line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 2: ஏகாதிபத்திய சகாப்தத்தில் மூலோபாயமும் தந்திரோபாயங்களும்
 

Print part 2 on single page

3. லெனினின் கூற்றுப்படி மற்றும் புக்காரின் கூற்றுப்படி மூன்றாம் அகல்பேரவை மற்றும் புரட்சிகர நிகழ்வுப்போக்கின் நிரந்தரம் குறித்த பிரச்சினை

போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் அரசியல் வளர்ச்சியில் மூன்று கால கட்டங்களை ஸ்தாபிக்கப்பட முடியும். முதலாவது காலகட்டம் 1917 முதல் 1921 வரை நடக்கிறது, இரண்டாவது மார்ச் 1921 முதல் அக்டோபர் 1923 வரை நடக்கிறது, மூன்றாவது அக்டோபர் 1923 முதல் ஆங்கிலேய பொது வேலைநிறுத்தம் வரையில், அல்லது நடப்பு தருணம் வரையிலும் கூட செல்கிறது.

வெகுஜனங்களின் போருக்கு பிந்தைய புரட்சிகர இயக்கமானது பூர்சுவாக்களை தூக்கியெறியும் அளவுக்கு வலுவானதாக இருந்தது. ஆனால் இதனை நிறைவிற்கு கொண்டுவருவதற்கு ஒருவரும் இல்லை. தொழிலாள வர்க்கத்தின் பாரம்பரிய அமைப்புகளின் தலைமையை கொண்டிருந்த சமூக ஜனநாயகமானது, பூர்சுவா ஆட்சியை காப்பாற்றுவதற்கான தனது அனைத்து முயற்சிகளையும் கடுமையாய் மேற்கொண்டது. பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரம் உடனடியாக கைப்பற்றப்பட வேண்டும் என்று நாம் எதிர்நோக்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், உள்நாட்டு யுத்தத் தீயில் ஒரு புரட்சிகர கட்சி முதிர்ச்சியடையும் என்று நாம் கணக்கிட்டோம். ஆனால் இந்த இரண்டு நிபந்தனைகளும் ஒரேசமயத்தில் நேரிடவில்லை. போருக்கு பிந்தைய காலகட்டத்தின் கம்யூனிஸ்ட் கட்சிகள் வளர்ந்து சமூக ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டத்தில் முதிர்ச்சியை எட்டி கிளர்ச்சிஎழுச்சியின் தலைமையாக உருவெடுக்கும் முன்னதாகவே புரட்சிகர அலையானது வீழ்ச்சியுறத் தொடங்கி விட்டது.

மார்ச் 1921ம் ஆண்டு, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியானது பூர்சுவா அரசை ஒரே அடியில் தூக்கியெறியும் பொருட்டு வீழ்ச்சியடையும் அலையை தனக்கு சாதகமாக்க முயற்சி செய்தது. இதில் ஜேர்மன் மத்திய குழுவின் வழிகாட்டும் சிந்தனையானது சோவியத் குடியரசை காப்பதாக இருந்தது (ஒரு நாட்டில் சோசலிச தத்துவமானது அந்த சமயத்தில் பிரகடனப்படுத்தப்படாததாக இருந்தது). ஆனால் தலைமையின் உறுதியும் மக்களின் அதிருப்தியும் மட்டும் வெற்றிக்கு போதுமானவையல்ல என்பது வெளிப்பட்டது. ஏனைய பிற சூழல்களும் கிடைக்கப் பெற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, தலைமைக்கும் மக்களுக்கும் இடையிலான ஒரு நெருக்கமான இணைப்பு மற்றும் மக்களுக்கு தலைமை மீதான நம்பிக்கை அவசியமானது. இந்த நிலைமை அந்த நேரத்தில் பற்றாக்குறையாக இருந்தது.

கம்யூனிச அகிலத்தின் மூன்றாவது அகல் பேரவை, முதலாவது மற்றும் இரண்டாவது காலகட்டங்களை பிரிக்கும் ஒரு மைல்கல்லாகும். அரசியல் ரீதியாகவும் மற்றும் அமைப்பு ரீதியாகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வளங்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு போதுமானவையல்ல என்கிற உண்மையை இது பதிவு செய்தது. இது "மக்களுக்கு" என்கிற முழக்கத்தை முன்வைத்தது, அதாவது அன்றாட வாழ்க்கை மற்றும் போராட்டங்களின் அடிப்படையில் முதலில் மக்களை வெல்லுதல் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதாகும். மக்களும் கொஞ்சம் வித்தியாசமான வகையில் என்றாலும் கூட தங்கள் அன்றாட வாழ்க்கையை ஒரு புரட்சிகர சகாப்தத்தில் தான் தொடர்ந்து வாழ்ந்தனர்.

