ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் தலைவர்கள், ட்ரம்பை எதிர்த்துப் போராடத் தாங்கள் "சக்தியற்றவர்கள்" என்றும், அவரது செயல்களின் வேகத்தைக் கண்டு "அதிர்ச்சியடைந்துள்ளனர்" என்றும் பொய்யாகக் கூறி வருகின்றனர்.
ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததற்கான பிரதிபலிப்பானது, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனமும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அதே தன்னலக்குழு நலன்களுக்கு சேவை செய்கிறது என்ற அடிப்படை உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கடந்த புதன்கிழமை, பைடென் தனது "பிரியாவிடை உரையில்", அமெரிக்காவில் அவரது சொந்த நிர்வாகத்தின் உதவியுடன் பேணி வளர்த்து வலுப்படுத்தப்பட்ட ஒரு தன்னலக்குழுவின் வளர்ச்சி குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் சமூக ஊடக தளமான எக்ஸ் (ட்விட்டர்) ஆகியவற்றின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு $442 பில்லியன் டாலரை எட்டியுள்ளது என்று ஃபோர்ப்ஸ் இதழின் சமீபத்திய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் தனது வர்த்தகப் போர் அச்சுறுத்தல்களைச் செயல்படுத்தினால், அது வட அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை உலுக்கி விடும். எந்த நேரத்திலும் முழுவீச்சிலான போராக வெடிக்க அச்சுறுத்தும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய தாக்குதலை ஒரேயடியாக தீவிரப்படுத்துவது குறித்து கூறுவதற்கில்லை.
ஜனநாயகக் கட்சியினரின் முதன்மையான கவலை ட்ரம்பின் எதேச்சதிகார நோக்கங்கள் அல்ல. மாறாக, பைடென் நிர்வாகத்தின் ஏகாதிபத்திய மைய இலக்காக, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரின் தொடர்ச்சியைப் பாதுகாப்பதாகும்.
அமெரிக்காவில் வரவிருக்கும் நிர்வாகத்தின் அனைத்து முன்னணி பணியாளர்களும் ட்ரம்பின் விசுவாசிகள், ஊழியர்கள் மற்றும் அவரது கூட்டிலுள்ள பில்லியனர்கள் குழுவின் குறுகிய வட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டவர்கள் ஆவர்.
சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் தலைவராக கென்னடியை உயர்த்துவதென்பது, உலகின் மிகப் பணக்கார முதலாளித்துவ நாடான அமெரிக்காவை மீண்டும் மத்திய காலத்திற்கு கொண்டு செல்வதற்கு ஒப்பான, ஒரு பாரிய சமூக பிற்போக்குத்தனத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதாக இருக்கும்.
புளோரிடாவில் உள்ள ட்ரம்பின் மார்-அ-லாகோ (Mar-a-Lago) உல்லாச விடுதியில் நட்சத்திர விருந்தினராக மிலேய் கலந்துகொண்டிருப்பதானது, வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்திற்கு என்ன தயாரிப்பு செய்து வருகிறது என்பதற்கான ஒரு பார்வையை வழங்குகிறது.
அட்டர்னி ஜெனரல் பதவிக்கு மாட் கெய்ட்ஸ்சின் நியமனம் உட்பட மென்மேலும் ஆத்திரமூட்டும் அமைச்சரவை நியமனங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு ஜனநாயகக் கட்சியும் பைடென் நிர்வாகமும் தடையற்ற ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ளன.
சீனாவுடனான போருக்குத் தயாரிப்பு செய்வதும் மற்றும் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரைக் கைது செய்து நாடு கடத்துவதுமே வரவிருக்கும் நிர்வாகத்தின் இரண்டு முன்னுரிமைகளாக இருக்கும்.
•Patrick Martin
சோசலிச சமத்துவக் கட்சியின் இணையவழி கூட்டம்: "தேர்தல் தோல்வியும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமும்"
சோசலிச சமத்துவக் கட்சி ஏற்பாடு செய்திருந்த நவம்பர் 10 இணையவழி கூட்டம், ட்ரம்ப் வெற்றியின் காரணங்களையும் விளைவுகளையும் பகுப்பாய்வு செய்ததுடன், தொழிலாள வர்க்கம் போராடுவதற்கான ஒரு அரசியல் மூலோபாயத்தை விவரித்தது.
•உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு
சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) நவம்பர் 10 ஞாயிறன்று அவசர இணையவழி கூட்டத்தை நடத்துகிறது
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மில்லியன் கணக்கானவர்கள், ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளால் சாத்தியமாக்கப்பட்ட தேர்தல் முடிவால் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பிடம் வெறித்தனமாக சரணடைந்ததைக் காணும்போது இந்த அதிர்ச்சி அருவருப்பாக மாறுகிறது.
ஜனாதிபதி பைடெனும் துணை ஜனாதிபதி ஹாரிஸும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாசிச ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். ஆனால், இவர்கள் பாரிய அடக்குமுறை மற்றும் பலாத்கார ஆட்சியின் ஆபத்துகள் குறித்து அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை.
ட்ரம்ப், தனது அரசியல் வெற்றிக்கு ஜனநாயகக் கட்சியின் திவால்நிலைக்கு கடன்பட்டிருக்கிறார். ஜனநாயகக் கட்சி, வசதியான நடுத்தர வர்க்கத்தின் அடையாள அரசியலுடன், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீதான பணவீக்கத்தின் நாசகரமான தாக்குதலுக்கு ஆணவமான அலட்சியம் மற்றும் உக்ரேனில் போர் மற்றும் காஸாவில் இனப்படுகொலைக்கு இடைவிடாத ஆதரவு ஆகியவை தேர்தல் தோல்விக்கு அடித்தளம் அமைத்தன.
பாசிச முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஒரே இரவில், மாநில வாரியாக வெளிவந்த முடிவுகளின் கணிப்புகளின்படி, வெற்றிக்கு தேவையான 270 வாக்குகளை விட, 276 தேர்தல் வாக்குகளை ட்ரம்ப் பெற்றுள்ளார். இது ட்ரம்புக்கு கிடைத்த வெற்றி அல்ல, மாறாக ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த படுதோல்வி ஆகும்.
இந்த கோரிக்கையானது ஒரு திகைப்பூட்டும் ஆவணமாக இருக்கிறது. இது, அமெரிக்க தாராளவாதத்தின் அரசியல் திவால்தன்மையையும், ஜனநாயகக் கட்சிக்கு முட்டுக் கொடுப்பதில் அதன் புத்திஜீவித விரிவுரையாளர்கள் ஆற்றுகின்ற இழிவான பங்கையும் அம்பலப்படுத்துகிறது.
திங்களன்று மிச்சிகனில் பேசிய பில் கிளின்டன், காஸாவில் அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலையை நியாயப்படுத்தி, அப்பாவி மக்களை இலக்கு வைப்பது, போரில் ஈடுபடாதவர்களுக்கு எதிராக கூட்டுத் தண்டனை கொடுப்பது இரண்டுமே போர்க்குற்றங்கள் என்று வெளிப்படையாக வாதிட்டார்.