line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 2: ஏகாதிபத்திய சகாப்தத்தில் மூலோபாயமும் தந்திரோபாயங்களும

 

Print part 2 on single page

10. உள்நாட்டுப் போரின் மூலோபாயம்

ஆயுதமேந்திய எழுச்சி பற்றிய பிரச்சினை தொடர்பாக, வரைவு வேலைத்திட்டம் மேலெழுந்தவாரியாக கூறுவதாவது:

"இந்தப் போராட்டம் போர்க் கலையின் விதிகளுக்கு உட்பட்டது. இது ஒரு இராணுவத் திட்டம், போராடும் நடவடிக்கைகளில் தாக்கும் தன்மை, மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் பங்கிலிருந்து வரம்பற்ற தியாகம் மற்றும் வீரம் ஆகியவற்றை முன்நிபந்தனையாக கருதுகின்றது."

இங்கு வரைவு வேலைத்திட்டம் ஒரு கடுமையான வகையில் ஒரு முறை மார்க்சினால் கூறப்பட்ட சில சாதாரண கருத்துக்களை திரும்பக்கூறுவதற்கு மேல் செல்லவில்லை. இதற்கிடையில் நாம் ஒருபுறத்தில் அக்டோபர் புரட்சியின் அனுபவங்களை கொண்டோம்; மறு புறத்தில் ஹங்கேரிய, பவேரியப் புரட்சிகளின் தோல்வி அனுபவங்களைக் கண்டோம்; அதேபோல் 1920ல் இத்தாலிய போராட்டம், 1923 செப்டம்பர் மாதம் பல்கேரியாவில் எழுச்சி, 1923ல் ஜேர்மனிய இயக்கம், 1924ல் எஸ்தோனியா, 1926ல் இங்கிலாந்து பொது வேலைநிறுத்தம், 1927ல் வியன்னாவின் பாட்டாளி வர்க்க எழுச்சி மற்றும் 1925-27ல் இரண்டாம் சீனப் புரட்சி ஆகியவற்றின் அனுபவங்களையும் கொண்டுள்ளோம். அகிலத்தின் திட்டம் எல்லையில்லாத அளவில் ஆயுதமேந்திய எழுச்சிக்கு தேவையான சமூக அரசியல் முன்தேவைகள் பற்றி இன்னும் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் உள்ளடக்கியிருக்க வேண்டும்; மேலும் நமக்கு வெற்றியை உறுதிப்படுத்தக்கூடிய இராணுவ, மூலோபாய நிலைமைகள், வழிவகைகள் பற்றியும் கூறவேண்டும். புரட்சிகர மூலோபாயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள அத்தியாயம் கோர்னிலிசென் மற்றும் கில்ட் சோசலிஸ்ட்டுக்கள் (Orabe, Hobson, G.D.H.Cole ஆகியோர் அனைவரும் பெயரிட்டுக் குறிப்பிடப்பட்டுள்ளனர்) பற்றி எடுத்துரைப்பதாலேயே இந்த ஆவணம் எந்த அளவிற்கு மேம்போக்குத்தனமானதும் மற்றும் அதன் இலக்கியரீதியான தன்மையும் வெளிப்படுத்துகின்றது. இதில் ஏகாதிபத்திய சகாப்தத்தில் தொழிலாள வர்க்கத்திற்கான மூலோபாயத்தின் ஒரு பொது குணாம்சங்களை பற்றியோ அல்லது உயிர்வாழும் வரலாற்று சான்றுகளின் அடிப்படையில் அதிகாரத்திற்கான போராட்டத்தின் வழிவகைகள் பற்றி உறுதியாக எடுத்துக் கூறவும் இல்லை.

