line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 
கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 1: சர்வதேச புரட்சி வேலைத்திட்டமா அல்லது தனி ஒரு நாட்டில் சோசலிசத்திற்கான வேலைத்திட்டமா?            

                  Print part 1on single page

1. செயல்திட்டத்தின் பொதுவான கட்டமைப்பு


''எமது சகாப்தத்தில் -இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தில்- அதாவது உலகப் பொருளாதாரமும், உலக அரசியலும் நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உள்ள நிலையில், எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் முழுமையாகவும், பிரதானமாகவும் தனது சொந்த நாட்டினுள் உள்ள நிலைமைகளின், போக்குகளின் வளர்ச்சிகளில் இருந்து ஆரம்பிப்பதன் மூலம் தனது வேலைத்திட்டத்தை ஸ்தாபிக்க முடியாது. இது சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்குள்ளே அரசு அதிகாரத்தை திறமையாகப் பயன்படுத்தும் ஒரு கட்சிக்கும் கூட முற்றிலும் பொருந்தும். 1914 -ஆகஸ்ட் 4ம் திகதி அனைத்துக் காலங்களுக்குமாக தேசிய வேலைத்திட்டங்களுக்கு சாவுமணி அடிக்கப்பட்டது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சி தற்போதைய சகாப்தத்திற்கு, முதலாளித்துவத்தின் அதியுயர்ந்த வளர்ச்சியும், வீழ்ச்சியும் கொண்ட சகாப்தத்தின் தன்மையுடன் தொடர்புடையதான ஒரு சர்வதேசிய வேலைத்திட்டம் என்பது ஒரு பொழுதும் தேசிய வேலைத் திட்டங்களின் ஒட்டுமொத்தமோ அல்லது அவற்றின் பொதுத்தோற்றங்களின் கலவையோ அல்ல. சர்வதேச வேலைத்திட்டம், உலகப் பொருளாதார உலக அரசியல் அமைப்பை முழுமையாகக் கொண்டதாகவும் நிலைமைகளின் போக்குகளின் அவற்றின் அனைத்துத் தொடர்புகளையும் முரண்பாடுகளையும் அதாவது அதன் தனிப் பகுதிகள் பரஸ்பர ரீதியாகப் பகைமையுடன் ஒன்றிலொன்று தங்கியுள்ள நிலைமைகள் பற்றிய ஆய்விலிருந்தே நேரடியாக ஆரம்பிக்க வேண்டும். தற்போதைய சகாப்தத்தில் கடந்த காலத்தைவிட மிக அதிக அளவில் பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலை ஒரு உலக நோக்குநிலையிலிருந்தே ஊற்றெடுக்க வேண்டும்; ஊற்றெடுக்க முடியும், எதிர்மாறாக அல்ல. இங்கேதான் கம்யூனிச சர்வதேசியத்திற்கும் தேசிய சோசலிசத்தின் அனைத்து வகையறாக்களுக்கும் இடையிலான அடிப்படையான பிரதானமான வேறுபாடு இருக்கின்றது.''
இந்த விஷயங்களை மனதில் கொண்டு தான் நாங்கள் ஜனவரியில் இவ்வாறு எழுதினோம்: "சர்வதேச அகிலத்தின் வேலைத்திட்டத்தை வரைவதற்கான பணியை நாம் ஆரம்பிக்க வேண்டும் (புக்காரினின் வேலைத்திட்டமானது சர்வதேச அகிலத்தின் ஒரு தேசியபகுதியின் ஒரு மோசமான வேலைத்திட்டமே தவிர உலக கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டமல்ல). [1]
உலகத்தின் மிகப்பெரும் பிரச்சினையாக அமெரிக்கா குறித்த கேள்வி, முழு வீச்சில் எழுந்த 1923 -1924 ஆம் ஆண்டு முதலே நாங்கள் இந்த விஷயங்கள் குறித்து வலியுறுத்தி வருகிறோம். இதுவே ஐரோப்பிய அரசியல் குறித்த நேரடியான கேள்வியாவும் இருந்தது.
புதிய வரைவை ஆதரித்து பிராவ்தா எழுதும் போது, ஒரு கம்யூனிச வேலைத்திட்டமானது "சர்வதேச சமூக ஜனநாயகத்தின் வேலைத்திட்டத்தின் மைய அடிப்படை கூறுகளின் சாரத்தில் இருந்து மட்டுமல்லாமல் அதன் கட்டமைப்பின் சர்வதேசியத்தின் சிறப்பியல்பிலிருந்தும் தீவிரமாய் வேறுபடுகிறது. [2]
