது, போருக்கு எதிரான எதிர்ப்பாளர்களை எப்.பி.ஐ உளவு
பார்த்த வெளிக்காட்டல்களுக்கு பதிலாக அது 1974ல் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எப்.பி.ஐ பயங்கரவாதி
என சந்தேகப்படும் எவருக்குமான கடன் வழங்கல் பற்றிய நிலைச்சான்றுகளை நூலகங்கள் கட்டாயம் ஒப்படைக்க
வேண்டும். செய்தித்தாள்கள் உறுப்பினர் பட்டியல்கள், புத்தக நிலைய பற்றுச்சீட்டுக்கள் மற்றும் இதழியலாளர்களின் பிரசுரிக்கப்படாத
குறிப்புக்கள் மற்றும் நிழற்படங்களையும் கூட உள்ளடக்கிய, "வர்த்தக குறிப்புக்களை" முகவர்கள் கூட கோரமுடியும்.
ஜூனில், ஆஷ்குரொப்ட் அவையின் நீதிமன்றக் குழுவிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க
மறுத்துவிட்டார். எத்தனை அமெரிகக் குடிமக்கள் தேசபக்த சட்டத்தின் கீழ், கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்
என்ற கேள்விகள் உட்பட, எத்தனை முறை நீதித்துறை நூல்நிலையத்தை, புத்தக நிலையத்தை அல்லது செய்தித்தாள்
உறுப்பினர் கட்டண நிலைச்சான்றுகளை, மற்றும் எத்தனை மின்கம்பி ஒட்டுக் கேட்டல்கள் பெறப்பட்டிருந்தன உட்பட்ட
பல கேள்விகளைக் கேட்டிருந்தது.
நிறைவேற்று அதிகார ஆணை மூலம், புஷ் பயங்கரவாதத்துடன் தொடர்பு
கொண்டிருப்பதாகக் கூறப்படும் குடிமக்கள் அல்லாதோரை விசாரிக்க நிறுவிய இராணுவ முறைமன்ற இருக்கைகள்,
அடிப்படை சட்டரீதியான பாதுகாப்புக்களை மறுத்தது.
ஒரு நிழல் அரசாங்கம்
அது அதிகமான அழிவுகரமான பயங்கரவாதத் தாக்குதலின்போது "தொடர்ந்து இயங்குதலை"
உறுதிப்படுத்த என்ற உண்மையை மறைத்துக் காட்டும் வகையில், வாஷிங்டனுக்கு வெளியே காவல் அரண்செய்யப்பட்ட
நிலத்தடி அறைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரக் கிளையின் 75 முதல் 150 உறுப்பினர்களைக்
கொண்ட ஒரு இரகசிய "நிழல் அரசாங்கத்தை", இந்த ஆண்டு தொடக்கத்தில் புஷ் நிர்வாகம் நிறுவி இருந்தது என்பது
வெளியாகி இருந்தது.
உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் பாழ்படுத்தப்பட்டதன் பின்னர், உடனடியாக
முன்முயற்சி எடுக்கப்பட்ட அந்த ஏற்பாடானது பொது மக்களுக்குத் தெரியாமல் நிரந்தரமாக செய்யப்பட்டது. ஜனாதிபதி
மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோருக்கு மரணம் நிகழுமானால் அவர்களுக்குப் பின் பதவி ஏற்பதில் மூன்றாம் நான்காம்
நிலையிலுள்ள, அவையின் பேச்சாளர் டெனிஸ் ஹாஸ்டர்ட் மற்றும் செனெட் தலைவர் புரோ டெம் றொபர்ட் பைர்ட்
ஆகியோர் உட்பட, காங்கிரசானது இவை பற்றி அறியாது இருட்டில் விடப்பட்டது போன்றிருந்தது.
நிர்வாகமானது உள்நாட்டு பாதுகாப்புத் துறையை உருவாக்குவதன் மூலம், ஒரு புதிய
உயர் போலீஸ் முகவாண்மையை பலப்படுத்த மேற்சென்றது, அது 170,000 பணியாளர்களுடன் 37.4 பில்லியன் டாலர்களை
மொத்த வரவு-செலவு திட்டமாய் கொண்ட, இருக்கும் 22 அரசாங்க அலுவலகங்களின் பகுதிகளை அல்லது அனைத்தையும்
சேர்ந்ததாகக் கொண்டிருக்கும்.
