செய்திகள் ஆய்வுகள்
:
கலை விமர்சனம்
The FBI and Albert Einstein
எஃவ். பி. ஐ யும் அல்பேர்ட் ஐன்ஸ்ரைனும்
ஐன்ஸ்ரைன் பதிவுக் கோப்பு; Fred
Jerome இனது, மிகப் புகழ்பெற்ற விஞ்ஞானிக்கு எதிரான J. Edgar Hoover இன் இரகசிய யுத்தம். சென்
மார்டின் பதிப்பகம், 2002. 348 பக்கங்கள். ISBN
0-312-28856-5.
By Alan Whyte and Peter Daniels
3 September 2002
Use this version to print
|
Send this link by email
| Email the author
22 வருடங்களாக அல்பேர்ட் ஐன்ஸ்ரைன் இற்கு எதிராக எஃவ்.பி. ஐ இனது உளவுபார்ப்பு
மற்றும் அவதூறான பிரச்சார நடவடிக்கைகள் அண்மையில் வெளியான புத்தகத்தில் ஆராயப்பட்டுள்ளன.
கலைஞர்கள், இசைஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கல்விமான்கள் உள்ளடங்கலாக மிக பிரபல்யமான
மனிதர்களை எவ்.பி. ஐ உளவுபார்த்து வருவதென்பது பல தசாப்தங்களாக நன்கு அறியப்பட்ட விடயமாகும்.
இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் விஞ்ஞானியான ஐன்ஸ்ரைன் மீதான எஃவ். பி. ஐ இன் பதிவுக் கோப்பு பற்றிய
விடயம் புளொரிடா சர்வதேசப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர்
Robert Alan Schwartz 1983 இல் The
Nation என்னும் சஞ்சிகைக்கு இவ் விடையம் பற்றி எழுதியபோது முதன்முதலாக வெளிச்சத்திற்கு
வந்தது.
25 வீதம் வரையிலான ஐன்ஸ்ரைன்
பதிவுக்கோப்பு அதிகாரக் குழுவினால் இருட்டடிக்கப்பட்டு விட்டன அல்லது தடுக்கப்பட்டுள்ளன. படைப்பாளர்
Fred Jerome
சுதந்திர தகவல் சட்டத்தின் ( Freedom of
Information Act) கீழ் சென்று, இருப்பிலுள்ள மிக அதிகளவிலான
ஆவணங்களை வெற்றிகரமாக பெற்றுக்கொண்டார். இதன் விளைவு, தசாப்தங்களாக ஐன்ஸ்ரைனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவந்த
நடவடிக்கைகளினை உள்ளடக்கிய 1,800 பக்கங்கள் கொண்ட கோப்பினை இன்னும் அதிகளவில் விவரமான முறையில் பரிசீலிக்க
இட்டுச்சென்றது.
இப் புத்தகம் ஒரு முழுமையான வாசிப்பிற்கு மிக பெறுமதியானதாகும். இது ஐன்ஸ்ரைனினது
செயற்பாடுகள் பற்றிய அதனது சொந்த பரிசீலனையில், ஐன்ஸ்ரைன் இறந்ததிலிருந்து தசாப்தங்களாக பரந்துபட்ட வாசகர்களினால்
மிக குறைந்தளவில் அறியப்பட்டிருந்துவந்த ஐன்ஸ்ரைன் கோப்பினை அவர்களுக்கு மிக விபரப்படுத்தியுள்ளது; நோபல்
பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானி (physicist)
யும், அவரது விஷேட மற்றும் பொது சார்பியல் கோட்பாடு (Theories
of Special and General Relativity)
உலகினையே மாற்றியமைத்ததுடன் விஞ்ஞான மேதைகள் என்பதற்கு அர்த்தமாய் அவரது பெயர் வந்துடன், யுத்தத்திற்கு
எதிரான, ஜனநாயக உரிமைகளுக்கான மற்றும் பொதுமக்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்திலும் ஆழமாக
பிணைந்திருந்தது. அவர் ஒரு சமூக சமத்துவமின்மையின் வெளிப்படையான எதிர்ப்பாளராகவும் திட்டமிட்ட சோசலிச
பொருளாதாரத்தின் பரிந்துரையாளராகவும் விளங்கினார்.
ஐன்ஸ்ரைன் கோப்பு எஃவ்.பி.ஐ இன் உளவுவேலையினை தெளிவுபடுத்திக்காட்டும் மிக
உபயோகமான நினைவூட்டலாகும். பாரம்பரிய மற்றும் சுயதிருப்தி தாராளவாதிகள் (liberals)
McCarthy
சகாப்தத்தின் ''மிச்சங்களை"
பற்றி அடிக்கடி குறிப்பிடுகின்றனர். ஐன்ஸ்ரைனுக்கு எதிரான பிரச்சாரம் காட்டுவதுபோல், இம்முறைகளின் பிரயோகம்
குளிர் யுத்தம் மற்றும் McCarthy
காலத்திற்கு முன்னரான காலப்பகுதிக்கும் நீண்டு செல்வதுடன், 1950 களின்
ஆரம்பத்தில் அதியுயர் வடிவத்தையும் எடுத்திருந்தது.
