line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 
கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்
பகுதி 3: சீனப்புரட்சியை பற்றிய முன்னோக்குகளும் சுருக்கவுரையும்
 

Print part 3 on single page

1. காலனித்துவ முதலாளித்துவத்தின் தன்மை

வரைவுத் திட்டம் கூறுவதாவது: "[காலனித்துவ நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவ வர்க்கத்துடன்] தற்காலிகமான உடன்பாடுகள் என்பது அந்த முதலாளித்துவ வர்க்கம், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உண்மையான போராட்டத்தை நடத்தும் வரையிலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் புரட்சிகர அமைப்பை தடைசெய்யாமல் இருக்கும் வரையிலும் மட்டும்தான் ஏற்கப்படமுடியும்."

இச் சூத்திரம், ஒரு தற்காலிக ஆய்வுப்பொருளுடன் வேண்டுமென்றே பிணைக்கப்பட்டிருந்தாலும் கூட, எப்படியும் கீழ்திசை நாடுகளுக்கான வரைவு வேலைத்திட்டத்தின் மைய அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகும். வரைவுத் வேலைத்திட்டத்தின் முக்கிய ஆய்வுப் பொருள், "[தொழிலாளர்கள், விவசாயிகள்] தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கில் இருந்து விடுதலையடைய வேண்டும்" என்று இயல்பாகவே கூறுகிறது. ஆனால் இதை இலக்கண பார்வையின் நின்று தீர்மானிக்காமல் அரசியல் ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் பார்க்க வேண்டும்; ஆகையால் முக்கிய ஆய்வுப் பொருள் இங்கு தற்காலிகமான ஒன்றுதான், ஆனால் தற்காலிமான ஆய்வுப் பொருள் மிக அத்தியாவசியமானதை உள்ளடக்கியுள்ளது. முழுமையாக எடுத்துக் கொள்ளும்போது, இச்சூத்திரம் கீழைத்தேச பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு நேர்த்தியான மென்ஷிவிக் சுருக்குக் கயிறேயாகும்." என்று கூறலாம்.

"தற்காலிக உடன்பாடுகள்" எதை இங்கு அர்த்தப்படுத்துகின்றன?. இயற்கையில் உள்ளதைப் போலவே அரசியலிலும் அனைத்தும் "தற்காலிகம்தான்". ஒருவேளை ஒரு சம்பவத்திலிருந்து அடுத்ததிற்கு முற்றிலும் நடைமுறை உடன்பாடுகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோமா? ஒவ்வொரு நேரத்திலும் வெவ்வேறு உறுதியான நோக்கத்திற்கு பயன்படும் கடுமையான வரையறை அற்ற மற்றும் கடுமையான நடைமுறை உடன்பாடுகள் போன்றவற்றை முன்கூட்டியே நாம் உதறித்தள்ளிவிடவும் முடியாது எனக் கூறத் தேவையில்லை. உதாரணமாக, அத்தகைய நேரங்களில் கோமிண்டாங் மாணவ இளைஞர்களுடன் ஏகாதிபத்திய-எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தலுக்கான உடன்பாடுகளில் சம்பந்தப்பட்டுள்ளது போன்ற அத்தகைய விஷயங்கள் அல்லது வெளிநாட்டு சலுகைகள் முதலியவற்றுக்கானதில் சீன வணிகர்களிடம் இருந்து உதவி பெறுதல் போன்றவை ஆகும்.

அத்தகைய உடன்பாடுகள் சீனாவில்கூட வருங்காலத்தில் ஒதுக்கப்பட்டுவிடவில்லை. ஆனால் அப்படிப்பட்ட நிலையில் "அந்த தேசிய முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உண்மையான [!] போராட்டத்தை நடத்தும் புரட்சிகர தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்பை தடைசெய்யாமல் இருந்தால்தான் ஏற்கப்படமுடியும்." என்னும் பொது அரசியல் நிபந்தனைகள் ஏன் கொடுக்கப்பட வேண்டும்? முதலாளித்துவ வர்க்கத்துடனான ஒவ்வொரு உடன்படிக்கைக்குமான, அதிலும் நிலைமையை ஒட்டி ஏற்கவேண்டிய, ஒவ்வொரு தனிப்பட்ட, நடைமுறை ரீதியான மற்றும் உகந்த உடன்படிக்கைக்கான ஒரே "நிபந்தனை", அமைப்புக்களையோ, பதாகைகளையோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு நாள், ஒரு மணி நேரம் கூட கலக்கவிடக்கூடாது; சிவப்பிற்கும் நீலத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு எப்பொழுதும் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும்; ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உண்மையான போராட்டத்திற்கு முதலாளித்துவ வர்க்த்தினர் வழிநடத்தும் திறனையோ விருப்பத்தையோ கொண்டிருப்பர் என ஒரு கணம் கூட நம்பக்கூடாது; அவர்கள் அதே போல தொழிலாளர்கள் அல்லது விவசாயிகள் போராட்டத்தை தடைக்குட்படுத்தாமல் இருப்பர் என்றும் நம்பவே கூடாது. நடைமுறையில் இன்றியமையாத உடன்படிக்கைகளுக்காக, மேற்கூறப்பட்ட நிபந்தனை நமக்குச் சிறிதும் உதவாது. மாறாக, இது இன்னும் கூடுதலான முறையில் நமக்கு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பொதுவழியில் முரணாக இருப்பதால் கெடுதல்தான் செய்யும்; "உடன்பாடு" இருக்கும் குறுகிய காலத்தில்கூட இது தற்காலிகமாக நிறுத்தப்படுவதில்லை. நாம் முன்னரே கூறியுள்ளபடி, முற்றிலும் நடைமுறை உடன்பாடுகள், அரசியலில் நம்மை எதையும் செய்யக் கட்டாயப்படுத்தாதவை, மிகக் குறைந்த தன்மையில்கூட கட்டுப்படுத்தாதவை, ஒரு குறிப்பிட்ட கணத்தில் நமக்கு நன்மை பயக்கும் என்றால், பிசாசுகளுடன் கூட உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் பிசாசை கிறிஸ்துவ சமயத்திற்கு மாறிவிடும் என்று அதையொட்டி நம்புவது மிக அபத்தமாகும்; அது தன்னுடைய கொம்புகளை தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிராக பயன்படுத்தாது, முற்றும் விசுவாசச் செயல்களுக்குத்தான் பயன்படுத்தும் என்று எதிர்பார்ப்பதும் அபத்தமானது. அத்தகைய நிபந்தனைகளை அளிப்பதில் உண்மையிலேயே நாம் பிசாசுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் போல் நடந்து கொண்டு அதன் ஞானத்தந்தையாக இருப்போம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்ளுவது போல் ஆகும்.

