மேலதிக நேர மற்றும் பொது விடுமுறை ஊதிய விகிதங்களில் அரசாங்கத்தின் கடுமையான வெட்டுக்களாலும் பதவி உயர்வுக்கு நீண்ட காலக்கெடுவை விதிப்பதாலும் தாதிமாரும் ஏனைய சுகாதார ஊழியர்களும் கோபமடைந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கட்டளைகளை திணிப்பதற்கு ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதியை இலங்கையின் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் ஆதரிப்பதாக சோ.ச.க. துணைச் செயலாளர் சமன் குணதாச கூட்டத்தில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த உறுதிபூண்டுள்ள திசாநாயக்க அரசாங்கம், எந்தவொரு எதிர்ப்பையும் இரக்கமின்றி நசுக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
அரசாங்கத்தின், சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், இலங்கைத் தொழிலாளர்கள் ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாராக வேண்டும் என்பதை புதன்கிழமை பொலிஸ் தாக்குதல் தெளிவுபடுத்துகிறது.
வெள்ளத்தில் தப்பியவர்கள் எதிர்கொள்ளும் அவல சூழ்நிலையானது, சமூக உட்கட்டமைப்பு தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கங்கள் மறுத்ததன் விளைவு ஆகும்.
"ஜனநாயகத் தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதோடு, உச்சபட்ச தேசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில் சிரோட்டியுக் கைது செய்யப்பட்டிருப்பதானது உக்ரேன் வலதுசாரி அதி-தீவிரவாதத்தில் தலைகீழாக மூழ்குவதைக் குறிக்கிறது. சிரோட்டியுக்கின் கைது சமூகத்தில் ஜனநாயகக் கருத்து வேறுபாடுகளை மௌனமாக்குவதற்கான ஒரு முயற்சியாகும்..." - அமீன் இஸ்ஸடீன், கொழும்பைத் தளமாகக் கொண்ட டெய்லிமிரர் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்
மாணவர்கள் உணவு, புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களுக்கான அதிகரித்த செலவினங்களையும், போக்குவரத்து மற்றும் மின்சாரத்திற்கான கட்டண அதிகரிப்பையும் எதிர்கொள்கின்றனர். அத்தோடு, வாழ்வதற்கான போதிய உதவித் திட்டங்கள், அவர்களுக்கு கிடைப்பதில்லை.
“காஸா மீதான இஸ்ரேலின் கொலைகாரப் போரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உணவு இல்லை, மருந்து இல்லை, குடிநீர் இல்லை; காஸாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு எதிராக இஸ்ரேலின் இரத்தக்களரி நடவடிக்கை அனுமதிக்கப்படக்கூடாது.
"உக்ரேனில் போர், அதை நிறுத்துவது எப்படி?" என்ற தலைப்பில் அக்டோபர் 19 நடத்தவுள்ள கூட்டத்திற்கான அதன் பிரச்சாரத்தில், இலங்கையில் உள்ள IYSSE அமைப்பு, காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரைப் பற்றி சீற்றமடைந்திருந்த மாணவர்களிடம் பேசியது.
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போர் பற்றியும் தங்களது சொந்த பொருளாதார சிக்கல்கள் பற்றியும் கலந்துரையாட ஆர்வமாக இருப்பதுடன் பலர் இந்த வாரம் IYSSE நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள உடன்பட்டனர்.
IMF கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை நசுக்குவதற்கும் எதிராக இன பாகுபாடுகளுக்கு அப்பால் தொழிலாள வர்க்கப் போராட்டம் அபிவிருத்தியடையும் நிலையிலேய இந்த இனவாத ஆத்திரமூட்டல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கமும் நாட்டின் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறி உள்ளூராட்சி தேர்தலை தடுத்து நிறுத்தியுள்ளன. முன்னதாக மார்ச் 9 அன்று திட்டமிடப்பட்ட தேர்தல் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் மூலம் வாக்களிப்பதற்கான மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும், சமீபத்தில் மத்திய பெருந்தோட்ட மாவட்டமான நுவரெலியாவில் உள்ள மஸ்கெலியா பேருந்து நிலையத்தில் ஒரு திறந்தவெளி பொதுக்கூட்டத்தை நடத்தியது.
மீனவர்கள், விவசாயிகள், தினக்கூலி தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் உட்பட சுமார் 60 பேர் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள், கட்சியின் சோசலிச வேலைத்திட்டத்தை விளக்குவதை கேட்டனர்.
கடந்த வாரம் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாள வர்க்கப் பகுதியான மீதொட்டமுல்லையில் வசிப்பவர்கள், தாம் இப்போது எதிர்கொண்டுள்ள சமூகப் பேரழிவை எப்படிச் சமாளிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை கோபத்துடன் விளக்கி, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களைக் கடுமையாகக் கண்டித்தனர்.
தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த அடிப்படை நன்மையான இலங்கையின் பொது சுகாதார அமைப்பைத் துடைத்துக் கட்டுவதை இலக்காகக் கொண்ட அரசாங்கத்தின் கட்டண வார்ட்டு திட்டத்தைத் தோற்கடிக்க தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்காக போராடுமாறு சுகாதார ஊழியர்களுக்கு HWAC அழைப்பு விடுத்துள்ளது.
கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர, மொரட்டுவா, பேராதனை, உருகுணை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள மாணவர்கள், உக்ரைன் போரை எதிர்த்தும் மூன்றாம் உலகப் போரை நோக்கி ஏகாதிபத்திய சக்திகளின் உந்துதலுக்கும் எதிராக டிசம்பர் 10 அன்று IYSSE நடத்தும் உலகளாவிய வலையரங்கிற்கு ஆதரவை தெரிவித்தனர்.