குளிர் யுத்த காலப்பகுதிக்கு முன்னர் ஸ்மித் சட்டப்படி (Smith
Act) கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கும்
முன்பிருந்தே, பிரபல்யமான மனிதரின் சோசலிச அல்லது தீவிரவாத (radical)
நோக்கு ஒன்றே ஒரு எஃவ்.பி.ஐ விசாரணைக்கு போதுமான அடிப்படையாக கருதப்பட்டது. ஐன்ஸ்ரைனுக்கு எதிராக
பிரயோகிக்கப்பட்ட தொழில்நுட்பங்களான அவரது கடிதங்களை சட்டவிரோதமான முறையில் திறத்தல், அவரது
தொலைபேசி அழைப்புகளை கண்காணித்தல் மற்றும் அவரது அரசியல் நோக்கு மற்றும் செயற்பாடுகள் சார்ந்த விபரப்
பிரிவுகளை குற்றமாக்கும் நோக்கத்துடன் சேகரித்தல் போன்றன யாவும் வழமையான செயல்முறைகளுக்கான நடைமுறைகளாக
இருந்தன.
எஃவ்.பி.ஐ இனது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள்
McCarthy இன்
வீழ்ச்சியுடனோ அல்லது 50 வருடங்களாக உளவு அமைப்பில் ஆட்சி செலுத்திய
J. Edgar Hoover
1972 இல் இறந்ததுடனோ நின்றுவிடவில்லை என்பதனையும் தொடர்ந்து வந்த
வரலாறு காட்டியுள்ளது.
ஐன்ஸ்ரைனுக்கு எதிரான அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகள் அவர் 1933 ஹிட்லரிடம்
இருந்து அகதியாகி ஐக்கிய
அமெரிக்காவுக்கு சென்று வசிப்பதற்கு முன்னராகவே தொடங்கப்பட்டுவிட்டது.
முன்னர் பலமுறை சென்றுவந்தது போல, 1932 இல் அவர் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் கற்பிப்பதற்காக
விசா விண்ணப்பம் செய்தபோது, தேசபக்த பெண்கள் சங்கம் எனப்படும் ஒரு அதிதீவிர வலதுசாரி குழுவினால் வெளிநாட்டு
அமைச்சகத்திற்கு அவரை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது எனக் கோரி 16 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதம் எழுதப்பட்டது.
இக்குழு குறிப்பிடுவதன்படி, ஐன்ஸ்ரைன் "கம்யூனிச மற்றும் அராஜகவாத கம்யூனிச அமைப்புக்களுடன் நேரடியாக இணைந்த...
"யுத்த எதிர்ப்பு மற்றும் சர்வதேச வாத நிலைப்பாட்டை கொண்டிருந்தார்".
வெளிநாட்டுஅமைச்சு, ஐன்ஸ்ரைனினது அரசியல் நிலைப்பாடு பற்றிய இக்கடிதத்தை பேர்லின்
நகரில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பி அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து விசாரணைக்குள்ளாக்குமாறு
கேட்டுக்கொண்டது. அன்றைய ஒரு Associated Press
இன் கருத்துப்படி; இந்நிகழ்வின்போது, "பேராசிரியர் ஐன்ஸ்ரைன்
பொறுமை இழந்தார். வழக்கமாய் அமைதியாய் காணப்படும் அவர் முகம் கடுகடுப்பாகியது, சாதாரணமான அவரது
இனிய குரல் கடுமையாகியது, அவர் கத்தினார்: 'என்ன இது, பிறர் விடையங்களில் அத்துமீறி தலையிடல்? இது ஒரு
சதிக்கான முயற்சியா? இப்படியான மடமைத்தனமான வினாக்களுக்கு விடையளிக்க நான் முன்மொழியவில்லை. அமெரிக்காவிற்கு
போவதற்காக நான் கேட்கவில்லை. உங்கள் நாட்டவரே என்னை வரவேற்றிருக்கின்றனர்; ஆம், என்னை இரந்தனர்.
நான் ஒரு சந்தேகநபராக உங்கள் நாட்டிற்கு செல்லவேண்டுமானால், நான் ஒருபோதும் போக விரும்பவில்லை.
நீங்கள் எனக்கு விசா வழங்க விரும்பாவிடின், தயவுசெய்து முடியாது என்று கூறுங்கள். பின்னர் நான் நிற்கவேண்டியது எங்கு
என்பது எனக்குத் தெரியும்.' "
இதற்குப் பின் ஒரு மணிநேரத்திலேயே பத்திரிகைகள் இச் சம்பவத்தினைப் பற்றி
அறிவித்தன, பின்னர் மறுநாளே ஐன்ஸ்ரைனுக்கும் அவரது மனைவிக்கும் வெளிநாட்டுத் திணைக்களம் விசா வழங்குவதை
அறிவித்தது. டிசம்பர் 10, 1932 இல் அவர் கப்பல் ஏறி, ஜனவரி 12, 1933 இல் அமெரிக்கா வந்தடைந்தார்.
இதற்குப்பின் இரண்டு வாரத்திற்கு சற்று பின்னர் அடோல்ஃப் ஹிட்லர் ஜேர்மனியில் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
அதேபோது அமெரிக்காவில் ஐன்ஸ்ரைனின் இருப்பும் நிரந்தரமானது.
அதிகாரிகள் சடுதியாக இறங்கி வந்ததானது ஒருபோதும் கண்காணிப்பினதும் தொந்தரவினதும்
முடிவாக இருக்கவில்லை மாறாக அது தொடக்கமாகவே இருந்தது. தேசபக்த பெண்கள் சங்கத்தின் தாக்குதலே
ஐன்ஸ்ரைன் கோப்பின் தொடக்கமாக அமைந்தது. 1930 களில்
FBI இதற்கு
பெரும்பாலும் சிறு குறிப்புகள் மற்றும் தகவல் அறிக்கை குறிப்புகளாக, ஐன்ஸ்ரைன் உள்நாட்டு யுத்தத்தின்போது பாசிச
பிராங்கோவிற்கு எதிராக அப்போதைய
ஸ்பானிய அரசாங்கத்திற்கு ஆதரவளித்தார் என்பது போன்றவற்றை சேர்த்துக்கொண்டது.
