தனக்குப்
பின் வறிய விவசாயிகளை தலைமையேற்று வழிநடத்தும் பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரம் என்ற முழக்கம் சீனாவில் வரவிருக்கும் மூன்றாம்
புரட்சியின் சோசலிசத் தன்மை பற்றிய பிரச்சினையுடன் பிரிக்க முடியாமல்
பிணைந்துள்ளது. வரலாற்று நிகழ்வுகள் மீண்டும் தோன்றுகின்றன என்பதோடு
மட்டுமில்லாமல்,
அதை எதிர்கொள்ளும்போது
மக்கள் செய்யும் தவறுகளும் மீண்டும் தோன்றுகின்றன என்பதால்,
சீனா இன்னும் ஒரு சோசலிசப்
புரட்சிக்கு முதிர்ச்சியடையவில்லை என்ற ஆட்சேபனையை நாம் ஏற்கனவே கேட்க
முடிந்தது. ஆனால் இது பிரச்சினையின் அருவமான மற்றும் உயிரோட்டமற்ற
சூத்திரப்படுத்தலாகும். ரஷ்யாவை மட்டுமே எடுத்துக் கொண்டால்,
அது சோசலிசத்திற்கு அது
கனிந்து விட்டதா?
லெனினுடைய கருத்தின்படி --இல்லை! ஒத்திப்போட முடியாத தேசிய கடமைகளை
தீர்ப்பதற்கு ஒரே வழிமுறையான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற
நிலைக்குத்தான் அது கனிந்துள்ளது. ஆனால் இறுதிப் பகுப்பாய்வில் உலக
வளர்ச்சிப் போக்கால்தான் முழுச் சர்வாதிகாரத்தின் விதியும்
நிர்ணயிக்கப்படுவதால்,
அதுகூட பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரம் ஒரு சரியான கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை
விலக்காமல் இன்னும் சொல்லப்போனால் முன்னிபந்தனையாக தொழிலாளர்கள்
மற்றும் விவசாயிகளின் கூட்டை வலுப்படுத்தலும் வளர்ச்சியும்,
ஒருபுறம் எல்லாப்
பக்கங்களிலும் தேசிய நிலைமைகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளல்,
மறுபுறம்
உலக வளர்ச்சிப் போக்கிற்கு ஏற்ப நடந்துகொள்ளல் என்பன
உள்ளடக்கியிருக்கின்றன. அது சீனாவிற்கும் முற்றிலும் பொருந்துகிறது.
எமது
புரட்சி மீது என்ற தலையங்கத்துடன் ஜனவரி
16, 1923 ல் வந்த அதே
கட்டுரையில்,
கிழக்கு நாடுகளின் வினோதமான வளர்ச்சிப் போல்கில்தான் ரஷ்யாவின்
தனித்தன்மையான போக்கும் உள்ளது என்று லெனின் உறுதிப்படுத்தும்
கட்டுரையில், அவர்
"நாம் சோசலிசத்திற்கு கனியவில்லை,
இந்த "கற்றறிந்த
கனவான்கள்" கருத்தின்படி சோசலிசத்திற்கு தேவையான பொருளாதார
முன்னிபந்தனைகள் நம்மிடையே இல்லை" என்னும் ஐரோப்பிய சமூக
ஜனநாயகவாதிகளின் வாதத்தை "வரம்பிலாத வகையில் வெற்றுத்தனமாக
கூறப்படுவது" என்று முத்திரையிடுகிறார். ஆனால் "கற்றறிந்த" கனவான்களை
லெனின் எள்ளி நகையாடுவது ரஷ்யாவில் சோசலிசத்திற்கான பொருளாதார
முன்நிபந்தனைகளில் இருந்த நிலைமை பற்றி அவர் அறிந்திருந்தது
மட்டுமில்லாமல்,
வெற்றுக் கல்வியாளர்களும் மேம்போக்காளர்களும் நினைப்பதுபோல் சோசலிசத்தை
சுயாதீனமாக கட்டமைப்பதற்கு தேவையான முன்னிபந்தனைகள் இல்லாததால்
அதிகாரத்தை கைப்பற்றுவது கூடாது என நிராகரிப்பது ஏற்கத்தக்கதல்ல என்று
அவர் கருதியதால்தான். இக்கட்டுரையில் லெனின் நூற்றியோராவது தடவையாக
அல்லது ஆயிரத்து ஓராவது முறையாக இரண்டாம் அகிலத்தில்
முக்கியஸ்தர்களுடைய சொற்புரட்டுவாதங்களுக்கு விடையிறுக்கிறார்.
