ஐக்கிய
அமெரிக்கா
Political reaction and intellectual charlatanry: US academics issue
statement in support of war
அரசியல் பிற்போக்குத்தனமும் புத்திஜீவித பாசாங்கும்: யுத்தத்துக்கு ஆதரவாக
அமெரிக்க கல்விமான்கள் அறிக்கை
By David North
18 February 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
அரசாங்கத்திலும் செய்தி ஊடக வட்டாரங்களிலும் செல்வாக்கு மிக்க, பொதுக்
கொள்கை வல்லுநர்கள் மற்றும் வலதுசாரி கல்விமான்கள் அறுபது பேர்கள் கொண்ட குழுவொன்று, "ஏன் நாங்கள்
போராடிக் கொண்டிருக்கிறோம்: அமெரிக்காவிலிருந்து ஒரு கடிதம்" என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.[1]
புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தின் "மெய்யியல் மற்றும் சட்டரீதியான பாதுகாப்பினை
முன்வைக்கும் செயல் நோக்கத்துடன், எழுத்தாளர்கள் தங்களின் சொந்த பைத்தியக்காரத்தனம், நேர்மையின்மை
மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு வெறுப்பு இவற்றினை, அழிவுகரமான முறையில் தங்களைத் தாங்களே
அம்பலப்படுத்திக் கொள்வதை மட்டுமே வழங்குவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
கையெழுத்திட்டவர்களுள் இப்போது சிராகியூஸ் பல்கலைக் கழகத்தில் கற்பித்துக்
கொண்டிருக்கும் முன்னாள் அமெரிக்க செனட்டர் டானியல் மொய்னிஹன், ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச்
சேர்ந்த பிரான்சிஸ் புக்குயாமா, ஹார்வாட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சாமுவேல் ஹண்டிங்டன் மற்றும் தேடா
ஸ்கோக் போல் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் வால்சர் ஆகியோரும் உள்ளடங்குவர்.
இந்த அறிக்கையுடன் தங்களின் பெயர்களை இணைத்துக் கையெழுத்திட்ட இவர்களும்
ஏனையோரும் "முன்னணி புத்திஜீவிகள்" என வாஷிங்டன் போஸ்டால் விவரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள்
இப்படித்தான் என்றால், அமெரிக்காவில் புத்திஜீவிகள் வாழ்க்கை படுபாதாளத்தில் வீழ்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
இக்கடிதத்தின் விஷயங்களுள் மிகவும் கருத்தை ஈர்க்கும் விஷயங்கள் அதன் ஆவேசம் மற்றும் கீழ்த்தரப் பண்பு ஆகியவையாகும்.
[2]
இக்கடிதத்தை ஒருவர் படிக்கையில் எண்ணத்தில் எழும் கேள்விகள், "ஏன் இது எழுதப்பட்டிருக்கிறது?"
மற்றும் எந்த பார்வையாளர்களை அது உண்மையில் நோக்கம் கொண்டிருக்கிறது?" என்பனவாகும். அரசாங்கத்தின் யுத்தப்
பரப்பலுக்கு அதன் ஆதரவில் அரசியல் நிறுவனம் ஏகோபித்ததாக இருக்கும் அமெரிக்காவில் மற்றும் செய்தி ஊடகங்களில்
அமெரிக்க இராணுவவாதத்தைப் பற்றிய விமர்சனத்தை சந்திக்கத் திராணியற்ற ஆனால் விரும்புகின்ற, "உயர் அதிகாரம்
கொண்ட கல்விமான்களால்" யுத்தத்துக்கு ஆதரவாய் சிறப்பு அறிக்கை விடுவதற்கு தேவை என்ன இருக்கிறது?
வாஷிங்டன் போஸ்ட் கூட கொஞ்சம் குழம்பி இருக்கிறது, அது குறிப்பிடுகிறதாவது: "செப்டம்பர் 11க்குப்
பின்னர் இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதை அமெரிக்கா நியாயப்படுத்துகிறது என்ற கடிதங்களின் முக்கிய உந்தல் காரணமாக
--ஐக்கிய அமெரிக்க அரசுகளில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது-- என்பதன் காரணமாக, அக்கடிதங்கள்
நோக்கங்கொண்ட பார்வையாளர்கள் மற்றும் காரணம் முற்றிலும் தெளிவாக இல்லை."
ஒருவேளை பல்கலைக்கழக விரிவுரை மண்டபங்களில் மாணவர்களுடன் அவர்கள் எதிர்கொள்ளுகின்றதன்
அடிப்படையில் --செய்தி ஊடகங்கள் கூறுகிறவாறு யுத்தத்துக்கு பொது மக்களின் ஆதரவு கருத்து ஒற்றுமை கொண்டதாகவும்
திடமானதாகவும் அரிதாகவே இருக்கிறது என்று கையெழுத்திட்டவர்கள் உணர்வும் அச்சமும் கொள்கின்றனர் என்ற
முடிவுக்குவர ஒன்று வழிவகுக்கிறது. பரந்த அளவில் மற்றும் ஓய்வில்லாத பிரச்சாரம் இருப்பினும், அரசாங்கமும் செய்தி
ஊடகமும் புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவில் வலிந்து ஈர்க்கும் வாதத்தை வழங்குவதற்கு இதுவரை தவறி
வந்திருக்கிறது என்று கையெழுத்திட்டவர்கள் வெளிப்படையாக உணர்கின்றனர்.
ஆனால் கடிதமானது அரசாங்கத்தின் யுத்த ஆதரவு பிரச்சாரத்திற்கு ஆதாரம் எதையும்
சேர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அது பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவையும் நாகரிகத்தையும்
பாதுகாக்க யுத்தம் தொடுக்கப்படுகிறது என்ற நிர்வாகத்தின் நிலைப்பாட்டை விமர்சனமற்று ஏற்கிறது. கருத்தார்ந்த
வாதத்திற்கான அடிப்படைத் தேவையை மீறும் வகையில், கடிதம் இந்த முன்மொழிவுக்கான முறைமைநிலையை நிரூபிக்கும்
எதையும் முயற்சிக்கவில்லை. அது அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கைகளை புனிதப்படுத்துவதற்கான ஒழுக்க நிலைப்பாடாகவே
விரும்பி அணுகுகிறது.
"நாங்கள் ஏன் போராடிக் கொண்டிருக்கிறோம்" எனத் தலைப்பிடப்பட்ட பகிரங்கக்
கடிதம், இரண்டாம் உலக யுத்தத்தின் போது ரூஸ்வெல்ட் நிர்வாகத்தால் ஊக்கி ஆதரிக்கப்பட்ட பிரபல பிரச்சார பத்திரமான
ஏன் நாங்கள் போராடுகிறோம் என்பதை உள்ளத்தின் நினைவாழத்திலிருந்து கொண்டுவருவதற்கான முயற்சியைக்
கூறுகிறது. ஆனால் இரு முயற்சிகளுக்கும் இடையே உள்ள ஒப்புமை, தலைப்புகளுக்கு அப்பால் நீட்டிக்கப்படவில்லை.
ஏன் நாங்கள் போராடுகிறோம் என்பது ஒரு கலைத்துவ மற்றும் அரசியல் விஷயம் கொண்ட படைப்பு என்பதை
ஒருவர் அங்கீகரிப்பதற்கு, ரூஸ்வெல்ட் நிர்வாகத்தின் ஆதரவாளராக இருக்கத் தேவையில்லை, இரண்டாம் உலக யுத்தத்தில்
அமெரிக்காவின் நுழைவைத் தீர்மானித்த ஏகாதிபத்திய நலன்களுக்கு வக்காலத்து வாங்குபவராக இருக்கவும் தேவை
இல்லை. பிராங்க் கேப்ராவினால் இயக்கப்பட்ட ஏழு கருத்து விளக்க குறும்படங்களின் தொடர்கள் பாசிசம் ஒரு
அரசியல் இயக்கமாக உள்ளதன் ஆபத்துக்களை இட்டு பொதுமக்களை விழிப்புறச் செய்வதை நாடியது.
ஏன் நாங்கள் போராடுகிறோம் அதன் பார்வையாளர்களை அக்கறையுடன் எடுத்துக்
கொண்டது. ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்குள் (ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் தனிமைவாதிகள் இருவரிடமும்) உள்ள
ஆழமான யுத்த எதிர்ப்பு உணர்வுகளைத் தெரிந்து, அதன் தயாரிப்பாளர்கள் புலனுணர்வு உணர்வெழுச்சி அடிப்படையில்
கருத்துக்கள் ஏற்படுகின்றன என்னும் கோள் மற்றும் பிரச்சார மட்டத்துக்கு மேல்
சர்வாதிகாரத்தினை எதிர்த்த ஜனநாயகத்திற்கான போராட்டமாக யுத்தத்தை அறிவுஜீவித ரீதியில்
நம்பச்செய்வதற்கான தேவையை உணர்ந்தனர். புதிய ஒப்பந்த தாராண்மைவாதத்தின் கட்டமைப்புக்குள்ளே, திரைப்படமானது
பாசிசத்தின் எழுச்சி மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தின் தோற்றம் பற்றிய விவரங்களை வழங்கியது. அது அரசியல்,
பொருளாதார மற்றும் சமூகரீதியான ஸ்தூலமான தன்மையின் அளவில் அது விஷயங்களையும் நிகழ்ச்சிகளையும் விளக்கியது
அதில் பகிரங்கக் கடிதத்தின் ஆசிரியர்கள் திராணியற்றவர்களாகத் தோன்றுகின்றனர்.
