முன்னோக்கு

கலிபோர்னியா பல்கலைக்கழக காஸா வேலைநிறுத்தத்திற்கு எதிரான தடை உத்தரவு அச்சுறுத்தலை தோற்கடிக்க தொழிலாள வர்க்கம் ஒன்றுபட வேண்டும்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

UCLA வளாகத்தில் ஒரு முகாமில் பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸ் முன்னேறுகிறது, May 2, 2024, in Los Angeles. [AP Photo/Jae C. Hong]

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்திற்கு நீதிமன்ற தடை உத்தரவு கோரிக்கையானது, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மீதான பெரும் தாக்குதலாகும். தொழிலாள வர்க்கம் கல்வித் தொழிலாளர்களைப் பாதுகாக்க அணிதிரள வேண்டும்.

கடந்த திங்களன்று, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சாண்டா குரூஸில் உள்ள 2,000 தொழிலாளர்கள் மற்றும் ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத்தின் (UAW) உள்ளூர் 4811 இன் உறுப்பினர்கள், பாலஸ்தீனிய ஆதரவு முகாம்கள் மீதான மிருகத்தனமான ஒடுக்குமுறைக்கு எதிராக வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இந்த வேலநிறுத்தத்தில் UAW உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் 10 வளாகங்களில் உள்ள 4811 இன் 48,000 உறுப்பினர்களிடையே கடந்த வாரம் நடந்த மாபெரும் வேலைநிறுத்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து இந்த வெளிநடப்பு நடந்தது.

உலக சோசலிச வலைத்தளம் விளக்கியது போல், இந்த வேலைநிறுத்தம் போர்-எதிர்ப்பு இயக்கத்தில் ஒரு 'முக்கிய படியாகும்.' ஏனெனில், இது 'போருக்கு எதிரான அடிப்படை அரசியல் சக்தியாக தொழிலாள வர்க்கம் போராட்டத்தில் நுழைவதை முன்வைக்கிறது.' அதேநேரம் இந்த வேலைநிறுத்தத்தைத் தடைசெய்யும் முயற்சியானது, இந்த 'ஆபத்தை' ஆளும் வர்க்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதைக் காட்டுகிறது.

செவ்வாயன்று நீதிமன்றத் தடை உத்தரவுக்கான கோரிக்கையை தாக்கல் செய்த பின்னர், கலிபோர்னியா பல்கலைக்கழக நிர்வாகம் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று கூறி ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. ஏனெனில் அதன் இலக்கு அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட கோரிக்கைகளின் பட்டியலை ஒப்புக்கொள்ள பல்கலைக்கழகத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகும்.

கடந்த வாரம், அரச தொழிலாளர் உறவுகள் வாரியத்திடம் தனித்தனியாக தாக்கல் செய்த பிறகு, பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர், 'குறிப்பாக இன்றைய சூழலில்', தொழிலாளர்கள் இனப்படுகொலைக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய முடிந்தால், 'பல்கலைக்கழகம்-மற்றும் கலிபோர்னியாவில் உள்ள மற்ற அனைத்து பொது நிறுவனங்களும்- அரசியல் மற்றும்/அல்லது சமூகக் கண்ணோட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களை சந்திக்க நேரிடும்' என்று குறிப்பிட்டார்.

கலிபோர்னியா பல்கலைக்கழக நிர்வாகம் தனக்காக மட்டும் பேசவில்லை, முழு ஆளும் வர்க்கத்திற்காகவும், குறிப்பாக பைடெனின் வெள்ளை மாளிகைக்காகவும் பேசுகிறது. ஆளும் வர்க்கம் கல்வித் தொழிலாளர்களின் கிளர்ச்சியைத் தோற்கடிக்க விரும்புவது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் வளாகங்கள் முழுவதிலும் இராணுவமயப்படுத்தப்பட்ட பொலிஸாரின் தாக்குதலை அடுத்து வேலைநிறுத்தம் செய்ய சட்டப்பூர்வமாக அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளனர். இது முற்று முழுதாக கல்வித் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக சுதந்திரங்களை மீறுதல் மற்றும் அனைத்து கருத்து வேறுபாடுகளுக்கு எதிராக ஒரு வெறிபிடித்த சூனிய வேட்டையாகும்.

