World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Behind German Chancellor Schröder's opposition to war on Iraq

ஜேர்மன் பிரதமரின் ஈராக் மீதான யுத்தத்திற்கு எதிர்ப்பின் பின்னணி
By Peter Schwarz
10 September 2002

Use this version to print | Send this link by email | Email the author

செப்டம்பர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய தேர்தலை யுத்தம் தொடர்பான கேள்வி தீர்மானிக்கலாம். ஈராக் மீதான யுத்தத்தில் ஜேர்மனியின் பங்கெடுப்பை சமூக ஜனநாயக கட்சியினை சேர்ந்த ஜேர்மன் பிரதமரான ஹெகார்ட் ஷ்ரோடரும், பசுமைக் கட்சியினை சேர்ந்த வெளிநாட்டு அமைச்சரான ஜொஸ்கா பிஸ்ஸரும் நிராகரித்ததை தொடர்ந்து எடுக்கப்பட்ட கணிப்பீடுகள் சமூக ஜனநாயக கட்சிக்கும் பசுமைக் கட்சியிக்குமான ஆதரவு கூடியுள்ளதை காட்டுகின்றது.

ஜேர்மன் மக்களின் பரந்தளவினர் ஈராக் மீதான யுத்தத்தை நிராகரிக்கின்றனர். இப்பரந்த எதிர்ப்பானது அடித்தளமிட்டிருப்பது, இரண்டு உலக யுத்தங்களினது உளவியல்ரீதியான அனுபவமும் மற்றும் இந்த இராணுவ நடவடிக்கைக்கு சாதகமானவர்களினது கருத்து தொடர்பான ஐயுறவுமாகும். ஈராக் தொடர்பான பிரச்சனையின் முக்கிய நோக்கம் எண்ணெய் வளங்கள் தான் என்பது மிகத்தெளிவாகவுள்ளது.

யுத்த நோக்கங்கள் மீதான ஹெகார்ட் ஷ்ரோடரினதும், ஜொஸ்கா பிஸ்ஸரினதும் எதிர்ப்பும் பரந்த மக்களினது எதிர்ப்பும் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றபோதிலும், அரசாங்கத்தின் எதிர்ப்பிற்கு வித்தியாசமான அடித்தளங்கள் உண்டு. வாஷிங்கடன் மீதான விமர்சனமானது ஜேர்மன் ஏகாதிபத்தியத்தினது திட்டவட்டமான நலன்களை கொண்டிருப்பதுடன், அது பாரசீக வளைகுடாவில் தனது சொந்த நலன்களை கொண்டுள்ளது.

ஹெகார்ட் ஷ்ரோடரும், ஜொஸ்கா பிஸ்ஸரும் தமது முன்னவர்களான கிறிஸ்தவ ஜனநாயக கட்சியினது முன்னாள் பிரதமரான கெல்முட் கோலினதும், தாரளவாத கட்சியை சேர்ந்த வெளிநாட்டு அமைச்சர்களான கன்ஸ் டீற்றிஷ் ஹென்சரினதும் கிளவுஸ் கின்கலினதும் வெளிநாட்டு கொள்கையை தொடருகின்றனர். 1990 இன் ஜேர்மன் மறு இணைப்பிற்கு பின்னர் குளிர் யுத்தகால முடிவின் பின்னரும் ஜேர்மனி உலக அரங்கில் தனது ஆளுமையை அதிகரித்துக்கொள்ள தீவிரமாக முனைகின்றது.

இந்த நோக்கத்தை அடைவதற்கு எல்லாவற்றிற்கும் மேலாக சுதந்திரமாக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், யுத்தங்களை செய்வதுமான தகமைகள் ஜேர்மனிக்கு தேவையாக உள்ளது. சமூக ஜனநாயக கட்சியினதும் பசுமைக்கட்சியினதும் கூட்டரசாங்கத்தின் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பான இருப்பெடுப்பானது 16 வருடகால கிறிஸ்தவ ஜனநாயக கட்சியினது ஆட்சியிலும் பார்க்க கடந்த 4வருட காலத்தில் இவ்வரசாங்கம் மிகவும் முன்னோக்கி சென்றுள்ளதை காட்டுகின்றது. ஹெகார்ட் ஷ்ரோடரிற்கும், ஜொஸ்கா பிஸ்ஸருக்கும் கீழ் ஜேர்மன் வெளிநாட்டு கொள்கையின் முக்கியமான ஆயுதமாக இராணுவ பலம் மீண்டும் எழுந்துள்ளது.