"[சோசலிசத்திற்கு ரஷ்யா பக்குவம் அடையவில்லை என்னும்] மறுக்க முடியாத
கருத்துக்கள் ...எமது புரட்சி பற்றிய மதிப்பீட்டிற்கு தீர்மானகரமானவை
அல்ல." [8] வரைவு
வேலைத்திட்டத்தின் ஆசிரியர்கள் இதைத்தான் மறுக்கிறார்கள்,
எனவே அவர்களால் புரிந்து
கொள்ள முடியவில்லை. சீனா மற்றும் ரஷ்யாவின் சீனா உடைய பொருளாதார,
பண்பாட்டுப் பக்குவமற்ற
தன்மை பற்றிய ஆய்வுக் கட்டுரை என்பது,
நிச்சயமாக,
ரஷ்யா தொடர்பான
மறுக்கமுடியாத நிலைப்பாட்டைவிடக் கூடுதலானதாகும். ஆனால் அதைத்
தொடர்ந்து பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதை கைவிட வேண்டும்
என்று கூறுவது,
அதுவும் நாட்டில் இருக்கும் புரட்சிகர நிலைமையாலும்,
முழு வரலாற்று
உள்ளடக்கத்தாலும் இந்த வெற்றி ஆணையிடப்படும் பொழுது,
ஏற்க
முடியாதது ஆகும்.
ஸ்தூலமான,
வரலாற்றுரீதியான,
அரசியல் மற்றும் உண்மையான
பிரச்சினை சீனா பொருளாதார ரீதியாக தனது சொந்த சோசலிசத்திற்கு
கனிந்துள்ளதா இல்லையா என்பதாக குறைக்கப்படுவது பற்றியது இல்லை;
மாறாக சீனா அரசியல்
ரீதியில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு கனிந்துள்ளதா என்பதுதான்.
இந்த இரு பிரச்சினைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. சமசீரற்ற வளர்ச்சி விதி
என்பது இல்லாவிட்டால் இவை ஒரே மாதிரியானவை என்று கருதப்படலாம்.
இங்குதான் அந்த விதி தன்னுடைய ஆதிக்கத்தை கொண்டு,
பொருளாதாரத்திற்கும்
அரசியலுக்கும் இடையே இருக்கும் இடைத்தொடர்பில் முக்கிய பங்கை
கொண்டுள்ளது. அப்படியானால்,
பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரத்திற்கு சீனா கனிந்துவிட்டதா?
போராட்டத்தின் அனுபவம்தான்
இந்த வினாவிற்கு உறுதியான விடையைத் தரமுடியும். அதே நிலையில்,
போராட்டம்தான் உண்மையான
ஒற்றுமை,
சுதந்திரம்,
சீனாவின் எழுச்சி எப்பொழுது,
எந்த சூழ்நிலையில்
இடம்பெறும் என்பது பற்றிய பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். சீனா
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு பக்குவம் அடையவில்லை என்று
எவரேனும் கூறினால்,
பல
ஆண்டுகளுக்கு மூன்றாம் சீனப் புரட்சி ஒத்திவைக்கப்பட வேண்டும்
என்றுதான் அவர் அறிவிக்கிறார்.
நிலப்பிரபுத்துவத்தின் எச்சசொச்சங்கள் சீனாவின் பொருளாதார வாழ்வில்
ஆதிக்கம் செலுத்துகிறது என்றால் கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக்குழு
தீர்மானங்கள் உறுதியாகக் கூறுவது போல் நிலைமை மோசம் என்பது உண்மையே.