சுருங்கக் கூறின், எந்தவிதமான அரசியலமைப்பு ரீதியான சரிபார்ப்போ அல்லது சமநிலைப்படுத்தலோ
இல்லாமல், மற்றும் போலீஸ் மற்றும் இராணுவ அதிகாரத்தின் மீது தங்கி இருந்து, இரகசியமாக ஆட்சி செய்யும்,
சர்வாதிகார ஆட்சிக்கான கட்டமைப்பை நிர்வாகமானது வைத்திருக்கிறது. அரசியற் சட்ட கட்டமைப்பாளர்களால்
நிறைவேற்று அங்கத்திற்கு சமமாக அதிகாரத்தை உரித்தாக்கிய, அரசாங்கத்தின் நீதித்துறை மற்றும் சட்டமியற்றும்
கிளைகள், சக்திமிக்கவகையில் கைப்பொறிப்பு (ஆராயாது ஏற்றுக் கொள்ளும் அந்தஸ்துக்கு) முத்திரைகளாகக் குறைக்கப்பட்டன.
புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள்
பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அதிர்ச்சிகர எதிர்வினையை சாதகமாக எடுத்துக்
கொண்டு மற்றும் மக்கள் தொகையினரின் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதியினரை --மத்திய கிழக்கிலும்
மத்திய ஆசியாவிலும் இருந்து வந்த முஸ்லிம் புலம்பெயர்ந்தோரை-- முதலில் இலக்கு வைத்து, அரசாங்கமானது
அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கவிழ்ப்பதற்கு விரைவாய் செயல்பட்டது. பத்துலட்சக் கணக்கான
புலம்பெயர்ந்தோரைப் பொறுத்த மட்டில், ஆட்கொணர்வு மனு --குற்றம் சாட்டப்படாமல் ஒருவரையும் காலவரையற்று
சிறைவைக்க முடியாத உத்தரவாதம்-- ஒரு புறமாய் வீசப்பட்டது, அவை கைது செய்யப்பட்டோர் வழக்குரைஞரைப்
பார்ப்பதற்கு மற்றும் வழக்கை எதிர் கொள்வதற்கு அவர்களின் உரிமையாக இருந்ததால் அது தூக்கி வீசப்பட்டது.
தாக்குதல்களுக்குப் பின்னர் முதல் சில மாதங்களில், மத்திய நிர்வாகத்தினர், பயங்கரவாதத்தில்
சம்பந்தம் கொண்டுள்ளனர் என கூறப்படும் சந்தேகத்தின் பேரில் வழக்கு விசாரணை எதுவுமின்றி 1200க்கும் அதிகமானோரை
சிறையில் தள்ளுவதற்கு சட்டரீதியான மூடிமறைப்பாக புலம் பெயர்ந்தோர் சட்ட விதிமுறைகளைப் பயன்படுத்தினர். ஒருவர்
கூட பயங்கரவாதத் தொடர்புடைய குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கவில்லை, மேலும் பெரும்பாலானோர் மொத்தமாக
திரும்ப ஏற்றி அனுப்பப்பட்டனர்.
கடந்த மாதம் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவால் வெளியிடப்பட்ட 95 பக்க அறிக்கையானது,
செப்டம்பர்11 க்கு அதன் பதிலில் "பொது மக்கள் தெள்ளத்தெளிவாக அறிதல் மற்றும் அவர்களுக்குப் பதில் சொல்லக்
கடமைப்படுதல் பற்றிய ஜனநாயகக் கோட்பாடுகளைப் பொறுத்தவரை மலைப்பூட்டும் புறக்கணிப்பு" கொண்டிருந்ததாக
புஷ் நிர்வாகத்தை குற்றம் சாட்டியது. "நாடானது அரசாங்க அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தல் மீதான
அடிப்படை உரிமைகளை தொடர்ச்சியாய், வேண்டுமென்றே மற்றும் சட்டப்படி உரிமை அற்றவகையில் அரித்தெடுத்ததை
சந்தித்தது" என அது மேலும் குறிப்பிட்டது.
