WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு
The political failure of the PLO and the origins of
Hamas
பி.எல்.ஓ வின் அரசியல் தோல்வியும் ஹமாஸ் இன் தோற்றமும்
பகுதி1 |பகுதி2
| பகுதி-3
By Jean Shaoul
8 July 2002
Use this version to print |
Send this link by email
| Email the author
முப்பாகத் தொடரில், இது மூன்றாவதும்
இறுதி பாகமுமாகும். தமிழில் இதன் முதல் பாகம் நவம்பர்4 அன்றும் இரண்டாம் பாகம் நவம்பர்8
அன்றும் வெளியிடப்பட்டன.
டிசம்பர் 1998 இல் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை மறுக்கவும் இஸ்ரேலின் நிலையை
ஏற்குமாறு பி.எல்.ஓவையும் யாசிர் அரபாத்தையும் இட்டுச்சென்றது, மக்களின் புரட்சிகர இயக்கம் கட்டுக்கடங்காததாகிவிடும்
எனும் அச்சமேயாகும்.
சுதந்திர பாலஸ்தீன நாட்டிற்கான நோக்கத்தின் முதற்கட்டமாக, செப்டம்பர் 1993
ஒஸ்லோ ஒப்பந்தங்களின் உச்சமாக, இஸ்ரேல் - பாலஸ்தீனிய தகராறைத் தீர்ப்பதற்கான நீண்ட பேச்சுவார்த்தை
நிகழ்ச்சிப்போக்கை இவ் அறிவிப்பு இயங்க வைத்தது. அப்படிப்பட்ட அரசானது, புலம்பெயர்ந்த நிலையில்
சொத்துக்களைக் குவித்திருக்கும் - பாலஸ்தீனிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு, அதன் சொந்த அரசு எந்திரத்தால்
உத்தரவாதம் செய்யப்பட்ட கூலி உழைப்பை சுரண்டுவதன் மூலம் அதனது செல்வத்தைப் பெருக்க உதவும். சியோனிச
அரசு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய முன்னோக்கிலிருந்து பாலஸ்தீனிய முதலாளித்துவ வாதிகள் பி.எல்.ஓ. மூலமாக,
பாலஸ்தீனிய முதலாளித்துவ வர்க்கத்தை கண்காணிக்கவும், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பணிக்கப்படுவார்கள்.
இதன் விளைவாக 1998 டிசம்பரில் ஹமாஸ், அரசியற் செயற்பாடுகளில் யார் முதன்மையாயிருப்பது
என்பதில் பி.எல்.ஓ.வுடன் முரண்பட்டது. மக்களிடையே தனது ஆதரவு நிலையை தாங்கி நிறுத்துவதற்காக இஸ்ரேலிய
இராணுவம் மற்றும் குடிமக்கட்கெதிராய் ஹமாஸ் வெளிப்படையான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது. மே
1989ல் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக, யாசின் உட்பட்ட பன்னூறு ஹமாஸ் ஆதரவாளர்களை இஸ்ரேலிய நிர்வாகிகள்
கைது செய்தனர். கிளர்ச்சி தொடங்கிய ஈராண்டுகட்குப் பின்னரும் பி.எல்.ஓ./யு.என்.எல்.ஓ.
(ஐக்கிய தேசிய தலைமைச் சங்கம்
-UNLO) குழுக்களை இஸ்ரேல் தடை செய்த ஓராண்டுக்குப் பின்னும், இஸ்ரேல் கடைசியாக இந்த இயக்கத்தை,
"சட்டத்திற்குப் புறம்பானது", என அறிவித்தது.
