line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 3: சீனப்புரட்சியை பற்றிய முன்னோக்குகளும் சுருக்கவுரையும்

 

Print part 3 on single page

5. சோவியத்துக்களும் புரட்சியும்

கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் பிரதிநிதிகளின் நிறைவேற்றுக் குழுவின் பெப்ரவரி தீர்மானத்தில் "எழுச்சியின் கருவி என்றவகையில் கன்டோனில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சோவியத் இல்லாத நிலைக்கு" "தோழர் N, இன்னும் ஏனையோர்கள்", பொறுப்பாக்கப்பட்டுள்ளனர். உண்மையில், இக்குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் ஒரு வியக்கத்தக்க ஒப்புதல் உள்ளது.

முதல்தர ஆவணங்களின் அடிப்படையில், பிராவ்தாவில் (இல.31) எழுதப்பட்டு வந்துள்ள அறிக்கையில், கன்டோனில் ஒரு சோவியத் அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. ஆனால் கன்டோன் சோவியத், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பது பற்றி ஒரு சொல்கூட குறிப்பிடப்படவில்லை; அதாவது அது ஒரு சோவியத் அல்ல என; ஏனெனில் தேர்ந்தெடுக்கப்படாமல் ஒரு சோவியத் எப்படி அமைக்கப்பட முடியும்? இதைத்தான் நாம் தீர்மானத்தில் இருந்து அறிகிறோம். இந்த உண்மையின் முக்கியத்துவத்தை பற்றி சிறிது சிந்திப்போம். கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு நமக்கு இப்பொழுது ஆயுதமேந்திய எழுச்சியை இயக்க ஒரு சோவியத் தேவை என்று கூறுகிறது; ஆனால் அந்த காலத்திற்கு முன்பே அப்படி இருக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் என்ன வியப்பு! ஆயுதமேந்திய எழுச்சிக்கு தேதி குறித்தபோது அங்கு சோவியத் ஏதும் இல்லை. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சோவியத்தை தோற்றுவித்தல் எளிதான செயல் அல்ல. அனுபவத்தில் இருந்து மக்கள் ஒரு சோவியத் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும், அதன் வடிவமைப்பு பற்றி புரிந்து கொள்ள வேண்டும், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சோவியத் அமைப்புக்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்வதற்கு கடந்த காலத்தில் இருந்து சிறிது கற்றுக்கொள்வது என்பது அவசியமாகும். சீனாவில் இதன் அறிகுறி கூட இல்லை, சோவியத்துக்கள் பற்றிய முழக்கத்தை பொறுத்தவரை துல்லியமாக அது முழு இயக்கத்தின் நரம்பு மையமாக ஆகி இருக்கவேண்டிய பொழுதான காலகட்டத்தில்தான், அது ட்ரொட்ஸ்கிச முழக்கமாக அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் அவசர அவசரமாக எழுச்சிக்கு ஒரு தேதி குறித்த பின், தங்கள் தோல்வியை தாண்டிச் செல்வதற்கு கருதிய அளவில், அவர்கள் அதே நேரத்தில் ஒரு சோவியத்தையும் நியமிக்க வேண்டியிருந்தது. இந்த தவறு வெளிப்படுத்தப்படாவிட்டால், சோவியத்துக்கள் பற்றிய முழக்கம் புரட்சியை நெரிக்கும் தூக்குக் கயிறாக மாற்றப்பட முடியும்.

