அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அசான்ஜிற்கு அனுமதி கிடைத்துள்ளது   

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

விக்கிலீக்ஸ் பத்திரிகையாளர் ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு எதிராக மேல்முறையீடு செய்யும் உரிமையை இரண்டு பிரிட்டிஷ் நீதிபதிகள் இன்று அனுமதி வழங்கியுள்ளனர். அவர் லண்டனின் பெல்மார்ஷ் (Belmarsh) அதிகபட்ச பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், உளவுச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கக்கூடிய குற்றச்சாட்டை எதிர்கொள்ளவும், நாடு கடத்தப்படுவதை எதிர்த்தும் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் போராடி வருகிறார்.

ஜனவரி 2021 இல் மனநல மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக பெறப்பட்ட முடிவு, அந்த ஆண்டு டிசம்பரில் உயர் நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது. அசான்ஜின் சட்டக் குழு, அவரது வாழ்வுக்கான உரிமைகள், சட்டத்தின் உரிய செயல்முறை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் தரக்குறைவாக நடத்துவதிலிருந்து விடுதலை உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில் மேல்முறையீடு செய்தது.

ஜூலியன் அசான்ஜ் [AP Photo/Matt Dunham]

அவர் மரண தண்டனையை எதிர்கொள்ளக்கூடும், அவர் வேறு (அமெரிக்கர் அல்லாத) நாட்டினராக இருப்பதால் விசாரணையில் பாரபட்சம் ஏற்படலாம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அவரது உரிமையை மறுதலிக்கலாம் என்றிருந்த நிலையில், அவை பிரிட்டன் சட்டத்தின் கீழ் நாடு கடத்துவதற்கான அனைத்து தடைகளும் இந்த மார்ச் மாதத்தில் உயர் நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டன. ஏப்ரல் 16 ஆம் தேதி வழங்கப்பட்ட இந்த அச்சங்களைத் தணிக்கும் உத்தரவாதங்களை வழங்குமாறு உயர் நீதிமன்றம் அமெரிக்க அரசாங்கத்திற்கு வாய்ப்பளித்தது.

இன்று நீதிமன்றத்தில், அசான்ஜின் வழக்கறிஞர்கள், மரண தண்டனை நிறைவாக விதிக்கப்படாது என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர், ஆனால் அவரது பாதுகாப்பில் பேச்சுரிமைக்கு உத்தரவாதம் அளித்து, பேச்சு சுதந்திர திருத்தத்தை (First Amendment) செயல்படுத்துவதற்கான அவரது உரிமை தொடர்பானவைகளுக்கு சவால் விடுத்தனர். அமெரிக்காவின் முதன்மை வழக்கறிஞர் கோர்டன் க்ரோம்பெர்க் (Gordon Kromberg), அசாஞ்சே அமெரிக்க நாட்டவர் இல்லை என்பதால், அவருக்கு அமெரிக்காவில் நடைபெறும் விசாரணையில் இந்த பாதுகாப்பு அம்சங்கள் மறுக்கப்படலாம் என்று பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அசான்ஜைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரால்ட் கேசி (Edward Fitzgerald KC), அமெரிக்கா வழங்கிய “வெளிப்படையான உத்தரவாதமற்ற நிலைமைகளைப்” பற்றிக் குறிப்பிட்டார், “இந்த நீதிமன்றத்தின் தொடர்பானவைகளுக்கு வழிவகுத்த விஷயத்தை எடுத்துக் கொள்ளாமல் இருக்க இந்த வழக்குத் தொடரவில்லை. அதாவது, குறைந்தபட்சம் ஒரு தேசிய பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக ஒரு வெளிநாட்டு குடிமகனாக அவர் பேச்சு சுதந்திர திருத்தத்தை (first amendment) நம்புவதற்கு தகுதியற்றவர்... 

இயல்பாக “வழக்கறிஞரின் [க்ரோம்பெர்க்] ஒரு குறிப்பிட்ட வாக்குறுதி அல்லது உறுதிமொழி ஒரு முதல் படியாக இருக்கும்”, ஆனால் “அந்த முதல்படி நடவடிக்கையைக் கூட மேற்கொள்ளவில்லை.”