ஆனால்,
அதிருஷ்டவசமாக பொதுவில்
எச்சசொச்சங்கள் என்பது ஆதிக்கத்தைச் செலுத்த முடியாதவை ஆகும். இந்தக்
கருத்தைப் பற்றியும் வரைவு வேலைத்திட்டம் செய்த தவறுகளை திருத்திக்
கொள்ளவில்லை; மாறாக
சுற்றிவளைத்து,
தெளிவற்ற வகையில் தவறுகளை மீண்டும் உறுதி செய்கிறது. "நாட்டின்
பொருளாதாரத்திலும் அரசியல் மேற்கட்டுமானத்திலும் மத்தியகால
நிலப்பிரபுத்துவ முறைகளின் மேலாதிக்கம்..." பற்றி வரைவு வேலைத்திட்டம்
பேசுகிறது. அடிப்படையில் இது தவறாகும். மேலாதிக்கம் என்பதின் பொருள்
யாது? அது,
சம்பந்தப்பட்டுள்ள
மக்களுடைய எண்ணிக்கையை பற்றிய பிரச்சனையா?
அல்லது நாட்டின்
பொருளாதாரத்தில் மேலாதிக்கம் மற்றும் முக்கிய பங்கு பற்றிய பிரச்சினையா?
அனைத்தையும் தழுவும் பங்கு
கொண்டிருக்கும் அடிப்படையில் வணிக மற்றும் வங்கி மூலதனம் நிறைந்த
உள்நாட்டு தொழிற்துறையின் அசாதாரண விரைவான வளர்ச்சி,
மிக முக்கியமான விவசாயிகள்
மாவட்டங்கள் முற்றிலும் சந்தையை நம்பியிருத்தல்,
வெளிநாட்டு வணிகத்தின்
மிகப் பெருகிய மகத்தான பங்கு,
எல்லாவிதங்களிலும் சீனக்
கிராமம் நகரத்திற்கு தாழ்த்தப்பட்டுள்ள நிலை -- இவை அனைத்தும் சீனாவில்
முதலாளித்துவ உறவுகளில் மூலதனம் நிபந்தனையற்ற முறையில் மேலாதிக்கம்
கொண்டிருப்பதைத்தான் காட்டுகின்றன. அடிமை நிலையின் மற்றும் அரைகுறை
அடிமைநிலையின் பங்கு மிக வலுவாக உள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை. இவை
அனைத்தும் ஓரளவு நிலப்பிரபுத்துவ காலத்தில் இருந்து தோன்றியவை;
அவை ஓரளவு புதிய
உருவாக்கத்தையும் கூறுபாடாகக் கொண்டுள்ளன;
அதாவது உற்பத்தி
சக்திகளின் தாமதப்பட்ட வளர்ச்சி,
வணிகர்கள்,
கந்துவட்டிக்காரர்கள்,
மூலதனம் இவற்றின்
அடிப்படையில் கடந்த காலத¢தை
புதுப்பித்தல் ஆகும். ஆனால் முதலாளித்துவ உறவுகள்தான் மேலாதிக்கம்
செலுத்துகின்றனவே அன்றி "நிலப்பிரபுத்துவ" முறை (இன்னும் சரியாக,
அடிமைத்தனம்,
பொதுவாக
முதலாளித்துவத்திற்கு முந்தைய முறை) அல்ல. இந்த முதலாளித்துவ உறவுகளின்
மேலாதிக்கப் பங்கை ஒட்டித்தான் தேசியப் புரட்சியில் பாட்டாளி
வர்க்கத்தின் மேலாதிக்கத்தின் வாய்ப்புவளம் பற்றி நாம் தீவிரமாகப் பேச
முடியும். இல்லாவிடில்,
இலக்கு
நிறைவேறாது.
"எந்த
முதலாளித்துவ நாட்டிலும் பாட்டாளி வர்க்கத்தின் பலம் மொத்த
ஜனத்தொகையில் பாட்டாளி வர்க்கத்தின் விகிதத்தைவிட கணக்கில்
அடங்காமுறையில் கூடுதலாகும். இதற்கு காரணம் பொருளாதராத்தின் முழு
முதலாளித்துவ அமைப்பின் முக்கிய நிலைகள்,
நரம்பு மையங்கள்
அனைத்திலும் பொருளாதாரக் கட்டுப்பாட்டை பாட்டாளி வர்க்கம்
கொண்டிருப்பதனால் மட்டும் அல்லாமல்,
முதலாளித்துவ அமைப்பின் கீழான மிகப்பெரும்பான்மையான உழைப்பாளர்களின்
உண்மையான நலன்களை பாட்டாளி வர்க்கம் பொருளாதார ரீதியாகவும் அரசியல்
ரீதியாகவும் வெளிப்படுத்துவதாலும் ஆகும்.
