இலங்கை சோ.ச.க. தனது அரசியல் வேலையை விரிவுபடுத்துவதற்காக கட்சி அபிவிருத்தி நிதி சேகரிப்பை முன்னெடுக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எதிர்கொண்டுள்ள அவசர அரசியல் பணிகளை முன்னெடுக்க, கட்சி அபிவிருத்தி நிதியாக 3.5 மில்லியன் ($US11,650) ரூபா நிதியைத் திரட்டத் தீர்மானித்துள்ளது.

சோ.ச.க. உறுப்பினர், பழிவாங்கப்பட்ட ஒல்டன் தோட்டத் தொழிலளார்களுக்காக கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு திரட்டிய போது. 23 ஜூன் 2023

முன்னாள் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றிய 2022 ஏப்ரல-ஜூலை வெகுஜன எழுச்சி மற்றும் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அதிகரித்துவரும் சமூகத் தாக்குதலை அடுத்து இலங்கையின் அரசியல் அபிவிருத்திகள் கூர்மையான கவனக்குவிப்பிற்குள் வந்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்தால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட ஆழமான சமூக தாக்குதல்களுடனான கொடூரமான சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்திற்கு எதிராக தொழிலாளர்கள். ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வருகின்றது.

கடந்த வாரம், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்க மறுசீரமைப்பு பிரிவு, இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் அரச நிறுவனங்களுடன் தொடர்புடைய அனைத்து பரிவர்த்தனைகளையும் முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்களில் உள்ள 500,000 தொழிலாளர்களின் தொழில்கள் அழிக்கப்படவும் ஊதியங்கள் குறைக்கப்படவும் வேலைச் சுமைகள் அதிகரிக்கப்படவும் உள்ளதுடன் மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான கட்டனங்களும் அதிகரிக்கவுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னனி (ஜே.வி.பி.) ஆகியவற்றுடன் இணைந்து, போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் உதவியுடன் சதி செய்கின்ற தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் அரசாங்கத்தை மாற்றுவதற்கு அழைப்புவிடுக்கும் அதேவேளை, இந்த தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புகளை, கொழுப்பு அரசாங்கத்திற்கு பயனற்ற வேண்டுகோள் விடுப்பதன் பக்கம் திசைதிருப்பிவிட்டு வேண்டுமென்றே சிதறடிக்கின்றன.

இந்த அரசியல் திட்ட நிரல் ஒரு மோசடி ஆகும். இலங்கையின் அனைத்து எதிர்க் கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை அமுல்படுத்த முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளன. விக்கிரமசிங்க ஆட்சியைப் போலவே, சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தொழிலாளர்களின் எதிர்ப்புகளை நசுக்கவும் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கவும் அவை முயற்சிக்கும்.

இலங்கையின் மதிப்பிழந்த முதலாளித்துவ அரசியல் கட்சிகள் செப்ரம்பர் 18 மற்றும் ஒக்டோபர் 18 க்கும் இடையில் நடைபெற இருக்கும் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்து மிகவும் பதற்றமாக உள்ளன.

வெறுப்புக்கு உள்ளாகியுள்ள விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), அதன் அங்கத்தவர்களை இழந்து ”சுயேட்சை வேட்பாளராக” ஜனாதிபதி விக்கிரமசிங்கவை தேர்தலில் போட்டியிட வைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் இல்லாத ஆளும் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியில் இருந்து பல அமைச்சர்கள் வெளியேறுகின்றனர். ஐ.தே.க.யில் இருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தி நெருக்கடியில் உள்ளதுடன் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதைக் காணலாம். தனது சொந்த அரசியல் வரலாற்றை மூடி மறைக்க முயற்சிக்கும் ஜே.வி.பி., அதன் மத்தியதர வர்க்க தேசிய மக்கள் சக்தியின் போர்வையின் கீழ் தேர்தலில் போட்டியிடுகின்றது.

இந்த ஆழமடைந்துவரும் அரசியல் நெருக்கடிக்கு பிரதிபலிக்கும் வகையில் விக்கிரமசிங்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் அனைத்து தேர்தல்களில் இருந்தும் அரசியல் எதிரிகளை, குறிப்பாக உண்மையான சோசலிஸ்டுகளை விலக்கி வைப்பதற்காக ஒரு தொடர் புதிய நடைமுறைகளைத் திணிப்பதற்கு கடந்த வாரம் தீர்மானித்துள்ளது. அதன்படி, பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கான கட்டுப்பணத் தொகையை முன்னெப்போதும் இல்லாத வகையில் 52 மடங்கால் 2.6 மில்லியனாக அதிகரித்துள்ளதுடன் சுயேட்சை வேட்பாளர்களுக்கு தற்போதைய 75,000 ரூபா கட்டுப்பணத் தொகையை 3.1 மில்லியனாக அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது. ஏனைய தேர்தல்களுக்கான கட்டுப்பணமும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஜனநாயக-விரோத முடிவானது செல்வந்தர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நிதியளிக்கப்படும் ஸ்தாபக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களிக்குமளவுக்கு வாக்காளர்களை மட்டுப்படுத்தவும், அரசாங்கத்தின் கொள்கைளை விமர்சிக்கும் அரசியல் எதிர்பாளர்களையும் சுயேட்சை வேட்பாளர்களையும் ஓரங்கட்டவுமே எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக, தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை தோற்கடிக்க தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கு உள்ள ஒரே வழிமுறையான, உண்மையான சோசலிச வேலைத்திட்டம் சம்பந்தமாக எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்துவதை தடுப்பதும் இதன் நோக்கமாகும்.

