இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஜா-எல, ஏகலவிலுள்ள எஸ்குவெல் ஸ்ரீ லங்கா ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களால் கடந்த டிசம்பர் 14 அன்று சம்பள உயர்வு மற்றும் அதிக போனஸ் கோரி ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கிய அன்டனி மார்கஸ் தலைமையிலான சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது ஊழியர்கள் சங்கம் (சு.வ.வ.பொ.சே.ச) புதன்கிழமை (டிசம்பர் 22) போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.
எஸ்குவெல் லங்கா ஆடைத் தொழிற்சாலைச் வலையமைப்பை சேர்ந்த இந்தத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் 3,000 ரூபாய் சம்பள உயர்வு மற்றும் இரண்டு மாத ஊதியத்துக்கு சமாந்தரமான போனஸைக் கோரிய போதிலும், தொழிற்சங்கத் தலைவர்கள், ரூபா 1,750 சம்பள உயர்வு மற்றும் ஒன்றரை மாத சம்பளத்திற்கு இணையான போனஸ் கொடுப்பனவு என்ற நிர்வாகத்தின் பிரேரணைக்கு இணங்கி வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்டனர்.
தொழிற்சாலையின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களில், ஒரு சிறிய குழு தொழிலாளர்களும் நிர்வாகத்தையும தவிர ஏனைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததோடு, தொழிற்சங்க அதிகாரத்துவம் இந்த வேலைநிறுத்தத்தை கைவிட்டபின்பு, தொழிலாளர்கள், விருப்பமின்றி 23 ஆம் தேதி வேலைக்குச் சென்றனர்.
குறைந்தபட்சம் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தனது கிளைகள் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களின் தொழிற்துறை பலத்தை கூட, எஸ்க்வெல் போராட்டத்தைச் சுற்றி அணிதிரட்டுவதை தவிர்த்துக்கொண்ட சு.வ.வ.பொ.சே.ச., தொழிலாளர்களை தனிமைப்படுத்தவும், அவர்களை மனச்சோர்வடையச் செய்யவும், வேலைக்கு அனுப்பவும் முயற்சி செய்துகொண்டிருந்தது.
ஆரம்பத்தில் மார்கஸ், தொழிலாளர்களை 21 ஆம் தேதி வேலைக்குச் செல்ல அறிவுறுத்தினார். ஆனால், ஊதிய உயர்வை ரூபா 5 ஆயிரமாக அதிகரித்தால் மட்டுமே ஒன்றரை மாத சம்பள போனஸுக்கு ஒப்புக்கொள்ள முடியும் என்று தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
22 ஆம் தேதி, நிர்வாகம் இறுதி முடிவை எடுக்கும் என்று தொழிலாளர்களிடம் கூறிய மார்கஸ், 22 ஆம் தேதி 'கடதாசியில் கையெழுத்திட்டுவிட்டு மறுநாள் (23) வேலைக்குச் செல்லுமாறு' அறிவுறுத்தியதாக உலக சோசலிச வலைத் தளத்திடம் ஒரு பெண் தொழிலாளி கூறினார். 'எங்களால் இப்போது காய முடியாது, அடுத்த மாதம் எங்களுக்கு சம்பளமும் கிடைக்காது,' என்று கூறிய அவர், தொழிற்சங்கமானது நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை, என்றார்.
கோரிக்கைகளை நிறைவேற்ற நிறுவனத்தின் “வருவாய் குறைகின்றமையே” காரணம் என்பதை நிராகரித்த அவர், 'எங்களுக்கு வேலை இருந்தது, தொடர்ந்து வேலை செய்தோம். அடுத்த ஆண்டு போனஸ் பெறவும் நாங்கள் உழைத்துள்ளோம், தங்களுக்கு இலாபம் இல்லை என்று நிர்வாகம் கூறுகிறது,” என விளக்கினார்.
சில உத்தியோகத்தர்களின் மாதாந்த சம்பளம் 150,000 ரூபாவைத் தாண்டுகின்ற போதிலும், எமது அடிப்படைச் சம்பளம் ரூபா 21,500 மற்றும் அனைத்து கொடுப்பனவுகளுடன் கூடிய அதிகபட்ச மாத சம்பளம் ரூபா 32 ஆயிரத்துக்கு மேல் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஆடை தொழிறசாலைகள் உட்பட அனைத்து துறைகளிலும் உள்ள தொழிலாளர்களிடையே அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புக்கள் அதிகரித்த நிலையில், அதை திசை திருப்ப சுதந்திர வர்த்தக வலய சங்கங்கள் உட்பட தொழிற்சங்கங்கள், வரவு-செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற மாயையை பரப்பி, ஒரு தொழிலாளியின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை 10,000 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று கோரி, ஒரு பிரச்சாரத்தில் ஈடுபட்டன. வரவு-செலவுத் திட்டத்தில் ஊதிய உயர்வு எதுவும் முன்மொழியப்படாததோடு சு.வ.வ.பொ.சே.ச. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரச்சாரம் வெற்று கோஷமாக மாறியது.