முதலாளித்துவ வர்க்கத்தை முன்கூட்டியே சிறந்த முறையில் சித்திரிக்க உதவும் வகையில் உள்ள இந்த அபத்தமான நிபந்தனைகளினால், வரைவுத் திட்டம் (இந்த ஆய்வுரையின் இராஜதந்திர மற்றும் தற்காலிக தன்மை இருந்தபோதிலும்கூட) தெளிவாகவும் உறுதியாகவும் கூறுவது என்னவெனில், இங்கு சம்பந்தப்பட்டுள்ளதானது துல்லியமாக நீண்டகால அரசியல் கூட்டுக்கள் பற்றியேதே ஒழிய நடைமுறை காரணங்களுக்காக முடிவு செய்யப்பட்டுள்ள மற்றும் கண்டிப்பான முறையில் நடைமுறை நோக்கங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கான உடன்படிக்கைகள் அல்ல. அத்தகைய நேரத்தில், தேசிய முதலாளித்துவம் ஒரு "உண்மையான" போராட்டத்தில் ஈடுபடவேண்டும், தொழிலாளர்களுக்கு "தடையாக இருக்கக் கூடாது" எனக் கூறுவதின் பொருள் என்ன? இந்த நிபந்தனைகளை நாம் பூர்ஷ்வாசியிடம் கோருகிறோமா அல்லது அதனிடம் இருந்து பகிரங்க உறுதிமொழியை கேட்கிறோமா? நீங்கள் கேட்கும் எந்த உறுதிமொழியையும் அது கொடுக்கும். அது விவசாயிகளின் அனைத்துலக கூட்டத்திற்கு சர்வதேச அகிலத்திற்கு "பரிவுடைய" கட்சி என்று காட்டிக் கொள்ளும் பிரதிநிதிகளை மாஸ்கோவிற்கு அனுப்பும் மற்றும் சிவப்பு சர்வதேச தொழிற்சங்கங்களையும் கூர்ந்து கவனிக்கும். சுருங்கக் கூறின், (எமது உதவியுடன் வரும்) எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள அது எந்த உறுதிமொழியையும் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஏமாற்றுவதற்கு இன்னும் திறமையான வகையில், இன்னும் எளிதாக, இன்னும் முற்றிலும் அவர்களுடைய கண்களில் மண்ணை தூவ செயல்படும்; ஷாங்காயில் அதற்குக் கிடைத்த முதல் வாய்ப்பு வரை இப்படித்தான் நடந்தது.

ஆனால் ஒருவேளை இங்கு அது முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து வலிந்து கேட்கப்படும் அரசியல் கடப்பாடுகள் பற்றிய பிரச்சினைகள் அல்ல, நாம் மீண்டும் கூறுகிறோம், உழைக்கும் பரந்தமக்களின் முன்னே இவ்வாறு நம்மை அது அதன் பாதுகாவலர்களாக மாற்றும்பொருட்டு உடனடியாக உடன்படும்? ஒருவேளை இங்கு உள்ள வினா, ஒரு தேசிய முதலாளித்துவ வர்க்கம் பற்றிய "புறநிலையான" மற்றும் "விஞ்ஞானரீதியான" மதிப்பீடு. அதாவது, "சமூகவியலின்படியான" முன்கணிப்பு என்பது, தடை செய்யாமல் அது போராடுவதற்கான திறனை கொண்டுள்ளதா என்பதேயாகும். வருந்தத்தக்க வகையில் சமீபத்தில் நிகழ்ந்துள்ள புதிய அனுபவங்கள் நிரூபணம் செய்துள்ளது போல், அத்தகைய முன்கூட்டிய முன்கணிப்பு எம்மை வல்லுனர்கள் என்பதற்கு பதிலாக முட்டாள்களாக ஆக்கிவிடுவது ஒரு விதியாகியுள்ளது. அதுகூட அவர்கள் மட்டுமே இதில் சம்பந்தப்பட்டிருந்தால் மோசமாக இருக்காது......

இதில் சிறிதளவும் சந்தேகத்திற்கு இடமில்லை: வரைவுத் திட்டம் நீண்டகால கணக்கில் அரசியல் கூட்டுக்கள் பற்றித்தான் துல்லியமாக கூறுகிறது. எப்பொழுதாவது நடைமுறை உடன்பாடுகள் பற்றிய வினாவை திட்டத்தில் கொண்டிருப்பது என்பது முற்றிலும் தேவையற்றதாகும். இக்காரணத்திற்காக, நடைமுறை, உண்மையான தந்திரோபாய தீர்மானம் "எமது தற்போதைய பணிகள் பற்றி" என்பது போதுமானதாக இருந்திருக்கும். இங்கு தொடர்புடைய பிரச்சினை கோமிண்டாங்குடன் சார்பை நேற்று கொண்டிருந்ததற்காக ஒப்புதலுக்கு நடைமுறை முத்திரை அளித்து நியாயப்படுத்துவது ஆகும். அதுவோ இரண்டாம் சீனப் புரட்சியை அழிவிற்கு தள்ளிவிட்டதாகும், மேலும் வருங்கால புரட்சிகளை அழிக்கும் திறனையும் உடையதாகும்.

வரைவுத் திட்டத்தின் உண்மையான ஆசிரியரான புகாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கருத்தின்படி, காலனித்துவ தேசிய முதலாளித்துவம் பற்றிய பொது மதிப்பீட்டில்தான் அனைத்து முக்கிய விளைவுகளும் அடங்கியுள்ளன; அவர்களுடைய போராடும் திறன், ஆனால் தடை செய்யாமல் இருக்கும் தன்மை என்பது அவர்களுடைய உறுதிமொழியினால் நிரூபிக்கப்படக் கூடாது; மிகக் கடுமையான "சமூக" வகையில் உறுதி செய்யப்பட வேண்டும்; அதாவது சந்தர்ப்பவாத நோக்கங்களுக்கு ஏற்கப்படும் 1001 நடைமுறைத் திட்டங்களில் உறுதி செய்யப்பட வேண்டும்.