ஏப்ரல் 18 அன்று வெளியான சோ.ச.க.யின் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது போல்:

“இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, சமூக அழிவு, சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிராக போராடுவதற்கும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் சோசலிச கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரே கட்சியாகும். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கையை அரசாங்கம், பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுமாக அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இலாப முறையின் கட்டமைப்பிற்குள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எந்த தீர்வும் கிடையாது.”

கொரோனா வைரஸ் தொற்று நோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினாலும் துாண்டிவிடப்பட்டு, காசாவில் ஏகாதிபத்திய ஆதரவுகொண்ட இஸ்ரேலிய இன அழிப்பு போர் மற்றும் ஈரானுக்கு எதிரான இராணுவ ஆத்திரமூட்டல்களால் தீவிரமடைந்துள்ள உலக முதலாளித்துவ நெருக்கடியானது, மனித குலத்தை பேரழிவுகரமான உலகப் போருக்குள் இழுத்துச் செல்கின்றது. விக்கிரமசிங்கவின் ஜனநாய-விரோத தேர்தல் சட்டங்கள் மற்றும் கொடூரமான சிக்கன நடவடிக்கைகள் ஒவ்வொரு நாட்டிலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான உலகலாவிய தாக்குதலின் ஒரு பாகமாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதர கட்சிகளுடன் சேர்ந்து, இலங்கையில் புரட்சிகர சோசலிச மற்றும் அனைத்துலகவாத வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களை ஒன்றிணைக்க போராடும் ஒரே அமைப்பு சோ.ச.க. மட்டுமே ஆகும். இது இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற வெகுஜனங்களையும் ஐக்கியப்படுத்துவதை உள்ளடக்கியதாகும்.

இந்த முன்னோக்கிற்கு இணங்க, சோ.ச.க. மேலதிக உறுப்பினர்களை அதற்குள் இணைக்கவும் சமூக சத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பை (IYSSE) கட்டியெழுப்பவும் ஒரு இலட்சிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றது. நாம், உலக சோசலிச வலைத் தளத்தில் எமது படைப்புக்களை மேலும் அபிவிருத்தி செய்யவும் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் மார்க்சிச இலக்கியங்களை வெளியிடவும் வேண்டும்.

தேர்தல் அறிவிக்கப்பட்டால் அல்லது அறிவிக்கப்படும் போது, எமது சோசலிச முன்னோக்கை பிரபலப்படுத்தவும் புரட்சிகர மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச கட்சியான சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டிய அவசர தேவையை பற்றி தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் கல்வியூட்டவும் சோ.ச.க. அதில் போட்டியிடும். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளில் அக்கறையுள்ள தட்டினரை இந்த முயற்சிக்கு ஆதவளிக்குமாறு நாம் வலியுறுத்துகின்றோம்.

இந்த முன்னோக்குடனும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதிலும் உடன்படும் அனைவரையும், ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவுசெய்ய வேண்டியுள்ள ரூபா 3.5 மில்லியன் கட்சி அபிவிருத்தி நிதிக்கு விருப்பத்துடன் பங்களிக்குமாறு சோ.ச.க. கேட்டுக்கொள்கிறது.

எமது கட்சியின் கணக்கு விபரங்கள்:

கணக்கு இலக்கம்: 1472834301

கணக்கு வைத்திருப்பவரின் பெயர்: சோசலிச சமத்துவக் கட்சி

வங்கி: கொமர்சியல் வங்கி

கிளை: கிருளப்பன

நாடு: இலங்கை

சோ.ச.க.யின் வேலைத்திட்டத்தை கலந்துரையாட கீழே உள்ள தொலைசேி / வட்ஸ்அப் இலக்கம் ஊடாக தொர்புகொள்ளுமாறு அனைத்து வாசகர்களையும் வலியுறுத்துகிறோம்.

தொலைபேசி / வட்ஸ்அப் இலக்கம்: +94773562327

Loading