இதனிடையில், மாணவர் மற்றும் தொழில்முறை வாதிகள் தேர்தலில் தொடர்ந்து, ஹமாஸூக்கு
அடுத்தபடியாக இரண்டாவதாய் வென்று, ஹமாஸ் முக்கியமான எதிர்க்கட்சி ஆனது. அக்டோபர் 1991ல் அமெரிக்கா
ஏற்பாடு செய்த இஸ்ரேலை ஒட்டி பாலஸ்தீனிய அரசை உருவாக்கும், மட்ரீட் பேச்சுவார்த்தையில்
(Madrid talks) பங்கேற்க பி.எல்.ஓ. ஒப்புக்கொண்ட பொழுது, ஹமாஸ் "இராணுவ வழிமுறைக்கு
முழுமையாகத் திரும்புமாறு அழைப்பு விடுத்தது மற்றும் பி.எல்.ஓ.-இன் அனைத்து அங்கங்களிலும் 50 சதவீத பிரதிநிதித்துவ
உரிமையை கோரியது. பாலஸ்தீனிய இயக்கத்தின் தலைமையான பி.எல்.ஓ.வை, இடம்பெயர்க்கும், இஸ்ரேல் மற்றும்
அமெரிக்காவின் விளையாட்டுப் பொம்மை என்று எழுந்த குற்றச்சாட்டுகளுக்கிடையே, இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இஸ்ரேலியர்களுக்கு எதிரான பயங்கரத் தாக்குதல்கள் மூலம், ஒவ்வொரு கட்டத்திலும்,
ஹமாஸ், பேச்சுவார்த்தையை வலுவிழக்கச் செய்தது. உடம்பில் வெடிகுண்டுகளுடன் இளைஞர்களை விரட்டுதல், எடுத்த
நோக்கத்திற்கான இலக்குகளைத் தாக்குவதில் தன்னையிழத்தல் என்பனவற்றைவிட, அவர்களது முற்றிலும் வெறுப்பானதும்,
திவாலானதுமான முன்னோக்கை வேறெதுவும் விவரிக்கவியலாது. வீரமரணமடைந்தோர் குடும்பத்திற்கு 30,000 அமெரிக்க
டாலர்கள், தரும் புகழ்மிக்க பணம் மூலம், இளைஞர்கள் உயிரோடு இருத்தலினதிலும் இறத்தலினால், மதிப்புமிக்கவராயினர்.
எப்படியிருப்பினும், ஹமாஸின் இஸ்ரேலிய நாட்டை மறுப்பது என்பது பேச்சுவார்த்தையைப்
பலனிழக்கச் செய்வதும் மற்றும் "இரண்டு நாடு" த் தீர்வைவிட அதனை நடைமுறைப்படுத்துவதைத் தாமதிப்பதுமே
நோக்கமாகும். எவ்வளவு நீண்ட தாமதம் ஆகிறதோ அவ்வளவுக்கு பி.எல்.ஓ அதிகமான ஆதரவை இழக்கும் என்று
எண்ணிப்பார்த்தது.
1991 ஆம் ஆண்டில் பி.எல்.ஓ. மற்றும் பத்தாவைக் கீழறுக்கும் முகமாக, ஹமாஸ்
தொடர்ந்து போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தையும் குவித்தது. சியோனிச நாட்டுக்கெதிரான போராட்டத்திலிருந்து,
இண்டிபதாவிலிருந்து வரவர முகமூடியிட்ட மனிதரின் போட்டிக் குழுக்களிடையேயான போராட்டமாக அது உருமாற்றமெடுத்தது.
ஜூலை 1992 அளவில், அது ஹமாஸ் மற்றும் பத்தாவிற்கிடையேயான தொடர் யுத்தங்களாக சீரழிந்து, காஸா
தெருக்களில் 300 இறப்புக்களையும் 130 பேர் படுகாயமடைதலையும் உண்டாக்கிற்று.