"குற்றத்தை ஆராயாது ஏற்றல்" எனத் தலைப்பிடப்பட்ட, அறிக்கையானது தாக்குதல்களுக்குப்
பின்னர் சுற்றி வளைக்கப்பட்ட 1,200 புலம் பெயர்ந்தோர், முற்றிலும் அவர்களின் மதம் அல்லது தேசிய மூலத்தின்
அடிப்படையில் மட்டுமே சிறையிடப்பட்டனர், உரிமை மறுக்கப்பட்டனர் மற்றும் பல விடயங்களில் தவறான மற்றும்
கொடுமையான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டனர். சிறைவைக்கப்பட்ட, ஐவரி கோஸ்ட் குடிமகனான, டோனி ஒலாய்,
தான் புளோரிடா தடுப்புக் காவல் மையத்தில் "உயிர்ப் பிச்சை கேட்கும் வரைக்கும்" அடிக்கப்பட்டதாகவும் காதுகள்,
மூக்கு மற்றும் வாயிலிருந்து இரத்தம் வடிந்ததாகவும் மனித உரிமை அமைப்பிடம் கூறினார். ஏனையோர் தாங்கள்
உள்ளூர் சிறைகளில், காவலர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தாங்கள் எவ்வாறு சிறைகளில் உள்ள கைதிகளால்
திரும்பத் திரும்பத் தாக்கப்பட்டோம் என்பதை விவரித்தனர்.
அமெரிக்க குடிமக்களுக்கு நீட்டிக்கப்பட்ட அரசாங்கத் தாக்குதல்
இவ்வாறு புலம்பெயர்ந்தோர் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு ஆளாகியுள்ள
நிலையில், அரசாங்கமனாது அதன் போலீஸ் அரசு அதிகாரத்தை அமெரிக்கக் குடிமக்களைக் கவனிக்க நீட்டித்தது. யாசர்
எசாம் ஹம்தி மற்றும் ஜோஸ் பாடில்லா ஆகிய இரு அமெரிக்கக் குடிமக்கள் "எதிரிப் போராளியாக" இராணுவத்தால்
காலவரையற்று வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் குற்றம் சாட்டப்பட்டிருக்கவில்லை, அவர்களுக்கு சட்ட ஆலோசனை
மறுக்கப்பட்டிருக்கிறது மற்றும் அரசாங்கம் அவர்களை விசாரணைக்குக் கொண்டுவர நோக்கம் கொண்டிருக்கவில்லை
என்றது.
அமெரிக்க நீதித்துறையால் வரையறுக்கப்பட்ட "எதிரிப் போராளி" யும் ஜனாதிபதியால்
வடிவமைக்கப்பட்டது. ஹம்தி ஆப்கானிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்டவர், படில்லா சிகாக்கோவில் உள்ள ஓ'ஹாரே விமான
நிலையத்தில் உள்ள மத்திய முகவாண்மைகளால் பொறுக்கி எடுக்கப்பட்டார், இந்த விதமாய் எந்த அமெரிக்கக்
குடிமகனும் தெருவிலிருந்து கைப்பற்றப்பட முடியும் மற்றும் குற்றம் சாட்டப்படாமல் வைக்கப்பட முடியும், மேலும் அரசாங்கம்
அவனோ அல்லது அவளோ பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தாமலும் கூட வைக்கப்படுவர் என்ற
முன்னோடியை இது ஏற்படுத்தியது.
கடந்த மாதம் ேவால்ஸ்ட்ரீட் பத்திரிகை, அரசாங்கம் பாடில்லா வைக்கப்பட்டிருந்த
தெற்கு கரோலினா இராணுவ சிறைச்சாலையான, கூஸ் கிரீக் பகுதியை மற்றைய அமெரிக்கக் குடிமக்களைச் சிறையிடுவதற்காக
துப்புரவாக்கியது என அறிவித்தது. அந்த இதழ் உயர் அதிகாரியை மேற்கோள் காட்டி, இராணுவம் "இப்பொழுது 20
அமெரிக்கக் குடிமக்களை சிறையிட பயன்படுத்தக் கூடியதாக சிறப்புப் பிரிவைக் கெண்டுள்ளது, அரசாங்கம் அவர்களை
"எதிரிப் போராளிகளாக் கருதினால்" என கூறியது. காவலில் வைக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்தால் ஏனைய
இடங்களில் வைத்திருக்க இராணுவ வசதிகள் இருக்கின்றன.
