காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை நிறுத்து!
காஸாவில் இனப்படுகொலையை நிறுத்த ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டியெழுப்புங்கள்!

உங்கள் நாட்டில் சோசலிச சமத்துவக் கட்சி அல்லது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் தொடர்பு கொள்வது பற்றிய தகவல்களுக்கு, படிவத்தை நிரப்பவும். நாங்கள் உடனடியாக உங்களுடன் தொடர்புகொள்வோம்.

விமர்சன விரிவுரைகள்

காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

உலக சோசலிச வலைத் தளமானது, கொலம்பியா, யேல் பல்கலைக்கழகம் மற்றும் நியூயோர்க் பல்கலைக் கழகங்களில் மேற்கொள்ளப்படும் பாரிய கைதுகள் உட்பட, எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு எதிரான அரச தாக்குதல்களின் பிரமாண்டமான விரிவாக்கத்தையும், அதனை பொய்கள் மற்றும் அவதூறுகளின் அடிப்படையில் நியாயப்படுத்துவதையும் கண்டனம் செய்கிறது.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு

பல்கலைக் கழக வளாகங்களில் காஸா இனப்படுகொலை எதிர்ப்பாளர்களை மௌனமாக்குவதற்கான பிரச்சாரத்தை எதிர்!

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பானது, பணிநீக்கம் செய்யப்பட்ட, வெளியேற்றப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அமைப்புகளை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்று கோருகிறது. இந்த கோரிக்கைக்காக போராட இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கம் மத்தியில் சாத்தியமான ஆதரவை பரந்தளவில் திரட்ட வேண்டும்.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (அமெரிக்கா)

பாலஸ்தீனியர் பிரச்சினைக்கு ஏகாதிபத்தியத்தின் "இறுதி தீர்வு"

ரஃபாவில் பொதுமக்கள் மீதான உடனடி படுகொலை ஏகாதிபத்திய சக்திகளால் ஒழுங்கமைக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டு வருவதோடு, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய இனப்படுகொலையில் ஒரு புதிய கட்டத்தை எளிதாக்குகிறது.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவின் அறிக்கை
சமீபத்திய கட்டுரைகள்

Topics

Date:
-

இஸ்ரேல் காஸாவை முழுமையாக ஆக்கிரமித்து அதன் முழு மக்களையும் இடம்பெயரச் செய்வதற்கு தயாராகி வருகிறது

இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கவும், எஞ்சியிருக்கும் மக்களை உள்நாட்டில் இடம்பெயரச் செய்யவும், "உயிர்வாழ்வதற்கு அவசியமான குறைந்தபட்ச கலோரி அளவை" மட்டுமே வழங்கவும் தயார் செய்து வருவதாக மூன்று சர்வதேச வெளியீடுகள் தெரிவிக்கின்றன.

Andre Damon

வான்வழித் தாக்குதலில் 400 பாலஸ்தீனியர்கள் படுகொலை

காஸாவில் "இறுதித் தீர்வை" ட்ரம்பும் நெதன்யாகுவும் துரிதப்படுத்துகிறார்கள்

கடந்த செவ்வாயன்று, இஸ்ரேல் காஸாவில் உள்ள 400 க்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்துள்ளது. மேலும், காஸாவில் எஞ்சியிருக்கும் ஒட்டுமொத்த பாலஸ்தீனிய மக்களையும் திட்டமிட்டு அழித்தொழிப்பது அல்லது அங்கிருந்து இடம்பெயரச் செய்வதை நோக்கமாகக் கொண்ட இனப்படுகொலையின் ஒரு புதிய கட்டத்தை இஸ்ரேல் தொடக்கியுள்ளது.

Andre Damon

நாஜிக்களின் "மடகஸ்கார் திட்டத்தை" எதிரொலிக்கும் வகையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களை கிழக்கு ஆபிரிக்காவிற்கு இடம்பெயர வைக்க முயற்சிக்கின்றன

காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை பெருமளவில் வெளியேற்றுவது மற்றும் அவர்களை வலுக் கட்டாயமாக மீள்குடியேற்றுவது தொடர்பாக சூடான், சோமாலியா மற்றும் சோமாலிலாந்து அதிகாரிகளுடன் அமெரிக்கா, இஸ்ரேலிய அரசாங்கங்கள் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளன.

