line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 
கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்
பகுதி 3: சீனப்புரட்சியை பற்றிய முன்னோக்குகளும் சுருக்கவுரையும்
 

Print part 3 on single page

2. சீனப் புரட்சியின் கட்டங்கள்

கோமின்டாங்கில் முதல் கட்டம் தேசிய முதலாளித்துவத்தின் ஆதிக்க காலம்; இது "நான்கு வர்க்கங்களின் கூட்டுக்களின்" வக்காலத்துக்கான முத்திரையின் வடிவமைப்பில் இருந்தது. இரண்டாம் கட்டத்தில், சியாங் கே ஷேக் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிறகு சீன கெரன்ஸ்கிசம், "இடது" வாங் சிங்-வெய்யின் ஹான்கோவ் அரசாங்க வடிவமைப்பில் இணையாகவும், "சுயாதீனமான" முறையிலும் ஆதிக்கம் பெற்றிருந்த வகையில் ஒரு பரிசோதனையாக இருந்தது.

ஆனால் மென்ஷிவிக்குகளுடன் இணைந்து ரஷ்ய நரோத்னிக்குகள் ஒரு வெளிப்படையான இரட்டை அதிகார பகிர்வுமுறையிலான குறுகிய கால சர்வாதிகாரத்திற்கு ஆதரவு கொடுத்திருந்தபோது, சீன "புரட்சிகர ஜனநாயகம்" அத்தகைய கட்டத்தை கூட அடையவில்லை. பொதுவாக வரலாறு அத்தகைய ஒழுங்கில் அமைவதில்லையாதலால், 1925ல் இருந்து கோமின்டாங் செலுத்திய சர்வாதிகாரத்தை தவிர வேறு எவ்வித "ஜனநாயக சர்வாதிகாரமும்" இல்லை, இருக்கவும் முடியாது என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ளவேண்டும். சீனாவின் ஓரளவு ஒற்றுமை, கோமின்டாங்கினால் சாதிக்கப்பட்டது உடனடியாக வரவிருக்கும் காலத்தில் தக்க வைக்கப்படுமா அல்லது மீண்டும் நாடு துண்டாடப்படுமா என்பது பற்றியும் கூறமுடியாது என்பதும் உண்மையே. ஆனால் புரட்சியின் வர்க்க இயங்கியல், தங்களின் மற்ற ஆதாரங்களை இழந்தபின், தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்று இறுதியில் தெளிவாகவும் முடிவாகவும் கொடுத்தபொழுது, அது நகரங்களிலும் கிராமங்களிலும் கணக்கிலடங்கா மில்லியன் கணக்கான ஒடுக்கப்பட்டவர்களுக்கு, இருப்பதை இழந்து விட்டவர்களுக்கு தலைமை கொடுத்த அளவில், கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு தொழிலாளர்கள், விவசாயிகளின் ஜனநாயக (அதாவது, முதலாளித்துவ ஜனநாயக) சர்வாதிகாரம் என்ற முழக்கத்தை முன்வைத்தது. இந்த சூத்திரத்திற்கான விடையிறுப்பு கன்டோன்களின் மறு எழுச்சியாகும்; அதில் முன்கூட்டியே வந்துவிட்ட தன்மை, அதன் தலைமையின் சாகசவாதம் இருந்ததால், ஒரு புதிய கட்டம் அரங்கேறுவதற்காக, இன்னும் சரியாக சொல்லப்போனால் மூன்றாம் சீனப்புரட்சி வருதல் என்பதற்கான நிலை ஏற்பட்டது. இந்தப் புள்ளியில் சற்று ஊன்றி கவனிப்பது அவசியமாகும்.

தங்களுடைய கடந்த பாவச்செயல்களுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ளும் வகையில், தலைமையிடம் அரக்கத்தனமான முறையில் கடந்த ஆண்டு இறுதியில் சில நிகழ்வுப் போக்குகளை ஏற்படுத்தி கன்டோன் குறைப் பிரசவத்தை கொண்டுவந்தது. ஆனால் ஒரு குறைப்பிரசவம் கூட நமக்கு தாயின் மகப்பேறு காலம் முழுவதின் அமைப்பு மற்றும் கருத்தரிப்பு முறை பற்றி அதிகமாக கற்பிக்க முடியும். கோட்பாட்டளவில் மகத்தானதும், கன்டோன் நிகழ்வுகள் சீனப் புரட்சியின் அடிப்படை பிரச்சினைகளில் கொண்டிருந்த உண்மையான முடிவான முக்கியத்துவம், துல்லியமாக, வரலாற்றிலும் அரசியலிலும் ஓர் அபூர்வமான இயல்நிகழ்ச்சியை இங்கு நாம் பெற்றிருக்கிறோம், மகத்தான அளவில் ஒரு பரிசோதனையை காண்கிறோம் என்ற உண்மை மீதாக முயன்றுபெற்றது. இதற்காக நாம் பெரும் விலை கொடுக்க நேர்ந்தது; எனவே அதற்கேற்ற படிப்பினைகளை இன்னும் தேர்ந்த முறையில் உள்ளீர்த்துக் கொள்ளும் கட்டாயத்தையும் அது நமக்குக் கொடுத்துள்ளது.