பிரச்சினையின் இந்த சூத்திரப்படுத்தல், பேரவையில் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது, அது தத்துவார்த்த ரீதியில் புக்காரினால் உயிரூட்டப்பட்டது. அந்த சமயத்தில் அவர் நிரந்தரப் புரட்சி குறித்த தனது சொந்தக் கருத்தை கொண்டிருந்தார், மார்க்சினுடையதை அல்ல. "முதலாளித்துவம் சக்தி இழந்து போயிருந்ததன் காரணமாக, எனவே இடையறாத புரட்சிகர போராட்டங்கள் மூலம் வெற்றி கட்டாயம் பெறப்பட வேண்டும்." புக்காரினது நிலைப்பாடானது எப்போதுமே இது போன்றதொரு விதிதருமுறைவாதத்திற்கு தன்னை குறைத்துக் கொண்டிருந்தது.

இயல்பாக, "நிரந்தர" புரட்சி தத்துவம் குறித்த புக்காரினது வடிவத்தை நான் ஒருபோதும் பகிர்ந்து கொண்டதில்லை, இதன்படி புரட்சிகர நிகழ்வுப்போக்கில் எந்த இடையூறுகளோ, தேக்கநிலை காலகட்டங்களோ, பின்வாங்கல்களோ, இடைமருவு கோரிக்கைகளோ, அல்லது இது போன்றவை எதுவும் சிந்தித்துப் பார்க்கவும் இயலாதவை. இதற்கு மாறாக, அக்டோபர் முதல் நாட்கள் தொட்டே, நிரந்தர புரட்சியின் இவ்வகை கேலிச்சித்திரத்துக்கு எதிராக நான் போரிட்டேன்.

லெனினைப் போலவே நானும், சோவியத் ரஷ்யாவுக்கும் ஏகாதிபத்திய உலகுக்கும் இடையிலான இணக்கமற்ற தன்மை குறித்துப் பேசிய போது, பெரும் மூலோபாய வளைவு மனதில் இருந்ததே தவிர அதன் தந்திரோபாய சுற்றுகள் அல்ல. இதற்கு மாறாக, புக்காரினோ, அவரே அதற்கு எதிர்முனைக்கு மாறுவதற்கு முன்னதாக, தொடர்ச்சியான புரட்சியின் மார்க்சிச கருத்தாக்கத்தின் புலமைவாத கேலிச்சித்திரத்தை ஒரேமாதிரி எடுத்துக்கூறினார். தனது "இடது கம்யூனிச" நாட்களில் புக்காரின், புரட்சியானது எதிரியுடன் பின்வாங்கலையோ அல்லது தற்காலிக சமரசத்தையோ அனுமதிப்பதில்லை என்று கருத்து தெரிவித்தார். பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் சமாதானம் பற்றிய பிரச்சினையின் நீண்ட காலம் கழித்து, இதில் எனது நிலைப்பாட்டிற்கும் புக்காரினுடையதிற்கும் எந்த உடன்பாடும் இல்லை, புக்காரின் கம்யூனிச அகிலத்தின் அந்த நேரத்து ஒட்டுமொத்த அதி இடதுசாரிகளுடனும் சேர்ந்து கொண்டு, ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் "செயலாற்ற தூண்டப்படாவிட்டால்", அங்கு புதிய புரட்சிகர வெடிப்புகள் தோன்றா விட்டால், சோவியத் அதிகாரமானது தவிர்க்கவியலாத பேரழிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது என்கிற கருத்து நிலையில் ஜேர்மனியில் மார்ச் 1921 நாட்களில் இருந்த நிலைக்கு வக்காலத்து வாங்கினார். உண்மையான அபாயங்கள் சோவியத் அதிகாரத்தை அச்சுறுத்துகின்றன என்கிற உணர்வானது, மூன்றாம் அகல்பேரவையில் லெனினுடன் தோளுடன் தோள் சேர்ந்து நின்று நிரந்தரப் புரட்சி குறித்த மார்க்சிச கருத்தாக்கத்தின் இந்த ஆட்சிசதி கவிழ்ப்பு கேலிநாடகத்திற்கு எதிராக சமரசமற்ற ஒரு யுத்தத்தை நடத்துவதில் இருந்து என்னைத் தடுக்கவில்லை. மூன்றாம் அகல்பேரவையின் போது, பொறுமையற்ற இடதுசாரிகளுக்கு நாங்கள் பலதடவைகள் அறிவித்தோம்: "எங்களை காப்பதற்கு அவ்வளவு அதிக அவசரப்படவேண்டாம். அவ்வாறு போனால், நீங்கள் உங்களுக்கான அழிவையே தேடுவீர்கள், அதன் மூலம் எங்களுக்கான பேரழிவையும் கொண்டு வருவீர்கள்; அதிகாரத்துக்கான போராட்டத்தை எட்டும் நோக்கில் மக்களுக்கான போராட்டத்தின் பாதையை முறையாக பின்பற்றுங்கள். எங்களுக்கு தேவை உங்களது வெற்றி, சாதகமற்ற சூழ்நிலைகளில் போரிடத் துணியும் உங்களது தயார்நிலை அல்ல. சோவியத் குடியரசில் புதிய பொருளாதார கொள்கையின் (NEP) துணையுடன் எங்களை பராமரித்துக் கொள்ள முடியும், இவ்வாறு நாங்கள் முன்தொடர்ந்து செல்வோம். உங்களது சக்திகளை திரட்டிக் கொண்டும், சாதகமான சூழல்களை பயன்படுத்திக் கொண்டுமிருந்தால், சரியான தருணத்தில் நீங்கள் எங்களது உதவிக்கு வருவதற்கு இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கும்".

