line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 1: சர்வதேச புரட்சி வேலைத்திட்டமா அல்லது தனி ஒரு நாட்டில் சோசலிசத்திற்கான வேலைத்திட்டமா?

Print part 1on single page

7. உலகப் பொருளாதாரத்தின் மீதான சோவியத் யூனியனின் சார்பு

தேசிய சோசலிச சமுதாயத்தின் நடப்பு தீர்க்கதரிசிகளுக்கு எல்லாம் முன்னோடித் தூதராக விளங்கியவர் வேறு யாருமல்ல, திரு வொல்மார் தான். தனிமைப்பட்ட சோசலிச அரசு என்று தலைப்பிடப்பட்ட தனது கட்டுரையில் பாட்டாளி வர்க்கமே முன்னேறிய பிரிட்டனுடையதை விட அதிக வளர்ச்சியுற்றதாய் இருந்த ஜேர்மனியில் சுதந்திரமான சோசலிச கட்டமைப்புக்கான வாய்ப்பு குறித்து, விளக்கும்போது வொல்மார் 1878ல், பல்வேறு இடங்களிலும் திட்டவட்டமாகவும் மிகத் தெளிவாகவும் சமச்சீரற்ற வளர்ச்சி விதி குறித்து குறிப்பிடுகிறார். ஸ்ராலினின் கருத்துப்படி மார்க்ஸுற்கும் ஏங்கல்சுக்கும் இது பரிச்சயமற்றது. அந்த விதியின் அடிப்படையில் வொல்மார் 1878ல் பின்வரும் மறுக்கமுடியாத தீர்மானத்திற்கு வந்தார்:

"நிலவுகின்ற சூழல்களின் கீழ், இவை வருங்காலத்திலும் தங்களது சக்தியை கொண்டிருக்கும், கலாச்சார வளர்ச்சியடைந்த அனைத்து நாடுகளிலும் ஒரே சமயத்தில் சோசலிசத்தின் வெற்றி என்பது முழுக்கவும் கேள்விக்கு அப்பாற்பட்டது என்பதை காணமுடியும்."

இந்த சிந்தனையை மேலும் வளர்த்து, வொல்மார் கூறுகிறார்: "இதனை ஒரே சாத்தியம் கொண்ட வழி என்று கூற முடியாவிட்டாலும் கூட அநேக சாத்தியமானது என்பதை நான் நிரூபித்திருப்பதாகவே நம்புகிறேன், இவ்வாறாக நாம் தனிப்படுத்தப்பட்ட சோசலிச அரசு என்பதற்கு வந்திருக்கிறோம்."

"தனிப்படுத்தப்பட்ட அரசு" என்று குறிப்பிடப்படும் இடத்தில், இது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழான ஒரு அரசு என்பதை இங்கே நாம் புரிந்து கொள்ளலாம், மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் நன்கு அறிந்த, மற்றும் லெனின் மேலே குறிப்பிட்ட 1915 கட்டுரையில் வெளிப்படுத்திய மறுக்கவியலா ஒரு சிந்தனையை வொல்மார் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் அதற்குப் பின்னர்தான் வொல்மாரின் முழுமையான சொந்த சிந்தனை என்று சொல்லப்படுவது வருகிறது, இது தொலைதூரப் பார்வையில் பார்த்தால், தனியொரு நாட்டில் சோசலிச தத்துவம் பற்றிய நமது புரவலர்களின் சூத்திர வடிவமைப்பினை போலல்லாது ஒரு பக்கச் சார்புடையதாகவும் தவறான வடிவமைப்பு கொண்டதாகவும் இல்லை. சோசலிச ஜேர்மனியானது உயிரோட்டமுள்ள பொருளாதார உறவுகளை உலக முதலாளித்துவ பொருளாதாரத்துடன் கொண்டிருக்கும், அதே சமயத்தில் மிகவும் உயர்ந்த வளர்ச்சியடைந்த தொழில்நுட்பமும் மற்றும் மிகக் குறைவான உற்பத்தி செலவும் கொண்டிருக்கும் அனுகூலத்தையும் பராமரிக்கும் என்னும் தனது முன்மொழிவினை தொடக்கப் புள்ளியாக வொல்மார் எடுத்துக் கொண்டார். இந்த கட்டுமானமானது சோசலிச மற்றும் முதலாளித்துவ அமைப்புகளின் சமாதான சகவாழ்வு முன்னோக்கின் அடிப்படையிலானது. ஆனால் சோசலிசமானது எந்தளவிற்கு அதன் வளர்ச்சியின் பாதையில், தொடர்ந்து தனது பிரம்மாண்ட உற்பத்தி மேலாதிக்க திறனை வெளிப்படுத்துகின்றதோ, அந்தளவிற்கு ஒரு உலக புரட்சிக்கான தேவை தானாகவே வலுவிழந்து விடும்: சந்தையில் பொருள்களை மிக மலிவாக விற்பதன் மூலம் சோசலிசமானது முதலாளித்துவத்தை வெற்றி கொள்ளும்.

