இந்தியாவில் புதிய COVID-19 நோய்த்தொற்றுகள் வெடிப்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆபத்தில் உள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவில் கோவிட் பெரும்தொற்றுநோய் 'வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர வலதுசாரி பாஜக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொய்களை உடைத்து, புதிய நோய்த்தொற்றுகள் நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வருகின்றன, தினசரி தொற்றுகள் கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து 10,000 ஐ தாண்டிவிட்டன.

இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் COVID-19 நோய்த்தொற்றுக்களின் அதிகரிப்புக்கு சுகாதாரப் பணியாளர்கள் தயாராகி வருகின்றனர். ஏப்ரல் 10, திங்கட்கிழமை, 2023.  [AP Photo/Rafiq Maqbool]

ஏப்ரல் 20 அன்று, இந்தியாவில் 12,580 புதிய கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இது எட்டு மாதங்களில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதன் மூலம், மொத்த உத்தியோகபூர்வ COVID தொற்றுக்களின் எண்ணிக்கை 44.85 மில்லியனை எட்டியுள்ளது. தற்போது, 65,286 செயலில் உள்ள தொற்றுக்கள் பின்பற்றப்படுகின்றன.

இந்த புள்ளிவிவரங்கள் வைரஸின் உண்மையான எண்ணிக்கையை அபாரமாக குறைத்துக்காட்டும் -அறிக்கையை பிரதிநிதித்துவம் செய்கின்றன. பெரும் தொற்றுநோயைக் கண்காணிப்பதற்கும் அறிக்கையிடுவதற்கும் பயன்பாட்டிலிருந்த முழு கண்காணிப்பு கருவியும் அகற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. COVID-19 இன் முந்தைய அலைகளின் போது கூட, அங்கு சோதனை உள்கட்டமைப்புகள் இருந்தபோதும், அடுத்தடுத்த serological ஆய்வுகள் (குருதித் தெளியம் மற்றும் ஏனைய உடல் திரவங்கள் பற்றிய அறிவியல் கல்வி)  பெரும்பாலான தொற்றுக்கள் அதிகாரப்பூர்வமாக கண்டறியப்படவில்லை என்பதை வெளிப்படுத்தின.

கடந்த வாரம், உலக சுகாதார அமைப்பு (WHO) புதிய மாறுபாட்டை 'கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையில் தற்போதைய அதிகரிப்பு, XBB.1.16 என பெயரிடப்பட்ட ஓமிக்ரான் வைரஸின் வேகமாகப் பெருகும் பரம்பரையுடன் நேரடியாகப் பிணைந்துள்ளது. இந்த துணை மாறுபாடு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இது மார்ச் 22 அன்று WHO இன் 'கவனிக்க வேண்டிய' வகைகளின் பட்டியலில் இடம் பெற்றது. இந்தியாவுடன் சேர்த்து, 33 நாடுகளில் இது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வாரம், உலக சுகாதார அமைப்பு (WHO) புதிய மாறுபாட்டை 'ஆர்வத்தின் மாறுபாடு' நிலைக்கு மேம்படுத்தியது, மற்ற ஓமிக்ரான் துணை வகைகளுடன் ஒப்பிடும்போது அதன் அதிக தொற்று தன்மை மற்றும் அதன் உயர்ந்த நோயெதிர்ப்பு-தவிர்க்கும் பண்புகள் ஆகிய இரண்டும் கருத்தில் கொள்ளப்பட்டது. 

சர்வதேச சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது, “தற்போது, தீவிரத்தன்மை அதிகரிப்பதற்கான ஆரம்ப சமிக்ஞை எதுவும் இல்லை. ஆரம்ப ஆபத்து மதிப்பீடு நடந்து வருகிறது அது வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

Seito Labs இல் இருந்து XBB.1.6 பற்றி கிடைத்த தரவு இந்த மாறுபாட்டினால்  அதிக இறப்பு விகிதம் மற்றும் கடுமையான நோயை ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டியது. இருப்பினும், அதிக தடுப்பூசி விகிதங்கள் மற்றும் முந்தைய நோய்த்தொற்றுகள் காரணமாக, பெரும்பாலான மக்களில் வைரஸின் தாக்கம் மழுங்கடிக்கப்படுகிறது.