கேப்ராவின் செய்திப்படத்திற்கு மாறுபட்டவகையில், கல்விமான்களின் இக் கடிதம் புஷ்
நிர்வாகத்தின் கொள்கைகளில் வெளிப்பாட்டைக் கண்ட பொருளாதார நலன்கள் ஒருபுறம் இருக்கட்டும், மத்திய ஆசியாவில்
யுத்தத்திற்கான வரலாறு மற்றும் அரசியல் பின்புலத்தைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. பதிலாக ஆசிரியர்கள் யுத்தம் பற்றிய
அவர்களின் பேணலுக்கு "வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களுக்கும் பொருத்தமாயிருக்கும் ஐந்து அடிப்படை உண்மைகளை"
அடிப்படையாகக் கொண்டிருந்தனர்.
தம்முள் மாறுபட்ட தன்மையுடையதாக, ஐக்கிய நாடுகள் அவை, அரிஸ்டாட்டில் மற்றும்
போப் ஜோன் போல் II ஆகியோரின்
மூலங்களிலிருந்து பெறப்பட்ட, இவ்வுண்மைகள் ஆவன: (1) "அனைத்து மனிதர்களும் சுதந்திரமாய் பிறக்கிறார்கள்
மற்றும் மதிப்பிலும் உரிமைகளிலும் சமத்துவமாக இருக்கிறார்கள்", (2) "சமுதாயத்தின் அடிப்படைக் குடிமகன் மனிதன்
ஆவான், மற்றும் அரசாங்கத்தின் சட்டரீதியான பாத்திரம் மனித குலம் தழைத்தோங்குவதற்கான சூழ்நிலைகளை வளர்த்துப்
பேணுவதைப் பாதுகாப்பதும் அதற்கு உதவுவதும் ஆகும்," (3) "மனிதர்கள் வாழ்வின் நோக்கத்தையும் அதன் இறுதி
முடிவையும் பற்றிய உண்மையை அடைவதற்கு இயற்கையாகவே ஆவல் கொண்டிருப்பார்கள்," (4) "மன சாட்சியின்
சுதந்திரம் மற்றும் மத சுதந்திரம் மனிதனின் மீறமுடியா உரிமைகள்," (5) "கடவுள் பெயரால் கொலைசெய்தல் கடவுள்
மீதான நம்பிக்கைக்கு முரணானது மற்றும் மத நம்பிக்கையின் சர்வவியாபகத் தன்மைக்கு மாபெரும் துரோகமாகும்."
பின்னர் அவர்கள் ஐக்கிய அமெரிக்க அரசுகள் "நம்மைப் பாதுகாப்பதற்காகவும் இக்கொள்கைகளைப் பாதுகாப்பதற்காகவும்
போராடுகிறது" என்று வலியுறுத்தினர். ஆகையால் அமெரிக்கா "நீதியான யுத்தத்திற்கு" போராடுகிறது. எவ்வளவு
எளிதாக இருக்கிறது!
அத்தகைய அருவமான வரலாற்றுப் பார்வை அல்லாத மற்றும் போலியான ஒழுக்க
முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்ட "நீதியான யுத்தம்" எனும் சட்டப்படியான நிலையை ஒருவர் ஏற்க
வேண்டுமானால், ஐக்கிய அமெரிக்க அரசுகளானது, நாளாந்த அடிப்படையில், சர்வதேச மற்றும் உள்நாட்டுக்
கொள்கைகளின் நடத்தையில் இந்தக் கோட்பாடுகள் ஒவ்வொன்றையும் மீறுகிறது என்பதை விளக்குவது கடினமாக
இருக்காது.
*அனைத்து மனிதர்களும் சுதந்திரமாய்ப் பிறக்கிறார்கள் மற்றும் மதிப்பிலும் உரிமைகளிலும்
சமத்துவமாக இருக்கிறார்கள்: ஐக்கிய அமெரிக்க அரசுகளில் நிலவும் உண்மையான சமூக உறவுகள்--அதில்
பெரும் செல்வம் மக்கள் தொகையின் சிறிய தட்டினரிடம் குவிந்திருக்கிறது-- இந்த நல்லொழுக்கப் போதனையை கேலிக்
கூத்தாக்குகின்றது. ஐக்கிய அமெரிக்க அரசுகளில் தனிநபரின் சமூக உரிமையையும் வாழ்வின் தரத்தையும் தீர்மானிக்கும்
மிகப் பெரிய காரணி ஒருவனோ அல்லது ஒருத்தியோ பிறந்த குடும்பத்தின் வருமான மட்டம் ஆகும். ஐக்கிய அமெரிக்க
அரசுகளின் எல்லைகளுக்கு அப்பால், அமெரிக்க ஏகாபத்தியத்தால் பாதுகாக்கப்படும் நலன்கள் கோடிக்கணக்கான மக்கள்
வாழுகின்ற ஏழ்மை நிலையும் கழிகடை நிலையும் அடிப்படை ஆதாரமாக இருக்கின்றது.
* "சமுதாயத்தின் அடிப்படைக்
குடிமகன் மனிதன் ஆவான்,மற்றும் அரசாங்கத்தின் சட்டரீதியான பாத்திரம் மனித குலம் தழைத்தோங்குவதற்கான
சூழ்நிலைகளை வளர்த்துப் பேணுவதைப் பாதுகாப்பதும் அதற்கு உதவுவதும் ஆகும்: அமெரிக்க அரசாங்கம்
கொள்கைப் பற்றார்வம் காட்டுவது இந்தக் கோட்பாடல்ல. நடைமுறையில் மற்றும் கணிசமான அளவுக்கு, சட்டத்தில்,
"சமுதாயத்தின் அடிப்படைக் குடிமகன்" "மனிதன்" அல்ல மாறாக தனியார் உடைமையான கார்ப்பொரேஷன் ஆகும்.
ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்குள்ளே உள்ள சமூக உறவுகளின் உள்ளடக்கத்தில், "மனித குலம் தழைத்தோங்குவதற்கான
சூழ்நிலைமைகளை "அரசாங்கம் வளர்த்துப்பேணும் என்பதன் அர்த்தம் அமெரிக்க கார்ப்பொரேஷன்களின் திருட்டார்வக்
கோளாறு கொண்ட பணவெறி பிடித்த கும்பலின் தனிப்பட்ட செல்வத்தை பெருப்பிப்பதை விட வேறு ஒன்றுமில்லை.
* "மனிதர்கள் வாழ்வின் நோக்கத்தையும் அதன் இறுதி முடிவையும் பற்றிய
உண்மையை அடைவதற்கு இயற்கையாகவே ஆவல் கொண்டிருப்பார்கள்: புஷ் நிர்வாகமானது, அறிவியல் தொடர்பான
அதன் அவமதிப்பில், மத தப்பெண்ணங்களை முன்னிலைப்படுத்துவதில் மற்றும் பரந்த ஊடகத்தை சூழ்ச்சித் திறத்துடன் கையாளுவதில்,
உண்மையை அறிவதற்கான ஆவலை விரக்தி அடையச் செய்வதற்கு தன் சக்திக்கு முடிந்த அளவு எல்லாவற்றையும் செய்கிறது.
* "மன சாட்சியின்
சுதந்திரம் மற்றும் மத சுதந்திரம் மனிதனின் மீறமுடியா உரிமைகள்: பேச்சுரிமைக்கு உண்மையான மரியாதையை
ஒருவர் அணுகும் மட்டத்துக்கு, ஐக்கிய அமெரிக்க அரசுகளது கொள்கைகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், ஜனநாயக
உரிமைகளை மேலும் மேலும் வெளிப்படையாகவே நேரடியாக ஒடுக்குதலை நோக்கியதாகும். அமெரிக்க அரசாங்கம்
அறிவியல் எதிர்ப்பு மூடப் பழமைவாதத்தை முன்னிலைப்படுத்தவும் சர்ச்சையும் அரசையும் தனியாகப் பிரிக்கின்ற அரசியல்
சட்டத்தின் உரிமைக் கட்டளையை படிப்படியாக அழிக்கவும் அது சந்தர்ப்பத்தை வழங்கும்போது மட்டும் அமெரிக்க
அரசாங்கத்திற்கும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டின் தலைவர்களுக்கும் " மத சுதந்திரம்"
விருப்பமானதாகும். [3]
* கடவுள் பெயரால் கொலைசெய்தல்
கடவுள் மீதான நம்பிக்கைக்கு முரணானது: மதவரலாறு தொடர்பான எந்த கருத்தார்ந்த ஆய்வும் கூறுவது
போல எதிர்வாத விளக்கத்திற்கு நிற்காத அளவு வீதாசாரத்தைக் கொண்டுள்ளது. சக்திமிக்க ஜனநாயக பாதுகாவலர்கள்
இல்லாத நிலையில், குழு வன்முறை, மொத்தத்தில் "கடவுள் மீது நம்பிக்கை" யின் தவிர்க்க முடியாத இடைவிளைவாக
இருக்கிறது. ஆனால் இந்த சிறிய அம்சத்தை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, பகிரங்கக் கடிதத்தின் ஆசிரியர்கள் புஷ் நிர்வாகத்தின்
கொள்கைகளுக்கு விசுவாசமாக இருந்தால், அவர்கள் பின்வரும் விருப்ப ஆவணப் பிற்சேர்க்கையை சேர்த்துக்
கொண்டிருக்கலாம்: "அது ஐக்கிய அமெரிக்க அரசுகளில் கருக்கலைப்பு மருத்துவ நிலையங்களை மூடும் விஷயம்
வரும்பொழுது தவிர அல்லது வெளிநாடுகளில் வலதுசாரி சர்வாதிகாரிகளின் ஆட்சியைத் தூக்கி நிறுத்தும்பொழுது தவிர."