முதலாவது வரைவுத் திட்டத்தின் ஆசிரியரும், இரண்டாவது வரைவின் ஆசிரியர்களில் ஒருவருமான புக்காரின், ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமைப்பது என்கின்ற தனது கருத்தில், முழுக்கவும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தன்னிறைவு பெற்ற பொருளாதாரம் என்னும் சிந்தனையில் இருந்து தான் தொடர்கிறார். நமது புரட்சியின் இயல்பு மற்றும் சோவியத் யூனியனில் வெற்றிகரமாக சோசலிசத்தை கட்டமைப்பதற்கான சாத்தியம் என்று தலைப்பிடப்பட்ட புக்காரினது கட்டுரையில் [33], இது ஏமாற்றுவாதத்தினால் பெருக்கப்பட்ட தத்துவ அறிவின் கடைசி வார்த்தையெனக் கொள்ளலாம், அனைத்து காரண காரியங்களுமே தனிமைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தின் எல்லைகளுக்குள் தான் மேற்கொள்ளப்படுகிறது. பின்வருவது தான் முதன்மையான மற்றும் ஒரே வாதம்:

"நாம் சோசலிசத்தை கட்டமைப்பதற்கான 'அவசியமான மற்றும் தேவையான' அனைத்தும் கொண்டிருக்கிறோம், எனவே, சோசலிசத்தை கட்டமைக்கும் அந்தப் பணியில் மேலும் கட்டுமானம் செய்வது சாத்தியமில்லை என்கின்ற நிலையிலான ஒரு விடயம் இருக்கவே முடியாது. முந்தைய வருடத்துடன் ஒப்பிடும்போது, நமது பொருளாதாரத்தின் சோசலிச பிரிவு கூடுதல் எடை மற்றும் பலத்துடன் வலுவுற்று நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம், நமது பொருளாதாரத்தின் சோசலிசத் துறையானது தனியார் முதலாளித்துவ துறைகளை விட அதிகமான வேகத்தில் வளர்கின்றன என்கின்ற வகையில் நமது நாட்டிற்குள் இத்தகையதொரு சக்திகளின் கூட்டினை கொண்டிருப்போமேயானால், வரும் ஒவ்வொரு புதிய வருடத்திலும் சக்திகளின் ஒரு கூடுதல் மிதமிஞ்சிய பலத்துடன் நாம் நுழைந்து கொண்டிருப்போம்."