கலிபோர்னியா பல்கலைக்கழக நிர்வாகம் 'தொழிலாளர் அல்லாத பிரச்சனைகள்' என்று அழைப்பதை மீற முயற்சிக்கும் எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்க நடவடிக்கைகளுக்கும் எதிராகப் பயன்படுத்தக்கூடிய ஒரு முன்னுதாரணமாக இந்த வேலைநிறுத்தத்தைப் பயன்படுத்தவும் அவர்கள் விரும்புகிறார்கள்.

தடை உத்தரவு வழங்கப்பட்டால், இது கல்வித்துறை ஊழியர்களின் தற்போதைய வேலைநிறுத்தத்திற்கு அப்பாலும் தாக்கங்களை ஏற்படுத்தும். இந்த சட்டக் கோட்பாட்டின்படி 'அரசியல் வேலைநிறுத்தங்கள்' திட்டவட்டமாக சட்டவிரோதமானவை- ஆனால் அனைத்து வேலைநிறுத்தங்களும் 'அரசியல்' சார்ந்தவை, அவை முதலாளித்துவ தன்னலக்குழுவின் கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் சவாலை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இந்த சட்டக் கோட்பாடு, எடுத்துக்காட்டாக, பள்ளிகளுக்கு போதுமான நிதியைக் கோரி ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்களைத் தடைசெய்வதையும் அல்லது சுகாதாரப் பாதுகாப்புக்கு நிதி கோரி செவிலியர்களின் வேலைநிறுத்தங்களைத் தடைசெய்வதையும் நியாயப்படுத்தும். இவை இரண்டும் போர் மற்றும் வோல் ஸ்ட்ரீட் இலாபங்களுக்காகப் பட்டினி கிடக்கின்றன. இந்தக் கோட்பாட்டின் படி, வாகனத் துறையில் 2020 இல் வெடித்ததைப் போன்று, தொற்றுநோய்க் கொள்கைகளை 'கிழித்தெறியட்டும்' என்பதற்கு எதிராக திடீர் வேலைநிறுத்தங்களும் தடைசெய்யப்படலாம்.

கலிபோர்னியா பல்கலைக்கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைத் தடைசெய்யும் முயற்சியானது, அவர்களின் அடிப்படை உரிமைகளை அழிக்கும் சமீபத்திய நடவடிக்கையாகும். 2020 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பெருந்தொற்றுநோய் உச்சக்கட்டத்தில் இருந்தபோது இறைச்சி பொதி செய்யும் தொழிலைத் திறந்து வைத்திருக்கும் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டதால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களின் தொற்று மற்றும் இறப்புகளுக்கு எதிரான எதிர்ப்புகள் மற்றும் திடீர் வேலைநிறுத்தங்கள் பரவின.

இந்த வேலைநிறுத்தத்தில் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மகத்தான பங்கு, தடை உத்தரவு வழங்கப்பட்டாலும் அல்லது இல்லாவிட்டாலும், பொலிஸ் மற்றும் அரசு எந்திரத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் அணிதிரள வேண்டும் என்பதாகும். தொழிலாளர்கள் பரந்த நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க வேண்டும், சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பை போருக்கு எதிரான எதிர்ப்பையும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதையும் ஒன்றிணைக்க வேண்டும்.

முதல் கட்டமாக, பல்கலைக்கழக தொழிலாளர்கள் உடனடியாக வேலைநிறுத்தத்தை பத்து வளாகங்களுக்கும் விரிவுபடுத்துவதன் மூலம் இதற்கு பதிலளிக்க வேண்டும். வேலைநிறுத்தத்தை வேண்டுமென்றே தனிமைப்படுத்தும் UAW தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் 'அனுமதிக்கு' காத்திருக்காமல், அது ஏற்கனவே அங்கீகரித்த ஒன்றைச் செய்ய, சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க வேண்டும்.