இன்னும் தெளிவாக இதைக் காட்டுவதற்கு காலனித்துவ முதலாளித்துவ வர்க்கம் பற்றிய புகாரினின் மதிப்பிட்டை மீண்டும் பரிசீலிப்போம். காலனித்துவ புரட்சிகளின் "ஏகாதிபத்திய-எதிர்ப்பு உள்ளடக்கத்தை" மேற்கோளிட்டபின், (எந்தவித நியாயப்படுத்தலும் இன்றி) லெனினை மேற்கோளிட்டு, புகாரின் பிரகடனப்படுத்தியதாவது:

"சீனாவில் தாராளவாத முதலாளித்துவ வர்க்கம், பல மாதங்கள் என்றில்லாமல், பல ஆண்டுகள் புறநிலைரீதியாக புரட்சிகர பங்கு ஒன்றை கொண்டிருந்தது. இதன்பின் அது பெரும் களைப்படைந்துவிட்டது. இது ஒன்றும் 1905ம் ஆண்டு ரஷ்ய தாராளவாத புரட்சியை ஒட்டி ஏற்பட்ட 'இருபத்தி-நான்கு மணி நேர' விடுமுறை அல்ல." இங்கு ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை எல்லாமே தவறானவை.

ஒடுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கும் முதலாளித்துவ நாட்டிற்கு இடையே வேறுபாட்டை காணவேண்டும் என்ற உண்மையை நமக்கு லெனின் கற்றுக் கொடுத்துள்ளார். இதில் இருந்து மிக முக்கியமான முடிவுகள் விளைகின்றன. உதாரணமாக ஒரு ஏகாதிபத்திய நாட்டிற்கும் ஒரு காலனித்துவ நாட்டிற்கும் இடையே நடக்கும் போர் பற்றி எமது அணுகுமுறையை பார்ப்போம். ஒரு சமாதானவாதிக்கு அத்தகைய போர் மற்ற போர்களை போலத்தான் தென்படும். ஒரு கம்யூனிஸ்டுக்கு ஒரு காலனித்துவநாடு ஏகாதிபத்திய நாட்டிற்கு எதிராக நடத்தும் போர் ஒரு முதலாளித்துவ வர்க்கத்தின் புரட்சிகரப் போர் ஆகும். இவ்விதத்தில் தேசிய விடுதலை இயக்கங்கள், காலனித்துவ எழுச்சிகள், ஒடுக்கப்பட்டுள்ள நாடுகளின் போர்கள் ஆகியவை முதலாளித்துவ ஜனநாயக புரட்சிகளின் மட்டத்திற்கு; அதிலும் குறிப்பாக 1905ம் ஆண்டு ரஷ்ய புரட்சியின் மட்டத்திற்கு லெனினால் உயர்த்தப்பட்டன. ஆனால் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான போர்களுக்கு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகளை விட உயர்ந்த இடத்தை, 180கு திருப்பத்திற்கு புக்காரின் மாறியபின்னர் இப்பொழுது அவர் கொடுப்பது போல் லெனின் கொடுக்கவில்லை. ஓர் ஒடுக்கப்பட்ட முதலாளித்துவ நாடு, ஒடுக்கும் முதலாளித்துவ நாடு என்ற வேறுபாட்டை லெனின் மிகவும் வலியுறுத்தினார். ஆனால் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான ஒரு சகாப்தத்தில் ஒரு காலனித்துவ அல்லது அரைக் காலனித்துவ நாட்டின் முதலாளித்துவ வர்க்கம், ஜனநாயகப் புரட்சி சகாப்தத்தில் காலனித்துவமல்லாத நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்தை விடவும் இன்னும் முற்போக்கானதாகவும் புரட்சிகரமானதாகவும் இருந்தாக வேண்டும் என்று லெனின் எங்கும் எழுப்பவில்லை, ஒருபோதும் எழுப்பி இருக்க முடியாது. கோட்பாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் இத்தன்மை வெளிப்படவில்லை; இதற்கு வரலாற்றில் எந்த உறுதியும் இல்லை. உதாரணமாக ரஷ்ய தாராளவாதம் பரிதாபத்திற்குரிய வகையில் இருந்தது என்றாலும், கலப்பாகவும், பாதி இடது, பாதி முதலாளித்துவ ஜனநாயகவாதம் என்று சமூகப் புரட்சியாளர்களாகவும், மென்ஷிவிக்குகளாகவும் இருந்தாலும், சீனத் தாராளவாதம் மற்றும் சீன முதலாளித்துவ ஜனநாயகம் அதன் ரஷ்ய முன்மாதிரியைவிட உயர்ந்த மட்டத்திற்கு எழுந்திருந்தது அல்லது கூடுதலான முறையில் புரட்சிகரத்தன்மையை பெற்றிருந்தது எனக் கூறுவது இயலாதது ஆகும்.

காலனித்துவ ஒடுக்குமுறையானது, ஒரு தேசிய முதலாளித்துவத்திற்கு புரட்சிகரத் தன்மையை தவிர்க்கமுடியாமல் வழங்கும் என்று தொகுத்துக் கூறுவது மென்ஷிவிசத்தின் அடிப்படைத் தவறை முற்றிலும் வெளிப்படுத்துவது போல்தான் இருக்கும். மென்ஷிவிசம், ரஷ்ய முதலாளித்துவத்தின் புரட்சிகர தன்மையானது நிலப்பிரபுத்துவம் மற்றும் எதேச்சாதிகாரம் இவற்றின் அடக்குமுறையில் இருந்து கட்டாயம் ஊற்றெடுக்கும் என்று உறுதியாக பற்றியிருந்தது.

ஒரு புரட்சிகர போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் முழு உள்வர்க்க கட்டமைப்பினால்தான் முதலாளித்துவத்தின் இயல்பும், கொள்கையும் தீர்மானிக்கப்படுகின்றன; அப்போராட்டம் வளர்ச்சியுறும் வரலாற்றுச் சகாப்தத்தினால்; பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ வகையில் உலக ஏகாதிபத்தியம் முழுவதையும் அல்லது அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேசிய முதலாளித்துவ வர்க்கம் எந்த அளவிற்கு நம்பியுள்ளது என்ற தன்மையில்; முக்கியமாக இறுதியில் நாட்டின் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க செயலின் தன்மை மற்றும் நாடு எந்த அளவிற்கு சர்வதேச புரட்சிகர இயக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதை பொறுத்தும் இருக்கும்.