இராணுவம் தொடர்பான தடைகளை நீக்குதல்

கடந்த வருடம் வாராந்த இதழான Die Zeit இற்று வழங்கிய பேட்டியில், ஹெகார்ட் ஷ்ரோடர் தனது அரசாங்கமானது ''இராணுவத் தொடர்பான தடைகள் எல்லாவற்றையும் அகற்றியுள்ளது'' என குறிப்பட்டார். கிறிஸ்தவ சமூக கட்சியை சேர்ந்த பிரதமர் வேட்பாளரான எட்முண்ட் ஸ்ரொய்பருடனான விவாதத்தின் போது தனது தலைமையின் கீழ் ஜேர்மன் இராணுவத்தின் சர்வதேச தலையீடானது 10 மடங்கால் அதிகரித்துள்ளதாகவும், வெளிநாடுகளில் இராணுவத்தை வைத்திருக்கும் நாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்தாக ஜேர்மன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த 4வருடங்களில், 1999 இல் யூகோஸ்லாவியா மீதான நேட்டோவினது யுத்தத்திலும், 2001 இல் ஆப்கானிஸ்தான் யுத்தத்திலும் ஜேர்மன் படையாளர் கலந்துகொண்டுள்ளனர். அத்துடன், பொஸ்னியா, கொஸவோ, மஸடோனியா, ஜோர்ஜியா, ஆப்கானிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், துருக்கி, குவைத், பஹ்ரெயின், டிஜிபுட்டி, ஆபிரிக்கமுனை, அராபிய கடல், மத்தியதரைக்கடல், இத்தாலி (நேட்டோவினது தலைமையகம்), அமெரிக்கா (தம்பா, புளொரிடா) போன்ற 16 இடங்களில் தனது இராணுவத்தை வைத்துள்ளது. இத்தலையீட்டில் துருக்கியையும், இத்தாலியையும் தவிர மற்றைய இடங்கள் அனைத்தும் நேட்டோவினது எல்லைக்கு அப்பால் உள்ளது.

சமூக ஜனநாயகக் கட்சியும், பசுமைக் கட்சியும் 1990 இல் இருந்து ஜேர்மன் இராணுவத்தை மாற்றியமைப்பதை தீவிரமயப்படுத்தியுள்ளன. வெளித்தாக்குதலில் இருந்து தனது தேசிய எல்லைகளை பாதுகாக்கும் ஒரு இராணுவம் என்பதிலிருந்து உலகம் முழுவதும் இயங்கக்கூடிய ஒரு சர்வதேச இராணுவமாக மாற்றப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சரான பீற்றர் ஸ்ருக் (Peter Struck -சமூக ஜனநாயகக் கட்சி) அண்மையில் வெளிநாட்டு தலையீடுகள் கலந்து கொள்வதற்கான இராணுவ தலைமையை இதுவரை பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகரான இருந்தவரிடம் கையளித்துள்ளார். இது படைத்துறை தளபதி (General chief of staff) போன்றது. 1945 இல் மூன்றாம் குடியரசு என அழைக்கப்படுவதில் வீழ்ச்சியின் பின்னர் இப்பதவியானது இல்லாது ஒழிக்கப்பட்டது. பேர்லினின் பத்திரிகையான Tagesspiegel '''இராணுவத்தை மிகவும் தொழில்ரீதியானதாக மாற்றும் திசையிலும், ஒரு நாட்டை பாதுகாக்கும் இராணுவம் என்பதில் இருந்து வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான திறமையான அமைப்பாக கட்டுவதாகும்'' எனக் குறிப்பிட்டது.

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சு 2001 இற்கும் 2015 இற்கும் இடையில் இராணுவ செலவீட்டிற்காக 110 பில்லியன் யூரோ அடங்கிய பாரிய இராணுவ செலவுத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அது நீண்ட தூரங்களுக்கு இராணுவ பிரிவுகளையும் தளபாடங்களையும் எடுத்துச்செல்லக்கூடிய பான்- ஐரோப்பிய போக்குவரத்து விமானமான A400M இற்கும், தூர இடங்களை தாக்ககூடிய ஏவுகணை (Taurus) அபிவிருத்திக்கும், திசையை வழிநடத்தகூடிய (Polyphem) இற்கும், பாரிய Taifun ஏவுகணைகளுக்கும் நிதி ஒதுக்கியுள்ளது.

தேர்தலை தொடர்ந்து ஜேர்மன் இராணுவ செலவானது அதிகரிக்கவுள்ளது. 2003 இற்கான செலவு 2 பில்லியன் யூரோவிற்கு அதிகமானதாகும்.

இவ் அரசாங்மானது, தனது முன்னைய ஆட்சியாளரைவிட மிகவும் திறமையாக செயற்படுவதை நிரூபித்துள்ளது. அது கொலைகளை தடுப்பது என்பதன் கீழும், பயங்கரவாதத்திற்கு எதிரானது என்பதன் கீழும் தனது இராணுவ கொள்கையை நியாயப்படுத்துகின்றது. இது பாசிசத்திற்கு எதிரான ஜேர்மனியின் கடைமை என்பதன் கீழ் 1999 இல் பெல்கிராட்டின் மீது தாக்குதலை நடாத்துவதை பசுமைக் கட்சியின் வெளிநாட்டு அமைச்சரை முடிவெடுக்கவைத்தது. ஒரு பழமைவாத கட்சியானது இப்படியான விவாதத்தை முன்வைத்திருக்குமானால் ஐயுறவிற்று இடமின்றி அது பாரிய எதிர்ப்பை எதிர்நோக்கவேண்டியிருந்திருக்கும்.

