800 P&O இன் கப்பல் ஊழியர்களின் பணிநீக்கத்திற்கு எதிராக நான்கு பிரித்தானியத் துறைமுகங்களில் போராட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளியன்று டோவர், ஹல், லிவர்பூல் மற்றும் லார்ன் துறைமுகங்களில் 800 கப்பல் தொழிலாளர்கள் வியாழன் அன்று வெகுஜன பணிநீக்கம் செய்யப்பட்டதற்காக P&O க்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.

1980களின் மத்தியில் நிலக்கரிச் சுரங்க மற்றும் அச்சகத் தொழிலாளர்களுக்கு எதிரான பாரிய பொலிஸ் அடக்குமுறைக்கு பின்னர் கண்டிராத அளவிலான ஆத்திரத்துடன், P&O அதன் பணியாளர்களை சுருக்கமாக பணிநீக்கம் செய்ததால் கோபமடைந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர்.

DP World கொள்கலம் மற்றும் போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த நிறுவனம், டோவர் இலிருந்து கலே க்கு, ஹல் இலிருந்து ரோட்டர்டாம் க்கு, லிவர்பூல் இலிருந்து டப்ளின் க்கு மற்றும் ஸ்காட்லாந்தின் கெய்ர்ன்ரியன் இலிருந்து வடக்கு அயர்லாந்தின் லார்ன் க்கு, நான்கு வழித்தடங்களில் போக்குவரத்தை நிறுத்திய பின்னர், இணையவழி Zoom அழைப்பினூடாக தொழிலாளர்கள் எச்சரிக்கையின்றி பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

கப்பல் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்காக கருங்காலிகள் உட்புகுவதற்கான பாதை தனியார் பாதுகாப்புத்துறையினரால் உருவாக்கப்பட்டதுடன், தொழிலாளர்களின் உடமைகளை அனைத்தையும் பிளாஸ்டிக் பைகளில் ஒன்றாக இட்டு அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கம் (RMT), Nautilus International மற்றும் தொழிற் கட்சி ஆகியவை DP World பின்வாங்க வேண்டும் அல்லது நிறுவனத்தை தேசியமயமாக்க வேண்டும் என பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனிடம் செய்த வேண்டுகோளின் அடிப்படையில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தன. இக்கோரிக்கை சாத்தியமற்றது என உடனடியாக அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டது.

இந்த திவாலான அழைப்புகள் லிவர்பூல் மற்றும் ஹல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் P&O தொழிலாளர்கள் கலந்துகொள்ளாததை ஒரு விதத்தில் விளக்குகின்றன. டோவரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள், உள்ளூர் கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர் நத்தலி எல்ஃபிக்கி முன்னாள் தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பினின் நிழல் அதிபர் ஜோன் மெக்டோனலுடன் 'பிரித்தானிய கப்பல்களை பாதுகார்' என்ற பதாகையை வைத்திருந்த அருவருக்கும் காட்சியை எதிர்கொண்டனர். அவர் பேச முற்பட்ட போது, P&O தொழிலாளர்கள், “நாங்கள் டோரிகளை வெறுக்கிறோம், நாங்கள் டோரியை வெறுப்பவர்கள்” என்றும் “நீங்கள் அவர்கள் பக்கம் இருக்கிறீர்கள்”, “நீங்கள் வேலைநீக்கத்திற்கும் பின்னர் குறைந்த கூலியில் வேலைக்கு இருத்தும் ஒப்பந்தத்தினை ஆதரித்து வாக்களித்தீர்கள்” மற்றும் “நீங்கள் வெட்கப்படுங்கள்' எனவும் கோஷமிட்டனர்.

உள்ளூர் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்ப்னர் நத்தலி எல்ஃபிக்கே (இடது), RMT உதவிப் பொதுச் செயலாளர் ஸ்டீவ் ஹெட்லி (இரண்டாவது இடது), RMT பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச் (இரண்டாவது வலது) மற்றும் முன்னாள் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பினின் நிழல் அதிபர் ஜோன் மெக்டோனெல் (வலது) ஆகியோருடன் “பிரித்தானிய கப்பல்களை பாதுகார்” என்ற பதாகையை பிடித்துள்ளார்

போக்குவரத்துதுறைச் செயலர் கிராண்ட் ஷாப்ஸ், பாதுகாப்பு மந்திரி ஜேம்ஸ் ஹீப்பி மற்றும் ஜோன்சன் போன்றவர்கள், நிகழ்வுகளில் அதிர்ச்சியடைந்ததாகக் கூறிக்கொண்டு போலியான அனுதாபத்தை வெளிப்படுத்தியதற்கு அவர்கள் அளித்த முதல் பிரதிபலிப்பு இதுவாகும். P&O இன் திட்டங்கள் பற்றி டோரிகளுக்கு கூறப்பட்டிருந்ததாக நேற்று செய்திகள் வெளியாகின.