அதன் முந்தைய தீர்ப்பில், அசான்ஜின் உரிமைகளை மறுத்ததன் மூலம் அடையாளம் காணப்பட்ட “உண்மையான ஆபத்து”, “சமமான, சிறந்த, மற்றும் வெளிப்படையான போதிய உத்தரவாதத்தைத் கொண்டிருந்தது.”

இந்த உறுதிமொழிகளின் தந்திரமான மற்றும் நம்பத்தாகாத சூத்திரங்களை இணைத்து, அமெரிக்காவின் வழக்கறிஞர் ஜேம்ஸ் லூயிஸ் கேசி (James Lewis KC) முற்றிலும் புதிய வாதங்களை முன்வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இது வழக்கின் முந்தைய விசாரணைகளிலிருந்து எதுவும் எழுப்பப்படவில்லை, இது அசான்ஜிற்கு எந்தவிதமான பேச்சு சுதந்திரத்தையும் மறுப்பதற்கான வாஷிங்டனின் நோக்கத்தை தெளிவுபடுத்த உதவியது. சுதந்திரமான பேச்சு உரிமைப் பாதுகாப்பிற்கான அமெரிக்க உத்தரவாதம் எந்த வகையிலும் இல்லை என்று கூற முடியாமல், அடிப்படையில் எந்த ஒரு விஷயத்திலும் அத்தகைய உத்தரவாதம் தேவை இல்லை என்று லூயிஸ் வாதிட்டார்.

அசான்ஜ் அவரது குடியுரிமையின் (nationality) அடிப்படையில் பேச்சு சுதந்திர திருத்தம் (first amendment) கூறப்பட்டதன்படி, பாதுகாப்புகள் மறுக்கப்படுவதில் நியாயமற்ற முறையில் பாகுபாடு காட்டப்பட மாட்டார். மேலும் அவர் ஒரு அமெரிக்க குடிமகன் அல்லாதவராக, “சட்டம் அல்லது நோக்கத்தின் அடிப்படையில், அமெரிக்க அரசியலமைப்பின் பேச்சு சுதந்திர திருத்தம் உள்ளடக்கிய ஒரு நபர் அல்ல” என்று அவர் வலியுறுத்தினார்; 

“அவரது குடியுரிமை காரணமாக அவர் பாகுபாடு காட்டப்பட மாட்டார். [பேச்சு சுதந்திரம் தொடர்பான] அனைத்து வாதங்களையும் அவரால் எழுப்ப முடியும்... அவர் அவற்றின்மீது நம்பிக்கை வைக்கமுடியும்.’’ என்று அவர் முடிவில் கூறினார்.

ஃபிட்ஸ்ஜெரால்ட் குறிப்பட்டது போல் இது உண்மையல்ல. “பேச்சு சுதந்திர திருத்தத்தின் (First Amendment) பொருந்தக்கூடிய முடிவு” “பிரத்தியேகமாக அமெரிக்க நீதிமன்றங்களின் வரம்பிற்குள்” உட்பட்ட நிலையில், அசான்ஜ் பேச்சு சுதந்திர திருத்தத்தின் (first amendment) பாதுகாப்புகளை “சார்ந்திருக்க முற்பட” முடியும் என்பதற்கு மட்டுமே உத்தரவாதத்தின் வார்த்தைகள் உத்தரவாதம் அளிக்கிறது.

அசான்ஜ் பற்றி கூறப்படும் நடத்தையானது பேச்சு சுதந்திர திருத்தத்தின் பாதுகாப்பிற்குள் அவசியம் இல்லை என்று கூறுவதன் மூலம் லூயிஸ் இந்த உண்மையை ஒப்புக்கொண்டு நியாயப்படுத்தினார். “அவரது குடியுரிமை காரணமாக அல்ல, ஆனால், சட்டத்தின் அடிப்படையில், அவர் ஒரு வெளிநாட்டவர், தேசிய பாதுகாப்பு தொடர்பான செயல்களை வெளிநாட்டு மண்ணில் செய்கிறார்.”

இங்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வழக்கு முழுவதுமாக அகற்றப்பட்டது: அது தனது தேசிய நலன்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதும் பத்திரிகையாளர்களைக் கைதுசெய்வதற்கு உளவுச் சட்டத்தைப் (Espionage Act) பயன்படுத்தலாம் மற்றும் முக்கிய சட்ட மற்றும் ஜனநாயகப் பாதுகாப்புகள் இல்லாமல் அவர்களை கைது செய்ய முயற்சிக்கலாம்.

இந்த வாதங்களுக்கு அசான்ஜ் அளித்த பதிலைச் சுருக்கமாக, ஃபிட்ஸ்ஜெரால்ட் நீதிமன்றத்தில் கூறினார், “உண்மையின் பல சிக்கல்கள் இன்னும் பதிலளிக்கப்படாமல் உள்ளன; வழக்கின் நிலை என்ன? முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தில் பல சிக்கல்கள் உள்ளன, அவை தீர்க்கப்படாமல் உள்ளன, [மேல்முறையீட்டுக்கு] அனுமதி மறுக்கும் மாற்ற முடியாத நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

ஒரு குறுகிய வழங்கப்பட்ட தீர்ப்பில், டேம் விக்டோரியா ஷார்ப் (Dame Victoria Sharp) மற்றும் நீதிபதி ஜான்சன் (Mr Justice Johnson) ஆகியோர் அசான்ஜின் சட்டக் குழுவினர் பக்கமாக, அவருக்கு மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை வழங்கினர்.

இந்தத் தீர்ப்பு ஒரு வெற்றியாகும், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் எந்த வெற்றிகரமான தலையீட்டையும் தவிர்த்து அசான்ஜ் அமெரிக்காவிற்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்படுவதை தடுப்பதற்கும் மற்றும் அமெரிக்க வழக்கின் பிற்போக்கு தன்மையை மேலும் அம்பலப்படுத்துவதற்கும் என இரண்டு விடயங்களை கொடுத்திருக்கிறது. பைடென் நிர்வாகம் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று அசான்ஜின் விடுதலைக்காக பாடுபடும் ஆதரவாளர்கள் இதனைக் கையில் எடுத்துக்கொண்டனர்.

ஸ்டெல்லா அசான்ஜ் (Stella Assange), மே 20, 2024 அன்று உயர் நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகங்கள் மற்றும் ஜூலியன் அசான்ஜின் ஆதரவாளர்களுடன் பேசுகிறார்

அசான்ஜின் மனைவி ஸ்டெல்லா நீதிமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் கூறினார்: “அமெரிக்கா இந்த நிலைமையை பார்த்துவிட்டு இந்த வழக்கை இப்போது கைவிட வேண்டும்... 14 ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் வெட்கக்கேடான இந்த தாக்குதலை கைவிடவேண்டும்” என்றார்.

“இந்த வழக்கு வெட்கக்கேடானது, மேலும் இது ஜூலியன் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர் பெரும் அழுத்தத்தில் இருக்கிறார். அவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பெல்மார்ஷ் சிறையில் இருக்கிறார்... இந்த வழக்கை அப்படியே கைவிட வேண்டும். பைடென் நிர்வாகம் அதை முதல் நாளிலிருந்தே கைவிட்டிருக்க வேண்டும்”.

இதை விக்கிலீக்ஸ் தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் ஹ்ராஃப்ன்சன் (Kristinn Hrafnsson) எதிரொலித்தார்: “ஜூலியனுக்கு அமெரிக்கா எந்த உத்தரவாதமும் அளிக்கப் போவதில்லை என்பதை நீதிபதிகள் பார்க்க இந்த நீதிமன்ற அறையில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் எடுத்திருக்கக் கூடாது. அவர்கள் அவருக்கு எதிராக பாகுபாடு காட்டுவார்கள், அவர்கள் அவருக்கு பேச்சு சுதந்திர திருத்தம் (first amendment) குறிப்பிட்டதன்படி பாதுகாப்பு கொடுக்க மாட்டார்கள்.