மறு இணைப்பின் முன்னர் ஜேர்மனியின் வெளிநாட்டு கொள்கை

அண்மைக் காலத்தின் அபிவிருத்திகளை ஒரு பரந்த வரலாற்று உள்ளடக்கத்தில் ஆராய்ந்தால் சமூக ஜனநாயகக் கட்சியினதும் பசுமைக் கட்சியினதும் வெளிநாட்டு கொள்ளகை அவர்களது முன்னையவர்களான பழைமைவாத, தாராளவாத கட்சியினது தொடர்ச்சி என்பது தெளிவாக தெரியும்.

இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனி தோற்கடிக்கப்பட்ட பின்னர் அதனது வெளிநாட்டு கொள்கையானது, ஒரு பக்கத்தில் அமெரிக்காவினது கூட்டிற்கும் மறுபக்கத்தில் ஐரோப்பிய ஒன்றிணைவிற்கும் இடையிலான ஒரு முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறுகிய வரையறைகளுக்குள் இயங்கிக்கொண்டிருந்தது. குளிர் யுத்த காலத்தில் யுத்த முனைகளின் முக்கிய நிலைகளை ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததுடன், அமெரிக்காவின் இராணுவ ஆதரவானது தவிர்க்க முடியாதது என ஜேர்மனியின் ஆளும் தட்டினர் கருதியதுடன், நேட்டோவில் அமெரிக்காவின் முக்கிய பங்கையும் ஏற்றுக்கொண்டனர்.

இதேவேளை விரைவாக அபிவிருத்தியடைந்து கொண்டிருந்த ஜேர்மனியின் தொழிற்துறைக்கு ஐரோப்பிய சந்தையை சுதந்திரமாக அணுகுவது அவசியமானதாக இருந்தது. இதனால் முதலாம் உலக யுத்தத்தில் அடைந்த தோல்வியினாலான அரசியல், பொருளாதார தனிமைப்பாட்டை எவ்விதமான செலவிலும் தவிர்த்துக்கொள்ளவது அத்தியாவசியமானதாக இருந்தது. இந்த அடித்தளத்தில் சகல கட்சிகளும் ஐரோப்பாவினுள்ளான ஜேர்மனியின் உள்புகுதலை ஆதரித்தன.

இந்த வரையறைகளுக்குள் உலக அரசியலில் ஒரு முக்கியமான பாத்திரமாக தன்னை மாற்றியமைத்துக்கொள்வது சாத்தியமற்றதாக இருந்தது. ஜேர்மனியின் பிரதமர்களும், வெளிநாட்டு அமைச்சர்களும் ஜேர்மனின் வியாபாரத்திற்காக உலகம் முழுவதும் பயணம் செய்தனர். அவர்களுடன் ஒரு தொகை முக்கிய வர்த்தக பிரதிநிதிகளும் சென்று வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக்கொண்டதுடன், மூலப்பொருட்களையும், ஏற்றுமதிக்கான சந்தைகளையும் உறுதிப்படுத்திக்கொண்டனர். அத்துடன் ஆசியாவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் உற்பத்திக்கான புதிய தளங்களை அமைத்துக்கொண்டனர்.

எவ்வாறிருந்போதிலும், ஏனைய ஏகாதிபத்தியங்களைப் போலல்லாது ஜேர்மனியால் தனது நலன்களை இராணுவ பலத்தால் திணிக்க முடியவில்லை. சமாதானங்கள், விட்டுக்கொடுப்பு, பணிந்துபோதல் மற்றும் நவீனமயமாதல் என்பதனூடாக தனது பொருளாதார பலத்தை பயன்படுத்த கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அது ஆசியாவிலும் இலத்தீன் அமெரிக்காவிலிருந்த வலதுசாரி சர்வாதிகார அரசுகளுடனும், சோவியத் யூனியன், சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் ஸ்ராலினிச அரசுகளுடனும் சமாளித்துக்கொள்ளகூடியதாகவும் விட்டுக்கொடுக்ககூடியதாகவும் இருந்தது. அது இஸ்ரேலுடனும், பேர்சியாவின் ஷாவிலிருந்து அதன் பின்னான கொமெய்னி வரை உறவுகளை ஏற்படுத்தியிருந்தது. இவ்விதமான சகல நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் அமெரிக்காவுடனான தனது உறவையும் பாதுகாத்ததுடன், அப்படகு கவிழ்ந்துபோகவும் விடவில்லை.

கென்ஸரிசம் என குறிப்பிடப்படும் முன்னாள் வெளிநாட்டு அமைச்சரின் பெயரால் குறிப்பிடப்பவது அதனது விட்டுக்கொடுக்கும் வெளிநாட்டு கொள்ளகையினது குறியீடானது. இது ஜேர்மனியின் வர்த்தகத்திற்கு சிறப்பானதாக இருந்ததுடன், அதனை உலகத்தின் முக்கிய ஏற்றுமதி நாடாகவும் மாற்றியது.