ஒரு ஜனநாயக அல்லது தேசிய விடுதலை இயக்கம், ஆழ்ந்த, பரந்த வகையில் சுரண்டுவதற்கான வாய்ப்புக்களை கூடுதலாக முதலாளித்துவ வர்க்கத்திற்கு கொடுக்க முடியும். ஒரு புரட்சிகர அரங்கில் சுயாதீனமான தொழிலாள வர்க்க தலையீடு என்பது முதலாளித்துவ வர்க்கம் முற்றிலும் சுரண்டும் சாத்தியத்தை இல்லாமற் செய்ய அச்சுறுத்தல் செய்கின்றது.

சில உண்மைகளை இன்னும் கவனமாக ஆராய்வோம்:

கொமின்டேர்னுக்கு தற்பொழுது ஊக்கம் கொடுப்பவர்கள் சளைப்பின்றி சியாங்கே ஷேக் "ஏகாதிபத்தியத்திற்கு எதிராக" ஒரு போரை நடத்தினார் என்று மீண்டும் மீண்டும் கூறுகின்றனர்; கெரென்ஸ்கி ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்துக் கொண்டு நடந்தார் என்றும் கூறுகின்றனர்; அதன் விளைவாய் கெரென்ஸ்கிக்கு எதிராக மிகக் கடுமையான போராட்டம் நடத்த வேண்டியிருந்தது; ஆனால் சியாங்கே ஷேக்கிற்கு ஆதரவு கொடுப்பது அவசியமானதாக இருந்தது.

கெரென்ஸ்கிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையே இருந்த உறவுகள் உறுதியாகத்தான் இருந்தன. இன்னும் பின்னே சென்று ரஷ்ய முதலாளித்துவ வர்க்கம் இரண்டாம் நிக்கோலாஸை பிரிட்டிஷ், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஆசிகளுடன் "அரியணையில் இருந்து அகற்றியது" என்றுகூட சுட்டிக் காட்டலாம். மிலியுகோவ்-கெரென்ஸ்கி இருவரும் லாயிட் ஜோர்ஜ்-பாயின்கேர் தொடுத்த போருக்கு ஆதரவு கொடுத்தது மட்டும் இல்லாமல், லாயிட் ஜோர்ஜும் பாயின்கேரும் ஜார் மன்னனுக்கு எதிரான மில்யுக்கோல் மற்றும் கெரென்ஸ்கியின் புரட்சிக்கு முதலிலும், பின்னர் அவர் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிராக தொடுத்த புரட்சியையும் ஆதரித்தனர். இது முற்றிலும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டதாகும்.

ஆனால் சீனாவை பொறுத்தவரையில், விஷயங்கள் எவ்வாறு இருந்தன? சீனாவில் "பெப்ருவரி புரட்சி" 1911ல் நிகழ்ந்தது. அப்புரட்சி நேரடியாக ஏகாதிபத்தியவாதிகளின் பங்கின் மூலம் சாதிக்கப்பட்டது என்றாலும், ஒரு பெரிய, முற்போக்கான நிகழ்வு ஆகும். தன்னுடைய நினைவுக் குறிப்புக்களின் சன் யாட்-சென், ஜப்பான், பிரான்ஸ், அல்லது அமெரிக்கா என்னும் ஏகாதிபத்திய நாடுகளின் "ஆதரவை" தன்னுடைய அமைப்பு அனைத்து பணிகளுக்கும் நம்பியிருந்தது என்பதை விவரித்துள்ளார். ஏகாதிபத்திய போரில் 1917ம் ஆண்டு கெரென்ஸ்கி தொடர்ந்து பங்கு பெற்றார் என்றால், சீன பூர்ஷ்வா, "தேசிய தன்மை உடையது", "புரட்சிகரமானது" என்றெல்லாம் கூறப்படுவது நட்புறவு நாடுகளின் குழு (Entente) சீன விடுதலைக்கு உதவும் என்று கருதி வில்சனின் போர்க் குறுக்கீட்டிற்கு ஆதரவு கொடுத்தது. 1918ல் நட்புறவு நாடுகளின் குழாத்தின் அரசாங்கங்களிடம் சன் யாட்-சென் சீனாவின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அரசியல் விடுதலைக்கான அவரது திட்டங்களை கூறினார். மஞ்சு அரசவம்சத்திற்கு (Manchu Dynasty) எதிரான போராட்டத்தில் சீன முதலாளித்துவ வர்க்கம், சாரிசத்திற்கு எதிரான ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தின் போராட்டத்தைவிட அதிக புரட்சிகர தன்மைகளை வெளிப்படுத்தியது என்று கூறுவதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை; அதேபோல் சியாங் கேய்-ஷேக், மற்றும் கெரென்ஸ்கியின் ஏகாதிபத்தியத்தை பற்றிய அணுகுமுறையில் கொள்கையளவு வேறுபாடு இருந்தது என்று கூறுவதற்கும் இல்லை.

இருந்தபோதிலும், சியாங் கே-ஷேக் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத்தான் போரிட்டார் என்று கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு கூறுகிறது. இவ்வித்தில் இந்நிகழ்வை அளிப்பது உண்மைக்கு ஒரு நயமற்ற முகத்தை அளிப்பது போலாகும். சியாங் கேய்-ஷேக், ஏகாதிபத்திய சக்திகள் ஒன்றின் முகவர்களான சில சீன இராணுவவாதிகளுக்கு எதிராகப் போராடினார்.

இது ஒன்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போர் நடத்துவதற்கு ஒப்பானது அல்ல. டாங் பிங்-ஷான் (Tang Ping-shan) கூட இதைப் புரிந்து கொண்டிருந்தார். கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் ஏழாம் அகல்பேரவைக்கு (1926 இறுதியில்) கொடுத்த அறிக்கையில் அவர் சியாங் கே-ஷேக்கின் தலைமையில் இருந்த மையமான கோமின்டாங்கின் கொள்கையை விளக்குகையில் கீழ்க்கண்டவாறு கூறினார்:

"சர்வதேச கொள்கையின் செயலெல்லையில் அந்த சொல்லின் முழுப் பொருளை ஒட்டிப் பார்க்கும் போது அது செயலற்ற நிலையைத்தான் எடுத்திருந்தது.... அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதற்கு விருப்பம் கொண்டுள்ளது; ஜப்பானிய ஏகாதிபத்தியத்தை பொறுத்தவரையில், ஒரு சில நிபந்தனைகளுடன் அது அவர்களுடன் சமரசத்திற்குத் தயாராக இருக்கிறது." (ஏழாவது நிறை பேரவையின் குறிப்புக்கள், கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் தொகுதி.1, பக்கம்- 406.)