"இந்தக்
காரணத்திற்காக,
மக்கள் தொகையில் ஒரு சிறுபான்மையாக இருந்த போதிலும் (அல்லது நனவான
மற்றும் உண்மையான புரட்சிகர பாட்டாளி வர்க்க முன்னணி மக்கட்தொகையின்
சிறுபான்மையை கொண்டிருந்தாலும்),
பாட்டாளி வர்க்கம்
பூர்ஷ்வாவைத் தூக்கிவீசவும் பின்னர் தன்புறத்தே அரைப் பாட்டாளி
வர்க்கம் மற்றும் குட்டி முதலாளித்துவ வர்க்க வெகுஜனங்களின் மத்தியில்
பல கூட்டாளிகளை ஈர்க்கும் திறனைக் கொண்டுள்ளது;
பாட்டாளி வர்க்கம்
மேலாதிக்கம் அடைவதற்கு ஆதரவளிக்காதவை (அவை இப்படி பின் வராதவை) ஆகும்;
இந்த மேலாதிக்கத்தின்
நிலைமைகள் மற்றும் பணிகளை அவை புரிந்துகொள்ளா;
ஆனால் பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரத்தின் தவிர்க்க முடியாத தன்மை,
நீதி மற்றும் சட்டரீதியான
தன்மை இவற்றின் பிந்தைய அனுபவங்களை ஒட்டியே தம்மை முற்றிலும்
நம்பவைத்துக்கொள்ளும்." [9]
சீனப்
பாட்டாளி வர்க்கம் உற்பத்தி முறையில் கொண்டுள்ள பங்கு ஏற்கனவே மிக
அதிகமாக உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் அது இன்னும் அதிகரிக்க மட்டுமே
செய்யும். நிகழ்வுகள் காட்டியுள்ளபடி,
அதன் அரசியல் பங்கு மிகப் பெரிய அளவில் இருக்கக் கூடும். ஆனால்
தலைமையின் முழு வழிவகையும் பாட்டாளி வர்க்கம் தலைமை வகிக்கும் பங்கைப்
பெறுவதில் வெற்றி அடைவதை அனுமதிப்பதற்கு எதிராகத்தான் இயக்கப்பட்டது.
"பாட்டாளி
வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் இருக்கும் நாடுகள் நேரடியாக ஆதரவு
கொடுத்தால்தான்" சீனாவில் வெற்றிகரமான சோசலிச கட்டமைப்பு இயலும் என்று
வரைவு வேலைத்திட்டம் கூறுகிறது. எனவே சீனாவை ஒட்டிய உறவுகளில் அதே
கொள்கைகள் ரஷ்யாவை பொறுத்தவரையில் எந்தக் கோட்பாடு
அங்கீகரிக்கப்பட்டுள்ளதோ,
அதுவே சீனாவிற்கும்
ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஒரு சோசலிச சமுதாயத்தை சுயாதீனமாக
கட்டமைப்பதற்கு சீனாவில் போதுமான உள்சக்திகள் இல்லை என்றால்,
ஸ்ராலின்-புக்காரின்
தத்துவத்தின்படி,
சீனப் பாட்டாளி வர்க்கம் புரட்சியின் எந்தக் கட்டத்திலும் அதிகாரத்தை
கைப்பற்றக்கூடாது. ஆனால் சோவியத் யூனியனின் இருப்பானது பிரச்சினைக்கு
முற்றிலும் எதிர்த்திசையில் பதிலளித்திருக்கலாம். இதைத் தொடர்ந்து
சோவியத் ஒன்றியத்தில் மட்டும் இல்லாமல் சீனாவிலும் ஒரு சோசலிச
சமுதாயத்தை கட்டமைப்பதற்கு எமது தொழில்நுட்பம் போதுமானது என்று
தொடர்கிறது; அதாவது,
இரு பொருளாதாரத்தில்
பின்தங்கிய நாடுகளில்,
மொத்த மக்கள் தொகை
600 மில்லியன் இருக்கும்
நாடுகளிலும்கூட போதுமானது என்று காட்டுகிறது. அல்லது சீனா உலக அளவிலான
சோசலிசப் புரட்சி சங்கிலித் தொடரில் உள்ளடங்கும் என்பதால்,
அப்பொழுது சீனா அதன்
கண்ணியாக மட்டும் இல்லை,
அதன் உந்து சக்தியாகவும்
ஆகின்றதன் காரணமாக தவிர்க்கமுடியாத பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
என்பது "அனுமதிக்கப்பட முடியாது" போகக்கூடுமா?