1924ம் ஆண்டு, ஜேர்மனியின் பெரும் துன்பகரமான அனுபவங்களுக்கு பின்னர், நாம் மீண்டும் வினாவை எழுப்புகிறோம்; அகிலத்தின் ஆயுதமேந்திய எழுச்சியின் மூலோபாயம், தந்திரோபாய முறைகள் பற்றியும் மற்றும் பொதுவாக உள்நாட்டுப் போர் பற்றி ஆராய நிகழ்ச்சிநிரலில் இடம்வழங்கப்படவேண்டும் என்றோம்.

"ஆயுதமேந்திய எழுச்சியின் கால அவகாசம் பற்றிய பிரச்சினை அமிலத்தை அளவிடும் காகிதத்திற்கு ஒப்பாக உள்ளது; இதை வைத்துத்தான் இன்று வரை புரட்சியின் அடிப்படை பணிகள் பற்றி கொண்டுள்ள செயலற்ற, அனைத்தும் விதியே என்ற அணுகுமுறையில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ளாத பல மேற்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட்டுக்களின் புரட்சிகர நனவு சோதிக்கப்பட முடியும் என்பதை வெளிப்படையாக கூறவேண்டும். இத்தகைய அணுகுமுறை ரோஸா லக்சம்பேர்க்கின் கருத்துக்களில் அதன் ஆழ்ந்த, பெரும் திறமை நிறைந்த வெளிப்பாட்டைக் கண்டது. உளவியல்ரீதியாக இது முற்றிலும் புரிந்து கொள்ளக்கூடியதேயாகும். அவருடைய வளரும் காலம் முக்கியமாக ஜேர்மனிய சமூக ஜனநாயகம் மற்றும் தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்திலேயே முக்கியமாக கழிந்தது. இந்த அமைப்பு, மக்களின் முயற்சியை நெரித்தது பற்றி அவர் சளைக்காமல் நிரூபித்தார்; அனைத்து சமூக ஜனநாயகவாத தடைகள், தடுப்புக்கள் அனைத்தையும் கீழிருந்து வரும் தன்னியல்பான இயக்கம் ஒன்று தகர்த்து எறிந்து தீர்வைக் காணவேண்டும் என்று அவர் கண்டார். ஒரு புரட்சிகர பொது வேலைநிறுத்தம் அனைத்து முதலாளித்துவ சமூகத்தின் கரைகளையும் உடைத்து எழும்பும் வெள்ளமாக வெளிப்பட வேண்டும் என்பது லக்சம்பேர்க்கிற்கு பாட்டாளி வர்க்க புரட்சியாக அர்த்தப்படுத்தியது. ஆனால் ஒரு பொது வேலைநிறுத்தம், மக்கள் வலிமையினால் சிறப்புப் பெற்றிருந்தாலும் கூட, அதிகாரம் பற்றிய பிரச்சினையை இன்னமும் முடிவுசெய்வதில்லை; அதை எழுப்பத்தான் செய்கிறது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பொது வேலைநிறுத்தத்தின் அடிப்படையில் ஆயுதமேந்திய எழுச்சியை அமைப்பது அவசியமாகும். உறுதியாக ரோசா லக்சம்பேர்க்கின் முழு வளர்ச்சியும் இத்திசையில்தான் சென்றது: தன்னுடைய கடைசி வார்த்தைகளை கூறுவதற்கு முன்பு அல்லது அதற்கு முந்தைய சொற்களைக் கூறுவதற்கு முன்பு அவர் அரங்கில் இருந்து மறைந்தார். ஆனால் மிகக் கடைசிக் காலம் வரையில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் புரட்சிகர தவிர்க்கப்படமுடியாது என்ற விதிபற்றிய வலுவான கருத்துக்கள்தான் இருந்து வந்தன. அதாவது புரட்சி வந்து கொண்டிருக்கிறது, புரட்சி எப்படியும் வரும், தன்னுடன் ஆயுதமேந்திய எழுச்சியை கொண்டுவந்து நமக்கு அதிகாரத்தை வழங்கும் மற்றும் கட்சி இதற்கிடையில், புரட்சிகர கிளர்ச்சியை நடத்தி முடிவுகளுக்கு காத்திருக்கும் என்பதாகும். இத்தகைய நிலையில், எழுச்சி தேதி பற்றிய வினாவை ஒளிவுமறைவின்றிக் கேட்பது என்பது விதியின்படி நடக்கும் என்ற அமைதிவாதத்தில் இருந்து கட்சியை தட்டியெழுப்பி, அடிப்படை புரட்சிகர பணியை நோக்கி, அதாவது எதிரிகளின் கரங்களில் இருந்து அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளுவதற்கு ஆயுதமேந்திய எழுச்சிக்கு நனவாக ஒழுங்கமைத்தலுக்கு திருப்புவதாகும். " [33]