இக்காலப்பகுதியில் ஐன்ஸ்ரைன் நாசி ஆட்சியில் இருந்து அகதியாக வெளியேறி அமெரிக்காவினுள் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியுடனே
நுழைய முடிந்தது.
மன்ஹாட்டன் திட்டம்
ஆவணத்தின் அடுத்த பெரும் குறிப்பு, அதாவது நாசிகளுக்கு முன்னரே அணு ஆயுதங்களை
அபிவிருத்தி செய்யவேண்டும் என்ற போட்டியில், மன்ஹாட்டன் திட்டமென எது வந்ததோ அதனது தொடக்கத்ததினைப்
பற்றிப் பேசுகின்றது. வாழ்வு முழுவதுமே ஒரு அஹிம்சாவாதியாக இருந்த ஐன்ஸ்ரைன், அப்போதைய ஜனாதிபதியான
ரூஸ்வெல்டிற்கு, ஹிட்லர் ஆட்சி இப்படியான ஆயுதத்தைப் பெற்றுவிடும் முன்னர் தாம் ஒன்று பெற்றுவிட வேண்டும் என்ற
எண்ணத்தை அவருக்கு எழுதினார். இவ்வேலைக்கு ஐன்ஸ்ரைனினது பெயர் பிரேரிக்கப்பட்டபோது, இராணுவ உளவுப்பிரிவு இதனை இட்டு FBI இனது அபிப்பிராயத்தினைக்
கேட்டது.
ஐன்ஸ்ரைன் தொடர்பான FBI
இன் கோப்பு இன்றுவரையில் இன்னும் உண்மையானதாக இல்லை, ஆனால் பின்னர்
J. Edgar Hoove என்பவர் பொய்களும் அரைப்
பொய்களும் நிறைந்த ஒரு முகவுரைக் கடிதத்தினையும் அத்துடன் ஒரு "சுயசரிதக் குறிப்புரையையும்" வழங்கினார், இது
ஐன்ஸ்ரைன் "ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கம்யூனிச போக்குகளினால் ஆதரவளிக்கப்பட்டு வருபவர் அத்துடன், "பேர்லின்
நகரில், அரசியல் தடையற்ற மற்றும் இலகுவான 1923-1929 களின் காலகட்டத்திலும் கூட, ஐன்ஸ்ரைனது வீடு
கம்யூனிச மையமாகவும் கருத்துபரிமாற்றப்படும் இடமாகவும் விளங்கியது..." என குறிப்பிட்டது.
FBI தொடர்ந்தும் "இவரது தீவிரவாத
பின்னனியினை நோக்குமிடத்து, இவ் அலுவலகம் டாக்டர் ஐன்ஸ்ரைனை இரகசிய தன்மையான விடையங்களுக்கு வேலைக்கமர்த்துவதை
சிபார்சு செய்யமுடியாதுள்ளது, ஒரு மிகக் கவனமான விசாரணை இல்லாமலே, இவ்வாறன பின்னனியைக் கொண்ட இம்
மனிதர், இப்படியான ஒரு குறுகிய காலகட்டத்தில், ஒரு அமெரிக்காவிற்கு விசுவாசமான பிரஜையாக வருவதற்கு சாத்தியமில்லை
என்றே தென்படுகின்றது" என முடிவுக்கு வந்தது.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் குளிர் யுத்த ஆரம்பத்துடன், ஐன்ஸ்ரைனை
கண்காணிப்பது கடுமையாக்கப்பட்டது. ஹிரோஸிமா மற்றும் நகாசாகி மீது அணுக்குண்டு போடுவதையிட்டு ஐன்ஸ்ரைன் கடுமையான
எதிர்ப்பாளர் என்பதனை FBI
அவதானித்தது. மே 1946 புதிதாக உருவாக்கப்பட்ட அவசரகால அணுவியல்
விஞ்ஞானிகள் குழுமத்தினை ( Emergency Committee
of Atomic Scientists) தலைமைதாங்க அவர் ஒப்புக்கொண்டார்,
இக் குழுமம் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு எதிராக பிரச்சாரங்களை நடத்தியது.
FBI இன் ஆவணப்படி;
"இக் குழுமத்தின் (ECAS)
தலைவரும் பிரதம பேச்சாளருமாக இருந்த பேராசிரியர் ஐன்ஸ்ரைன் கடந்தகாலத்தில் 'பெயர்பெற்ற' 'அமைதிவாத'
ஆதரவாளராக பலதரப்பட்ட கம்யூனிச முன்னணி இயக்கங்களால் பயன்படுத்தப்பட்டு வந்தார்."
குளிர் யுத்த காலப்பகுதியில் ஐன்ஸ்ரைன் அதிகாரப்பூர்வ அரசியலிலிருந்து கூடுதலாக வெளியேறிக்கொண்டிருந்தார்.
1948 இல் ஸ்மித் சட்டத்தின் கீழ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மீது குற்றத்தாக்கல் செய்யப்பட்ட பொழுதில்
அவர் அதற்கு எதிராக அவர்களைப் பாதுகாத்தார். 1953 இல்
Julius மற்றும்
Ethel Rosenberg
ஆகியோர் சோவியத் உளவாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டபொழுது அவர்களுக்கு உதவி
ஆதரவளிக்க வந்தார். Julius
மற்றும் Ethel
Rosenberg ஆகிய இருவரையும் மின்சார நாற்காலியில் சாவுக்கு
அனுப்பிய கூட்டரசின் நீதிபதி (Federal judge)
Irving R. Kaufman
இற்கு ஐன்ஸ்ரைன் கருணைகாட்டும்படி ஒரு தனிப்பட்ட கடிதத்தை அனுப்பிய
பொழுது, Kaufman
அக்கடிதத்தினை அப்படியே
J. Edgar Hoover
இற்கு அனுப்பினார், அதனை அவர் ஐன்ஸ்ரைன் கோப்பில் சேர்த்துவிட்டார்.