இந்த காரணம் குற்றம் காண முடியாதது: "நாம் அவசியமான மற்றும் தேவையான அனைத்தையும் கொண்டிருப்பதில் இருந்து," எனவே நாம் அவற்றை கொண்டிருக்கிறோம். நிரூபிக்கப்பட வேண்டிய ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி, புக்காரின் ஒரு தன்னிறைவு பெற்ற சோசலிச பொருளாதாரத்தின் முழுமையான அமைப்பு ஒன்றினை எந்தவித நுழைவுவழியும் அல்லது வெளியேறும் வழியும் இல்லாமல் கட்டமைக்கிறார். புக்காரினுக்கும், இதேபோல் தான் ஸ்ராலினுக்கும் வெளிப்புற சூழ்நிலை அதாவது மொத்த உலகத்தையும் பொறுத்தவரை அதனை தலையீடு என்ற கோணத்தில் இருந்து மட்டுமே தனக்கு நினைவூட்டிக் கொள்கிறார். புக்காரின் தனது கட்டுரையில் சர்வதேச காரணியில் இருந்து "பிரித்தெடுத்துக்" கொள்ளும் தேவை குறித்து பேசும்போது, அவர் மனதில் இருப்பது உலக சந்தை அல்ல மாறாக இராணுவ தலையீடு தான். புக்காரின் உலக சந்தையில் இருந்து எடுக்க வேண்டியிருக்கவில்லை ஏனென்றால் அவர் தனது முழுமையான கட்டுமானத்திலும் இது குறித்து அறவே மறந்து விட்டார். இந்த திட்டத்துடன் ஒத்திசைவதில், ரஷ்ய கட்சியின் பதினான்காவது பேரவை மாநாட்டில் புக்காரின், தலையீட்டினால் வளர்ச்சி தடைசெய்யப்படாவிட்டால் நாம், சோசலிசத்தை "ஒரு ஆமையின் வேகத்திலாவது" கட்டமைப்போம் என்கிற கருத்தை ஆதரித்துப் பேசினார். இரண்டு அமைப்புகளுக்கு இடையிலான குறுக்கீடு இல்லாத போராட்டம் தொடர்பான கேள்வி, மிக உயர்ந்த உற்பத்தி சக்திகளைத்தான் சோசலிசத்தை அடிப்படையாகக் கொள்ள முடியும் என்கின்ற உண்மை; ஒரு வார்த்தையில் கூறுவதானால், வளர்ச்சியடையும் உற்பத்தி சக்திகளின் அடிப்படையில்தான் ஒரு சமூக அமைப்பு மற்றொன்றினால் மாற்றீடு செய்யப்படும் என்பதுதான் மார்க்சிச இயக்கவியல் (Dynamics) - இவை அனைத்துமே முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன. புரட்சிகர மற்றும் வரலாற்று இயங்கியலானது ஒரு குறைவான தொழில்நுட்பத்தால் கட்டப்பட்ட, தேசிய எல்லைகளுக்குள்ளாக "ஆமையின் வேகத்தில்" வளர்ச்சி அடையக்கூடிய, புறஉலகின் தலையீடு குறித்த தனது பயத்தினால் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கக் கூடிய ஒரு தன்னிறைவு சோசலிசம் குறித்த பிற்போக்கு கற்பனாவாதத்தால் இடம்மாற்றப்பட்டிருக்கிறது. மார்க்ஸ் மற்றும் லெனின் தத்துவங்களின் இந்த பரிதாபமான கேலிச்சித்திரத்தின் படிப்பினைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது "சமூக ஜனநாயக தவறிழைப்பு" என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. புக்காரினது மேற்கோள் கட்டுரையில், நமது கருத்துக்களின் மீதான இந்த வகைப்படுத்தலானது, முதல் முறையாக, பொதுவாக மேம்பட்டதாகவும் மற்றும் "மெய்ப்பிக்கப்பட்டதாகவும்" இருக்கிறது. நாம் "சமூக ஜனநாயக தவறிழைப்பில்" வீழ்ந்தோம் என்றால் அதன் காரணம் தனியொரு நாட்டில் சோசலிசம் பற்றிய வொல்மாரின் கருத்தாக்கத்தில் இருந்து செய்யப்பட்ட மட்டமான ஒட்டுவேலையை நாம் ஏற்றுக் கொள்ள மறுத்தது தான் என்பதை வரலாறு குறித்துக் கொள்ளும்.

உலகப் பொருளாதார சங்கிலியில் ரஷ்யா ஒரு இணைப்பு வளையமாக - மிகப் பலவீனமான வளையமாக, எப்படியாயினும் ஒரு வளையமாக இல்லாதிருந்தால், ஜாரிச ரஷ்ய பாட்டாளி வர்க்கமானது அக்டோபரில் அதிகாரத்தை எடுத்துக்கொண்டிருக்க முடியாது. பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றியதால் சோவியத் குடியரசு முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட சர்வதேச உழைப்பு பிரிவினையில் இருந்து எந்த வகையிலும் விலக்கி வைக்கப்பட்டு விடவில்லை.