நீதித்துறை அதிகாரிகள் எந்த குடிமக்கள் கைது செய்யப்பட வேண்டும் மற்றும் தடுப்புக்காவல்
முகாம்களுக்குள் அனுப்பப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக ஒரு இரகசிய குழு நிறுவப்பட்டிருக்கிறது என
கூறினர். அத்தகைய நடத்தைக்காக யார் போதுமான அளவு அச்சுறுத்தலைக் கொண்டுள்ளனர் என்பதை வரையறை செய்வதற்கான
அளவீடுகள் குற்றவியல் பயங்கரவாத விசாரணைகளுக்கான எப்.பி.ஐ வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் கூறப்பட்டிருக்கின்றன.
"வன்முறைக்கான அல்லது ஏனைய தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கான திட்டமிடலைக்
குறிகாட்டும் அல்லது ஆதரிக்கும் பங்கேற்றவரால் விடுக்கப்பட்ட தெரிந்த கூற்றுக்கள் இல்லை என்றாலும் கூட, ஒரு
நிறுவனத்தால் (பயங்கரவாதியால்) ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நடத்தையின் தன்மையே (குற்றவியல் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான)
அளவீடாய் திருப்திப்படுத்தப்பட்டது என்ற ஊகத்தை நியாயப்படுத்தும்."
அமெரிக்க தேசபக்த சட்டத்தின் கீழ், பயங்கரவாதமானது அரசாங்கத்தை வெறுமனே
"மிரட்டுவது" என்பதை உள்ளடக்குவதற்கு ஏதுவாக அந்த அளவு பரந்த அளவு வரையறை செய்யப்பட்டிருக்கிறது. வேறுவார்த்தைகளில்
கூறினால், அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை அல்லது உள்நாட்டுக் கொள்கைக்கு எந்த எதிர்ப்பினரின் வார்த்தைகளும்
புஷ்ஷால் அல்லது அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஜோன் ஆஷ்குரொப்ட் ஆகியோரால் "மிரட்டுவதாக" கருதப்பட்டால்,
அவர் மத்திய (புலனாய்வு) முகவர்களால் பற்றிக் கொள்ளப்படுவார், இராணுவ சிறைக்குள் தள்ளப்படுவார் மற்றும் அங்கு
விசாரணை எதுவுமின்றி அல்லது ஒரு வழக்குரைஞர் இல்லாமல் காலவரையற்று வைக்கப்படுவார்.
நிர்வாகத்தின் வலியுறுத்தலான முன்னென்றுமிருந்திரா போலீஸ் அரசு அதிகாரங்கள் காங்கிரசில்
இருந்து அடக்கவொடுக்கமாய் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளலைச் சந்திக்கும் மற்றும் நீதித் துறையிலிருந்து பொதுவாய்
பச்சை விளக்கைப் பெறும் அதேவேளை, தொடரான நீதிமன்ற முடிவுகள் அதன் நடவடிக்கைகளில் பாரதூரமான
அரசியற்சட்ட அத்துமீறல்களைக் கொண்டிருக்கின்றதை சுட்டிக் காட்டி இருக்கின்றன.
கடந்த மாதம், ஓகியோவில் உள்ள மூன்று நடுவர்கள் கொண்ட மத்திய முறையீட்டு முறைகாண்
ஆயம் புஷ் நிர்வாகத்தின் இரகசிய திருப்பி அனுப்பல் விசாரணையை அரசியல் அமைப்புக்கும் ஜனநாயகத்திற்கும் ஒரு
அச்சுறுத்தல் என்று விவரித்து முடிவு அளித்தது. நீதிமன்றம் மிச்சிகன், அன் ஆர்பரிலிருந்து ஒரு முஸ்லிம் மதகுருவான ரபிஹ்
ஹத்தாத்தின் திருப்பி அனுப்பப்படல் மீதான இரகசிய விசாரணையிலிருந்து பொதுமக்களையும் பத்திரிக்கையையும் தவிர்த்தது
தொடர்பாக காங்கிரஸ்காரர் ஜோன்காயர்ஸ் மற்றும் நான்கு மிச்சிகன் பத்திரிகைகளால் தொடரப்பட்ட வழக்கின்
மீது நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
"ஜனநாயகங்கள் மூடிய கதவுகளின் பின்னால் இறந்தது", என முறைகாண் ஆயத்திற்கான
நீதிபதி டமோன் ஜே.கெய்த் எழுதினார். "அரசாங்கம் கதவுகளை மூடத் தொடங்கிய பொழுது, அது தேர்ந்தெடுத்து
கட்டுப்படுத்துகிறது. வடிகட்டப்பட்ட தகவல்கள் தவறான தகவலாகும்."