ஆனால் அதன் "விசித்திரமான
நிலை" கிழக்கு நாடுகளின் வளர்ச்சிப் பாதைகளின் வழியே துல்லியமாக
பின்செல்கிறது என்ற அக்டோபர் புரட்சி பற்றிய துல்லியமாக லெனினுடைய
அடிப்படை சூத்திரமும் இதுதான். இவ்விதத்தில் 1925ல்
ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்காக தயாரிக்கப்பட்ட
தனி ஒரு நாட்டில் சோசலிசம் என்ற திருத்தல்வாதம்,
ஒரு புதிய முக்கிய
புரட்சிகர பிரச்சினை அணுகப்படும் ஒவ்வொரு முறையும்,
எப்படி
அதைச் சிதைத்து குழப்புகிறது என்பதை பார்க்கிறோம்.
இதே
வழியில்தான் வரைவு வேலைத்திட்டம் இன்னும் கூடுதலாகச் செல்லுகிறது. "அது
சீனா,
இந்தியாவை 1917க்கு
முந்தைய ரஷ்யா" மற்றும் போலந்து (இன்னும் பல) நாடுகளுக்கு எதிராக
நிறுத்தி "இவற்றில் சோசலிசம் வெற்றிகரமாக கட்டமைப்பதற்கு போதுமான
குறைந்த அளவு தொழிற்துறை உள்ளது",
அல்லது (இன்னும் உறுதியாக,
எனவே இன்னும் தவறாக வேறு
இடத்தில் கூறப்பட்டுள்ளது போல்),
சில நாடுகள் "சோசலிசம்
முழுமையாக கட்டமைக்கப்படுவதற்காக... போதுமான,
தேவையான பொருளாதாய
முன்நிபந்தனைகளை கொண்டுள்ளன" என்று கூறப்பட்டுள்ளது. இது,
நாம் ஏற்கனவே
அறிந்துள்ளபடி, "அவசியமான,
போதுமான" முன்னிபந்தனைகள்
என்ற லெனின் கருத்துக்களை தவறாகக் கூறுவது ஆகும்;
இது ஒரு மோசடித்தனமான,
அனுமதிக்கப்பட முடியாத
சொற்ஜாலம் ஆகும்;
ஏனெனில் தொழில்நுட்பம்,
கலாச்சார,
சர்வதேச முன்நிபந்தனைகள்
உள்பட, அரசியல்
மற்றும் அமைப்புரீதியான முன்நிபந்தனைகளில் அடங்கியுள்ளன என்று அவர்
உறுதியாக மற்றும் தனித்தனியாயக் கணக்கிட்டு கூறுகிறார். ஆனால்
முக்கியமான அறிய வேண்டிய கருத்து எஞ்சி நிற்கிறது: "குறைந்த அளவு
தொழிற்துறை" ஒரு முழுமையான சோசலிசத்தை கட்டமைக்கப் போதுமானது என்பதை
எப்படி நாம் முன்கூட்டி விவாதத்திற்கு இடமில்லாத வகையில் உறுதி செய்ய
முடியும்; அதுவும்
இரு பொருளாதார அமைப்புகளுக்கு,
இரு சமூக ஒழுங்கமைப்பிற்கு
இடையேயான உலகப் போராட்டம் தடையற்ற நிலையில் இருக்கும்போது,
மேலும் எமது பொருளாதார
தளம் அளவு கடந்து வலுவற்றதாக இருக்கும்போது ஒரு போராட்டம் எப்படி உறுதி
செய்யப்பட முடியும்?
