4. 1923 ஜேர்மன் நிகழ்வுகளும்
அக்டோபர் படிப்பினைகளும்
1923-இன் ஜேர்மன் நிகழ்வுகள்,
கம்யூனிச அகிலத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய, லெனினுக்கு பிந்தைய காலகட்டத்தை
தொடக்கி வைக்கின்ற ஒரு முறிவுப் புள்ளியை அமைக்கின்றன. 1923 இன் ஆரம்பத்தில்
பிரெஞ்சுப் படைகளால் ரூர் ஆக்கிரமிக்கப்பட்டது மறுபடியும் போர்க் குழப்பங்களுக்குள்
ஐரோப்பாவின் பழைய நிலைக்கு திரும்புதலை குறித்தது. இந்த நோயின் இரண்டாவது
தாக்குதல் முதலாவதுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு பலவீனமானது தான் என்றாலும்,
தீவிரமான புரட்சிகர விளைவுகள் என்பது எப்படியாயிருந்தாலும் மேலோட்டமாக
பார்க்கையில் எதிர்பார்ப்பதற்குரியதாக இருக்கவில்லை, ஏனென்றால் இது
ஜேர்மனியின் ஏற்கனவே முழுமையாக செயலிழந்த உயிரியைத் தான் கைப்பற்றியிருந்தது.
கம்யூனிச அகிலத்தின் தலைவர்கள் சரியான நேரத்தில் இதைக் கருத்தில் எடுத்துக்
கொள்ளவில்லை. ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியானது, திடீர்ப்புரட்சிவாத ஆபத்தான
பாதையில் இருந்து உறுதியாக வெளியே இழுத்திருந்த மூன்றாவது அகல்பேரவையின்
முழக்கத்தின் ஒரு தரப்பான புரிதலையே இன்னமும் தொடர்ந்து பின்பற்றிக்
கொண்டிருந்தது. நாங்கள் ஏற்கனவே மேலே குறிப்பிட்டிருக்கிறோம், திடீர்
மாற்றங்களுக்கான நமது சகாப்தத்தில் ஒரு புரட்சிகரத் தலைமைக்கான பெரும்
சவாலானது, திடீர் அவசரங்களை சரியாக உணர்ந்து தலைமையை திருப்பும் வண்ணம்,
சரியான தருணத்தில் அரசியல் சூழலின் நாடி பிடித்துப் பார்ப்பதில் தான்
உள்ளது. ஒரு புரட்சிகரத் தலைமையின் இது போன்ற குணங்கள் வெறுமனே கம்யூனிச
அகிலத்தின் சமீபத்திய சுற்றறிக்கை கடிதத்திற்கு விசுவாசத்தை உறுதியெடுத்துக்
கொள்வதால் மட்டும் வருவதில்லை. தேவையான தத்துவார்த்த முன்னவசியங்கள் இருக்கும்
பட்சத்தில், தாங்களே பெற்ற அனுபவம் மற்றும் உண்மையான சுய-விமர்சனம் இவற்றின்
மூலமே அவை பெறப்பட முடியும். 1921 மார்ச் தினங்களின் தந்திரங்களில் இருந்து
பத்திரிகைகள், கூட்டங்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் பாராளுமன்றத்தில்
ஒரு அமைப்பு ரீதியான புரட்சிகர நடவடிக்கைக்கான கூர்மையான திருப்பத்தை
சாதிப்பது என்பது எளிதாக இருக்கவில்லை. இந்த திருப்பத்திலான நெருக்கடி
கொஞ்சம் கொஞ்சமாய் மங்கத் தொடங்கிய பின்னர், நேர் எதிர் குணாதிசயத்துடனான
ஒரு புதிய ஒருபக்கமான பிறழ்வு வளர்ச்சிக்கான அபாயம் எழுந்தது. மக்களுக்கான
அன்றாட போராட்டங்கள் எல்லா கவனத்தையும் ஈர்த்துக் கொள்கிறது, தனது
சொந்த தந்திர நடைமுறையொழுங்கினை உருவாக்குகிறது, மற்றும் புறநிலைமைகளில்
ஏற்படும் மாற்றங்களில் இருந்து பாயும் மூலோபாய பணிகளில் இருந்து கவனத்தைத்
திசைதிருப்பி விடுகிறது.
