சர்வதேச நாணய நிதியம் மற்றும் பெருவணிகங்களின் கோரிக்கைகளை திணிப்பதில் முழு அர்ப்பணிப்புடன் இருக்கின்ற போதிலும், தனது அரசாங்கம் இலங்கையின் “பொருளாதார இறையாண்மையை” ஸ்தாபிக்க விரும்புவதாக திசாநாயக்க அவநம்பிக்கையுடன் கூறினார்.
ட்ரம்பின் மீள்வருகையானது, அமெரிக்க சமூகத்திலுள்ள தன்னலக்குழுவின் தன்மைக்கு பொருத்தமான வகையில், அரசியல் மேற்கட்டுமானத்தின் வன்முறையான மறுஒழுங்கமைப்பைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை, கடந்த நான்கு வார நிகழ்வுகள் ஊர்ஜிதம் செய்துள்ளன.
பெருவணிகங்களை "பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம்" என்று பாராட்டிய ஜனாதிபதி, அரச துறையில் துரித தனியார்மயமாக்கல் மற்றும் ஆட்குறைப்பை சுட்டிக்காட்டினார் காட்டினார்.
உலக பில்லியனர்களின் செல்வம் 2024 இல் $13 டிரில்லியன் டாலரிலிருந்து $15 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது, இது 2023 ஐ விட மூன்று மடங்கு வேகமாக உள்ளது என்று ஒரு தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மண்டியிட்டு, முகஸ்துதி செய்து பாராட்டிய வங்கி மற்றும் எரிசக்தி நிர்வாகிகளை விட, ட்ரம்ப் தன்னைத்தானே உயர்த்திக் கொண்டார். ஆனால், ஒவ்வொரு சர்வாதிகாரியையும் போலவே, அவர் தனக்காக மட்டுமல்ல, ஒரு சமூக வர்க்கத்திற்காகவும் பேசுகிறார்.
கடந்த புதன்கிழமை, பைடென் தனது "பிரியாவிடை உரையில்", அமெரிக்காவில் அவரது சொந்த நிர்வாகத்தின் உதவியுடன் பேணி வளர்த்து வலுப்படுத்தப்பட்ட ஒரு தன்னலக்குழுவின் வளர்ச்சி குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
பிரான்சின் இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டமான மயோட்டின் (Mayotte) மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் இறந்திருக்கலாம் என்று சுகாதாரப் பணியாளர்கள் அஞ்சுகின்றனர். ஆனால், பிரெஞ்சு ஜனாதிபதி ஆணவத்துடன் கோபமடைந்த மக்களிடம் பிரான்ஸ் மயோட்டை ஆளவில்லை என்றால், அது "10,000 மடங்கு" மோசமாக இருக்கும் என்று கூறினார்.
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் சமூக ஊடக தளமான எக்ஸ் (ட்விட்டர்) ஆகியவற்றின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு $442 பில்லியன் டாலரை எட்டியுள்ளது என்று ஃபோர்ப்ஸ் இதழின் சமீபத்திய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை மற்றும் கடந்த வார இறுதியில், பிளாக் பிரைடே (Black Friday) சிறப்பு விற்பனை நிகழ்வின் போது 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை பில்லியனர்கள் உண்மையில் எப்படி வாங்குகிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு, எலான் மஸ்க் வழங்கிய மில்லியன் டாலர் கொடுப்பனவாகும்.
பூமியின் காலநிலை மற்றும் மனித சமூகம் ஆகிய இரண்டைப் பற்றியும், குறிப்பாக முதலாளித்துவ வளர்ச்சியின் விதிகளைப் பற்றியும் ஒரு அறிவியல்பூர்வமான புரிதல் உருவாக்கப்பட வேண்டும்.
அமெரிக்காவில் மரண தண்டனை தொடர்ந்து நீடிப்பது, ஒவ்வொரு துளையில் இருந்தும் அழுக்கை வெளியேற்றும் முதலாளித்துவ அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறையின் குற்றவியல் தன்மை மற்றும் வன்முறையின் இன்னுமொரு உறுதிப்படுத்தலாகும்.
"மறுசீரமைப்பு வேகத்தைத் தக்கவைத்துக்கொள்வது மற்றும் அனைத்து திட்ட உறுதிப்பாடுகளையும் சரியான நேரத்தில் செயல்படுத்துவது மிகவும் முக்கியமானது" என்று தேர்தலுக்கு முன்னதாகவே அடுத்த அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஒரு வலதுசாரி முதலாளித்துவ ஆட்சியாக இருக்கும். இது நாடுகடந்த பெரும் ஆடைத் தொழிலில் நிறுவனங்கள், பிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பங்களாதேஷ் முதலாளித்துவ வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் முன்னொருபோதும் இல்லாத விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திகளுக்கு இடையே, 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில், பலரால் தங்களுக்கு தாங்களே உணவளிக்க முடியவில்லை என்பது முதலாளித்துவ அமைப்புமுறை மீதான ஒரு கடுமையான குற்றச்சாட்டாகும்.
எதிர்க்கட்சியின் கோடீஸ்வரர் ரைலா ஒடிங்கா (Raila Odinga) தலைமையில் உள்ளது மற்றும் ரூட்டோ அரசாங்கத்தின் பொருளாதார திட்டத்துடன் எந்த அடிப்படை வேறுபாடுகளும் அவருக்கு இல்லை. ஒடிங்காவின் கவலை என்னவென்றால், தற்போதைய அரசாங்கம் அதிகரித்து வரும் எதிர்ப்பினை முகங்கொடுத்து தேவையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த இயலாதுள்ளது என்பதேயாகும்.
தலைமை நிர்வாக அதிகாரி (CEO) எலோன் மஸ்க்கிற்கு கடந்த வியாழனன்று டெஸ்லா பங்குதாரர்களால் 45 பில்லியன் டாலருக்கும் அதிகமான பாரிய ஊதியப் பொதி வழங்கப்பட்டமையானது, சமூக சமத்துவமின்மையை துரிதப்படுத்துவதுடன் மற்றும் உலக முதலாளித்துவத்தின் பொருளாதார, சமூக, இராணுவ மற்றும் அரசியல் நெருக்கடியை மேலும் ஆழமாக்குகிறது.
மாணவர்கள் உணவு, புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களுக்கான அதிகரித்த செலவினங்களையும், போக்குவரத்து மற்றும் மின்சாரத்திற்கான கட்டண அதிகரிப்பையும் எதிர்கொள்கின்றனர். அத்தோடு, வாழ்வதற்கான போதிய உதவித் திட்டங்கள், அவர்களுக்கு கிடைப்பதில்லை.
உலக வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களில் இலங்கையின் அரச நிறுவனங்களின் தனியார்மயமாக்கல், பாரிய வேலை அழிவு மற்றும் போராடிப் பெற்ற ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல்களும் அடங்கும்.