ஏகாதிபத்தியத்தை நோக்கிய கோமிண்டாங்கின் அணுகுமுறை ஆரம்பத்தில் இருந்தே புரட்சிகரமாக இல்லாமல் முற்றிலும் சந்தர்ப்பவாதமாக இருந்தது. சில ஏகாதிபத்திய சக்திகளுடைய முகவர்களை உடைத்துத் தனிமைப்படுத்த அது முயன்றது; அதே அல்லது மற்ற ஏகாதிபத்திய சக்திகளுடன், சீன முதலாளித்துவத்திற்கு கூடுதலான நலன்களை கொடுக்கவிருக்கும் சக்திகளுடன் உடன்பாடு காண முற்பட்டது. இதுதான் உண்மை. ஆனால் விஷயத்தின் சாரம், பிரச்சினையின் முழு சூத்திரப்படுத்தலும் தவறாக இருக்கின்றது என்ற உண்மையில்தான் இருக்கிறது.

எடுத்துக்கொண்ட ஒவ்வொரு நாட்டின் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஏகாதிபத்தியத்தின்பாலான அணுகுமுறையையும் "பொதுவாக" அளவிடக் கூடாது; அதன் சொந்த நாட்டின் உடனடி புரட்சிகர வரலாற்றுப் பணிகளின்பால் எத்தகைய அணுகுமுறையை கொண்டிருக்கிறது என்பது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டும்.

ரஷ்ய முதலாளித்துவ வர்க்கம் ஒரு ஏகாதிபத்திய அடக்குமுறை அரசின் முதலாளித்துவ வர்க்கம் ஆகும்; சீன முதலாளித்துவ வர்க்கம் அடக்குமுறைக்குட்பட்ட காலனித்துவ நாட்டின் முதலாளித்துவ வர்க்கம் ஆகும். பழைய ரஷ்யாவில் நிலப்பிரபுத்துவ ஜாரிசம் அகற்றப்படுவது என்பது வரலாற்றளவில் முற்போக்கான பணியாகும். சீனாவில் ஏகாதிபத்திய தளையை அகற்றுவது என்பது ஒரு முற்போக்கான வரலாற்றுப் பணியாகும். ஆனால் ஏகாதிபத்தியம், பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளை பொறுத்தவரையில் சீன முதலாளித்துவ வர்க்கம் நடந்து கொண்ட முறை, ரஷ்ய முதலாளித்துவ வர்க்கம் ஜாரிசம் மற்றும் ரஷ்யாவில் இருந்த புரட்சிகர வர்க்கங்களிடம் காட்டிய அணுகுமுறையை விட ஒன்றும் புரட்சிகரமானது அல்ல. ஆனால், அது இன்னும் கூடுதலான முறையில் தீமை பயப்பதாகவும் பிற்போக்குத்தனம் உடையதாகவும் இருந்தது. இதுதான் வினாவை முன்வைக்கும் ஒரே வழியாகும்.

சீன முதலாளித்துவ வர்க்கம், உலக ஏகாதிபத்தியத்தின் தன்மையை நெருக்கமாக அறிந்திருந்து, போதுமான அளவு நடைமுறை உண்மையையும் கொண்டிருந்த உலக ஏகாதிபத்தியத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு புரட்சிகர மக்களின் எழுச்சி தேவை என்பதை அறிந்திருந்தது; ஆனால் அது தனக்கே பெரும் ஆபத்தைக் கொடுக்கும் என்பதையும் அறிந்திருந்தது. மஞ்சு அரச வம்சத்தினருக்கு எதிரான போராட்டம் ஜாரிசத்தை அகற்றுவதற்கான போராட்டத்தைவிட சிறு அளவிலான பணி என்றால், உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்பது மிக அதிகமான அளவு உடைய பணி ஆகும்; ஆரம்பத்தில் இருந்தே ரஷ்ய தொழிலாளர்களிடம் தாராண்மைவாதத்தின் தயார்நிலையை நம்ப வேண்டாம், குட்டி முதலாளித்துவ ஜனநாயகம் ஜாரிசத்தை அகற்றும், நிலப்பிரபுத்துவத்தை அகற்றும் என நம்ப வேண்டாம் என்று கூறியிருந்தோம்; அதேபோல், சீனத் தொழிலாளர்களையும் ஆரம்பத்தில் இருந்து அத்தகைய நம்பிக்கையற்ற தன்மையை பூர்ஷ்வாக்களிடம் கொள்ள வேண்டாம் என வலியுறுத்தியிருக்க வேண்டும். ஸ்ராலின்-புகாரினால் காலனித்துவ முதலாளித்துவத்தின் "உள்ளார்ந்த'' புரட்சிகர உணர்வு பற்றிய முற்றிலும் புதிய தவறான தத்துவம், சாராம்சத்தில் சீன அரசியலில் மென்ஷிவிசத்தை மொழிபெயர்த்துக் கூறுவதற்கு ஒப்பாகும். சீனாவின் ஒடுக்கப்பட்ட நிலைமை சீன முதலாளித்துவத்திற்கு ஒரு உள்நாட்டு அரசியலில் ஒரு சிறப்பை அளிக்கும் மாற்றத்தைத்தான் கொடுக்கும்; இன்னும் கூடுதலான வகையில், இது மிகக் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டுள்ள சீனப்பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான முதலாளித்துவத்திற்கு பலத்தை தந்துவிடும்.