"1871 பாரிஸ் கம்யூனுக்கு கணிசமான நேரம் மற்றும் தத்துவார்த்த உழைப்பைக் கொடுக்கிறோம்; ஆனால் ஜேர்மனிய தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை முற்றிலும் கவனியாமல் உள்ளோம் இது ஏற்கனவே உள்நாட்டுப் போரின் விலைமதிப்பற்ற அனுபவங்களை கொண்டுள்ளது; உதாரணமாக கடந்த செப்டம்பரில் நடைபெற்ற பல்கேரிய எழுச்சி பற்றி அதிகம் கவனம் கொள்ளவில்லை; இறுதியாக இன்னும் வியப்பானது அக்டோபர் அனுபவங்களையும் நாம் ஆவணக் காப்பகங்களுக்கு முழுமையாகத் தள்ளிவிட்டோம்....

"அக்டோபர் புரட்சியின் அனுபவங்கள், இதுகாறும் வெளிப்பட்டுள்ள ஒரே வெற்றிகரமான தொழிலாள வர்க்கப் புரட்சி மிகவும் கவனத்துடன் கற்கப்பட வேண்டும். அக்டோபரின் மூலோபாய, மற்றும் தந்திரோபாய நிகழ்வுகள் தொகுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு அலையாக எப்படி நிகழ்வுகள் வளர்ந்தன; அவை கட்சி, சோவியத்துக்கள், மத்திய குழு, இராணுவ அமைப்பு ஆகியவற்றில் பிரதிபலித்தன என்பது படிக்கப்பட வேண்டும். கட்சிக்குள் இருந்த ஊசலாட்ட நிலைமையின் பொருள் என்ன? பொது நிகழ்வு நடப்புக்களில் அவற்றின் விஷேட கனம் யாது? இராணுவ அமைப்பின் பங்கு எப்படி இருந்தது? அத்தகைய படைப்பு விலைமதிப்பற்ற முக்கியத்துவத்தை கொண்டிருக்கும், இதை இன்னும் தள்ளிப்போடுவது என்பது உண்மையில் குற்றம் சார்ந்ததுதான்." [34]

"அப்படியானால் உண்மையான கடமை என்பது என்ன? கடமை என்பது ஒரு அனைத்து குறிப்புகளும் காணக்கூடிய புத்தகம் ஒன்றைத் தொகுப்பது, ஒரு வழிகாட்டி நூல், ஒரு செயற்குறிப்பு நூல், உள்நாட்டு யுத்தம் பற்றிய பிரச்சினைகளின் விதிகள் அடங்கிய நூல்; எனவே எல்லாவற்றிற்கும் மேலாக புரட்சியின் மிக உயர்ந்த கட்டமாக ஆயுதமேந்திய எழுச்சி பற்றிக் கூறும் நூல் தேவை. அனுபவங்களில் இருந்து இருப்பு நிலைக் குறிப்பு தயாரிக்கப்பட வேண்டும்; ஆரம்ப ஏற்பாடுகள் முற்றிலும் பகுத்தாராயப்பட வேண்டும்; செய்த தவறுகள் பற்றி ஆராய வேண்டும்; மிகச் சரியான நடவடிக்கைகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; அவசியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதையொட்டித்தான் நாம் அறிவியலை வளங்கொழிக்கச் செய்ய முடியும்; அதாவது வரலாற்று வளர்ச்சி விதிகள் பற்றிய அறிவை வளர்க்க முடியும்; அல்லது அனுபவத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற நடவடிக்கையின் விதிகள் பற்றிய முழுமையான கலையை அறிய முடியும். நான் இரண்டையும் நம்புகின்றேன். எமது நோக்கம் கடுமையாக நடைமுறை அனுபவத்தை பெறுதல் என்பதாகும்; அதாவது புரட்சியின் இராணுவக் கலையை வளப்படுத்தல் ஆகும்." [35].