கடிதம் பின்னர் மேற் பட்டியலிடப்பட்ட "அடிப்படை உண்மைகள்" வெளிப்பாட்டைக்
காணும் "அமெரிக்க மதிப்புக்கள்" பற்றி விவாதிக்க மேற்கொண்டு செல்கிறது. ஆசிரியர்கள் கூறும் இவை செப்டம்பர்
11 அன்று அமெரிக்காவைத் தாக்கியவர்களின் நோக்கங்களை திறக்கின்ற திறப்பாக (key)
இருக்கின்றது: "இந்த வெறுக்கத்தக்க தாக்குதல்களின் இலக்குகளாக நாம் ஏன் இருக்கின்றோம்? ஏன் அவர்கள் எங்களைக்
கொல்ல வேண்டும், கொல்ல விரும்பினர்?"
இக் கேள்விகளை ஆராய்தல் மிக்கப் பயனுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த கால் நூற்றாண்டாக
அமெரிக்கத் தலையீட்டின் வரலாற்றை ஆய்வு செய்வதுடன் ஒருவர் ஆரம்பிக்கலாம். சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிராக
இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஆயுதபாணி ஆக்க மற்றும் தூண்டி விட ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரும் அவரது பாதுகாப்பு
ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜெஜின்ஸ்கி ஆகியோரின் முடிவுடன் மற்றும் அந்நாட்டு மக்கள் அடைந்த பயங்கரமான
விளைபயன்களுடன் ஆரம்பிக்கலாம். ஒருவர் பின்னர், கடந்த அரை நூற்றாண்டாக மத்திய கிழக்கு முழுவதுமான அமெரிக்கக்
கொள்கைகளை ஆய்வு செய்ய மேற் செல்லக் கூடும். அவை எண்ணெய் வளங்களைப் பராமரித்தலைக் கட்டுப்படுத்த மையப்படுத்தப்பட்டிருந்தன.
மத்திய கிழக்கில் அமெரிக்கக் கொள்கைகளையும் அதன் நடவடிக்கைகளையும் பற்றிய கலந்துரையாடலுக்கு பின்வருவனவற்றை
ஆய்வு செய்வது சரியாகத் தேவைப்படும். (1) ஈரானில் 1953-ல் சி.ஐ.ஏ ஆதரவு ஆட்சிக் கவிழ்ப்பு சதி,
மொசாதிக்கின் (Mossadeq)
இடது தேசியவாத ஆட்சியை அழித்து ஷா வின் சர்வாதிகாரத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது. (2) 1958-ல்
லெபனானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு (3) இஸ்ரேலிய அரசை அதிக அளவில் ஆயுதபாணி ஆக்கல் மற்றும் பாலஸ்தீனிய
மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை காழ்ப்புடன் புறக்கணித்தல் (4) செளதி அரேபியாவில் அரை நிப்பிரபுத்துவ தங்குதடையற்ற
முடியாட்சிக்கு அமெரிக்க பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல் ஆதரவை வழங்கல் (5) 1983 அளவில் பெய்ரூட்டில்
குண்டு மழை பொழிதல் மற்றும் (6) 1991-ல் ஈராக்கிற்கு எதிராக யுத்தம் தொடுத்தல் மற்றும் அடுத்து அந்த
ஆட்சி மீது பொருளாதாரத் தடைகளை விதித்தல், அது பல லட்சக் கணக்காண உயிர்களைப் பலி கொண்டிருக்கிறது.
அமெரிக்காவை வெறுப்பதற்கான மூலாதாரத்தை நேர்மையாக விசாரணைக்கு உட்படுத்துவது எனும்போது இவற்றையும்
ஏனைய பல பிரச்சினைகளையும் அணுக நேரும்.
ஆனால் அத்தகைய அரசியல் சுய விமர்சனம்தான் துல்லியமாக ஆசிரியர்கள் மனத்தில்
இல்லை. அவர்கள் அமெரிக்கா சில தவறுகளைக் கொண்டிருக்கிறது என்று ஒப்புக்கொள்ளத் தயார் செய்யும்
அதேவேளை, இவை பொதுவான அர்த்தத்தில் மிக வெறுமையாக மட்டுமே கூறப்படுகின்றன: "சில நேரங்களில் நமது
நாடு தவறாக வழிகாட்டப்பட்ட மற்றும் நீதி அற்ற கொள்கைகளை கடைப்பிடித்திருக்கிறது. அடிக்கடியும் ஒரு தேசம்
என்ற வகையில் எமது இலட்சியங்களை நடைமுறை வாழ்வில் கடைப்பிடிக்கத் தவறியிருக்கிறோம்," எப்படி? எப்பொழுது?
கடிதம் குறிப்பிடவில்லை. ஆசிரியர்கள் கவனத்தில் எடுக்கும் ஒரே குறைபாடுகள் கிறிஸ்தவ வலதுசாரி வஞ்சித்தொழுகும்
ஒழுக்கவாதிகளின் தொடர்ச்சியான இலக்குகளாக இருக்கும் --"நுகர்வியம் வாழ்க்கை வழிமுறை என்ற வகையில்.....
திருமண மற்றும் குடும்ப வாழ்வை பலவீனப்படுத்துகின்றது" [4]
என்பதாகும். எந்தவகையிலும், ஆசிரியர்களை பொறுத்த வரையில், செப்டம்பர் 11 நிகழ்ச்சியானது "எந்த ஒரு
கொள்கைக்கும் அல்லது தொகுப்புக் கொள்கைகளுக்கும்" எதிர்வினையாக இல்லை. இன்னும் சொல்லப்போனால், இத்தாக்குதலை
நடத்தியவர்கள் அவ்வாறு செய்தது" நாங்கள் யாராக இருக்கின்றோம்" என்பதன் காரணமாகத்தான்.
இது ஆசிரியர்களை, "ஆகையால் நாம் யார்" என்று கேட்கவைக்கிறது. கிறித்தவ வலதுசாரியினரின்
சிற்றேடுகளில் இருந்து பெறப்படும் விடைகள், மத அடிப்படையிலான அரங்குகளிலிருந்து மேற் செல்லும் விடைகள் அமெரிக்க
அரசியற் சட்டத்தின் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு அடிப்படை ரீதியில் தீங்கானது. பகிரங்கக் கடிதத்தின்
ஆசிரியர்கள் கூறுகிற விதத்தில் அமெரிக்கா "நம்மை" க் கொண்டிருக்கவில்லை என்பது வலியுறுத்திக் கூறப்பட வேண்டும்.
பொதுவான அமெரிக்க அடையாளம் உலக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அற நிலைகள் மற்றும் ஒழுக்க
போதனைகள் ஆகியவற்றை தளமாகக் கொண்டிருக்கிறது, இறுதியில் மதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது,
அதை அரசியற் சட்டத்துடனும் ஜனநாயக உரிமைகளின் வரலாற்று பரிணாமத்துடனும் சமரசப்படுத்த முடியாது.
ஆசிரியர்கள் "கருத்தியல் மதச்சார்பின்மையை" நிராகரிப்பதாக அறிவிக்கும் பொழுது, அவர்கள் உண்மையில் அர்த்தப்படுத்துவது
சேர்ச்சையும் அரசையும் பிரிக்கும் அரசியற் கோட்பாட்டை ஆகும். அவர்கள் "கருத்தியல்" என்ற பதத்தை பெயரடையாகப்
பயன்படுத்துவது மதச்சார்பின்மை என்பது வெறும் கருத்தாக மட்டுமே என்று மறைமுகமாகச் சுட்டுகிறது, அல்லது
ஒருவேளை ஆர்வக் கொள்கையாக மட்டும் இருக்கும். யதார்த்தத்தில், அது எல்லாவற்றின் அடித்தளமாகும், அது முதலாளித்துவ
ஜனநாயகக் கோட்பாடுகளில் வரலாற்று ரீதியான முற்போக்குத் தன்மை ஆகும்.
