நியூயோர்க்டைம்ஸ் வெளியிட்ட விரிவான அறிக்கையின்படி, மே மாத தொடக்கத்தில் திட்டமிட்ட தாக்குதலில் ஈரானின் அணுசக்தி திறன்களை அழிக்கும் திட்டங்கள் குறித்து அமெரிக்காவும் இஸ்ரேலும் பல மாதங்களாக நெருக்கமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டில் அதிதீவிர வலதுசாரி சியோனிச ஆட்சி 4,000ம் பேர்களைக் கொன்று, ஹிஸ்புல்லாவின் தலைமையை பெருமளவில் அழித்த பின்னர், ஈரானுடனான பிராந்திய அளவிலான மோதலுக்கு மேடை அமைக்கும் நோக்கத்தை இந்த உடன்படிக்கை கொண்டுள்ளது.
திங்களன்று மிச்சிகனில் பேசிய பில் கிளின்டன், காஸாவில் அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலையை நியாயப்படுத்தி, அப்பாவி மக்களை இலக்கு வைப்பது, போரில் ஈடுபடாதவர்களுக்கு எதிராக கூட்டுத் தண்டனை கொடுப்பது இரண்டுமே போர்க்குற்றங்கள் என்று வெளிப்படையாக வாதிட்டார்.
அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ஈரானைத் தாக்குவதற்கு, இஸ்ரேலுக்கு தங்கள் உறுதியான ஆதரவை அறிவித்துள்ளன. இது, பிராந்திய அளவிலான போரை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கையாகும். மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு, ஈரானின் முதலாளித்துவ-மதகுரு ஆட்சியிடம் மாற்றீடு இல்லை.
தீவிரமடைந்து வரும் பிராந்திய அளவிலான போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாத்யூ மில்லர், வாஷிங்டன் இஸ்ரேலிய இராணுவத்துடன் அதன் படையெடுப்பு குறித்து "தொடர்ச்சியான உரையாடலில்" இருப்பதாகத் தெரிவித்தார். அதே வேளையில், பொது ஒளிபரப்பு நிறுவனமான கான், ஈரானின் தாக்குதலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே "தீவிர ஒருங்கிணைப்பு" நடைபெறுவதாகக் குறிப்பிட்டது.
அமெரிக்கா மற்றும் இதர ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவுடன் மட்டுமே இந்த ஆக்ரோஷமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை, மில்லியன் கணக்கான மக்களுக்கு பேரழிவுகரமான விளைவுகளுடன் ஈரானைக் குறிவைக்கும் ஒரு பிராந்திய அளவிலான போராக உருமாறி வருகிறது என்பதை இது நிரூபிக்கிறது.
பாலஸ்தீன மக்களை அழித்து அவர்களின் நிலங்களை அபகரிக்க இஸ்ரேல் பட்டினியை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்துவதாக உணவு உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் ஃபக்ரி குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஆவணம் சியோனிச ஆட்சியின் இனப்படுகொலை நோக்கத்திற்கும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முன்னொருபோதும் இல்லாத போர் குற்றங்களில் ஏகாதிபத்திய சக்திகள் உடந்தையாக இருப்பதற்கும் ஆதாரங்களை வழங்குகிறது.
ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், அது முற்றிலும் இஸ்ரேலின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என்பது அதிகரித்தளவில் தெளிவாகி வருகிறது. இது ஒரு கண முன்னறிவிப்பில் குண்டுகளைக் கொண்டு படுகொலைகளை மீண்டும் தொடங்க அவர்களுக்கு உதவும். மேலும், பேரழிவுக்குள்ளான பகுதிக்குள் உதவி விநியோகங்கள் மீதான கழுத்தை நெரிப்பதன் மூலமாக, பாலஸ்தீனியர்கள் மீது பட்டினியையும் நோயையும் தொடர்ந்து திணிக்க அவர்களுக்கு உதவும்.
முழு ஆளும் வர்க்கத்தின் ஆதரவுடன், பைடென் நிர்வாகம் ஈரானை இலக்கு வைத்து ஒரு பேரழிவு தரும் மோதலை நடத்த தீர்மானகரமாக உள்ளது. ஈரானை அதன் போட்டியாளர்களுக்கு எதிரான ஏகாதிபத்திய வன்முறையின் உலகளாவிய வெடிப்பில் ஒரு முன்னரங்கு நாடு என்று அது காண்கிறது. இது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வின் மூலம்தான் நிறுத்தப்பட முடியும்.