1923 கோடையில், ஜேர்மனியின் உள் நிலவரமானது, குறிப்பாக செயலற்ற எதிர்ப்பு
தந்திரோபாயத்தின் வீழ்ச்சியுடன் சம்பந்தப்பட்ட விவகாரத்தில், ஒரு அழிவுகரமான
குணாதிசயத்தை கைக்கொண்டது. ஜேர்மன் பூர்சுவாக்கள் தங்களை இந்த "நம்பிக்கையிழந்த"
சூழலில் இருந்து வெளிக்கொணர வேண்டுமென்றால், கம்யூனிஸ்ட் கட்சியானது சரியான
சமயத்தில் பூர்சுவாக்களின் நிலை "நம்பிக்கையிழந்த" ஒன்றாக இருக்கிறது
என்பதை புரிந்து கொள்வதில் தோல்வியுற்றாலும், மற்றும் கட்சி தேவையான அனைத்து
புரட்சிகர முடிவுகளை பெறத் தவறினாலும், மட்டுமே சாத்தியம் என்பது
தெளிவாகப் புரிந்து விட்டது. இருந்தாலும், துல்லியமாக, தனது கைகளில்
சாவியை வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி தான் பூர்சுவாக்களுக்கு அந்த
சாவி மூலமே கதவினைத் திறந்து விட்டுவிட்டது.
ஏன் ஜேர்மன் புரட்சி வெற்றிக்கு இட்டுச் செல்லவில்லை? அதற்கான காரணங்கள்
தந்திரோபாயங்களில் தேடப்பட வேண்டியவையே அன்றி, அதன் நிலவும் நிலைமைகளில்
அல்ல. இங்கே தவற விடப்பட்ட புரட்சிகர சூழலுக்கான ஒரு அற்புதமான உதாரணத்தை
நாம் காண்கிறோம். ஜேர்மனியின் பாட்டாளி வர்க்கம் சமீப வருடங்களில் உட்சென்ற
அனைத்துக்கும் பின்னர், இந்த முறை இந்தக் கேள்வி முடிவான முறையில்
தீர்வு காணப்பட்டு விடும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இந்த போராட்டத்திற்கு
தயார் நிலையில் இருப்பதோடு வெற்றியை சாதிக்கும் திறன் பெற்றதாகவும் இருக்கிறது,
என்ற உறுதியை பெறச் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அது ஒரு தீர்மானமான
போராட்டத்திற்கு இட்டுச் செல்லப்பட்டிருக்க முடியும். ஆனால் கம்யூனிஸ்ட்
கட்சியானது திருப்பத்தை மிகவும் தீர்மானமின்றியும் வெகு நீண்ட தாமதத்திற்கு
பின்னரும் செயல்படுத்தியது. வலதுசாரிகள் மட்டுமல்லாது இடதுசாரிகளும்,
இருவரும் ஒருவருக்கொருவர் காரசாரமாக மோதிக் கொண்டிருந்த நிலையிலும்
கூட, செப்டம்பர்-அக்டோபர் 1923 வரையான புரட்சிகர அபிவிருத்தியின் நிகழ்ச்சிப்போக்குகள்
தவிர்க்கவியலாததாகவே பார்த்தனர்.
ஒரு புரட்சியாளர் அல்ல, பகட்டு நூலறிவாளர் மட்டுமே இப்போது, நிகழ்வுக்கு
பின்னர், ஒரு சரியான கொள்கை இருந்திருந்தால் அதிகாரத்தைக் கைப்பற்றுவது
எந்த அளவு "உறுதிப்படுத்தப்பட்டதாக" இருந்திருக்கும், என்று விசாரணை
செய்து கொண்டிருப்பார். இங்கே இந்த விஷயத்தை பற்றியதான பிராவ்தாவின் ஒரு
குறிப்பிடத்தக்க சான்றிதழை மேற்கோள் காட்டுவதே போதுமாயிருக்கும் என்று
கருதுகிறோம், இந்த சான்றிதழ் முற்றிலும் தற்செயலானதும் தனித்துவமானதும்
ஆகும் ஏனென்றால் இது இந்த உறுப்பின் அனைத்து ஏனைய பிரகடனங்களுக்கும் முரண்பட்டதாய்
இருக்கிறது:
"மே 1923ல், நடுத்தர வர்க்கமும் மற்றும் குட்டி முதலாளித்துவமும் தேசியவாதிகள்
பக்கம் சென்ற பின்னர், குறியளவு ஒப்பீட்டளவில் ஸ்திரப்பட்டிருந்த தருணத்தில்,
பூர்சுவாக்கள் ஒரு குறிப்பிட்ட அளவு உறுதிப்படுத்தலை சாதித்து
விட்டிருந்தால், கட்சியில் ஒரு ஆழமான நெருக்கடிக்கு பின்னர், மற்றும்
பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பலமான தோல்விக்கு பின்னர், இத்தனைக்கு பின்னரும்
கம்யூனிஸ்டுகள் 3,700,000 வாக்குகளை திரட்ட முடிந்தது என்றால், அக்டோபர்
1923ல், முன்கண்டிராத பொருளாதார நெருக்கடியின் பொழுது, நடுத்தர வர்க்கம்
ஒட்டுமொத்தமாக சிதறுண்டிருந்த பொழுது, பூர்சுவாக்களுக்கு உள்ளேயே கூட
இருந்த வலிமையான மற்றும் கூர்மையான முரண்பாடுகளில் இருந்தும்
தொழிற்துறை மையங்களில் பாட்டாளி வர்க்க மக்களின் முன்னெப்போதும் இருந்திராத
வகையிலான போர்க்குண மனப்போக்கு இவற்றின் விளைவாக சமூக ஜனநாயக கீழ்மட்ட
அணிகளில் இருந்த அச்சமூட்டும் குழப்பத்தின்பொழுது, கம்யூனிஸ்ட் கட்சி
மக்கள் தொகையின் பெரும்பான்மையை தன்பக்கம் கொண்டிருந்தது; அது
போராடியிருக்க முடியும், போராடியிருக்க வேண்டும், அது வெற்றிக்கான அனைத்து
வாய்ப்புகளையும் கொண்டிருந்தது." [1]
ஐந்தாம் உலக அகல்பேரவையில் ஜேர்மன் பிரதிநிதி (பெயர் தெரியவில்லை) கூறியது
இது தான்:
"ஜேர்மனியின் வர்க்க உணர்வு கொண்ட ஒரு தொழிலாளர் கூட, கட்சியானது
போரில் இறங்கியிருக்க வேண்டும், அதனை புறக்கணித்திருக்கக் கூடாது என்பதை
அறியாமல் இல்லை.
"CPG இன் தலைவர்கள் கட்சியின் சுயாதீனமான பங்கு அனைத்தையும் குறித்து
மறந்து விட்டனர்; அக்டோபர் தோல்விக்கான பிரதான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்."
[2]
1923ல், குறிப்பாக ஆண்டின் பிந்தைய பகுதியில், ஜேர்மன் கட்சியில் மற்றும்
கம்யூனிச அகிலத்தின் உயர் தலைமையில் என்ன நடந்தது என்பது குறித்த விவாதங்களில்
ஏராளமானவை ஏற்கனவே -கூறப்பட்டுவிட்டன, கூறப்பட்டவற்றுள் பல இதுவரை உண்மையில்
நடந்ததற்கு பொருந்தும் வகையில் இல்லை என்றாலும் கூட. கூஸினென்
குறிப்பாக இந்த பிரச்சினைகளில் மிகுந்த குழப்பத்தை கொண்டு வந்துள்ளார்;
1924 முதல் 1926 வரை சினோவியேவ் தலைமையில் மட்டுமே தீர்வு உள்ளது என்பதை
நிரூபிப்பதை வேலையாக கொண்டிருந்தாரே அதே கூஸினென் தான், 1926ல் ஒரு
குறிப்பிட்ட தேதியில் இருந்து சினோவியேவின் தலைமை அழிவேற்படுத்துவதாய்
இருக்கிறது என்று நிரூபிக்க இவர் தன்னையே ஆட்படுத்திக் கொண்டார்.
கூஸினெனே கூட 1918ம் ஆண்டில் பின்லாந்து பாட்டாளி வர்க்கத்தின் புரட்சியை
பேரழிவிற்கு இட்டுச் செல்வதற்கு தன்வசம் இருந்த மட்டுப்படுத்தப்பட்ட
வளங்களைக் கொண்டு ஒவ்வொன்றையும் செய்தார் என்கிற உண்மையாலோ என்னவோ இது
போன்ற பொறுப்பான தீர்ப்புகளை வழங்கும் தேவையான அதிகாரம் அநேகமாக அவரிடம்
கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வுக்கு பின்னர், பிரான்ட்லரின் வரிசையிலான ஒற்றுமையை எனக்கு
காரணம் காட்டிடுவதற்கான பல முயற்சிகள் நடைபெற்றுள்ளன. சோவியத் குடியரசில்
இந்த முயற்சிகள் வேறு முகங்களில் நடைபெற்றன ஏனென்றால் காட்சியில் இருந்த
பலருக்கும் உண்மையான நிலவரம் தெரியும். ஜேர்மனியில் இது வெளிப்படையாக
மேற்கொள்ளப்பட்டது ஏனென்றால் ஒருவருக்கும் எதுவும் தெரியாமல் இருந்தது.