ஜேர்மனியின் வெளிநாட்டு கொள்கையானது ஒரு அமைதிவாத வடிவத்தை எடுத்திருந்தது. மிகவும் பழைமைவாத பிரிவினர் கூட ''யுத்தம் வேண்டாம்'' என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். 1949 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு சட்டமானது நேட்டோவின் எல்லைகளுக்கு வெளியே ஜேர்மனியின் இராணுவத்தை கொண்டு செல்லவிடாது என்ற பொதுவான உணர்வு இருந்தது. 1994 இல் ஜேர்மனியின் அரசியலமைப்பு நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக அப்படியான தலையீடுகளை சாத்தியமாக்கியது.

மறுஇணைப்பின் பின்னர் ஜேர்மனியின் வெளிநாட்டுக் கொள்கை

ஜேர்மனியின் மறுஇணைப்பும், வார்ஷோ உடன்படிக்கையின் உடைவும், சோவியத் யூனியனின் கலைப்பும் ஜேர்மனியின் வெளிநாட்டுக் கொள்கையில் புறநிலை அடித்தளத்தில் ஒரு திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பாவின் மேற்குகரையில் இருந்து அதன் மத்தியிற்கு நகர்ந்ததன் மூலமாக முழு சுயாட்சியை பெற்றதால் ஜேர்மனியின் பொருளாதாரம் ஒரு மேலதிக பாரத்தை பெற்றது. குளிர் யுத்தகாலத்தின் முடிவுடன், நேட்டோ தனது இருப்பிற்கான நியாயப்படுத்தலை இழந்தது. இது அமெரிக்காவிடனான முரண்பாடுகளுடன் கூடிய பூகோள சந்தைக்கான போட்டியை தீவிரமாக்கியது.

பிரதமரான கெல்முட் கோலினதும், வெளிநாட்டு அமைச்சரான ஹென்சரினதும் அரசாங்கத்தினது சர்வதேச கொள்கையானது வாஷிங்டனிது பொருளாதார, அரசியல், இராணுவ ஆதிக்கத்தை தாண்டிவரும் அடிப்படையான நோக்கத்தை கொண்டிருந்தது. இதேவேளை தமது முக்கிய பலமான எதிராளியை வெளிப்படையாக பகைமையையும் தவிர்த்துக்கொணண்டனர்.

இக் கவனமானது உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நோக்கத்தை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகும். 1871 இல் ஜேர்மன் குடியரசு நிறுவப்பட்ட பின்னரும் அதன் முதல் இணைப்பிற்கும் பின்னர் தற்போதைய ஜேர்மன் குடியரசில் நீண்டகாலம் இவ்வரசாங்கம் பதவியில் இருந்தமைக்கு அத்திலாந்திற்கு இடையாலான உறுதிப்பாடே காரணமாகும். அமெரிக்காவுடனான பகிரங்க முரண்பாடானது அதன் உறுதிப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கும். மேலும், ஒன்றிணைந்த ஜேர்மனி, அமெரிக்காவை பொருளாதார ரீதியாகவோ அல்லது இராணுவ ரீதியாகவோ எதிர்க்க பலம் குறைந்ததாக இருந்தது.

உத்தியோகபூர்வமான அறிக்கைகளில் அத்திலாந்திக்கு அப்பால் இருந்த பாரிய சக்தியுடன் மோதிக்கொள்ளவதை கவனத்துடன் அரசாங்கம் தவிர்த்து வந்தது. பதிலாக, உரத்த குரலில் தனக்கும் சமமான அந்தஸ்து வேண்டும் என கேட்டது. அமெரிக்கா ''ஒரேயொரு'' அல்லது ''பலமான சக்தி'' என தொடர்ச்சியாக குறிப்பிடப்பட்டு வந்தது. அமெரிக்காவை பலப்படுத்துக்கொள்வதாக குறிப்பிடப்படும் வாஷிங்டனின் எவ்விதமான கருத்துக்களும் கவனமாக நோக்கப்பட்டது. உதாரணமாக, ஐரோஆசியா மீதான அமெரிக்காவின் ஆழுமையை எடுத்துக்காட்டும் Zbigniew Brzezinski இனால் எழுதப்பட்ட புத்தகமான பாரிய சதுரங்க பலகை (The Great Chessboard) என்பது ஹென்சரின் முகவுரையுடன் ஒரேயொரு உலக சக்தி (The Only World Power) என்ற பெயருடன் வெளியிடப்பட்டது.

அமெரிக்காவின் ஆதிக்கம் செலுத்தும் நிலையை தனியாக எதிர்க்க முடியாது என்பதை ஆளும் தட்டினர் ஏற்றுக்கொண்டிருந்தனர். அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டமைப்பு தேவையாக இருந்தது. ஜேர்மனியின் மறு இணைப்பின் பின்னர் பிரதமரான கெல்முட் கோல் ஐரோப்பிய ஒன்றிணைப்பானது தனது வாழ்க்கை பணியாகியுள்ளது என் குறிப்பிட்டார்.