பொருளாதார
நெம்புகோலை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால்,
சோவியத் ஒன்றியத்தில்
இருக்கும் நாம்,
இன்னும் கூடுதலான வகையில் சீனாவிலும் இந்தியாவிலும் அப்படியே,
உலக முதலாளித்துவத்தைவிட
மிகக் குறைவான நீளமுடைய நெம்புகோலைத்தான் பெற்றிருக்கிறோம். ஆனால்
முழுப் பிரச்சினையும் இரு அமைப்புமுறைகளின் புரட்சிகரப் போராட்டத்தின்
மூலம் உலகளவில் தீர்க்கப்பட வேண்டிய வகையில் உள்ளன. அரசியல்
போராட்டத்தில் நெம்புகோலின் நீண்ட கரங்கள் எமது பக்கத்தில் உள்ளன,
அல்லது,
இன்னும் சரியாகக் கூற
வேண்டும் என்றால் அது எமது கொள்கை சரியென்றால் எமது கரங்களில் அதை
நிரூபிக்க முடியும்,
கட்டாயம்
நிரூபிக்க வேண்டும்.
இதே
கட்டுரையான எமது புரட்சி மீது என்பதில்,
"ஒரு குறிப்பிட்ட கலாச்சார
மட்டம்" "சோசலிசத்தை தோற்றுவிப்பதற்கு" தேவை என்று கூறிய பின்னர்,
மீண்டும் லெனின்
சேர்த்துக் கொள்ளுவதாவது: "இந்த குறிப்பிட்ட கலாச்சார அளவு என்ன
என்பதையும் எவரும் குறிப்பிட்டுக் கூறமுடியாது." ஏன் ஒருவரும் சொல்ல
முடியாது? ஏனெனில்
இந்தப் பிரச்சினை போராட்டத்தின் மூலம்தான் தீர்க்கப்பட முடியும்;
இரு சமூக அமைப்பு முறைகள்,
இரு கலாச்சாரங்கள் ஒரு
சர்வதேச முறையில் தீவிரப்போட்டியை எதிர்கொண்டிருக்கும் நிலையில்தான்
தீர்க்கப்பட முடியும். லெனினுடைய இந்தக் கருத்தில் இருந்து முற்றிலும்
முறித்துக் கொள்ளும் வகையில்,
அதுவும் பிரச்சினையின்
சாரத்தில் இருந்து வெளிவந்துள்ள கருத்தில் இருந்து முறித்துக் கொள்ளும்
வகையில், வரைவு
வேலைத்திட்டம் 1917ல்
ரஷ்யா "குறைந்த அளவு தொழில்நுட்பம்" கொண்டிருந்தது என்றும் அதன்
விளைவாக தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமைப்பதற்கு போதுமான
கலாச்சாரத்தையும் கொண்டுள்ளது என்று உறுதியாகக் கூறுகிறது. வரைவின்
ஆசிரியர்கள் வேலைத்திட்டத்தில் ஒரு பொதுவிதியை (a
priori)
"எவரும் கூற முடியாது" எனக் கூற முயல்கின்றனர்.
தேசிய
அரசுகளுக்குள் "குறைந்த போதுமானது" என்பதற்கான அளவுகோலை தேடுவது என்பது
அனுமதிக்கப்பட முடியாதது,
சாத்தியமற்றது மற்றும்
அபத்தமானது ("1917க்கு
முன்னாள் ரஷ்யா");
ஏனெனில் முழுப் பிரச்சினையும் சர்வதேச இயக்கவியலின் மூலம்தான் முடிவு
காணப்பட முடியும். இந்த பிழையான,
ஒருதலைப்பட்சமான,
ஒதுக்கப்பட்ட தேசிய
அளவுகோல் அரசியலில் தேசிய குறும் பார்வையின் தத்துவார்த்த அடிப்படையான,
எதிர்காலத்தில் தவிர்க்க
முடியாத தேசிய-சீர்திருத்தவாத,
சமூக
நாட்டுப்பற்று வகையிலான பெரும் தவறுகளுக்கான முன் நிபந்தனையாக உள்ளது.
Notes
8. Works, Vol.XVIII, Part 21, pp.118f.
9. Lenin, Works,"The Year 1919," Vol.XVI, p.458.