line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 
கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 1: சர்வதேச புரட்சி வேலைத்திட்டமா அல்லது தனி ஒரு நாட்டில் சோசலிசத்திற்கான வேலைத்திட்டமா?

Print part 1on single page

2. அமெரிக்க ஐக்கிய அரசுகளும் ஐரோப்பாவும்

முதலாவது, அதிர்ஷ்டவசமாக நிராகரிக்கப்பட்ட வரைவு குறித்துக் கூறவேண்டுமானால், நமக்கு நினைவில் உள்ள வரை, அதில் அமெரிக்காவின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை என்பதே அதன் தன்மை குறித்து கூற போதுமானது. ஏகாதிபத்திய சகாப்தத்தின் அடிப்படை பிரச்சினைகள் -இந்த சகாப்தத்தின் சிறப்பியல்பின்காரணமாக, இப்பிரச்சனைகள் அருவமான மற்றும் தத்துவார்த்த அடிப்படையில் மட்டுமல்லாமல் அவற்றின் உறுதியான மற்றும் வரலாற்று குறுக்குவெட்டிலும் ஆராயப்பட வேண்டும். இது முதலாவது வரைவில் ஒரு முதலாளித்துவ தேசம் என்ற "பொதுவான" உயிரற்ற வரைப்படத்தைப் போல காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய வரைவு - இது உண்மையில் ஒரு முக்கிய முன்நோக்கிய படிதான்- இப்போது "உலகின் பொருளாதார மையம் அமெரிக்காவிற்கு மாற்றம்" குறித்தும்; "'டாலர் குடியரசு' ஒரு உலக சுரண்டல் நாடான மாற்றம்" குறித்தும்; இறுதியாக வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு முக்கியமாக பிரிட்டிஷ் முதலாளித்துவத்திற்கு இடையேயான தீவிரப்போட்டி (வரைவு அலட்சியமாக "மோதல்" எனக் குறிப்பிடுகிறது) "உலக மோதல்களின் அச்சாக மாறி வருகிறது" என்றும் பேசுகிறது. உலக நிலைமை குறித்த இந்த அடிப்படை உண்மைகள் மற்றும் காரணிகள் பற்றிய தெளிவான மற்றும் துல்லியமான வரையறைகள் கொண்டிருக்காத ஒரு வேலைத்திட்டத்திற்கும் சர்வதேச புரட்சிக் கட்சியின் வேலைத்திட்டத்திற்கும் இடையே எவ்விதமான ஒரு பொது அம்சமும் இல்லை என்பது இன்று ஏற்கனவே தெள்ளத்தெளிவான விஷயமாக ஆகி விட்டது.
துரதிர்ஷ்டவசமாக, நாம் இப்போது குறிப்பிட்ட, நவீன யுகத்தில் உலக அபிவிருத்திகளின் முக்கிய உண்மைகள் மற்றும் போக்குகள் வெறும் பெயரளவுக்கே இந்த வரைவில் இடம் பெற்றுள்ளன. ஒரு விதத்தில் வெறும் கருத்தியல் எழுத்தாக, அதன் மொத்த கட்டமைப்புடன் எந்த உள்ளார்ந்த தொடர்பும் இல்லாமலும் மற்றும் முன்னோக்கு அல்லது மூலோபாயம் குறித்து எந்த முடிவுகளுக்கும் இட்டுச் செல்லாமல் விடப்பட்டுள்ளது.
ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் சரணாகதி, மற்றும் 1923ம் ஆண்டு ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்தின் தோல்வி ஆகியவற்றிற்கு பின்னர் ஐரோப்பாவில் அமெரிக்காவின் புதிய பங்கு குறித்து முற்றிலும் மதிப்பீடு செய்யப்படாமல் விடப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் "ஸ்திரப்படுதல்," "இயல்பாகுதல்," மற்றும் "அமைதிப்படுத்தல்" ஆகியவற்றுக்கான காலகட்டம் குறித்தோ மற்றும் சமூக ஜனநாயகத்தின் "புத்துயிர்ப்பு" ஆகியவை ஐரோப்பிய விவகாரங்களில் அமெரிக்க தலையீட்டின் முதல் படிகளுக்கு சடத்துவ மற்றும் சித்தாந்தரீதியில் நெருங்கிய தொடர்புள்ளவையாக இருந்தன என்பதை விளக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், தவிர்க்க முடியாத அமெரிக்க விரிவாக்கத்தின் கூடுதல் அபிவிருத்தி, மிகப்பெரிய இராணுவ, பொருளாதார, மற்றும் புரட்சிகர அதிர்வுகளை உண்டாக்கிய ஐரோப்பிய சந்தை உள்ளிட்ட ஐரோப்பிய மூலதன சந்தைகளின் குறுக்கம், மேலும் கடந்த காலத்தவை எல்லாம் அதன் பின்னணியில் படிப்படியாய் மறைவது காட்டப்பட்டிருக்கவில்லை.