ஐன்ஸ்ரைனுக்கு எதிரான பிரச்சாரங்கள் 1950-1954 வரையான காலப்பகுதியில்
உச்சக்கட்டத்தினை எட்டியிருந்தது. இவ் விஞ்ஞானியினது புகழைக் கீழ்மைப்படுத்துவதற்கும் மதிப்பிழக்கச் செய்வதற்குமான
Hoover
இனது முயற்சியானது, வாராந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஐன்ஸரைன் முதலாவதாக விருந்தினராகத் தோன்றி
Eleanor Roosevelt
இனால் வரவேற்கப்பட்டதில் வெளிப்படையாக தொடங்கப்பட்டது தெரியவந்தது
என Jerome
குறிப்பிட்டார். இது நடந்தது 12 பெப்பிரவரி 1950 ஆகும். இதற்கு இரண்டு
வாரம் முன்னதாக ஜனாதிபதி Harry Truman
ஹைதரசன் வெடிகுண்டினை (Hydrogen
Bomb) தயாரிக்கும் அழிவுகரமான திட்டத்தினை அறிவிதிருந்தார்.
இதற்கு ஐன்ஸ்ரைன் தேசிய தொலைக்காட்சியில் தனது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தார். மறுநாள் காலையில்
Washington Post பத்திரிகை "ஹைதரசன் குண்டு
'எல்லா உயிரையும்' அழித்துவிடும் என ஐன்ஸ்ரைன் அச்சம் " என தனது தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது.
அதே நாளிலேயே Hoover
அவரது உள் நாட்டு உளவுத் தலைமை அதிகாரிக்கு ஐன்ஸ்ரைனை பற்றிய முழுவிபரங்களும் அடங்கிய ஒரு அறிக்கையினை
தயாரிக்கும்படி கட்டளையிட்டார், அதன்படி ஒரு அறிக்கை விரைவாக வரையப்பட்டு இரண்டுநாட்களின் பின்னர் வழங்கப்பட்டது.
சோவியத் உளவாளிகள் மீதான அரசியல் வேட்டையும், மனப்பிராந்தியும் அங்கே மிக
உயர் வேகமாக பரவியது. ஒரு வாரத்திற்கு முன்னராகவே,
Joseph McCarthy
மேற்கு Virginia
இன் Wheeling நகரின் பார்வையாளர் முன் வழங்கிய தனது அதிகம்
பிரபல்யமான உரை ஒன்றில், "நான் இங்கு 205 பேரினது பட்டியலினை வைத்திருக்கின்றேன். அவர்கள் கம்யூனிஸ்ட்
கட்சி அங்கத்தனர், அத்துடன், எவ்வாறிருந்தபோதும் அவர்கள் இன்றும் வேலைசெய்வதுடன் வெளிநாட்டமைச்சின்
கொள்கைகளை வழிநடாத்துகின்றனர். அதே வாரத்திலேயே லண்டன் நகரில்
Klaus Fuchs
கைதுசெய்யப்பட்டு சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். தொடர்ந்த மாதங்களில்
ஏனயவர்கள் கைதுசெய்யப்டனர், இதில் மிகப் பிரபல்யமானது
Rosenberg சகோதரர்களது
கைதாகும்.
வாஷிங்டனின், சோவியத் யூனியனுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான ஐன்ஸ்ரைனின் எதிர்ப்பு
நிலைப்பாட்டினை விசுவாசமின்மையின் வெளிப்படையான வெளிப்பாடு எனவும், எதிரிக்கு உதவிவழங்குவதற்கும் மேலும்
எதிரியினை உச்சாகப்படுத்தி ஆதரவளிப்பதற்கும் இணையானது எனவும், இவர் உளவுபார்ப்பதில் தொடர்புபட்டிருந்தார்
என்பதற்கு சில ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டி இருக்கின்றது எனவும்
FBI கருதியது.
எந்தவொரு தகவலும் தொடர்ந்த நான்கு வருடகால பழிவாங்கல் தொடர்பாக
இல்லாதது அசாதாரணமானதாகும். FBI
விசாரணைக்கு உட்படுத்தியிருந்த அசாதாரணமான கருத்துக்களை கூறிய தனிநபர்கள்,
மிக விரைவில் முன்னைய மனநோயாளர்கள் என கண்டறியப்பட்டனர். ஐன்ஸ்ரைன் மின்சார "றோபோட்" (Robot)
ஒன்றினை கண்டுபிடித்துள்ளார், அது மனித மனத்தினை கட்டுப்படுத்தக்கூடியது
என ஒரு தகவல் நம்பவைக்கும்படி கூறியது. ஐன்ஸ்ரைனின் மகன்களில் ஒருவர் சோவியத் யூனியனில் கடத்தப்பட்டு பணயம்
வைக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் மொஸ்கோவிற்கு உதவுவதற்கு இதுவும் ஒரு மேலதிககாரணமாக இருக்கலாம் எனவும்
கூறப்பட்ட கட்டுக்கதைக்கு ஆதாரம் தேடுவதற்காக பெருமளவான நேரமும் சக்தியும் செலவிடப்பட்டது. நாசிகளுக்கு
சார்பான ஆவணம் ஒன்றின் தகவலும் ஐன்ஸ்ரைன் கோப்புடன் பொருத்தமாய் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
FBI அதனது விசாரணையினை தொடர்ந்துகொண்டிருக்கும்
வேளையில், அதற்கு சமாந்தரமாக குடிவரவு மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (INS)
ஐன்ஸ்ரைனினது அமெரிக்க
குடிரிமைபெற்ற குடிமகன் என்னும் நிலையினை இல்லாது ஒழித்து நாடுகடத்தும்
நோக்கில் தனது விசாரணையினை தொடர்ந்து கொண்டிருந்தது. மார்ச் 8, 1950 இல்
J. Edgar Hoover
இற்கான குடிவரவு மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தினது குறிப்புக் கடிதத்தில்-
இது Hoover
ஐன்ஸ்ரைனுக்கு எதிரான தனது சொந்த நடவடிக்கையினை தொடங்கி ஒருவாரத்தில்,
"எல்லா கோப்புகளில் இருந்தும் ஐன்ஸ்ரைனுக்கு பாதிப்பான எந்தவொரு தகவலையும் ஒன்றும் விடாமல்" சேகரித்து
தரும்படி FBI
யிடம் கேட்கப்பட்டிருந்தது. பின்னர் தொடர்துவந்த ஒன்றில் குடிவரவு மற்றும்
குடியுரிமைத் திணைக்களம்,
"...இக் குடியுரிமை வழங்கப்பட்ட நபர், உலகரீதியில் ஒரு விஞ்ஞானி என்னும்
அபிப்பிராயத்துடன் இருந்ததாலும், குடியுரிமையை இல்லாதொழிப்பதை சாத்தியமாக்கும் வகையில் ஒரு தெளிவான விசாரணை
நடாத்தப்படவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது. ஐன்ஸ்ரைன் தொடர்பாக ஒரு ஐந்து வருட விசாரணை தொடர்ந்து
நடந்தது.