மசாச்சூசெட்ஸ் குடா காலனியின் மதகுரு ஆட்சியிலிருந்து புரட்சிகர யுத்தத்திலிருந்து அமெரிக்க
ஜனநாயக சிந்தனையின் முன்னேற்றமானது, மதச் சிந்தனையின் அதிகார முத்திரையான சமுதாயம் அற ஒற்றுமையை
அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்ற கருத்துருவின் நிலைமுறிவில் அதன் சட்டபூர்வ வெளிப்பாட்டைக் கண்டது. அமெரிக்க
சட்ட வரலாற்றாசிரியரால் விவரிக்கப்பட்டவாறு:
புரட்சிக்குப் பின்னால் நிகழத் தொடங்கியது மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் ஒழுக்கக்கேடானது அல்ல
மாறாக அரசாங்கம் ஒழுக்கத்தை வலிந்து ஏற்கும்படி செய்ய வேண்டும் என்ற புரட்சிக்கு முந்திய கருத்தைக் கைவிடலாகும்.
இருப்பினும், குறித்த வேலை நேரத்துக்கு புறமாக, அரசாங்கத்தால் வலிந்து ஏற்கவைக்கும் அதன் பாத்திரத்தை கைவிடலானது
அனைத்து மனிதர்களும் கீழ்ப்படிய வேண்டும் என்ற ஏதாவது ஒரு சார்பு அறநிலைகள் இருந்தது என்றகருத்தை அழிக்கிறது....
சமுதாயத்தின் அனைத்துக்குடிமக்களும் சேரும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு நிறுவனத்தால் இடப்பட்ட, ஒருசார்பு
அறவியல் பயன்மதிப்புக்களை வைத்திருப்பதிலிருந்து விலகி, பல்வேறு தனிநபர்கள் சேருவதற்கு சுதந்திரமாய் தேர்வுசெய்து
கொள்ளும் பல்வேறுபட்ட அமைப்புக்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் பல்வேறுசார்புடைய வேறுபட்ட அறவியல்
பயன்மதிப்புக்களை நோக்கிச் செல்வதாக போக்கு இருந்தது. (5)
"இயன்றளவு சிறந்த வகையில், ஐக்கிய அமெரிக்க அரசுகள் நம்பிக்கையும் சுதந்திரமும்
இணைந்து செல்லக்கூடிய ஒவ்வொன்றும் மற்றொன்றை உயர்த்தும் (வலியுறுத்தல்சேர்க்கப்பட்டது)
சமுதாயத்தை நாடுகிறது என்று வலயுறுத்தி, கடிதத்தின் ஆசிரியர்கள் இந்த பரிணாமத்தைப் புறக்கணிக்கின்றனர். இது
முக்கிய அரசியற் கொள்கையினை அடிப்படையில் திரித்துக் காட்டுவதாகும். ஐக்கிய அமெரிக்க அரசுகளானது அரசியல்
சுதந்திரத்திற்கு மதத்திலிருந்து உயிர் ஆதாரம்பெறும் அரை மதகுருமார் ஆட்சி அல்ல. அரசியல் சுதந்திரம் என்பது
ஜனநாயக உரிமை, அதற்கு மத அடிக்கட்டுமானம் தேவைப்படுவதில்லை. அங்கு தனி நபர் மத கருத்துக்களை வைத்திருப்பதாயின்-
ஒருவர் விரும்பும் மதத்தை கடைப்பிடிப்பதற்கான உரிமையானது திட்டவட்டமான அரசியல் அடித்தளங்களைச் சார்ந்தது.
(6)
கடித ஆசிரியர்கள் அவர்களின் வாத முறையில் நேர்மையானவர்கள் அல்லர். அவர்கள்
தங்களது அரசியல் கண்ணோட்டத்தையும் நிகழ்ச்சி நிரலையும் வெளிப்படையாகக் கூறவில்லை. அவர்கள் அக்கறைப்படுவது
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல் என்ற பரந்த உள்ளடக்கத்துக்குள்ளே மத சுதந்திரத்தைப் பாதுகாத்தல் அல்ல.
"மதச்சார்பின்மை" மீது அவர்களின் தாக்குதலைத் தொடுப்பதற்கான அவர்களின் முழு உந்தல் ஐக்கிய அமெரிக்க அரசுகளினுள்
மத செல்வாக்கை விஸ்தரிப்பதை நோக்கி செலுத்தப்படுகிறது.
"நம்பிக்கை" மற்றும் "சுதந்திரம்" இவற்றுக்கு இடையிலான உறவைத் திரித்து, "21-ம்
நூற்றாண்டில் மத அடிப்படையிலான அவநம்பிக்கை, வெறுப்பு மற்றும் வன்முறையைக் குறைக்க எது உதவும்?" என
ஆசிரியர்கள் கேட்க முன்செல்கின்றனர். சர்ச்சையும் மதத்தையும் உறுதியாயப் பிரிக்கின்றதில் வெளிப்பாட்டைக் காணும்
ஜனநாயக மதச்சார்பின்மையை அவர்கள் எதிர்ப்பதன் காரணமாக, பகிரங்கக் கடிதத்தால் கொடுக்கப்படும் விடை
ஆழமாய் பிற்போக்கானது: "ஒவ்வொருநாட்டிலும் மத சுதந்திரத்தை அனைத்து மக்களதும் அடிப்படை உரிமையாக
அங்கீகரிப்பதன் மூலம் நமது மதப் போற்றுதலை ஆழப்படுத்தலும் புதுப்பித்தலும் ஆகும். இந்தத் தீர்வு முற்றிலும் தவறானது.
மத அடிப்படையிலான வகுப்புவாத மற்றும் குறுங்குழுவாத வன்முறையை எதிர்ப்பதற்கான மிகவும் சக்திமிக்க வழிமுறை
மதச்சார்பின்மையின் ஜனநாயகக் கோட்பாடுகளை உயர்த்திப்பிடித்தலும் அரசியல் பொது வாழ்க்கையில் சமூக ரீதியில்
பிற்போக்கான மத செல்வாக்கை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு துடைத்துக் கட்டுவதன் மூலமுமாகும் என்று,
பரந்த அளவிலான வரலாற்று அனுபவம் எடுத்துக் காட்டுகிறது.
செப்டம்பர் 11 தாக்குதல் குறிப்பிட்ட அமெரிக்க கொள்கைகளுக்கு எதிர்ப்பினால்
அல்ல, மாறாக அமெரிக்க அடையாளத்திற்கு உண்மையான அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது என ஆசிரியர்களால்
உறுதியாகக் கூறப்படும் ஒழுக்கக் கோட்பாடுகளை வெறுத்தலால்தான் என்ற கூற்று, உள்நாட்டு ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்காக
வைக்கப்படும் அரசியல் முடிவுகளுக்கு தர்க்கரீதியாக இட்டுச் செல்கிறது. அனைத்துக்கும் மாறாக, "அமெரிக்க மதிப்புக்களின்"
வெளிநாட்டுப் பகைவர்கள் ஐக்கிய அமெரிக்க அரசுகளைத் தாக்குவதற்கு தயாராக இருந்தனர் என்றால்,
அந்த நாடு இந்த மதிப்புக்களை நிராகரிப்பவர் என நம்பப்படும் அதன் எல்லைகளுக்குள் உள்ளவர்கள், குடிமக்கள்
அதேபோல குடிமக்கள் அல்லாதவர்களாலும் கூட அச்சுறுத்தப்படாதா? கருத்துக்கள் அதன் சொந்த தர்க்கத்தைக்
கொண்டிருக்கின்றன, மேலும் பகிரங்கக் கடிதத்தின் ஆசிரியர்களின் கருத்துக்கள் இரக்கமற்ற விதத்தில் யுத்தத்தை மட்டும்
நியாயப்படுத்தவில்லை, மாறாக உள்நாட்டு ஒடுக்கு முறையையும் நியாயப்படுத்துகிறது.
கடிதத்தின் கடைசிப்பகுதி அமெரிக்கா "நீதியான யுத்தத்தில்" ஈடுபட்டிருக்கிறது என நிலைநாட்ட
முயற்சிக்கிறது. ஆசிரியர்கள் "அனைத்து யுத்தங்களும் பயங்கரமானவை, இறுதியில் மனித குலத்தின் தோல்வியாக
இருக்கின்றன" என்று ஏற்றுக் கொள்வதுடன் ஆரம்பிக்கின்றனர். ஆனால், மற்றொரு புறத்தில், "யுத்தத்தைத்
தொடுப்பது ஒழுக்க ரீதியாக அனுமதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், வன்முறை, வெறுப்பு மற்றும் அநீதி ஆகியவற்றின் கடுந்துயரத்தை
உண்டு பண்ணத்தக்க செயல்களுக்கு பதிலாக, ஒழுக்க ரீதியில் அது அவசியமானதாகவும் கருதப்பட்ட நேரங்கள் இருக்கின்றன.