UAW இன் உறுப்பினர்களாக இருக்கும் வாகனத் தொழிலாளர்கள், தங்கள் சகோதர சகோதரிகளின் பாதுகாப்பிற்கு நிற்பது மிகவும் முக்கியமானது. அதிகாரத்துவத்தில் இருந்து முற்றிலும் சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்கள், தகவல்தொடர்பு வழிகளை நிறுவுவதற்கும், தேசிய அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் தயார் செய்வதற்கும் உருவாக்கப்பட வேண்டும்.

தொழிலாளர்களால் வென்றெடுக்கப்பட்ட ஒவ்வொரு உரிமையும் நிர்வாகத்திற்கு எதிராக மட்டுமல்ல, தடை உத்தரவு மூலம் அரசாங்கத்தின் வர்க்க நீதிக்கு எதிராகவும் போராட வேண்டும். எப்பொழுதும் இருப்பது போல், இந்தப் பிரச்சினை இறுதியில் நீதிமன்றங்களில் அல்ல, ஆனால் தொழிற்சாலைகள், இரயில் பாதைகள் மற்றும் பிற பணியிடங்களில் தீர்க்கப்பட வேண்டும்.

ஆளும் வர்க்கம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வது உலகளாவிய பிரச்சினையாகும். 1930 களில் நாசிக்கள் புத்தகங்களை எரித்த இடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள பேர்லினில் உள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் நேற்று ஜேர்மன் பொலிசார் காஸா சார்பு எதிர்ப்பாளர்களை வன்முறையில் தாக்கினர். ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இடது பக்கம் வளர்ந்து வரும் இயக்கத்திற்கு விடையிறுக்கும் வகையில் ஆளும் வர்க்கத்தால் பாசிசம் ஊக்குவிக்கப்படுகிறது.

முதலாளித்துவ நீதிமன்றங்களின் தடை உத்தரவுகளுக்கு தொழிலாளர்கள் அடிபணிய வேண்டும் என்று ஆளும் வர்க்கம் கோரும் அதே வேளையில், அவர்களின் சொந்த நடவடிக்கைகள் முழுமையான அராஜகத்தால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. இனப்படுகொலை மற்றும் அணு ஆயுத யுத்தம் கூட சட்டபூர்வமான வெளியுறவுக் கொள்கை கருவிகளாக வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன.

தடை உத்தரவு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டபோதும், இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கைது வாரண்ட் விண்ணப்பத்திற்கு பைடென் மற்றும் குடியரசுக் கட்சியினர் வெறித்தனமாக நடந்து கொண்டனர். அப்படிப்பட்ட வாரண்டை மீறுவோம் என்று கூறியது மட்டுமின்றி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கே பதிலடி கொடுப்போம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

காஸாவில் இனப்படுகொலை என்பது வளர்ந்து வரும் மூன்றாம் உலகப் போரின் ஒரு பகுதியாகும். இதில் அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளும் உலக மேலாதிக்கத்தைத் தொடர தடையற்ற இராணுவ வன்முறை மூலம் தங்கள் பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்ட முயற்சிக்கின்றனர். மற்றொரு இன்னும் ஆபத்தான போர்முனை உக்ரேனில் நடந்துவரும் பினாமி யுத்தமாகும். இது அணு ஆயுத பேரழிவின் ஆபத்தை எழுப்புகிறது. சீனப் பொருட்களுக்கு வர்த்தகப் போர் வரிகளை விதிக்கும் பைடெனின் முடிவு, ஆசிய-பசிபிக் பகுதியில் மூன்றாவது போர்முனையைத் திறப்பதற்கான ஒரு படியாகும்.

இத்தகைய கொள்கைகளை ஜனநாயக ரீதியாக அவர்களால் திணிக்க முடியாது. ஆனால், சர்வாதிகாரத்தின் மூலம் மட்டுமே அவர்களால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் போர்க்கால அடிப்படையில் இவை திணிக்கப்படும்.