அத்தகைய "வரைவாக்கம்" அமைப்பு முறையில் பெரும் சிக்கல் வாய்ந்ததாகத்தான் இருக்கும். முதலில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதின் அடிப்படை முன்நிபந்தனைகளின் குணாதிசயத்தை பற்றி கூறப்பட வேண்டும். இங்கு நாம் இன்னமும் புரட்சிகர அரசியல் என்ற களத்தில்தான் உள்ளோம்; ஏனெனில் எழுச்சி என்பது சிறப்பு வழியில் அரசியலை தொடர்வதாகும். ஆயுதமேந்திய எழுச்சி பற்றிய பகுப்பாய்வு பலவித நாடுகளுக்கு ஏற்ப மாற்றி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கத்தை பெரும்பான்மையாக கொண்ட நாடுகள் இருக்கின்றன; அதே நேரத்தில் பாட்டாளி வர்க்கம் மிகக் குறைவான சிறுபான்மையாகவும் விவசாயிகளின் முழு மேலாதிக்கமும் நிறைந்த நாடுகளும் இருக்கின்றன. இவ்விரு உச்சமுனைகளுக்கும் இடையே இடைமருவுநிலை வகைப்பட்ட பல நாடுகள் உள்ளன. எனவே பகுப்பாய்விற்கு குறைந்தபட்சம் மூன்று "மாதிரி" நாடுகள் கட்டாயம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்: தொழில்துறை (வளர்ச்சியுற்ற) நாடு; விவசாய நாடு; இடைப்பட்ட நாடு. (புரட்சிக்கான முன்கருத்துக்கள் மற்றும் நிலைகள் பற்றிக் கூறும்) முன்னுரை இந்த மூன்றுவித மாதிரிகளின் தனித்தன்மைகள் பற்றிய கூறுபாடுகளையும் ஒரு உள்நாட்டுப் போர் நிலைப்பாட்டில் கொடுக்க வேண்டும். நாம் எழுச்சியை இருவித கோணங்களில் பார்க்கிறோம். ஒரு புறத்தில், வரலாற்று வழிவகையில் ஒரு உறுதியான கட்டம் என்ற முறையில்; வர்க்கப் போராட்டத்தின் புறநிலை விதிகளின் ஒரு உறுதியான பிரதிபலிப்பாக, மற்றொரு புறத்தில் அகநிலை அல்லது செயலூக்கமான நிலைப்பாட்டில் இருந்து: அதாவது, எப்படி அதன் வெற்றியை சிறந்த முறையில் உறுதிப்படுத்துவதற்கு எழுச்சியை தயார்செய்வது, செயல்படுத்துவது என்பதிலிருந்து."[36]