எஸ்குவெல் தொழிற்சாலை வலையமைப்பை சேர்ந்த ஜா-எல, கொக்கல மற்றும் கேகாலை ஆகிய நான்கு தொழிற்சாலைகளின் தொழிலாளர்களும் கடந்த ஏப்ரல் மாதம் புத்தாண்டு போனஸ் கோரி பிரச்சாரம் செய்தனர். கொக்கல தொழிற்சாலைகள் இரண்டில் பணியாற்றும் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காக தொழிற்சாலை நிர்வாகம் ஹபராதுவ பொலிஸாருக்கு அழைப்பு விடுத்துள்ளது. “கொக்கல வலயத்தின் குழுவினர்” என்ற முகநூல் பக்கத்தில், “காவல்துறை கலகத் தடுப்புப் பிரிவினரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டு, கண்ணீர்ப்புகைத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் இருந்ததாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கை தலமையகமாக கொண்ட எஸ்குவெல் பன்னாட்டு நிறுவனத்தின் கிளையான, யக்கல தொழிற்சாலை மூடப்பட்ட போது, அதன் 1,200 தொழிலாளர்களில் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை ஜா-எல தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டதுடன், பெரும் எண்ணிக்கையிலான வேலை இழந்தவர்களுக்கு சொற்ப இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டது. அங்கிருந்த இலங்கை வர்த்தக, கைத்தொழில் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் (CMU) அப்போதைய கிளையானது, எஸ்குவெல் தொழிலாளர்களின் தொழில்களைப் பாதுகாக்கும் போராட்டத்தை ஏனைய தொழிலாளர்களின் தொழிற்துறை வலிமையைத் அணிதிரட்டி ஒழுங்கமைப்பதை வேண்டுமென்றே தவிர்த்து, நிறுவனத்தின் தாக்குதலுக்கு தொழிலாளர்களை அடிபணியச் செய்ய செயற்பட்டது.
மார்கஸின் சு.வ.வ.பொ.சே.ச., ஜே.வி.பி.யின் அனைத்து கூட்டுத்தாபன ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் யக்கல எஸ்குவெல் தொழிலாளர்களின் போராட்டத்தை தனிமைப்படுத்தி தாக்குதலுக்கு பங்களித்தன.
கடந்த ஆண்டு மே மாதம் முதலாளிகள், தொழில் அமைச்சர் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து அமைத்த முத்தரப்பு செயலணியில் மேற்கண்ட அனைத்து தொழிற்சங்கங்களும் நுழைந்து கொண்டன. கொரோனா தொற்றுநோயால் ஆழமடைந்துள்ள ஆடை மற்றும் ஏற்றுமதி தொழில்துறையிடன் நெருக்கடியை தொழிலாளர்கள் மீது சுமத்தும்போது, முதலாளித்துவ எஜமானர்களின் இலாப நலன்களுக்கு தொழிலாளர்களை அடிபணிய வைப்பதே இந்த செயலணியின் பணியாகும்.
தொற்று நோயை பயண்படுத்திக்கொண்டு ஊதியத்தை பாதியாகக் குறைக்கவும், கொடுப்பனவை வெட்டித்தள்ளவும், வேலைகளை விரைவுபடுத்தவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யவும், மற்றும் தொற்றுநோய் பேரழிவுகரமாக பரவும்போது அத்தியாவசியமற்ற ஆடைகள் போன்ற உற்பத்திகளை திறந்து வைப்பதன் மூலம் தொழிலாளர்களை ஆபத்தான முறையில் வேலை வாங்குவதற்கு இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் முழுமையாக ஆதரவு கொடுத்தன.
இந்த துரோக நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பதன் பேரில், முதலாளித்துவ வர்க்கத்தின்சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அலரிமாளிகையில் டிசம்பர் 15 அன்று நடந்த 'உழைப்புக்கு பெருமை-மக்கள் கௌரவம்' 2021 விழாவில், மாக்கஸ் உட்பட ஒன்பது தொழிற்சங்கத் தலைவர்களுக்கு பணமாக ரூபாய் 150,000 வழங்கி 'தேசிய மரியாதை' வழங்கப்பட்டது.