இந்த வரைவுத் திட்டத்தை இயற்றிய ஸ்ராலினும் புக்காரினும், சியாங் கேய்-ஷேக்கின் வடபுலத் தாக்குதல் தொழிலாளர், விவசாயிகள் வெகுஜன பிரிவினரிடம் பெரும் பரபரப்பை கொடுத்தது என்று நம்மிடம் கூறுகின்றனர். இது மறுக்க முடியாது. ஆனால், குஷ்கோவும், ஷுல்கனும் பெட்ரோகிராட்டிற்கு இரண்டாம் நிக்கோலாஸின் பதவிதுறப்பு ஆவணத்தை கொண்டு வந்த செயல் ஒரு புரட்சிகர பங்கை கொண்டிருக்கவில்லையா? மிகவும் கடைநிலையில், களைந்திருந்த, இயலாத வெகுஜனப்பிரிவிற்கு இது பெரும் எழுச்சியை கொடுக்கவில்லையா? முதல்நாள் வரை ட்ருடோவிக்காக இருந்த கெரென்ஸ்கி மந்திரி சபை தலைவராகவும், தலைமை தளபதியாகவும் வந்து படைவீரர்கள் தொகுப்பிற்கு எழுச்சி கொடுக்கவில்லையா? கூட்டங்களுக்கு அவர்களை அது அழைத்து வந்துவிடவில்லையா? நிலப்பிரபுவிற்கு எதிராக கிராமம் முழுவதும் ஒட்டு மொத்தமாக எழுச்சி பெற அது உதவவில்லையா? இன்னும் பரந்த அளவில்கூட வினாவை வெளிப்படுத்த முடியும். முதலாளித்துவத்தின் முழு நடவடிக்கைகளும் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் சொல்லாட்சியை பயன்படுத்தினால், கிராமப்புற வாழ்வின் முட்டாள்தனத்தில் இருந்து எழுப்பிவிடவில்லையா? பாட்டாளி வர்க்க படைப்பிரிவுகளுக்கு, போராட்டத்திற்காக அது பெரும் ஊக்கம் தரவில்லையா? முதலாளித்துவம் ஒட்டுமொத்தத்தின் புறநிலைப் பாத்திரம் பற்றிய, அல்லது குறிப்பாக முதலாளித்துவ வர்க்கத்தின் சில நடவடிக்கைகள் பற்றிய எமது வரலாற்றளவு மதிப்பீடானது, முதலாளித்துவம் பற்றிய அணுகுமுறை அல்லது முதலாளித்துவ நடவடிக்கைகள் பற்றிய அணுகுமுறை தொடர்பான எமது வர்க்க புரட்சிகர அணுகுமுறைக்கு மாற்றீடு ஆகிவிடுமா? சந்தர்ப்பவாதக் கொள்கைகள் எப்பொழுதுமே இத்தகைய பகுப்பாய்வற்ற, பிற்போக்குத்தனமான, வால்த்தன "புறநிலைவாதத்தை" அடிப்படையாக கொண்டிருக்கும். மாறாக, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படை முதலாளித்துவ வர்க்கத்துடனான உறவில் அதிகமான அளவில் சுயாதீனமானதாக இருந்தால், தான் இருக்கும் நிலைமையின் காரணமாக வற்புறுத்தப்பட்டு ஒரு முதலாளித்துவ வர்க்கம் செய்யும் ஏதாவதொரு செயலினது புரட்சிகர விளைவுகள், முழுமையானதாக, கூடுதலான தீர்மானகரமாக, குறைந்த ஐயத்திற்கு உரியதாக இருக்கும், குறைந்த அளவு சுதந்திரமானதாக இருந்தால் பாட்டாளி வர்க்கம் அப்பொழுது முதலாளித்துவ வர்க்கத்தின் தாடைகளுக்கிடையில் அதன் விரல்களை வைக்க விருப்பம் கொண்டு, அதனது பிரகாசமான நிறத்தையோ அல்லது அதன் புரட்சிகர உணர்வை மிகைமதிப்பிற்குட்படுத்தும் அல்லது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான "ஐக்கிய முன்னணிக்கான" அதன் தயார் நிலையை மிகைமதிப்பீடு செய்யும் என்று ஒரே சீராய் மார்க்சிசம் நமக்கு பயிற்றுவித்துள்ளது.

ஸ்ராலினிச-புக்காரினிச காலனித்துவ முதலாளித்துவ வர்க்கம் பற்றிய மதிப்பீடு கோட்பாட்டளவு, வரலாற்றளவு அல்லது அரசியலளவு விமர்சத்தின்முன் நின்றுபிடிக்க முடியாது. ஆயினும்கூட இந்த மதிப்பீட்டைத்தான் வரைவுத் திட்டம் அரிய உபதேசமாக்க முயல்கிறது என்று நாம் கண்டோம்.

*  *  *

ஒரு அம்பலப்படுத்தப்படாத, கண்டிக்கப்படாத பிழை மற்றொன்றிற்கு எப்பொழுதும் இட்டுச் செல்லும், அல்லது அதற்கான நிலைமையை தயாரிக்கும்.

நேற்று சீன முதலாளித்துவ வர்க்கம் புரட்சிகர ஐக்கிய முன்னணியில் சேர்க்கப்பட்டது என்றால், இன்று அது "எதிர்ப்புரட்சி முகாமிற்கு உறுதியாக மாறிவிட்டது" என்று கூறப்படுகிறது. எந்தவிதமான தீவிர மார்க்சிச பகுப்பாய்வும் இல்லாமல் ஒரு நிர்வாகச் செயற்பட்டு முறையில் இத்தகைய சேர்க்கைகளும் மாற்றங்களும் ஆதாரமற்றது என்று அம்பலப்படுத்துவது ஒன்றும் கஷ்டம் இல்லை.

புரட்சி முகாமில் முதலாளித்துவ வர்க்கம் சேர்ந்தது ஒன்றும் தற்செயலானது அல்ல, அது உறுதி இல்லாததன் காரணமாக அல்ல, மாறாக தன்னுடைய வர்க்க நலன்களின் சொந்த அழுத்தத்தில்தான் சேர்ந்தது என்பது முற்றிலும் இயல்பாக வெளிப்படையாக தெரியும். வெகுஜனங்களை கண்டு அஞ்சிய நிலையில், முதலாளித்துவ வர்க்கம் பின்னர் புரட்சியை கைவிட்டு வெளிப்படையாக புரட்சி பற்றிய தன்னுடைய மறைக்கப்பட்டிருந்த வெறுப்பை வெளிப்படுத்துகிறது. ஆனால் "முதலாளித்துவ வர்க்கம் எதிர்ப்புரட்சி முகாமிற்கு உறுதியுடன் செல்லும்"; அதாவது அதன் வர்க்க அடிப்படை அபிலாசைகள் புரட்சி வகையிலோ மற்ற விதத்திலோ நிறைவு செய்யப்பட்டுவிட்டன என்றால் மட்டுமே மீண்டும் புரட்சியை "ஆதரிக்க" வேண்டிய தேவையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும், குறைந்த பட்சம் அதோடு ஊடாடுவதை நிறுத்திக்கொள்ளும் (உதாரணம், பிஸ்மார்க்கிய வழிவகை). 1848-71 வரையிலான வரலாற்று காலத்தை நினைவுகூர்வோம்.