இவ்வாறானதொரு தெளிவற்ற சூத்திரப்படுத்தலின் போதுதான், முன்னர் பிடிவாதமாக நிராகரிக்கப்பட்ட நாங்கள் மேலேகூறிய கருத்து இயல்பாக வெளிப்பட்டது. புக்காரின் வழங்கிய முதலாவது வரைவுத்திட்டம் ஒரு தீவிரமான கருத்துப் பரிமாற்றத்தை தூண்டவில்லை; இன்னும் சொல்லப் போனால் அதற்கான தளம் எதனையும் கூட அது வழங்கவில்லை என்பதால் அதிலிருந்து உடைத்துக்கொண்டு வந்ததை யாரும் வரவேற்கவே முடியும். ஏதோ ஒரு குறிப்பிட்ட நாடு சோசலிசத்தை நோக்கி வளர்ச்சி பெறுவது குறித்த ஒரு மொட்டையான செயல்முறை விளக்கத்தை மட்டுமே முதலாவது வரைவு வேலைத்திட்டம் கொடுத்த நிலையில், நாம் காணப்போகின்ற புதிய வரைவு வேலைத்திட்டமோ துரதிர்ஷ்டவசமாக, உறுதிப்பாடோ அல்லது வெற்றிகரமானதாகவோ இல்லாமல், உலகப் பொருளாதாரம் ஒட்டுமொத்தத்தையும் அதன் தனித்தனி பகுதிகளின் தலைவிதியை தீர்மானிக்கும் அடிப்படையாக எடுப்பதை நாடுகிறது.
வளர்ச்சியின் வித்தியாசமான படிநிலைகளில் நிற்கக் கூடிய நாடுகள் மற்றும் கண்டங்களை ஒரு பரஸ்பர சார்பான மற்றும் எதிர்மாறான அமைப்புக்குள் இணைப்பது, அவற்றின் வளர்ச்சியின் பலதரப்பட்ட நிலைகளை சமப்படுத்துவது மற்றும் அதே சமயத்தில் அவற்றிற்கிடையேயான வேறுபாடுகளை உடனடியாக உயர்த்துவது, மற்றும் ஒரு நாட்டிற்கு எதிராக மற்றொரு நாட்டை உடனடியாக முன்நிறுத்துவது, இவ்வாறு தனித்தனி நாடுகள் மற்றும் கண்டங்களின் பொருளாதார வாழ்வை மாற்றியமைக்கும் சக்தி கொண்ட ஒரு பலம் வாய்ந்த யதார்த்தமாக உலகப் பொருளாதாரமானது மாறியிருக்கிறது. இந்த அடிப்படை உண்மை மட்டுமே கூட ஒரு உலக கம்யூனிஸ்ட் கட்சிக்கான சிந்தனையின் மிகவுயர் யதார்த்தத்தை கொடுக்கின்றது. உலகப் பொருளாதாரத்தை ஒட்டு மொத்தமாக, தனிச்சொத்துடைமையின் அடிப்படையில் இயல்பாக அடையத்தக்க வளர்ச்சியின் உச்சநிலைக்கு ஏகாதிபத்தியம் கொண்டு வருவது என்பது, வரைவின் அறிமுகப்பக்கத்தில் சரியாகக் குறிப்பிடுவதைப் போல "உலகப் பொருளாதாரத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும் மற்றும் தேசிய-அரசுத் தடைகளுக்கும் இடையேயான முரண்பாட்டை மிக தீவிரமடைய செய்ய வழிவகுக்கும்''.
கடந்த ஏகாதிபத்திய யுத்தத்தின் போது முதல்முறையாக மனித குலத்திற்கு பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தப்பட்ட இந்த கருத்துரையின் பொருளைப் புரிந்து கொள்ளாமல், உலக அரசியல் மற்றும் புரட்சிகர போராட்டத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திசையில் ஒரு அடி கூட நாம் எடுத்து வைக்க முடியாது.
ஒரு நேரடியான எதிர்மாறான தன்மைகளை கொண்ட போக்குகளுடன் இதில் சமரசம் செய்வது என்பது, இது மட்டுமே சரியான நிலைப்பாடாகும், வரைவினை படுமோசமான முரண்பாடுகளுக்கான தளமாக மாற்றி விடுகிறது. இது பிரச்சனைகளின் அடிப்படை அம்சங்களை புதிய முறையில் அணுகும் கொள்கைரீதியான முக்கியத்துவத்தை இது முழுக்க இல்லாமல் செய்து விடுகிறது. இவ்வாறில்லாமல் இருந்திருந்தால், புதிய வரைவில் வேலைத்திட்டத்தின் மைய அச்சையே தீவிர மாற்றம் செய்வதை நாமும் வரவேற்றிருந்திருக்கலாம்.