தொழிற் கட்சி அரசாங்கத்தின் திட்டமான பி.எல்.ஓ. வுடன் கொள்ளவிருந்த ஒப்பந்தத்தைப்
பயனற்றதாக்குவதற்கும், வலதுசாரி சியோனிசவாதிகளின் கிளர்ச்சியைத் தூண்டிவிடுவதற்குமாக ஹமாஸின் இஸ்ரேலுக்கெதிரான
பயங்கர குண்டுவெடிப்பு போராட்டம் இலக்குவைக்கப்பட்டது. உண்மையில் அது, சித்தாந்த ரீதியிலும் வழிமுறைகளிலும்
சியோனிசத் தீவிரவாதிகளின் திட்டங்களையும் முறைகளையும் எதிரொலித்தது. வலதுசாரி சியோனிசவாதிகள் பாலஸ்தீனம்
முழுவதுமே ஏனைய மக்களுக்கு இடம்கொடாத யூத அரசாக அறிவிக்கும் அதேவேளை, ஹமாஸானது யூதர்களும்
கிறிஸ்தவர்களும் அல்லாத இஸ்லாமிய அரசின் தேவையை அறிவிக்கிறது. தங்கள் இலக்கை வென்றெடுக்க பயங்கரவாதத்தைப்
பயன்படுத்துவதற்கான தங்கள் விருப்பத்தை இருவருமே திரும்பத்திரும்ப தெரிவிக்கின்றனர்.
ஒஸ்லோ ஒப்பந்தங்கட்குப்பின்
ஒஸ்லோ ஒப்பந்தமானது முழு நாட்டுக்குரிய இடைமருவு ஒழுங்குகளை அளித்தது. அதாவது
ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பாலஸ்தீனிய நிர்வாகம் மூலம் இஸ்ரேல் இராணுவத்தை நீக்கி, இஸ்ரேலின் பாதுகாப்புக்
கோரிக்கையை உத்தரவாதப்படுத்த ஹமாஸ் மற்றும் எதிரணிக்குழுக்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுப்பதாகும்.
ஆக, ஒஸ்லோவின் வெற்றி ஹமாஸ் மற்றும் மற்ற எதிர்க்குழுக்களில் எந்த அளவு பாலஸ்தீனிய நிர்வாகத்தை ஆதரிப்பர்
என்பதைப் பொறுத்தே இருந்தது. அவ்வாறு செய்யத் தவறிடின், பத்தா ஆதிக்கம் செய்யும் பாலஸ்தீனிய நிர்வாகத்திற்கும்
வேறெந்த எதிர்க்குழுவுக்கும் இடையேயான உள்நாட்டுச் சண்டை ஆகிவிடுமோ என்று அச்சுறுத்தியது. அரபாத்துக்கான
ஆதரவு தொடர்ந்தது என்பது -பாலஸ்தீனிய நிர்வாகம், பாலஸ்தீனிய நாட்டுக்கு முன்னோடியாக எந்த அளவுக்கு ஏற்கப்படுகிறது,
மற்றும் பாலஸ்தீனியரின் ஆற்றொணா பொருளாதார துயரங்களைத் தணிக்கும் மற்றும் அமைதியைக் கொண்டுவர முடியும்
என்ற மட்டத்தை சார்ந்திருந்தது. பி.எல்.ஓ வுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நற்சான்றை ஒஸ்லோ கொடுத்ததால் அதன்
நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு வலைப் பின்னலுக்கு சர்வதேச நிதி உதவியைக் கொண்டு வந்தால், அது அரசியற் பரப்பை
ஏற்படுத்த பயன்படுத்தக் கூடியதானது, ஹமாஸின் சூழ்ச்சிச் சுதந்திரத்தை மட்டுப்படுத்தியது.