தொழிற்சங்கங்களின் கீழ் தொழிலாளர்கள் தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாக்க முடியாது என்பதையே எஸ்குவெல்லின் போராட்டம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக அமைத்துக்கொள்ளும் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களால் ஒழுங்கமைக்கப்பட்டு வழிநடத்தப்படும், தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும்.
***
மார்கஸின் தொழிற்சங்கம் WSWS நிருபர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலை தடுக்க பலாத்காரத்தைப் பயன்படுத்தியது.
டிசம்பர் 20 அன்று, உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் குழு வேலைநிறுத்தத்தின் போது கட்டுநாயக்கவில் உள்ள எஸ்குவெல் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்த போது, சுதந்திர வர்த்தக வலய பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் (NWPC) சில கூலிகள், உள்ளே நுழைந்து வலுக்கட்டாயமாக தலையிட்டு கலந்துரையாடலை தடுத்தது.
தொழிற்சங்க அதிகாரிகள், WSWS நிருபர்களின் அடையாளத்தை கேள்விக்குள்ளாக்கியவாறே இந்த ஜனநாயக விரோத தலையீட்டை செய்தனர். நிருபர்கள் தங்களுடைய அடையாள அட்டைகளைக் காட்டியபோது, ’WSWS தங்களை விமர்சித்து நிர்வாகிகளுக்கு ஆதரவாக நிற்பதாக’ அருகிலுள்ள தொழிலாளர்களிடம் தெரிவித்த ஆத்திரமூட்டல்காரர்கள். உடனடியாகத் தங்கள் தொழிற்சங்கத் தலைவரான அன்டனி மார்கஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.
மார்கஸின் அறிவுறுத்தல்களின்படி, தொழிலாளர்கள் மத்தியில் WSWS தலையிட அனுமதிக்க முடியாது என்று கூறி, வெளியேறுமாறு அவர்கள் அச்சுறுத்தினர். பின்னர், செய்தியாளர்கள் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்ற தொழிலாளர்களிடம் பேச முயன்றபோது, கலவரக்காரர்கள் அங்கு வந்து, WSWS நிர்பர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்று தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
பொலிசாரின் உதவியும் தங்களுக்கு இருப்பதாகக் கூறிய அவர்கள், பொலிசாரை தொலைபேசியில் அழைத்து நிர்பர்களை பொலிசிடம் ஒப்படைக்க முயன்றனர். அப்போது நிருபர் ஒருவரின் தொலைபேசியை தொழிற்சங்க குண்டர்கள் வலுக்கட்டாயமாக பறித்து, அதிலிருந்த புகைப்படங்களை அகற்றினர்.
தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தினுள் ஒரு தொழில்துறை போலீஸ் படையாக செயல்படுகின்றன என்பதை இந்த சம்பவம் வலுவாக உறுதிப்படுத்தியுள்ளது. மார்கஸ் உட்பட தொழிற்சங்க அதிகாரத்துவம், தொழிலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு உள்ள ஜனநாயக உரிமைக்கு எதிராக பலத்தை பயன்படுத்தியுள்ளது.
உலக சோசலிச வலைத் தளம் ’நிர்வாகத்துக்கு ஆதரவாக நிற்கிறது' என்று தொழிற்சங்க விசுவாசிகளால் சுமத்தப்படும் போலியான குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, முதலாளித்துவ அரசாங்கங்கள், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கூட்டாக தொழிலாளர்கள் மீதான முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் ஒரு தொடர் வரலாற்றை WSWS கொண்டுள்ளது.
மிக சமீபத்திய உதாரணத்தை எடுத்துக்கொண்டால், ஏப்ரல் 2021 போனஸ் வெட்டுக்கு எதிராக கட்டுநாயக்க எஸ்குவல் உட்பட பல தொழிற்சாலைகளில் நடந்த தொழிலாளர்களின் போராட்டத்தின் மத்தியில் WSWS பின்வருமாறு எழுதியது:
மார்ச் மாதம், ஜனாதிபதி இராஜபக்ஷ, தொழிலதிபர்கள் தொழிலாளர்களை இரக்கமின்றி சுரண்டுவதை உறுதிப்படுத்தும் வரத்தை கொடுப்பதாக, அதாவது தற்போது இருக்கும் வரையறுக்கப்பட்ட சுகாதார பாதுகாப்புகளை அகற்றுவதற்கு ஊடாக, ’உற்பத்தி திறனையும்’ தரத்தையும் உயர்த்துவதற்காக முழு ஒத்துழைப்பை வழங்கவதாக, ஆடை தொழிற்சாலை முதலாளிகளுக்கு வாக்குறுதியளித்தார். இராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த ஆதரவின் பின்னணியிலேயே முதலாளிகள் தொழிலாளர்களின் போனஸை வெட்டுகின்றனர்.
சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் WSWS ஆகியவற்றின் வேலையின் ஒரு பகுதியாக, 2020 நடுப்பகுதியில் யக்கலவில் உள்ள எஸ்குவெல் தொழிற்சாலையை மூடுவதற்கு எதிராகவும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வேலை நீக்குவதற்கு எதிராகவும் தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டத்துக்கு முன்னோக்கை வழங்குவதற்காக, WSWS மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு எழுதின:
“மே மாதம், இந்த தொழிற்சங்கங்கள், அரசாங்கம் மற்றும் முதலாளிகள் அடங்கிய முத்தரப்பு செயலணி எனப்படுவதனால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், முதலாளித்துவ எஜமானர்களுக்கு பத்துலட்சத்தித்திற்கு மேற்ப்பட்ட தனியார் துறை தொழிலாளர்களின் தொழிலை இல்லாதொழிப்பதற்கும், தொழிலில் செய்யும் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு போன்றவற்றை முதலாளிகளின் தனி விருப்பப்படி வெட்டிக் குறைக்கவும் தேவையான நிலைமைகள் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளன.”
அரசாங்கம், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் 'முத்தரப்பு' பிற்போக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மார்கஸ், ஆடை மற்றும் ஏற்றுமதி தொழிலாளர்களின் 'கண்ணியமான வேலை உரிமைகளை' உத்தரவாதப்படுத்துமாறு இராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தி, 2020 அக்டோபரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதைப் பற்றி WSWS கட்டுரை பின்வருமாறு கூறுகிறது:
“ஆடைத் தொழிலாளர்களின் கண்ணியம் மற்றும் வேலைப் பாதுகாப்பு” பற்றிய மார்கஸின் ஆர்வம் முற்றிலும் மோசடியானது. அவரும் அவர் தலைமை வகிக்கும் சு.ஏ.வ.பொ.சே.ச. மற்றும் இலங்கை வர்த்தக தொழில் மற்றும் பொது ஊழியர் சங்கம், ஐக்கிய தொழிலாளர் சங்க சம்மேளனம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான அனைத்து கூட்டுத்தாபன ஊழியர் சங்கம் (ASSP) உட்பட தனியார் துறை தொழிற்சங்கங்கள், கொரோனா தொற்றுநோயினால் தீவிரமடைந்த ஆடை மற்றும் ஏற்றுமதி தொழில்துறையின் நெருக்கடியை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கு, இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் முதலாளிகளுக்கும் ஆதரவளிக்கின்றனர்.
அவர் உட்பட முழு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிற்போக்கு வகிபாகத்தை அம்பலப்படுத்தி, தொழிற்றசங்கங்களில் இருந்து சுயாதீனமான தொழிலாள வர்க்க அரசியல் இயக்கமொன்றை கட்டியெழுப்ப போராடுவதனாலேயே மார்கஸ் மற்றும் அவரது எடுபிடிகளும் உலக சோசலிச வலைத் தளத்துக்கும் தொழிலாளர்களுக்கு இடையேயான கலந்துரையாடலை வலுக்கட்டாயமாக தடுக்கின்றனர். சு.வ.வ.பொ.சே.ச. இன் மேற்கூறிய பலாத்கார மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, தொழிலாள வர்க்கத்தின் ஒரே உண்மையான ஊடகமான WSWS இன் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க முன்வருமாறு அனைத்து தொழிலாளர்களையும் நாங்கள் அழைக்கிறோம்.
மேலும் படிக்க
- இலங்கை தொழிற்சங்கத் தலைவர் தடுப்பூசிகளுக்கு எதிரான வலதுசாரி பிரச்சாரத்தில் இணைந்துள்ளார்
- அதிகரித்து வரும் விலைவாசியால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் WSWS உடன் பேசினர்
- இலங்கை ஜனாதிபதி பொருளாதார நெருக்கடிக்கு கோவிட்-19 தொற்று மீது குற்றம் சுமத்துகிறார்
- அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு, இலங்கை தொழிலாளர்கள் நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொண்டு சோசலிச கொள்கைகளுக்காகப் போராட வேண்டும்