ஜோன்சனின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை, 'இது குறித்து எங்களுக்கு எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை' எனக் கூறினார். ஆனால், புதன்கிழமை மாலை நடைபெறவிருக்கும் பெருமளவிலான பணிநீக்கங்கள் மற்றும் கப்பல்ச் சேவைகள் இடைநிறுத்தப்படுவதைப் பற்றி தங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டதாக போக்குவரத்துத் துறையின் ஆதாரங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால் 'வணிக பாதிப்புகள் பற்றிய கவலைகள் காரணமாக ஒரு சிறிய குழுவிற்குள் தகவலை வைத்திருந்தனர்' என தெரிவிக்கப்பட்டது.

இதில் என்ன ஆச்சரியம். தொற்றுநோயின் போது வேலைகளை தொடர்ந்து வைத்திருக்க அது அரசாங்கத்திடம் இருந்து கோரப்பட்ட 10 மில்லியன் பவுண்டுகள் கொடுப்பனவுகள் ஒருபுறம் இருக்க, P&O இடமிருந்து DP World பேரம்பேசி கையகப்படுத்துதலில் உள்ளடங்கியுள்ள 300-400 மில்லியன் பவுண்டுகளை விட, இன்னும் அதிகளவு ஆபத்தில் உள்ளது.

கடந்த நவம்பரில் DP World, டோரி கட்சியின் பிரெக்ஸிட்டிற்குப் பிந்தைய பொருளாதார மூலோபாயத்தின் அடித்தளத்தை உருவாக்கும் 10 முதலீடுகளில் முதன்மையான Thames Freeport இயக்கும் உரிமையை பெற்றது.

UK freeports (சுதந்திர வர்த்தக மண்டலங்கள்) இறக்குமதியின் மீதான வரிகளை குறைத்தல் அல்லது தள்ளுபடி செய்வதை அடிப்படையாகக் கொண்டவை. இதனால் இங்கிலாந்து அதன் ஐரோப்பிய போட்டியாளர்களுடன் போட்டியிட முடியும். Thames Freeport 'தனது இந்த புதிய நிலை 5.1 பில்லியன் ($7.06 பில்லியன்) பவுண்டுகள் கூடுதல் மொத்த மதிப்பு கூட்டல் (GVA) மற்றும் புதிய அரசு மற்றும் தனியார் முதலீட்டில் 4.5 பில்லியன் ($6.23 பில்லியன்) பவுண்டுகளை தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் என பெருமைப்பட்டுக்கொண்டது.

DP World, மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திற்குச் சொந்தமானது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் காரணமாக விநியோக இழப்பை ஈடுகட்ட எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு ஜோன்சன் இந்த வாரம் அதனை கெஞ்சிக் கொண்டிருந்தார். அதன் தலைவராக பில்லியனர் சுல்தான் அஹ்மத் பின் சுலேயம் இருக்கையில், ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதம மந்திரி ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் DP World இன் தாய் நிறுவனமான Dubai World இல் பெரும்பான்மை பங்குதாரர் ஆவார்.

டோரிகளின் ஏனைய அரசியல் கவனத்தில், அவர்களின் இலக்குகளில் முதலாவதான தொழிலாள வர்க்கத்தின் மிக உயர்ந்த சுரண்டலில் ஒரு புதிய அளவுகோலை அமைக்க P&O உதவுகின்றது. ஹல்லில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு பணியாளர் டெய்லி மெயிலிடம், 'அவர்களுக்குப் பதிலாக முகவர்களால் கொண்டுவரப்பட்ட பணியாளர்கள் பிரிட்டிஷ் மாலுமிகளுக்கு 28 முதல் 30 பவுண்டுகள் மணித்தியால கட்டணத்துடன் ஒப்பிடும்போது ஒரு மணித்தியாலத்திற்கு 2 முதல் 3 வரை குறைந்தளவு பெறுகின்றனர்' என்று கூறினார்.