1905ம் ஆண்டு புரட்சிக்கு சற்றும் ஆதரவு கொடுக்காமல் ரஷ்ய முதலாளித்துவ வர்க்கம் அதன் முதுகைத் திருப்பிக் கொண்டதை நினைவுகூருவோம்; இதற்கு காரணம், இப்புரட்சி நாட்டின் டுமாவின் மீதான அதிகாரத்தை அதனிடம் அளித்தது; ஏனெனில் வேறு எந்தப் பிரிவும் அதிகாரத்தின்மீது அழுத்தம் கொடுத்து உடன்பாடுகளை கண்டிருக்க முடியாது என்பதால் அவ்வாறு நடந்தது. ஆயினும்கூட 1914-17 போர் "நவீனமயப்படுத்தப்பட்ட" ஆட்சி முதலாளித்துவ வர்க்கத்தின் அடிப்படை நலன்களை காக்கமுடியாது என்று ஏற்பட்டபோது, பூர்ஷ்வாக்கள் மீண்டும் புரட்சியை நோக்கித் திரும்பி, 1905ம் ஆண்டை விட தன்னுடைய மாற்றத்தை மிகவும் கூர்மையாக்கியது.

சீனாவில் 1925-27ல் நடைபெற்ற புரட்சி ஓரளவேனும் சீன முதலாளித்துவத்தின் அடிப்படை நலன்களை திருப்திப்படுத்தியது என்று எவரேனும் கூறமுடியுமா? முடியாது. 1925ம் ஆண்டிற்கு முன்னர் காப்புவரி தன்னாட்சி (Tariff Autonomy) முறையில் இருந்தும் உண்மையான தேசிய ஐக்கியத்தில் இருந்தும் 1925க்கு முன்னால் எவ்வளவு தொலைவில் இருந்ததோ அப்படித்தான் சீனா இப்பொழுதும் உள்ளது. ஆயினும்கூட, ஒன்றுபடுத்தப்பட்ட உள்நாட்டு சந்தை ஏற்படுத்தப்பட்டதும், அதன் பொருட்கள் வெளிநாட்டு மலிவுப் பொருட்களிடம் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், சீன முதலாளித்துவ வர்க்கத்திற்கு வாழ்வா சாவா என்ற பிரச்சினையாகும்; இது தொழிலாள வர்க்கம், ஏழை விவசாயிகள் மீதான அதன் வர்க்க ஆதிக்கத்திற்கான அடிப்படையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் காட்டும் முக்கியத்துவத்திற்கு அடுத்த நிலைதான். ஆனால் ஜப்பானிய, பிரிட்டிஷ் முதலாளித்துவத்தை பொறுத்த அளவில் சீனாவின் காலனித்துவ அந்தஸ்தை பராமரித்தல் என்பது சீன முதலாளித்துவத்திற்கு தன்னாட்சி தகுதியை பொருளாதாரத்தில் கொடுப்பது என்பதை விட குறைந்த முக்கியத்துவம் கொண்டது அல்ல. இதனால்தான் சீன முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்கையில் அதிகமான அளவு இடதுபுறச் சரிவுகள், எழுச்சிகள் இருக்கும். வருங்காலத்திலும் "தேசிய ஐக்கிய முன்னணி" யில் அனுபவம் அற்றவர்களுக்கு எதிர்பார்ப்புக்களில் குறைவும் இருக்காது. 1924ல் இருந்து 1927 முடிய முதலாளித்துவ வர்க்கத்துடன் அவர்கள் கொண்டிருந்த உடன்பாடு சரிதான், ஆனால் இப்பொழுது முதலாளித்துவ வர்க்கம் எதிர்ப்புரட்சி முகாமிற்கு போய்விட்டது என்று சீன கம்யூனிஸ்ட்டுகளிடம் இன்று கூறுவது, மீண்டும் சீனக் கம்யூனிஸ்ட்டுகளை வரவிருக்கும் புறநிலைமை மாற்றங்கள், தவிர்க்கமுடியாத சீன முதலாளித்துவ வர்க்கத்தின் இடதுபுற ஏற்ற இறக்கங்களில் ஆயுதங்களை களைந்துவிடுங்கள் எனக் கூறுவதற்கு ஒப்பாகும். வடக்கிற்கு எதிராக சியாங் கே-ஷேக் இப்பொழுது நடத்தும் போர் ஏற்கனவே வரைவுத் திட்டத்தை இயற்றியவர்களின் இயந்திரகதி திட்டத்தை முற்றிலும் தலைகீழாக மாற்றிவிட்டது.

*  *  *

ஆனால் இப்பிரச்சினை பற்றிய உத்தியோகபூர்வ கருத்தாய்வில் உள்ள கொள்கை அளவிலான பிழை, இன்னும் வெளிப்படையாக, நம்பும் தன்மை படைத்ததாக, இன்னும் எதிர்ப்புக் காட்ட முடியாத நிலையில் தோன்றும், இன்னும் பசுமையாக மனதில் இருக்கும், ஜாரிச ரஷ்யா ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளின் இணைப்பு என்பதையும், அதாவது பெரும் ரஷ்யர்களும் "வெளியாரும்", அவர்களில் பலரும் முற்றிலும் அல்லது பகுதிஅளவிலும் காலனித்துவ அந்தஸ்திலும் இருந்தனர் என்பதை நினைவு கொண்டால், இது குறைந்த முக்கியத்துவம் உடையதல்ல என்பது உணரப்படும். லெனின் ஜாரிச ரஷ்ய மக்களுடைய தேசிய பிரச்சினை பற்றி மிக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கோரியது மட்டும் இல்லாமல், ஆதிக்கம் செலுத்தும் ரஷ்ய பிரிவுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை கடமை ஒடுக்கப்பட்டுள்ள ரஷ்ய பிரிவுகள், பிரிவினை உட்பட, அவற்றின் தன்னாட்சி உறுதிக்காக நடத்தும் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும், என்றும் (புக்காரினுக்கும் மற்றவர்களுக்கும் எதிராக) பிரகடனப்படுத்தினார். ஆனால், இதிலிருந்து கட்சி ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தைவிட ஜாரிசத்தினால் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கம் (போலந்து நாட்டினர், உக்ரேனியர்கள், டார்ட்டார்கள், யூதர்கள், ஆர்மேனியர்கள், மற்றவர்கள்) அதிகம் முற்போக்கானது, தீவிரமானது, புரட்சிகரமானது என்ற முடிவிற்கு வந்ததா? தேசிய ஒடுக்குமுறை, பிரபுத்துவம் என்ற இரு தளைகளில் இருந்தும் இடர்பாடுகளுக்கு உட்பட்டிருந்தபோதிலும், போலந்தின் முதலாளித்துவ வர்க்கம் இன்னும் கூடுதலான முறையில் ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தைவிட பிற்போக்கு தன்மையை கொண்டிருந்தது என்றும், நாட்டின் டுமாக்கள் காடெட்டுகள் பக்கம் சாயாமால் அக்டோபர்வாதிகள் பக்கம் சாய்ந்தது என்ற உண்மையை வரலாற்று அனுபவம் நமக்கு எடுத்துரைக்கிறது. இதே நிலைதான் டார்ட்டார் முதலாளித்துவ வர்க்கத்திடமும் காணப்பட்டது. யூதர்களுக்கு எவ்வித உரிமைகளும் இல்லை என்ற உண்மை இருந்தாலும், ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தைவிட, யூத முதலாளித்துவ வர்க்கத்தினர் இன்னும் கோழைத்தனமாக, பிற்போக்குத்தனமாக, தீமை பயக்கும் வகையில் நடந்து கொள்ளுவதையும் அது தடுக்கவில்லை. அல்லது, எஸ்தோனிய முதலாளித்துவ வர்க்கம், இடது, ஜோர்ஜிய அல்லது ஆர்மேனிய முதலாளித்துவ வர்க்கத்தினர் இன்னும் கூடுதலான முறையில் பெரிய ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தைவிட புரட்சிகரமாக இருந்தனரா? இத்தகைய வரலாற்றுப் படிப்பினைகளை எவ்வாறு எவரும் மறக்க முடியும்?