Although this took place after the Tenth Party Congress which prohibited factions, Lenin nevertheless assumed the initiative at that time to create the top nucleus of a new faction for the struggle against the ultra-leftists who were strong at that time. In our intimate conferences, Lenin flatly put the question of how to carry on the subsequent struggle should the Third World Congress accept Bukharin’s viewpoint. Our "faction" of that time did not develop further only because our opponents "folded up" considerably during the Congress.

கன்னைகளை தடைசெய்த பத்தாவது கட்சிப் பேரவை மாநாட்டில் இது நடைபெற்றது என்றாலும், அந்த நேரத்தில் மிக வலுவுடன் இருந்த அதிதீவிர இடதுசாரிகளுக்கு எதிரான போராட்டத்திற்கான ஒரு புதிய கன்னையின் தலைமை மையத்தை உருவாக்குவதற்கான முன்முயற்சியை லெனின் கைக்கொண்டார். மூன்றாம் உலக பேரவை மாநாடு புக்காரினது பார்வையை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் தொடர்ந்த போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்ற கேள்வியை, எமது தனிப்பட்ட மாநாடுகளில், லெனின் பட்டவர்த்தனமாகவே கேட்டார். அந்த நேரத்தில் எமது "கன்னையானது" அதற்கு மேல் தொடர்ந்து வளர்ச்சியடையவில்லை. ஏனென்றால் நமது எதிர்ப்பாளர்கள் பேரவை மாநாட்டின் போது குறிப்பிடத்தகுந்த அளவில் "மடிந்து போயினர்''.

புக்காரின், உண்மையில், மார்க்சிசத்தின் இடதுக்கு வேறெவரையும் விட அதிகமாகவே ஊசலாடி விட்டார். இதே மூன்றாவது அகல்பேரவை மற்றும் அதற்குப் பின்னரும், ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடிநிகழ்வுகள் என்பது தவிர்க்க இயலா வண்ணம் எழுந்தே தீரும் என்கிற என் கருத்துக்கு எதிராகவும் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு முழு தொடரான தோல்விகள் இருப்பினும் இந்த தவிர்க்க இயலாத நெருக்கடி நிகழ்வுகளுக்கு பின்னர் புரட்சியில் ஒரு அடியை அல்ல, மாறாக, புரட்சிகர போராட்டத்திற்கான புதிய உந்துசக்தியை நான் எதிர்பார்த்ததற்கு எதிராகவும் போராட்டத்திற்கு அவரே தலைமை தாங்கினார். ஒட்டுமொத்தமாக பொருளாதார நெருக்கடி மற்றும் புரட்சி இரண்டின் நிரந்தரம் குறித்த தனது புலமைத்துவ நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த புக்காரின், இந்த நிலைப்பாட்டில் எனக்கு எதிராக நீண்ட போராட்டத்தை நடத்தினார். ஆனால் நிகழ்வுகள் அவரை நிர்ப்பந்திக்கும்வரை, வழக்கம் போல் அவர் செய்த தவறு மிகவும் தாமதமாக தனது பிழையை ஒப்புக்கொள்வதாகும்.
புரட்சிகர நிகழ்வுப்போக்கின் நிரந்தரத்தன்மை மீதான அவரது எந்திரத்தனமான புரிதலில் இருந்து முன்சென்று, மூன்றாம் மற்றும் நான்காம் அகல்பேரவைகளிலும் புக்காரின் ஐக்கிய முன்னணி கொள்கை மற்றும் இடைமருவு கோரிக்கைகளுக்கு எதிராக சண்டையிட்டார்.