ஆனால், இது தடுப்பூசி போடாதவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் மற்றும் வயதானவர்களை கடுமையான நோய் அபாயத்துக்கு ஆளாக்குகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஆபத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை  நூற்றுக்கணக்கான மில்லியன்களாக உள்ளது – அவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட கிராமப்புறங்களில் அல்லது நகர்ப்புற சேரிகளில் வாழ்கின்றனர், மேலும் மிகவும் அத்தியாவசியமான சுகாதார சேவைகள் கூட மிக குறைவாகவும்  அல்லது முற்றிலும்  இல்லாமலும் இருக்கின்றன.

இந்தியாவில் அதிகரித்து வரும் நோய்த்தொற்று எண்ணிக்கையானது துணைக்கண்டத்தின் மக்களை மட்டுமல்லாமல் முழு உலகத்தையும் அச்சுறுத்துகிறது. நூற்றுக்கணக்கான மில்லியன்களில் புதிய தொற்றுக்கள் என்பதன் அர்த்தம் என்னவெனில் SARS-CoV-2 இலிருந்து புதிய மற்றும் அதிக தொற்றுத்தன்மையுடைய மற்றும் மிகவும் ஆபத்தான வடிவங்களாகவும்  மாறுவதற்கான புதிய வாய்ப்புகளைக் குறிக்கிறது.

இந்தியாவில் 2021 இல் மோடி அரசாங்கம் வைரஸுக்கு எதிரான வெற்றியைப் பிரகடனப்படுத்தும் அதே சமயத்தில் டெல்டா மாறுபாடு வளர்ச்சி கண்டு வருகிறது. இதேபோன்ற ஆபத்து இப்போது XBB.1.16 உடன் உள்ளது. கொரோனா வைரஸின் அதிக எண்ணிக்கையிலான துணை மாறுபாடுகள், அது விரைவாக மாற்றமடையும் திறனைத் தக்கவைத்துக்கொள்வதைக் காட்டுகிறது, இயற்கையான பரிணாம அழுத்தங்கள் அதிகளவில் தடுப்பூசியை-தவிர்க்க கூடிய பிறழ்வுகளுக்கு சாதகமாக அமைகின்றன.

மற்ற நாடுகளைப் போலவே, இந்திய கார்ப்பரேட் ஊடகங்களும் XBB.1.16 எழுச்சியின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கூறுகின்ற அதிகாரப்பூர்வ அரசாங்க ஆதாரங்களை பற்றிக் கொண்டிருக்கின்றன, மேலும் அது கொடிய மற்றும் மரணம் விளைவிக்கும் வைரஸ் தொற்று தொடர்ந்து இருப்பதை மக்கள் தீங்கற்றதாக  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

உதாரணமாக, சுகாதார அமைச்சக ஆதாரங்கள் XBB ஒரு 'ஆபத்தான மாறுபாடு' அல்ல என்று கூறியதை இந்தியா டுடே  தெரிவிக்கிறது. மற்ற ஊடகங்கள் இந்தக் கூற்றை மீண்டும் மீண்டும் கூறுகின்றன, 'பீதி அடைய வேண்டாம்' என்று மக்களுக்கு அறிவுறுத்துகின்றன.

இந்திய ஆளும் உயரடுக்குகள் பேரழிவுகள் பற்றிய முன் எச்சரிக்கைகளை புறக்கணித்த ஒரு மோசமான வரலாற்றைக் கொண்டுள்ளன, இதனை 2021 வசந்த காலத்தின் போது பேரழிவை ஏற்படுத்திய பெரும்தொற்றுநோயின் இரண்டாவது அலையில் காணமுடிந்தது. அந்தக்கால கட்டம்  SARS-CoV-2 இன் மிகவும் நோய்க்கிருமி டெல்டா மாறுபாட்டால் இயக்கப்பட்டதாக இருந்தது.  

ஏப்ரல் 2021 இலிருந்து தொடங்கி ஏப்ரல் 30 வரையிலான இரண்டாம் அலையின் உச்சம் வரையில் இந்தியாவில் 400,000 க்கும் மேற்பட்ட புதிய தினசரி தொற்றுக்கள் மற்றும் 4,000 க்கும் மேற்பட்ட தினசரி இறப்புகள் பதிவாகியுள்ளன. இறுதிச் சடங்குகளின்போது தீக்குவியலின் மேல் ஏராளமான உடல்கள் குவிக்கப்பட்ட காட்சிகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்டதை விட மிக அதிகம் என்பதையும்  நிரூபித்தது.