1992 ல், ஐரோப்பிய நாடுகளின் தலைமைகள் மாஸ்ரிட் உடன்படிக்கையில் (Maastricht treaty) கையெழுத்திட்டனர். ஜேர்மனியாலும் பிரான்சாலும் முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சியாது அமெரிக்காவுடன் முக்கிய துறைகளில் மோதிக்கொண்டது. தனி ஐரோப்பிய நாணயத்தின் அறிமுகத்துடன் முதல் தடவையாக டொலர் ஒரு முக்கிய எதிர்ப்பை நோக்கியது. ஒருங்கிணைந்த நாணயத்தினதும், தனியான சுயாதீனமான இராணுவத்தின் அபிவிருத்தியும் அமெரிக்காவுடன் அரசியல் ரீதியாக சமமாக விளையாடுவதன் நோக்கத்தை கொண்டதாகும். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் கிழக்கு ஐரோப்பாவில் ஒத்துழைக்கும் நாடுகளையும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதே வருடத்தில் கெல்முட் கோலின் அரசாங்கமானது ஒரு புதிய ''பாதுகாப்பு வழிமுறைகளை'' உருவாக்கிக்கொண்டது. முதல் தடவையாக ஜேர்மனியின் இராணுவமானது தனது பொருளாதார, அரசியல் நலன்களை பாதுகாப்பதற்கான ஒரு அமைப்பு என உறுதியாக கூறப்பட்டது. அதனது கடமைகளில் உலகத்தின் ''உலகளாவியரீதியில் அரசியல், பொருளாதார, இராணுவ, சுற்றுசூழலியல் உறுதிப்பாட்டை பாதுகாப்பதும்'', ''சுதந்திரமான உலக வர்த்தகத்தையும், மூலப்பொருட்களை அடைவதையும் பாதுகாப்பதும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது'' என்பது இணைத்துக்கொள்ளப்பட்டது. இராணுவத் தலைவரான Klaus Naumann இராணுவ தலையீடுகளை ''அரசியலுக்கான ஒரு திறமையான ஆயுதம்'' எனக் குறிப்பிட்டார்.

1992 இல் ஹென்சரின் பதவியை ஏற்றுக்கொண்ட கிளவுஸ் கிங்கல் Frankfurter Allgemeine Zeitung எனும் பத்திரிகையில் ஜேர்மனியின் புதிய சர்வதேச நோக்கங்கள் என்பது பற்றி குறிப்பிட்டிருந்தார். முன்னைய நவீனத் தன்மை ஆளுமைக்கும், விரிவுபடுத்தலுக்குமான கோரிக்கையால் மீறிச்செல்லப்பட்டது. ''எமது எதிர்காலத்தை உறுதிப்படுத்துக்கொள்வதற்காக உலகச் சந்தையில் எமது நிலையை பலப்படுத்திக்கொள்வதே எமது காலத்தின் முக்கிய கடமைகளாகும்'' என கிளவுஸ் கிங்கல் மேலும் தெரிவித்தார். அத்துடன் அவர் கிழக்கு ஐரோப்பா மீதான ஜேர்மனியின் ஆதிக்கத்தை '' நாம் மத்தியில் இருப்பதன் காரணமாகவும், எமது அளவினதும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவுடனான எமது பாரம்பரிய உறவின் காரணமாகவும், இந்நாடுகள் மீண்டும் ஐரோப்பாவினுள் கொண்டுவருவதில் முக்கிய சாதகமான தன்மைகளை எமக்கு சாதகமாக எடுக்கவேண்டியுள்ளது'' எனவும் குறிப்பிட்டார்.

1991 இல் ஹென்சர் ஜேர்மனியின் புதிய சுதந்திரத்தை ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பாரம்பரிய ஆளுமைக்கான பிரதேசமான பால்கனில் பரீட்சித்துப்பார்க்க முயன்றார். மீண்டும் குறிப்பிடத்தக்க சர்வதேச எதிர்ப்பின் மத்தியில் அது யூகோஸ்லாவியாவின் இரத்தம் தோய்ந்த உடைவிற்கு ஒரு படியாக குரோசியாவையும், சுலோவேனியாவையும் சுதந்திரமான அரசுகளாக விரைவாக ஏற்றுக்கொண்டது.

இம்முன்னெடுப்பானது, தனது பலத்தை எடுத்துக்காட்டுவதற்கானதேயன்றி அந்நாடுகளின் சுதந்திரம் தொடர்பானதல்ல. பிரான்சினதும் இங்கிலாந்தினதும் அரசாங்கங்கள் இப்பாரிய பலமான இராஜதந்திரத்தால் மதிப்பிழந்தன. குரோசியாவினை அங்கீகரிப்பது தொடர்பாக ஆரம்பத்தில் எதிர்ப்பை காட்டிய அமெரிக்கா, பின்னர் சாகிரப்புடன் (Zagreb) நெருக்கமாக இணைந்து பொஸ்னியாவின் சுதந்திரத்தினை முன்னெடுத்தது. இதனை தொடர்ந்த பொஸ்னியாவினதும் கொஸவோவினதும் யுத்தங்களானது ஐரோப்பிய அரசாங்கங்களால் ஒரு பொதுவான நிலைப்பாட்டை அபிவிருத்து செய்யும் தன்மையின் இயலாமையை எடுத்துக்காட்டிதுடன், அமெரிக்காவின் இராணுவத்தில் தாம் தங்கியிருப்பதை நிரூபித்தன.