Andre Damon

மஹ்மூத் கலீலை விடுதலை செய்! ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு பாலஸ்தீனிய பட்டதாரி மாணவரை தடுத்து வைத்து நாடு கடத்தும் அச்சுறுத்தல் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

காஸாவில் இரண்டாவது இனப்படுகொலைக்கு இஸ்ரேல் திட்டம், மேற்குக் கரையில் இனச்சுத்திகரிப்பு அதிகரிப்பு

மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதலானது, சியோனிசக் குடியிருப்புகளை விரிவுபடுத்துவதற்கும் மேற்குக் கரையை இணைப்பதற்குமான ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. 1993 ஆம் ஆண்டு ஒஸ்லோ ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டை முழுமையாகக் கொண்ட மற்றும் பாலஸ்தீனப் பிரதேசத்தின் 60 சதவீத பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதி C இலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

Jean Shaoul

"நாங்கள் அதை எடுக்கப் போகிறோம்:" காஸாவை இணைத்துக் கொள்வதற்கான ட்ரம்பின் திட்டமும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் மீள்வருகையும்

அமெரிக்கா காஸாவை "சொந்தமாக்கும்" என்று அறிவிப்பதன் மூலம், ட்ரம்ப் காலனித்துவ காட்டுமிராண்டித்தனம் மற்றும் கொடூரத்தின் ஒரு புதிய சகாப்தத்தை பிரகடனம் செய்துள்ளார். அதில் ஒட்டுமொத்தமாக, மில்லியன் கணக்கான மக்கள் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் பலிபீடத்தில் பலியிடப்படுவார்கள்

Andre Damon

ட்ரம்பின் ஆதரவுடன் மேற்குக் கரையில் இரண்டாவது காஸா நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொள்கிறது

ட்ரம்பும் எலோன் மஸ்க்கும் சமூக அழிப்பு மற்றும் நிர்வாக சர்வாதிகாரம் என்ற தங்கள் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும்போது, ஜனநாயகக் கட்சி முடங்கிப் போயுள்ளது.

Jean Shaoul

ட்ரம்பின் இனச்சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கி இஸ்ரேல் நகர்கிறது

கடந்த வியாழனன்று, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ட்ரம்பின் திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாரிப்பு செய்யுமாறு இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

Andre Damon

காஸாவை இணைப்பதற்கான ட்ரம்பின் திட்டமும் காலனித்துவத்தின் மீள்வருகையும்

காஸாவை இனரீதியில் சுத்திகரிப்பதற்கான ட்ரம்பின் திட்டம், ஏகாதிபத்திய சக்திகளால் காலனித்துவவாதம் மற்றும் இனப்படுகொலையை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.

Andre Damon

அமெரிக்காவுடன் காஸாவை இணைப்பதற்கும், முழுமையாக இனச் சுத்திகரிப்பு செயவதற்கும் ட்ரம்ப் அழைப்பு விடுக்கிறார்

கடந்த செவ்வாயன்று வாஷிங்டனில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காஸா பகுதியை முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யவும், அதன் அனைத்து கட்டிடங்களையும் தரைமட்டமாக்கவும், அமெரிக்கா அந்தப் பகுதியை இணைத்துக் கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

Andre Damon

அமெரிக்காவிற்கு வருகை தந்த நெதன்யாகு, மத்திய கிழக்கின் வரைபடத்தை "மீண்டும் வரைவதாக" உறுதியளித்துள்ளார்

காஸா மீதான இன சுத்திகரிப்பு மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்க-இஸ்ரேலியப் போரை விரிவுபடுத்துவது குறித்து விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த வாரம் ட்ரம்புடன் விரிவான தொடர் சந்திப்புகளுக்காக நெதன்யாகு வாஷிங்டன் டி.சி.க்கு வந்தடைந்துள்ளார்.

Andre Damon

ஆவுஷ்விட்ஸ் விடுதலை பெற்று எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு: ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனம் மீண்டும் திரும்புகிறது

நாஜிக்களின் ஆவுஷ்விட்ஸ் வதை முகாம் விடுதலை பெற்று எண்பது ஆண்டுகளுக்குப் பிறகும், இனப்படுகொலை, மில்லியன் கணக்கான மக்கள் அவர்களின் மூல வழித்தோன்றல் காரணமாக துன்புறுத்தப்படுவது, போர் மற்றும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் என்பன மீண்டும் இயல்பாக்கப்பட்டு வருகிறது.