சோவியத்துக்களின் அடிப்படை வரலாற்றுப் பணி, அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஒழுங்கமைத்தல், அல்லது ஒழுங்கமைக்க உதவுதல், அதன்காரணமாக வெற்றியின் பின் அன்றே அதிகாரத்தின் கருவியாக அவை ஆகும் என்று தன்னுடைய காலத்தில் லெனின் மென்ஷிவிக்குகளுக்கு விளக்கியிருந்தார். அவரின் மாணவர்கள் அல்ல, அவரின் இழிபாசாங்கினர், எழுச்சிக்கு 12 மணி நேரம் இருக்கையில்தான் சோவியத்துக்கள் அமைக்கப்படலாம் என்ற முடிவுக்கு வந்தனர். சோவியத்துக்கள் அதிகாரம் பெற்ற பின்னர் தங்களை மாற்றிக் கொள்ளுகின்றன என்ற லெனினுடைய பரந்த பொதுமைப்படுத்தலை நிகழ்வுக்கு பின்னர் ஒரு சிறிய செய்முறை குறிப்பாக அவர்கள் மாற்றுவது என்பது புரட்சியின் நலன்களுக்கு உதவாது; மாறாக அதை ஆபத்திற்கு உட்படுத்திவிடும்.

அக்டோபர் 1917ல் போல்ஷிவிக் சோவியத்துக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்பு, சமூகப் புரட்சியாளர்கள் மற்றும் மென்ஷிவிக்குகளது சோவியத்துக்கள் ஒன்பது மாத காலமாக இருந்திருந்தன. 12 ஆண்டுகளுக்கு முன்பு பீட்டர்ஸ்பேர்க் மற்றும் மாஸ்கோ இன்னும் பல நகரங்களிலும் முதல் புரட்சிகர சோவியத்துக்கள் அமைக்கப்பட்டிருந்தன. 1905ம் ஆண்டு சோவியத் தலைநகரில் இருக்கும் ஆலைகள் அனைத்திலும் பரவியிருந்த நிலையில், வேலைநிறுத்ததின்போது மாஸ்கோவில் பதிப்பாளர்களின் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத் ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. இதற்கும் பல மாதங்கள் முன்பு மே 1905ல் Ivanovo-Voznesiensk இல் வெகுஜன வேலைநிறுத்தம் ஒன்றின்போது ஒரு முன்னணி அமைப்பு அமைக்கப்பட்டிருந்தது; அது தொழிலாளர்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு சோவியத்தின் அனைத்துக் கூறுபாடுகளையும் கொண்டிருந்தது. முதல் அனுபவமாகிய ஒரு தொழிலாளர்களின் பிரதிநிதிகளின் சோவியத்தை அமைப்பது மற்றும் சோவியத் அரசாங்கத்தை அமைப்பது என்ற மகத்தான பரிசோதனைக்கு இடையே, 12 ஆண்டுகளுக்கும் மேலான காலம் கடக்கப்பட்டது. இத்தகைய கால அவகாசம் சீனா உட்பட, ஏனைய நாடுகளில் தேவையில்லை. ஆனால் லெனினுடைய பரந்த பொதுமைப்படுத்தல் நிறைந்த கருத்திற்கு பதிலாக ஒரு சிறிய செய்முறை குறிப்பினால் பிரதியீடு செய்வதால் சீனத் தொழிலாளர்கள் சோவியத்துக்களை அமைக்க முடியும் என்று நினைப்பது புரட்சிகர நடவடிக்கையின் இயங்கியலை வெற்றுத்தனமான கல்விச்செருக்கின் மலட்டுத்தன்மை மற்றும் இரந்து கேட்கும் தன்மையால் பதிலீடு செய்வதற்கு ஒப்பாகும். அதுவும் அதிகாரத்தை உடனடியாகக் கைப்பற்ற வேண்டும் என்ற முழக்கத்தின் பேரில் எழுச்சிக்கு சற்று முன்பு சோவியத்துக்கள் அமைக்கப்பட முடியாது. ஏனெனில் அதிகாரத்தை கைப்பற்றும் கட்டத்திற்கு நிகழ்வுகள் வந்துவிட்டன என்றால், ஒரு சோவியத் இல்லாமல் மக்கள் ஆயுதமேந்திய எழுச்சிக்கு தயாராகி விட்டனர் என்றால் அதன் பொருள் எழுச்சியின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு தேவையான தயாரிப்பு பணிகளை செய்வதற்கு வேறுவித அமைப்பு வடிவங்கள், வழிவகைகள் ஏற்பட்டுவிட்டன என்று பொருளாகும். இதைத் தொடர்ந்து சோவியத்துக்கள் பிரச்சினை இரண்டாம்தரமான முக்கியத்துவத்தைத்தான் கொண்டு அமைப்புரீதியான தொழில்நுட்பம் அல்லது ஒரு அடையாளம் பற்றிய பிரச்சினையாக மட்டுமேதான் இருக்கும். சோவியத்துக்களின் பணி எழுச்சிக்கு அழைப்புவிடுதல் அல்லது அதை செயல்படுத்துவது என்று மட்டும் அல்லாமல், தேவையான கட்டங்களினூடாக மக்களை எழுச்சியை நோக்கி வழிநடத்துவதும் ஆகும். முதலில் சோவியத், மக்களை ஆயுதமேந்திய எழுச்சி என்ற கோஷத்துடன் அணிதிரட்டாது பகுதி கோரிக்கைகளுடன் அணிதிரட்டும்; பின்னர்தான், படிப்படியாக எழுச்சிக்கான கோஷத்தை நோக்கி அதுவும் அவர்களை தெருக்களில் சிதறடிக்காமல், முன்னணிப்படையை வர்க்கத்திடமிருந்து தனிமைப்பட்டுவிட அனுமதிக்காமல் அணிதிரட்டும். பலநேரமும் சோவியத்துக்களின் தோற்றம் புரட்சிகர வளர்ச்சியின் சாத்தியப்பாடுகளை திறந்துவிடும் வேலைநிறுத்தப் போராட்டங்களுடன் தொடர்பு கொண்டுள்ள நிலையில் உருவாகும்; ஆனால் குறிப்பிட்ட கணத்தில் அவை பொருளாதாரக் கோரிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடும். மக்கள் நடவடிக்கையூடாக சோவியத்துக்கள் தங்களுடைய அமைப்பு, அது ஒரு போராட்டத்திற்கான, ஒரு எதிர்ப்பிற்கான, ஒரு தற்காப்பிற்கான மற்றும் ஒரு தாக்குதலுக்கான சக்திகளை ஒழுங்கமைத்து அழைத்துச் செல்லும் ஒன்றாக கட்டாயம் உணரவேண்டும் மற்றும் புரிந்துகொள்ளல் வேண்டும். இதை அவர்கள் ஒரு நாள் நடவடிக்கையிலிருந்தோ அல்லது தனி ஒரு நடவடிக்கையிலிருந்து பொதுவாகவோ உணர்ந்து, புரிந்து கொள்ள முடியாது; மாறாக தடைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பல வாரங்கள், மாதங்கள், ஒருவேளை ஆண்டுகளின் அனுபவத்தில் கூட, உணர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியும். எனவேதான் இழிபாசாங்குடைய அதிகாரத்துவத்தினது தலைமை ஒரு நாடு புரட்சிகர எழுச்சிக் காலத்தை கடந்து கொண்டிருக்கும் நிலைமைகளில், தொழிலாள வர்க்கமும் ஏழை விவசாயிகளும் அதிகாரத்தை கைப்பற்றும் வாய்ப்புவளத்தை தங்களுக்கு முன்பு கொண்டிருக்கும் நிலையில், விழிப்படைந்து எழுச்சிபெற்றுவரும் மக்களை சோவியத்துக்களை உருவாக்குவதிலிருந்து கட்டுப்படுத்த முடியும்; இது அடுத்துவரும் கட்டங்களின் நடைமுறைப்படுத்தப்படும் முன்னோக்காக இருந்தபோதிலும், அது தரப்பட்ட படிநிலையில் ஒரு சிறுபான்மையினரால் மட்டுமே உய்த்துணரப்படுள்ள போதிலும் கூட நிலைமை அதுதான். தங்களின் புரட்சிகர எழுச்சியின் முதல் கட்டங்களில் விழிப்புணர்வு பெற்று விட்ட மக்களுக்கான சோவியத்துக்களின் பரந்த, வளைந்து கொடுக்கக்கூடிய அமைப்பு வடிவங்கள் பற்றி நாம் மதிப்பீடு செய்தோம்; அவை வழங்கப்பட்ட படிநிலையில் அதிகாரத்தை கைப்பற்றும் பணியை புரிந்து கொள்ளும் கட்டத்திற்கு ஏற்கனவே பக்குவமடைந்துவிட்ட ஒரு பகுதியின் அளவிலிருந்து சுதந்திரமான முறையில், தொழிலாள வர்க்கத்தை அதன் முழுமையில், ஒன்றுபடுத்தும் திறனைக் கொண்டவை ஆகும்.