இந்த இரண்டு போக்குகளுக்கு, பாட்டாளி வர்க்க புரட்சியின் தொடர்ச்சியான குணாதிசயம் குறித்த இணைத்துருவாக்கிய மார்க்சிச கருத்தாக்கம் மற்றும் எந்தவகையிலும் புக்காரினது தனிப்பட்ட சொற்புரட்டு மட்டுமே என்று கூறமுடியாத வகையிலமைந்த மார்க்சிசம் பற்றிய புலமைத்துவ கேலிநாடகத்திற்கும் இடையிலான போராட்டம் சிறிய மற்றும் பெரிய ஏனய கேள்விகளின் மொத்த தொடர்களின் மூலமாக பின்தொடர முடியும். ஆனால் அவ்வாறு செய்வது அவசியமற்ற ஒன்று. புக்காரினது இன்றைய நிலைப்பாடு அடிப்படையில் "நிரந்தர புரட்சி"யின் அதே தீவிர இடது புலமைவாதமே ஆகும். என்ன, இந்த முறை உள் வெளியாகத் திரும்பி இருக்கிறது. உதாரணமாக, 1923ம் ஆண்டு வரை ஐரோப்பாவில் ஒரு நிரந்தரமான பொருளாதார நெருக்கடி மற்றும் ஒரு நிரந்தரமான உள்நாட்டு யுத்தம் இல்லாத வரை சோவியத் குடியரசு மறைந்து போகும் என்று கருத்துக் கொண்டிருந்த புக்காரின், இன்று எந்தவித சர்வதேச புரட்சியுமின்றி சோசலிசத்தை கட்டமைப்பதற்கான ஒரு செய்முறையை கண்டறிந்திருக்கிறார். உண்மையைச் சொல்வதென்றால், கம்யூனிச அகிலத்தின் தற்போதைய தலைவர்கள் அவர்களின் நேற்றைய சாகசவாதத்தை அவர்களின் இன்றைய சந்தர்ப்பவாத நிலைப்பாட்டுடன் மற்றும் இதன் நேர்மாறாகவும் மிகவும் அடிக்கடி கூட்டுச் சேர்த்துக் கொள்கிறார்கள், என்கின்ற உண்மையின் மூலம் தெளிவற்ற புக்காரினிச நிரந்தரத்தன்மை எந்த வகையிலும் முன்னேற்றம் காணவில்லை.

மூன்றாம் அகல்பேரவை ஒரு மிகப்பெரும் கலங்கரை விளக்கம். அதன் போதனைகள் இன்னமும் அதிமுக்கியமானவையாகவும் இன்று பலன் தருபவையாகவும் இருக்கின்றன. நான்காம் அகல்பேரவையானது இந்த போதனைகளை மேலும் உறுதிப்படுத்தவே செய்திருக்கிறது. மூன்றாம் அகல்பேரவை "மக்களுக்கு" என்று மட்டும் முழக்கத்தோடு நிறுத்தவில்லை மாறாக "முதலில் மக்களை வென்று பின் அதிகாரத்தை வெல்வது" என்றும் சொன்னது. லெனின் தலைமையிலான கன்னை (இதனை அவர் "வலது" சாரிகள் என்று விளக்கத்துடன் பண்பிட்டுக்காட்டினார்) ஒட்டுமொத்த பேரவை மாநாடு முழுவதும் கட்டுப்படுத்த வேண்டியிருந்ததற்கு பின்னர், லெனின் பேரவை நிறைவடையும் சமயத்தில் ஒரு தனியான சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதில் அவர் தீர்க்கதரிசனமாக எச்சரித்தார்: "ஞாபகத்தில் வையுங்கள், புரட்சிகர பாய்ச்சலுக்கான ஒரு நல்ல ஓட்ட தொடக்கத்தினை பெறுவது பற்றிய கேள்வி மட்டுமே இது. மக்களுக்காக போராடுவது என்பது அதிகாரத்திற்காக போராடுவதாகும்".

இந்த லெனினிச நிலைப்பாடு "தலைமையேற்கப்பட்டவர்களால்" மட்டுமல்லாது தலைவர்கள் பலராலும் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதை 1923 நிகழ்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன.