தெற்காசியாவில் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

2024 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) பொதுச் செயலாளர் தீபால் ஜெயசேகர ஆற்றிய உரை இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.

காஸாவில் ஏகாதிபத்திய-சார்பு இஸ்ரேலால் தற்போது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை, அதனுடன் இணைந்தவாறு மத்திய கிழக்கில் பரந்த போரை நோக்கிய அபிவிருத்தி, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் உக்கிரமாக்கல், சீனாவிற்கு எதிரான அமெரிக்கப் போர் தயாரிப்புகளுடன் சேர்த்து, வளர்ந்துவரும் அணு ஆயுத மூன்றாம் உலகப் போர் ஆபத்தானது இலங்கை, இந்தியா மற்றும் தெற்காசியா முழுவதிலும் அரசியல் நிலைமைகளை மிக அதிகளவில் வடிவமைக்கின்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் உந்துதலில் ஒரு களமுனை நாடாக இந்தியாவை மாற்றியுள்ளார். அமெரிக்கா உடனான இந்தியாவின் இராணுவ-மூலோபாயக் பங்காண்மை மற்றும் டெல் அவிவ் உடனான நெருங்கிய தொடர்பினதும் வழியில், மோடி அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இனப்படுகொலைக்கு முழுமையாக ஆதரவளித்துள்ளது.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி (வலது) மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் 15 ஜனவரி 2018, திங்கட்கிழமை, இந்தியாவில் புது தில்லியில் ஒரு கூட்டத்திற்கு முன் ஊடகங்களுக்கு காட்சி கொடுத்தனர் [AP Photo/ingen opphavsmann]

இந்தியா, சீனாவுக்கு எதிரான இராணுவ-மூலோபாய தாக்குதலுக்குள் இலங்கை உட்பட தெற்காசியாவில் உள்ள நாடுகளை ஒருங்கிணைக்க அமெரிக்காவுடன் ஒத்துழைக்கின்றது. அதன் விளைவாக, தெற்காசியப் பிராந்தியம் முழுவதும் மூன்றாம் அணுவாயுத உலகப்போருக்கு வழிவகுக்கும் தீவிரமடைந்துவருகின்ற உலக அரசியல் பதட்டங்களின் சுழலுக்குள் மேலும் மேலும் இழுபட்டுக்கொண்டிருக்கின்றது. இத்தகைய அபிவிருத்திகளில் இருந்து தெற்காசியாவில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் பெற்றுக்கொள்ளவேண்டிய அடிப்படை அரசியல் முடிவு என்னவெனில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் வழிநடத்தப்படுகின்ற, சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் ஒரு சர்வதேச-போர் எதிர்ப்பு இயக்கததை கட்டியெழுப்புவது அவசியம் என்பதே ஆகும்.

இந்திய ஆளும் வர்க்க உயரடுக்கு, உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பெரும் வர்த்தகர்கள், கூட்டுத்தாபன ஊடகங்கள் மற்றும் அதே போல் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் ஆசிர்வாதத்துடன், மோடியும் அவரது இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியும் (பா.ஜ.க.) இந்தியாவில் தற்போது நடைபெறுகின்ற பொதுத் தேர்தலில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அதிகாரத்துக்கு வர முயற்சிக்கின்றனர். அவர்கள், முதலீட்டாளர்-சார்பு பொருளாதார நடவடிக்கைகள் இரக்கமற்று தொடரவும், அமெரிக்கா உடனான இந்தியாவின் மூலோபாய  கூட்டாண்மையை மேலும் அபிவிருத்தி செய்யவும் எண்ணம் கொண்டுள்ள அதே வேளை, தனது கொள்கைகளுக்கு எதிரான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் தவிர்க்க முடியாத போராட்டங்களை கொடூரமாக நசுக்குவதற்கு இந்து மேலாதிக்க அடிப்படையில் பாசிச ஆட்சியை ஸ்தாபிக்க முயற்சிக்கின்றனர். 

எவ்வாறாயினும் காங்கிரஸ் கட்சி தலைமையில் பல்வேறுபட்ட முதலாளித்துவ கட்சிகள் மற்றும் இந்திய மார்க்சிச கம்யுனிச கட்சி மற்றும் இந்திய கம்யுனிச கட்சி போன்ற ஸ்ராலினிஸ கட்சிகளையும் சேர்த்து உருவாக்கப்பட்ட எதிர்கட்சி கூட்டணியான இந்தியா எனப்படும் இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிக்கு, மோடியின் பா.ஜ.க. முன்னெடுக்கும் பொருளாதார மற்றும் வெளிநாட்டு கொள்கைகளுடன் எந்த வேறுபாடும் கிடையாது. இந்தியா கூட்டணியானது அதே பொருளாதார மறுசீரமைப்பு கொள்கைள் மற்றும் இந்திய-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மைக்காகவே அர்ப்பணித்துக்கொண்டுள்ளது.

ஆகவே, இந்தியத் தொழிலாள வர்க்கத்திற்கு இந்தப் பொதுத் தேர்தலில் எந்த தேர்வும் கிடையாது. அவர்கள், ஸ்ராலினிஸ கட்சிகள் உட்பட இந்த முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனக் கட்சிகள் அனைத்தையும் நிராகரிக்க வேண்டும். அவர்கள், சோசலிச கொள்கைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தொழிலாளர் அரசாங்கத்திற்கான போராட்டத்தில், கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டிக்கொண்டு சுயாதீனமான அரசியல் இயக்கமாக தம்மை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம் ஆகும். இது, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின்  பாகமாக இருக்க வேண்டும். 

இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் இருந்து மேலும் மேலும் அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு பிரதிபலிப்பாக, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், சீனாவிற்கு எதிரான அமெரிக்க-இந்திய போர் உந்துதலில் இலங்கையை  நெருக்கமாக ஒன்றிணைக்க செயற்படுகின்றது. ஏப்ரல் மாத இறுதியில், இலங்கையின் கிழக்கில் உள்ள திருகோணமலை கடற்கரையில், அமெரிக்க மற்றும் இலங்கை  கடற்படைகள் இருதரப்பு இணைந்த பயிற்சியை மேற்கொண்டன. 

அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் (இடது), அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மா ஆகியோர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை (வலது) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர் [Photo: USAs ambassade på Sri Lanka]

ஒக்டோபர் தொடக்கத்தில் இருந்தே விக்கிரமசிங்க அரசாங்கம் காசாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு ஆதரவளித்து வந்துள்ளது. யேமனில் உள்ள ஈரானிய-சார்பு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் இருந்து வர்த்தக கப்பல்களை பாதுகாத்தல் என்ற பெயரில், அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இலங்கை அரசாங்கம் இந்த ஆண்டு தொடக்கத்தில் செங்கடலுக்கு ஒரு கடற்படை கப்பலை அனுப்பியது.

அதே சமயம், விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள கடுமையாக சிக்கன நடவடி்க்கைகளை துரிதப்படுத்த உள்ளது. நானுறுக்கும் மேற்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுசீரமத்தல் அல்லது தனியார்மயமாக்குல் இதில் பிரதானமானதாகும். இந்த நடவடிக்கையினால் கிட்டத்தட்ட அரை மில்லியன் கண்க்கான தொழில்கள் அழிக்கப்படவுள்ளன. சம்பள வெட்டுக்கள், வேலை நிலைமைகளை வெட்டுதல் மற்றும் மின்சாரம், நீர் போன்ற பயன்பாடுகளின் கட்டணத்தை தாங்கமுடியாத அளவுக்கு உயர்த்துவதும் இதில் அடங்கும். 

தொழிலாள வர்க்கம் அதன் சமூக உரிமைகள் மீதான விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்திற்கு வந்துகொண்டிருக்கின்றது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை மின்சார சபையின் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டங்களுக்கு எதிராக மூன்று நாள் வேலைநிறுத்தம் செய்துள்ளதோடு ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

விக்கிரமசிங்க அரசாங்கம் அரச ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துவதோடு பல அரச நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஏனைய வர்க்க நடவடிக்கைகளை சட்டவிரோதமாக்கும் அத்தியவசிய சேவைகள் கட்டளைகளை பயன்படுத்துதல், வேலை நிறுத்தங்களை உடைப்பதற்கு இராணுவங்களை நிலைநிறுத்துதல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தல் உட்பட, தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியடைந்துவரும் போராட்டங்ளை ஒடுக்குவதை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது. விக்கிரமசிங்க அரசாங்கம், தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிராக வர்க்கப் போரை தீவிரப்படுத்துகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்  மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட முதலாளித்து எதிர்க்கட்சிகள் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுடன் எந்தவித அடிப்படை வேறுபாடுகளையும் கொண்டிருக்கவில்லை. இந்தக் கட்சிகள், சர்வதேச நாணய நிதியத்தின் அதே சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அர்ப்பணித்துக்கொண்டுள்ளதோடு, எதிர்காலத் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்தால், அதை கொடூரமாக அமுல்படுத்துவதோடு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் எதிர்ப்புகளை கொடூரமாக அடக்கும்.

இராஜபக்ஷ அரசாங்கத்தை கீழிறக்கிய 2022 வெகுஜன எழுச்சியின் போது, தொழிற்சங்கங்கள் மற்றும் முன்னிலை சோசலிச கட்சி போன்ற போலி-இடதுகளின் உதவியுடன், செய்ததை போலவே, தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கம் வளர்வதைத் தடுக்கும் அரணக செயற்படுகின்றன.