எந்த ஆவண ஆதாரமும் உண்மையிலேயே தேவையா? உதாரணமாக, இங்கு முதலாவது புரட்சி சகாப்தத்தில் சோவியத்துக்கள் பற்றி லெனின் எழுதியது இதோ இங்கு இருக்கிறது:

"ரஷ்யாவின் சமூக ஜனநாயக தொழிற் கட்சி [அந்த நேரத்தில் கட்சியின் பெயர்] பெரிய அல்லது சற்றுக் குறைந்த முக்கியத்துவம் நிறைந்த புரட்சிகர எழுச்சிக் கணங்களில் தொழிலாளர்களின் சோவியத்துக்கள் மாதிரியிலான சில கட்சி அமைப்பற்ற வடிவங்களை பயன்படுத்திக் கொள்ள ஒருபோதும் மறுத்ததில்லை; அதற்குக் காரணம் தொழிலாள வர்க்கத்தின் மீது சமூக ஜனநாயகவாதிகளின் செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும், சமூக ஜனநாயக தொழிலாளர் இயக்கத்தை திடப்படுத்த வேண்டும் என்பதுதான்." [7]

இந்தவகை ஏராளமான இலக்கிய மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பலவற்றை, ஒருவர் மேற்கோள் காட்ட முடியும். ஆனால் அவை இல்லாமலேயே பிரச்சினை தெளிவாக இருக்கிறது என்பதை ஒருவர் எண்ணிப்பார்க்க முடியும்.

இதற்கு முற்றிலும் மாறாக இழிபாசாங்கினர் அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது பாட்டாளி வர்க்கத்தை கட்சியானது அணிவகுப்புச் சீருடை அணிவிக்கும் ஒரு அமைப்பு ரீதியான விஷயமாக சோவியத்துக்களை மாற்றியுள்ளனர். ஆனால் இது சோவியத்துக்களை உத்தரவிடுவது ஊடாக ஆயுதமேந்திய எழுச்சியின் நேரடி தேவைக்காக, 24 மணி நேரத்தில் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட முடியாது என்று நாம் கண்ட சந்தர்ப்பத்திலேயாகும். இத்தகைய பரிசோதனைகள் தவிர்க்க முடியாமல் ஒரு கட்டுக் கதைத் தன்மையைத்தான் கொள்ளும்; அதுவும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மிகவும் அவசியமான நிலைமைகள் சோவியத் முறையின் வெளிச்சடங்கினால் மூடி மறைக்கப்படுகிறது. இதுதான் சடங்கை கடைப்பிடிப்பதற்கு வெறுமனே சோவியத்துக்கள் நியமிக்கப்பட்ட கன்டோனில் நடந்தது. இங்குதான் பிரச்சினை பற்றிய இழிபாசாங்கினரின் சூத்திரப்படுத்தல் இட்டுச் செல்கிறது.

*  *  *

சீன நிகழ்வுகள் மீதான விவாதங்களில், எதிர்ப்பாளர்கள் பின்வரும் முரண்பாடுகளை பின்பற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது: 1926ல் இருந்து எதிர்ப்பாளர்கள் சீனாவில் சோவியத்துக்கள் என்ற முழக்கத்தை முன்வைத்தனர் அப்படியிருக்க அதன் பிரதிநிதிகள் 1923ல் ஜேர்மனியில் சோவியத்துக்கள் என்ற முழக்கத்திற்கு எதிராகப் பேசினார்கள் என கூறப்பட்டது. இக்குற்றச் சாட்டில் நடந்து கொண்டது போல் வெற்றுத்தனமான அரசியல் சிந்தனை வேறு எங்கும் அப்பட்டமாக வெளிப்படவில்லை. ஆயினும்கூட நாங்கள் சீனாவில் ஒரு உரிய, தக்க காலத்தில் சோவியத்துக்கள் தொழிலாளர்கள், விவசாயிகளின் சுயாதீன அமைப்புக்களாக தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று கோரினோம்; அப்பொழுது புரட்சி எழுச்சி அலை பெரிதும் உயர்ந்த நிலையில் இருந்தது.

சோவியத்துக்களின் பிரதான முக்கியத்துவமாக கோமின்டாங் முதலாளித்துவ மற்றும் அதன் இடது கோமின்டாங் முகவாண்மையை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பதாக இருந்தது. சீனாவில் சோவியத்துக்கள் என்ற முழக்கம், எல்லாவற்றிற்கும் மேலாக "நான்கு வர்க்க கூட்டு" என்ற இழிந்த, தற்கொலைக் கருத்துடன் உடைவையும் கோமின்டாங்கில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி வெளியேற வேண்டும் என்பதையும் அர்த்தப்படுத்தியது. அதன்விளைவாக ஈர்ப்புமையம் வெறுமையான அமைப்பு வடிவங்களில் அல்லாமல், வர்க்க நிலைப்பாட்டில்தான் இருக்கிறது.

1923 இலையுதிர்காலத்தில் ஜேர்மனியில் அது அமைப்புரீதியான பிரச்சினையாக மட்டுமே இருந்தது. கம்யூனிச அகிலத்தினதும் மற்றும் ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் மிகச் செயலற்ற தன்மை, பிற்போக்குத்தனம், சுறுசுறுப்பற்ற தன்மை, மந்தத்தன்மை, இவற்றின் விளைவாக சோவியத் அமைக்கப்பட வேண்டிய காலத்தில் தக்க அழைப்புக் கொடுக்கப்பட வேண்டிய கணம் கடக்கப்பட்டுவிட்டது. 1923 இலையுதிர் காலம் அளவில் கீழிருந்து வந்த அழுத்தம் மற்றும் தங்கள் சொந்த உடன்பாட்டின்படி ஆலைக் குழுக்கள் ஜேர்மனியின் தொழிலாளர் இயக்கத்தை ஆக்கிரமித்திருந்தன; கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கில் சரியான, தைரியமான கொள்கை பின்பற்றப்பட்டிருந்தால் அவ்விடமானது சோவியத்துக்களால் மிக வெற்றிகரமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. நிலைமையின் தீவிரம் இதற்கிடையில் அதன் கூர்மையான கட்டத்தை அடைந்திருந்தது. இன்னும் நேரத்தை இழப்பது என்பது புரட்சிகர சூழலை நிச்சயமாக நழுவ விடுவது என்று அர்த்தப்படுத்தியிருக்கும். எனவே மிகக்குறைந்த கால அவகாசத்துடன் எழுச்சி நாளாந்த நிகழ்ச்சிநிரலில் முன்வைக்கப்பட்டது. சோவியத்துக்கள் முழக்கத்தை இத்தகைய சூழ்நிலையில் முன்வைப்பது என்பது வெற்றுக் கல்விக்காரர்களின் மிகப் பெரிய முட்டாள்தனமாகத்தான் இருக்கும். சோவியத், அனைத்திற்கும் தீர்வு காணக்கூடிய வகையில் சக்திவாய்ந்த அதிகாரங்களை கொண்ட தாயத்து ஒன்றும் அல்ல. வளர்ந்துவிட்ட ஒரு சூழ்நிலையில் அவசரப்பட்டு சோவியத்துக்களை தோற்றுவிப்பது என்பது ஆலைக் குழுக்களை மறுநகல் செய்வதை ஒத்ததாகத்தான் இருந்திருக்கும். அது ஆலைக் குழுக்களை அவற்றின் புரட்சிகரப் பணிகளை தடுப்பதை அவசியமானதாக்கி இருக்கும் மற்றும் அவற்றை புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட, இன்னும் முற்றிலும் அதிகாரமற்ற சோவியத்துக்களாக மாற்றியிருக்கும். அது எப்பொழுது செய்யப்பட வேண்டும்? ஒவ்வொரு நாடுகளும் எண்ணப்பட்ட நிலைமையில் தான் இது செய்யப்படவேண்டும். அது புரட்சிகர நடவடிக்கையை அமைப்புரீதியான ஏமாற்று வழிவகைகளில் ஊடாக பெரும் கேடுபயக்கவல்ல விளையாட்டால் பதிலீடு செய்வது என்ற பொருளைத்தரும்.