ஐன்ஸ்ரைன் சாதாரணமாக இழிவுபடுத்தும் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட ஒரு
சாதாரண பலியாள் அல்ல. இது பெருமளவில் இரகசியமாக நடாத்தப்பட்டாலும், இப்பின்னணிகள் மக்கள் மத்தியில் தெரிந்துகொள்ளப்படும்
என அதிகாரிகள் மிகவும் பயத்துடன் இருந்தனர். ஐன்ஸ்ரைனும் தான் தொடர்ந்து கண்காணிப்பின் கீழ் இருந்து வந்ததனை
நன்கு அறிந்திருந்தார். 1948 இல் ஒரு இரவு விருந்தின்போது அவர் அமெரிக்காவிற்கான போலந்து தூதுவருடன் உரையாடுகையில்,
"அமெரிக்கா
இன்னும் ஒரு சுதந்திரமான நாடு அல்ல என்பதனை நீங்கள் கட்டாயமாக உணர்ந்திருப்பீர்கள்
என நான் எண்ணுகின்றேன், சந்தேகத்திற்கு இடமற்றமுறையில் எமது உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுக்
கொண்டிருக்கின்றன. இந்த அறை தொலைத்தொடர்பு இணைப்புகளினால் இணைக்கப்பட்டிருக்கின்றது, எனது வீடு கவனமாக
அவதானிக்கப்படுகின்றது." எனக் கூறினார். ஐன்ஸ்ரைன் கோப்பில் இக் கலந்துரையாடல் காணப்படுவதானது இந்த எச்சரிக்கையினை
சரியாக உறுதிப்படுத்துகின்றது.
ஜனநாயகக் கொள்கைகள்
முதுமையுடனும் கடுமையான நோயுடனும் போராடியபோதிலும், ஐஸ்ன்ரைன் இறக்கும்
வரைக்கும் ஜனநாயக அடிப்படைக்காகவே வாதிட்டார். பலதரப்பட்ட சம்பவங்களில் ஏனய பிரபல்யமான பல புத்திஜிவிகளின்
மெளனத்தினால் விளைந்த வெற்றிடத்தினை அவர் நிரப்பினார் என்றால் அது மிகையாகாது. இதற்கு மிகச்சிறந்த உதாரணங்களில்
ஒன்று மே 1953 இல் அவர் Brooklyn ஆசிரியர்
William Frauenglass இற்கு எழுதிய கடிதமாகும்.
வழங்கப்பட்டிருந்த எழுத்து வடிவ சாட்சியத்தை உறுதிப்படுத்துமாறு
Frauenglass அப்போதிருந்த காங்கிரசினது சதிசெய்யும் குழுவான
Senate Internal Security Subcommittee
இனால் கேட்கப்பட்டிருந்தார்.
Frauenglass ஆலோசனையும்
ஆதரவும் வேண்டியதற்குப் பதிலாக, ஐன்ஸ்ரைன் தனது 74 ஆவது வயதில் ஒரு கடிதத்தினை அனுப்பினார். அவர்கள் அதனை
New York Times
க்கு
அனுப்புவதற்கு சம்மதித்தனர், அங்கு அது ஜூன் 12 இல்
பிரசுரிக்கப்பட்டது. இது " 'உறுதிப்படுத்துவதற்கு மறுப்பு', அறிவுஜிவிகளுக்கு காங்கிரசினால் விடுக்கப்பட்ட
வேண்டுகோளுக்கு ஐன்ஸ்ரைன் அறிவுரை" என தலைப்பிடப்பட்டு, முதற்பக்க செய்தியாக வெளிவந்தது, இதற்கு
Times
பத்திரிகை ஆசிரியர் "சட்டத்துக்குப் புறம்பான" "இயல்புக்கு
மாறான" "புத்திசாதுரியமற்ற" செயலிலிருந்து பாதுகாக்கும் அழைப்பு என முத்திரையிட்டார்.