அதற்கேதுவாக, ஒஸ்லோவை மீண்டும் மீண்டும் மறுத்தபோதிலும், சகோதரத்துவம் விரைவிலேயே
பி.எல்.ஓ.வின் செயல் வகை மீதான ஒப்பந்தத்தை அடைந்தது. காசா சிறையிலுள்ள, ஹமாஸ் மற்றும்
பி.எல்.ஓ. சிறைக் கைதிகள், தங்களது அரசியல் வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு வன்முறையை ஒரு சாதனமாகப்
பயன்படுத்துவதைத் தடைசெய்யும் உடன்பாட்டை செய்தனர். இஸ்ரேலிலுள்ள பாலஸ்தீனிய சிறைக்கைதிகட்கு மாற்றாக,
சியோனிச ஆதரவாளர்க்கு பி.எல்.ஓ. பொதுமன்னிப்பு அளிக்காத வரை, ஹமாஸ் தலையிடாது. பின்னர், பத்தாவுடன்
இடம் பெறுவதற்காக, ஹமாஸ் "அவதூறுப் பிரச்சாரங்களை" நிறுத்தவும் "மக்களின் பொருளாதார சுமையைக்
குறைக்குமுகமாகத்தான்" பல்வேறு நாட்களில் வேலை நிறுத்த அழைப்புக்களுக்கு அழைப்பு விடுவதை முடிவுக்குக் கொண்டுவர
ஒத்துக்கொண்டது.
வெளிப்படையாகவே, ஹமாஸூம் கூட, டமாஸ்கஸை அடிப்படையாகக் கொண்ட பத்து
இடதுசாரிக் குழுக்களுடனான கூட்டணியுடன் ஒரு குழு அமைத்தது. ஒஸ்லோ மற்றும் இரு நாடுத் தீர்வை நிராகரித்த,
பி.எஃப்.எல்.பி மற்றும் டி.எஃப்.எல்.பி. இரண்டுமே அதில் அடங்கியுள்ளன. மிக முக்கியமாக, தங்களது முதன்மை
எதிரியுடனான இந்த ஒப்பந்தத்தின் மூலம் பி.எல்.ஓ. வின் இடதுசாரிப் பிரிவுகள் (கன்னைகள்), ஹமாஸின் ஏகாதிபத்திய
எதிர்ப்புக் கொள்கை நற்சான்றுகளை பலப்படுத்தின. அதற்குப் பதிலாக, டமாஸ்கஸ் கூட்டு ஒப்பந்தம் தங்களுக்குப்
பொருந்தும் பொழுது, சகோதரர்கள் அதனுடன் சமரசத்திற்கு இறங்கி வந்தனர். ஹமாஸ், பாலஸ்தீனிய நிர்வாகத்திற்கான
நாடுதழுவிய தேர்தல்களில் பங்கேற்க மறுத்த அதேவேளை, உள்நாட்டுத் தேர்தல்களில் பங்கேற்றது. ஏனெனில், `ஹமாஸ்
ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் குடியிருக்கும் பாலஸ்தீனியரது அன்றாட வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்த
வேண்டுமென்று' யாசின் கூறியதாகச் சொல்லப்படுகிறது. வேறுவிதமாகச் சொன்னால், ஹமாஸ் தான் சொந்தமாக
தாக்குவதற்கு ஒரு காலம் கனியும் வரை, உண்மையான எதிர்க்கட்சியாக இருக்கும் எனலாம்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையில் அதிகாரியுடன் ஒப்பந்தம் பற்றி விவாதித்தது என்ற
உண்மையால், அரசியல் அதிகாரம் அளிக்கப்படின் ஒஸ்லோ விதிமுறைகளை ஏற்கவும் தயாராயிருந்தது என்பதை ஆதாரம்
காட்டுகிறது. அப்போதைய தொழிற் கட்சியின் வெளியுறவுச் செயலர் ஷிமோன் பெரஸ், ஹமாஸ் வன்முறைப் பயங்கரத்தை
கைவிடின் இஸ்ரேல், ஹமாஸ் கைதிகளை விடுதலை செய்யவும் யோசனை கூறினார். பாலஸ்தீனியக் குழுவில், எத்தகைய
அரசியலெதிர்ப்பையும் அடக்கிடுவதே நோக்கமான பத்தாயிரம் வலுவான போலீஸ் படையினைப் பொறுத்தவரை, ஹமாஸ்
`பாலஸ்தீனியப் பாதுகாப்புப் படையை தமது சகோதரர்களாக வரவேற்பதான,` நிலையை எடுத்தது.
இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட ஷைக் யாசின் உட்பட தங்களது கைதிகளை விடுவிக்கும்
கோரிக்கைக்கு ஆதரவாகவும் இஸ்லாமியவாதிகள் பற்றிய செய்திகளை பாலஸ்தீனிய நிர்வாகம் இஸ்ரேல் அரசுக்குத் தெரிவிப்பதைத்
தடுப்பதற்காகவும், மூன்று தனித்தனியான தாக்குதல்களில் இருபத்தைந்து இஸ்ரேலியரைக் கொன்று, ஐம்பதின்மரைக் காயப்படுத்திற்று.
இதன் பின்னர் பாலஸ்தீனிய நிர்வாகம் ஹமாஸ் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. பின்னர் 1994 ஆம் ஆண்டு, இஸ்ரேலிய
இராணுவ வீரரைக் கடத்திக் கொன்றதற்காக முன்னூறு ஹமாஸ் தீவிரவாதிகளைப் பாலஸ்தீனிய நிர்வாகத்தின் போலீஸ்
கைது செய்தது. அடுத்த இரண்டாண்டுகளில், ஆஸ்லோ ஒப்பந்தம் ஊசலாடும் முடிவுகளைத் தரும் எனும் நம்பிக்கையால்,
ஹமாஸ் ஆதரவை இழந்தது.
அமைதிப் பேச்சுவார்த்தை எதுவும் திடமான பயனளிப்பதில்லை என இரு
ஆண்டுகட்குள்ளேயே தெளிவாயிற்று. பாலஸ்தீனியர் பொருளாதாரத்தின்மீது தனது கட்டுப்பாட்டை இஸ்ரேல் இறுக்குததலாலும்,
இஸ்ரேல் நிலங்களைக் கையகப்படுத்துதல் ஒஸ்லோவின் சட்டங்குகட்குப் புறம்பானது என கூறப்படுவதாலும், மேற்குக்
கரையிலும் கஸாவிலும் உள்ள பெரும்பான்மையான பாலஸ்தீனியரின் பயங்கரமான சமுதாய நிலைமைகள், மோசத்தினின்று
மிக மோசம் எனும் நிலைக்குக் கொண்டு சென்றன. வாஷிங்டன் மற்றும் ஜெருசலேத்தினின்று வந்த தொடர் நெருக்குதலால்
பி.எல்.ஓ. ஆதிக்கம் செலுத்தும் பாலஸ்தீனிய நிர்வாகம். ஹமாஸையும் மற்ற எதிர்க் குழுக்களையும் நொருக்க வேண்டியதாயிற்று.
பலரும், பாலஸ்தீனிய நிர்வாகம் ஜனநாயகத்திற்கு விரோதமான நிறுவனம் எனவும் ஊழல்மிக்கதாகி விட்டதெனவும், இஸ்ரேலின்
கைப்பாவையாகி, வணிகர்க்கும் பணியாற்றும் சிறு தட்டினருக்கும் பயன்பட்டு வருவதாக எண்ணினர். எல்லா திட்டங்கட்கும்,
இஸ்ரேலிய நிர்வாகம், சுயாட்சிப் பகுதி எனக் கூறப்பட்ட பகுதிகளில் முழுக் கட்டுப்பாட்டைத் தக்க வைத்தனர்.
ஹமாஸ், பாலஸ்தீனியரின் தேசிய ஒடுக்குமுறையை முறியடிக்க பி.எல்.ஓ.வின் இயலாமையினால்
பயனடைந்தது மட்டுமல்லாது, பெரிதும் அழுத்தும் சமூகச் சிக்கல்களைத் தீர்க்க முடியாததன் மூலமும் பயனடைந்தது.