விக்கிலீக்ஸ் தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் ஹ்ராஃப்ன்சன் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே பேசும்போது, மே 20, 2024 

“இதற்கு இரண்டு மணிநேரம் ஆனது, ஆனால் நீதிபதிகள் ஒரு நியாயமான மற்றும் சரியான முடிவுக்கு வந்தனர். ஜூலியன் அசான்ஜிற்கு இப்போது மேல்முறையீடு செய்ய உரிமை கிடைத்துள்ளது. இதுவே பைடென் நிர்வாகத்திற்கு கடல் கடந்து சரியான செய்தியை அனுப்ப வேண்டும். நீங்கள் தளத்தை இழக்கிறீர்கள். இந்த வழக்கை நீங்கள் தவறிழைக்கிறீர்கள். நீங்கள் எந்த முகத்தையும் காப்பாற்ற விரும்பினால், ஜூலியன் அசான்ஜ் மீதான வழக்கை கைவிடுங்கள், இப்போதே அதை கைவிடுங்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

பைடென் நிர்வாகம் வழக்கை கைவிட வேண்டும். ஆனால் சட்ட வாதங்கள் மற்றும் தார்மீக அழுத்தங்களை விட அதை உறுதிப்படுத்துவதற்கு அதிகம் தேவைப்படுகிறது. திரைக்குப் பின்னால் கவனமான முறையில் அரசியல் கணக்கீடுகள் செயல்படுகின்றன.

கடைசியாக ஜனவரி 4, 2021 அன்று ஒப்படைப்புக்கான ஆரம்ப மறுப்பே வழக்கின் தன்மைக்கு எதிராக அசான்ஜிற்கு ஆதரவாக ஒரு தீர்ப்பு சென்றது. அந்த நேரத்தில், அமெரிக்க அரசாங்கத்தின் எதிர்காலம் கொந்தளிப்பில் இருந்தது, டொனால்ட் டிரம்பிற்குப் பதிலாக வந்த பைடெனை கவிழ்க்க ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி மற்றும் இரண்டு நாட்களுக்குப் பிறகு கேபிடல் கட்டிடத்தை முற்றுகையிட்டதன் மூலம் தீர்ப்பிற்கு எதிராக சவால் கைவிடப்பட்டது.

இப்போது இன்னொரு அரசியல் நெருக்கடி தலைதூக்கியுள்ளது. நவம்பரில் டிரம்புடன் மற்றொரு ஜனாதிபதித் தேர்தல் போட்டிக்கு முன்னதாக, காஸா இனப்படுகொலைக்கு பைடென் இரத்தந்தோய்ந்த ஆதரவை அளித்து வருகிறார். விக்கிலீக்ஸ் நிறுவனர் அமெரிக்க நீதிமன்றங்களில் இழுத்துச் செல்லப்படுவதால், ஜனநாயகக் கட்சியினருக்கு மற்றொரு வெடிக்கக்கூடிய அரசியல் பிரச்சினை விரைவாக வருவதைக் காட்டிலும், அசாஞ்சுக்கு எதிரான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதைக் கண்டு வெள்ளை மாளிகையில் ஒரு பிரிவினர் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

எவ்வாறிருப்பினும், இதுபோன்ற பரிசீலனைகள் ஒரு தாமதம் மற்றும் பெல்மார்ஷில் சகிக்க முடியாத நிலைமைகளின் கீழ் ஒரு நீண்டகால தடுப்புக்காவலைத் தவிர வேறொன்றையும் வழங்கவில்லை. பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்படுவதை எதிர்த்து போராடும் மாணவர்களின் உரிமைகள் என்பதால் அசான்ஜின் ஜனநாயக உரிமைகளை பகிரங்கமாக நசுக்குவதில் அமெரிக்க அரசின் பிரிவுகள் மகிழ்ச்சியடைவதற்கு எதிரான உத்தரவாதமும் அல்ல.

அசாஞ்சேயின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது என்பது, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் அவரது பாதுகாப்பில் தொழிலாள வர்க்கத்தின் உறுதியான வெகுஜன இயக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட சக்திவாய்ந்த சட்ட வழக்கை இணைப்பதாகும். முழு மேல்முறையீட்டுக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதற்கும் இன்றும் இடைப்பட்ட நேரத்தை அந்த இயக்கத்தை ஒழுங்கமைக்க செலவிட வேண்டும்.

Loading