Peter Schwarz

பேரழிவுக்குள்ளான வடக்கு பகுதிக்கு திரும்புவதற்கு காஸா மக்களுக்கு அனுமதி

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பேரழிவுக் காட்சிகளுடன் மட்டுமே காஸாவிலுள்ள படங்களை ஒப்பிட முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 92 சதவீத குடியிருப்புகள் கடுமையாகவோ அல்லது பகுதியாகவோ காஸாவில் சேதமடைந்துள்ளன.

Thomas Scripps

காஸாவில் இனச்சுத்திகரிப்பை அமெரிக்காவின் கொள்கையாக ட்ரம்ப் ஏற்றுக்கொள்கிறார்

கடந்த சனிக்கிழமையன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாலஸ்தீனத்தில் இனச் சுத்திகரிப்புக்கு வெளிப்படையாக, காஸாவை அதன் அரபு குடியிருப்பாளர்களிடமிருந்து "தூய்மைப்படுத்த" இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தார்.

Andre Damon

இஸ்ரேல், ஜெனின் மற்றும் பரந்த மேற்குக் கரை மீதான தனது பிடியை இறுக்குகிறது

காஸாவில் அதன் இனப்படுகொலை குற்றவியல் போரில் பயன்படுத்திய தந்திரோபாயங்களை மீண்டும் செய்து, இஸ்ரேலிய படைகள் கலீல் சுலைமான் அரசாங்க மருத்துவமனையை சுற்றி வளைத்துள்ளன. ஜெனின் பகுதியின் பல சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளையும் நகரத்தையும் விட்டு வெளியேறுமாறு ஒலிபெருக்கி மூலம் உத்தரவிடப்பட்டுள்ளனர்.

Thomas Scripps

ஜேர்மன் கூட்டாட்சி தேர்தலில், சோசலிச சமத்துவக் கட்சி விடுக்கும் அழைப்பு!

சோசலிசத்திற்கான போராட்டத்தின் மூலம் ஏகாதிபத்திய போரை எதிர்ப்போம்!

போர் மற்றும் சிக்கனக் கொள்கையை ஆதரிக்கும் அனைத்துக் கட்சி கூட்டணியை எதிர்த்து ஜேர்மன் கூட்டாட்சி தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி (ஜேர்மனி)

பைடென் போர் நிறுத்தத்தை அறிவித்ததில் இருந்து இஸ்ரேலிய படைகள் காஸாவில் 86 பேரை கொன்றுள்ளன

காஸாவில் இனப்படுகொலையை மேற்கொண்டுவரும் இஸ்ரேல், போர்நிறுத்தத்தை அமுல்படுத்த ஒப்புக்கொண்டதாக கடந்த புதன்கிழமை அறிவிப்பு வெளியான போதிலும், இஸ்ரேலிய இராணுவம் காஸா முழுவதும் அதன் வெறியாட்டத்தைத் தொடர்கிறது.

Andre Damon

இஸ்ரேலிய குண்டுகளும் தோட்டாக்களும் காஸாவில் 60,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றிருக்கலாம் என்று ஆய்வு வெளிப்படுத்துகிறது

இந்த ஆய்வுகள், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் காஸா மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் என்ற மறுக்க முடியாத உண்மையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. மேலும், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடனும், உதவியுடனும் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த இனப்படுகொலை, 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான இனப்படுகொலைகளில் ஒன்றாகும்.

Andre Damon

சிரியாவிலுள்ள குர்துகளின் எதிர்காலம் குறித்து அங்காராவும் வாஷிங்டனும் உடன்படாத நிலையில், துருக்கியுடனான போர் குறித்து இஸ்ரேல் எச்சரிக்கிறது

புதிய நிர்வாகிகளை நியமித்தல், ஜனநாயக உரிமைகள் மீதான ஏனைய தாக்குதல்கள், 40 ஆண்டுகளாக அங்காரா நசுக்க முயற்சித்து வருகின்ற குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்கும் (PKK), அங்காராவிற்கும் இடையிலான புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் என்பன, "அமைதி மற்றும் ஜனநாயகம்" என்ற கூற்றுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதைக் காட்டுகிறது.

Barış Demir

யேமனில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் ஜெனரலை அபாயத்திற்குள்ளாக்கியது

வியாழக்கிழமைநன்று (டிசம்பர் 21, 2024) இஸ்ரேலிய போர் விமானங்கள் யேமன் மீது தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இவற்றில் பல தாக்குதல்கள், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் விமானம் ஏறத் தயாராகிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள சனா சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கின.

Kevin Reed