அதி தீவிர வலதுசாரி ஆட்சியானது, காஸாவில் இடம்பெற்றுவரும் போரை அதன் வடக்குப் பகுதியை நோக்கி விரிவுபடுத்துவதற்கு நீண்டகாலமாக ஒரு சாக்குப்போக்கைத் தேடி வருகிறது. மேலும், மத்திய கிழக்கின் முழு பிராந்தியத்தையும் இரத்தக்களரிக்குள் ஆழ்த்த அச்சுறுத்தும் இந்த பொறுப்பற்ற கொள்கைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு ஆதரவையும் இஸ்ரேல் அனுபவித்து வருகிறது.
ஒரு மூத்த ஹிஸ்புல்லா தளபதியை இஸ்ரேல் படுகொலை செய்தபின், வடக்கு இஸ்ரேல் மீது பதிலடி ராக்கெட் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) செவ்வாயன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு, லெபனானில் ஒரு போருக்கான செயற்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.
இந்த இரண்டு நாள் ஒன்றுகூடலின் திட்டநிரல் ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோ போரை ஒரேயடியாக தீவிரப்படுத்துவதற்கான திட்டங்களால் மேலாதிக்கம் செலுத்தப்படுவதுடன், ஸ்தாபக முதலாளித்துவ அரசியலுக்குள் ஐரோப்பிய அதிவலதை இன்னும் கூடுதலாக ஒருங்கிணைப்பது மீதான விவாதங்களும் உள்ளடங்கும்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், அணு ஆயுதம் ஏந்திய ரஷ்யாவிற்கு எதிரான போரை, பொறுப்பற்ற முறையில் உலகளாவிய ஒரு தீப்பிழம்பை நோக்கி தீவிரப்படுத்தி வருகின்றன. ஏகாதிபத்திய போருக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே இதனை நிறுத்த முடியும்.
குறைந்தபட்சம், 45 இடம்பெயர்ந்த பொதுமக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் என்னவென்றால், "இனப்படுகொலையை நிறுத்த" ஏகாதிபத்திய அரசாங்கங்கள், ஐக்கிய நாடுகள் சபை, அல்லது சர்வதேச நீதிமன்றங்கள் அல்லது இதர அதிகாரங்களுக்கு முறையிடுவது, செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கும். இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அணிதிரட்டப்பட வேண்டிய சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) கண்டனம் செய்யவும், தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையுடன் போர் குற்றங்களை செய்வதற்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் உரிமையை வலியுறுத்தவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் பாசிசவாத கிறிஸ்தவ அடிப்படைவாத குடியரசுக் கட்சியினரான மைக் ஜோன்சன் மற்றும் லிண்ட்சே கிரஹாம் ஆகியோருடன் கைகோர்த்துள்ளனர்.
அக்டோபர் 7ல் இருந்து, உத்தியோகபூர்வ மரண எண்ணிக்கை 35,200 பாலஸ்தீனியர்களாக உயர்ந்துள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் பிள்ளைகள். இந்த நிலையில், வாஷிங்டனின் பிரதிபலிப்பு, தீவிர வலதுசாரி சியோனிச ஆட்சிக்கான அதன் ஆதரவை இரட்டிப்பாக்குவதும் ஆயுத ஏற்றுமதியை அதிகப்படுத்துவதுமாகும்.
ரஃபா மீதான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பெரிய குண்டுகளையோ அல்லது பீரங்கிப் குண்டுகளையோ வழங்காது என்று புதன்கிழமை இரவு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் கூறிய கருத்துக்களை ஊடகங்கள் விரிவாக வெளியிட்டன. எனினும், தாக்குதலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த தந்திரோபாய வேறுபாடுகள் மட்டுமே இதில் உள்ளன.
கடந்த 72 மணி நேரத்தில் கிடைத்த இந்த கொடூரமான கண்டுபிடிப்பு பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஏகாதிபத்திய ஆதரவிலான இனப்படுகொலைக்கு கூடுதல் ஆதாரத்தை வழங்குகிறது. இது ரஃபாவில் உயிர்வாழப் போராடும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் மீது நெருங்கி வரும் தாக்குதல்களை உடனடியாக அதிகரிக்க உள்ளது.