தற்போதைய சரியான அரசியல் நிலைப்பாட்டை தக்க நேரத்தில் பிரதிபலித்துக் கொடுக்கும் வகையில்தான் சோவியத்தின் அமைப்பு முறை மகத்தான முக்கியத்துவத்தை பெறும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதற்கு எதிரிடையாக அது ஒரு கட்டுக் கதையாக, ஒரு வழிபாடாக, ஒரு மேசைப்பந்தாட்ட வகையினதாக மாற்றப்பட்டு விட்டால் மிகவும் எதிர்மறையான பொருளைத்தான் தரும். 1923 இலையுதிர்காலத்தின் கடைசியில் தோற்றுவிக்கப்பட்ட ஜேர்மனிய சோவியத்துக்கள் அரசியல் அளவில் எதையும் சேர்த்திருக்காது; அவை அமைப்பு முறையில் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தியிருக்க முடியும். கன்டோனில் நடந்தது அதையும்விட மோசமானது. ஒரு சடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்ற வகையில் அவசரத்தில் தோற்றுவிக்கப்பட்ட சோவியத் அதிகாரத்தில் இருப்பவர்களை சாகசவாத முறையில் அகற்றுதலை மூடிமறைக்கும் முகமூடியாக மட்டுமே இருந்தது. எனவேதான் அது முடிந்தவுடன் கன்டோன் சோவியத் காகித அளவில் வரையப்பட்ட ஒரு பழைய சீன பறக்கும் முதலையை (Dragon) ஒத்துள்ளது என்று நாம் கண்டுபிடித்தோம். பறக்கும் காகித முதலையை மோசமான நூலால் கட்டி ஆட்டுவிக்கும் கொள்கை எமது கொள்கை அல்ல. 1923 செப்டம்பரில் ஜேர்மனியில் வந்த சோவியத்துக்களை தந்தி மூலம் முன்ஆயத்தமின்றிப் பயன்படுத்துதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம். 1926ல் சீனாவில் சோவியத்துக்களை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுத்தோம். 1927ல் கன்டோனில் பொய்த்தோற்ற சோவியத்திற்கு நாங்கள் எதிராக இருந்தோம். இங்கு முரண்பாடுகள் ஏதும் இல்லை. ஒரு புரட்சிகர இயக்கத்தின் இயக்கவியல் மற்றும் அதன் அமைப்புரீதியான வடிவங்கள் பற்றிய கருத்தாய்வின் ஆழ்ந்த ஒற்றுமையைத்தான் நாங்கள் கொண்டுள்ளோம்.

சமீபத்திய ஆண்டுகளின் தத்துவம் மற்றும் நடைமுறையினால் திரிக்கப்பட்டு, குழப்பப்பட்டு, தெளிவற்றதாக்கப்பட்ட நிலையில் சோவியத்துக்களின் பங்கு மற்றும் முக்கியத்துவம் பற்றி பிரச்சினை வரைவுத் திட்டத்தில் சிறிதும் தெளிவுபடுத்திக் காட்டப்பட்டிருக்கவில்லை.

Notes

7. Works, Vol.VIII, p.215.