அக்டோபர், 1917 இல், முதலாம் உலகப் போரின் படுகொலைக்கு மத்தியில், ரஷ்ய தொழிலாள வர்க்கம், விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான போல்ஷிவிக் கட்சியின் தலைமையில் செயல்பட்டு, அலெக்சாண்டர் கெரென்ஸ்கி தலைமையிலான இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தை தூக்கியெறிந்து, உலக வரலாற்றில் முதல் தொழிலாளர் அரசை நிறுவியது. ஒன்பது மாதங்களுக்கு முன்னர், இரண்டாம் ஜார் நிக்கோலஸ் தலைமையிலான ஒரு முடியாட்சி வம்சத்தால் ரஷ்யா ஆட்சி செய்யப்பட்டது. இந்த புரட்சியானது ஏகாதிபத்திய போர் முடிவிற்கு வருவதன் ஆரம்பமாகும்.
ரஷ்ய புரட்சி உலக வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தை குறித்தது. இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தை தூக்கிவீசுவது முதலாளித்துவத்திற்கு மாற்றீடு என்பது ஒரு கற்பனாவாத கனவு அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் நனவான அரசியல் போராட்டத்தின் மூலம் அடையக்கூடிய ஒரு உண்மையான சாத்தியம் என்பதை நிரூபித்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் துரோகங்கள் மற்றும் குற்றங்களால் அழிக்கப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் தலைவிதி இறுதியில் சோகமான இருந்தபோதிலும், கடந்த நூற்றாண்டில் வேறு எந்த நிகழ்வும் உலகின் அனைத்துப் பாகங்களிலும் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கையில் இவ்வளவு தொலைநோக்குடைய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த பக்கத்தில், வாசகர்கள் உலக சோசலிச வலைத் தளத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சியின் முக்கியத்துவத்தையும் படிப்பினைகளையும் ஆராய்வதையும், உலகம் முழுவதும் அதன் தாக்கத்தையும் பற்றி வெளியிடப்பட்ட பல கட்டுரைகள் மற்றும் விரிவுரைகளை கண்டுகொள்ளலாம்.