சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியிருந்துவரும் 32 வயதான வெனிசுலாவை சேர்ந்தவரும், ஒரு தந்தையுமான ரிக்கார்டோ பிராடா வாஸ்குவெஸ் (Ricardo Prada Vásquez), டெட்ராய்டை கனடாவின் ஒன்டாரியோவுடன் இணைக்கும் அம்பாசிடர் (Ambassador) பாலத்தில் தவறுதலாக வாகனத்தில் திரும்பியதுக்காக, எல் சால்வடோருக்கு நாடுகடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
டரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாடுகளுக்கு நேரடி முன்னுதாரணமாக அடோல்ஃப் ஹிட்லரின் நாஜி ஆட்சியால் உருவாக்கப்பட்ட, விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு மக்களை “தண்டனைக்கு உரியவர்கள்” (Willensstrafrecht) என்று அறிவிக்கும் கருத்து உள்ளது.
அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்த உரிமைகளை (பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம்) பயன்படுத்தியதற்காக சிறைத்தண்டனை மற்றும் நாடுகடத்தலை எதிர்கொள்ளும் நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்களில் மொமொடு தாலும் ஒருவர்.
அமெரிக்காவில் பிரதான பல்கலைக்கழகங்களில் உள்ள நிர்வாகங்கள், ட்ரம்ப் நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான பயங்கரவாத ஆட்சியை எளிதாக்குவதில் முற்றிலும் மோசமான பாத்திரத்தை வகித்து வருகின்றன.
விரிவடைந்து வரும் ஏகாதிபத்தியப் போர் மற்றும் வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மையின் அழுத்தத்தின் கீழ், துருக்கியில் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருவதால், உலகளாவிய பரிமாணங்களைக் கொண்ட ஒரு புரட்சிகர நெருக்கடி உருவாகி வருகிறது.
வரவிருக்கும் மகத்தான போராட்டங்களுக்குத் தேவையான புரட்சிகரத் தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்ப, அதில் இணைந்து கொள்ளுமாறு தொழிலாளர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
அரசியலமைப்பிற்கு விரோதமான ட்ரம்பின் நிர்வாக உத்தரவுகளுக்கு எதிராக மொமொடு தால், தாக்கல் செய்த வழக்குக்கு விடையிறுப்பாக, ட்ரம்ப் நிர்வாகம் தாலை தடுத்து வைத்து நாடு கடத்த முயன்று வருகிறது.
ட்ரம்ப் நிர்வாகம் பதவியேற்று இரண்டு மாதங்களாகியுள்ள நிலையில், ஜனாதிபதி பதவி என்பது சர்வாதிகாரத்தின் கட்டுப்பாட்டு மையமாகவும் திட்டமிடும் மையமாகவும் மாறியுள்ளது.
நாஜிக்களின் போலி-சட்ட கையேட்டால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் முதலாளித்துவ தன்னலக்குழு, அமெரிக்காவில் ஒரு போலீஸ் அரசை திணிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
ட்ரம்பும் அவரது பாசிச ஆதரவாளர்களின் உள்வட்டமும் சட்ட மற்றும் அரசியலமைப்பு கட்டுப்பாடுகளை திட்டமிட்டு தகர்த்து வருகின்றனர். ஒவ்வொரு அத்துமீறலும் முழுமையான அதிகாரத்தின் இன்னும் அதிக திமிர்த்தனமான வலியுறுத்தல்களுக்கு களம் அமைக்கின்றன.
உலகசோசலிசவலைத் தளத்தின் (WSWS) சமரசமற்ற செய்தி அறிக்கையிடல், ஆழமான பகுப்பாய்வு மற்றும் பரந்த அளவிலான எதிர்ப்பை பரந்த அளவில் சாத்தியமான அளவுக்கு தொடர்ந்து அணிதிரட்டுவதை உறுதி செய்வதற்கு உங்கள் நிதி உதவி இன்றியமையாததாகும்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு பாலஸ்தீனிய பட்டதாரி மாணவரை தடுத்து வைத்து நாடு கடத்தும் அச்சுறுத்தல் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.
பேராதனைப் பல்கலைக்கழகம் “உண்மையை அறிவதற்கான நமது வாய்ப்பைத் தடுத்து வருகிறது. அரசாங்கம் சொல்வதை மட்டும் நாம் கேட்க வேண்டுமா? கூட்டங்களுக்கு இதுபோன்ற தடைகள் இருப்பதாக நாங்கள் இதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை, இதை எதிர்த்துப் போராட வேண்டும்.” – ஹர்ஷா
அரசாங்கம் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பினரையும் பாதிக்கும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையேயான முரண்பாடுகள், குற்றச்சாட்டுக்கள் மற்றும் எதிர்க் குற்றச்சாட்டுகளை பயன்படுத்திக்கொள்ளும் என நாம் எச்சரிக்கின்றோம்.
•சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (இலங்கை)
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜேர்மன் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, பிரதான பாராளுமன்ற குழுக்களில் ஒன்று, ஒரு எதேச்சதிகார மற்றும் இனவாத மசோதாவை நிறைவேற்ற உதவுவதற்காக பாசிஸ்டுக்களுடன் கைகோர்த்துள்ளது.
ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததற்கான பிரதிபலிப்பானது, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனமும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அதே தன்னலக்குழு நலன்களுக்கு சேவை செய்கிறது என்ற அடிப்படை உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.