போருக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய பகுதி தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டம் ஆகும். தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்த பல தசாப்தங்களாக போராட்டங்களை விற்றுத்தள்ளுவதை திணித்துவரும் பெருநிறுவன சார்பு அதிகாரத்துவத்தை பைடென் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. தொழிற்சங்க அதிகாரத்துவமும் தன்னை இப்படித்தான் பார்க்கிறது. 2018 இல் உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றில், 'நாடு முழுவதும் தொழிலாளர் அமைதியின்மையின் விவரிக்க முடியாத அச்சுறுத்தலை தடுப்பதே' தொழிற்சங்கங்களின் இலக்கு என்று ஒரு தொழிற்சங்க வழக்கறிஞர் வாதிட்டார்.

அனைத்து முக்கிய தொழிற்சங்கங்களைப் போலவே, UAW பைடெனின் வெள்ளை மாளிகையின் விரிவாக்கமாக செயல்படுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேலைநிறுத்தத்தை ஒரு வளாகத்தில் மட்டுப்படுத்தி திட்டமிட்டு நாசவேலையை அவர்கள் செய்து வருகிறார்கள். அவர்கள் வெள்ளிக்கிழமை மற்றொரு வளாகத்தை அழைக்கலாம் என்று பரிந்துரைத்து தடை உத்தரவுக்கு பதிலளித்தனர் - அந்த நேரத்தில் வேலைநிறுத்தம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டிருக்கலாம். தவிர்க்க முடியாத முடிவு என்னவென்றால், இது தொழிற்சங்க அதிகாரத்துவம் வரவேற்கும் ஒரு முடிவாகும்.

இதற்கிடையில், UAW தொழிற்சங்கம், எதிர்ப்பு போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பல்கலைக்கழகத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு திரைக்குப் பின்னால் செயல்பட்டு வருகிறது.

ஆளும் வர்க்கம் உலகப் போர் மற்றும் பாசிசத்திற்குள் இறங்குவதை தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டால் மட்டுமே நிறுத்த முடியும். இதற்கு முதலில் சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) வளர்ச்சி தேவைப்படுகிறது. தொழிலாளர்கள் தங்கள் ஜனநாயக விருப்பத்தை செயல்படுத்தும் திறனை வழங்கும் – தொழிற்சங்க எந்திரத்தால் கட்டுப்படுத்தப்படாத மற்றும் போர்-சார்பு கொள்கைகளுக்கு அடிபணியாத – புதிய அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

ஆனால், இது முதலாளித்துவத்திற்கு எதிரான ஆழமான புரட்சிகர இயக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும். இது பழைய ஐரோப்பாவின் ராஜாக்கள் மற்றும் ராணிகளாக இருந்தாலும் சரி, அல்லது அமெரிக்க தெற்கில் உள்ள 'அடிமை சக்தியாக' இருந்தாலும் சரி அல்லது நவீன கால முதலாளித்துவ தன்னலக்குழுவாக இருந்தாலும் சரி, பேச்சுரிமை மற்றும் ஒன்றுகூடல் மீதான தாக்குதல்கள் புரட்சிகரமான தாக்கங்களைக் கொண்டுள்ளன. கீழிருந்து வரும் சவாலை 'அமைதியான' முறையில் கையாள்வதில் திறனற்ற, திவாலான சமூக ஒழுங்குகளால் அவை தவறாமல் செயல்படுத்தப்படுகின்றன.

இனப்படுகொலை மற்றும் மக்கள் எதிர்ப்பிற்கு எதிராக அதைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் முதலாளித்துவத்தை சீர்திருத்த முடியாது என்பதை நிரூபிக்கின்றன. இதற்கு மாறாக, அவை தூக்கி எறியப்பட்டு சோசலிசத்தால் மாற்றப்பட வேண்டும். உலகம் இயங்குவது லாபத்திற்காகவும் போரிற்காகவும் அல்ல மாறாக, மனித தேவைக்காக இயங்குகிறது. அதுதான் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பணியாகும்.

அமெரிக்க கிழக்கு நேரப்படி, சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு, உலக சோசலிச வலைத் தளமும், சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியும் (IWA-RFC) ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துகின்றன. “இனப்படுகொலைக்கு எதிரான கலிபோர்னியா பல்கலைக்கழக வேலைநிறுத்தத்தை பாதுகாக்க, தொழிலாள வர்க்கத்தை திரட்டுங்கள்! நிகழ்விற்கு இங்கே பதிவு செய்யவும்.

Loading