இரவு நேரத்தில் மட்டுமே பறந்து வரும் புத்திசாலி ஆந்தையைப் போல், தனியொரு நாட்டில் சோசலிச தத்துவமானது, நமது தொழிற்துறை, --இது முன்னெப்போதையும் விட அதிகமான அளவில் பழைய நிலையான மூலதனத்தை, இதன் மூன்றில் இரு பங்கு தான் நமது தொழிற்துறையின் உலக தொழில்துறை மீதான சார்பை கெட்டிப்படுத்தியிருக்கையில் களைப்படைய செய்துள்ளதுடன், தன்னை புதுப்பிப்பதற்கான மற்றும் உலக சந்தையுடன் தனது உறவுகளை விரிவுபடுத்துவதற்கான அவசரத் தேவைக்கான அறிகுறிகளை காட்டியிருக்கின்ற ஒரு தருணத்தில், வெளிநாட்டு வர்த்தக பிரச்சினைகள் முழு வீச்சுடன் நமது பொருளாதார இயக்குநர்களின் முன்னால் எழுந்து நிற்கும் ஒரு தருணத்தில் மேலெழுந்து வருகிறது.

பதினோராவது பேரவை மாநாட்டில், அதாவது, லெனின் கட்சிக்கு உரையாற்ற கிடைத்த கடைசி வாய்ப்பின் போது, கட்சி மற்றுமொரு சோதனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதாக சரியான நேரத்தில் ஒரு எச்சரிக்கையை அவர் அளித்தார்: "...அதில் நாம் சார்ந்து உள்ள, அதனுடன் நாம் இணைக்கப்பட்டுள்ள மற்றும் இதிலிருந்து நாம் தப்பிக்க முடியாத ரஷ்ய மற்றும் சர்வதேச சந்தையால் இடப்பட்டுள்ள ஒரு சோதனைக்கு நாம் உள்ளாக்கப்பட்டுள்ளோம்.

நமது வெளிநாட்டு வர்த்தக எண் விவரங்கள் (Control Figures) சமீப வருடங்களில் நமது பொருளாதார திட்டங்களுக்கான தகவல்களின் முக்கிய படிக்கல்லாக மாறி விட்டிருக்கிறது என்கிற எளிமையான உண்மையை விட ஒரு தனிமைப்பட்ட "முழுமையான சோசலிச" தத்துவத்திற்கு மரண அடி கொடுக்கும் ஒரு விஷயம் இருக்க முடியாது. நமது தொழிற்துறை உள்ளிட்ட நமது பொருளாதாரத்தின் "நெருக்குதலான இடம்" என்பது நமது இறக்குமதி வர்த்தகம், இது முழுக்கவும் நமது ஏற்றுமதி வர்த்தகத்தை சார்ந்தது. எப்படி ஒரு சங்கிலியின் உறுதியானது அதன் மிகப் பலவீனமான வளையத்தை கொண்டுதான் எப்போதும் மதிப்பிடப்படுகிறதோ, அதேபோல் நமது பொருளாதாரத் திட்டங்களின் பரிமாணங்களானது நமது இறக்குமதிகளின் பரிமாணங்களுக்கு ஏற்பவே இயக்கப்படுகிறது.

திட்டமிட்ட பொருளாதாரம் இதழில் (தேசிய திட்ட ஆணைக்குழுவின் தத்துவார்த்த சஞ்சிகை) திட்டமிடும் அமைப்பிற்கு அர்ப்பணிக்கப்பட்டதொரு கட்டுரையில் நாங்கள் இவ்வாறு படித்தோம், "...நடப்பு ஆண்டிற்கான கட்டுப்பாட்டு இலக்கங்களை நிர்ணயிக்கும்போது, நமது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திட்டங்களை எமது ஒட்டுமொத்த திட்டத்திற்குமான ஆரம்பப் புள்ளியாக உரிய வழிவகைகளில் நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டி வந்தது; நாங்கள் இவற்றை தொழிற்துறையின் பல்வேறு கிளைகளுக்குமான எங்களது திட்டங்களில், அதனைத் தொடர்ந்து பொதுவான தொழிற்துறையில் மற்றும் குறிப்பாக புதிய தொழில் நிறுவன கட்டுமானத்திற்கானதில்," இன்னும், இன்னும் பல எங்களது திட்டங்களில் நோக்குநிலைப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.. [34]