1924ம் ஆண்டு உள்நாட்டுப் யுத்தம் இயக்கப்பட வேண்டிய வகைகள் விரிவாக்கப்பட்ட ஒரு கூட்டுப் பணி, அதாவது வர்க்கங்கள் பற்றிய வெளிப்படையான மோதல்கள் பிரச்சினைகள் மற்றும் சர்வாதிகாரத்திற்கான ஆயுதமேந்திய போராட்டம் ஆகியவற்றுக்கு மார்க்சிச வழிகாட்டல், இராணுவ அறிவியல் குழுவைச் சுற்றியிருந்த தனிநபர்களின் பாரிய வட்டத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் இந்தப் பணி விரைவில் கம்யூனிச அகிலத்தில் எதிர்ப்பை எதிர்கொண்டது --ட்ரொட்ஸ்கிசம் என அழைக்கப்பட்ட முறைக்கு எதிரான பொதுப் போராட்ட வகையில் ஒரு பகுதியாக இவ்வெதிர்ப்பு இருந்தது; அதன் பின்னர் அந்தப் பணி முற்றிலும் அழித்து கைவிடப்பட்டது. இதையும் விட கவனக்குறைவான, குற்றம் சார்ந்த நடவடிக்கையை கற்பனை செய்வது கடினம். திடீர் திருப்பங்கள் நிறைந்த சகாப்தத்தில், மேலே கூறிய நோக்கத்தில் உள்நாட்டு யுத்தத்தின் விதிகள், கட்சியின் தலைவர்கள் ஒருபுறம் இருக்க, முழுப் புரட்சிகர காரியாளர்களுக்கும் ஒரு இரும்பு போன்ற கையிருப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இந்த "வரைவாக்கம்" இடைவிடாமல் ஆராயப்பட்டு அந்தந்த நாட்டில் கிடைக்கப்படும் புதிய அனுபவங்களும் சேர்க்கப்பட வேண்டும். அத்தகைய ஆய்வுதான் பெரும் தைரியம் மற்றும் உறுதி ஆகியவை தேவைப்படும்போது, சரணடையும் கணங்களில் பீதி அடைவதற்கு பதிலாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் பற்றி உறுதியுடன் கூறமுடியும்; மேலும் நிதானமும், பொறுமையும் இருக்க வேண்டிய காலங்களில் சாகசவாத பாய்ச்சலுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட உறுதியை வழங்க முடியும்.

அத்தகைய விதிமுறைகள் பல புத்தகங்களிலும் சேர்க்கப்பட்டிருந்தால், அதைத் தீவிரமாக படித்தல் என்பது ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டிற்கும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் பற்றிய அடிப்படை கருத்துக்களை அறிவது போன்ற கடமையாக இருந்திருந்தால், நாம் சமீபத்திய ஆண்டுகளில் அனுபவித்த தோல்விகளை தவிர்த்திருக்கக்கூடும்; அவை ஒன்றும் தவிர்க்க முடியாதவை என்று இல்லை. வரைவு வேலைத்திட்டம் இந்தப் பிரச்சினைகளை ஒரு சில வரிகளில், இந்தியாவில் காந்தியம் பற்றி பேசுவதைப் போல் எச்சரிக்கையாக குறிப்பிடுகிறது. நிச்சயமாக, ஒரு வேலைத்திட்டம் என்பது விவரங்களில் கவனத்தை ஈர்ப்பதாக ஆகிவிட முடியாது. முக்கிய சாதனைகள், தவறுகள் ஆகியவற்றை மேற்கோளிட்டு அது ஒரு பிரச்சினையை முழு அளவில் கட்டாயம் முன்வைத்து, அதன் அடிப்படைச் சூத்திரங்களை கொடுக்க வேண்டும்.

இதற்கு முற்றிலும் சுயாதீனமான வகையில் ஆறாம் பேரவை எமது கருத்தில், கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்று குழுவுக்கு ஒரு சிறப்புத் தீர்மானத்தின் மூலம் உள்நாட்டு யுத்தம் பற்றிய விதிகளை விரிவாக்கம் செய்து கடந்த கால வெற்றி, தோல்வி அனுபவங்களின் அடிப்படையில் ஒரு கையேட்டினை தயாரிக்க வலியுறுத்தவேண்டும்.

Note

30. Pravda, September 20, 1928.

31. Theses of the Moscow Committee.

32. Lenin, Works, Vol.VI, p.113.

33. Trotsky’s speech at the session of the Board of Military Science Society, July 29, 1924 – Pravda, Sept. 6, 1924.

34. Ibid.

35. Ibid.

36. Ibid.