P&Oஆல் பணியமர்த்தப்பட்ட முகவர் ஊழியர்களில், அவர்கள் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது பற்றி எதுவும் தெரியாத இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் அடங்குவர் என்பது இப்போது அறியப்படுகிறது. ஹல்லில் வசிக்கும் ஆஸ்திரேலியரான மார்க் கேனட்-பால்ட்வின், ஒரு வாரத்திற்கு முன்பு தான் பணியமர்த்தப்பட்டதாக BBCஇடம் தெரிவித்தார். கிளாஸ்கோவிலிருந்து கெய்ர்ன்ரியானிலுள்ளP&O இன் கப்பல்தளத்திற்கான 'மோசமான பஸ் பயணத்திற்கு' பின்னர் தானும் மற்றவர்களும் என்ன நிகழ்கின்றது என்பதை உணர்ந்ததாக தெரிவித்தார்.

அவரும் ஏனைய முகவர் தொழிலாளர்களும் வெளியேறிவிட்டனர். “இவ்வாறான செயலை செய்தால் தன்னால் தனது பிள்ளைகளின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கமுடியாது” என்று அவர் தெரிவித்தார்.

இவை எதுவும் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் தொழிற்கட்சியின் தொனியை மாற்றவில்லை. நிழல் போக்குவரத்து செயலாளர் லூயிஸ் ஹைக், 'பிரிட்டனில் விசுவாசமான தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்' என்று அரசாங்கத்தை வலியுறுத்தினார். மற்றும் RMT பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச், உண்மையான சிறிய-இங்கிலாந்துகாரனின் பாணியில் 'ஒரு வெளிநாட்டு நிறுவனம் இங்கிலாந்து துறைமுகங்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது என்ற உண்மை ஒருநாளுக்கு முன்னர் அரசாங்கத்திற்கு தெரிந்திருந்தும், ஆனால் அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது' என்று கூறுகிறார்.

லிஞ்ச் மற்றும் நிறுவனத்திற்கு மட்டுமே இந்த 'அதிர்ச்சி'. பிரித்தானிய பொருளாதாரத்தில் வெளிநாட்டு நாசவேலையில் கவனம் செலுத்துவதில் அவரது நோக்கம் P&O இனால் உருவாக்கப்பட்ட கோபத்தின் அலையை அடக்கி, டோவரில் எதிர்ப்பாளர்கள் 'கப்பல்களை இப்போதே கைப்பற்றுங்கள்' “யாருடைய கப்பல்கள்? எங்கள் கப்பல்கள்' என்று கோஷமிட்டபோது, நியாயமற்ற பணிநீக்கத்திற்கான ஒரு சட்ட வழக்காக அதை மாற்றவும் மற்றும் அதை அரசாங்கத்திடம் முறையிடுவதை நோக்கி திருப்புவதும் ஆகும்.

கப்பல் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளைப் பாதுகாக்க தேசியவாதம் மற்றும் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள், தொழிற்கட்சி அல்லது டோரி அரசாங்கத்தை எதிர்நோக்க முடியாது. அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவும், கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை ஆக்கிரமிக்கவும் தொழிற்சங்கங்களைச் சாராமல் தங்களுடைய சொந்த சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைக்க வேண்டும். தொழிலாளர்களை தேசிய அடிப்படையில் பிரிக்கும் அனைத்து முயற்சிகளையும் நிராகரித்து, அவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒவ்வொரு பணியிடத்திலும் மற்றும் ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் கப்பல் மற்றும் துறைமுகத் தொழிலாளர்கள் உடன் ஐக்கியப்பட்ட நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

டோவர்

சுமார் 500 P&O தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் வியாழன் பாரிய பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து டோவரில் திரண்டனர். உள்ளூர் டோரி நாடாளுமன்ற உறுப்பினர் நத்தலி எல்ஃபிக்கை தொழிலாளர்கள் கேலி செய்த பின்னர், இரயில், கடல் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் மிக் லிஞ்ச் தான் தொழிலாளர்களின் கோபத்தைத் தணிக்க முயன்றார்.

