சர்வதேச நாணய நிதியம் மற்றும் பெருவணிகங்களின் கோரிக்கைகளை திணிப்பதில் முழு அர்ப்பணிப்புடன் இருக்கின்ற போதிலும், தனது அரசாங்கம் இலங்கையின் “பொருளாதார இறையாண்மையை” ஸ்தாபிக்க விரும்புவதாக திசாநாயக்க அவநம்பிக்கையுடன் கூறினார்.
பெருவணிகங்களை "பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம்" என்று பாராட்டிய ஜனாதிபதி, அரச துறையில் துரித தனியார்மயமாக்கல் மற்றும் ஆட்குறைப்பை சுட்டிக்காட்டினார் காட்டினார்.
அடுத்த வரவுசெலவுத் திட்டமானது வரிகள், பயன்பாட்டு விலைகள் மற்றும் எரிபொருள் விலைகளும் மேலும் அதிகரிக்கப்படுவதையும், அதே போல் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை நெருப்பு வேகத்தில் விற்றுத்தள்ளி, இன்றியமையாத பொதுச் சேவைகளைக் குறைத்து, இலட்சக்கணக்கான தொழில்களை அழிப்பதையும் குறிக்கும்.
புதிய ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், இலங்கை முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு உழைக்கும் மக்களை விலை கொடுக்கச் செய்வதற்காக முன்னாள் விக்கிரமசிங்க ஆட்சியால் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான திட்ட நிரலுக்கு முழுமையாக அர்ப்பணித்துள்ளது.
பிரதான சக்திகளுக்கு இடையில் சமநிலைப்படுத்துவதற்கு மாறாக, திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி./தே.ம.ச. தனது அரசாங்கம் அதன் முன்னோடிகளின் அமெரிக்க சார்பு வழியையே பின்பற்றும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஜே.வி.பி./தே.ம.ச. நிர்வாகமானது தொழிலாளர்களுக்கும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள அதன் வேலைத்திட்டத்தை எதிர்க்கும் ஏனைய அரசியல் எதிர்ப்பாளர்களுக்கும் எதிராக, பயங்கரவாத தடைச் சட்டத்தையும் ஏனைய அடக்குமுறை நடவடிக்கைகளையும் பயன்படுத்த தயங்காது என்பதை இந்த வார அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது.
பேராசை பிடித்த இலங்கை உயரடுக்குகள் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கனக் கோரிக்கைகளை, அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஊக்குவிக்கின்ற மற்றும் இலாபங்களை அதிகரிப்பதற்கான தங்கள் வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்ற சாதகமான விடயமாகப் பார்க்கின்றனர்.
"மறுசீரமைப்பு வேகத்தைத் தக்கவைத்துக்கொள்வது மற்றும் அனைத்து திட்ட உறுதிப்பாடுகளையும் சரியான நேரத்தில் செயல்படுத்துவது மிகவும் முக்கியமானது" என்று தேர்தலுக்கு முன்னதாகவே அடுத்த அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
எந்தத் தேர்தல் முதலில் நடத்தப்பட்டாலும், யார் வெற்றி பெற்றாலும், இலங்கையின் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் அந்தந்த தலைவர்களும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை இரக்கமின்றி நடைமுறைப்படுத்த உறுதி பூண்டுள்ளனர்.
உலக வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களில் இலங்கையின் அரச நிறுவனங்களின் தனியார்மயமாக்கல், பாரிய வேலை அழிவு மற்றும் போராடிப் பெற்ற ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல்களும் அடங்கும்.
நிகழ்நிலை காப்பு மசோதாவானது அரசாங்க-விரோத எதிர்ப்பை நசுக்குவதற்கும், அதன் புதிய நிகழ்நிலை காப்பு சட்டத்தை மீறியதாகக் கருதப்படும் எவருக்கும் எதிராக கடுமையான தண்டனை நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பரந்த அளவிலான அதிகாரங்களை கொழும்புக்கு வழங்குகிறது.
காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி புத்தகத்தில் பாதுகாக்கப்படும் உலக சோசலிச வேலைத் திட்டத்தை வெற்றிக்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரு காலகட்டம் இப்போது நம் முன் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியானது இலட்சக்கணக்கான குறைந்த ஊதியம் பெறும் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் ஓய்வுக்கால சேமிப்புகளை உள்ளடக்கியதாகும்.
இந்திய தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் ஒரு தனி இனமாக அங்கீகரிக்கப்படுவதற்கான அழைப்பு, மோசமடைந்து வரும் சமூக நிலைமைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தைத் தடுக்கின்ற அதேநேரம், இந்திய தமிழ் உயரடுக்கின் அதிகாரத்தையும் சலுகைகளையும் அதிகரித்துக்கொள்ளும் நோக்கம் கொண்டதாகும்.
நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தியதற்காகவும், WSWS க்கும் ஏனைய ஊடகங்களுக்கும் தகவல் வழங்கியதற்காகவும் தொழிற்சங்க அதிகாரிகளுக்கு எதிராக இ.கா.கூ. எடுத்துள்ள ஒழுக்காற்று நடவடிக்கை கடுமையான எச்சரிக்கையாகும். இதை அனைத்து அரச நிறுவனங்களின் தொழிலாளர்கள் மற்றும் முழு தொழிலாள வர்க்கமும் எதிர்க்க வேண்டும்.
கடந்த ஆண்டு, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வெகுஜன இயக்கத்தை விக்கிரமசிங்க அரசாங்கம் இழிவுபடுத்துவதானது, தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களுக்கு எதிரான அரச அடக்குமுறைக்கான தயாரிப்பாகும்.
எதிராக வாக்களித்தவர்கள் அல்லது வாக்களிக்காதவர்களுக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுடன் அடிப்படை முரண்பாடுகள் ஏதுமில்லை, மாறாக அவர்கள் பெருகிவரும் வெகுஜன எதிர்ப்பை இழிந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பிணை எடுப்புக் கடனைப் பெறுவதற்கான அவரது ‘‘திறனுக்கு‘‘, பெருவணிகம், ஊடகங்கள் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் சில பிரிவுகளின் உற்சாகமான ஆதரவு கிடைக்கிறது.