மறுபடியும், அமெரிக்காவின் கூடுதலான ஈவிரக்கமற்ற அழுத்தம் முதலாளித்துவ ஐரோப்பாவை உலகப் பொருளாதாரத்தில் மேலும் குறைவான பங்கை நிலையாக பெற்றுக்கொள்ள செய்துவிடும் என்பதை தெளிவாக்கியிருக்கவுமில்லை, மற்றும் இது, தணியச்செய்வதை குறிப்பாய் உரைக்கவில்லைதான், மாறாக, ஐரோப்பாவில் அரசுகளுக்கிடையிலான உறவுகள் பெரிய அளவில் கூர்மையடைவது ஒரு இராணுவ மோதல்களுக்கான ஆக்ரோஷமான இழுப்புடன் இணைந்துகொள்ளப்படும், அரசுகளை பொறுத்தவரை அதேபோல வர்க்கங்களை பொறுத்தவரை பரந்த அதிகரித்துவரும் ஒரு பங்கைவிட குறைந்து தேய்ந்துசெல்லும் ஒரு அற்பமான பங்கிற்கு அதிக மூர்க்கமாகக்கூட சண்டையிட வைத்துவிடும்.
ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான பகைமையினாலான உள் மோதல்கள், மாறாதவகையில் மேலும் மையப்படுத்தப்பட்ட வட அமெரிக்க குடியரசிற்கு எந்த வித தீவிரமான மற்றும் வெற்றிகரமான எதிர்ப்புக்கும் நம்பிக்கை அளிக்காததாய் இருக்கும்; மற்றும் ஐரோப்பாவின் குழப்பநிலைக்கு ஐரோப்பிய ஐக்கிய சோவியத் அரசுகள் மூலம் தீர்வு காண்பது பாட்டாளி வர்க்க புரட்சியின் ஆரம்ப பணிகளில் ஒன்றாகும் என்பதையெல்லாம் வரைவு விளக்கவில்லை. ஐரோப்பா, அமெரிக்காவை விட (முக்கியமான தனது எல்லைகளின் காரணமாக) அளவிடமுடியாத அளவிற்கு தன்னகத்தே மிகநெருக்கமாக இருக்கிறது, எனவே அது வட அமெரிக்க பூர்சுவாவிடம் இருந்து தானாகவே தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கூடியதாக இருக்கும்.
மற்றொரு பக்கத்தில், அமெரிக்காவின் சர்வதேச பலமும் மற்றும் அதிலிருந்து உருவாகும் அதன் தடுக்கவியலாத விரிவாக்கமும் தான் மொத்த உலகத்தினை வெடிமருந்துக் கிடங்காக்க -அதாவது கிழக்குக்கும் மேற்குக்கும் இடையேயான எல்லா முரண்பாடுகள், பழைய ஐரோப்பாவின் வர்க்கப் போராட்டம், காலனித்துவ மக்களின் கிளர்ச்சி எழுச்சி, மற்றும் எல்லா போர்கள் மற்றும் புரட்சிகள் ஆகியவை- தனது கட்டமைப்பின் அடித்தளத்தை கொடுக்க அதனை நிர்ப்பந்திக்கிறது என்ற உண்மை குறித்து (அதே உலக பிரச்சினையின் முக்கியமானதொன்று) எந்த விதமான குறிப்பும் இல்லை. ஒரு பக்கத்தில், இது வட அமெரிக்க முதலாளித்துவத்தை, பூமியின் நிலப்பரப்பின் ஒவ்வொரு மூலையிலும் "ஒழுங்கை" பராமரிப்பதில் தொடர்ந்து அதீத ஆர்வம் காட்டக் கூடிய நவீன யுகத்தின் அடிப்படை எதிர்புரட்சிகர சக்தியாக உருமாற்றுகிறது; மறுபக்கத்தில், ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும், தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கும் உலக ஏகாதிபத்திய அதிகாரத்தில் ஒரு பிரமாண்டமான புரட்சிகர வெடிப்புக்கான அடித்தளத்தையும் தயாரிக்கிறது. இந்த புரட்சிகர வெடிப்புக் காலம் ஐரோப்பாவின் பாட்டாளி வர்க்க புரட்சியின் காலத்தில் இருந்து மிகவும் பின்தங்கியதாக இருக்காது என்பதையே உலக உறவுகளின் தர்க்கவியல் சுட்டிக் காட்டுகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையிலான உறவுகள் பற்றிய இயங்கியல் குறித்த எங்களின் விளக்கம் சமீப வருடங்களில் எங்களை பல்வேறு பரந்துபட்ட குற்றச்சாட்டுகளுக்கு