நீதித்துறை செயல்முறைகளை "ஆழமான ஜனநாயக விரோதமானவை" என அழைத்து,
அவர் முடிவுரைத்ததாவது: இரகசிய நிழலில் செயல்படும் ஒரு அரசாங்கம் எமது அரசியலமைப்ப்பின் வடிவமைப்பாளர்களால்
கற்பனை செய்யப்பட்ட சமுதாயத்திற்கு எதிரானது."
வெளிநாட்டு உளவுக் கண்கானிப்பு நீதிமன்றம் அண்மையில், ஆஷ்குரொப்ட் மற்றும் நீதித்துறை
கண்கானித்தல் மற்றும் தேடுதல்களை மேற்கொள்ளும் பொழுது அரசியற் சட்டத்தை திரும்பத்திரும்ப மீறி இருந்தது
என்பதைக் கண்டது. எப்.பி.ஐ முகவர்களிடமிருந்து பொய்யான தகவல்களைப் பெறல் உட்பட, தவறாகப் பயன்படுத்தல்
சம்பந்தப்பட்ட கண்கானிப்புக்களுக்கான 75 மனுக்களை, நீதிமன்றமானது மேற்கோள் காட்டியது. ஒரு முகவர் நீதிமன்றத்தில்
தோன்றுவது நிரந்தரமாக தடைசெய்யப்பட்டது.
புஷ் கொள்கையின் சர்வதேச விளைபயன்கள்
அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலின் சர்வதேச விளைபயன்கள், பதவியை
விட்டு செல்லும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர், அயர்லாந்தின் முன்னாள் பிரதமர் மேரி
றொபின்சனால் வலியுறுத்திக் கூறப்பட்டன. கோபம் கொண்ட பத்திரிகை நேர்காணலில், ஐ.நா மீதான உக்கிரமான
அமெரிக்க அழுத்தத்தின் விளைவாக அவர் அவரது பதவியை விட்டு விரட்டப்பட்டிருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தினார்.
றொபின்சன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போரில் அது ஜெனிவா விதிமுறைகளை
மீறிவிட்டதாகக் கண்டனம் செய்ததால் புஷ் நிர்வாகத்தின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டார். கியூபாவில்
குவாண்டானமோ கடற்படைத் தளத்தில் தொடர்பு கொள்ள முடியாது வைக்கப்பட்டிருக்கும் தலிபான் மற்றும் அல்கொய்தா
சிறையாளிகளுக்கு போர்க்கைதிகள் அந்தஸ்து கொடுப்பதற்கு வாஷிங்டனின் மறுப்பினைக் கண்டனம் செய்தார்.
அதேபோல, வடக்குக் கூட்டணி மற்றும் தலிபான் எதிர்ப்பு படைகளில் உள்ள அதன் பதிலாள்களை தலிபான் சிறையாளிகளை
படுகொலை செய்வதிலிருந்து தடுக்கத்தவறிவிட்டது என அமெரிக்காவைக் குற்றம் சாட்டினார்.
வாஷிங்டனால் எடுக்கப்பட்ட ஜனநாயகபூர்வமல்லா நடவடிக்கைகள் உலகில் உள்ள ஆட்சிகளால்
"ஒடுக்குமுறைக் கொள்கைகளை பின்பற்றுவதற்கு ஒரு பச்சை விளக்காக, எந்த விதமான அடாச்செயல்களும்
கண்டுகொள்ளாமல் விடப்படும் என்ற நம்பிக்கைக்கான உத்தரவாதம்" என்று புரிந்து கொள்ளப்பட்டன.