டோவர் துறையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் (WSWS Media)

Zoom மூலம் சேர் கெய்ர் ஸ்டார்மருடன் பேசியதாகக் கூட்டத்தில் லிஞ்ச் கூறியபோது தொழிலாளர்களின் கூக்குரலை எதிர்கொண்டார். பணிநீக்கம் செய்யப்பட்ட P&O தொழிலாளர்களுக்கு தொழிற்கட்சியின் தலைவர் 'ஆதரவை' காட்டினார் என்றும், 'நாங்கள் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை சில விஷயங்களை முன்னெடுக்கப் போகிறோம்' என்றும் அவர் அறிவித்தார்.

எல்ஃபிக்கே மீதான தொழிலாளர்களின் கண்டனங்களை குறைக்க, லிஞ்ச் P&O தொழிலாளர்களிடம் கூறினார், 'எங்களுக்கு இப்போது அனைத்து அரசியல் பிரிவினரதும் நடவடிக்கை தேவை'. P&O இன் நடவடிக்கைகள், தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொழிற்கட்சி, டோரிகள் மற்றும் ஜனநாயக யூனியன் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளை ஒன்றிணைத்துள்ளன என்று அவர் கூறினார். 'இன்று எங்கிருந்து வந்தாலும் நாங்கள் ஐக்கியத்தினை ஆதரிக்கப் போகிறோம்' என்றார்.

முன்னாள் நிழல் அதிபர் ஜோன் மக்டோனெல், தொழிலாளர்களின் போர்க்குணமிக்க மனநிலைக்கு வேண்டுகோள் விடுத்தார். P&O இன் கப்பல்களை கையகப்படுத்த திங்கள்கிழமை வரை அரசாங்கத்திற்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும், தவறினால் அவை கைப்பற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். மக்டோனெல் கப்பல்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உண்மையில் மிகவும் குறைவாகும்.

இந்தப் பேரணி துறைமுகத்தை முற்றுகையிடும் என்று பல தொழிலாளர்கள் எதிர்பார்த்தனர். அவர்கள் Maritime House இலிருந்து கப்பல்துறைக்கு அணிவகுத்துச் சென்றபோது, “கப்பல்களைப் பறிமுதல் செய்” என்று கோஷமிட்டனர். கப்பல்துறையின் நுழைவாயிலில், சர்வதேச போக்குவரத்து கூட்டமைப்பைச் சேர்ந்த பேச்சாளர், P&O இன் தாக்குதலால் ஐரோப்பா முழுவதும் உள்ள மாலுமிகளின் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் விவரித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் முன்மொழியப்படவில்லை. Channel View சாலையில் உள்ள P&O தலைமையகத்திற்கு வெளியே போராட்டம் கைவிடப்பட்டது.

WSWS இடம் P&O மாலுமியான மைக்கல், “இது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனக்கு வீட்டில் ஒரு குடும்பம் உள்ளது. கட்ட வேண்டிய கட்டணங்கள், எல்லோரையும் போல செலுத்த வேண்டிய கடன்கள் உள்ளன. எல்லாம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தக் கப்பல்கள் எங்கள் வீடுகளாக இருந்தன. நம் வாழ்நாளில் பாதியை அதில் செலவிடுகிறோம். இந்தக் கப்பல்களில் இன்னும் தனிப்பட்ட ஈர்ப்புக்கள் உள்ளன.

“இது அப்பகுதியில் வேலைவாய்ப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே மிகக் குறைந்த வேலையே உள்ளது. இந்தப் போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும். இதை நிற்க அனுமதிக்க முடியாது. நாங்கள் சிறப்பான ஒன்றை பெற தகுதியானவர்கள், அனைவரும் சிறப்பான ஒன்றை பெற தகுதியானவர்கள்.'

கோர்டன் பின்வருமாறு தெரிவித்தார். “என் பேத்தியின் கணவர் P&O இல் கப்பல் காப்டனாக இருக்கின்றார். நேற்று காலை 11 மணிக்கு அவரிடம் வேலை இல்லை என்று சொன்னார்கள். அவர்கள் எங்கள் வேலைகளைத் தாக்குகிறார்கள், இது வெறுப்புக்குரிது. நான் கடலில் வேலையில் இருந்தபோது 40,000 பதிவு செய்யப்பட்ட மாலுமிகள் இருந்தனர். இப்போது 12,000 மட்டுமே உள்ளது. ஒட்டுமொத்த தொழில்துறையும் அழிந்து விட்டது. இது உள்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும். இந்த நிறுவனங்கள் அனைத்தும் பிரித்து வெற்றி பெறுகின்றன. அவர்கள் அதை எல்லா நேரத்திலும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அதிலிருந்து தப்பிக்க முடிவதுதான் ஊழல்மிக்கது. 1980 களில் P&O இலிருந்து எனது வேலையை இழந்தேன். அப்போதும் தொழிற்சங்கங்கள் எங்களை ஏமாற்றிவிட்டனர், அவர்கள் தொழிலாளர்களை மீண்டும் இன்றும் ஏமாற்றிவிடலாம்.