அதிலிருந்து ஜேர்மனியின் வெளிநாட்டுக் கொள்கையானது பால்கனில் தொடர்ந்து மறு ஒழுங்கமைப்பின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக இராணுவ தலையீடுகளில் தீவிரமாக கவனம் கொண்டிருந்தது. பாதுகாத்துக்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளில் ஜேர்மன் இராணுவத்தினது தலையீடு சிறியதாக இருந்தபோதிலும், முன்னொருபோதும் இல்லாதவாறு அமைதிகாக்கும் நடவடிக்கைகள் எனப்பட்டவற்றில் முக்கிய பங்கு வகித்தது. நடைமுறையில் இது பலவீனமான நாடுகளை பலமான நாடுகள் கட்டுப்படுத்துவதாகும். பொஸ்னியாவிலும், கொஸவோவிலும் குறிப்பிடத்தக்களவு மஸடோனியாவிலும் முக்கிய அரசியல், பொருளாதார முடிவுகள் ஐக்கிய நாடுகள் சபையாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகளாலுமே எடுக்கப்படுகின்றன. இவர்களே உள்நாட்டு குழுக்களில் எவர் முக்கிய பதவியை பெறுவதும் அல்லது எவர் தவிர்த்துக்கொள்ளப்படுவது என்பதையும் தீர்மானிக்கின்றனர்.

சமூக ஜனநாயக் கட்சியினதும் பசுமைக் கட்சியினதும் வெளிநாட்டுக் கொள்கை

பிரதமரான ஹெகார்ட் ஷ்ரோடரும், வெளிநாட்டு அமைச்சரான ஜொஸ்கா பிஸ்ஸரும் வெளியில் தெரியாதவாறு தமது முன்னைய ஆட்சியாளர்களினது கொள்கையை தொடர்கின்றனர். அவர்களின் 1998 இன் தேர்தல் பிரச்சாரத்துடன் ஆரம்பித்து, அவர்கள் வெளிநாட்டுக் கொள்கையில் ஒரு தொடர்ச்சி இருக்கும் எனக் குறிப்பிட்டனர். தேர்தலின் பின்னரும், தாம் பதவியேற்க முன்னரும் அவர்கள் பாராளுமன்றத்தில் சமூக ஜனநாயக் கட்சியினரும் பசுமைக் கட்சியினரும் யூகோஸ்லாவியா மீதான யுத்தத்திற்கு எதிராக வாக்களித்தனர். இத்தீர்மானமானது அவர்களது கட்சியினுள் எதிர்ப்பையும், அந்நியப்படுதலையும் குறிப்பிட்டளவு ஏற்படுத்தியது. இதனால் பசுமைக் கட்சிக்கு அரசாங்கத்தினுள்ளும், வெளிநாட்டு அமைச்சினதும் பதவிகளில் இணைத்துக்கொள்ளும் பரிசு கிடைத்தது.

அவர்கள் பதவியை ஏற்றதுதான் தாமதம் பிஸ்ஸரும், பாதுகாப்பு அமைச்சரான ருடொல்ப் ஷார்ப்பிங்கும் (சமூக ஜனநாயக் கட்சி) யூகோஸ்லாவியா மீதான யுத்தத்தை நியாயப்படுத்த முனைந்தனர். அமெரிக்க வெளிநாட்டு அமைச்சரான மடலீன் அல்பிறைட் (Madeleine Albright) உடன் இணைந்து றம்புயே (Rambouillet) என்னும் இடத்தில் நிகழ்ந்த மாநாட்டில் முக்கிய பங்கு வகித்தார். இம்மாநாடானது பெல்கிரேட் மீதான யுத்தத்திற்கான முன்னிபந்தனையானது. முன்னர் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்ட அல்பானிய பிரிவினைவாதிகளான UCK, றம்புயே மாநாட்டில் நேட்டோவின் முக்கிய பங்காளிகளாக கலந்துகொண்டனர். இதேவேளை, ஷார்ப்பிங் அல்பானிய இனத்தவர் மீதான படுகொலைகள் மற்றும் பாரிய நாடுகடத்தல் தொடர்பான உறுதிப்படுத்தாத கதைகளை பரப்பினார்.

இதை தொடர்ந்த யுத்தத்தில், 2ஆம் உலக யுத்தத்தின் பின்னர் முதல் தடவையாக ஜேர்மன் இராணுவமானது திட்டமிடல் ஆதரவு மட்டுமல்லாத தாக்குதலில் தனது குண்டுவீச்சு விமானங்களுடன் கலந்துகொண்டது.

ஹெகார்ட் ஷ்ரோடரும், ஜொஸ்கா பிஸ்ஸரும் ஒரு சுயாதீனமான ஐரோப்பிய இராணுவத்தினை அமைப்பதற்கு தீவிரமாக உழைத்தனர். 1999 இல் ஜேர்மனின் ஆசீர்வாதத்தின் கீழ் கொலோன் நகரத்தில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டில் 2003 ஆண்டு அளவில் 50,000-60,000 படையினரை கொண்ட படையை கட்ட முடிவெடுக்கப்பட்டது. இப்படையினர் அமெரிக்க இராணுவத்திடம் உள்ளதைவிட அபிவிருத்தியடைந்த ஆயுதங்களை கொண்டிருப்பர்.