அரபு இராச்சியங்களின் கொடை மூலம், சமூக செளகரியங்கள் பெரிதும் ஹமாஸால் ஏற்படுத்தப்பட்டன. இவ்வாறு அது
பி.எல்.ஓ.வை எதிர்ப்பதில் மிகத் தீவிரமாயிருந்து இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது.
1996 ஆம் ஆண்டின் வேனிற்காலத்தில், பாலஸ்தீனியருடன் எந்த உறவையும் எதிர்க்கும்
வலதுசாரி சியோனிச வெறியரால் பிரதமர் யிட்ஷாக் ராபினின் படுகொலைக்குப் பின்னும் இஸ்ரேலியத் தேர்தலுக்குச்
சற்று முன்னும், அறுபது இஸ்ரேலியரின் இறப்புக்கும் நூற்றுக்கணக்கானோரின் படுகாயத்திற்கும் காரணமான வெடிகுண்டுத்
தாக்குதல் அலையை ஹமாஸ் துவக்கிற்று. வலதுசாரி லிக்குட்டை ஆட்சிக்குக் கொணர்தல் மூலம் ஒஸ்லோவின் அமைதி முயற்சியை
முறியடிப்பது அதன் இலக்காக இருந்தது. இந்நாள்வரை ஹமாஸின் குறிக்கோளாக இருப்பது, வலதுசாரி இஸ்ரேலிய
எதிர்ப்பை ஏற்படுத்தி, தவிர்க்க வியலாததும் கொடூரமானதுமான திருப்பித்தாக்குதலை ஏற்படுத்தி, பி.எல்.ஓ. வைவிட்டு
பாலஸ்தீனியரை ஓடச் செய்து ஹமாஸின் முன்னோக்கைத் தழுவச் செய்வதாம். ஹாரேட்ஸ் செய்தியாளர்
டானி ரொபின்ஸ்ரைன், ஒஸ்லோவிற்குப் பின் எழுதியவாறு, ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைகள் இரண்டு முக்கிய
தகவல்களைக் கூறுகிறது. முதலாவதாக - அரபாத் மற்றும் பி.எல்.ஓ.வுக்கு எச்சரிக்கை- எங்களை அலட்சியம் செய்யத்
துணியாதீர், இரண்டாவதாக, இஸ்ரேல் அரசுக்கு விடுப்பது -பி.எல்.ஒ. வுடனான பேச்சுவார்த்தையுடன் முடிவடைகிறதல்ல,
ஹமாஸையும் கட்டாயமாகக் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும். உண்மையில் யாசீன் கூட சகோதரத்துவத்தின்
விருப்பமான தனி பாலஸ்தீனிய அரசுக்காக, இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை பற்றிக் குறிப்பிட்டார்.
ஒஸ்லோவின் செய்முறைகள் சில நன்மைகட்கான எதிர்பார்ப்பை அளித்ததில், பாலஸ்தீனிய
நிர்வாகம், ஹமாஸ் மற்றும் சில போராளிக் குழுக்களை அடக்க முடிந்தது. ஜூலை 2000ல் காம்ப் டேவிட்
பேச்சுவார்த்தை பொறிந்துபோனது, இஸ்ரேலால் வழங்கப்பட்ட கஞ்சியை, அரபாத்தால் விற்க இயலாது போனது.
இதை இவரால் செய்ய முடியாது. அமைதிக்கான ஏற்பாடுகள் முறிந்ததில் ஒஸ்லோ ஒப்பந்தத்திற்குப் பின் அரசியல்
நிறுவனங்களும் ஏற்பாடுகளும் வாழ்விழந்தன. இறுதியாக, செப்டம்பர் 2002ல், பழைய நகரமாம் செருசலேத்தில்,
இஸ்லாமியரின் புனித இடங்களில் நூற்றுக்கணக்கான வீரர் சூழ, ஷெரோனின் ஆத்திரமூட்டும் வருகையில், பாலஸ்தீனியரின்
விரக்தி வெடித்தது. அதை அடுத்து எழுந்த கிளர்ச்சி, இஸ்ரேலுக்கெதிரானது போலவே பாலஸ்தீனிய நிர்வாகத்திற்கும்
எதிராக இருந்தது.