3 ஏப்ரல் 2022 ஞாயிற்றுக்கிழமை, இலங்கையின் கொழும்பில் அரசாங்கத்தை இராஜினாமா செய்யக் கோரி இலங்கையர்கள் நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  [AP Photo/Eranga Jayawardena]

2022 வெகுஜன எழுச்சியில் இருந்து தொழிலாள வர்க்கம் பெறவேண்டிய தீர்க்கமான படிப்பினை, ஆளும் வர்க்கத்தின் தாக்குதலுக்கு எதிராக தமது வெற்றிகளை பாதுகாக்க ஒரு புரட்சிகர தலைமைத்துவமும் முன்னோக்கும்  அவசியம் என்பதே ஆகும். அந்த வெகுஜன எழுச்சி முன்னாள் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவை பதிவி விலகச் செய்து நாட்டை விட்டு வெளியேற்றவும், அத்தோடு அவரது அரசாங்கத்தை பதவி விலகச் செய்யவும் நிர்ப்பந்தித்த போதிலும், ஆளும் வர்க்கத்துக்கு விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக பதவியில் அமர்த்துவதற்கான கால அவகாசம் அதற்கு கிடைத்தது. ஒரு புரட்சிகர தலைமைத்துவம் மற்றும் முன்னோக்கு இல்லாமையால் இந்த நெருக்கடிக்கு தனது சொந்த சோசலிச தீர்வை நடைமுறைப்படுத்த தொழிலாள வர்க்கத்தால் முடியாமல் போனது.

ஜனநாயக உரிமைகளின் மீதான பரந்த தாக்குதலின் பாகமாக, விக்கிரமசிங்க அரசாங்கம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை ரூபா 2.6 மில்லின் வரை 52 மடங்கு அதிகரித்துள்ளதுடன், சுயேட்சை வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் ரூபா 75 ஆயிரத்தில் இருந்து 3.1 மில்லியன் ரூபாயா அதிகரித்துள்ளது. ஏனைய தேர்தல்களுக்கான கட்டுப்பணமும் பல மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நகர்வின் இலக்கு, பொதுத் தேர்தலில் அரசியல் எதிராளிகளை, மற்றும் சோசலிஸ்டுகளை, குறிப்பாக சோசலிச சமத்துவக் கட்சியை ஓரங்கட்டுவதே ஆகும்.

விக்கிரமசிங்க அரசாங்கத்தின் இந்த சமீபத்திய நகர்வு உட்பட, தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஆளும் வர்க்கத்தின் தாக்குதலுக்கு பிரதிபலிக்கும் வகையில், சோசலிச சமத்துவக் கட்சி, குறிக்கோளுடன் கூடிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. எமது கட்சியின் அரசியல் மற்றும் தத்துவார்த்த வேலைகள் அபிவிருத்தி செய்தல் மற்றும் 3.5 மில்லியன் கட்சி அபிவிருத்தி நிதி சேகரித்தல், அதே போல் கட்சிக்கும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புக்கும் ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் உலச சோசலிச வலைத் தள வெளியீடுகளை அதிகரித்தல் மற்றும் சிங்கள, தமிழ் மொழிகளில் மார்க்சிச இலக்கியங்களை வெளியிடுவதும் இந்த அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் அடங்கும்.

அதேவேளை, 2022 வெகுஜன எழுச்சியின் போது, ஜூலை நடுப்பகுதியில் நாம் தொடங்கி வைத்த ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற ஏழைகளதும் மாநாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அதன் பிரச்சாரத்தை சோ.ச.க. தொடர்ந்து முன்னெடுக்கின்றது. தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் சகல முதலாளித்துவ கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக, சகல வேலைத் தளங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அயற்புறங்களில் தமது சொந்த நடவடிக்கை குழுக்களை உருவாக்குமாறு தொழிலாளர்களை நாம் கேட்டுக்கொள்கின்றோம். அத்தகைய குழுக்களை கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளும் உருவாக்க வேண்டும். எமது மாநாடு அத்தகைய நடவடிக்கை குழுக்களில் இருந்து ஜனநாயக அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்ட அங்கத்வர்களை அடிப்படையாக கொண்டிருக்கும்.

பழிவாங்கப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களைப் பாதுகாப்பதற்காக 1 பெப்ரவரி 2024 அன்று, நடவடிக்கை குழுக்களின் கூட்டணியின் தீர்மானத்திற்கு ஏகமனதாக வாக்களிக்கப்பட்டது.

ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை கட்டியெழுப்புவதன் ஊடாக, சோசலிச சமத்துவக் கட்சி, முதலாளித்துவ ஆட்சியைத் துாக்கிவீசி, சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிக்க கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களை ஒன்றுதிரட்டி, தொழிலாள வர்க்கத்தை ஒரு அரசியல் இயக்கத்தில் சுயாதீனமாக அணிதிரட்டும் அதன் போராட்டத்தை அபிவிருத்தி செய்கின்றது. இது சர்வதேச ரீதியில் சோசலிசத்துக்கான ஒரு பரந்த போராட்டத்தின் பாகமாகும். அதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவில் உள்ள எமது சகோதர கட்சிகளுடன் சோசலிச சமத்துவக் கட்சி ஒன்றிணைந்துள்ளது.

நான், தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் சோசலிச-எண்ணம் கொண்ட புத்திஜீவிகளை இந்த முக்கியமான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Loading