ஐன்ஸ்ரைன் தொடர்பான பொது அபிப்பிராயம், மிகப் புத்திசாதுரியமான ஆனால் குறிப்பிட்ட
மட்டத்தில் ஞாபக மறதியான விஞ்ஞானி, எம் நாட்டில் பெளதீகத் தத்துவார்த்தத்தின் உச்சியில் உள்ள மனிதன் ஆனால்
இன்றைய நடைமுறை உலகத்தவனல்ல என வளர்க்கப்பட்டதுடன், இக்கருத்து அவரது சுயசரிதை எழுதுபவர்களால்
பெருமளவு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் இருந்தது. அவருக்கு ஒரு நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டதுடன், அவரது
அரசியல் நோக்கு வெளித்தெரியாத வண்ணம் கவனமாக மறைத்திருக்கும் வகையில் அவர் வைக்கப்பட்டார். சில வருடங்களுக்கு
முன்னர் Time இதழ்
இவரை இந்த "நூற்றாண்டு மனிதன்" ஆக தெரிவு செய்தபோது, அது அவரது
சோசலிச கண்ணோட்டத்தின் எல்லா அம்சங்களையும் புறந்தள்ளி விட்டிருந்தது.
இப் பொதுஅபிப்பிராயம் பொய்யானதாகும். ஐன்ஸ்ரைன் ஜேர்மன் மற்றம் ஐரோப்பிய
கலாச்சாரத்தில் ஊறியவராக இருந்தார். அவர் 1879 இல் பிறந்தார், அவர் மார்க்ஸ்-எங்கல்ஸ் இனால் உருவாக்கப்பட்ட
சோசலிச தொழிலாளர் இயக்கத்தின் விளைநிலமான நாட்டில் வளர்ந்தார், அவர் முழுவதுமாக மாக்சிசத்தை
தழுவாவிடினும், அவர் அதனால் ஆழமாக செல்வாக்குச் செலுத்தப்பட்டிருந்தார். இளம் பருவம் தொட்டே ஐன்ஸ்ரைன்
சர்வதேச வாதத்திற்கும் மனிதாபிமானத்துக்கும் அடிபணிந்தவராக இருந்ததுடன், இதுவே அவரது முழுவாழ்வினதும்
பண்பினை எடுத்துக்காட்டியது.
1895 இல் அவர் படிப்பதற்கும் வேலைபார்ப்பதற்குமாக ஜேர்மனியில் இருந்து புறப்பட்டு
சுவிற்சர்லாந்து சென்றார், அங்குதான் அவர் சார்பியல் கோட்பாட்டிற்கு (Relativity)
அவரது பிரபல்யமான ஆரம்பகால பணியினைச் செய்தார். அவர் 1914 இல் முதலாம் உலக யுத்தம் ஆரம்பிப்பதற்கு
சில மாதங்கள் இருக்கும்போதுதான் ஜேர்மனிக்கு திரும்பினார். ஜேர்மன் சமூக ஜனநாயகமும், பெரும்பான்மையான
புத்திஜீகளும் பேரினவாதத்திற்கு கட்டுண்டு அடிபணிந்துபோன அந்த நேரத்தில், ஐன்ஸ்ரைன் ஆகர்ஷிக்கத்தக்க அறிவுஜீவிகளில்
ஒரு மார்க்சிச நிலைப்பாட்டில் இல்லாது ஒரு அகிம்சாவாத நிலையிலிருந்து யுத்தத்தினை எதிர்த்த ஒருவராகத் திகழ்ந்தார்.
ஐன்ஸ்ரைன் அறியாமையினதும், அறிவொளிதடையினதும், விசேடமாக எல்லா வகையான
சோவினிசத்தினதும் இனவாதத்தினதும் ஒர் எதிர்ப்பாளராக அவரது வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தார். 1930 களின்
காலப்பகுதியில், அப்பொழுதுதான் புதிதாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தார் எனினும்,
Alabama மாநிலத்தில்
Scottsboro
என்னுமிடத்தில் இனவாதச் சதியினால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் சம்பந்தப்பட்ட
வழக்கு விசாரணையில்
"Scottsboro
Boys" இனை பாதுகாக்க முன்வந்தார். 1946 இல் இரண்டாம்
உலக யுத்தம் முடிவடைந்து, ஒரு குரூரம் மிக்க இனவாத கலவையாக இருந்தது. இதில் வழக்கு விசாரணையின்றி மரணதண்டனை
அளிக்கும் முறைகளும் அடங்கும், அவர் அமெரிக்காவில் வழக்கு விசாரணையின்றி மரணதண்டனை அளிப்பதனை எதிர்க்கும் (American
Crusade Against Lynching) அமைப்பினை உருவாக்க
Paul Robeson
உடன் இணைந்துகொண்டார், இவ்வமைப்பே வாஷிங்டனில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினைப் பொறுப்பேற்றிருந்தது.
அவர் நீண்டகாலமாக யூத ஆதரவு அமைப்பினராக (Zionist)
இருந்தபோதிலும், ஐன்ஸ்ரைன் (1938 இல்) "யூத அரசினை அமைப்பதனைவிட அரேபியர்களுடன் அமைதியான முறையில்
சேர்ந்து வாழத்தக்க ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய உடன்பாட்டினைக் காண்பது மிகவிரும்பத்தக்கது" என குறிப்பிட்டிருந்தார்.