இலக்காக்கியுள்ளது, ஐரோப்பிய முரண்பாடுகளின் இருப்பினை அமைதிவாத முறையில் மறுப்பது, காவுட்ஸ்கியின் அதீத ஏகாதிபத்திய கொள்கையை ஏற்றுக் கொள்வது, மற்றும் இன்னும் பல பிற குற்றங்களை எங்கள் மீது சுமத்தியுள்ளது. உண்மையான நடைமுறைகள் பற்றியும் மற்றும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பற்றி எங்களின் மனோபாவம் குறித்தும் முழுமையான அறியாமையுடன் இருப்பதால், இந்தக் "குற்றச்சாட்டுகள்" குறித்து நாம் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. இருந்தாலும், இந்த அதிமுக்கிய உலக பிரச்சினையை குழப்புவதிலும் திரிப்பதிலும், பிரச்சினை குறித்த நமது முறைப்படுத்திக்கூறலுக்கு எதிரான அற்ப மோதலில், ஏற்கனவே வீணடிக்கப்பட்டதை விட அதிகமான முயற்சியை (இவ்விடத்தில், வரைவு வேலைத்திட்டத்தின் ஆசிரியர்களால்) வீணடிக்க முடியாது என்பதை நம்மால் கூறாமல் இருக்க முடியாது. இருப்பினும், எமது முறைப்படுத்திக்கூறலானது நடந்த நிகழ்வுகள் மூலம் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் கூட, அமெரிக்காவை எதிர்நோக்கும் வர்த்தக மற்றும் தொழில் நெருக்கடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு அமெரிக்க மேலாளுமையின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு - எழுத்தளவில்- முன்னணி கம்யூனிஸ்ட் அமைப்புகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்க நெருக்கடி காலஅளவு மற்றும் அதன் சாத்தியமான ஆழம் பற்றிய சிறப்பு பிரச்சினை குறித்த ஆராய்ச்சிக்குள் நாம் இங்கு நுழைய முடியாது. இது ஒரு நெருக்கடி சூழல் குறித்த கேள்வியே அன்றி ஒரு வேலைத்திட்டத்தினுடையது அல்ல. எங்களைப் பொறுத்தவரை, ஒரு நெருக்கடியின் தவிர்க்க முடியாத தன்மை என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது; அதேபோல், அதற்கடுத்த நெருக்கடி, அமெரிக்க முதலாளித்துவத்தின் தற்போதைய உலகளாவிய எல்லையை கருதும்போது, இன்னும் அதிக ஆழமும் கூர்மையும் கொண்டதாக வரமுடியும் என்பது நமது சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்றும் நாங்கள் கருதவில்லை. ஆனால், இதிலிருந்து வட அமெரிக்காவின் மேலாளுமை கட்டுப்படுத்தப்படும் அல்லது பலவீனப்படுத்தப்படும் என்றெல்லாம் ஒரு முடிவிற்கு வரமுயற்சிப்பது எதுவாய் இருப்பினும் அதை நியாயப்படுத்த முடியாது. அப்படி ஒரு முடிவு ஒட்டுமொத்தமான மூலோபாய தவறுகளுக்கே இட்டுச் செல்ல முடியும்.
மாறாக, நிகழ்வு அதற்கு எதிர்மாறானது தான் நிகழ்வில் உள்ளது. நெருக்கடியான சமயத்தில், அமெரிக்காவின் மேலாளுமை செழுமைக் காலத்தில் இருந்ததை விடவும் இன்னும் முழுமையுடன், மிகவும் வெளிப்படையாக, மற்றும் மிக மூர்க்கத்துடனும் செயல்படும். அமெரிக்கா தனது சிக்கல்களில் இருந்தும் நலிவுகளில் இருந்தும் மீளவும், வெளிவரவும் முதலாவதாய் ஐரோப்பாவின் நலன்களை பலியிட்டு முயற்சிக்கும், இது ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அல்லது ஐரோப்பாவிலேயே நடப்பதானாலும் சரி, அல்லது இது அமைதி வழியிலோ அல்லது போர் வழியிலோ நடப்பதானாலும் சரி.