தற்கொலைக் குண்டுகள் இஸ்ரேலுக்கெதிரான தக்க பதிலடி என்று அரைவாசிக்கும் அதிகமான
பாலஸ்தீனியர் எண்ணுகின்றனர் என்பதை அண்மைய கருத்துக் கணிப்பு காட்டுகின்றது. வரும் தேர்தல்களில் ஹமாஸ்
வேட்பாளர்களை நிறுத்தினால், 25 சதவீத வாக்குகளைப் பெறும் எனவும் காட்டுகின்றது.
தேசிய வாதத்திற்கு ஒரு முற்போக்கான மாற்று தொழிலாள வர்க்கத்திற்குத் தேவை
அரேபியரோ, இஸ்ரேலியரோ, இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் முழு மத்திய கிழக்கு
நாடுகளில் இதேவிதமான போக்குகள் நிலவுகின்ற இடங்களில், இன்றைய நெருக்கடியின் மிகவும் ஈர்க்கின்ற சிறப்பியல்பு
தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு உண்மையான புரட்சிகர மாற்று இல்லை என்பதுதான்.
இத்தகைய நிலையில், பாலஸ்தீன இளைஞர் மற்றும் தொழிலாளர்களின் சினத்தையும், விரக்தியையும்
வழிப்படுத்தும், முன்னேற்றமான போராட்டம் ஏதும் இல்லை. மிகப் பிற்போக்கான இனவாத சியோனிச சக்திகள், தற்கொலை
குண்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் இஸ்ரேலியரின் எதிர்ப்பு மற்றும் அவநம்பிக்கையைப் பயன்படுத்தி, பாலஸ்தீனியர்களுக்கு
எதிரான என்றும் இருந்திராதளவு அதிகமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளைக் கோருகின்றனர். இனவெறி கொண்ட
தென்னாபிரிக்காவின் "வேலியடைத்த பந்துஸ்தான்" மற்றும் `இனப்படுகொலை` க்கு கெட்டநோக்கை மறைக்கும் நற்சொல்லான
"மக்களை இடம் மாற்றல்" இவற்றுள் உள்ளடங்கும்.
ஆய்வின் முடிவாக, ஹமாஸ் மற்றும் சியோனிஸ்ட் போன்ற அரசியல் இஸ்லாமிய குழுக்களின்
தோற்றம் என்பது தொழிலாள வர்க்கம், எவ்வளவு தீவிரமானதாயினும் முன்னேற்றமானதும் ஜனநாயக ரீதியானதுமான
வழியில், ஒழுங்கான முறையில் ஏகாதிபத்தியத்திற்கெதிரான எந்த சுதந்திரமான போராட்டத்தையும் வழிநடத்த திராணியற்ற,
பல்வேறு தேசிய முதலாளித்துவ இயக்கங்களுக்கு கீழ்ப்படிந்ததன் விலை எனலாம். ஏகாதிபத்திய ஒடுக்குமுறையிலிருந்து
பாலஸ்தீனிய மக்களுக்கான விடுதலையை, பாலஸ்தீனிய மக்கள் மட்டுமே நிறைவேற்றவியலாது. தேசியம் என்பது மதச்
சார்புடையதாக இருந்தாலும் சரி அல்லது மதச்சார்பற்றதாக இருந்தாலும் சரி, அது தொழிலாள வர்க்கத்தை அதன்
அனைத்துலக வர்க்க சகோதரர்களிடமிருந்து பிரித்து, முதலாளித்துவத்திற்கு கீழ்ப்படுத்த மட்டுமே சேவை செய்யும்.