அதிகப்படியான இறப்புகள் பற்றிய புள்ளிவிவரங்கள், அதையடுத்து, 2021 கோவிட் அலை தான் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பொது சுகாதார பேரழிவுகளில் ஒன்றாகும் என்பதைக் காட்டுகிறது. அந்த நேரத்தில், ராய்ட்டர்ஸ், மார்ச் மாத தொடக்கத்தில் இந்திய அதிகாரிகளுக்கு அறிவியல் ஆலோசகர்களின் மன்றத்தால் நாட்டை கெட்டியாக பிடித்துள்ள கொரோனா வைரஸின் புதிய மற்றும் மிகவும் தொற்று மாறுபாடு குறித்து எச்சரிக்கைகள் செய்யப்பட்டதாக அறிவித்தது. ஆனால் இந்த எச்சரிக்கைகளை மோடி அரசு முற்றிலும் புறக்கணித்தது. உண்மையில், ஏப்ரல் நடுப்பகுதியில் நாடு முழுவதும் டெல்டா மாறுபாடு அதிகரித்ததால், ICU படுக்கைகள், முக்கியமான மருந்துகள், ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து ஏற்கனவே பரவலாகப் புகாரளிக்கப்பட்ட நேரத்தில், மோடி வானொலியில் சபதம் அளித்தார். அதாவது அவர் நாட்டை லொக்டவுனில் (பொது முடக்கத்திலிருந்து)  இருந்து காப்பாற்றுவார் - கொடிய வைரஸில் இருந்து அல்ல என்பதாகும்.

'எச்சரிக்கை மணி' பரவுவதைத் தவிர்ப்பதற்காக, தெளிவான உண்மைகளை கூட ஒப்புக்கொள்ள மறுப்பது தான் தற்போதைய COVID நெருக்கடிக்கு அரசாங்கத்தின் பதிலைக் காட்டுகிறது. தற்போது, இந்தியாவின் தினசரி நேர்மறை விகிதம் 5.46 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 5.32 சதவீதமாகவும் உள்ளது. இரண்டு எண்ணிக்கைகளும் தொற்று மீண்டும் பரவுவதைக் குறிக்கின்றன, ஆனால் அதன் தாக்கத்தை வெகுவாகக் குறைத்து மதிப்பிடுகின்றன.

இந்தியாவின் தலைநகரான டெல்லி மற்றும் நிதித் தலைநகரான மும்பை அமைந்துள்ள மகாராஷ்டிராவில் இந்த விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன. இரண்டு பகுதிகளும் 2021 டெல்டா சீற்றத்தின் மையங்களாக இருந்தன.

கடந்த செவ்வாய்க்கிழமை, டெல்லியில் 1,537 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது மூன்று வாரங்களில் 430 சதவீதம் அதிகரித்துள்ளது. 26.54 சதவீத நேர்மறை விகிதம், கண்டறியப்படாத பரிமாற்றங்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதைக் குறிக்கிறது, அதாவது, தணிப்பு நடவடிக்கைகளை விரைவாக மீண்டும் தொடங்காமல், மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் மீண்டும் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடுகிறது. மகாராஷ்டிராவில் கடந்த புதன்கிழமை 1,100 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகளும், வியாழக்கிழமை 1,113 பேரும் பதிவாகியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை புதிய COVID-19 இறப்புகளின் எண்ணிக்கை 29 என்று  கூறப்பட்டது, இது உண்மையான புள்ளிவிவரங்களின் ஒரு சிறு பகுதியே என்று புரிந்து கொள்ளப்படுகிறது. முறையான பரிசோதனை மற்றும் நோயாளிகளின் உடல்நலத்தை பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கக்கூடிய  முந்தைய கோவிட் நோய்த்தொற்றுகள் குறித்து உறுதி செய்யப்படாமல், சுவாசம் மற்றும் இருதய சரிவால் ஏற்படும் இறப்புகள் இறந்தவர்களின் முந்தைய மருத்துவ நிலைமைகளின் காரணமாக மட்டுமே ஏற்பட்டது என்று பூசி மெழுகப்படும்.  பெரும் தொற்றுநோயினால் இறந்தவர்களுக்கான பங்களிப்பு குறித்த அரசாங்கத்தின் மிகவும் அலட்சியமான பதிலிறுப்பு அழிக்கப்படும். 