ட்ரூடி விளக்கினார், 'நான் கப்பல் துறையில் வேலை செய்யவில்லை, ஆனால் நான் போக்குவரத்தில் வேலை செய்கிறேன். கடற்தொழிலாளர்கள் ஒரு அற்புதமான வேலை செய்கிறார்கள். ஒரு நல்ல பாதுகாப்பான வேலையை காப்பதற்காக நான் இங்கே இருக்கிறேன். எந்தத் துறையிலும் உள்ள எவரும் இப்படி ஒரு அடியில் தங்கள் வேலையை இழந்து மலிவு உழைப்பைக் கொண்டு மாற்றப்பட முடியாது. இந்த தொழிற்துறையில் இந்த கருங்காலிகளுக்கு என்ன தகுதி இருக்கின்றது? பாதுகாப்பு மிக முக்கியமானது.

'P&O போன்ற நிறுவனங்கள் தங்களால் இயன்ற ஒவ்வொரு சதத்தையும் எடுத்துக் கொண்டு, பெரும் பங்கு இலாபங்களை வழங்கியுள்ளன. இதை நடத்திய விதம் கேவலமானது. மக்கள் தங்கள் பைகளில் குறைவான பணத்தையே கொண்டிருப்பார்கள். அது டோவரில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.”

பேரணியில் கலந்து கொள்வதற்காக மார்கரெட் லண்டனில் இருந்து பயணம் செய்திருந்தார். 'என் மகன் ஒரு மாலுமி. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று வேலையை இழந்தான். இது டோவருக்கு பேரழிவை ஏற்படுத்தும். அதை செய்த விதம் கொடுமையானது. கப்பல் துறை முழுவதும் தேசியமயமாக்கப்பட வேண்டும். P&O ஆனது சீனாவில் இரண்டு புதிய கப்பல்களை கட்டுகின்றது என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. புதிய கப்பல்கள் கட்டினால் இந்த தொழிலாளர்களை அகற்றுவது அவசியமா? இந்த நிறுவனங்கள் தொழிலாளர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. எனது மகனுக்கு ஒரு புதிய பணிச்சூழலுக்கு இடமாற்றம் வரலாம். அவருக்கு மிகக் குறைவான வேலை வாய்ப்புகளே உள்ளன. அவருடைய வேலையே அவருடைய வாழ்க்கையாக இருந்தது.

ஒரு DFDS (பயணிகள் கப்பல்) மாலுமி எனது P&O நண்பர்களுக்கு ஆதரவளிக்க இங்கு வந்துள்ளேன். பணி நீக்கத்தை எதிர்க்க இன்று இங்கு இருப்பது முக்கியம். அடுத்தது நாமாக இருக்கலாம்.

லிவர்பூல்

லிவர்பூல் துறைமுகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் Protesters at the Port of Liverpool (WSWS Media)

Stenna Lines இல் பணிபுரியும் டொமி, லிவர்பூலில், “நான் 20 வருடங்களாக இழுவைக்கப்பல் ஓட்டுநராக இருந்தேன் (தொழிலாளர்கள் ஒரு முதலாளியிடம் இருந்து மற்றொரு முதலாளிக்கு மாற்றப்படும் போது) பலமுறை இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறேன். தொற்றுநோயின்போது நோய்வாய்ப்பட்டிருக்கும் காலத்திற்கான ஊதியத்தை 100 சதவீதத்தில் இருந்து 50 ஆக குறைக்க விரும்பினர். நாங்கள் 75 விகிதத்தில் சென்று முடித்தோம்”.