கட்டுப்பாட்டு எண் விவரங்களானது எமது பொருளாதார வளர்ச்சியின் திசை மற்றும் விசைவேகத்தை தீர்மானிக்கின்றன என்பதையும், ஆனால் இந்த எண் விவரங்கள் ஏற்கனவே உலக பொருளாதாரத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதையும், அரசு திட்ட ஆணைக்குழுவின் ஆய்வுமுறை சார்ந்த இந்த அணுகுமுறை வெளிப்படையாக, காதிருக்கும் அனைவரும் கேட்க இயலும் வகையில் கூறுகிறது; வலிமையாக உருவெடுத்து விட்ட காரணத்தால், நாங்கள் தனிமைப்படலின் நச்சு வட்டத்தில் இருந்து விடுபட்டோம் என்பதல்ல.

முதலாளித்துவ உலகமானது இராணுவ தலையீடுகள் பற்றிய இணங்கவைக்கும் சாதனங்களை விடவும் ஏனைய இணங்க வைக்கும் சாதனங்களை அது கொண்டிருக்கிறது என்பதை அதன் ஏற்றுமதி இறக்குமதி விவரங்களால் நமக்குக் காட்டுகிறது. உழைப்பின் உற்பத்தித் திறனும் மற்றும் ஒரு சமூக அமைப்பின் உற்பத்தித் திறனும் ஒரு ஒட்டுமொத்த வடிவாக சந்தையில் விலைகளின் இணைத்தொடர்பால் அளவிடப்படுகிறது என்கிற நிலையில், இராணுவத் தலையீடானது மலிந்த முதலாளித்துவ பொருட்களின் தலையீட்டின் அளவுக்கு சோவியத் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உடனடி ஆபத்தாக பங்களிக்கக் கூடியது அல்ல. இது மட்டுமே "ஒன்றின் சொந்த" பூர்சுவாக்கள் மீதானதொரு தனிப்பட்ட பொருளாதார வெற்றி குறித்த கேள்வி மட்டுமே அல்ல என்பதை நிரூபிக்கும்: "மொத்த உலகத்திற்கும் வரவிருக்கும் சோசலிச புரட்சியானது எந்த வகையிலும் ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் அதன் சொந்த பூர்சுவாக்கள் மீது பெறும் வெற்றியின் மீது மட்டும் தங்கியிருக்க முடியாது." [35] இங்கே சம்பந்தப்பட்டிருப்பது இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையிலான ஒரு போட்டியும், வாழ்வா சாவா போராட்டமும் ஆகும், இவற்றில் ஒன்று பின்தங்கிய உற்பத்தி சக்திகளின் மீது கட்டுமானத்தை தொடங்கியுள்ளது, மற்றொன்று கணக்கிட முடியாத மிகப்பெரும் வலிமை கொண்ட உற்பத்தி சக்திகளின் மீது இன்றும் தங்கியுள்ளது.

உலக சந்தையின் மீதான நமது சார்பினை (உலக சந்தைக்கு நாம் கீழ்ப்படிந்துள்ளோம் என லெனின் வெளிப்படையாகப் பேசினார்) ஒப்புக்கொள்வது "அவநம்பிக்கை" எனக் கொள்ளும் எவர் ஒருவரும், உலகச் சந்தைக்கு எதிராக தனது பிராந்திய குட்டிமுதளாளித்துவ கோழைத்தனத்தையும், உலகப் பொருளாதாரத்தில் இருந்து ஒரு புதருக்குப் பின்னால் மறைந்து கொண்டு, எப்படியோ தனது சொந்த வளங்களைக் கொண்டே சமாளித்து விடலாம் என்று நம்பும் தனது வளர்ப்பு வழிவந்த " நம்பிக்கை"யின் பரிதாப குணத்தையுமே இங்கு வெளிப்படுத்துகிறார்.

