20 ஆம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகரத் தலைவரான விளாட்மிர் இலிச் லெனினுடன் இணைத் தலைவராக இருந்த லியோன் ட்ரொட்ஸ்கி (1879-1940).
ட்ரொட்ஸ்கியும் லெனினும் 1917 அக்டோபர் புரட்சியில் போல்ஷிவிக் கட்சிக்கும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்திற்கும் தலைமை தாங்கினர். இது மனிதகுல வரலாற்றில் முதல் தொழிலாளர் அரசை நிறுவியது. 1923 ஆம் ஆண்டில், சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்தை கைப்பற்றிய ஜோசப் ஸ்ராலின் தலைமையிலான ஒரு தேசியவாத அதிகாரத்துவத்தின் வளர்ச்சியை எதிர்ப்பதற்காக ட்ரொட்ஸ்கி இடது எதிர்ப்பு (Left Opposition) இயக்கத்தை ஸ்தாபித்தார். 1933 ஆம் ஆண்டில், ட்ரொட்ஸ்கியால் எதிர்க்கப்பட்ட மூன்றாம் அகிலத்தின் அழிவுகரமான கொள்கையினால் ஜேர்மனியில் நாஜிக்கள் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, சோவியத் ஒன்றியத்திலும் மற்றும் மூன்றாம் அகிலத்திலும் உருவாகிய ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிராக மார்க்சிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்க ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்தார்.
1938 இல் நான்காவது அகிலம் நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ட்ரொட்ஸ்கி மெக்சிகோவின் கொயோகான் நகரில் ஒரு ஸ்ராலினிச முகவரான ரமோன் மெர்காடரின் கைகளால் படுகொலை செய்யப்பட்டார். இரண்டாம் உலகப் போரின் படுகொலைக்கு மத்தியில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலைமையை இல்லாதொழிப்பதற்கான உலக ஏகாதிபத்தியத்தின் மிக நனவான முயற்சியே அவரது படுகொலையாகும்.
ட்ரொட்ஸ்கி ஸ்தாபித்த நான்காம் அகிலம் இன்றுஉலக சோசலிச வலைத்தளத்தை வெளியிடும் அனைத்துலக்குழுவினால் தலைமை தாங்கப்படுகின்றது. நான்காம் அகிலத்தின்அனைத்துலகக் குழுவானது1953 இலிருந்து உண்மையான ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டத்தையும் கொள்கைகளையும்பாதுகாத்து வருகிறது.