சிங்களப் பேரினவாத ஜே.வி.பி. மற்றும் அதன் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இலங்கையின் புதிய வலதுசாரி, ஏகாதிபத்திய சார்பு அரசாங்கத்தின் மீது முன்னிலை சோசலிசக் கட்சி மாயைகளை விதைத்து வருகிறது.
தொழிலாளர்கள் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசரமாகிவிட்டது, என்று சோசலிச சமத்துவக் கட்சி சுட்டிக் காட்டுகிறது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் பெருவணிகங்களின் கோரிக்கைகளை திணிப்பதில் முழு அர்ப்பணிப்புடன் இருக்கின்ற போதிலும், தனது அரசாங்கம் இலங்கையின் “பொருளாதார இறையாண்மையை” ஸ்தாபிக்க விரும்புவதாக திசாநாயக்க அவநம்பிக்கையுடன் கூறினார்.
மேலதிக நேர மற்றும் பொது விடுமுறை ஊதிய விகிதங்களில் அரசாங்கத்தின் கடுமையான வெட்டுக்களாலும் பதவி உயர்வுக்கு நீண்ட காலக்கெடுவை விதிப்பதாலும் தாதிமாரும் ஏனைய சுகாதார ஊழியர்களும் கோபமடைந்துள்ளனர்.
சாம்சங் தொழிலாளர்கள் நிரந்தர, ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, அவர்களின் போராட்டத்தை விரிவுபடுத்தப் போராடும், ஒரு சுயாதீன தொழிலாளர் நடவடிக்கை குழுவை உருவாக்குவதன் மூலம், போராட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
2025-26 இந்திய வரவு-செலவுத் திட்டம், ஏழை தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கான சமூக செலவினங்களைக் குறைக்கின்ற அதே நேரம், பெரும் நிறுவனங்களுக்கு அதிகமான மானியங்கள், சில பணக்காரர்களுக்கு வரி விலக்குகள் கொடுத்துள்ளதோடு இராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளது.
தொழிலாளர் வர்க்கம் இந்த இனவாத பிரச்சாரத்தை எதிர்த்து, அனைவரின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஒற்றுமைக்காகப் போராட வேண்டும்.
பேராதனைப் பல்கலைக்கழகம் “உண்மையை அறிவதற்கான நமது வாய்ப்பைத் தடுத்து வருகிறது. அரசாங்கம் சொல்வதை மட்டும் நாம் கேட்க வேண்டுமா? கூட்டங்களுக்கு இதுபோன்ற தடைகள் இருப்பதாக நாங்கள் இதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை, இதை எதிர்த்துப் போராட வேண்டும்.” – ஹர்ஷா
பெருவணிகங்களை "பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம்" என்று பாராட்டிய ஜனாதிபதி, அரச துறையில் துரித தனியார்மயமாக்கல் மற்றும் ஆட்குறைப்பை சுட்டிக்காட்டினார் காட்டினார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் IYSSE விரிவுரைக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் வெளியேயும் அனைத்து மாணவர் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டமை, எதிர்காலத்திற்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக அமைகிறது.
பேராதனை பல்கலைக்கழக அதிகாரிகளின் பேச்சுரிமையின் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்காவிட்டாலும் அதற்கெதிராக போராடாமல் விட்டாலும், அது ஏனைய பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று IYSSE எச்சரித்தது.
•International Youth and Students for Social Equality
இது அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கம், சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் இலங்கை பிரிவான IYSSE, அதே போல் ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களதும் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும்.
•International Students and Youth for Social Equality (IYSSE-Sri Lanka)
பெருவணிக சார்பு தி.மு.க அரசாங்கத்தின் முகவர்களாக செயல்பட்டுவரும், ஸ்ராலினிஸ்டுக்கள் தலைமையிலான சி.ஐ.டி.யு. தொழிற்சங்கமானது, சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதிலும் வர்க்கப் போராட்டத்திற்கான ஒரு முக்கிய தீப்பொறியாக மாறிக் கொண்டிருந்த சூழ்நிலையில், அதனை முறியடித்துள்ளது.
இந்தக் கோரிக்கை, சர்வதேச நிதி மூலதனத்திற்கு இயல்பாகக் கட்டுப்பட்ட வலதுசாரி ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், பாராளுமன்றம் அல்லது எதிர்க் கட்சிகளுக்கானது அல்ல. மாறாக, தொழிலாளர்களின் அதிகாரத்திற்காகவும் சமூகத்தின் சோசலிச மறுசீரமைப்புக்குமான போராட்டத்தில், வங்குரோத்து முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிராக, உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்கான ஒரு நெம்புகோலாக அது தொழிலாள வர்க்கத்திற்கே முன்வைக்கப்படுகின்றது.
தொழிலாள வர்க்கம், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துடன் விரைவில் மோதலுக்கு வரும். இந்த அரசாங்கம், ஸ்தாபனத்திற்கு எதிரானதாக காட்டிக் கொள்ளும் அதேவேளை, சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்டத்தை சுமத்துவதில் உறுதியாக உள்ள ஒரு வலதுசாரி இனவாத கட்சியாகும்.
திசாநாயக்க, ஜே.வி.பி.யின் வரலாற்றில் சோசலிச வாய்வீச்சுக்களை புறக்கணித்து, சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய சார்பு கட்சியாக அதை மாற்றுவதில் ஒரு கனிசமான பாத்திரத்தை வகித்துள்ளார்.