சோவியத் ரஷ்யா இராணுவத் தலையீட்டால் அழித்துவிட முடியுமே தவிர ஒருபோதும் தனது சொந்த பொருளாதார பின்தங்கிய நிலையினால் அல்ல என்னும் தான்தோன்றித்தனமான சிந்தனைக்கு புதிய கருத்தாக்கம் ஒரு கௌரவத்தை அளித்துள்ளது. ஆனால், ஒரு சோசலிச சமுதாயத்தில் தங்களது நாட்டைப் பாதுகாப்பதற்கான உழைக்கும் மக்களின் தயார்நிலையானது, அந்த நாட்டை தாக்கத் துடிக்கும் முதலாளித்துவ அடிமைகளின் தயார்நிலையினை விட அதிகமாக இருக்கும் வரையில், இக்கேள்வி எழுகிறது: ஏன் இராணுவத் தலையீடானது நம்மை அழிவைக் காட்டி அச்சுறுத்த வேண்டும்? காரணம் எதிரி தனது தொழில்நுட்பத்தில் கணக்கிடமுடியாத அளவு வலிமை பெற்று இருப்பது தான். உற்பத்தி சக்திகளின் உயர்வில் விஞ்சிய நிலையினை அவர்களின் இராணுவ தொழில்நுட்ப அம்சத்தில் மட்டுமே புக்காரின் ஒப்புக் கொள்கிறார். ஒரு ஃபோர்டு டிராக்டர் ஒரு க்ருசாட் துப்பாக்கி அளவுக்கு ஆபத்தானதே என்பதை புரிந்து கொள்ள அவர் விரும்பவில்லை, ஒரே வித்தியாசம் துப்பாக்கி அவ்வப்போதான சமயங்களில் மட்டுமே செயல்படும், டிராக்டரோ நம் மீது அதனது தொடர்ந்த அழுத்தத்தை தரக்கூடியது. தவிரவும், தனக்குப் பின்னால், கடைசி வழியாக பயன்படுத்தும் வண்ணம் துப்பாக்கி உள்ளது என்பது டிராக்டருக்கும் தெரியும்.

உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியான முதலாவது தொழிலாளர் அரசாகிய நாம், உலக பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து உலக மூலதனத்தில் தங்கியிருக்கிறோம். "தொடர்புகள்" என்னும் இந்த உணர்வற்ற, முனைமழுங்கிய, மற்றும் அதிகாரரீதியாக சக்தியற்றதாக ஆக்கப்பட்டுள்ள வார்த்தையானது, இந்த 'தொடர்புகளின்' கவலை தரும் வகையில் அதீத பொறுப்பு மிக்கதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும் இயல்பை மறைக்கும் நோக்கத்துடனேயே உலவ விடப்படுகிறது. நாம் உலகச் சந்தையின் விலைகளில் உற்பத்தி செய்து கொண்டிருந்தோமானால், பிந்தையதின் மீதான நமது சார்பு, சார்பு நிலையில் இருந்து விலகாமலேயே, இப்போது இருப்பதை விடவும் குறைவான நிலையிலேயே தீவிரத்தன்மையைக் கொண்டிருந்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக அதுபோல் இல்லை. வெளிநாட்டு வர்த்தகத்தின் மீதான நமது ஏகபோக நிலையே நமது சார்புநிலையின் தீவிரமான மற்றும் ஆபத்தான குணத்திற்கு சாட்சி. நமது சோசலிச கட்டுமானத்தில் ஏகபோகத்தின் தீர்மானிக்கும் முக்கியத்துவமானது துல்லியமாக, நமக்கு சாதகமற்றதாக இருக்கும், சக்திகளின் நடப்பு இணைத்தொடர்பின் விளைவே ஆகும். ஆனால், வெளிநாட்டு வர்த்தக ஏகபோகமானது உலக சந்தையின் மீதான நமது சார்பை கட்டுப்படுத்துகிறதே தவிர, அதனை நீக்கவில்லை என்பதை நாம் ஒரு கணம் கூட மறந்து விடக் கூடாது.

"நமது சோவியத் குடியரசானது (லெனின் கூறுவது) ஒட்டுமொத்த முதலாளித்துவ உலகத்தால் சூழப்பட்ட ஒரு தனிமைப்பட்ட எல்லைப்பகுதியாக தொடரும் வரை, நமது முழுமையான பொருளாதார சுதந்திரம் மற்றும் நமது அபாயங்கள் எதுவும் மறைவது குறித்த சிந்தனை முழுக்க முழுக்க பொருத்தமற்ற கனவாகவும் கற்பனை உலக சஞ்சரிப்பாகவுமே இருக்கும்." [36]