அந்த நேரங்களுள் இது ஒன்று " என்கின்றனர்.
உயர்ந்த ஒழுக்க மதிப்பீடுகளின் அடிப்படையில் ஏகாதிபத்திய யுத்தங்களை நியாயப்படுத்துவதற்கான
முயற்சி ஏகாதிபத்தியத்தைப் போலவே பழமையானது. ஐக்கிய அமெரிக்க அரசுகள் அதன் ஏகாதிபத்திய குறிக்கோள்களை
சட்டபூர்வமாக்க எப்போதும் ஒழுக்கத்தை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறது என்பதை நினைவு கூர்தல் பயனுள்ளது. பேராசிரியர்
வில்லியம் ஆர்.கெய்லர் (கையெழுத்திட்டவர்களுள் ஒருவர் அல்லர்) இருபதாம் நூற்றாண்டு உலகம் எனும்
அவரது புகழ்பெற்ற வரலாற்றில் பின்வருமாறு அவதானிக்கிறார்:
கரிபியன் வட்டாரத்தில் குறிப்பாகவும் இலத்தின் அமெரிக்காவில் பொதுவாகவும் அமெரிக்க மூலோபாய மற்றும்
பொருளாதார நலன்களின் குறிக்கோள், அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் அடிக்கடி இருந்திருக்கிறவாறு,
உயர் ஒழுக்கக் கோட்பாடு மூலம் நியாயப்படுத்தப்பட்டது. (7)
பகிரங்கக் கடிதம் ஆசிரியர்களால் அருவமாய் ஒழுக்கமயப்படுத்துவதை நாடுவது,
சாராம்சத்தில், இது நீண்டகாலமாக இருந்துவரும் செயல் வகையின் தொடர்ச்சியாகும். அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டுக்
கொள்கையைத் தீர்மானிக்கும் "மூலோபாயமற்றும் பொருளாதார நலன்களுடன்" அணுகுவதைக் காட்டிலும், ஆசிரியர்கள்
அவர்கள் "ஒழுங்கு ஆய்வு" என்று குறிக்கிறமிக உயர்ந்த மேன்மையான இடத்தில் தங்களை இருத்திக் கொள்கிறார்கள்.
"யுத்தமானது சுயநலம் மற்றும் தேவையை முதன்மைப்படுத்திப் பார்ப்பதை அத்தியாவசியமானதாய்க் கொள்கிறது..."
என்று அவர்கள் சிறப்பாக மறுக்கின்றனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில், அவர்களது ஒழுக்கப்
பாசாங்குகள், ஐக்கிய அமெரிக்க அரசுகளின் பூகோள மூலோபாயத்தை வகுப்பதில் முக்கிய பாத்திரம் ஆற்றிய தனிநபர்களால்
உண்மையில் எழுதப்பட்டிருப்பதனால் மோசமாகக் கீழறுக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகள் றேகன் மற்றும் புஷ்
ஆகியோரின் செல்வாக்குமிக்க ஆலோசகராக இருந்த பேராசிரியர் ஜோன் மேர்ஷெய்மர், "கொள்கை வகுக்கும்
தட்டினரின் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒழுக்கவாதத்ததுடன் கடுமையாய் பக்குவப்படுத்தப்பட்டுள்ளது" அதில் "சிறப்பாக
அமெரிக்க கல்விமான்கள் முன்னிலைப்படுத்துவதில் நல்லவர்கள்.... "என்கிறார் அவர் மேலும் கூறுவதாவது,
இருப்பினும், மூடிய கதவுகளுக்குப் பின்னால், தேசியப் பாதுகாப்புக் கொள்கையை வகுக்கும் உயர் தட்டினர்
கோட்டபாட்டு மொழியில் அல்ல, பெரும்பாலும் அதிகாரமொழியில் பேசுபவர்கள், மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசுகள்
சர்வதேச அமைப்பில் யதார்த்தமான தர்க்கத்தின் ஆணைகளின்படி செயல்படும். சாராம்சத்தில், அமெரிக்க வெளிவிவகாரக்
கொள்கையின் உண்மையான நடத்தையிலிருந்து பகிரங்க வெற்றாரவாரப் பேச்சை நுண்மான் நுழைபுலம் மிக்க இடைவெளி
பிரிக்கிறது.(8)
"அதிகார மொழி" மற்றும் "யதார்த்த தர்க்கத்தின் ஆணைகள்" ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டு
முன்குறிப்பிட்ட ஜ்பிக்னீவ் பிரிஜேஜின்ஸ்கியால் பாராட்டத்தக்க அறிவு மழுக்கத்துடன் வழங்கப்படுகிறது. அவர் சுமார் 25
ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பேரழிவுகரமான தலையீட்டைத் தூண்டிவிட்டார், மற்றும் தொடரான
நிகழ்ச்சிகள் நடப்பதற்கு அமைத்துக்கொடுத்தார், அது செப்டம்பர் 11,2001ல் துயரமாக மற்றும் அதன் பின்னர்
அவர்களின் இரத்தம் தோய்ந்தவற்றையும் கூட உச்சநிலையாகக் கொண்டு வந்தது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் பிரிஜேஜின்ஸ்கி ஒப்புக்கொண்டவாறு, டிசம்பர் 1979 சோவியத்
ஆக்கிரமிப்புக்குப் பின்னரே அமெரிக்காவானது ஆப்கானிஸ்தானில் தலையிடத் தொடங்கியது என்று கார்ட்டர் நிர்வாகம்
கூறியபோது அது அமெரிக்க மக்களுக்கும் உலகத்துக்கும் பொய் கூறியது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலையீடு சோவியத்
ஆக்கிரமிப்புக்கு எதிராக" மனித உரிமைகளை" பாதுகாக்க என்று காட்டுவதற்கு கார்ட்டர் பரந்த அளவில்கொள்கைப்
பிரச்சாரம் செய்தது நினைவு கூரப்பட வேண்டும். மாஸ்கோவில் நடைபெறத் திட்டமிட்டிருந்த 1980 கோடை
ஒலிம்பிக் நிகழ்ச்சியைப் புறக்கணிக்க எடுத்தமுடிவும் அதில் உள்ளடங்கும்.
அது இப்பொழுது, ஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புக்கள் நுழைவதற்கு சுமார் ஆறு
மாதங்களுக்கு முன்னர் --காபூலில் சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிரான இஸ்லாமிய தீவிரவாத எதிர்ப்பாளர்களுக்கு
இரகசிய ஆதரவு வழங்க-- கார்ட்டர் 1979 ஜூலை 3-ல் இரகசிய ஆணையில் கையெழுத்திட்டார் என்று
திரும்புகிறது. 1998 ஜனவரியில் பிரெஞ்சு செய்தித்தாளான Le
Nouvel Observateur க்குஅளித்த பேட்டியில், பிரிஜேஜின்ஸ்கி ஆணையை நடைமுறைப்படுத்தல்
வன்முறை ரீதியான சோவியத் பதிலைத் தூண்டிவிடலாம் எனத் தான் கார்ட்டரிடம் விளக்கியதாகக் குறிப்பிட்டார்.
அதுதான் கார்ட்டர் நிர்வாகம் உண்மையாய் விரும்பியது. அவை அனைத்தும் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்திருக்கும் விளக்கத்தில்,
அவர் அதற்காக எதுவும் வருத்தம் தெரிவித்திருந்தாரா என Le
Nouvel Observateur- ஆல் கேட்கப்பட்டபொழுது, பிரிஜேஜின்ஸ்கி பதிலளித்ததாவது:
எதற்கு வருத்தம்? இரகசிய நடவடிக்கை என்பது அருமையான யோசனை. அது ரஷ்யர்களை ஆப்கான்
பொறிக்குள் இழுக்கும் பாதிப்பைக் கொண்டிருந்தது மற்றும் நீங்கள் அதற்கு நான் வருத்தப்பட வேண்டும் என்கிறீர்களா?
சோவியத் துருப்புக்கள் உத்தியோக ரீதியில் எல்லையைக் கடந்த அன்று, நான் ஜனாதிபதி கார்ட்டருக்கு
எழுதினேன். சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்துக்கு அதன் வியட்னாம் யுத்தத்தை வழங்குவதற்கு சந்தர்ப்பத்தைப்
பெற்றிருக்கிறோம். உண்மையில், கிட்டத்தட்ட10 ஆண்டுகளாக,மாஸ்கோ அரசாங்கத்தால் ஆதரிக்கப்படாத யுத்தத்தைத்
தொடுக்க இருந்தது, அந்த மோதல் செயலிழந்த நிலையையும் இறுதியில் சோவியத் பேரரசின்
உடைவையும்கொண்டுவந்தது.
சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தை சீர்குலைப்பது ஒரு புறமிருக்க, பிரிஜேஜின்ஸ்கி
ஐக்கிய அமெரிக்க அரசுகளின் அத்தியாவசிய நீண்டகாலக் குறிக்கோள் என்று அவர் கருதியதை --யூரேஷியாவில் மேலாதிக்க
நிலையை நிறுவுதலை-- சாதிப்பதற்கு முஜாஹைதீன்களுக்கு நிதி மற்றும் இராணுவ உதவியை பிரிஜேஜின்ஸ்கி ஆதரித்தார்.
சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றிய சீர்குலைவு இந்த நீண்டகால முன்னோக்கை உடனடி மற்றும் அவசரப் பணியாக
மாற்றியது. பிரிஜேஜின்ஸ்கி நீண்டகாலமாக வலியுறுத்தி இருக்கிற, அதன் நிறைவேற்றம், அமெரிக்க பூகோள மேலாதிக்கத்தினை
அடைவதற்கு முக்கியமானதாக இருக்கிறது. அவரது 1997 படைப்பான பெரும் சதுரங்கம் (The
Grand Chessboard) என்பதில் விளக்கியவாறு, யூரேஷியா "சதுரங்கத்தில் பூகோள
முதன்மைக்கான போராட்டம் தொடர்ந்து விளையாடப்பட இருக்கிறது, மேலும் அந்தப் போராட்டம் பூகோள
மூலோபாயத்துடன் --புவிசார் அரசியல் நலன்களின் மூலோபாய நிர்வாகத்துடன்-- சம்பந்தப்பட்டிருக்கிறது." (9)
அந்த பரந்த பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்துடன் அவர் இணைத்துள்ள முக்கியத்துவத்தைப் பற்றி எந்த சந்தேகத்தையும்
விட்டு வைக்காத மொழியில், பிரிஜேஜின்ஸ்கி பின்வருமாறு எழுதுகிறார்:
அமெரிக்காவைப் பொறுத்த மட்டில், பிரதான புவிசார் அரசியல் பரிசு யூரேஷியாவாகும். அரை நூற்றாண்டாக,
உலக விவகாரங்கள் பிராந்திய மேலாதிக்கத்திற்காகவும் பூகோள அதிகாரத்தை அடைவதற்காகவும் ஒருவருடன் ஒருவர்
சண்டையிட்டுக் கொண்ட யூரேஷிய அரசுகளாலும் மக்களாலும் மேலாதிக்கம் செய்யப்பட்டன. இப்பொழுது யூரேஷியன்
அல்லாத அரசு யூரேஷியாவில் முந்து தலைமை உடையதாக இருக்கிறது --மற்றும் யூரேஷிய கண்டத்தின்மேல் அதன்
விஞ்சிய செல்வாக்கு எவ்வளவு வலுவாகவும் எவ்வளவு நீண்டகாலமாகவும் தாக்குப்பிடிக்கப் போகிறது என்பதன்மேல்
அமெரிக்காவின் பூகோள முதன்மைநிலை நேரடியாகசார்ந்திருக்கிறது. (10)
அதன் ஏகாதிபத்திய அபிலாஷைகளை அமெரிக்கா அடைதலுக்கு ஒரு பெரும் தடையை பிரிஜேஜின்ஸ்கி
இனங்காட்டுகிறார்: உலகை வெல்வதற்கான வேலைத் திட்டத்திற்குபரந்த மக்களின் ஆதரவின்மையை. அவர் எழுதுகிறார்,
அமெரிக்கா "வெளியில் தன்விருப்பம்போல் நடப்பதற்கு உள்நாட்டில் அதிக ஜனநாயகப் பூர்வமானதாக இருக்கிறது.
இது அமெரிக்காவின் சக்தியை, சிறப்பாக இராணுவ ஆத்திரமூட்டலுக்கான அதன் திறமையைப் பயன்படுத்துவதை
மட்டுப்படுத்துகிறது. சர்வதேச மேலாளுமையை ஜனரஞ்சக ஜனநாயகம் ஒருபோதும் இதற்கு முன்கொண்டிருக்கவில்லை."
(11) பிரத்தியேகமான சூழ்நிலைமைகளின் கீழ் மட்டும்தான் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் ஆட்சியாளர்கள் "அதிகாரத்தைப்
பெறுவதற்கு" தேவைப்படும் "மக்களின் உண்ணர்வுகளை" தட்டி எழுப்பமுடியும். "அத்தகைய சூழ்நிலைகள்" உள்நாட்டு
நலவாழ்வு பற்றிய பொதுமக்களின் உணர்வுக்கு திடீர் அச்சுறுத்தலான அல்லது ஒரு சவாலான சூழ்நிலைமைகளாக"
இருக்கும். (12) ஐக்கிய அமெரிக்க அரசுகளின் முழுதான மற்றும் பரந்த அளவிலான பாதுகாப்பு சாதனங்களும்
செப்டம்பர் 11 காலையில் தூங்கிக் கொண்டிருந்தது எப்படி சாத்தியமானது என்று கருத்தார்ந்த கேள்விகளை மனதில்
வைத்திருப்போரைப் பொறுத்தவரை, பிரிஜேஜின்ஸ்கி வார்த்தைகளின் முக்கியத்துவம் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதாக இருக்கிறது.
குறிப்பாக பிரிஜேஜின்ஸ்கி மற்றும் மேர்ஷெய்மர் ஆகியோரின் எழுத்துக்கள் பற்றியதில் வழமைக்கு
மாறானது எதுவுமில்லை. கல்விமான்களின் சிந்தனைப் பெட்டகங்களாலும் அரசாங்க முகவாண்மைகளாலும் தயாரிக்கப்பட்ட
எண்ணற்ற பத்திரங்கள் இருக்கின்றன --அவற்றுள் பெரும்பாலானவை இணையத்தில் இருக்கின்றன. அவற்றில் ஏகாதிபத்திய
கணக்கீடுகளும் குறிக்கோள்களும் தெளிவாக உச்சரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அரசாங்கம் மற்றும் கார்ப்பொரேட்
தட்டுக்களின் கணிசமான பகுதியினர் கேஸ்பியன் எண்ணெய் மற்றும் எரிவாயு சேர்ம இருப்புடன் இணைக்கப்பட்டுள்ளனர்
என்ற பரந்த முக்கியத்துவம் அரிதாகவே இரகசியமானதாக இருக்கிறது. ஆனால் இவை அனைத்தும் பகிரங்கக் கடிதத்தின்
ஆசிரியர்களால் சாதாரணமாய் நிராகரிக்கப்படுகிறது. அவர்கள் வரலாறு, அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றிய
அனைத்து ஸ்தூலமான விஷயங்களையும் ஒழுக்க வெற்றுரையின் கண்ணுக்குப் புலனாகாத மூடுபனியில் மறைக்கப் பார்க்கிறார்கள்.
இங்கு இடம்பெற்றிருப்பது அறியாமையோ அல்லது புறக்கணிப்போ அல்ல, மாறாக நேர்மையின்மையும் சிடுசிடுப்பும்
ஆகும். அவர்களின் ஒழுக்க உரிமைக் கட்டளைகளுக்கும் உலக விவகாரங்களில் ஐக்கிய அமெரிக்க அரசுகளால் ஆற்றப்படும்
பாத்திரத்திற்கும் இடையில் பளிச்சிடும் முரண்பாடுகளை அவர்கள் புறக்கணிக்கின்றார்கள் அல்லது சிடுசிடுப்புடன் நியாயப்படுத்துகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, "குறைவாக, கேள்விக்குரியதாக இருக்கும், விளைவுகள் நிச்சயமில்லாததாக
இருக்கும் ஆபத்துக்களுக்கு, பேச்சுவார்த்தைகள் மூலம் தணிவிக்கக் கூடியதாக எளிதாகத் தோன்றுகிற ஆபத்துக்களுக்கு,
பகுத்தறிவுக்கு வேண்டுகோள் விடுத்து, மூன்றாவது தரப்பினர் வழி இணங்கச் செய்தல் அல்லது ஏனைய அகிம்சை வழிமுறைகள்
மூலம் ஆற்றுப்படுத்தக் கூடிய ஆபத்துக்களுக்கு எதிராக யுத்தமானது சட்டரீதியாகப் போராட முடியாது போகலாம்"
என்று அவர்கள் பறை சாற்றுகின்றனர். நடந்து கொண்டிருக்கும் யுத்த விஷயத்தில் ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஆப்கான்
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை ஒரேயடியாக நிராகரித்தது. ஈராக்கிற்கு எதிரான யுத்தத் தயாரிப்பில், ஐக்கியநாடுகள்
அவையினது கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்தமுடியாதது என்பது ஒருபுறம் இருக்க, புஷ் நிர்வாகமானது அதன் நெருக்கமான
சர்வதேசக் கூட்டாளிகளது ஆட்சேபனைகளால் கூட கட்டுப்படுத்தப்பட முடியாது என்று தெளிவாகக் கூறி இருக்கிறது.