ஷார்ப்பிங்கால் நியமிக்கப்பட்ட படைத்தளபதியான Harald Kujat, தனது பதவியேற்பு வைபவத்தில் நிகழ்த்திய உரையில் ''ஐரோப்பாவிலும், அதற்கு வெளியேயும் தனது பூகோளநிலையையும், அதனது நலன்களையும் பாதுகாத்துக் கொள்ளவதற்கு ஐரோப்பாவின் மத்தியில் 80 பில்லியன் மக்களை கொண்ட ஜேர்மனி முக்கிய பங்குவகிக்கவேண்டியுள்ளது'' எனவும், அத்துடன் அதன் ஆயுதப்படைகள் அதனது அளவிற்கும், நோக்கத்திற்கும், அதனது ஆயுதங்களும், அதனது பயிற்சியும் அபிவிருத்தி செய்யப்படவேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

செப்டம்பர் 11ஆம் திகதி தாக்குதலுக்கு பின்னர், இராணுவ விரிவாக்கமானது ஒரு புதிய வடிவமெடுத்துள்ளது. ''எல்லையற்ற ஒற்றுமை'' என அமெரிக்காவுடன் ஷ்ரோடர் வெளிப்படுத்திய உத்தரவாதத்தின் பின்னர் ஒரு வருடத்திற்கு முன்னர் எவரும் எதிர்பார்த்திராத மாதிரி ஆப்கானிஸ்தானிலும், வடகிழக்கு ஆபிரிக்காவிலும், பாரசீக வளைகுடாவிலும் பாரியளவு ஜேர்மன் படையினர் நிலைகொண்டுள்ளனர். பாராளுமன்றத்தில் எவ்விதமான எதிர்ப்பும் இல்லாமல் தலிபானையும், அல் கொய்தாவை கலைப்பதற்காக தமது எதிராளிகளான அமெரிக்கர்களுடன் இரகசியமாக இணைந்து உயர் பயிற்சி பெற்ற படைப்பிரிவினர் இயங்குகின்றனர்.

இந்த நடவடிக்கைகளின் உண்மையான நோக்கம் என்ன என்பதை ஷார்ப்பிங் பாராளுமன்ற உரையில் ''உலகத்தின் 70% ஆன எண்ணெய் வளங்களையும், 40% ஆன் நிலவாயு வளங்களையும் கொண்ட இப்பிரதேசமானது உலகத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை மீதும், உலகத்தின் பொருளாதார பாதுகாப்பின் மீதும் ஆதிக்கத்தை செலுத்தும் என்பது எமது அனைவருக்கும் தெரியும்'' என குறிப்பிட்டார்.

அமெரிக்காவுடனான பகிரங்க முரண்பாடு

அமெரிக்காவுடனான கூட்டு என்பது எப்போதாவது முக்கியமானதாக கருதப்பட்டிருந்தாலும், இது தற்போது ஒரு நப்பாசை என்பது விரைவில் நிரூபிக்கப்பட்டது. தனது கூட்டுக்களின் கருத்தை கவனத்திற்கெடுக்காமலும், ஐக்கிய நாட்கள் சபை மற்றும் சர்வதேச சட்டங்கள் போன்ற சர்வதேச அமைப்புக்களின் கருத்திற்கொள்ளாமல் விடுவதும் ஜேர்மனியின் நலன்கள் தொடர்பான அச்சத்தை பேர்லினில் உருவாக்கியுள்ளது.

ஜேர்மன் அரசாங்மானது தனது சந்தைகளை இழப்பது தொடர்பாக மட்டுமல்லாது, மற்றும் எண்ணெய் இறக்குமதி வளங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் அச்சம் கொண்டுள்ளது. ஒரு புதிய எண்ணெய் நெருக்கடியானது தற்போது பாரிய வேலையில்லாப் பிரச்சனையாலும், வரவு செலவு திட்ட பற்றாக்குறையாலும் உறுதியற்றிருக்கும் ஐரோப்பாவிற்கு ஒரு பாரிய பொருளாதார தாக்கத்தை கொடுக்கும். ஒரு யுத்தமானது முழுப்பிரதேசத்தையும் உறுதியற்றதாக்குவதுடன், அகதிகளின் படையெடுப்பிற்கும் ஏனைய சமூக நெருக்கடிக்ளையும் உருவாக்கும்.

அதிகரித்துவரும் அமெரிக்காவினது அழுத்தத்தின் கீழ் ஐரோப்பாவின் ஒரு பொதுவான வெளிநாட்டுக்கொள்கை இல்லாதுபோவதுடன், ஐரோப்பிய ஒன்றியம் துண்டுகளாக பிரிகின்றது. இது அண்மையில் Elsinore இல் இடம்பெற்ற ஐரோப்பிய வெளிநாட்டு அமைச்சர்களினது கூட்டத்தில் தெளிவாக வெளிப்பட்டது. பிரித்தானிய, இத்தாலிய, ஸ்பானிய அரசாங்கங்கள் புஷ் நிர்வாகத்தினை சார்ந்துபோகையில், ஜேர்மனி அதன் எதிர்ப்பாளர்களினது தலைமையை எடுத்துக்கொண்டது.