நமக்கு விரோதமான ஒரு முதலாளித்துவ பொருளாதாரத்தில் "தனிமைப்பட்ட எல்லைப்பகுதியாக" சோவியத் ரஷ்யாவின் புறநிலையான நிலைமையிலிருந்து முதன்மை அபாயங்கள் கிளம்புகின்றன. இருப்பினும் இந்த அபாயங்கள் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். இது இரண்டு காரணிகளின் செயல்பாட்டைப் பொறுத்தே உள்ளது: ஒரு பக்கம் நமது சோசலிச கட்டுமானம், இன்னொரு பக்கம் முதலாளித்துவ பொருளாதாரத்தின் வளர்ச்சி. இறுதி ஆய்வில், இரண்டாவது காரணி, அதாவது ஒட்டுமொத்த வடிவாக உலக பொருளாதாரத்தின் தலைவிதி தான் தீர்மானிக்கும் முக்கியத்துவம் கொண்டது.

இறுதியில் சோசலிச குடியரசின் வீழ்ச்சிக்கு நிச்சயம் இட்டுச் செல்லக்கூடிய முதலாளித்துவ அமைப்பின் உற்பத்தித் திறனுக்கு நமது சோசலிச அமைப்பின் உற்பத்தித் திறனானது தொடர்ந்து பின்தங்கிக் கொண்டு வருவது என்பது நிகழ இயலுமா - அப்படியென்றால் எந்த குறிப்பிட்ட சூழலில்? தலைமைகளின் மீது ஒப்பிட முடியாத அளவு அதிகமான பொறுப்புகள் கொண்டிருக்கும் ஒரு தொழில்துறை அடிப்படையை சுதந்திரமாக உருவாக்குவதன் அவசியம் இருக்கும் இந்த புதிய காலகட்டத்தில், நமது பொருளாதாரத்தை நம்மால் திறமையாக நிர்வகிக்க முடிகிறதென்றால், நமது தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் வளர்ச்சியுறும். இருந்தாலும், முதலாளித்துவ நாடுகளில், இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மேலாதிக்க நிலையிலுள்ள முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் நமது தேசத்தில் உள்ளதை விட அதிக வேகத்தில் வளர்ச்சியடையும் என்பது கருதுவதற்கியலாதது அல்ல என்று கூற முடியுமா? இந்த கேள்விக்கு தெளிவான ஒரு பதிலைக் கூறாமல், நமது நடைவேகமே "தன்னளவில்" போதுமானது ("ஆமையின் வேகம்" என்னும் அர்த்தமற்ற தத்துவத்தைக் கூட விட்டுத் தள்ளுங்கள்) என்கின்ற சலிப்பூட்டும் உறுதிப்பாடுகளுக்கு எல்லாம் எந்தவிதமான அடிப்படையும் இல்லை. ஆனால் இரண்டு அமைப்புகளுக்கு இடையிலான மோதல் பற்றிய கேள்விக்கு விடையளிப்பதற்கான அம்முயற்சியே நம்மை உலக பொருளாதாரம் மற்றும் உலக அரசியல் கொண்ட தளத்திற்கு இட்டுச் செல்கிறது, அதாவது அவ்வப்போது அகிலத்தின் ஆதரவைப் பெறுகின்ற எந்த வகையிலும் ஒரு தன்னிறைவு பெற்ற சோவியத் குடியரசு அல்லாது சோவியத் குடியரசை உள்ளடக்கிய புரட்சிகர அகிலத்தின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகளினாலாகும்.