அவர்களின் ஒழுக்கக் கட்டளைக்கும் அரசாங்கக் கொள்கைக்கும் இடையிலான முரண்பாட்டில் சிக்கிக் கொண்டு,
ஆசிரியர்கள் குதர்க்கவாதத்தை நாடுகின்றனர்:
நீதியான யுத்தக் கொள்கைக்கு தேவைப்படும் "கடைசி நாட்டம்" --சாராம்சத்தில், பலாத்காரத்தைப்
பயன்படுத்துவதற்கு அனைத்து பகுத்தறிவு பூர்வமான மற்றும் எளிதில் நம்பத்தக்க மாற்றீடுகளை அகழ்ந்தெடுப்பதை
தேவையாகக் கொண்டிருக்கிறது-- அது ஐக்கிய நாடுகள் அவை போன்ற, அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்பால்
ஆயுதத்தை நாடுதற்கு ஏற்பிசைவு வழங்கப்படும் வரையில் திருப்தி அடையாது என்று சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இந்த முன்மொழிவுகள் பிரச்சினைக்குரியவை. முதலில் அது புதுமையாக இருக்கிறது; வரலாற்று ரீதியாக சர்வதேச
அங்கத்தால் அங்கீகரிப்பு நீதிக்கான யுத்தக் கொள்கையாளர்களால் நீதிக்கான யுத்தத் தேவையாகக்
கொள்ளப்பட்டிருக்கவில்லை. இரண்டாவது, ஐ.நா போன்ற சர்வதேச அங்கம் எப்பொழுது, மற்றும் எந்தச்
சூழ்நிலையில் குறிப்பிட்ட ஆயுதங்களை நாடுவது நியாயப்படுத்தப்படும் என்பது பற்றி சிறந்த இறுதித் தீர்ப்பை வழங்கக்
கூடியநிலையில் இருக்கிறதா' அல்லது அந்த அங்கத்தால் அத்தகைய தீர்ப்பை அமல்படுத்துவதற்கான முயற்சி தவிர்க்க
முடியாத வகையில் மனிதாபிமான வேலை எனும் அதன் பிரதானமான பணித்திட்டத்துடன் சமரசம் செய்துகொள்ளப்படுமா
என்பது மிகவும் விவாதத்திற்கு உரியது.
jus ad bellum ( யுத்தத்தை
அறிவிப்பதில் நீதி), jusin bello
( யுத்தத்தைத் தொடுப்பதில் நீதி) மற்றும்
jus post bellum (
யுத்தத்தைத் தீர்ப்பதில் நீதி) ஆகியவை தொடர்பான அவர்களின் அனைத்து விதமான பாசாங்குக் குறிப்புக்களைப்
பொறுத்தமட்டில், பகிரங்கக் கடிதத்தின் நீதியான யுத்தக்கொள்கை புஷ் நிர்வாகத்தின் பெண்டகனால் வகுக்கப்பட்ட
மூலோபாய பணித்திட்டத்தின் ஒருசார்பாரை மட்டும் கட்டுப்படுத்தும் கொள்கையுடன் அருமையாக இணைக்கிறது.
ஆசிரியர்களின் நீதியான யுத்தம் பற்றிய முழுகலந்துரையாடலும் அவர்கள் தங்களைக்
காப்பாற்றிக் கொள்ளும் சூத்திரத்துடன் தீர்த்துக்கொள்வதற்கு அல்லது நியாயப்படுத்துதற்கு விழைகிறார்கள் என்ற
முரண்பாடுகளுடனும் முன்னுக்குப்பின் முரணானதுடனும் புதிராகக்கிடக்கிறது.
அவர்கள் "நீதியான யுத்தம் யுத்த நாட்டம் உடையவர்களுக்கு எதிராக
மட்டுமே நடத்தப்பட வேண்டும்" என்று கூறுகிறார்கள். அமெரிக்கக் குடிமக்களைக் கொன்ற பயங்கரவாதிகளின் செயல்களை
தெளிவாகக் கண்டனம் செய்யும் சூத்திரப்படுத்தல்களைப் பயன்படுத்துவதற்கு ஆசிரியர்கள் கஷ்டப்பட்டு முயற்சி எடுத்துக்கொள்ளுகிறார்கள்,
ஆனால் அமெரிக்க இராணுவத்தைப் போதுமான அளவு சுதந்திரமாக செயலாற்றுவதற்கு இன்னும் அனுமதிக்கிறார்கள்.
இவ்வாறு, நமது நவீன காலத்து Pontius Pilates
தப்பித்துக்கொள்ளும் வழியை அமைக்கிறார்கள். அது "சில சூழ்நிலைமைகளில்,
மற்றும் கடுமையான மட்டுப்பாடுகளுக்குள்ளே", "விருப்பமில்லாமல் ஆனால் முன்கூட்டிப் பார்க்கக் கூடியதாக சில யுத்தத்தில்
ஈடுபடாதவர்கள் காயப்படுவதை அல்லது மரணிக்கப்படுவதை விளைவாக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு " அனுமதிக்கிறது.
வார்த்தை தெளிவற்றதாக இருக்கிறது. "கடும் மட்டுப்பாடுகள்" என்பதன் அர்த்தம்
என்ன? "சில யுத்தத்தில் ஈடுபடாதவர்கள்" என்ற அளவீடுகளுக்குள்ளே எத்தனை குடிமக்கள் சேதப்படுவது ஏற்றுக்
கொள்ளப்படுகிறது? ஆசிரியர்கள் இராணுவ நடவடிக்கையின் செயல்பாட்டு இலக்கில் யுத்தத்தில் ஈடுபடாதவர்களைக்
கொல்லுவது ஒழுக்க ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது" என்று அறிவிக்கின்றனர். "செயல்பாட்டு இலக்கு"
என்பதன் அர்த்தம் என்ன? இந்தப் பதம் பணித் திட்டத்தினரின் அகநிலையான மற்றும் தாமே அறிவித்துக் கொள்ளும் கூற்றை,
அல்லது குறிப்பிட்ட பணித்திட்டத்தின் முன்கூட்டிப் பார்க்கக்கூடிய புறநிலை விளைபயன்களை உய்த்துணர வைக்க வில்லையா?
ஐக்கிய அமெரிக்க அரசுகளும் பிரிட்டனும் 1945ல் ட்ரெஸ்டன் தீக்குண்டு வீச்சுகளில் 1,00,000 மக்களைக் கொன்றன.
மூன்று வாரங்களின் பின்னர் டோக்கியோவில் குண்டு வீச்சில் ஐக்கிய அமெரிக்க அரசுகளால் பலர் கொல்லப்பட்டனர்.1945
ஆகஸ்டில் அமெரிக்கா ஹிரோஷிமா மற்றும் நாகசாஹி எனும் இடங்களில் அணுகுண்டு வீசியதால் சராசரியாக
2,00,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். வியட்னாமில் 10 ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தத்தில் அமெரிக்கா
கொன்ற மொத்தக் குடிமக்கள் இருபது இலட்சம் முதல் முப்பது இலட்சமாகும். கடந்த தசாப்தத்தில் ஐக்கிய அமெரிக்க
அரசுகளால் கொல்லப்பட்ட ஈராக்கிய மற்றும் சேர்பிய குடிமக்களது எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. அமெரிக்க
இராணுவ நடவடிக்கையால் விளைவிக்கப்பட்ட எந்த மரணங்களின் சூழ்நிலைகளும் அந்த பகிரங்கக் கடிதத்தில் அந்த
அளவுக்கு தெளிவின்றி குறிக்கப்பட்ட ஒழுக்க கட்டுப்பாடுகளை மீறவில்லையா? அவ்வாறு செய்திருந்தால் இந்த மரணங்களுக்குப்
பொறுப்பானவர்களுக்கு என்ன தண்டனை பொருத்தமானதாக இருக்கும்? பகிரங்கக் கடிதத்தின் ஆசிரியர்கள் இந்தக் கேள்விகளுக்குப்
பதில் கூறவில்லை. ஐக்கிய அமெரிக்க அரசுகளின் கடந்த காலமற்றும் நிகழ்கால நடவடிக்கைகளை மதிப்பீடு செய்ய
வரும்பொழுது, ஆசிரியர்களின் ஒழுக்கக் கவராயம் இறுகிக் கொள்வதுதெரிகிறது. (13)
கடிதமானது ஐக்கிய அமெரிக்க அரசுகளில் நடந்து கொண்டிருக்கும் அறிவு ஜீவித வாழ்வின்
தரங்குறைந்த மட்டத்திற்கு சான்று கூறுகிறது. அரசியல் வலதுகளின் மற்றும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கல்விமான்களின்
கொச்சையான மற்றும் போலியான வாதங்கள் பதிலிறுக்கப்படாமலும் சவால் செய்யப்படாமலும் போகுமாயின் அந்த
அளவு வெட்கப்பட வேண்டியதாகும். புஷ் நிர்வாகத்தின் யுத்த ஆதரவுப் பிரச்சாரம் பொய்களின் திசுக்களைக்
கொண்டிருக்கின்றன என்று சரியாக அறிந்திருக்கின்ற சமூக அறிவியலின் பல்வேறு துறைகளின் வல்லுநர்கள், உயர்பயிற்சி
பெற்ற கல்விமான்கள் பலர் அங்கு இருக்கின்றனர். இவர்களில் பலர் கவனமெடுத்தால், மொய்னிஹன், ஸ்கோக்போல்
மற்றும் அவர்களது சகாக்களின் வாதங்களைக் கிழித்து கந்தல்கந்தலாக்குவதை எளிதாகச்செய்ய முடியும். ஆனால்
அவர்கள் தங்களின் வாயை மூடிக்கொண்டு தலையைக் கவிழ்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வகையில், அவர்கள்
ஐக்கிய அமெரிக்க அரசுகளில் நிலவுகின்ற அரசியல் பிற்போக்குக்கு மற்றும் பொதுவான பின்தங்கிய தன்மைக்கு பங்களிப்புச்
செய்கின்றார்கள்.