பிராவ்தா கொடுத்துள்ள தகவலின் (எண்.31) அடிப்படையில் கன்டோனின் எழுச்சியின் போராட்ட பெருக்கு நிறைந்த கோஷங்களில் ஒன்று "கோமின்டாங் வீழ்க!" என்பதாகும், கோமின்டாங் பதாகைகளும் சின்னங்களும் கீழிறக்கப்பட்டு, மிதியுண்டன. ஆனால் சியாங் கேய்-ஷேக்கின் "காட்டிக் கொடுப்பு" மற்றும் பின்னர் வாங் சிங்-வீயின் "காட்டிக்கொடுப்பிற்கு" பிறகும் (காட்டிக்கொடுப்புக்கள் அவர்களின் சொந்த வர்க்கத்தினுடையது அல்ல, எமது ... போலிக் கற்பனைகளுடையதாகும்), கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு "கோமின்டாங் பதாகையை சரணடைய மாட்டோம்!" என்ற உள்ளார்வமிக்க ஒரு சூளுரையை இப்பொழுது வெளியிட்டுள்ளது: கன்டோனின் தொழிலாளர்கள் கோமின்டாங் கட்சியை சட்டநெறிக்கு புறம்பானது என்று கூறி அதன் போக்குகள் அனைத்துமே சட்டவிரோதமானவை என்று அறிவித்துள்ளனர். இதன் பொருள் அடிப்படை தேசிய பணிகளுக்கான தீர்வுகள், பெரு முதலாளித்துவ வர்க்கம் மட்டுமில்லாமல் குட்டி முதலாளித்துவமும் முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் பணிகளை தீர்த்து வைக்க கூடிய வல்லமையுள்ள பாட்டாளி வர்க்க கட்சியுடன் பொருந்த கூடிய ஒரு கட்சியையோ அல்லது ஒரு பிரிவையோ, அரசியல் சக்தியையோ தோற்றுவிக்க இயலாது என்பதாகும். இந்நிலைக்கு திறவுகோல் ஏழை விவசாயிகளின் ஆதரவை பெறுவதற்கான இயக்கத்தின் பணி ஏற்கனவே தொழிலாள வர்க்கத்தின் தோள்களில் விழுந்துவிட்டது என்றும், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்துவிட்டது என்பதும் புரட்சியின் முதலாளித்துவ ஜனநாயக பணிகள் பிரச்சினைக்கு சரியான தீர்வு காண்பதற்கான அணுகுமுறை தொழிலாள வர்க்கத்தின் கரங்களிடம் அதிகாரக் குவிப்பு வேண்டும் என்பதை ஏற்படுத்தியுள்ளது என்பதும் ஆகும்.

குறுகிய காலமே நீடித்த கன்டோன் சோவியத் அரசாங்கத்தின் கொள்கைகளை பற்றி பிராவ்தா கீழ்க்கண்ட அறிக்கையையும் கொடுத்துள்ளது:

"தொழிலாளர்களுடைய நலன்களுக்காக, கன்டோன் சோவியத் ஆணைகளை வெளியிட்டு .... தொழிலாளர்கள் ஆலைக் குழுக்கள் மூலம் தொழிற்துறை கட்டுப்பாட்டை நிறுவியது... பெருந்தொழில்கள், போக்குவரத்து, மற்றும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன"

அதற்கு பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி மேலும் கூறுவதாவது: "உழைப்பவர்களின் நலன்களுக்காக பெரு முதலாளித்துவத்தினரின் வசிப்பிடங்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன...."

எனவே கன்டோன் தொழிலாளர்கள்தான் அதிகாரத்தில் இருந்தனர்; மேலும் அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் கைகளில் உண்மையில் இருந்தது. புதிய அரசின் அதிகாரம் பொதுவாக குவாங்டோங்கில் எஞ்சியிருந்த நிலப்பிரபுத்துவ பண்ணைகளை பறிப்பதாக மட்டும் இல்லை; உற்பத்தியில் தொழிலாளர் கட்டுப்பாட்டை நிறுவுதல் என்று மட்டும் இல்லை; அதுபோன்றவற்றிலும் கூட கட்டுப்பாட்டை நிறுவுதலாக இருந்தது?