இஸ்ரேலிய அரசியல் தட்டினர், தொழிலாள வர்க்கத்தை `யூதரின் தாயகம்', என்பதைப்
பாதுகாத்தலின் பின்னே தொழுவத்தில் தொடர்ந்து அடைத்திருக்கும் வரையிலும், ஹமாஸ் போன்ற பிற்போக்கு அமைப்புக்கள்,
சுதந்திரப் போராட்டத்தை இஸ்லாமிய நாடு எனும் முட்டுச் சந்துக்குள் அழைத்துச் செல்லும்வரை, இந்த மோதல்,
என்றுமிராத அளவு அதிகரித்த காட்டுமிராண்டித் தனத்தையும் துன்பியல் தோற்றத்தையும் கொண்டிருக்கும். உலகின்
மூலோபாய முக்கியத்துவம் உள்ள பகுதிகளில் ஒன்றில் உள்ள தொழிலாள வர்க்கத்தை பிளவு படுத்தவும் சுரண்டவும், கிட்டத்தட்ட
ஒரு நூற்றாண்டாக, ஏகாதிபத்திய வல்லரசுகளால் கபடத்தனமாக ஏற்படுத்தப்பட்ட பாரபட்சத்தில், இஸ்ரேலிய- பாலஸ்தீனிய
மோதலானது ஆழமாய் வேரூன்றியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் இன்று வெளிப்படும் துயரமானது, அதன் மையத்தில்,
தொழிலாள வர்க்கமானது அதன் ஆளும் வர்க்கத்தாலும் ஏகாதிபத்தியத்தாலும் சுரண்டப்படுவதற்கு ஒரு மாற்றை ஏற்பதிலிருந்து
அதனைத் தடுக்கும், தேசிய முன்னோக்கு, சித்தாந்தக் குழப்பம் மற்றும் அரசியல் திசைவிலகல் இவற்றின் கசப்பான
பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
இதற்கான பதில், முதலாளித்துவச் சுரண்டலுக்கும் ஏகாதிபத்திய ஒடுக்கு முறைக்கும் எதிராக,
தங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான மற்றும் மத்திய கிழக்கில் ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவுவதற்கான
இணைந்த போராட்டத்தில், அரபு மற்றும் இஸ்ரேலியத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தில்
உள்ளது. இத்தீர்வுக்கு சோசலிச சர்வதேசியத்தின் அடிப்படையில் புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டி எழுப்புவது
தேவைப்படுகின்றது.
நூற் குறிப்பகராதி
1. ஜியாட் அபு-அமிர், இஸ்லாமிய மதவாதம் - மேற்குக் கரை மற்றும்
காசாவில் முஸ்லீம் சகோதரத்துவம் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் - இன்டியானா பல்கலைக் கழக அச்சகம்,
1994.
2. ஜோய்ல் பெய்னின் & ஜோ ஸ்டார்ச், அரசியல் இஸ்லாம், ஐ.பி. டாரிஸ்
இலண்டன், 1997.
3. அல்பேர்ட் ஹெரானி, அராபிய மக்களின் வரலாறு, பேபர் & பேபர்,
லண்டன், 1991.
4. ஷாகுல் மிஷால் & அவ்ரஹாம் சேலா, பாலஸ்தீனிய ஹமாஸ்: நோக்கு, வன்முறை
மற்றும் உடனுழைத்தல், கொலம்பிய பல்கலைக் கழக அச்சகம், நியூயார்க், 2000.
5. சே`சுங் ஷிஃப் & இஹுத் யா அரி, இண்டிஃபதா, பாலஸ்தீனியக் கிளர்ச்சி -
இஸ்ரேலின் மூன்றாம் அணி, சைமன் & ஸ்கட்ஸர், நியூயார்க், 1981.
6. எம்.இ.யால், - முதல் உலகப் போருக்குப் பின்னர் அண்மைக் கிழக்கு
- 1995 வரையான வரலாறு - அடியன் வெஸ்லி லாங்மன் லிட்., 1991.
Top of page
|