ஒட்டுமொத்தமாக, 2020 முதல் இந்தியாவில் உத்தியோகபூர்வ COVID-19 இறப்பு எண்ணிக்கை வானியல் எண்ணிக்கையில் அரை மில்லியனுக்கும் அதிகமானதாக இருக்கிறது, இந்த இறப்புகளை தடுத்திருக்க முடியும்.  ஆயினும்கூட, அமெரிக்காவை தளமாகக் கொண்ட பூகோள மேம்பாட்டு மையத்தின் ஜூலை 2021 அறிக்கையின்படி, இந்தியாவில் COVID-19 தொற்றுநோயால் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை ஏற்கனவே மூன்று முதல் ஐந்து மில்லியனுக்கும் இடையில் இருந்தது அல்லது அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட பத்து மடங்குக்கு அதிகமாக இருந்தது.

பிரதமர் மோடியோ அல்லது வேறு எந்த இந்திய அரசியல் தலைவரோ, பிரமாண்டமான இறப்பு எண்ணிக்கை குறித்து ஒரு கடுகளாவது கவலையை எப்போதுமே வெளிப்படுத்தவில்லை, அதன் மூலம் மில்லியன் கணக்கான இந்திய உழைக்கும் மக்களின் தலைவிதியைப் பற்றிய அவர்களின் அலட்சியத்தை வெளிப்படுத்தினர். 

அவர்கள் உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் உண்மையான அணுகுமுறையை மட்டுமே பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றனர், அவர்கள் உத்தியோகபூர்வமாக தொற்றுநோய் முடிந்துவிட்டதாக அறிவித்ததுக்கான காரணம், தொழிலாள வர்க்கம் களத்திலுள்ள  உண்மையான நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் முழுத் திறனுடன் உற்பத்தியில் ஈடுபட்டு இலாபம் ஈட்ட வேண்டும் என்பதை உத்தரவாதம் செய்வதற்காகும். 

இந்தியா நீண்ட காலத்திற்கு முன்பே வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கூட கைவிட்டுள்ளது. அதே நேரத்தில் மக்களின் கவலைகளை எதிர்கொள்ள வாய்வீச்சுகளை பயன்படுத்தி வருகிறது. 

கடந்த மார்ச் 22 அன்று, 'உயர்நிலை ஆய்வுக் கூட்டத்திற்கு' தலைமை தாங்கிய மோடி, கோவிட்-19 தொற்றுநோய் 'முடிவடைவதற்கு வெகு தூரத்தில் உள்ளது”  என்று குறிப்பிட்டார், மேலும் கோவிட் நேர்மறை மாதிரிகளின் முழு மரபணு வரிசைமுறையை அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 'சுகாதார வசதிகள் முழுவதிலும் காய்ச்சல் மற்றும் COVID-19 தொற்றுக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் தளவாடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்காக, மருத்துவமனைகளில் 'போலி பயிற்சிகளை' மேற்கொண்டு, 'எங்கள் மருத்துவமனைகள் தயாராக உள்ளன என்பதை உறுதிப்படுத்த' அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

இருப்பினும், இந்த சுகாதார வசதிகளுக்கு மேம்படுத்தப்பட்ட நிதியுதவி எதையும் அவர் அறிவிக்கவில்லை. உண்மையில், மோடி அரசாங்கம் இந்தியாவின் இராணுவ செலவினங்களை தொடர்ந்து விரிவுபடுத்தும் அதே வேளையில், உலகிலேயே மிகக் குறைவான தேசிய சுகாதார பட்ஜெட்டை மேலும் குறைக்க முயற்சி எடுத்துள்ளது. 2022 இல், இந்தியாவின் இராணுவச் செலவு உலகின் மூன்றாவது பெரியதாக இருந்தது

பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய சபை NCAER ன் (இது இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய லாப நோக்கற்ற, பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சி சிந்தனைக் குழு) கருத்துப்படி 2022-23ல் மொத்த மத்திய மற்றும் மாநில பட்ஜெட்களில் சுகாதாரத்துக்கான பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 சதவீதமாக இருந்தது. இது 2021-22ல் 3.6 சதவீதத்தில் இருந்து கூர்மையான குறைப்பு ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக, இந்தியாவின் சுகாதாரச் செலவுகள், உலக மற்றும் பிற வளரும் நாடுகளுக்கான சராசரியை விட மிகக் குறைவாக உள்ளது.