அமெரிக்க தலையீட்டின் முதலாவது காலம் ஐரோப்பாவில் ஸ்திரப்படுத்துதலிலும் மற்றும் அமைதிப்படுத்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் - இது இன்னமும் கூட குறிப்பிடத்தகுந்த அளவில் பலமாக உள்ளதுடன், மேலும் அவ்வப்போது மீண்டும் கிளர்ந்தெழலாம். (குறிப்பாக பாட்டாளி வர்க்கத்தின் புதிய தோல்விகளில்). குறிப்பாக அதன் சொந்த பொருளாதார சிக்கல்கள் மற்றும் நெருக்கடிகளின் போது அமெரிக்க கொள்கையின் பொதுவான பாதையானது ஐரோப்பாவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் மிகவும் ஆழமான நெருக்கடிகளை தோற்றுவிக்கும். இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதிலிருந்து, கடந்த பத்தாண்டுகளை விடவும் வரும் பத்தாண்டுகளில் புரட்சிகர சூழல்களுக்கு பஞ்சம் இருக்காது என்ற நமது தீர்மானம் முக்கியமானது அல்ல என்று கூற முடியாது. அதனால் தான், வளர்ச்சியின் அடிப்படை உந்துசக்திகளை, நாம் அவற்றின் செயற்பாட்டால் திகைப்படையாமல் இருப்பதற்கு, சரியாகப் புரிந்து வைத்திருப்பது அவசியம். கடந்த பத்தாண்டுகளில் புரட்சிகர சூழல்களின் முக்கிய ஆதாரம் ஏகாதிபத்திய யுத்தத்தின் நேரடி விளைவுகளில் இருந்தது என்று சொன்னால், இரண்டாவது யுத்தத்திற்கு பிந்தைய பத்தாண்டுகளில் புரட்சிகர எழுச்சியின் முக்கிய ஆதாரம் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகளாக இருக்கும். அமெரிக்காவில் ஒரு அதீத நெருக்கடியானது புதிய போர்கள் மற்றும் புரட்சிகளுக்கான ஒரு அபாய சங்காக ஒலிக்கும். நாங்கள் மறுபடியும் சொல்கிறோம்: புரட்சிகர சூழல்களுக்கு எந்த பஞ்சமும் இருக்காது. முழு வினாவும் பாட்டாளி வர்க்க சர்வதேச கட்சியின் மீதும், சர்வதேச அகிலத்தின் முதிர்ச்சி மற்றும் போரிடும் திறன், அதன் மூலோபாய நிலை மற்றும் தந்திரோபாய வழிமுறைகளின் சரியான தன்மை போன்றவற்றின் மீதும் தொக்கி நிற்கிறது.
கம்யூனிச அகிலத்தின் வரைவு வேலைத்திட்டத்தில் இந்த எண்ண ஓட்டம் குறித்த எவ்வித வெளிப்பாடும் சுத்தமாக இல்லை. இத்தகு மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உண்மை, "உலக பொருளாதார மையத்தை அமெரிக்காவுக்கு மாற்றுதல்" என, ஒரு சாதாரண பத்திரிகை குறிப்பினைப் போல முக்கியத்துவம் குறைத்துக் காட்டப்படுகிறது. இதனை, இடப் பற்றாக்குறை என்று கூறி நியாயப்படுத்தவே முடியாது, அடிப்படைக் கேள்விகளுக்கு இடமில்லையென்றால் ஒரு வேலைத்திட்டத்தில் வேறு எதற்கு தான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்? தவிரவும், இரண்டாம் மட்ட மற்றும் மூன்றாம் மட்ட முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கெல்லாம் வேலைத்திட்டத்தில் அளவுக்கதிகமான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும். பொதுவான இலக்கிய அலட்சியத்தையும், ஒன்றையே மீண்டும் மீண்டும் கூறியிருப்பதை நீக்கினால் இந்த வேலைத்திட்டம் குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து விடும் என்பதையும் பற்றி எதுவும் கூறத் தேவையில்லை.