ஐன்ஸ்ரைன், கம்யூனிஸ்ட் கட்சியினை பாதுகாத்தார் என்றால் அது ஸ்ராலினிசத்திற்கான
மறைமுகமான ஆதரவில் அவரது பங்கு அல்ல. அவர் ஜனநாயக உரிமைகள் மீதான ஸ்ராலினிசத்தின் தாக்குதலின் கடும்
விமர்சகராக இருந்தார், ஆனால் அவர் அமெரிக்காவின் கம்யூனிஸ்ட் கட்சி வெறுமனே மொஸ்கோவின் ஒரு கருவி
என்னும் பொய்வாதங்களையும் அதனது அங்கத்தவர் கருத்துக்களை வெளிப்படுத்தும் மற்றும் ஸ்தாபனமயமாகும் உரிமைகளை
மறுப்பதனையும் எதிர்த்து நின்றார். ஐன்ஸ்ரைன் நிலைப்பாடு இன்று குறிப்பிடத்தக்க மதிப்புள்ளதாகும், ஸ்ராலினிசத்தின்
உடைவுக்குப்பின், முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் சிந்தனையாளர்கள் அனைவரும் அமெரிக்காவினுள்ளும் அத்துடன்
சர்வதேச ரீதியிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் வரலாற்று ரீதியான அத்தியாவசியத்தினை நிராகரிப்பதற்காக
மொஸ்கோவின் குற்றங்களை பயன்படுத்துவதனையே கடைப்பிடிக்கின்றனர்.
இதன்போதில் ரஷ்யப் புரட்சியின் சீரழிவின் மத்தியில் எழுப்பப்பட்ட வரலாற்று விடையங்கள்
சம்பந்தமாகவும் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தையிட்டும் ஐன்ஸ்ரைன்
கவனத்தை கொண்டிருந்தார் என்பதற்கான அறிகுறி எதுவுமில்லை, அவர் தன்னை ஒரு சோசலிஸ்ட்டாகவே கருதினார்.
இது 1949 இல் புதிதாக உருவான சஞ்சிகையான
Monthly Review இல் அவர் எழுதிய கட்டுரையினூடு நன்கு
புலப்பட்டது. அக் கட்டுரை "சோசலிசம் எதற்காக?" என தலைப்பிடப்பட்டிருந்தது, இதிலிருந்து சில விபரங்களை மேற்கோள்காட்டுவது
பயனுள்ளது.
முதலாளித்துவ சமுதாயத்தின் இன்றுள்ளது போன்ற பொருளாதார அராஜகமானது, என்னப்
பொறுத்தவரை, அழிவிற்கான உண்மை காரணமாகும்.
''... உற்பத்திச் சாதனத்தினை உடமையாய்க் கொள்வதில் யார் எல்லாம் பங்கற்றவர்களோ
அவர்களை நான் 'தொழிலாளர்கள்' என அழைப்பேன்... எந்த அளவுக்கு உழைப்பு உடன்படிக்கைகள் 'சுதந்திர'
மானதாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு, தொழிலாளி உற்பத்தி செய்யும் பொருட்களின் உண்மையான பெறுமதியினால்
அவரது கொடுப்பனவுகள் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக அவரது ஆகக் குறைந்தபட்ச தேவையின் (Minimum
Needs) அளவினாலும் அத்துடன் வெளியில் எவ்வளவு எண்ணிக்கையான
தொழிலாளர்கள் வேலைக்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுடன் தொடர்புபட்டிருக்கும் முதலாளிகளது
உழைப்பு சக்திக்கான தேவைகளின் அளவினாலுமே அது தீர்மானிக்கப்படுகின்றது.
"...நடப்பிலுள்ள நிலைமைகளின் கீழ், தனிப்பட்ட முதலாளிகள் தவிர்க்கவொண்ணாவகையில்,
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, முக்கிய தகவல் சாதனங்களை (பத்திரிகை, வானொலி, கல்வி)
கட்டுப்படுத்துகின்றனர். இதனாலேயே இது தனிப்பட்ட குடியானவருக்கு, உண்மையில் அனேக விடையங்களில் மிகவும் கடினமானதாக
இருப்பதுடன், அவர் புறநிலைரீதியான முடிவுகளை எடுப்பதனையும் தனது அரசியல் உரிமைகளை விவேகமான முறையில்
உபயோகிப்பதனயும் மிகவும் சாத்தியமற்றதாக ஆக்கியுள்ளது.
"உற்பத்தி செய்யப்படுவது இலாபத்துக்காகவே அன்றி பயன்பாட்டுக்காக அல்ல.
வேலைசெய்வதில் நாட்டமும் இயலும் தன்மையுமுள்ள அனைவருக்கும் எப்பொழுதும் வேலைதேடிக்கொள்ளக்கூடிய சாத்தியமான
நிலைமை இங்கு இல்லை, ஒரு "வேலையற்ற பட்டாளம்" அனேகமாக எப்பொழுதுமே இருந்துகொண்டிருக்கின்றது....
"இந்த தனிநபர்களை முடமாக்கும் தன்மையினை நான் முதலாளித்துவத்தின் மிகக் கேடுகெட்ட
பேய்த்தனம் என்கின்றேன்... மாணவர்களது மனநிலையில் ஒரு மிகையான போட்டிபோடும் போக்கு உள்ளது, அவர்கள்
வெற்றிகளின் பெறுமதிகளை வழிபடுவதற்கு பயிற்றுவிக்கப்பட்டுளள்ளனர்...
"இந்த மோசமான கேடுகெட்ட பேய்த்தனத்தினை ஒழிப்பதற்கு ஒரேயொரு
(அழுத்தம்
அவரால் வழங்கப்பட்டது) வழி மாத்திரமே உள்ளது, அதாவது ஒரு சோசலிசப் பொருளாதாரத்தினை ஸ்தாபிப்பதன்
ஊடாகவே இது நடைபெறமுடியும், இத்துடன் சமூக இலக்குகளை அடையக்கூடிய வகையில் தகவமைக்கப்பட்ட ஒரு கல்வி
அமைப்புமுறை ஒருங்கமைக்கப்படவேண்டும்
என நான் உறுதிப்பட்டு நிற்கின்றேன். இப்படியான ஒரு பொருளாதாரத்தில், உற்பத்தி
சாதனங்களை சமுதாயம் தன்னகத்தே உரிமையாக்கிக் கொள்வதுடன், அங்கே அவை திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படும்.