ஆனால், நிகழ்விற்கு பின்னர் போல்ஷிவிசம் --பண்ட், டாஷ்நக்குகள், PPS இனம், ஜோர்ஜிய இன்னும் மற்ற மென்ஷிவுக்குகளுக்கு முற்றிலும் மாறுபட்ட முறையில்-- அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களை சார்ந்த தொழிலாளர்கள், ஜாரிச ரஷ்யாவில் இருந்த அனைத்து காலனித்துவ மக்கள் ஆகியோரை முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் மிகத் தொடக்க காலத்திலேயே, அதனிடம் இருந்து தங்களை விலகிக் கொண்டு, தங்களுடைய தன்னாட்சி நிறைந்த சொந்த வர்க்க அமைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளவும், தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்துடன் மட்டுமல்லாமல், புரட்சிகர குட்டி முதலாளித்துவ கட்சிகளிடமும் இருந்தும் இரக்கமற்ற முறையில் அனைத்து அமைப்புமுறை பிணைப்புக்களையும் முறித்துக்கொள்ளவும், இக்கட்சிகளுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை வென்றெடுக்கவும், விவசாயிகள் மீதான செல்வாக்கை இக்கட்சிகளுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டம் மூலம் வென்றெடுக்கவும் பேராதரவை பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்தபொழுது அது தவறு என்று கூறமுடியுமா? இங்கு ஒரு "ட்ரொட்ஸ்கிச" தவறினை செய்துவிடவில்லையா? இந்த ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பல பின்தங்கிய நாடுகளை பொறுத்தவரையில், கோமின்டாங்கை ஒத்த வளர்ச்சி கட்டத்தில் அதைக் கடந்து பேசவில்லையா?

சொல்லப்போனால், P.P.S., டாஷ்நாக்-சுடியன், பண்ட் ஆகியவை சர்வாதிகாரத்திற்கு எதிரான, தேசிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் தேவையான பல வர்க்கங்களின் ஒத்துழைப்பு என்ற "வினோதமான" வடிவமைப்பில் ஒத்துழைப்பு வேண்டும் என்று எவ்வளவு எளிதாக ஒரு கோட்பாட்டை அமைக்க முடியும்! ஆனால் அத்தகைய வரலாற்றுப் படிப்பினைகள் எவ்வாறு மறக்கப்பட முடியும்?

ஒரு மார்க்சிசவாதிக்கு, கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள சீன நடப்புக்களுக்கு முன்னரே --இன்று குருடருக்குக்கூட-- வெளிநாட்டு ஏகாதிபத்தியம், சீன உள்வாழ்வில் ஒரு நேரடிக் காரணியாக இருந்த தன்மையின் சீன மிலியுமோவ்களும் சீன கெரென்ஸ்கிகளும், இறுதிப்பகுப்பாய்வில் அவர்களுடைய ரஷ்ய முன்மாதிரிகளைவிட பெருந்தீமை பயப்பவர்களாக இருந்தனர் என்பது தெளிவாக தெரியும். எமது கட்சியின் முதல் பிரகடனம் இன்னும் கிழக்கே நாம் போனால், இன்னும் கீழ்த்தரமானவராக முதலாளித்துவ வர்க்கத்தினர் இருப்பர், தொழிலாள வர்க்கத்தின் மீதான பணிகள் இன்னும் பெரிய அளவில் இருக்கும் என்று நாம் கூறியது அலங்காரத்திற்காக அல்ல. இந்த வரலாற்று "விதி" முழுமையாக சீனாவிற்கும் பொருந்தும்.

"எமது புரட்சி ஒரு முதலாளித்துவ புரட்சி, தொழிலாளர்கள் முதலாளித்துவத்தினருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் -- கலைப்புவாதிகள் முகாமில் உள்ள தகுதியற்ற அரசியல்வாதிகள் போன்றோருக்கும். எமது புரட்சி ஒரு முதலாளித்துவ புரட்சி என்று நம்மிடையே மார்க்சிஸ்டுகள் எனக் கூறுபவர் கூடத் தெரிவிக்கின்றனர். முதலாளித்துவ அரசியல்வாதிகள் செய்யும் மோசடி பற்றி எமது மக்களின் கண்களை தொழிலாளர்கள் திறக்கவேண்டும்; அவர்கள் கொடுக்கும் உறுதிமொழிகளில் நம்பிக்கை வைக்கக்கூடாது, தங்களுடைய சொந்த சக்திகள், தங்களுடைய சொந்த அமைப்பு மற்றும் தங்களுடைய சொந்த ஐக்கியம், தங்களுடைய சொந்த ஆயுதங்கள் ஆகியவற்றை மட்டும் நம்பியிருக்க வேண்டும் என்று கூறவேண்டும். (Lenin, Works, Vol. XIV, part 1, p. 11.)

இந்த லெனினிச கருத்தாய்வு கீழைப் பகுதிகள் முழுவதிற்கும் கட்டாயமாக பொருந்தும். கொமின்டேர்னுடைய வேலைத்திட்டத்தில் இது கட்டாயமாக எல்லாவகையாலும் ஓர் இடத்தைப் பெறும்.