ஜேர்மனியின் பிரதமர் ஷ்ரோடர் ''ஜேர்மனி பாதை'' என கூறுகையில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தினுள்ள உள்ள அதிருப்தியாளர்களின் மத்திய பிரிவினை பிரதிபலித்தார். அவர் இத்தேர்தல் கோரிக்கையினது உள்நாட்டு முக்கியத்துவத்தை வலியுறுத்துகையில், அதாவது பாரம்பரிய ஜேர்மன் சமூகநல அரசை பாதுகாக்க முயல்வதாக காட்டுகையில், எதிர்க்கட்சியினராலும் அவர்களது ஆதரவாளர்களாலும் அது வெளிநாட்டு அரசியலாக்கி காட்டப்பட்டது.

கெல்முட் கோல் செய்ததுபோல் உற்சாகப்படுத்தல், பாரிஸ் உடனான உடன்பாடுகள், தாராளமான நிதி உதவுகள் போன்றல்லாது ஷ்ரோடர் ஜேர்மனியின் பொருளாதார, அரசியல் அழுத்தத்தை பிரயோகிப்பதன் மூலம் பேர்லினின் நலன்களை ஏற்றுக்கொள்ளமாறு ஏனைய ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவர்கள் மீது வலியுறுத்துகின்றார்.

இவ் அரசியலானது இராணுவ மோதல்கள் உள்ளடங்கலான ஒரு புதிய சர்வதேச முரண்பாட்டுக்கே இட்டுச்செல்லும். இதற்கான விலையை சாதாரண மக்கள் இராணுவச் செலவீனம், இராணுவ வாதத்தின் அதிகரிப்பு (ஜனநாயக உரிமைகள் இல்லாதொழிக்கப்படுவது, பிற்போக்கு அரசியல் சக்திகளின் வளர்ச்சி), மற்றும் போர்க்களங்களில் படைவீரர்கள் பலியிடப்படுவது மூலம் சுமக்கவேண்டியிருக்கும்.

சமூக ஜனநாயக் கட்சியினதும், பசுமைக் கட்சியினதும் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு அரசியல் தொடர்பான கணக்கெடுப்பானது ஈராக் மீதான யுத்தத்திற்கான எதிர்ப்பிற்க்கு இவ்விரு கட்சிகளையும் அடித்தளமாக கொள்ள முடியாது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இது தனது யுத்தத்திற்கான எதிர்ப்பை தனது தேர்தல் பிரச்சாரன் மத்திய புள்ளியாகியுள்ள ஜனநாய சோசலிச கட்சிக்கும் (PDS- முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச கட்சியான SED இல் இருந்து உருவாகியது) பொருந்தும்.

ஏனைய முதலாளித்துவக் கட்சிகளை போன்று ஜனநாய சோசலிச கட்சியும் அமெரிக்காவினது யுத்த கொள்கைகளுக்கு எதிராக ஐரோப்பிய இராணுவத்தினதும், அரசினதும் பங்கை பலப்படுத்த கோருகின்றது. அதனது இரண்டு முக்கிய தலைவர்களான Gregor Gysi உம் André Brie உம் சமூக ஜனநாயக் கட்சியினது முன்னாள் தலைவரான ஒஸ்கார் லபொன்டைனிற்கு ''உண்மையான பொதுவான ஐரோப்பிய வெளிநாட்டு, இராணுவ கொள்கைகளை'' உருவாக்கவும் ''சர்வதேச கொள்கைகளிலும், பாதுகாப்பு அரசியலிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைக்காகவும்'' கோரிக்கைவிட்டனர். சாதாரண வார்த்தைகளின் கூறுவதானால் இது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை கட்டுவதாகும்.

யுத்த அபாயத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை அத்திலாந்திக்கிற்கு இரண்டு பக்கத்திலும் உள்ள உழைக்கும் மக்களினது ஐக்கியத்தாலேயே நடாத்த முடியும். இது சர்வதேச நெருக்கடிக்கும், அதிகரித்துவரும் ஆயுதமயமாக்கலுக்கும் தொழிலாள வர்க்கத்தை பலியிடச்செய்ய முயலும் சமூக ஜனநாயக் கட்சி அல்லது பழைமைவாத அரசாங்கங்களாயினும் அவற்றிற்கு எதிரான ஒரு சமரசமற்ற போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்னோக்கை அடித்தளமாக கொள்ளவேண்டும்.

அதிகரித்துவரும் அமெரிக்க அழுத்தத்திற்கு பதில் ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் நிதி மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்கும் அமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தை பலப்படுத்துவதல்ல. மாறாக ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை உருவாக்குவதாகும்.

See Also :

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போரை எதிர்!
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சர்வதேச இயக்கத்தைக் கட்டி எழுப்பு!

ஜேர்மன் பிரதமர் ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தத்தை எதிர்த்துள்ளார்

Top of page