போலீஸ் அரசின் கோரக் காட்சி
வர்த்தக மையம் மற்றும் பெண்டகனின் மீதான தாக்குதல்களுக்கு முதல் ஆறுவாரங்களுக்குப்
பின்னரான புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை மேற்கோள்காட்டி, உலக சோசலிச வலைத் தளம் நவம்பர் 7,
2001 அன்று குறிப்பிட்டதாவது: "சராசரி அமெரிக்கர் செப்டம்பர் 10, ஐக்கிய அமெரிக்க அரசுகளை இன்றுள்ளதுபோல
ஒரு படத்தைக் காட்டுவாரேயானால், பதில் இப்படி இருந்திருக்கும்: 'நான் அறிந்த அமெரிக்கா இதுவல்ல. இது
அதிகமாய் போலீஸ் அரசைப் போல இருக்கிறது."
தாக்குதல்களுக்கு ஒரு ஆண்டுக்கு பின்னால், இந்த நிகழ்ச்சிப்போக்கு மிகவும் பாரதூரமாக
முன்னேறி இருக்கிறது. செப்டம்பர் 11 பயங்கரவாதத்திற்கு தவிர்க்க முடியாத பதிலாக, புஷ் நிர்வாகத்தால் நாடப்பட்ட
மற்றும் பெறப்பட்ட மிகப் பெரும் அளவில் போலீஸ் அதிகாரங்களைப் பலப்படுத்துதல் எப்.பி.ஐ, சி.ஐ.ஏ மற்றும்
அதி வலதுகளால் பல ஆண்டுகளாக திணிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுடன் கொள்கை மாறாது இருக்கிறது.
ஜனநாயகக் கட்சியினரும் அதேபோல குடியரசுக் கட்சியினரும் புஷ் நிர்வாகத்தின்
கொள்கைகளை அரவணைத்துக் கொண்டனர், புலம்பெயர்ந்தோரை பரந்த அளவில் சிறையிலடைப்பது தொடர்பாக
அல்லது "எதிரிப் போராளி" ஆக கருதப்படும் குடிமக்களை தடுப்புக் காவல் முகாம்களுக்கு அனுப்ப அச்சுறுத்தல் தொடர்பாக
ஒரு முக்கிய தேசிய அரசியல்வாதியும் கூட குறிப்பிடத்தக்க எதிர்ப்பை எழுப்பி இருக்கவில்லை.
செப்டம்பர் 11 சம்பவத்தை அடுத்து ஜனநாயக உரிமைகள் மீது அதன் போரைத்
தொடுப்பதில் இந்த அளவுவரை அரசாங்கம் போயிருப்பது ஏன்? இந்த நடவடிக்கைகள் "பயங்கரவாதத்தின் மீதான
போரில்" ஒரு பாதுகாப்பு வழிமுறையாக நம்பத்தகுந்த வகையில் விளக்கப்பட முடியாது. இரண்டாம் உலகப்
போரிலும் சரி அல்லது குளிர் யுத்தத்திலும் சரி அமெரிக்க நிர்வாகங்கள் குடிமக்கள் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதில்
அல்லது நிறைவேற்று கிளைக்கு எல்லையற்ற அதிகாரத்தை உரிமை கற்பிப்பதில் இந்த அளவு சென்றதில்லை. முதலாவது
விஷயத்தில், ஜேர்மனி மற்றும் ஜப்பானில் உள்ள ஆற்றல் மிக்க இரு ஏகாதிபத்திய பகைவர்களுக்கு எதிராக இரு முனைகளில்
போரிட அமெரிக்கப் படைகள் நிர்பந்திக்கப்பட்டிருந்தன. இரண்டாவது விஷயத்தில், வாஷிங்டன் அணு ஆயுதம் கொண்ட
சோவியத் ஒன்றியத்துடன் முரண் கொண்டிருந்தது. இன்றோ, பகைவர் என்று கூறப்படுபவர், இந்தக் கோளத்தில் மிக
ஏழ்மையான நாடுகளில் இருந்து இயங்கும் கந்தல் கந்தலாகிப்போன பயங்கரவாதக் குழுக்கள் ஆவர்.
ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலின் சமூக வேர்கள்
இந்த தாக்குதல்களுக்கான ஊற்று மூலம் சமூக கட்டமைப்பில் உள்ள மாற்றங்களினுள்ளே
இருக்கிறது. அவை சமூக சமத்துவமின்மையில் ஏற்பட்டுவரும் பரந்த அளவிலான அதிகரிப்பின் உற்பத்திப் பொருளாக
இருக்கின்றன மற்றும் இரு பிரதான கட்சிகளுக்கான மக்கள் ஆதரவு அரிக்கப்பட்டதில் எதிரொலிக்கும், அமெரிக்க
அரசியல் அமைப்பு முறையின் அழுகலின் விளைவாகவும் இருக்கின்றன.
பரந்த அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உண்மையான அரசியற்
சட்டம் இல்லாத அரசியல் நிறுவனத்திற்குள்ளே, பரந்த வெகு ஜனங்களுக்கும் இரு கட்சிகளையும் கட்டுப்படுத்தும்
கோடீசுவரர்கள் மற்றும் பில்லியனர்களின் மெல்லிய தட்டுக்கும் இடையிலான சமூக இடைவெளியானது அந்த அளவுக்கு விரிந்துள்ளது.
இன்னும் சொல்லப்போனால், குடிமக்கள் உரிமைகள் மற்றும் அரசியற் சட்ட கோட்பாடுகள் ஆளும் தட்டுக்குள்ளே,
போர் மற்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பராமரிப்பு போன்ற அத்தியாவசிய சமூகப் பாதுகாப்புக்களை
அழித்தல் உள்பட, அவற்றை ஆதரிக்கும் மக்கள் விரோதக் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கு தடைகளாக, பரந்த
அளவில் பார்க்கப்படுகின்றன.
புஷ் நிர்வாகத்துடன், இந்த போக்கு உப்பிப் பெருகி இருக்கிறது. இந்த அரசாங்கம்தான்
ஜனநாயக நெறிமுறைகளை முன் என்றுமிருந்திரா அளவில் அத்து மீறியதில் வெகுஜன வாக்குகளை நசுக்கியதன் மூலம்
2000ல் அதிகாரத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் அதிகாரத்தைக் கற்பிதம் செய்து கொள்ளலானது, பாலியல்
தொடர்பிலிருந்து முளைவிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் கிளிண்டன் பதவி நீக்க விசாரணை மூலம், அரசியல் அமைப்பு
சட்டத்திற்கு அப்பாற்பட்ட சதியைக் கொண்டு வருவதில் கிட்டத்தட்ட வெற்றி கண்ட அரசியல் சதிகளின் ஆழம் மற்றும்
தொடர்ச்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.
கடந்த செப்டம்பர் 11க்குப் பின்னர், அமெரிக்க உழைக்கும் மக்கள் எதிர்
கொண்டிருக்கும் மிக முக்கிய ஆபத்து என்னவெனில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டுகள் அல்ல, மாறாக தேர்ந்தெடுக்கப்படாத
அரசாங்கம், நிதிமிக்க மேற்குடி ஆட்சியின் சேவையில் முன்னென்றுமிருந்திரா ஒடுக்குமுறை அதிகாரங்களை ஒன்று திரட்டுவதில்
வளைந்து கொடுப்பதாகும். கடந்த ஆண்டு ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தலுக்கும் ஏகாதிபத்தியப் போருக்கு
எதிரான போராட்டத்திற்கும் --மற்றும் அவைகளை வளரவிடும் பொருளாதார அமைப்புக்கு எதிரான போராட்டத்துக்கும்
பிரிக்க முடியாத தொடர்பு இருப்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. அடிப்படை உரிமைகள் சர்வதேச சோசலிசத்துக்கான
போராட்டத்தில் மட்டுமே பாதுகாக்கப்பட முடியும்.
See Also:
சதியும் மூடி மறைப்பும்: புஷ்
நிர்வாகமும் செப்டம்பர் 11ம்
சர்வாதிகாரத்தின் நிழல்:
செப்டம்பர் 11க்குப் பின்னர் புஷ் இரகசிய அரசாங்கத்தை நிறுவினார்
புஷ் நிர்வாகத்துக்கு ஏன் யுத்தம்
அவசியமாகியுள்ளது?
நியூயோர்க்
மற்றும் வாஷிங்டன் நகரங்களின் மீதான பயங்கரவாத தாக்குதல்களின் அரசியல் வேர்கள்
Top of page
|