மேலும், கோவிட் நோய்த்தொற்றுகளின் சமீபத்திய அதிகரிப்பு மற்றும் XBB.1.16 இன் தன்மை குறித்து WHO எழுப்பிய கவலைகள் இருந்தபோதிலும், அரசாங்கம் உலகளாவிய முகக் கவச ஆணைகள், பள்ளி மூடல்கள் அல்லது இந்த புதிய தொற்றுநோய்களைக் கண்காணிக்க மற்றும் கண்டறிய இலவச வெகுஜன சோதனைகளை வழங்கவில்லை. சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தீவிரமான புள்ளிகளை அடையாளம் காணும்படியும், அந்த இடங்களில் சோதனையை அதிகரிக்கும்படியும் மாநிலங்களை கேட்பதன் மூலம் வழமையான தாமதப்படுத்தும் தந்திரங்களை எடுத்துக் கொண்டார், இந்த நடவடிக்கை பொது சுகாதார முயற்சிகளை விட அதற்கு முன்னதாக தொற்று அலைகள் முன்னேறிச் செல்ல அனுமதிக்கிறது. வேகமாக நகரும் வைரஸை கையாள உடனடி மற்றும் பரந்த அடிப்படையிலான பதில் அவசியம்.

அரசாங்கத்தின் 'பதற்றம் வேண்டாம்' என்ற உத்தரவுகளை மீறி, டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) முன்னாள் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, ஏப்ரல் 17 அன்று இந்தியா டுடே தொலைக்காட்சியில் பேசுகையில், மோசமான காற்றோட்டம் மற்றும் உட்புற நெரிசலான பொது இடங்கள் உள்ளிட்ட உட்புற இடங்களில் முகமூடி அணியுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார். 

டிவி தொகுப்பாளினி, சினேகா மொர்தானியின் கருத்துக்களுக்கு ஒப்புதல் அளித்து, தற்போதைய தினசரி 10,000 தொற்றுக்கள் 'மொத்த குறைமதிப்பீடு' என்று பரிந்துரைத்த டாக்டர் குலேரியா பின்வருமாறு கூறினார்: 'நாங்கள் உண்மையில் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுகிறோம்... இது பல மடங்கு அதிகமாக இருக்கலாம். [விட] நாங்கள் தற்போது சோதனை செய்து வருகிறோம், ஏனெனில் பலர் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. உண்மையில் எத்தனை பேர் நேர்மறையாக இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.' 'உண்மையான சூழ்நிலையை' அறிய சோதனையை அதிகரிக்க அவர் முன்மொழிந்தார். ஊடக அறிக்கைகள் காட்டுவது போல், 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாடான இந்தியா, அதன் மக்கள்தொகையில் ஒரு நிமிடப் பகுதியை மட்டுமே சோதிக்கிறது, ஒவ்வொரு நாளும் சுமார் 200,000 கோவிட் சோதனைகள் நிர்வகிக்கப்படுகின்றன.

'லேசான தொற்றுக்கள் இருந்தால், நாங்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை' என்று சிலர் கூறிய கூற்றுகளை டாக்டர் குலேரியா எதிர்த்தார். அவர் இவ்வாறு கூறினார், 'தொற்றுக்கள் அதிகரித்து வருவதால், வைரஸ் பிறழ்வு  அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன [இது ஒரு புதிய மாறுபாட்டிற்கு வழிவகுக்கலாம்].'

வைரஸின் விரைவான பிறழ்வுகள், அதிகரித்த உயிரிழப்புடன் ஒரு புதிய பிறழ்வு வெளிப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் சாத்தியம் மற்றும் நிகழ்தகவு கூட உடையது என்று அவர் கூறினார். 'எதிர்காலத்தில் இந்த வைரஸ் எவ்வாறு செயல்படும் என்பதை நாம் உண்மையில் கணிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய மக்கள்தொகையில் COVID-19 இன் தாக்கம் குறித்து மோடி அரசாங்கத்தின் அலட்சியம் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாக வர வேண்டும், தொழிலாளர்கள் தங்களை மற்றும் தங்களின் குடும்பங்களை COVID-இன்  எதிர்கால அச்சுறுத்தலில் இருந்து அல்லது பிற பொது சுகாதார பேரழிவுகளில் இருந்து பாதுகாக்க ஆளும் உயரடுக்குகளை நம்பியிருக்க முடியாது.