line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

1: சர்வதேச புரட்சி வேலைத்திட்டமா அல்லது தனி ஒரு நாட்டில் சோசலிசத்திற்கான வேலைத்திட்டமா?

 

ஒரு வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதுதான் ஆறாவது பேரவை மாநாட்டு நிகழ்ச்சிநிரலின் அதிமுக்கிய கேள்வியாகும். வேலைத்திட்டத்தின் இயல்பு பல காலத்திற்கு அகிலத்தின் சாமுத்திரிகா லட்சணத்தை நிர்ணயிக்கக் கூடியதாகவும் தீர்மானிக்கக் கூடியதாகவும் அமையலாம். ஒரு வேலைத்திட்டத்தின் முக்கியத்துவமானது அது பொதுவான தத்துவார்த்த கருத்துருக்களை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதில் அதிகம் இல்லாமல் இறுதி ஆய்வுகளில், இதுவே "குறியீடாக்கம்" எனப்படும் சாரத்தை வடித்தலாக, அதாவது உறுதியாகவும், தீர்மானகரமாகவும் பெற்ற உண்மைகளினதும் மற்றும் பொதுமைப்படுத்தல்களினதும் ஒரு சுருக்கமாக விளக்கியுரைத்தல் குறித்த கேள்வியாக இது முடிந்தது); கடந்த காலத்தின், அதிலும் குறிப்பாக சம்பவங்களும் தவறுகளும் நிறைந்த கடந்த ஐந்து ஆண்டுகளின் புரட்சிகரப் போராட்டங்களின், உலகப்பொருளாதாரம் மற்றும் அரசியல் அனுபவங்களில் இருந்து ஒரு மதிப்பீட்டை வரைவது குறித்ததான கேள்வியே அதி முக்கியமானது. அடுத்த சில ஆண்டுகளுக்கு, கம்யூனிச அகிலத்தின் தலைவிதியானது -அதன் வார்த்தைகளின் அர்த்தத்தில்- இந்த சம்பவங்கள், தவறுகள், மற்றும் சர்ச்சைகள் வேலைத்திட்டத்தில் விளங்கப்படுத்தப்பட்டு முடிவாகக் கொள்ளப்படும் விதத்தில் தங்கி இருக்கின்றது.

1. செயல்திட்டத்தின் பொதுவான கட்டமைப்பு

2. அமெரிக்க ஐக்கிய அரசுகளும் ஐரோப்பாவும்

3. ஐக்கிய ஐரோப்பிய சோவியத் அரசுகள் பற்றிய முழக்கம்

4. சர்வதேசியத்தின் அடிப்படை அளவுகோல்

5. கட்சியின் தத்துவார்த்த மரபு

6. “சமூக ஜனநாயக தவறிழைப்பு” எங்கே இருக்கிறது?

7. உலகப் பொருளாதாரத்தின் மீதான சோவியத் யூனியனின் சார்பு

8. உற்பத்தி சக்திகளுக்கும் தேசிய எல்லைகளுக்கும் இடையிலான முரண்பாட்டின் நிமித்தமாக "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" எனும் பிற்போக்கு கற்பனாவாத தத்துவம். 

9. இந்த பிரச்சனை உலகப் புரட்சிக்கான களத்தில் மட்டுமே தீர்க்கப்பட முடியும்

10. சமூக தேசப்பற்று தவறுகளின் தொடர்ச்சியாக தனியொரு நாட்டில் சோசலிச தத்துவம்