சற்று தற்செயலாகவே, ஜேர்மன் புரட்சி மீதான கேள்வியின் மீது எமது மத்திய
குழுவில் அந்த சமயம் நிகழ்ந்த தத்துவார்த்த போராட்டம் குறித்த ஒரு அச்சிடப்பட்ட
துண்டு என் கைவசம் உள்ளதை நான் கண்டறிந்துள்ளேன். ஜனவரி 1928
மாநாட்டின் ஆவணங்களில், ஜேர்மன் மத்திய குழு மீது விரோதமான நம்பிக்கையற்ற
மனப்போக்கு கொண்டிருந்ததாக, அதன் சரணாகதிக்கு முந்தைய காலகட்டத்தில்,
அரசியல் பிரிவால் நான் நேரடியாகக் குற்றம் சாட்டப்படுகிறேன். அங்கே கூறப்படுவதை
நாம் கொஞ்சம் காணலாம்:
"...தோழர் ட்ரொட்ஸ்கி, மத்திய குழுவின் அமர்வை [செப்டம்பர் 1923, நிறை
பேரவை] விட்டு வெளியேறும் முன்னதாக மேற்கொண்ட ஒரு உரை மத்திய குழுவின்
அனைத்து உறுப்பினர்களையும் ஆழமாகப் பாதித்துள்ளது, இதில் அவர் ஜேர்மன்
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பயனற்றது என்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின்
மத்திய தலைமை தலைவிதியின் மேல் நம்பிக்கை கொண்டதாகவும், மந்தமானதாகவும்
ஆகி விட்டது என்றும், இன்னும் பல குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார்.
ஜேர்மன் புரட்சியானது தோல்வியை நோக்கித் தான் செல்லும் என்றும் தோழர்
ட்ரொட்ஸ்கி அறிவித்துள்ளார். இருந்த அனைவருக்கும் இந்த உரையானது மனவருத்தமளிக்கும்
விளைவையே அளித்துள்ளது. ஆனால் தோழர்களில் பெரும்பான்மையானவர்கள்
கொண்டிருந்த கருத்தானது, இந்த கண்டன உரை மத்திய குழுவின் நிறை பேரவையில்
ஒரு நிகழ்வின் [?!] காரணமாக எழுந்ததே அன்றி, ஜேர்மன் புரட்சிக்கு எந்த
விதத்திலும் தொடர்புடையதாக இருக்கவில்லை, மற்றும் இந்த உரையானது
மெய்யான நிலவரத்துடன் பொருத்தமாக இருக்கவில்லை என்பதாகும்." [3]
மத்திய குழுவின் உறுப்பினர்கள் எனது எச்சரிக்கைக்கான விளக்கத்தை எவ்வாறு
எதிர்பார்த்திருக்க முடியும் என்பது கூட பிரச்சினையில்லை, இது முதல் எச்சரிக்கையுமல்ல,
இது ஜேர்மன் புரட்சியின் தலையெழுத்தின் மீதான கவலை காரணமாக மட்டுமே உரைக்கப்பட்டதாகும்.
துரதிர்ஷ்டவசமாக, நிகழ்வுகள் எனது நிலைப்பாட்டை முழுமையாக உறுதிப்படுத்தின;
ஒரு பக்கத்தில் மட்டுமே ஏனென்றால் முன்னணிக் கட்சியின் மத்திய குழுவின்
பெரும்பான்மையோ, அவர்களே ஒப்புக் கொண்டதைப் போல், எனது எச்சரிக்கை
முழுக்கவும் "மெய்யான நிலவரத்துடன் பொருந்துவதாய் இருந்தது" என்பதை சரியான
நேரத்தில் புரிந்து கொள்ளவில்லை. உண்மையில், நான் பிரான்ட்லரின் மத்திய
குழுவை வேறொன்றின் மூலமாக அவசரமாக மாற்ற முன்மொழியவில்லை (தீர்மானமான
நிகழ்வுகள் சமயத்தில், இத்தகையதொரு மாற்றம் முழு துணிச்சல்வாதமாக இருந்திருக்கும்),
ஆனால் ஜேர்மன் மத்திய கமிட்டிக்கு ஆதரவாக ஆயுதமேந்திய எழுச்சியைத் தயார்படுத்துவது
மற்றும் தேவையான சக்திகளைத் திரட்டுவது குறித்த கேள்வியில் இன்னும்
கூடுதலான அளவில் மிகச் சரியான நேரத்திலான தீர்மானமானதொரு நிலைப்பாடு எடுக்கப்பட
வேண்டும் என்று 1923 கோடையில் இருந்தே நான் வலியுறுத்தினேன். பிரான்ட்லரிச
மத்திய குழுவின் தவறுகள் கம்யூனிச அகிலத்தின் தலைமை அடுக்கின் பொதுவான
தவறுகளின் பிரதிபலிப்பாகவே இருந்தது, இவர்களின் நிலைப்பாட்டுடன் என்னை
தொடர்புபடுத்துவதற்கான பிந்தைய நாளின் முயற்சிகளின் முக்கிய காரணம்,
ஜேர்மன் கட்சியின் சரணாகதிக்கு பின்னர், பிரான்ட்லரை பலியாடாக்குவதற்கு
நான் எதிர்ப்பு தெரிவித்தது தான், ஆயினும், மிகச் சரியாக சொல்வதென்றால்,
மத்திய குழுவின் பெரும்பான்மையோரை விட மிகவும் தீர்க்கமாக ஜேர்மன்
தோல்வியை நான் கணித்த காரணத்தால் தான். இந்த விவகாரத்திலும் மற்றவற்றை
போலவே, முரட்டுத்தனமான தண்டனைகளுக்கும் இன்னும் கட்சியிலிருந்து
வெளியேற்றுவதற்கும் உட்படுத்தி தேசியத் தலைமைகளை அவ்வப்போது அகற்றுவதன்
மூலம் மத்திய தலைமையின் தவறிழைக்க முடியாத தன்மையை பராமரிக்க முற்படும்
தகுதியற்ற முறைக்கு எதிராக நான் போரிட்டேன்.
ஜேர்மன் மத்திய குழுவின் சரணாகதியின் பாதிப்பில் என்னால் எழுதப்பட்ட,
அக்டோபர் படிப்பினைகள் என்பதில், தற்போதைய சகாப்தத்தின் நிலைமைகளின்
கீழ், ஒரு புரட்சிகர சூழலானது சில நாட்களின் போக்கில் பல ஆண்டுகளுக்கும்
தொலைக்கப்பட முடியும் என்ற கருத்தை அபிவிருத்தி செய்தேன். நம்புவதற்கு
கடினமாக இருக்கலாம், ஆனால் இந்த கருத்தானது "தண்டனைக்குரிய பட்டியல்"
மற்றும் "தனிநபர்வாதம்" என்று முத்திரையிடப்பட்டது. அக்டோபர் படிப்பினைகளுக்கு
எதிராக எழுதப்பட்ட எண்ணிலடங்காத கட்டுரைகள், அக்டோபர் புரட்சியின் அனுபவங்கள்
எவ்வாறு முழுமையாக மறக்கப்பட்டு விட்டன மற்றும் அதன் படிப்பினைகள் எவ்வளவு
குறைவாக நனவில் ஊடுருவியுள்ளன என்பதையும் வெளிப்படுத்துகின்றன. தலைவர்களின்
தவறுகளுக்கான பொறுப்பினை "மக்கள்" மீது மாற்றுவதற்கு அல்லது பொதுவாக தலைமையின்
முக்கியத்துவத்தை குறைத்து, அதன் மூலம் அதன் குற்ற உணர்ச்சியை குறைப்பதற்குமான
அச்சு அசல் மென்ஷிவிச நழுவலே இது ஆகும். இது வர்க்கத்தின் மேற்கட்டுமானமான
கட்சி, கட்சியின் மேற்கட்டுமானமாக மத்திய தலைமையின் வடிவில் என பொதுவாக
"மேற்கட்டுமானம்" குறித்த இயங்கியல் ரீதியான புரிதலை எட்ட முடியாத
முழுமையான திறனின்மையால் எழுவதாகும். மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சோ வரலாற்று
வளர்ச்சியை ஒரு அங்குலம் கூட முன் நகர்த்த இயலாத சகாப்தங்களும் உள்ளன;
அதனை விட மிகக் குறைவான தகுதிகளே பெற்ற நபர்கள், உச்சியில் நின்று
கொண்டு, அகிலப் புரட்சியின் வளர்ச்சியை பல வருடங்களுக்கு தடுக்க இயலும்
பிற சகாப்தங்களும் இருக்கின்றன.
இந்த விஷயத்தில் அக்டோபர் படிப்பினைகளை ஏதோ நான் மறுத்து விட்டது
போன்று பிரதிநிதித்துவப்படுத்த சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்
முழுக்கவும் அபத்தமானவை. உறுதியாகச் சொல்வதென்றால், நான் இரண்டாம்
முக்கியத்துவம் பெற்றதான ஒரே "தவறை" மட்டுமே "ஒப்புக்
கொண்டிருக்கிறேன்". நான் எனது அக்டோபர் படிப்பினைகளை எழுதிய போது,
அதாவது 1924 கோடையில், 1923 இலையுதிர் காலத்தில் சினோவியேவ்
கொண்டிருந்ததை விடவும் கூடுதலான ஒரு இடது சாரி நிலையை (அதாவது
இடது-மையவாத) ஸ்ராலின் கொண்டிருப்பதாக எனக்கு பட்டது. பெரும்பான்மை
கன்னை கருவியின் இரகசிய மையத்தின் பங்கை ஆற்றி வந்த குழுவினரின் உள்
வாழ்க்கையை குறித்து நான் முழுவதுமாக தெரிந்து வைத்திருக்கவில்லை. இந்த
கோஷ்டி குழுக்களின் பிளவுக்கு பின்னர் வெளியிடப்பட்ட ஆவணங்கள்,
குறிப்பாக சினோவியேவ் மற்றும் புக்காரினுக்கு ஸ்ராலினது சுத்தமான
பிரான்ட்லரிச கடிதம், இந்த தனிநபர் குழுக்கள் பற்றிய எனது கணிப்பின்
துல்லியமின்மையை எனக்குக் காட்டியது, இருப்பினும் இவற்றிற்கும்
எழுப்பப்பட்ட பிரச்சினைகளின் சாரத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
ஆனால் இந்தப் பிழையே கூட மனிதர்களுடன் ஒப்பிடும்போது பெரிய ஒன்று
இல்லை. மையவாதம் என்பது, உண்மை தான், இடதுசாரிகளுக்கு மிகப் பெரும்
ஏற்ற இறக்கங்களை உருவாக்கும் திறன் கொண்டது தான், ஆனால் சினோவியேவின்
"பரிணாமம்" மறுபடியும் ஒருமுறை விளக்கிக் காட்டியது போல, இது குறைந்த
அமைப்புரீதியில் ஒரு புரட்சிகர நிலைப்பாட்டை வழிநடத்திச் செல்வதற்கு
முழுக்க தகுதியற்றது.
அக்டோபர் படிப்பினைகளில் என்னால் அபிவிருத்தி செய்யப்பட்ட கருத்துக்கள்
இன்றும் தங்களது முழு சக்தியைக் கொண்டிருக்கின்றன. இது தவிர, 1928
முதல் இவை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டும் வந்திருக்கின்றன.
ஒரு பாட்டாளி வர்க்க புரட்சியில் உள்ள கணக்கிலடங்கா பிரச்சினைகளில்,
ஒரு குறிப்பிட்ட, உறுதியான, மற்றும் தனித்துவமான பிரச்சினை உள்ளது.
சம்பவங்களின் கூர்மையான-திருப்பத்தின் போது புரட்சிகர கட்சியின் தலைமை
மேற்கொள்ளும் நிலைப்பாடு மற்றும் பணிகளில் இருந்து இது எழுகிறது.
மிகவும் புரட்சிகரமான கட்சிகளும் கூட பின்தங்கும் நிலைக்கு செல்வது,
மற்றும் புதிய பணிகள் மற்றும் அவசர நெருக்கடி நிலைகளுக்கு நேற்றைய
போராட்டங்களுக்கான முழக்கங்களையும் நடவடிக்கைகளையும் கொண்டு
எதிர்கொள்வது ஆகிய அபாயங்களை எதிர்நோக்குகின்றன. மற்றும் பொதுவாக,
பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதமேந்திய எழுச்சிக்கான தேவையை உருவாக்குவதை
விடவும் நிகழ்வுகளின் கூர்மையான திருப்பம் இருக்க முடியாது. கட்சி
தலைமை மற்றும் கட்சியின் கொள்கையானது ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது
வர்க்கத்தின் நடத்தை மற்றும் சூழலின் அவசர நெருக்கடி நிலைக்கு
பொருந்தாமல் போகும் அபாயம் இங்கு தான் எழுகிறது. அரசியல் வாழ்வின்
ஒப்பீட்டளவில் நீண்ட நெடியதொரு பயணத்தில், இத்தகைய ஏற்ற இறக்கங்கள்,
இழப்புக்களுடன் கூட, ஆனால் துயரம் ஏதும் இல்லாமலேயே, தீர்வு
காணப்படுகின்றன. ஆனால் கூர்மையான புரட்சிகர நெருக்கடி காலங்களில்,
நெருப்பின் கீழ் நிற்பது போல், முரண்பாட்டை நீக்குவதற்கும் முன்னணியை
சீர்செய்வதற்கும் காலம் தான் பற்றாக்குறையாய் இருக்கிறது. ஒரு
புரட்சிகர நெருக்கடியின் அதிக பட்ச கூர்மையுறல் காலகட்டங்களானது
அவற்றின் இயல்பின்படியே தற்காலிகமானதே ஆகும். ஒரு புரட்சிகர
தலைமைக்கும் (பூர்சுவாக்களின் மூர்க்கமான தாக்குதலுக்கு எதிர்முகமாக
தயக்கம், ஊசலாட்டம், காலம் கடத்துதல்) புறநிலைப் பணிகளுக்கும் இடையிலான
முரண்பாடான தன்மையானது, சில வார காலத்தில் அல்லது சில நாட்களின்
காலத்திலேயே ஒரு துயரத்திற்கோ அல்லது தயார்படுத்துவதற்கு பல வருடங்கள்
எடுத்துக் கொண்ட ஒன்றினை இழப்பதற்கோ இட்டுச் செல்லலாம்.
உண்மை தான், தலைமைக்கும் கட்சிக்கும் இடையிலான அல்லது கட்சிக்கும்
வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடானது எதிரெதிர் குணாதிசயம்
கொண்டதாகவும் இருக்கலாம், அதாவது, சில சமயங்களில் தலைமையானது
புரட்சியின் வளர்ச்சியை விட வெகு வேகமாக ஓடி ஐந்தாம் மாதக் குழந்தையை
ஒன்பதாம் மாதக் குழந்தையையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறது. இது
போன்றதொரு முரண்பாட்டின் சரியானதொரு உதாரணம் மார்ச் 1921ல் ஜேர்மனியில்
காணப்பட நேர்ந்தது. அங்கு தான் நாம் "இடதுசாரி இளம்பருவ நோயின்"
கடுமையான வெளித்தோற்றத்தையும் மற்றும் அதன் தொடர்ச்சியாக - திடீர்ப்
புரட்சியையும் (புரட்சிகர சாகசவாதம்) காண்கிறோம். இந்த அபாயமானது
வருங்காலத்திற்கும் உண்மையில் இருக்கவே செய்கிறது. அதனால் தான்
கம்யூனிச அகிலத்தின் மூன்றாவது அகல்பேரவையின் போதனைகள் அவற்றின்
முழுமையான சக்தியுடன் திகழ்கின்றன. ஆனால் 1923ம் ஆண்டின் ஜேர்மன்
அனுபவமானது கடுமையான யதார்த்தத்தில் இருக்கும் நேர்எதிர் அபாயத்தை
நமக்கு முன்னால் கொண்டு வந்தது: சூழல் கனிந்ததாக இருக்கிறது, ஆனால்
தலைமையோ பின்தங்கி இருக்கிறது. தலைமையானது தன்னை சூழலுக்கு
தயார்படுத்திக் கொள்வதில் வெற்றி காணும் சமயத்தில், சூழல் ஏற்கனவே மாறி
விட்டிருக்கிறது; மக்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் மற்றும்
சக்திகளின் உறவு திடீரென மோசமாகிக் கொண்டிருக்கிறது.
1923 ஜேர்மன் தோல்வியில், அங்கு நிறைய தேசிய தனித்தன்மைகள் இருந்தன
ஆனால் அதோடு அங்கு ஆழமாக வகைமாதிரிக்குப் பொருத்தமான அம்சங்களும்
வந்து, ஒரு பொதுவான அபாயத்தை சுட்டிக்காட்டுவதாக இருந்தன. இந்த
அபாயத்தை ஆயுதமேந்திய எழுச்சிக்கான இடைமருவலின் தறுவாயில் புரட்சிகர
தலைமைக்கான நெருக்கடி என்று குறிப்பிடலாம். பாட்டாளி வர்க்க கட்சியின்
கீழணிகள் கூட அவர்களின் இயல்பினாலேயே பூர்சுவாக்களின் பொதுக் கருத்து
நெருக்கடிக்கு மிகக் குறைவாகவே அஞ்சக் கூடியவர்கள். ஆனால் கட்சியின்
தலைமையில் மற்றும் மத்திய நிலையில் உள்ளவர்கள் பெரிய அளவிலோ அல்லது
சிறிய அளவிலோ பூர்சுவாக்களின் பொருள்ரீதியான மற்றும் தத்துவார்த்த
ரீதியான மிரட்டலுக்கு முக்கியமான தருணத்தில் தப்பாமல் பலியாகி
விடுவார்கள். இந்த அபாயத்தை நீக்குவது என்பது அதனுடன் வெற்றிகரமாகப்
போராடாமல் இருப்பதல்ல. உறுதியாகச் சொல்வதென்றால், எல்லா சமயங்களிலும்
இதற்கு எதிரானதொரு சமய சஞ்சீவி மருந்து எதுவும் இல்லை. ஆனால் ஒரு
ஆபத்துடன் போரிடுவதற்கான முதல் அவசியமான படி அதன் மூலத்தையும்
இயல்பையும் புரிந்து கொள்வதாகும். ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சியிலும்
"அக்டோபருக்கு-முந்தைய" காலகட்டத்தில் வலதுசாரி குழு ஒன்று தவிர்க்க
முடியாத வண்ணம் தோன்றி வளர்ந்து வந்தது என்பது ஒரு பக்கத்தில் இந்த
"பாய்ச்சலில்" உள்ளார்ந்திருக்கும் கடுமையான புறநிலை கஷ்டங்கள் மற்றும்
அபாயங்களையும், மறுபக்கத்தில் பூர்சுவா பொதுக் கருத்தின் வலிமையான
அழுத்தத்தையும் பிரதிபலிக்கிறது .
இங்கு தான் சாரமும், வலதுசாரி குழுவாக்கங்களின் இறக்குமதியும்
இருக்கிறது. துல்லியமாக இந்தக் காரணத்தால் தான் கம்யூனிஸ்ட் கட்சிகளில்
தயக்கங்களும் ஊசலாட்டங்களும் அவை மிக அபாயமானதொரு சரியான தருணத்தில்
தவிர்க்க இயலா வண்ணம் எழுகின்றன. எமது கட்சியில், 1917ல் கட்சியின்
உயர் பதவியிலுள்ளோர் சிறுபான்மை எண்ணிக்கையினர் மட்டுமே ஊசலாட்டத்தால்
பீடிக்கப்பட்டார்கள், லெனினின் கடுமையான ஆற்றலால் அவர்கள் கடந்துவர
முடிந்தது, அதற்கு நன்றி சொல்ல வேண்டும். ஜேர்மனியில், தலைமையே
ஒட்டுமொத்தமாக ஊஞ்சலாடியது, இந்த தயக்கம் கட்சிக்கு பரவி அதன் வழியே
வர்க்கத்திற்கும் பரவியது. புரட்சிகர நிலைமை அதன் மூலம் தவறி விட்டது.
தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும் அதிகாரத்தை கைப்பற்ற சண்டையிட்டுக்
கொண்டிருந்த சீனாவில், மத்திய தலைமை இந்த போராட்டத்திற்கு எதிராக
செயலாற்றியது. இவை அனைத்தும் மிகவும் உறுதியான வரலாற்று தருணங்களில்
நடைபெற்ற, தலைமையின் கடைசி நெருக்கடிகள் இல்லை என்பது உண்மை தான். இந்த
தவிர்க்க இயலாத நெருக்கடிகளை குறைந்தபட்சமாக குறைப்பது ஒவ்வொரு
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஒட்டு மொத்த கம்யூனிச அகிலத்தின் அதி
முக்கிய பணிகளில் ஒன்றாகும். 1923ல் ஜேர்மன் கட்சியில் நேர்ந்த
அனுபவத்திற்கு மாறானதான 1917 அக்டோபர் அனுபவங்களையும் அதன்பின் நமது
கட்சிக்குள்ளான வலதுசாரி எதிர்ப்பின் அரசியல் உள்ளடக்கத்தையும்
முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இதனை சாதிக்க முடியாது.
துல்லியமாக இங்கு தான் அக்டோபர் படிப்பினைகளின் சாரம் அடங்கியுள்ளது.
|