ஆனால் இது கடந்துசெல்லும். நிகழ்ச்சிகள் தாமே --பலர் கற்பனை செய்வதிலும்
பார்க்க வெகுவிரைவில்-- அரசியல் சமுதாயத்துக்கு அதிர்ச்சிகளை வழங்கும். அது கருத்தார்ந்த அக்கறைகொண்ட
சிந்தனைக்கான அதன் திறனை மற்றும் ஆவலைத் தட்டி எழுப்பும்.
குறிப்புக்கள்:
1.அறிக்கை பின்வரும் முகவரியில் வெளியிடப்பட்டது
http://www.propositionsonline.com/
Fighting_For/fighting_for.html#Signatories
2.
கடிதத்தின் பொதுவான சிறப்பின் குறிகாட்டல் ஆபிரகாம் லிங்கனை ஐக்கிய
அமெரிக்க அரசுகளின் "பத்தாவது" ஜனாதிபதியாகக் குறிப்பது ஆகும். இல்லை, சீமான்களே சீமாட்டிகளே கழக,
ஜோன் டெய்லர் பத்தாவது ஜனாதிபதி. அவர் 1841 ஏப்ரலில் வில்லியம் ஹென்ரி ஹாரிசன் மரணமடைந்ததும் பொறுப்பு
ஏற்றார். ஒவ்வொரு பள்ளிக் குழந்தைகளும் ஒரு முறை அறிந்திருக்கின்றன என்று கூறப்படுகிறவாறு, ஆபிரகாம் லிங்கன்
1861 மார்ச்சில் பதினாறாவது ஜனாதிபதி ஆகப் பதவி ஏற்றார். அறுபது "உயர்-செல்வாக்கு" உடைய புத்திஜீவிகள்
இந்த குறிப்பிடத்தக்க பெரும்பிழையை! கவனிக்காது கூடிப்பத்திரத்தில் தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.
3.
2000 ஆண்டு தேர்தலில்
ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு பெயர் முன்மொழியப்பட்ட, செனட்டர் ஜோசப் லிபர்
மேன், அமெரிக்க அரசியற் சட்டம் மத சுதந்திரத்தை மட்டுமே உத்தரவாதப்படுத்துகிறது, மதத்தில் இருந்து சுதந்திரத்தை
அல்ல என்று கூறியது நினைவு கூரப்பட வேண்டும்.
4.
குறிப்பாக, ஆசிரியர்கள் அவர்களின் தவறுகள் பற்றிய விவரக் குறிப்புகளில் ஐக்கிய
அமெரிக்க அரசுகளில் இருக்கும் சமூகக் கட்டமைப்புகளுக்குப் பொருத்தமான எதையும் சேர்க்கவில்லை அதாவது வருமானங்களில்
பரந்த ஏற்றத்தாழ்வு, செல்வம் அபரிமிதமாகக் குவிதல், ஏழ்மையின் நீட்டிப்பு, சமூகப் பாதுகாப்பின் சீரழிவு மக்களில்
குறிப்பிட்ட பகுதியினருக்கு மருத்துவ வசதி இன்மை மற்றும் அதற்கான அதிகச் செலவுகள், பொதுவாக முதலாளிகளால்
தொழிலாளர்கள் துன்பகரமாக நடத்தப்படல், வேலை நிலைமைகள் மீது ஜனநாயகரீதியான கட்டுப்பாடு கிஞ்சிற்றும்
இல்லாமை, கார்ப்பொரேட் தட்டினரின் எங்கும் பரவியுள்ள ஊழல் முதலியனவாகும். அவர்களின் அரசியல் கண்ணோட்டம்
மற்றும் வர்க்கத் தன்மை காரணமாக, இக்கடிதத்தின் ஆசிரியர்கள் அமெரிக்காவில் நிலவும் பரந்த சமத்துவமின்மைக்கு,
கண்ணை மூடிக்கொள்ளவில்லை என்றால், அது பற்றி கவலை அற்றவர்களாவர்.
5. வில்லியம் இ.நெல்சன், பொதுச்சட்டத்தின் அமெரிக்க மயமாதல்:
மசாச்சூசெட்ஸ் சமூகத்தின் மீதான சட்ட மாற்றத்தின் விளைவுகள், 1760-1830 (கேம்பிரிட்ஜ்,1975), பக்கம்.
111-12.
6." 'கடவுளின் கீழ் ஒரு தேசம்' என்பதற்கு கடப்பாடு கொண்ட உறுதிமொழியை குடிமக்கள் மனப்பாடமாக ஒப்புவித்தல்.."
உண்மையில், அரசியல் வாழ்க்கையில் மதத்தின் பாத்திரம் அரசியல் பிற்போக்கு மற்றும் அரச ஒடுக்குமுறையின் காலங்களில்
மிக முக்கியத்துவத்தைக் கருதிக்கொள்கிறது என்று உறுதிமொழியின் வார்த்தையானது எடுத்துக் காட்டுகிறது. உறுதிமொழியானது
ஆரம்பத்தில் 1890களில் கிறித்தவ சோசோலிஸ்ட் பிரான்சிஸ் பெல்லமியால் கூறப்பட்ட ஜனநாயக மற்றும் அனைவருக்கும்
சம உரிமை பற்றிய கருத்துக்களின் வெளிப்பாடாகக் கருக்கொண்டது.பின் வந்த ஆண்டுகளில் உறதிமொழிக்கு வெளிப்படையாக
தேசிய வடிவத்தை வழங்கும் மாற்றங்களை பெல்லமி எதிர்த்துத் தோல்வியுற்றார்."கடவுளின் கீழ்" என்ற வார்த்தைகளைப்
பொருத்த மட்டில்,அவை 1954ல் மெக்கார்திய சிவப்பு- வேட்டை இசிப்பின் உச்சத்தின் பொழுது நுழைக்கப்பட்டன.(உறுதிமொழி
பற்றிய விவரங்களை அறிய, டாக்டர் ஜோன்.டபிள்யு. பேயர்சின் சுருக்கமான வரலாறு என்பதை:http://www.vinyard.net/vinyard/history/pledge.htm
முகவரியில் பார்க்கவும்.
7. நியூயோர்க்,1992, பக்கம் 6.
8. வல்லரசு அரசியலின் துன்பியல்.(நியூயோர்க், 2001),
பக்கம்.25.
9. நியூயோர்க், பக்கம்.
xiv.
10. அதே நூல், பக்கம் 30.
11. அதே நூல், பக்கம் 35-36.
12.அதே நூல், பக்கம் 36.
13.பல ஆண்டுகளுக்கு முன்னர், பகிரங்கக் கடிதத்தின் ஆசிரியர்களுள் ஒருவரான தேடா ஸ்கோப்கால், அரசுகளும்
சமூகப் பரட்சிகளும் என்ற புத்தக்த்தை எழுதினார்.அப்புத்தகம் அவருக்கு புகழ் சேர்த்தது.அதன் முன்னுரையில் அவர்
1970 களின் ஆரம்பத்தில் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பட்டதாரி மாணவராக தனது சொந்த "அரசியல் ஈடுபாட்டின்
முனைப்பான காலகட்டத்தை" அவர் குறிக்கின்றார்."ஐக்கிய அமெரிக்க அரசுகள் வியட்னாமியப் புரட்சிக்கு எதிரான
ஈவிரக்கமற்ற யுத்தத்தில் இருந்த அதேவைளை, இன நீதி மற்றும் வெளிநாட்டில் இராணுவத் தலையீட்டை முடிவுக்குக்
கொண்டுவரவும் அழைப்பு விடுக்கும் உள்நாட்டு இயக்கம் எமது தேசிய அரசியல் அமைப்பின் நன்மை தீமைகளுக்கான திறமைகளை
சவால் செய்தது.(கேம்பிரிட்ஜ், 1979,பக்கம்.xii).
பேராசிரியர் ஸ்கோப் கோல், நினைவூட்டப் படாதிருக்க இவ்வார்த்தைகளைத்
தேர்ந்தெடுக்கக்கூடும் என நாம் சந்தேகிக்கிறோம்.ஆனால் இன்று அமெரிக்காவின் யுத்தக் கொள்கையை இயக்கும் முக்கிய
நபர்கள்-- குறிப்பாக செனியும் ரம்ஸ்பீல்டும்--வியட்னாமுக்கு எதிராக நடத்தப்பட்ட "கொடூரமான யுத்தத்தில்"
சம்பந்தப்பட்டிருந்தனர்.
|