சோவியத் குடியரசின் தேசியப் பொருளாதாரம் குறித்து பேசும்போது வரைவு வேலைத்திட்டமானது கூறுகிறது, "இது பெருந்தொழில் துறையை முதலாளித்துவ நாடுகளில் உள்ள வளர்ச்சியை மிஞ்சும் ஒரு விசைவேகத்தில் வளர்க்கிறது". இவ்வாறாக இரண்டு விசைவேகங்களை அடுத்தடுத்து வைக்கும் முயற்சியை, நமது வளர்ச்சிக்கும் அகிலத்தின் வளர்ச்சிக்கும் இடையிலான ஒப்பீட்டு துணைக்காரணம் குறித்த கேள்வியையே திட்டவட்டமாக நிராகரித்த வேலைத்திட்ட ஆசிரியர்களின் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ஒரு ஒழுங்குமுறைப்பட்ட முன்னேறிய படியை நாம் கட்டாயம் அனுமதிக்க வேண்டும். "சர்வதேச காரணிக்குள் உள்நுழைய" எந்த அவசியமும் இல்லை என்றார் ஸ்ராலின். "ஆமையின் வேகத்திலாவது" நாம் சோசலிசத்தை கட்டமைப்போம் என்றார் புக்காரின். துல்லியமாக இந்த பாதையில் தான் பல வருட காலமாக கோட்பாடு சார்ந்த சர்ச்சைகள் ஏற்பட்டன. - நாம் இந்தப் பாதையில் மேலோட்டமாக வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால், பொருளாதார வளர்ச்சியின் விசைவேகங்களுக்கு இடையிலான உரை ஒப்பீடுகளில் வெறுமனே நுழைத்துக் கொள்ளாமல், விஷயத்தின் வேருக்குள் நுழைந்து பார்த்தோமேயானால், வரைவின் மற்றொரு பகுதியில், முதலாளித்துவ உலகத்துடன் எந்த தொடர்புபடுத்தலும் இன்றி, உள்நாட்டு உறவுகளை மட்டுமே ஒரு ஆரம்பப் புள்ளியாக எடுத்து, "ஒரு போதுமான குறைந்தபட்ச தொழில்துறை" குறித்து பேசுவது அனுமதிக்க இயலாதது; இதேபோல் சுதந்திரமாக சோசலிசத்தை கட்டமைப்பது எந்த ஒரு நாட்டிற்கும் "சாத்தியமா இல்லை சாத்தியமில்லையா" என்று முடிவை எடுப¢பது மட்டுமல்ல கேள்வியை முன¢வைப¢பதே கூட அதே அளவுக்கு அனுமதிக்க இயலாததே ஆகும். இந்த கேள்வி இரண்டு அமைப்புகளுக்கு இடையில், அகிலத்தின் இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டத்தின் இயக்கவியலால் தீர்மானிக்கப்படுகிறது; இந்தப் போராட்டத்தின் போது, நமது மீட்டமைவு காலத்தின் வளர்ச்சியின் குணகங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், ஒரு மறுக்கவியலாத மற்றும் அடிப்படையான உண்மை அப்படியே தொடர்கிறது:

"முதலாளித்துவமானது, சர்வதேச அளவில் எடுத்துக் கொண்டால், இன்றும் கூட, இராணுவ அடிப்படையில் மட்டுமல்லாது பொருளாதார அடிப்படையிலும், சோவியத் சக்தியை விட வலிமையுடையதாகவே இருக்கிறது. இந்த அடிப்படையான கருத்தை முன்நிறுத்திச் செல்வதோடு, இதனை ஒருபோதும் நாம் மறக்கவும் கூடாது." [37]

வளர்ச்சியின் வெவ்வேறு விசைவேகங்களுக்கு இடையிலான இடைத்தொடர்பு குறித்த கேள்வி வருங்காலத்திற்கான ஒரு வெளிப்படையான கேள்வியாகவே தொடர்கிறது. நெல் கொள்முதலை உறுதிசெய்யவும், மற்றும் நமது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை அதிகரிப்பதற்கும் இது, "ஸ்மைச்கா," அதாவது தொழிலாளர்-விவசாயிகள் கூட்டணியை, உண்மையிலேயே சாதிப்பதற்கான நமது திறமையை மட்டும் சார்ந்ததல்ல, வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நமது அக வெற்றிகளை மட்டும் பொறுத்ததல்ல, இவை இந்த போராட்டத்தில் அதி முக்கியமான காரணிகள் தான், மாறாக உலக முதலாளித்துவத்தின் தலைவிதியையும் பொறுத்தது, அதன் தேக்கம், எழுச்சி அல்லது வீழ்ச்சி, அதாவது, உலகப் பொருளாதாரம் மற்றும் உலகப் புரட்சியின் பாதையையும் பொறுத்தது. இதன் தொடர்ச்சியாக, கேள்வியானது தேசிய வடிவமைப்பிற்குள் தீர்மானிக்கப்படுவதில்லை மாறாக உலகப் பொருளாதார மற்றும் அரசியல் போராட்ட தளத்தில்தான் தீர்மானிக்கப்படுகிறது.