சிங்களப் பேரினவாத ஜே.வி.பி. மற்றும் அதன் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இலங்கையின் புதிய வலதுசாரி, ஏகாதிபத்திய சார்பு அரசாங்கத்தின் மீது முன்னிலை சோசலிசக் கட்சி மாயைகளை விதைத்து வருகிறது.
தொழிலாள வர்க்கம், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துடன் விரைவில் மோதலுக்கு வரும். இந்த அரசாங்கம், ஸ்தாபனத்திற்கு எதிரானதாக காட்டிக் கொள்ளும் அதேவேளை, சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்டத்தை சுமத்துவதில் உறுதியாக உள்ள ஒரு வலதுசாரி இனவாத கட்சியாகும்.
சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தெளிவான பாராளுமன்ற பெரும்பான்மையுடன் "நிலையான" அரசாங்கத்தை நிறுவ திசாநாயக்க விரும்புகிறார்.
ஜனநாயக, சமூக உரிமைகள் மீதான ஆழமான தாக்குதல்களை, முதலாளித்துவ அமைப்பு முறைக்குள்ளும் மதிப்பிழந்த தேர்தல் கட்டமைப்பிற்குள்ளும் தீர்க்க முடியுமென உழைக்கும் மக்களை ஏமாற்றுவதற்கு முன்னிலை சோசலிசக் கட்சி முயல்கிறது
மே 4 சனிக்கிழமை நடைபெற்ற 2024 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர பின்வரும் உரையை ஆற்றினார்.
எதிர்க்கட்சிகளுக்கு விக்கிரமசிங்க விடுத்துள்ள வேண்டுகோள்கள், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அவரது அரசாங்கத்தின் மேலும் மேலும் கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் வளர்ந்து வரும் எதிர்ப்பை நசுக்க ஒன்றுபடுவதற்கான அழைப்பாகும்.
பல தசாப்த காலமாக, இந்திய ஸ்தாபனத்தின் "இடது" பக்க பாத்திரத்தை ஆற்றிவரும் இந்திய ஸ்ராலினிஸ்டுகள், முதலாளித்துவ அரசியலின் பிற்போக்கு கட்டமைப்பு மற்றும் பெரும் வல்லரசு இராஜதந்திரத்திற்குள், காஸாவில் வறிய பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
இந்திய தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் ஒரு தனி இனமாக அங்கீகரிக்கப்படுவதற்கான அழைப்பு, மோசமடைந்து வரும் சமூக நிலைமைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தைத் தடுக்கின்ற அதேநேரம், இந்திய தமிழ் உயரடுக்கின் அதிகாரத்தையும் சலுகைகளையும் அதிகரித்துக்கொள்ளும் நோக்கம் கொண்டதாகும்.
நாட்டின் பிரதமர், எதேச்சதிகாரியாக வரவிருக்கும் நரேந்திர மோடியின் தலைமையில் ஒரு மோசமான வகுப்புவாத பிரச்சாரத்தை முன்னெடுத்த பிறகு, இந்தியாவின் ஆளும் கட்சி, நாட்டின் எட்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான கர்நாடகாவில் ஆட்சியை இழந்துள்ளது.
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜெயசேகர, மே 1 அதிகாலை நடைபெற்ற 2023 சர்வதேச மே தின இணையவழி கூட்டத்துக்கு வழங்கிய அறிக்கை இதுவாகும்.
"மக்கள் சபைகளில்" சேருமாறு முதலாளித்துவ எதிர்க் கட்சிகளுக்கு முன்னிலை சோசலிசக் கட்சி விடுத்துள்ள வேண்டுகோளுக்கு எதிராக, அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்களை சாராமல், சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளத்திலும் புறநகர் பகுதிகளிலும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.
விக்கிரமசிங்க அரசாங்கம், அதன் பிற்போக்கு அரசியல், பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைளை மீதான எந்த எதிர்ப்பையும் சகித்துக் கொள்ளாது என்பதை ஞாயிறு ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட பாரிய பொலிஸ் தாக்குதல் தெளிவுபடுத்துகிறது.
தனது வர்க்க நலன்களைப் பாதுகாக்க, தொழிலாள வர்க்கமானது மதிப்பிழந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் மீண்டும் தனது அசிங்கமான தலையை உயர்த்த முடிந்தது ஏன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இராஜினாமாக்கள் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்காது, கடுமையான தட்டுப்பாடு மற்றும் எரிபொருள், உணவு, மருந்துகள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வால் அல்லது மணிநேர தினசரி மின்வெட்டு ஆகியவற்றால் ஏற்படும் சகிக்க முடியாத வாழ்க்கை நிலைமைகளுக்கு முடிவுகட்டாது
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திங்களன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் மீதான பிரமாண்டமான தாக்குதலை நியாயப்படுத்த நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியை சுரண்டிக்கொள்கின்றார்.
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் தீபால் ஜெயசேகர வழங்கிய அறிக்கை இதுவாகும். ஜெயசேகர இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் உதவி தேசிய செயலாளர் ஆவார்
காலிமுகத் திடலில் நடக்கும் போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் "அரசியல் வேண்டாம்" என்று கூறும்போது, அவர்கள் அரசாங்கத்தைப் போலவே சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ள எதிர்க்கட்சிகளின் அரசியலையே கொண்டு செல்கிறார்கள் என்று சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கிறது.
அரசாங்கத்திற்கு எதிராக மட்டுமன்றி, முதலாளித்துவத்தை பாதுகாக்கும் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் எதிரான அரசியல் போராட்டத்தை தாம் எதிர்கொள்கிறோம் என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.