Stenna Lines இனால் பணியமர்த்தப்பட்ட மற்றொரு இழுவைக்கப்பல் ஓட்டுநர், “தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும், நடப்பதைத் தடுப்பதற்கான ஒரே வழி இதுதான் என்று எங்கள் வரலாறு நமக்குக் காட்டுகிறது. நாம் [டோரி பிரதம மந்திரி மார்கரெட்] தாட்சருடன் இந்த அழுகலை நிறுத்தியிருக்க வேண்டும். ஏனென்றால் அன்றிலிருந்து தொழிலாள வர்க்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஊதியம் மட்டுமல்ல, வேலை நிபந்தனைகளும் பின்தள்ளப்பட்டுவிட்டன. P&O நண்பர்களுக்கு நடப்பதை நாம் நிறுத்த வேண்டும். இல்லை ஏனென்றால் அது நம் அனைவருக்கும் நடக்கும்”.

லியாம் மக்குவையர் என்ற ஒரு வழக்குரைஞர், “இந்த தொழிலாளர்களுக்கு என்ன நடந்தது என்பது அவதூறானது மற்றும் இது தடியின் மெல்லிய உச்சி போன்றது. தொழிலாளர்களுக்கு நட்பான என்று அழைக்கப்படும் நிறுவனங்களும் அதைச் செய்வார்கள். குறிப்பாக இந்த தொற்றுநோய் வேலைகள் மற்றும் பணிநிலைமைகளை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்க முதலாளிகளால் பயன்படுத்தப்படுகிறது. தொற்றுநோய்காலத்திலான மாறிவரும் நிலைமைகள், தொழிலாளர்கள் எவ்வளவு வளைந்து கொடுப்பவர்களாக இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. அது இப்போது நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது எனக் கூறினார்.

'நினுவனத்திற்கு அவர்களால் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை நாங்கள் காட்ட வேண்டும். ஏனென்றால் நாங்கள் அதை பொறுத்துக்கொண்டால், அது இன்னும் மோசமாகிவிடும். P&O என்பது ஒரு பரிசோதனையாகும். எங்களை வெகுதூரம் தள்ளாதே என்று சொல்ல வேண்டும், ஏனென்றால் நாங்கள் திரும்பத் தள்ளுவோம். கோவிட் என்பதன் கீழ் வேலைகள் மற்றும் வேலை நிலைமைகள் வெட்டுவது, மற்றும் இப்போது உக்ரேனில் நடக்கும் போர் ஆகியவை வர்க்கப் போர் ஆகும். மேலும் அவர்கள் தொழிலாள வர்க்கத்தை 1800களின் நிலைமைகளுக்குத் தள்ள விரும்புகிறார்கள்”.

முன்னாள் மாலுமியும் மற்றும் முன்னாள் ஆசிரியருமான டெர்ரி கூறுகையில், “இன்று காலை செய்தியில் P&O தொழிலாளர்கள் தங்கள் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டதைக் காட்டியது. இது மூர்க்கத்தனமானது. வேலைகளைப் பாதுகாக்க, நான் சட்டத்தை மீறுவேன். ஆனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்… அவர்கள் உணரவில்லை, போராட்டத்தில் வெற்றிபெற அனைவரும் வேலைநிறுத்தத்தில் இறங்க வேண்டும். நாம் இல்லாமல் இந்த அமைப்புமுறை இயங்காது. தொழிற்சங்கங்கள் மாறிவிட்டன. அவை முன்பு இருந்ததைப் போல இல்லை”.

டெர்ரி (WSWS Media)

இயன் ஜோர்ஜ் Stenna Lines இல் பணிபுரிகிறார் மற்றும் 42 ஆண்டுகளாக கடலில் பணியாற்றியுள்ளார். 'நான் வழமையாக P&O இற்காக வேலை செய்தேன். நான் கடந்த ஆண்டு அவர்களுக்காக வேலை செய்தேன். வேலை நிலைகள் பயங்கரமானதாக உள்ளன. நான் வேலை செய்து கொண்டிருந்த கப்பலில் எதுவும் வேலை செய்யவில்லை. அறைகள் பயங்கரமானவை, கழிப்பறைகள் திருத்தப்படவில்லை. இன்று நான் ஒற்றுமைக்காக வந்துள்ளேன். ஒவ்வொரு நாளும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஒன்றுபட்டால் நிமிர்ந்து நிற்கிறோம், பிரிந்துபோனால் வீழ்ந்துவிடுவோம். விஷயங்கள் மாற்றப்பட வேண்டும். ”

இயான் ஜோர்ஜ் (WSWS Media)

முன்னாள் ஆசிரியர் அடே பேர்மிங்காமில் இருந்து பயணம் செய்தார். “எனது மாமனார் P&O நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவர் வெறுப்படைந்து காணப்படுகின்றார்”.

ஆசிரியர்களும் தாக்கப்பட்டனர். “OECD நாடுகளில் இளைய ஆசிரியர் படை எங்களிடம் உள்ளது. பழைய ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். ஒரு தலைமை மருத்துவ அதிகாரியுடன் உள்ளூர் மருத்துவ அமைப்புகளின் வலுவான கட்டமைப்புகள் இருந்தன. தொற்றுநோய்களின்போது குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இப்போது எப்படி ஒரு திட்டத்தை வைப்பது? வெஸ்ட்மின்ஸ்டரில் இந்த முடிவுகள் எடுக்கப்படும்போது, தவறுகள் உருவாக்கப்படுகின்றன என்பதில் ஆச்சரியமில்லை.

ஹல்

ஹல் P&O இறங்குதுறைக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் The protest outside the P&O terminal in Hull (WSWS Media)

ஹல்லில், Pride of Hull இல் பணிபுரியும் பணியாளர் ஒருவர், பாதுகாப்புப் பிரிவினரை கப்பலுக்கு அனுப்பியபோது, தான் பணியில் இல்லை என்று விளக்கினார். “நான் இங்கு சுமார் 30 வருடங்கள் பணியாற்றி வருகிறேன். நம்மில் பலர் நீண்ட காலமாக இங்கு இருக்கிறோம். எங்களுக்கு சில உறுதிமொழிகள் கிடைக்கும் வரை, ஏதேனும் ஒரு கட்டணத்தைப் பெறும் வரை, என்ன நடக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தும் வரை நாங்கள் இங்கேயே இருக்கிறோம்.

“கப்பலில் சுமார் 50 பிரிட்டிஷ் பணியாளர்கள் இருந்தனர் என்று நினைக்கிறேன். மேலும் சுமார் 80 பிலிப்பைன்ஸ் ஊழியர்கள் இருந்திருப்பார்கள். அவர்கள் அறைகள் மற்றும் சமையலறைகள் போன்றவற்றை சுத்தம் செய்கிறார்கள்.

'சரக்குகள் இறக்கப்பட்டதும், காலை சுமார் 11 மணியளவில் அவர்கள் எல்லாவற்றையும் மூடிவிட்டார்கள். யாரேனும் ஏறுவதைத் தடுக்க பணியாளர்களால் கதவு பூட்டப்பட்டது என்று நான் நம்புகிறேன். அச்சுறுத்தல் என்னவென்றால், நீங்கள் கப்பலை விட்டு வெளியேறவில்லை என்றால், உங்கள் பணிநீக்கத்திற்கான நிதி உதவியை இழக்க நேரிடும். அவர்கள் முடிந்தவரை உங்களை சிறிய சிக்கல்களுடன் கப்பலில் இருந்து வெளியேற்ற விரும்பினர். அவர்கள் செய்தது வெறுப்பிற்குரியது.'

1991 இல் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் P&O தொழிலாளி ஜோர்ஜ், “நீங்கள் தொழிலாளர்களை இப்படி நடத்தினால் இதை ஜனநாயகம் என்று எப்படி அழைக்க முடியும்? இதை அவர்களால் இங்கே செய்ய முடிந்தால், இதை எங்கு வேண்டுமானாலும், யாரிடமும் செய்யலாம்” என்றார்.

George (WSWS Media)

ஒரு முன்னாள் P&O இன் கரையோரப் பணியாளர் அதன் பணியாளர்களை எவ்வளவு மோசமாக நடத்தியது என்பதில் தான் ஆச்சரியப்படவில்லை என்றார். “அது நான் பணிபுரிந்த மிக மோசமான நிறுவனம் ஆகும்.

“எங்கே மறியல்? ஒரு வேலை நிறுத்தம் நடத்த வேண்டும். அவர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக வாக்கெடுப்பிற்கு விட வேண்டும். கரையோரப் பணியாளர்கள் அனைவரையும் அவர்களுடன் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும். அவர்கள் அதை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும்'என்றார்.

Loading