ஒரு திட்டமிட்ட பொருளாதாரமானது உற்பத்தியினை சமுதாயத்தினரின் தேவைக்கு ஏற்ற வகையில் ஒழுங்கமைக்கின்றது,
அது செய்யவேண்டிய வேலையினை வேலை செய்ய இயலுமானோர் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் அத்துடன் அது ஆண்,
பெண் குழந்தைகள் அனைவரது வாழ்வுக்குத் தேவையான அனைத்துக்கும் உத்தரவாதமளிக்கின்றது. தனிமனிதனது கல்வியானது
இன்னும் அதிகப்படியாக அவனது இயற்கையான செயற்திறனை அதிகரிக்க வைக்கின்றது, இது நம் இன்றைய சமுதாயத்தில்
காணப்படும் அதிகார புகழ்ச்சி மற்றும் அதிகாரத்தை வழிபடுவதற்குப் பதிலாக, அவனுக்குள் அவனது சகமனிதர்களுக்காக
பொறுப்பேற்கும் ஓர் உணர்மையினை வளர்க்கும் எத்தனிப்பாக இருக்கும்.
1954 அளவில் ஐன்ஸ்ரைனுக்கு எதிரான
நடவடிக்கைகள் ஆவியாகி மறையத்தொடங்கின. செனற்றில் McCarthy தடைசெய்யப்பட்டது உள்ளடங்கலாக அரசியல் காற்று
மாறியதானது, விசாரணைகளுக்கான சூழ்நிலைச் சாதகம் குறைந்துசெல்லத் தொடங்கியதற்கு வழிவகுத்தது. இருப்பினும்
இவ் விசாரணை ஏப்ரல் 1955 இல் அவர் தனது 76 வயதில் மரணமான பின்னர் சில நாட்கள் வரையும் முடிவுக்கு
வரவில்லை.
ஐன்ஸ்ரைன் மீதான இத் தாக்குதல் இதுபோன்ற பல விசாரணைகளில் ஒன்றுமட்டுமேயாகும்.
இக்காலகட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க அறிவு ஜீவிகளில் பெரும்பான்மையானோரைப் பற்றி ஒரு விடையத்திலோ
அல்லது மற்றொன்றிலோ FBI
தகவல் சேகரிப்பினை மேற்கொண்டு வந்தது என்பது மிகைப்படுத்தல் அல்ல.
இது அமெரிக்க ஆளும் தட்டின் பிற்போக்குத்தனத்தின் ஒரு பிரதிபலிப்பாகும், இது அறிவுக்கு
எதிரான நடவடிக்கைகளுடனும் மற்றும் அரசியல் கருத்துகளையிட்ட மற்றும் அமெரிக்காவில் வாழும் பரந்துபட்டமக்கள்
அரசியல் கல்வியறிவூட்டப்படுதலால் ஏற்படும் தாக்கத்தினையிட்ட அச்சதினால் கட்டுண்டு கிடக்கின்றது. ஐன்ஸ்ரைன் இனது
பெருமை, பிரபல்யம் மற்றும் அரசியல் புத்திஜீவிதம் என்பன அவரை, குளிர் யுத்தகால அரசியலுக்கான எதிர்புக்கள்
அனைத்தையும் நசுக்கிவிட கங்கணங்கட்டி நின்ற அரச அதிகாரத்திற்கு பெரும் அச்சத்தை விளைவிப்பவராய் மாற்றியது.
கடந்த வருடத்தின் சம்பவங்கள்
FBI மற்றும் மற்றைய
உளவு அமைப்புகளது வேலைகளின் இடையறாத தன்மையினை தெளிவாகக் தெரியப்படுத்தியுள்ளன. அமெரிக்க முதலாளித்துவம்
பாரம்பரியமாக ஆட்சி நடாத்திவரும் அரசியல் கட்டமைப்பினை, முதலாளித்துவ ஜனநாயகத்தின் மிக மட்டுப்படுத்தப்பட்ட
எல்லைகளை வரலாறு எடுத்துக்காட்டியுள்ளது. போராட்டம் மூலம் வென்றெடுக்கப்பட்ட, மற்றும் தொடர்ந்து காப்பற்றப்பட்டாக
வேண்டிய அடிப்படை ஜனநாயக உரிமைகள் போன்ற அதேமாதிரியானதல்ல இது.
இது ஆழும் தட்டினரது இருப்புநிலை பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளினால்
அச்சுறுத்தப்படுவதனை அவர்கள் தன்னகத்தே உணரும் பொழுதில் அது தனது "ஜனநாயகத்தின்" எல்லை வரம்பினை எடுத்துக்காட்டுகின்றது.
1920 இல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மற்றும் இடதுசாரி போராளிக் குழுவினருக்கும் எதிராக நடாத்தப்பட்ட
Palmer Raids
காலத்தில் இருந்து, 1941 இல் ட்ரொட்ஸ்கிச சோசலிச தொழிலாளர்
கட்சியின் (SWP)
தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு குற்றவாளியாக்கப்பட்டு, McCarthy வேட்டையாடியமை மற்றும் இன்று மத்திய கிழக்கு
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான வலைவிரிப்புகளுக்கும் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம்
(Department of Homeland Security)
உருவாக்கப்பட்டதும், அரசாங்கம் வெளியிலிருந்துவரும் பூதம் என்னும் பயங்களை
காட்டி உள்நாட்டில் எழும் எதிர்ப்புக்களை நசுக்குவதற்குமாகும்.
Top of page
|